அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Tuesday, March 15, 2011

மூன்றாம் கலீஃபா உதுமான் பின் அஃப்பான் (ரலி) வாழ்க்கை வரலாறு1. ஆரம்ப கால வாழ்க்கை
''இந்தத் தம்பதிகளுக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்கட்டும்!"" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களால் வாழ்த்துப் பெற்றவர்கள் உதுமான் (ரலி) அவர்கள். தம்பதியர்களிலேயேää இஸ்லாத்திற்காக தங்களது வாழ்வின் சுகங்களை அற்பணித்தவர்களுள்ää உதுமான் (ரலி) அவர்கள் பெருமைக்குரியவர்கள்.
மக்காவில் குறைஷிகளின் கொடுமைகள் தாங்கவியலாத நிலைக்குச் சென்று கொண்டிருந்த பொழுதுää அவர்களது கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்காக உதுமான் (ரலி) அவர்களும்ää அவர்களது மனைவியும் அபீஸீனியாவிற்கு கிளம்பிக் கொண்டிருந்த பொழுதுää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மருமகனாரான உதுமான் (ரலி) அவர்களைப் பார்த்துää மேற்கூறிய வார்த்தைகளைக் கூறினார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின் 6 ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர் தான் உதுமான் (ரலி) அவர்கள். இவரது தந்தையின் பெயர் அஃப்பான். தாயாரின் பெயர் அர்வா. இவர்களது பேத்திää பைஸாää அப்துல் முத்தலிப்பின் மகளாவார்ää எனவேää இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மாமி முறையாக வந்தவர். உதுமான் (ரலி) அவர்கள் உமைய்யா கோத்திரத்தைச் சேர்ந்தவர்ää இது குறைஷிகளின் ஒரு கிளைக் கோத்திரமாகும். இவர்கள் பனூ ஹாஷிம் கோத்திரத்தவர்களுக்கு இணையான அந்தஸ்துப் பெற்றவர்கள். குரைஷிகளின் கொடி இவர்களது வசம் தான் இருந்து வந்தது.
உதுமான் (ரலி) அவர்கள் ஒரு துணி வியாபாரியாக இருந்தார்கள். இவர்களது வியாபாரம் நல்ல முறையில் செழிப்போடு வளர்ந்த காரணத்தால்ää நகரிலேயே வெற்றிகரமான வியாபாரி என்ற அந்தஸ்துப் பெற்றவரானார். அவர் அடிக்கடி வியாபார விஷயமாக சிரியாவுக்கு போய் வரக் கூடியவராகவும் இருந்தார். நல்ல சிறப்பான வியாபார முன்னேற்றம்ää செல்வத்தை அதிகரித்ததோடுää மக்கள் மத்தியில் செல்வாக்கையும் அதிகரிக்கச் செய்தது. இருப்பினும்ää அவர் இளகிய மனம் படைத்தவராக இருந்தார். அவர் தனது பொருளாதார வளத்தை ஏழைகளுக்கு உதவுவதற்காகவே தேடினார். பணம் ஒருவரது துன்பத்தைப் போக்குமென்று சொன்னால்ää உதுமான் (ரலி) அவர்கள் அவ்வாறான உதவிகளுக்கு எப்பொழுதும் தயாரகவே இருந்தார்கள்.
2. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்
உதுமான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு அபுபக்கர் (ரலி) அவர்கள் தான் காரணமாக இருந்தார்கள். இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்தவர்கள். உதுமான் (ரலி) அவர்கள் பனூ உமைய்யா குலத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு குலங்களும் மிக நீண்ட காலமாக பரம வைரிகளாக இருந்து வருபவர்கள். எனினும்ää இவை யாவும் உதுமான் (ரலி) அவர்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்வதனின்றும் தடுத்து விடவில்லைää இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஆரம்ப கால முஸ்லிம்களில் உதுமான் (ரலி) அவர்களும் ஒருவராவார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மகளான ருக்கையா (ரலி) அவர்களை உதுமான் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்.
உதுமான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாகää அவர்களது குலத்தவர்களின் கடும் பகையைச் சம்பாதிக்க வேண்டி வந்தது. இவரது மாமா வான ஹகம்ää உதுமான் (ரலி) அவர்களின் கைகளையும்ää காலையும் கட்டிப் போட்டு வீட்டில் இருட்டுச் சிறையில் அடைத்து வைத்தார். மற்ற நபித்தோழர்களைப் போலவே உதுமான் (ரலி) அவர்களும் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளான போதிலும்ää இஸ்லாத்தை விட்டு விடவில்லை. உதுமான் (ரலி) அவர்களை மிகவும் விரும்பிய அந்தக் குறைஷிகள் தான் இப்பொழுது வெறுக்க ஆரம்பித்தார்கள். அவரது சொந்தக் குலத்தவர்களே அவரைக் கைவிட்டு விட்டனர். இது அவர்களை மிகவும் பாதித்தது. இந்த நிலையில்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றுää அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்து செல்லää உதுமான் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அந்த முதல் ஹிஜ்ரத் தில் தங்களது வீட்டையும்ää நாட்டையும்ää சொந்த பந்தங்களையும் விட்டு விட்டுää புதிய நாட்டுக்கு இடம் பெயர்ந்துää இறைவனுடைய திருப்பொருத்தத்திற்காக நாடு துறந்து சென்ற முஸ்லிம்களின் குழுவில் உதுமான் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
இன்னும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் நடைபெற்ற பொழுதும்ää மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து மதீனாவில் சென்று தங்கினர்.


3. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நெருக்கம்
இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மிக நெருக்கமாக இருந்த நபித்தோழர்களில் உதுமான் (ரலி) அவர்களும் ஒருவராவார். இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப் போர் தவிர மற்ற அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்டார்கள். உதுமான் (ரலி) அவர்களின் மனைவியும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளுமான ருக்கையா (ரலி) அவர்கள் சுகவீனமாக இருந்த காரணத்தால்ää பத்ருப் போருக்கு வர வேண்டாம் என்றும்ää அவர்களை இருந்து கவனித்துக் கொள்ளுமாறும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதால்ää பத்ருப் போரில் உதுமான் (ரலி) அவர்கள் கலந்து இயலாமல் போய் விட்டது. சுகவீனத்தில் இருந்த மீள முடியாது போகவேää ருக்கையா (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள். தனது மனைவியின் பிரிவால் உதுமான் (ரலி) அவர்கள் மிகவும் சோகமாகவும்ää வேதனையின் உச்சத்திலும் இருந்தார்கள். மனைவியை இழந்தது போகää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மருமகன் என்ற அந்தஸ்தும் பறிபோய் விட்டதே என்றும் உதுமான் (ரலி) அவர்கள் மிகவும் கவலை அடைந்தார்கள். உதுமான் (ரலி) அவர்களின் சோகத்தைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää தனது இன்னொரு மகளான உம்மு குல்தூம் (ரலி) அவர்களை இரண்டாம் தாரமாக உதுமான் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். இதன் காரணமாகää ''துன்னூரைன் - இரு ஒளி விளக்குகளைப் பெற்றுக் கொண்டவர்"" என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு நடந்த ஹ{தைப்பிய்யா உடன்படிக்கையின் பொழுதுää அதன் அமைதி நடவடிக்கைகளில் சிறப்புப் பங்காற்றிய பெருமைக்குரியவர் உதுமான் (ரலி) ஆவார்கள். அமைதிப் பேச்சுவார்த்தைக்காக உதுமான் (ரலி) அவர்களைத் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிகளிடம் அனுப்பி வைத்தார்கள். ஆனால் குறைஷிகளோ..!
உதுமான் அவர்களே..! நீங்கள் வேண்டுமானால் கஃபாவைத் தரிசித்து விட்டுச் செல்லுங்கள்ää உங்களது இறைத்தூதரை நாங்கள் மக்காவிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்கள்.
உதுமான் (ரலி) கூறினார்கள் :
இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. முஹம்மது (ஸல்) அவர்களால் இறைவனது ஆலயத்தை தரிசிக்க முடியாது போனால்ää என்னாலும் அது முடியாது என்று கூறி விட்டார்கள். உதுமான் (ரலி) அவர்களது இந்த வார்த்தை அவர்களை மிகவும் பாதித்து விட்டதுää கோபங் கொள்ளச் செய்தது.
இதற்கிடையில் உதுமான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி காட்டுத் தீ போல கால் முளைத்துää மக்காவையும் தாண்டி இறைத்தூதர் (ஸல்) அவர்களை வந்தடைந்தது. உதுமான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியை அறிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடும் கோபத்திற்கு ஆளானதோடுää நிலமையின் விபரீதத்தைப் புரிந்து கொண்ட அவர்கள்ää இதற்குப் பலிக்குப் பலி எடுப்பது என்று முடிவெடுத்துää எந்த சூழ்நிலையிலும் பின்வாங்க மாட்டோம்ää உறுதியோடு எதிரிகளைச் சந்திப்போம் என்று தனது தோழர்களிடம் பைஅத் என்ற உறுதிப் பிரமாணத்தை வாங்கிக் கொண்டார்கள். அந்த வரலாற்று நிகழ்ச்சியைத் தான் இன்றும் நாம் பைஅத்துர் ரிழ்வான் என்று போற்றி அழைக்கின்றோம். பின் அந்த வதந்தி பொய் என்று தெரிந்ததுää உதுமான் (ரலி) அவர்களும் எந்தவித ஆபத்துமின்றி முஸ்லிம்களுடன் வந்து சேர்ந்து கொண்டார்கள்.
முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்து சேர்ந்த பொழுதுää அங்கு தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடியது. தண்ணீருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்பொழுது மதீனாவில் ஒரே ஒரு தண்ணீர்க் கிணறு தான் இருந்தது. அதுவும் ஒரு யூதனுக்குச் சொந்தமாக இருந்தது. அவர் முஸ்லிம்களை தண்ணீர் எடுத்துக் கொள்ள அனுமதிக்க மறுத்தார்.
எனவேää தனது தோழர்களை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää ''உங்களில் யார் அந்தக் கிணற்றை வாங்குகின்றார்களோää அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் ஒரு ஊற்றையே பரிசாக வழங்குவான்"" என்று வாக்குறுதி அளித்தார்கள். அப்பொழுது உதுமான் (ரலி) அவர்கள் தான் வாங்குவதாகப் பதிலளித்தார்கள். அதனை 20 ஆயிரம் திர்ஹம்களுக்கு வாங்கிää அதனை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள தானாமாகவும் வழங்கி விட்டார்கள்.
மதினாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் முதலில் கட்டிய பள்ளிவாசல் போதாத நிலையில் இருந்தது. இதைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää பள்ளிவாசலை விரிவாக்க எண்ணியவர்களாகää உங்களில் யார் இந்தப் பள்ளிவாசலின் விரிவாக்கத்திற்காகச் செலவு செய்யத் தயாராக இருக்கின்றீர்கள் என்று கேட்டார்கள். அப்பொழுதும் உதுமான் (ரலி) அவர்கள் ''நான்"" என்று முன்வந்தார்கள். அந்தப் பள்ளிக்குப் பக்கத்தில் இருந்து நிலத்தை வாங்கி பள்ளிவாசல் விரிவாக்கப்பணிக்கு தானமாக வழங்கினார்கள்.
