அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, November 11, 2010

Malcolm X என்ற அமெரிக்க விடுதலைப் போராளிவீடியோ ஆக்கம்: அப்துல் ரஹீம் முஹமட் இனாஸ்

இஸ்லாமிய கொள்கையை ஏற்று அதை முன்வைத்து அமெரிக்காவில் , கறுப்பு நிறத்தவர்களின் உரிமைகளுக்காக போராடிய அமெரிக்க இஸ்லாமிய போராளி கறுப்பு நிறத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக கருதும் வெள்ளை மேலாதிக்கத்தை கடுமையாக் எதிர்த்து போராடிய போராளி மால்கம் X .

Malcolm X- கொலை செய்ய பலமுறை FBI முயற்சிச் செய்தது இறுதியாக 1965 ஆம் ஆண்டு தனது புரட்சி கரமான இஸ்லாமிய உரை ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொழுது மால்கம் X ஒருவனால் சுட்டு கொல்லபட்டார் சுட்டு கொன்றவன் தோமஸ் ஹாகன் இவன் அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானான் . ஆனாலும் மால்கம் Xஸின் கொலைக்கு பின்னால் யார் என்ற கேள்விக்கு விடை இன்னும் கிடைக்க வில்லை விரிவாக பார்க்க
அமெரிக்காவில் மோசமான குடும்பத்தில் பிறந்தார் மால்கம் X . இவரின் ஆரம்ப வாலிபம் வன்முறைகள் நிறைந்ததாக இருந்தது. தந்தை கொல்லப்பட்டார். தாய் மனநிலை பாதிக்கப்பட்டார். கல்வி நின்று போனது. போதைப் போதை பொருட்களுக்கு அடிமையானார் சிறை சென்றார் சிறையில் இஸ்லாத்தை விளங்கும் வாய்ப்பு கிட்டியது மிக தீவிரமாக கற்றார் இஸ்லாமிய கொள்கையை ஏற்றுகொண்டார் விரிவாக பார்க்க அதன் அடிப்டையில் தனது வாழ்கையை அமைத்து கொண்ட இவர் நிறவெறியையும் , கருப்பு இனம் மீதான அடக்குமுறைகளையும் , உரிமை மறுப்புகளையும் இஸ்லாத்தை அடிப்டையாக கொண்டு எதிர்த்தார் அமெரிக்காவின் கருப்பு இனம் முழுவதும் இவரின் பின்னால் சென்று விடுமோ என்ற அச்சம் ஏற்படும் அளவுக்கு மக்கள் இவர் பின்னால் திரண்டனர் FBI குறிவைத்து கொலை செய்யதுவிட துடித்து இறுதியில் .. கொலை செய்யப்பட்டார் அமெரிக்க இஸ்லாமிய எழுச்சியின் அத்திவாரம் தகர்க்கப்பட்டதாக கருதியது

மால்கம் X அமெரிக்காவில் ஏற்றி வைத்த இஸ்லாம் என்ற தீபத்தை அணைத்திட அமெரிக்க மேலாதிக்கம் கடுமையாக முயற்சிச் செய்கிறது. ஆனால் அமெரிக்க மேலாதிக்கதினால் அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய எழுச்சியை தடுக்க முடியவில்லை – மால்கம் X அவர் கொல்லப்படவில்லை இன்னும் சுத்தமான விடுதலையையும் சுதந்திரத்தையும் சுவாசிக்க துடிக்கும் உள்ளங்களில் வாழ்கின்றார்

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்