ஹிஜ்ரி 9 ம் ஆண்டு பைஸாந்தியப் பேரரசன் மதீனாவைத் தாக்குதவற்கு தயாராகி வருகின்றான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு முஸ்லிம்கள் தயாராகும்படி கட்டளையிட்டு விட்டுää அதற்கான தயாரிப்புகளுக்கு பொருளாதார உதவியை வழங்கும்படி தனது தோழர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். இதனைக் கேட்ட உதுமான் (ரலி) அவர்கள்ää ஆயிரம் ஒட்டகங்களையும்ää 50 குதிரைகளையும்ää ஆயிரம் தங்கக் கட்டிகளையும் அந்தப் போருக்காக வழங்கினார்கள். இன்றைக்கு உதுமான் (ரலி) அவர்கள் என்ன செய்திருக்கின்றார்களோää இன்றைய நாளிலிருந்துää அவர்களை என்றைக்கும் கெடுதிகள் அணுகாது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைத்தூதை எழுதும் எழுத்தாளர்களில் ஒருவராக உதுமான் (ரலி) அவர்கள் இருந்தார்கள். திருமறைக் குர்ஆனின் ஒரு பகுதியை எழுதிய நற்பேற்றுக்குரியவரும் ஆவார். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால்ää சொர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட பத்து நபித்தோழர் பெருமக்களில் உதுமான் (ரலி) அவர்களும் ஒருவராவார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நெருக்கமாக இருந்த காரணத்தால்ää நபித்தோழர்களிலே மிகவும் மதிக்கப்பட்ட தோழராக உதுமான் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்புää நேர்வழி காட்டப்பட்ட கலீபாக்களின் ஆட்சியில்ää அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் பொழுதுää இரண்டு கலீபாக்களுக்கும் ஆலோசகராகவும் இருந்த பெருமைக்குரியவர் உதுமான் (ரலி) ஆவார்கள்.


4. ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுதல்
உமர் (ரலி) அவர்கள் தனக்குப் பின் வரக் கூடிய ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழுவை சிபாரிசு செய்திருந்ததோடுää இவர்கள் ஆலோசனை செய்து தங்களுக்குள் ஒருவரை ஆட்சியாளராகத் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவரது உயிலில் எழுதி இருந்தார்கள்.
உமர் (ரலி) அவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள் :
அலி (ரலி)
உதுமான் (ரலி)
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)
ஜுபைர் பின் அவ்வாம் (ரலி)
தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
உமர் (ரலி) அவர்கள் மரணமடைந்த மூன்று நாட்களுக்குள் இவர்கள் கலந்தாலோசனை செய்து கலீபாவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என அதில் நிபந்தனையும் விதித்திருந்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.
இவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்கள் தமது கலீபாவைத் தேர்ந்தெடுக்க அமர்ந்த பொழுதுää தல்ஹா (ரலி) அவர்கள் மதீனாவில் இல்லைää அவர் வெளியூரில் இருந்தார். எனவேää அவரால் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த ஆலோசனைக் குழு மிக நீண்ட நேர விவாதத்திற்குப் பின்னும் சரியானதொரு ஒருமித்த முடிவுக்க வர இயலவில்லை. எனவேää அங்கு குழப்பம் நீடித்தது. இந்த நிலையில்ää அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் ஒரு கருத்தை முன் வைக்கின்றார்கள்.
நம்மில் யாராவது ஒருவர் இந்த நியமன உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொண்டால்ää அவ்வாறு விலகிக் கொள்ளக் கூடிய நபருக்கு கலீபாவை முன் மொழியக் கூடிய உரிமையை அளிப்பது என்று கூறிää யார் நம்மில் நியமன உறுப்பினர் குழுவில் இருந்து விலகிக் கொள்ள சம்மதிப்பது? என்று கேட்டார். அனைவரும் நிசப்தமாக இருந்தர். பின் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள்ää நான் விலகிக் கொள்கின்றேன் என்று கூறினார்.
அலீ (ரலி) அவர்களைத் தவிர மற்ற அனைவரும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுடைய முடிவை ஏற்றுக் கொண்டார்கள். அப்பொழுதுää அலீ (ரலி) அவர்களைப் பார்த்துää நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் கேட்டார்கள்.
வாக்குறுதி நீதமாக இருக்க வேண்டும்.
இரத்த உறவு முறைகளுக்காக வாக்குறுதிகள் மீறப்படக் கூடாது.
பொதுமக்களின் நலனை முன்னிட்டுää வாக்குறுதிகள் பேணப்பட வேண்டும்.
மேற்கண்ட அனைத்து விதிமுறைகளையும் ஒப்புக் கொள்ளும்பட்சத்தில்ää நானும் உங்களது முடிவுக்கு சம்மதிக்கின்றேன் என்று அலீ (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
அலீ (ரலி) அவர்களின் நிபந்;தனைகளை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இப்பொழுது ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் முடிவு எவ்வாறு அமையப் போகின்றதுää யாரைத் தேர்ந்தெடுக்கப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருக்க ஆரம்பித்தார்கள். அனைத்தும் இப்பொழுது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் முடிவில் இருக்கின்றது.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள்ää இந்த கடுமையான பணியைச் சிரமேற் கொண்டுää எடுத்துக் கொண்ட பொறுப்பை நிறைவேற்றுவதற்காக கடுமையாகப் பாடுபட்டார்கள். உமர் (ரலி) அவர்களின் மரணத்தை அடுத்துää முஸ்லிம் ராஜ்யத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் அடுத்து யார் நமது கலீஃபா என்ற எதிர்பார்ப்போடு இருந்தார்கள். இன்னும் அனைத்துத் தலைவர்களும் கருத்தில் கொள்ளப்பட்டு தேர்வு ஆரம்பமாகியது.
இப்பொழுது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள்ää தனிப்பட்ட ஒவ்வொருவரிடமும் சென்று மிக நீண்ட நேர ஆலோசனைகளை நடத்தினார். பனூ ஹாஷிம் குலத்தவர்கள் அலீ (ரலி) அவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்ää இவர்களைத் தவிர மற்ற அனைவரும் உதுமான் (ரலி) அவர்களை நியமனம் செய்யுமாறு கூறினார்கள். எனவேää இப்பொழுது வேட்பாளர் குழுவில் மற்ற தலைவர்கள் அனைவரது பெயர்களும் களையப்பட்டுää உதுமான் (ரலி) மற்றும் அலீ (ரலி) ஆகிய இருவரது பெயர்களும் இறுதித் தேர்வுக்கு முன் மொழியப்பட்டன.
இப்பொழுதுää இறுதித் தேர்வுக்காக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் களமிறங்கினார்கள்.
உங்களை அடுத்துää யார் இந்த கலீபா பொறுப்புக்கு மிகவும் தகுதி வாய்ந்த நபராக நீங்கள் கருதுகின்றீர்கள் என்று அலீ (ரலி) அவர்களைப் பார்த்து அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கேட்டார்கள்.
உதுமான் (ரலி) என்று பதிலளித்தார்கள் அலீ (ரலி) அவர்கள்.
இதே கேள்வியை உதுமான் (ரலி) அவர்களிடம் சென்று கேட்ட பொழுதுää அவர்கள் அலீ (ரலி) என்று பதிலளித்தார்கள்.
அன்று இரவும் வந்தது. மறுநாள் அதிகாலையில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் ஒரு இறுதி முடிவுக்கு வந்தார்கள். இரவு முழுவதும் உட்கர்ந்துää மற்ற நான்கு நியமன உறுப்பினர்களிடமும் கலந்தாலோசனை செய்தார்கள். இறுதியாகää தனது இறுதி ஏகமனதான முடிவை நியமன உறுப்பினர்களிடம் கொண்டு வருவதில் தோல்வியைக் கண்டார்கள். பனூ ஹாஷிம் மற்றும் பனூ உமைய்யா குலத்தவர்களுக்கிடையேயான வேறுபாடுகள் தலைதூக்கää ஏகமனதான முடிவுக்கு வர இயலாமல் போனது. இறுதியாக அதிகாலை பஜ்ர் தொழுகைக்கான அதான் கூறப்பட்டதுடன்ää அந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.
தொழுகையும் முடிந்ததுää இப்பொழுது முழு மதீனா நகரமுமே தனது கண்களையும்ää காதுகளையும் கூர்தீட்டிக் கொண்டுää அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் என்ன கூறப் போகின்றாரோ என்ற ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தது.
அப்துர் ரஹ்மான் இப்பொழுது எழுந்து நின்றார். சில நிமிட நேரங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டுää தனக்கு நேர்வழி காட்டுமாறு பிரார்த்தனையும் செய்தார். பின் மக்களைப் பார்த்துää
எனதருமைச் சகோதரர்களே..!
மிகச் சிறந்த முடிவொன்றை இப்பொழுது உங்கள் முன் அறிவிக்க இருக்கின்றேன். நான் பல பேர்களிடம் இது குறித்துக் கருத்துக் கேட்டு விட்டுத் தான் இறுதி முடிவுக்கு வந்துள்ளேன். எனது முடிவில் நீங்கள் மாறுபட மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.
பின் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபான் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களை அழைத்தார்கள். ''நீங்கள் குர்ஆனின் கட்டளைப்படியும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படியும்ää நேர்வழி பெற்ற முந்தைய கலீபாக்களின் நெறிமுறைப்படியும் ஆட்சி நடத்துவேன்""ää என்ற உறுதி மொழியைத் தாருங்கள்ää என்று கேட்டார்கள்.
என்னால் இயன்ற வரையிலும்ää என்னுடைய மிகச் சிறந்த கல்வி ஞானத்தாலும் என்னுடைய வாக்குறுதியைப் பேண முயற்சி செய்வேன்ää என்று உறுதி கூறினார்கள் உதுமான் (ரலி) அவர்கள். அதனை அடுத்து அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களின் கரங்களில் பைஅத் என்ற சத்தியப்பிராமணம் செய்தார்கள். இவ்வாறாகää உதுமான் (ரலி) அவர்கள் மூன்றாம் கலீபாவாகத் தேர்வு செய்யப்பட்டார்கள்.
அறிமுக உரை
பைஅத் என்ற உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர்ää உதுமான் (ரலி) அவர்கள் உரையாற்ற எழுந்து நின்றார்கள். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நம்முடைய கலீபா அவர்கள் எந்தவிதமான உரையை நிகழ்த்தவிருக்கின்றார்கள் என்பதை அறியும் ஆவலுடன் அனைவரும் கலீபாவை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தான் ஏற்றுக் கொண்ட புதிய பொறுப்பின் மீதிருந்த மதிப்பச்சம் காரணமாக அவரது உடல் சற்றுக் குலுங்கியது. அவர் பேசியது இது தான்ää என்னுடைய தோழர்களேää புதிய குதிரையை கட்டுப்படுத்தி ஓட்டுவது என்பது மிகவும் கடினமானது. உங்களிடம் பேசுவதற்கு இன்னும் பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. நான் உயிருடன் இருக்கும்பட்சத்தில்ää இன்னொரு முறை நான் உங்களிடம் பேசுகின்றேன். உங்களுக்கே தெரியும்ää நான் ஒரு சிறந்த பேச்சாற்றல் மிக்கவரல்ல என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று கூறினார்.
முதல் வழக்கு
முதல் விசாரணையாகää உமர் (ரலி) அவர்களின் இரண்டாவது மகன் செய்த கொலையைப் பற்றிய விசாரணையாக இருந்தது. உபைதுல்லா அவர்கள் ஹ{ர்முஸான் மற்றும் ஜாஃபீனா என்ற இரு பாரசீகர்களைக் கொலை செய்திருந்தார். இவர்கள் இருவரும் தனது தந்தையான உமர் (ரலி) அவர்களைப் படுகொலை செய்த அபூ லூலூ வுடன் இணைந்து இந்தக் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததன் காரணமாகää உபைதுல்லாஹ் அவர்களால் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் மாலையில்ää அபூ லூலூ வுடன் ஹ{ர்முஸான் மற்றும் ஜாஃபினா ஆகிய இருவரும் தங்களுக்குள் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்ததைää அபுபக்கர் (ரலி) அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் அவர்கள் கண்டிருந்தார்கள். இதன் காரணமாகää இந்தப் படுகொலையை அபூ லூலூ மட்டுல்ல அவர்களுடன் இந்த இருவரும் இணைந்து தான் சதித் திட்டம் தீட்டியிருக்கின்றார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த சந்தேகத்தின் பேரில்ää தனது தந்தையின் படுகொலைக்கு பழிவாங்கும் முகமான உபைதுல்லாஹ் அவர்கள் அந்த இருவரையும் கொலை செய்து விட்டார்கள்.
இந்த வழக்கு உதுமான் (அலி) அவர்களின் முன்னிலையில் விசாரணைக்காகக் கொண்டு வரப்பட்டது. உதுமான் (ரலி) அவர்கள் இந்த வழக்கைää முன்னணி நபித்தோழர்களின் கருத்துக்கு விட்டார். அப்துர் ரஹ்மான் இப்னு அபுபக்கர் அவர்கள் ஒருவரின் சாட்சியத்தை மட்டும் வைத்துக் கொண்டுää இந்த பழிநடவடிக்கைக்குப் போதிய ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. அலீ (ரலி) அவர்களின் கூற்றிலிருந்துää மற்றவர்களின் கூற்று மாற்றமாக அமைந்தது. இந்த வழக்கின் போக்கில் சில சிரமங்களைக் கண்ட உதுமான் (ரலி) அவர்கள்ää தானே இதனைத் தீர்க்க முன்வந்தார். அந்த இரண்டு பாரசீகர்களின் படுகொலைக்கு இரத்த இழப்பீட்டுத் தொகை வழங்குவது என்ற முடிவெடுக்கப்பட்டது. இறந்த இருவருக்கும் உறவினர்கள் இல்லாத காரணத்தால்ää அவர்களுக்குப் பதிலாக கலீபா அவர்கள் வழக்கை நடத்துவது என்ற முடிவாகியது. இந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
பேரரசு விரிவாக்கம்
முதல் ஆணை
உதுமான் (ரலி) அவர்கள் கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன்ää முதல் ஆணையாக தனது ராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு இவ்வாறு உத்தரவிட்டார்கள். 'உங்களது நடவடிக்கைகளில் நேர்மையைப் பேணுங்கள்ää அதனைப் போல பண விஷயத்திலும் நாணயத்தைப் பேணுங்கள்ää இன்னும் முஸ்லிம் அல்லாதவர்களுடன் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்கள். இன்னும் நீங்கள் எதிரிகளிடம் வாக்குறுதி செய்திருந்தாலும் அதனைத் தவறாது நிறைவேற்றிடுங்கள். இன்னும்ää நீங்கள் மக்களுக்குச் சேவை செய்ய நியமிக்கப்பட்ட மற்றும் அவர்களது பாதுகாவலர்களே அன்றி அவர்களது தலைவர்களோ அல்லது ஆட்சியாளர்களோ அல்ல என்பதை மறந்து விட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்.
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூபாவின் கவர்னராகப் பொறுப்பேற்றிருந்தார்கள். அப்துல்லா பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் கருவூலகத்திற்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். கருவூலத்திலிருந்து கடனாகப் பெற்ற தொகையைää குறித்த காலத்தில் செலுத்தத் தவறிய காரணத்தால்ää இதனை அப்துல்லா பின் மஸ்ஊது (ரலி) அவர்கள்ää கலீஃபா உதுமான் (ரலி) அவர்களுக்குத் தெரிவித்த பொழுதுää கலீஃபா அவர்கள் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை கவர்னர் பதவியை விட்டுக் கீழிறங்கும்படி உத்தரவிட்டார்கள்.
பெண் வீராங்கனை
அஸர்பைஜானும்ää அர்மீனியாவும் உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தின் பொழுது வெற்றி கொள்ளப்பட்டு விட்டன. பின்பு அவை இஸ்லாமிய ஆட்சியின் பிடியிலிருந்து நழுவி விட்டன. இந்த இரண்டு பகுதிகளும்ää கூபாவின் ஆளுகையின் கீழ் நியமிக்கப்பட்டிருந்தன. சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவுடன்ää அஸர்பைஜான் புரட்சி செய்து இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்து விலகிக் கொண்டது. உதுமான் (ரலி) அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மீண்டும்ää அஸர்பைஜான் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது.
அர்மினியாவை மீண்டும் கைப்பற்றுவதற்காக சல்மான் பின் ராபிஆ (ரலி) மற்றும் ஹபீப் பின் முஸ்லிமா (ரலி) ஆகிய இருவரின் தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். இந்தப் படையில் ஹபீப் (ரலி) அவர்களின் மனைவியும் உடன் சென்றிருந்தார்கள். ஒருநாள் ஹபீப் (ரலி) அவர்கள்ää அர்மீனியாவின் தளபதி முஸ்லிம் படைகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அறிய வருகின்றார். அர்மீனிய ராணுவத்தை எதிர்த்து தாக்கும் அளவுக்கு தம்மிடம் படை இல்லை என்பதை உணர்ந்த ஹபீப் (ரலி) அவர்கள்ää எதிரி தாக்க ஆரம்பிப்பதற்கு முன்பே நாம் தாக்குதலைத் தொடுத்து விட வேண்டும் என்று திட்டமிடுகின்றார்.
இதனைக் கண்ட ஹபீப் (ரலி) அவர்களின் மனைவிää அன்றைய தினம் மாலை நேரத்தில் கவச உடையை அணிந்து கொண்டிருந்த தனது கணவரைப் பார்த்துää இந்த மாலை நேரத்தில் நீங்கள் கவச உடையை அணிந்து கொண்டுää எங்கே புறப்படத் தயாராகி விட்டீர்கள் என்று கேட்டார்.
அர்மீனிய படைகளில் 10 பேரைக் கொன்று விட்டுää நான் சுவனத்தின் சுகந்தத்தை நுகரப் புறப்பட்டு விட்டேன் என்று ஹபீப் (ரலி) அவர்கள் தனது மனைவிக்குப் பதிலளித்தார்.
இதனைக் கேட்ட ஹபீப் (ரலி) அவர்களின் மனைவிää நீங்கள் மட்டுமா சுவனத்தைச் சுவைக்க வேண்டும்ää ஏன் நானும் உங்களுடன் வரக் கூடாதா? என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவராகää தனது கணவர் வீட்டை விட்டுக் கிளம்பியதும்ää தானும் ஒரு வீரனைப் போன்று ராணுவ உடை அணிந்து கொண்டுää அந்தக் காரிருளில் எதிரியின் கூடாரம் நோக்கிப் புறப்பட்டவர்ää தனது கணவனுக்கு முன்னாள்ää எதிரியின் கூடாரத்திற்குச் சென்று தனது கணவருக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்.
ஹபீப் அவர்கள் இரவோடிரவாக எதிரியின் கூடாரத்திற்குள் சென்றுää எதிரிக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததோடுää காவலாளியைக் கொலை செய்து விட்டுää நேரடியாக தளபதியின் கூடாரத்திற்கு விரைந்தார். அங்கு ஒரு ஆச்சரியத்தைக் கண்ட ஹபீப் (ரலி) அவர்கள்ää முழு இராணுவ உடை அணிந்து கொண்டுää தனது மனைவி தனக்கு முன்பே அங்கு வந்து காத்திருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த ஹபீப் (ரலி) அவர்கள்ää இருவரும் இணைந்து அந்தத் தளபதியைத் தாக்க ஆரம்பித்தார்கள். இருவரின் தாக்குதலை எதிர்பார்க்காத தளபதி அந்த இடத்திலேயே கொலை செய்யப்பட்டுää ஆர்மீனியாவின் வெற்றி இருவரின் முயற்சியால் எளிதாக்கப்பட்டது.
சைப்ரஸ் வெற்றி
முஆவியா (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் பொழுதுää சிரியாவின் கவர்னராகப் பொறுப்பேற்றிருந்தார்கள். பைஸாந்தியத்தின் கீழ் அனாடோலியா இருந்து வந்தது. ஹிஜ்ரி 26 ன் பொழுதுää அனடோலியாவின் மீது படையெடுத்த முஆவியா (ரலி) அவர்கள்ää அதன் அமூரியா என்ற நகரத்தைக் கைப்பற்றினார்கள். அதனை அடுத்து உள்ள பிரதேசத்தையும் கைப்பற்ற நினைத்த முஆவியா (ரலி) அவர்களுக்குää தரை மார்க்கம் வழியாக முன்னேறுவது மிகவும் சிரமமாக இருந்தது. எனவேää அத்துடன் தனது படையெடுப்பை நிறுத்திக் கொண்டார்கள்.
அதன் பிறகு மத்திய தரைக்கடல் பகுதியின் பக்கம் தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்த முஆவியா (ரலி) அவர்கள்ää மத்திய தரைக் கடல் பகுதியில் உள்ள தீவுக் கூட்டங்களைக் கைப்பற்றுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துää அதற்கான திட்டமிடுதலில் இறங்கினார்கள்.
கடல் போரின் மீது முஆவியா (ரலி) அவர்களுக்கு தனி ஆர்வம் இருந்து வந்தது. இன்னும் கடற்படை இல்லாமல்ää இஸ்லாமியப் படை வலுவல்லதாக அமையாது என்பதையும் அவர்கள் கணித்தார்கள். உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் பொழுதுää இதற்கான திட்டத்தையும் தனது எண்ணத்தையும்ää கலீபா உமர் (ரலி) அவர்களிடம் முஆவியா (ரலி) அவர்கள் தெரிவித்த பொழுதுää அதிகமான முஸ்லிம்களை இழக்க நேரிடுமே என்ற கவலையில் உமர் (ரலி) அவர்கள் இவரின் திட்டத்திற்குச் சம்மதிக்க மறுத்து விட்டார்கள். இப்பொழுதுää ஆட்சி மாற்றம் ஏற்பட்டுää உதுமான் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன்ää மீண்டும் தனது திட்டத்தை புதுப்பித்து உதுமான் (ரலி) அவர்களிடம் முறையிட்ட பொழுதுää உதுமான் (ரலி) அவர்கள் கடற்படை ஒன்றை அமைப்பதற்குச் சம்மதித்ததோடுää அதற்கான சில வரைமுறைகளையும் வகுத்துத் தந்தார்கள். மேலும்ää இந்தப் படையில் சேரும்படி யாரையும் வற்புறுத்தக் கூடாதுää பங்கு கொள்பவரின் முழுச் சம்மதத்துடன் அவரைக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளும்படி உதுமான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
ஹிஜ்ரி 28 ஆம் ஆண்டுää கப்பலுடன் கூடிய கப்பற் படை ஒன்றை முஆவியா (ரலி) அவர்கள் நிறுவினார்கள். எகிப்தின் கவர்னரும்ää முஆவியா (ரலி) அவர்களும் இணைந்து கொள்ளää இரு கப்பற்படையும் சைப்ரஸிற்குள் நுழைய ஆரம்பித்தது. சைப்ரஸ் தீவு மக்கள் மிகவும் தீரத்துடன் போராடியும் முஸ்லிம்களை வெற்றி கொள்ள இயலவில்லை. இறுதியில் முஸ்லிம்களுடன் சமரச ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். சைப்ரஸ் தீவைப் பாதுகாப்பது முஸ்லிம்களின் பொறுப்பில் வந்ததுடன்ää இன்னும் சைப்ரஸ் தீவை முஸ்லிம்களின் படைத்தளமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
வடக்கு ஆப்ரிக்கா கைப்பற்றப்படுதல்
அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் எகிப்தின் முதல் கவர்னராக நியமிக்கப்பட்டார்கள். இன்னும் உதுமான் (ரலி) அவர்களின் காலத்திலும் சில காலங்கள் எகிப்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார்கள். இவரை அடுத்து அப்துல்லா பின் சராஹ் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 25 ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன்ää அலெக்ஸாண்டிரியாவில் கலவரங்கள் ஆரம்பித்தன. இந்தக் கலவரங்களை அடக்குவதற்கு மீண்டும் அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்களை உதுமான் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அதன் பின் மீண்டும் கவர்னராக அப்துல்லா (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
ஹிஜ்ரி 26 ல் வடக்கு ஆப்ரிக்க பிரதேசத்திற்குள் படையெடுப்பு நடத்தும்படிää கலீபா உதுமான் (ரலி) அவர்கள் எகிப்தின் கவர்னருக்கு ஆணை ஒன்றை அனுப்பி வைத்தார்கள்.
உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தின் பொழுதுää அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் திரிப்போலி நகரைக் கைப்பறியிருந்தார்கள். இப்பொழுது அப்துல்லா பின் சர்ஆ(ரலி) அவர்கள் துனீசியாவின் மீது படையெடுத்தார்கள். இந்தப் படையில் இப்னு அப்பாஸ் (ரலி)ää இப்னு உமர் (ரலி)ää இப்னு ஜாஃபர் (ரலி) இப்னு ஜுபைர் (ரலி) ஹஸன் (ரலி) மற்றும் ஹ{ஸைன் (ரலி) போன்ற முன்னணி நபித்தோழர்கள் பலர் இடம் பெற்றிருந்தார்கள். இந்தப் படையெடுப்பு முஸ்லிம்களின் தரப்புக்கு வெற்றியை அளிக்குமா என்பதை உறுதி செய்யுமாறு கலீபா உதுமான் (ரலி) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
அலெக்ஸாண்டிரியாவில் தோன்றி கலவரங்கள் அடக்கப்படுவதற்குää வடக்கு ஆப்ரிக்காவை கைப்பற்ற வேண்டிய அவசியமும் இருந்தது. இன்னும் வடக்கு ஆப்ரிக்காவில் நிலை கொண்டிருந்த பைஸாந்தியப் படைகள்ää முஸ்லிம்களுக்கு என்றுமே அச்சுறுத்தலாகவும் இருந்து கொண்டிருந்தது. எனவேää இந்த அச்சுறுத்தலை அகற்குவதற்கு கலீபா உதுமான் (ரலி) அவர்கள் முடிவு செய்தார்கள். அதன் காரணமாக வடக்கு ஆப்ரிக்கா மீது படையெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானமாகியது.
காதல் கதை
அப்துல்லா பின் சர்ஆ (ரலி) அவர்கள் தனது படையை திரிப்போலியில் குவிக்க ஆரம்பித்தார்கள். இந்த படைத்தளத்திலிருந்து பைஸாந்தியப் படைகளைத் தாக்குவதற்குண்டான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். யகூபா என்ற நகரத்திற்கருகில் மிகப் பெரிய பைஸாந்தியப் படைகள் குவிக்கப்பட்டிருப்பதையும்ää அவை முஸ்லிம் படைகள் முன்னேறுவதற்கு கடுமையான தடைக் கல்லாக இருப்பதை உணர்ந்தார்கள். பைஸாந்தியப் படைகளோ 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களைக் கொண்டதாக இருந்த அதே நேரத்தில்ää முஸ்லிம்கள் தரப்பிலோ அதனை விடக் குறைவான எண்ணிக்கையில் தான் படைவீரர்கள் இருந்தனர்.
இப்பொழுது இரு படைகளும் மோத ஆரம்பித்தனää சில நாட்கள் போர் நடந்து இரு தரப்பிலும் யாருக்கும் வெற்றி கிடைக்காத நிலையே நீடித்தது. பெர்பர்கள் மிகப் பெரிய பைஸாந்தியப் படைகளை நிறுத்தி வைத்திருந்தனர். அவர்கள் மிகவும் உக்கிரத்துடன் போரிட ஆரம்பித்தார்கள். பல நாட்கள் கழிந்தும்ää இரு தரப்பிலும் இழப்பீடுகள் சமமாகவே இருந்தன. இதனை அறிந்த பைஸாந்தியப் படைத் தளபதி ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தை அறிவித்தான்.
அதன்படிää யார் முஸ்லிம் தளபதி அப்துல்லா அவர்களின் தலையைக் கொய்து வருகின்றார்களோ அவர்களுக்கு மிகப் பெரிய பரிசுத் தொகை காத்திருப்பதாக அறிவித்தான். அதற்கான பரிசுத் தொகையாகää ஓராயிரம் தங்கக் கட்டிகளும்ää அத்துடன் தனது மகளையும் மணமுடித்து வைப்பதாக வாக்களித்தான். இதன் மூலம் முஸ்லிம்களின் மன வலிமையைக் குலைத்துää வெற்றியைத் தனதாக்கிக் கொள்ள பைஸாந்தியப் படைத் தளபதி திட்டமிட்டான்.
இந்த அறிவிப்பின் காரணமாகää அப்துல்லா (ரலி) அவர்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு வழங்கப்பட்டதோடுää அவர் எப்பொழுது தனது கூடாரத்திலேயே தங்கிக் கொண்டு தனது அலுவல்களைக் கவனிக்கத் தொடங்கினார்கள். இதனைக் கண்ட அப்துல்லா பின ஜுபைர் (ரலி) அவர்கள்ää முஸ்லிம்களில் யார் பைஸாந்தியப் படைத் தளபதியின் தலையைக் கொய்து வருகின்றார்களோ அவர்களுக்கு ஆயிரம் தங்கக் கட்டிகளும்ää இன்னும் பைஸாந்திய இளவரசியும் மணமுடித்து வைக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள்.
இந்த அறிவிப்பு வெளியான சில தினங்களில்ää பைஸாந்தியப் படைத் தளபதி கொலை செய்யப்பட்டான். பைஸாந்தியப் படைகள் தளபதியை இழந்துää சிதறி ஓட ஆரம்பித்தன. இறுதியில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.
போர் முடிந்தவுடன்ää பைஸாந்தியப் படைத் தளபதியின் தலையைக் கொய்தது யார் என்ற கேள்வி எழுந்தது. எவரும் முன் வந்து அந்தப் பரிசைப் பெற்றுக் கொள்ள முன்வரவில்லை. இறுதியில் பைஸாந்திய இளவரசி தனது தந்தையாரைக் கொலை செய்த நபரை அடையாளம் காட்டினார். அவர் அடையாளம் காட்டிய நபர் வேறு யாரும் அல்லää அப்துல்லா பின் ஜுபைர் (ரலி) அவர்களேயாவார்கள். பின்ää அந்த இளவரசியை அப்துல்லா பின் ஜுபைர் (ரலி) அவர்களுக்கு மணமுடித்து வைக்கப்பட்டது.
இந்த வெற்றியானதுää வடக்கு ஆப்ரிக்காவின் மீதான படையெடுப்புக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது. இப்பொழுதுää முஸ்லிம் படைகள் துனீசியா மற்றும் மொராக்கோ வின் பல இடங்களில் ஊடுறுவ ஆரம்பித்தார்கள்ää அதன் முக்கிய நகரங்களைக் கைப்பற்றினார்கள்.
வடக்கு ஆப்ரிக்காவின் மீதான படையெடுப்பு முழு வெற்றியை அளிப்பதற்குää 14 மாதங்கள் ஆகின. இந்தக் குறுகிய நாட்களில்ää முழு வட ஆப்ரிக்காவையும் முஸ்லிம்கள் தங்களது வசம் கொண்டு வந்தனர். வட ஆப்ரிக்கா இப்பொழுது அரபுப் பிரதேசத்தின் ஒரு பகுதியாகப் பரிணமிக்க ஆரம்பித்தது.
முதல் கடல் போர்
அரபுலக வரலாற்றில் ஹிஜ்ரி 31 ல் முதன் முதலாக கடல் போர் நடந்தது. அப்பொழுது கான்ஸ்டான்டின்நோபிளை தலைநகராகக் கொண்டு பைஸாந்திய மன்னர் ஆண்டு கொண்டிருந்தார். அவர் முஸ்லிம்களின் கைவசம் இருந்த எகிப்தின் அலெக்ஸாண்டிரியா நகரைக் கைப்பற்றியே தீருவேன் என்று சூளுரைத்திருந்தார். அதன் அடிப்படையில் 500 போர்க் கப்பல்களுடன் பைஸாந்தியத்தை விட்டு படைகள் அலெக்ஸாண்டிரியாவை நோக்கிக் கிளம்பின.
இதனைக் கேள்விப்பட்ட முஸ்லிம்கள் பைஸாந்தியப் படைகளை தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்துää முதன் முதலாக கடல் போரில் குதித்தனர். முஆவியா (ரலி) அவர்களின் படை சிரியாவிலிருந்தும்ää அப்துல்லா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்களின் படை எகிப்தில் இருந்தும் கிளம்பியது. பைஸாந்தியப் படைகள் அலெக்ஸாண்டிரியாவை அடைவதற்கு முன்பே அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம் படைகள் கிளம்பின. இரண்டு படைகளும் நடுக்கடலில் எதிரிப் படைகளைச் சந்திக்கும் முன்பே சந்தித்துக் கொண்டன. இணைந்து கொண்டன.
இப்பொழுது முதல் கடல் போர் துவங்கியது. போர் மிகவும் கடுமையாக நடைபெற்றது. முஸ்லிம்களுக்கு இதுவே முதல் போராக இந்தாலும்ää அவர்கள் எதிலும் நாங்கள் முன்னணி வகிக்கக் கூடியவர்கள் தான் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். அந்தப் பகுதியின் கடல் நீர் தனது நீலத் தன்மையை மாற்றிக் கொண்டுää சிவப்பாகக் காட்சி அளிக்க ஆரம்பித்தது. எங்கும் பைஸாந்தியப் படைகளின் இறந்த உடல்கள் தான் மிதந்து கொண்டிருந்தன. இருப்பினும் பைஸாந்தியப் படைகள் தங்களது நிலைகளை விட்டுக் கொடுக்காமல் போராடிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் எதிரிப் படைகள்ää சிசிலித் தீவினில் அடைக்கலம் புகுந்து கொண்டார்கள். முஸ்லிம்கள் வெற்றியுடன் நாடு திரும்பினார்கள்.
இந்த முதல் கடல் போர் அனுபவமேää கடற்படை யுத்தத்தில் மிகச் சிறப்பான அத்தியாயத்தை முஸ்லிம்களுக்குத் துவக்கி வைத்தது. மிக நீண்ட காலத்திற்குப் பின் முஸ்லிம்கள் கடற்படையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். ஹிஜ்ரி 31 ல் ஆரம்பித்த இந்த வலுவான கடற்படைää தனது ஆதிக்கத்தை 16 ம் நூற்றாண்டு வரை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருந்தது. அதன் பின் இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாகää இந்தக் கடற்படை பலமிழக்க ஆரம்பித்தது.
பெர்சியா மற்றும் தாப்ரிஸ்தான்
ஹிஜ்ரி 26 ல் பெர்ஸியாவில் குழப்ப நிலை துவங்கியது. பஸ்ராவின் கவர்னர்ää குழப்பக்காரர்களை அடக்குவதற்காக பெர்ஸியாவின் மீது படை எடுத்தார். அவர்கள் அடக்கப்பட்டார்கள். மீண்டும் பெர்சியாவில் அமைதி திரும்ப ஆரம்பித்தது.
ஹிஜ்ரி 30 ல் கூஃபா வின் கவர்னர்ää தாப்ரிஸ்தானை நோக்கித் தனது படைகளை அனுப்பி வைத்தார். தாப்ரிஸ்தான் கைப்பற்றப்பட்டது. இதே காலத்தில் குரஸானிலும் குழப்ப நிலை ஆரம்பித்தது. இதனையும் அடக்கப்பட்டது.
ஹிஜ்ரி 31 ல் எஸ்ட்கிரிட் என்ற ஈரான் மன்னர்ää கொல்லப்பட்டார். அவர் தனது மணிமுடியை இழந்து விட்டாலும்ää அதனைத் திரும்ப அடைந்து கொள்ளும் தனது முயற்சியில் துவண்டு விடவில்லை. அவர் ஒவ்வொரு மாகாணத்திற்கும் இடம் பெயர்ந்து சென்றுää ஆங்காங்கே அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டே இருந்தார். இது ஈரானின் அமைதிக்குப் பெரும் முட்டுக் கட்டையாக அமைந்தது. தனது இறுதி முயற்சியாக சிஸ்தானிற்குள் ஈரானின் மன்னர் நுழைந்தார். துருக்கிஸ்தானத்தின் சில தலைவர்களின் உதவியுடன்ää சிஸ்தானின் மீது படையெடுத்தார். அந்தப் போரில் ஈரானின் மன்னர் தோற்கடிக்கப்பட்டார். அவர் தன்னைப் பாதுகாக்கும் நோக்கத்துடன்ää அங்கிருந்ததொரு மாவு அரவை மில்லுக்குள் நுழைந்து கொண்டார். அந்த அரவை மில்லின் உரிமையாளர்ää ஈரானின் மன்னர் தான் இங்கு வந்து அடைக்கலம் புகுந்திருக்கின்றார் என்பதை அறியாதவராகää ஈரானின் மன்னர் அணிந்திருந்த விலையுயர்ந்த அணிகலன்கள் மற்றும் உடைகளுக்கு ஆசைப்பட்டுää அவரைக் கொன்று அருகில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் வீசி எறிந்தார். இத்துடன் ஈரான் மன்னரின் சதி வேலைகள் நிறைவுக்கு வந்தன.
உள்நாட்டுக் குழப்பம்
உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த உள்நாட்டுக் குழப்பம் ஆரம்பமானது. உதுமான் (ரலி) அவர்களின் படுகொiலைக்குப் பின்னதாக அது வலுவடைந்தது. இயற்கையிலேயே உதுமான் (ரலி) அவர்கள் மிகவும் இளகிய மனம் படைத்தவராக இருந்தார்கள். பிறருடைய குறைகளை அவர் அதிகம் பெரிது படுத்திக் கொள்வதில்லை. இதனால்ää தவறு செய்வது என்பது பிரதேசக் கவர்னர்களிடம் கூட மலிந்து வந்தது. உமர் (ரலி) அவர்களைப் போன்றதொரு மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் தினற்றவராக உதுமான் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். இதனால்ää மீண்டும் ஈரானும்ää பைஸாந்தியமும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் சூழ்நிலை உருவானது. இது உதுமான் (ரலி) அவர்களின் இயலாமையைப் பெரிதாகப் பறைசாற்ற ஆரம்பித்தது. இதன் விளைவு ஒவ்வொரு பகுதியின் தலைநகரிலும் எதிரொலித்தது. ஆங்காங்கேää அமைதியற்ற தன்மை தொடர்ந்தது. இன்னும்ää உதுமான் (ரலி) அவர்கள் தனது கலிபாப் பதவியை ஏற்றுக் கொண்ட பொழுதுää மிகவும் வயதாகி தளர்வுற்ற நிலையிலேயேää தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆக இத்தனை அம்சங்களையும்ää சில சுயநலமிகள் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்ததுடன்ää குழப்பங்களை தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் சாதனமாகவும் பயன்படுத்திக் கொண்டார்கள்.
அப்துல்லா பின் ஸபா
அப்துல்லா பின் சபாää என்றொரு யூதன் அல்லது யமன் தேசத்தைச் சேர்ந்தவன் தான் அரேபியாவின் முழுக் குழப்ப நிலைக்கும் காரணகர்த்தாவாகத் திகழ்ந்தான். உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலப்பகுதியின் பொழுதுää இவன் மதீனாவிற்கு வந்தான்ää அங்கு தன்னை மிகவும் இறைநம்பிக்கையுள்ள உண்மையான முஸ்லிம் என்று இனங் காட்டிக் கொண்டான். ஆனால்ää இதற்கெல்லாம் ஒரு காரணகாரியமும்ää திட்டமும் இருந்தது. தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவன் மதீனாவில் சில காலம் தங்கியிருந்துää அங்குள்ள நிலமைகளை நன்கு ஆய்வு செய்து கொண்டான். பனூ ஹாஸிம் குலத்தவர்கள் தான் உண்மையிலேயேää கலிபாப் பதவியை அனுபவிப்பதற்குத் தகுதி உடையவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் இருப்பதை அறிந்து கொண்டான். அலீ (ரலி) அவர்கள் தான் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டுமே ஒழியää உதுமான் (ரலி) அவர்களல்ல என்ற அவர்களது எண்ணத்தை அறிந்து கொண்டான். இதனையே தனது திட்டத்திற்கான மூலக் கருப் பொருளாகக் கொண்டுää குழப்பத்திற்கான வாசலைத் திறக்க ஆரம்பித்தான்.
மிகவும் புத்திசாதுர்யத்துடன் தனது திட்டத்தை ஆரம்பித்தான். முதலில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீதும்ää அவர்களது குடும்பத்தார் மீதும் தான் அளவற்ற அன்பு கொண்டவன் போல மக்களுக்குத் தன்னை இனங் காட்டிக் கொண்டான். இதனை மூலதனமாக வைத்துää ஒரு புதிய கதையை திரித்து விட ஆரம்பித்தான். அவன் கூறினான் :
ஒவ்வொரு இறைத்தூதரும் தனக்கென்று ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். அந்த உதவியாளர்ää இறைத்தூதருக்கு மிகவும் நெருங்கிய சுற்றத்தாராகவும் இருப்பார் என்றும் கூறிய அவன்ää அதற்கு உதாரணமாக நபி மூஸா (அலை) அவர்களுக்கு அவரது சகோதரர் ஹாரூன் (அலை) அவர்கள் உதவியாளாராக இருந்ததை எடுத்துக் காட்டினான். எனவேää இந்த அடிப்படையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் ஒரு உதவியாளர் இருந்தாக வேண்டும். அந்த உதவியாளர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நெருங்கி உறவினாராகவும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் நோக்கினால்ää அலீ (ரலி) அவர்கள் தான்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்பு கலீபாப் பதவியை அலங்கிரிக்க வல்லவர்ää தகுதியானவர் என்றும் கூறினான். எனவேää உதுமான் (ரலி) அவர்களை கலீபாப் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவருக்குப் பதிலாக அலீ (ரலி) அவர்களை இந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தான்.
அப்துல்லா பின் சபா தனது கருத்துக்களை மறைமுகமாகப் பரப்பி வந்தான். மேலும்ää முஸ்லிம்களின் முக்கிய நகரங்கள் அனைத்திற்கும் சென்றுää அங்கும் தனது கருத்துக்களை மறைமுகமாகப் பரப்பி வந்ததோடுää தனது கருத்துக்களுக்காக ஆதரவு வட்டங்களையும் தயார் செய்ய ஆரம்பித்தான். இதற்காக தனது கருத்துக்களை செவி ஏற்று அதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய நபர்களை தேர்ந்தெடுத்துää தனது கருத்துக்களுக்கு வலுச் சேர்க்க ஆரம்பித்தான். இவர்களில் குறிப்பாகää எப்பொழுதுமே ஆட்சியாளர்கள் மீது குறை பேசித் திரியும் நபர்கள் தான் இவனது சதி வலையில் வீழ்த்தப்பட்டவர்களாக இருந்தார்கள். இவர்கள்ää இப்போதைய கலீபா தான் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்நாட்டுக் குழப்பத்தின் சூத்திரதாரி என்றும் அவர்கள் வதந்திகளை வெகு எளிதாக மக்கள் மத்தியில் பரப்ப ஆரம்பித்தார்கள்.
அவன் தனது நோக்கத்தை ஓரளவு அடைந்து கொண்டதுடன்ää தனது இருப்பிடமாக இப்பொழுது எகிப்தினை ஆக்கிக் கொண்டான். இந்த ரகசிய குழுவானது மிகவும் வேகத்துடன் வளர்ந்து வந்தது. அவர்கள் தங்களது குழுவினரைக் கீழ்க்கண்ட வகைகளில் தயார்படுத்தினார்கள் :
இந்தக் குழுவினர் தங்களை மிகவும் இறைநம்பிக்கை கொண்ட மக்களாக பொதுமக்களிடம் காட்டிக் கொண்டார்கள். மக்களின் நலன் விரும்பிகளாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
இவர்கள் உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சியின் மீது குற்றங்களைத் தேடிப்பிடித்துப் பரப்பினார்கள். அவற்றில் சில ஆதாரம் தேவையற்றதாகவும் வெளிப்படையானதாகவும் கூட இருந்தது. இதனைக் கொண்டேää இல்லாத சில குறைகளையும் வலிந்து பரப்ப ஆரம்பித்தார்கள்.
சில அலுவலர்களின் மீது தொடர்ந்து புகார் கூறப்பட்டது. அவர்கள் இறைநம்பிக்கையற்றவர்கள் என்றும்ää தகுதியற்றவர்கள் என்றும் புகார் கூறப்பட்டது.
போலிக் கடிதங்கள்ää மற்றும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுää அவை நாட்டின் பல பகுதியில் உள்ள நகரங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. சபாவின் ஆட்கள் இந்தக் கடிதத்தை மக்களிடம் படித்துக் காண்பித்துää முடிந்தவரை மக்களிடம் அதன் கருத்துக்களைக் கொண்டு சேர்த்தனர். இன்னும் இந்த போலிக் கடிதங்களில்ää இவர்களுக்கு ஆதரவாக அலீ (ரலி)ää தல்ஹா (ரலி)ää சுபைர் (ரலி) போன்றவர்கள் இருப்பதாகவும் காட்டிக் கொண்டார்கள். இவை நல்ல தாக்கத்தை மக்கள் மத்தயில் விளைவித்ததோடுää பொது மக்களின் கருத்தும் இப்பொழுது திசைமாற ஆரம்பித்ததுää கலீபா உதுமான் (ரலி) அவர்களை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்ற குரல்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யமெங்கும் உரத்து முழங்க ஆரம்பித்தனää இஸ்லாமிய சாம்ராஜ்யம் முன்னைக் காட்டிலும் அமைதியை இழந்து தவித்ததோடுää குழப்பமே எங்கும் மலிந்து காணப்பட்டது.
அமைதியின்மை - அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) நீக்கம்
இப்பொழுது அப்துல்லா பின் சபா வின் சதி வேலைகள் மிகவும் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்தன. பஸராவின் கவர்னராக அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) என்ற மிகப் பெரும் நபித்தோழர் வீற்றிருந்தார். ஒருநாள் அபூ மூஸா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நபித்தோழர்கள் வெற்றுக் காலுடன் கூட போருக்குச் சென்றுää இறைவனுடைய திருப் பொருத்தத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்று மக்கள் மத்தியில் உரையாற்றினார். அதன்பின் சில காலங்களில் கழித்துää அபூ மூஸா (ரலி) அவர்கள் குதிரையில் அமர்ந்த வண்ணம் ஒரு போருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த சபாவின் ஆட்கள் இது தான் தருணம் என்று தங்களது சதி வேலைகளை ஆரம்பித்தனர்.
பாருங்கள் இந்த ஆட்சியாளரை..!
சில நாட்களுக்கு முன் நம்மிடம் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுதுää நபித்தோழர்கள் வெறுங்காலுடன் போருக்குச் சென்று அபரிதமான நற்கூலிகளை இறைவனிடம் பெற்றுக் கொண்டார்கள் என்று கூறி விட்டுää இப்பொழுது இவர் குதிரையின் மீது அமர்ந்து போருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கின்றார். இது சொல்லுக்கும்ää செயலுக்கும் மாற்றமாக அல்லவா இருக்கின்றது?! என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பினர்.
இன்னும்ää இவர் வெறுங்காலுடன் நடந்து போர் முகத்துக்குச் சென்றுää இறைவனிடம் அபரிதமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியது தானே என்ற கேள்வியையும் எழுப்பினார்கள்.
இவர்களது கருத்துக்களுக்கு ஒத்துப் பாடுபவர்களாக தங்களது ஆட்களைத் தயார் செய்திருந்த காரணத்தால்ää இந்தக் கருத்து வலுவானதோடுää இந்தப் புகார் மதீனாவில் உள்ள கலீபாவிற்கும் அனுப்பப்பட்டது. கலீபா அவர்கள் இதற்கு மேல் எதுவும் செய்ய இயலாத நிலையில்ää அபூ மூஸா (ரலி) அவர்களை ஆட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கும்படி தீர்மானம் நிறைவேற்றுகின்றார்கள்.
அவருக்குப் பதிலாக அப்துல்லா பின் ஆமிர் (ரலி) அவர்கள் பஸராவின் கவர்னராக நியமிக்கப்படுகின்றார்கள்.
அபூ மூஸா (ரலி) அவர்கள் நீக்கம் செய்யப்பட்டாலும்ää திருப்தியடையாத சபாக்கள்ää அப்துல்லா பின் ஆமிர் (ரலி) அவர்களுக்கு எதிராகவும் சதிகளைத் தொடர ஆரம்பித்தார்கள்.
இவர் என்ன வயதில் மிகவும் இளையவராக இருக்கின்றார்ää இன்னும் கலீபாவுக்குச் சொந்தக்காரராகவும் கூட இருக்கின்றார்.
உதுமான் (ரலி) அவர்கள்ää ஆட்சிப் பொறுப்பு அத்தனைக்கும் தனது உறவினர்களையே அல்லவா நியமித்துக் கொண்டிருக்கின்றார் என்றும் அவர்கள்ää அப்துல்லா பின் ஆமிர் (ரலி) மற்றும் உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்ப ஆரம்பித்தார்கள்.
ஆக மொத்தம் யூதனின் மூளை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை துண்டாடும் திசையை நோக்கி வேலை செய்தது. இதனை அறியாத முஸ்லிம்கள் பலர் இந்த சதி வலையில் வீழ்ந்ததோடுää தங்களின் சவக் குழிகளை தாங்களே தோண்டிக் கொண்டää சதி வரலாற்றை தங்களையும் அறியாமலேயே நடத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
கூலிப்படையினரின் கோரப்பிடியில் கூஃபா
கூபா..ää இந்தப் பிரதேசத்தின் கவர்னராகää ஈரானை வென்றெடுத்த வேங்கை சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) நியமிக்கப்பட்டிருந்தார்கள். இவர் அரசுக் கருவூலகத்திலிருந்து ஒரு சிறிய தொகையைக் கடனாகப் பெற்றிருந்தார்கள். அதனைக் குறித்த காலக் கெடுவுக்குள் செலுத்த அவர் தவறி இருந்தார். இந்தக் காரணத்தை வைத்துää சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்கு எதிராக ஒரு புகார் மனுவை கலீபா உதுமான் (ரலி) அவர்களுக்குää இந்த சபாவின் ஆட்கள் அனுப்பி வைத்தார்கள். இதனை அறிந்த கலீபா அவர்கள்ää உடனே சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை ஆட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்தார். அவருக்குப் பதிலாக வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவர் மிகவும் உறுதி வாய்ந்தää கண்டிப்பான கவர்னராக இருந்தார். இவர் விஷமிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் பலவற்றை எடுத்துää விஷமிகளை அடக்க முயற்சி செய்தார்.
ஒரு நாள் இரவு சில விஷமிகள் ஒரு வீட்டை உடைத்துää அந்த வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதோடு மட்டுமல்லாதுää அந்த வீட்டின் உரிமையாளரையும் கொலை செய்து விடுகின்றார்கள். இந்தக் கொள்ளையிலும்ää படுகொலையிலும் ஈடுபட்டவர்களை கவர்னர் அவர்கள் கண்டுபிடித்துää அவர்களுக்கு மரண தண்டனையையும் வழங்கினார். இந்த மரண தண்டனை நிறைவேற்றமானதுää சபாவின் ஆட்களை கோபமடையச் செய்தது. மிகவும் உறுதி வாய்ந்த தலைமை கூபாவின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுää நம்முடைய சதிச் செயல்களுக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்து கொண்ட சபாவின் ஆட்கள்ää கவர்னருக்கு எதிரான சதிச் செயல்களை முடுக்கி விட ஆரம்பித்தனர்.
கூபா வின் கவர்னர் மதுபானத்தைக் குடிக்க ஆரம்பித்துள்ளார் என்ற பொய் புகாரை கலீபா உதுமான் (ரலி) அவர்களுக்கு அனுப்பி வைத்ததோடுää கவர்னரின் இரு உதவியாளர்களை இதனைப் பார்த்த சாட்சிகளாகவும்ää சாட்சி கூற அனுப்பி வைத்தார்கள். சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சாட்சிகளின் சாட்சியம் காரணமாகää கூபாவின் கவர்னர் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அலீ (ரலி) அவர்கள் கருத்துக் கூறவும்ää கலீபா உதுமான் (ரலி) அவர்கள் வலீத் பின் உக்பா (ரலி) அவர்களையும் கூபா கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்கள்.
வலீத் பின் உக்பா (ரலி) அவர்களுக்குப் பதிலாக இப்பொழுதுää சஅத் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூபாவின் கவர்னராக நியமிக்கப்பட்டார்கள். சஅத் பின் ஆஸ் (ரலி) அவர்கள்ää ஒவ்வொரு நாள் இரவும் பொதுமக்களை தனது இல்லத்திற்கு வரவழைத்துää நாட்டு நடப்பு மற்றும் பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடக் கூடியவராக இருந்தார். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட சபா வின் ஆட்கள்ää இந்த இரவுச் சந்திப்பிற்கு அதிக அளவில் திரண்டு வர ஆரம்பித்தார்கள். நாளுக்குள் நாள் இந்த இரவுச் சந்திப்பில்ää பல பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டே வந்தார்கள். ஒரு நாள் கவர்னரின் முன்னிலையில் வைத்தேää ஒரு நபரை சபாவின் ஆட்கள் அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்தார்கள்.
இப்பொழுது நிலமை முற்றியதும்ää அதனை எதிர்த்து எதுவும் செய்வதறியாதவராக கவர்னர் இருந்தார். குழப்பக்காரர்கள் மிகவும் சக்தி படைத்தவர்களாக இருந்தார்கள். இந்தக் குழப்பக் காரர்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க இயலாதிருந்தார். நிலமைகள் மோசமாகிச் சென்று கொண்டிருக்கவும்ää பொதுமக்கள் கலீபாவுக்கு ஒரு புகார் மனுவை அனுப்பிää உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். இன்னும் இந்த குழப்பக் காரர்களின் பிடியிலிருந்து கூபாவை மீட்கும்படியும் அவர்கள்ää கோரிக்கை விடுத்தார்கள்.
நிலமையைப் புரிந்து கொண்ட கலீபா உதுமான் (ரலி) அவர்கள்ää இந்தக் குழப்பக்காரர்களை சிரியாவின் கவர்னர் முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைக்கும்படி கூபா கவர்னருக்கு உத்தரவிடுகின்றார்கள். கலீபா அவர்களின் உத்தரவு செயல்படுத்தப்பட்டுää குழப்பக்காரர்களை கூபாவின் கவர்னர்ää முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். முஆவியா (ரலி) அவர்கள் அந்தக் குழப்பக்காரர்களிடம் நல்ல முறையில் பழகிää அவர்களது மனதை மாற்ற முயற்சி செய்தார்கள். ஆனால் முஆவியா (ரலி) அவர்களையே இந்தக் குழப்பக்காரர்கள் எதிர்த்ததோடுää கட்டுப்படவும் மறுத்தார்கள். செய்வதறியாத முஆவியா (ரலி) அவர்கள்ää இந்தக் கெட்ட மனிதர்களை தன்னால் திருத்த இயலாது என்று கலீபா உதுமான் (ரலி) அவர்களுக்கு செய்தி தெரிவிக்கின்றார்கள்.
அப்பொழுதுää ஹிம்ஸ் பகுதியின் கவர்னராக இருந்த அப்துர்ரஹ்மான் பின் காலித் (ரலி) அவர்களிடம்ää அந்தக் குழப்பக்காரர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அப்துர்ரஹ்மான் பின் காலித் (ரலி) அவர்கள் கண்டிப்பானவர். இவர் இந்தக் குழப்பாக்காரர்களிடம் மிகவும் கடினமாகவே நடந்து கொண்டார். இந்தக் கண்டிப்பானது அவர்களை ஓரளவு வழிக்குக் கொண்டு வந்தது. இனிமேல் நாங்கள் திருந்தி வாழ்வோம்ää முன்பு செய்தது போன்ற குழப்பமான செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் காலித் (ரலி) அவர்களிடம் வாக்குறுதி அளித்தார்கள். இந்தச் செய்தி கலீபா உதுமான் (ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உண்மையில் அவர்கள் திருந்தி வாழ ஆசைப்பட்டால்ää மீண்டும் அவர்களைக் கூபாவிற்கே அனுப்பி வைத்து விடும்படிää அப்துர்ரஹ்மான் பின் காலித் (ரலி) அவர்களுக்குää கலீபா உதுமான் (ரலி) அவர்கள் பதில் அனுப்பி வைத்தார்கள். ஆனால்ää குழப்பக்காரர்களின் சதித் தலைநகரமாக மீண்டும் இவர்களின் வருகையினால் கூபா மாற்றப்பட்டதுää எங்கும் குழப்பமே தலைவரித்தாடியது.


அப்துல்லா பின் ஸபா தனது இயக்கத்தின் தலைமையகமாக எகிப்தை ஆக்கிக் கொண்டான். இதற்குப் பல காரணங்கள் இருந்தன. இது கிழக்கு மற்றும் மேற்கே உள்ள பேரரசிற்கான மத்திய தளமாக விளங்கியது. இரண்டாவதாகää எகிப்தின் முந்தைய கவர்னர் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் பிரபல்யமானவராக இருந்த அதேவேளையில்ää அவரை அடுத்து பதவிக்கு வந்த அப்துல்லா பின் ஸர்ஆ அவர்கள் அந்தளவுக்கு மக்களிடம் பிரபல்யமாகாதவராக இருந்தார். அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்கள். இது ஒன்றே மக்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவிப்பதற்கு பலமாக காரணமாகää அப்துல்லா பின் ஸபாவுக்கு கிடைத்தது. மூன்றாவதாகää வடக்கு ஆப்ரிக்காவின் மீது எகிப்தின் கவர்னர் படையெடுத்துச் சென்ற நிகழ்வும் சேர்ந்துää அப்துல்லா பின் ஸபாவை அடக்கி வைப்பதற்கான சரியான ஆட்தித் தலைமையும் இல்லைää மற்றும் அதற்கான சூழ்நிலைகளும் ஒத்து வரவும் இல்லை. இத்தகைய அனைத்துக் காரணங்களும் இணைந்து கொள்ள அப்துல்லா பின் ஸபா எந்தத் தடையுமின்றி தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ஏதுவாக அமைந்து விட்டது.
இன்னும் எகிப்தில் அப்துல்லா பின் ஸபாவுக்குää முஹம்மது பின் ஹ{தைபா மற்றும் முஹம்மது பின் அபுபக்கர் என்ற தோழர்கள் கிடைத்து விட்டதும் அவனது திட்டங்களை எளிதாகச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்தது. முஹம்மது பின் ஹ{தைபா என்பவர்ää அநாதையாக விடப்பட்டவர்ää இவரை உதுமான் (ரலி) அவர்கள் தான் வளர்த்தார்கள். இவர் வாலிபப் பருவத்தை அடைந்தவுடன்ää ஏதாவதொரு பகுதிக்குத் தன்னைக் கவர்னராக நியமிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்தப் பதவிக்காக தகுதியை அவர் பெற்றிராத காரணத்தால்ää உதுமான் (ரலி) அவர்கள் இவரது கோரிக்கையை நிராகரித்து விடுகின்றார்கள். உதுமான் (ரலி) அவர்கள் இந்தச் செயல் ஹ{தைபாவை கோபம் கொள்ளச் செய்கின்றது. அதன் காரணமாக இவர் எகிப்து வந்துää உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிராகக் செயல்பட ஆரம்பித்து விட்டார்.
தனது சொந்த அலுவல்கள் காரணமாகää முஹம்மது பின் அபுபக்கர் அவர்களும் உதுமான் (ரலி) அவர்களின் மீது கடுங்கோபம் கொண்டிருந்தார்கள். இவரை வளர்த்தெடுத்தவர் அலீ (ரலி) ஆவார்கள். இவருடைய தாயார்ää அபுபக்கர் (ரலி) அவர்களுடைய விதவை மனைவியாவார்ää அபுபக்கர் (ரலி) அவர்கள் இறந்ததன் பின்புää அலீ (ரலி) அவர்கள் இவரை மணந்து கொள்கின்றார். முஹம்மது பின் அபுபக்கர் அவர்கள் ஒரு மனிதரிடம் கடன் பெற்றிருந்தார்கள். அதனைக் குறித்த தவணையில் திருப்பிச் செலுத்தத் தவறியும் விடுகின்றார்கள். கடன் கொடுத்தவர்ää கலிஃபா உதுமான் (ரலி) அவர்களிடம் புகார் தெரிவிக்கவேää அந்தப் புகாரின் அடிப்படையில்ää மிகவும் நீதத்தோடு தீர்ப்பளிக்கின்றார்கள். இந்தத் தீர்ப்பு முஹம்மது பின் அபுபக்கர் (ரலி) அவர்களை மிகவும் பாதித்து விட்டது. இதன் காரணமாகää முஹம்மது பின் அபுபக்கர் அவர்கள்ää எகிப்து வந்தவர்ää கலிஃபா உதுமான் (ரலி) அவர்களின் எதிரியின் கையாளாக மாறி விடுகின்றார். இத்தனை அம்சங்களும் அப்துல்லா பின் ஸபாவுக்கு முழுப் பலத்தைக் கொடுத்தது. இப்பொழுதுää அப்துல்லா பின் ஸபாவினுடைய மத்திய தளமாக மாறி விட்ட எகிப்திலிருந்துää உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராக அவதூறுகள் வண்டி வண்டியாக வெளியேற ஆரம்பித்தது. இங்கிருந்து கிளம்பிய கடிதங்கள்ää ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் எந்தளவு சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்ற கதையை சொல்லியது. இந்த அவதூறுச் செய்திகளுக்கு உள்@ரில் உள்ள ஸபாவின் தோழர்கள் மிக முக்கியத்துவம் கொடுத்துப் பரப்ப ஆரம்பித்தனர். இந்தக் கடிதங்கள் மக்களிடம் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தின. தங்களது சந்தோஷமான வாழ்வு பறிபோனதாக அவர்கள் உணர ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு நகரத்தாரும் அடுத்த நகரத்தாரைப் பற்றி சிந்திக்கும் பொழுதுää வாழ்க்கை இவ்வளவு மோசமாகப் போய்க் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது என்றே சொல்லத் தலைப்பட்டனர். இதற்கு அத்தனைக்கும் கலிஃபா – ஆட்சித் தலைவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் கூற ஆரம்பித்தனர்.
அன்றைய தினம் இருந்த தகவல் தொடர்பு வளர்ச்சியின்மை காரணமாகää ஒரு நகரத்து மக்கள் இன்னொரு நகரத்து மக்களின் உண்மை நிலையை அறிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானதொரு செயலாக இருந்தது. இதனை தங்களுக்குச் சாதகமான அம்சமாக இந்த ஸபா அங்கத்தவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.
சோசலிஸ நண்பன்
உமர்(ரலி) அவர்களின் காலத்திலிருந்தே முஆவியா (ரலி) அவர்கள் சிரியாவின் கவர்னராக இருந்து வந்தார்கள். இவர் மிகவும் திறமையானää நீதிமிக்க ஆட்சியாளருமாவார். அவர் இத்தகைய நிலைமைகளை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்பதை மிகவும் அறிந்தவர். எனவேää ஸபாவின் ஆட்கள் சிரியாவில் தங்களது கைவரிசையைக் காட்ட இயலவில்லை.
அபூதர் அல் கிஃபாரீ என்றொரு பிரபல்யமான நபித் தோழர் ஒருவர்ää சிரியாவில் வசித்து வந்தார். இவர் தன்னை எப்பொழுதும் இந்த உலகப் பற்றிலிருந்தும்ää செல்வத்தின் மீதுள்ள ஈர்ப்பிலிருந்து விடுபட்டவராக தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். இவர்ää அரசின் கஜானாவிற்கும் வரும் செல்வங்கள்ää ஏழைகளின் உரிமைகள் என்று நினைத்துää அவை கஜானாவுக்குள் வந்த மாத்திரமே ஏழைகளுக்கு அவற்றைப் பங்கிட்டு விட வேண்டும் என்ற கொள்கையை உடையவர். மேலும்ää அரசின் கஜானாவில் செல்வத்தைச் சேகரித்து வைக்க வேண்டும் என்பதற்கு எதிரான கொள்கையை உடையவராக இருந்தார்.
பொதுச் சொத்து என்பது மக்களின் செல்வம்ää எனவேää அது அரசின் கருவூலகத்திற்கு வந்தவுடன் அதனை மக்களுக்கு செலவிட்டு விட வேண்டும் என்றார். இந்த கருத்துக்கு மாற்றாமாக கருத்துடையவராக முஆவியா (ரலி) அவர்கள் இருந்தார்கள். இவர்ää பொதுச் சொத்தாக அரசின் கருவூலகத்திற்கு வரும் செல்வத்தைக் அரசின் கஜானாவில் சேகரித்து வைத்துää நிலைமை சரியில்லாத மற்றும் செல்வம் தேவைப்படும் காலங்களில் அதனை எடுத்து மக்களுக்குச் செலவிட வேண்டும் என்ற கொள்கையை உடையவராக இருந்தார்.
பொதுச் சொத்து என்பது அல்லாஹ்விற்குரியது என்றழைத்த அவர்ää ஆட்சியாளர் என்பவர் இறைவனது பிரதிநிதியாக இருப்பதன் காரணத்தினால்ää பொதுச் சொத்தை எவ்வாறு செலவிடுவது சரியானது என்று அந்த ஆட்சியாளர் கருதுகின்றாரோ அதன்படி செலவிடலாம் என்று முஆவியா (ரலி) அவர்கள் கருதினார்கள். ஆனால் இதற்கு மாற்றுக் கருத்துடையவராகவே அபூதர் அல் கிஃபாரி (ரலி) அவர்கள் இருந்தார்கள்.
இந்த இருவருக்குமிடையே உள்ள இந்தக் கருத்துவேறுபாட்டைத் தங்களுக்கு சாதாமாக்கிக் கொள்ள ஸபாவின் ஆட்கள் முயற்சி செய்தார்கள். எனவேää அபூதர் கிஃபரி (ரலி) அவர்களிடம் சென்ற ஸபாவின் ஆட்கள்ää பொது மக்களின் சொத்தை அல்லாஹ்வினுடயது என்று கூறும் முஆவியாவின் கூற்று மிகவும் வித்தியாசமாக இருக்கின்றதே..! என்றார்கள். இதன் மூலம்ää மக்களின் செல்வத்தைää பொதுச் சொத்தை எவ்வாறு செலவழிப்பது என்பதை பொது மக்கள் கூறக் கூடாது என்கிறரா முஆவியா அவர்கள் என்ற விஷத்தைக் கக்கினார்கள்.
ஸபாக்களின் இந்த விஷப் பிரச்சாரத்தில் மிகவும் எளிதாக அபூதர் அல் கிஃபாரி (ரலி) அவர்கள் வீழ்ந்து விடுகின்றார்கள். நேராக முஆவியா (ரலி) அவர்களிடம் சென்ற அபூதர் (ரலி) அவர்கள்ää
பொது மக்களின் சொத்தைää அல்லாஹ்வினுடையது என்று நீங்கள் எந்த முறையில் கூறுகின்றீர்கள்? என்று கேள்வி கேட்டார்.
ஓ..! அபூதர் அவர்களே..? என்று மிகவும் அமைதியாகப் பதிலளித்த முஆவியா (ரலி) அவர்கள்ää ''நாம் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள்ää எனவே நமது செல்வங்கள் அல்லாஹ்விற்குரியதே"" என்றார்கள்.
முஆவியா (ரலி) அவர்களின் இந்தப் பதில் அபூதர் (ரலி) அவர்களைத் திருப்திப்படுத்தவில்லை.
சரி.. அபூதர் (ரலி) அவர்களே..! இனி வருங்காலங்களில் நான் இதனை பொதுச் சொத்து என்றே அழைக்கின்றேன்ää போதுமா..! என்றார்கள்.
இப்பொழுது அபூதர் (ரலி) அவர்கள் இன்னொரு கேள்வியை எழுப்பினார்கள். செல்வந்தர்கள் தங்களது செல்வத்தை சேர்த்துக் கொண்டே போவதற்கு உரிமை இல்லை என்றார். அவர்களுடைய தேவைக்கு அதிகமாக உள்ளதை உடனடியாகää இல்லாதவர்களுக்கு வழங்கி விட வேண்டும் என்று கூறிவிட்டுää தனது கருத்துக்கு ஏதுவாக ஒரு இறைவசனத்தை ஓதிக் காண்பித்தார்கள் :
இன்னும் எவர்கள் பொன்னையும்ää வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களேர் (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சிää அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும்ää முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) ''இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்"" (என்று கூறப்படும்). (9:34-35)
இங்கேயும் முஆவியா (ரலி) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களுடன் கருத்து முரண்பாடு கொண்டார்கள். ஒரு மனிதன் தனக்குரிய ஜகாத் தாகிய இரண்டரை சதவீதத்தைக் கொடுத்து விட்டால்ää அவர் அவரது செல்வத்தை அவருக்கே வைத்துக் கொள்ள சுதந்திரம் படைத்தவராகின்றார் என்று கூறினார்கள்.
அபூதர் (ரலி) அவர்களின் கருத்து அங்கிருந்த ஏராளமானவர்களின் கருத்தினைக் கவர்ந்தது. காரணம்ää அவர்களில் அநேகர் ஏழைகளாக இருந்தார்கள். அவர்கள் செல்வந்தர்களின் செல்வச் செழிப்பின் வனப்பிலிருந்து தாங்களும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று கருதலானார்கள். இப்பொழுது அபூதர் (ரலி) அவர்களின் பக்கம்ää மக்கள் சேர ஆரம்பித்தார்கள்.
முஆவியா (ரலி) அவர்கள் இந்தப் பிரச்னையின் தீவிரம் குறித்துää கலிபா உதுமான் (ரலி) அவர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பி வைத்தார்கள். இந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட உதுமான் (ரலி) அவர்கள்ää அபூதர் (ரலி) அவர்களின் கண்ணியம் எதிலும் குறை வைக்காதுää அவர்களைத் தகுந்த மரியாதையுடன் மதீனாவுக்கு அனுப்பி வைக்குமாறு பதில் எழுதுகின்றார்கள்.
மதீனாவிலும் தனது கருத்தை வலியுறுத்தி அபூதர் (ரலி) அவர்கள் பேசுகின்றார்கள்.
இப்பொழுது அபூதர் (ரலி) அவர்களை அழைத்த உதுமான் (ரலி) அவர்கள்ää அபூதர் (ரலி) அவர்களே..! அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் செலுத்த வேண்டியவைகளைச் செலுத்துமாறு நான் மக்களைக் கட்டாயப்படுத்த முடியும். அதற்குப் பிரதியுபகாரமாகää அவர்களுக்கு என்மீதுள்ள உரிமைகளை நான் வழங்கக் கூடியவனாக இருக்கின்றேன். ஆனால்ää இந்த உலகத்தைத் துறந்து வாழுமாறு நான் அவர்களை எவ்வாறு கட்டாயப்படுத்த முடியும்"" என்று கேட்கின்றார்கள்.
அப்படியானால்ää என்னை மதீனாவை விட்டு வெளியே அனுப்பி விடுங்கள் என்று கேட்டுக் கொண்ட அபூதர் (ரலி) அவர்கள்ää இதற்கு ஆதாரமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரை ஒன்றை மேற்கோள் காட்டினார்கள்.
இதனைக் கேட்ட உதுமான் (ரலி) அவர்கள்ää சில ஒட்டகங்களையும்ää அபூதர் (ரலி) அவர்களைக் கவனித்துக் கொள்ள இரு பணியாளர்களுடன்ää மதீனாவினை ஒட்டிய அடுத்த கிராமம் ஒன்றிற்கு அனுப்பி வைத்து விடுகின்றார்கள்.
இன்னும் சில காரணிகள்
உண்மையிலேயே அப்துல்லா பின் ஸபா உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிராக முஸ்லிம்களுக்கிடையே விதைத்துவிட்ட அதிருப்தி விதை நன்றாகவே வேலை செய்தது. இன்னும் அதற்கு நிகராகவே உதுமான் (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற சில விஷயங்களும் முரண்பாடாகவே நடந்து கொண்டிருந்தன. உதுமான்(ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பொழுதுää நிலைமைகள் நன்றாகவே இருந்தன. இன்னும் சில வருடங்களில்ää ஆட்சிக்கு எதிரான சம்பவங்கள் பல மெதுவாக நடைபெற ஆரம்பித்துää தனது கோரப்பற்களை இறுகப் பற்றிக் கொள்ள ஆரம்பித்தது.
அதிகாரத்தில் உள்ளவர்கள்ää சொந்த நகரங்கள் அல்லாத இன்னொரு இடத்தில் தங்களுக்கென சொந்தமாக வீடு கட்டிக் கொள்வதை அனுமதிக்க மறுத்தார்கள். ஒருமுறை உமர்(ரலி) அவர்களின் கவர்னர்களில் ஒருவர்ää தனது தலைநகரத்தில் வீடு கட்டிக் கொள்ள அனுமதி கேட்ட பொழுதுää அனுமதிக்க மறுத்து விட்டார்கள்.
''மதீனாவில் உங்களுக்கென வீடு இருக்கும் பொழுதுää ஒன்றிருக்கும் பொழுது இன்னொன்றை அனுமதிக்க முடியாது"" என்று கூறி விட்டார்கள்.
உமர் (ரலி) அவர்களின் இந்தத்திட்டம் தலைநகரில் வாழ்ந்த மிகப் பெரும் குடும்பங்களை தலைநகரிலேயே பிணைத்து வைத்தது. உதுமான் (ரலி) அவர்கள் இந்தக் கொள்கையைப் பின்பற்றாததன் காரணத்தால்ää அவரவர் விரும்பும் இடங்களில் தங்களுடைய வசதிக்குத் தக்கவாறு வீடுகளைக் கட்டிக் கொள்ள வாழ ஆரம்பித்தார்கள். இதன் விளைவாகää பல பாகங்களுக்கும் பரவிய குறைஷிகள்ää ஆங்காங்கே தங்களது குல வலிமையைக் கட்டமைக்க ஆரம்பித்தார்கள். இது அவர்களுக்குள் அதிகாரத்துக்கான போட்டியை அந்த இடங்களில் வளர்த்து விட்டது. ஒவ்வொரு குடும்பத்தாரும்ää பிறரை விட தான் மிகைக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
பனூ ஹாஷிம் மற்றும் பனூ உமைய்யா இரு குலத்தவர்களும் இஸ்லாத்திற்கு முன்பிருந்தே நேரெதிர் போட்டியார்களாக இருந்தவர்கள். முதல் இரண்டு கலீபாக்களான அபுபக்கர் (ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோர் பனூ உமைய்யா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். உதுமான் (ரலி) அவர்கள் தனது கோத்திரத்தவர்களுக்கே ஆட்சிப் பொறுப்பை வழங்கினார்கள். இது பனூ ஹாஷிம்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் வெறுப்படையச் செய்தது. பின்னாளில்ää உதுமான் (ரலி) பற்பல சந்தர்ப்பங்களில் நடந்த நிகழ்வுகளுக்கு தனது கோத்திரத்தைச் சார்ந்தவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். மர்வான்ää சிறந்த புத்திசாலியாக இருந்த போதிலும் மக்களால் வெறுக்கப்பட்டவரானார்.
உதுமான் (ரலி) அவர்களின் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் பரவல் தடைபட்டதோடல்லாமல்ää முடிவுக்கும் வந்தது. படையெடுப்பிலும்ää இராணுவ நடவடிக்கையிலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுதுää அரசியலில் கவனம் செலுத்துவதில் ஆர்வம் காட்டினார்கள்.
கூஃபாää பஸராää எகிப்து மற்றும் சிரியா ஆகிய தேசங்கள் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக இருந்த வேளையில்ää இந்த ராணுவத்தளங்கள்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்படாதää இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வந்தது. இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையைப் பற்றிய நுணுக்கங்களை அறியாதவர்களாக இவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்களின் கட்டுபாடான ஆட்சி விடை பெற்றுச் சென்றவுடன்ää இவர்கள் மீண்டும் தங்களது வாழ்க்கைப் போக்கை இஸ்லாத்தின் முந்தைய நிலைக்குக் கொண்டு சென்றதோடுää மக்களையும் அவ்வாறே நடத்த ஆரம்பித்தார்கள்.
ஆட்சியாளர்கள் என்பவர்கள் மக்களின் பணியாளர்கள் என்ற நிலை மாறிää ஆட்சி அதிகாரமிக்கவர்களாக மாறிப் போனார்கள். ஈரான் மற்றும் பைஸாந்திய மன்னர்கள் தங்களது சொந்த வளத்தையும்ää ஆடம்பர வாழ்க்கையையும் பெருக்கிக் கொள்வதற்காக எவ்வாறு தங்களது ஆட்சியைப் பயன்படுத்திக் கொண்டார்களோää அந்த விதமே இஸ்லாமிய ஆட்சியாளர்களும் நடக்க ஆரம்பித்தார்கள்.
இத்தகைய செயல்பாடுகள் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியது. இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளும்ää அதன் தாக்கங்களும் விடை பெறத் துவங்கின. வீழ்ச்சியைச் சந்திக்க ஆரம்பித்தன. மக்களுக்கிடைய இதுவரை திகழ்ந்து வந்த சமத்துவம்ää இப்பொழுது கசக்கத் துவங்கியது. உமர் (ரலி) அவர்களது வாழ்க்கையில் பொது மக்கள் அனுபவித்து வந்த முழுச் சுதந்திரம்ää சமத்துவம் இப்பொழுது அகன்றதன் காரணமாகää மக்கள் இவை அனைத்துக்கும் உதுமான் (ரலி) அவர்களே காரணம் என்று குற்றஞ்சாட்ட ஆரம்பித்தார்கள்.
நிலைமை மோசமாகுதல் - மதீனாவில் நடைபெற்ற மாநாடு
அதிருப்தியும்ää அமைதியின்மையும் இஸ்லாமிய சாம்ராஜ்யமெங்கும் பரவ ஆரம்பித்தன. இதன் எதிரொலி இப்பொழுது மதீனாவிலும் ஒலிக்க ஆரம்பித்தது. மிகப் பிரபலமான நபித்தோழர்கள் பலர்ää நிலைமையின் விபரீதம் முற்றுவதற்குள் ஏதாவது செய்துää நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும்படி உதுமான் (ரலி) அவர்களை வேண்டிக் கொண்டார்கள். உதுமான் (ரலி) அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். ஹிஜ்ரி 34 ன் பொழுது நடைபெறவிருக்கின்ற ஹஜ்ஜுக்கு வருகின்ற அனைத்து கவர்னர்களும்ää மதீனாவில் வந்து தன்னைச் சந்திக்குமாறு கலீபா உதுமான் (ரலி) அவர்கள் அனைத்து கவர்னர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைக்கின்றார்கள்.
அனைத்து கலீபாக்களும் இப்பொழுது மதீனாவில் ஒன்று இருக்கின்ற அவையில்ää
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் நிலவக் கூடிய அமைதியின்மைக்கான காரணம் யாது? உதுமான் (ரலி) அவர்கள் கவர்னர்களைப் பார்த்துக் கேள்வி கேட்கின்றார்கள்.
இது சூழ்ச்சியாளர்களின் சதி வலையினால் பின்னப்பட்டது என்ற பதில் வருகின்றது. இந்தச் சதியாளர்கள் ஆட்சித்தலைவர்கள் மீதும்ää அதிகாரிகள் மீதும் சேற்றை வாறி இரைக்கின்றார்கள். இன்னும்ää இந்த அரசைத் திட்டமிட்ட கவிழ்க்கும் சதியிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதனை எவ்வாறு தடுத்து நிறுத்துவது? உதுமான் (ரலி) அவர்களிடமிருந்து மீண்டும் கேள்வி பிறக்கின்றது.
பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஆனால் இதில் அனைவரும் ஒன்றை மட்டும் அதிகமாக வலியுறுத்தினார்கள். சதிவலைகள் பின்னக் கூடியவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றே அனைவரும் ஒருமித்துக் கூற ஆரம்பித்தார்கள். இதற்கு உதுமான் (ரலி) அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இறுதியாக கவர்னர்களுக்கு ஆற்றிய உணர்ச்சி மிக்க உரையில் உதுமான் (ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள் :
''உங்களது ஆலோசனைக் கேட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்த முன்னறிவித்த வன்செயல்களாக இருக்குமோ என்று அச்சம் கொள்கின்றேன். என்னால் இயன்றதை நான் செய்வேன்ää என்னுடைய அதிகாரத்திற்குட்பட்ட வகையில் இரக்கத்தோடும்ää மன்னிப்போடும் நிலைமையைச் சீர்திருத்த முயற்சிக்கின்றேன்ää இதன் மூலம் தீமைகளின் வாசல்களை அடைப்பேன். என்னுடைய செயல்களால் அதனை நடத்திக் காட்டுவேன்ää இதில் நான் எந்தக் குறையையும் மக்களுக்கு வைக்க மாட்டேன். நாளை அல்லாஹ்வைச் சந்திக்கும் பொழுதுää மக்கள் என்மீது குற்றம் சுமத்தும் அளவுக்கு நிலைமையை விட்டு வைக்க மாட்டேன். தீமைகள் மிகைக்கும் காலம் நெருங்கி விட்டதாகவே நான் உணர்கின்றேன். இதற்காக உதுமான் உயிரை இழந்தால் அது அவருக்கு ஆசிர்வாதங்களாக இருக்கும்ää அவ்வாறில்லை எனில் அருட்கொடைகளுக்குப் பதிலாக சாபங்களைத் தான் பெற்றுத் தரக் கூடியதாக இருக்கும்"".
மாநாடு நிறைவுற்றதுடன்ää அனைத்துக் கவர்னர்களுக்கும் உதுமான் (ரலி) அவர்கள் பிரியா விடை கொடுத்தார்கள். அப்பொழுதுää
இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே..! என்றழைத்த முஆவியா (ரலி) அவர்கள்
இந்த மதீனா நகரம் உங்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் என்னுடன் சிரியாவுக்கு வருவது நல்லது என்று கூறினார்கள்.
''என்னுடைய தலை துண்டாடப்படினும் சரி..ää என்னால் வர முடியாது""ää எந்த விலை கொடுப்பினும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நெருக்கத்தை விட்டும் என்னால் வர இயலாதுää என்று பதிலளித்த உதுமான் (ரலி) அவர்கள் மதீனாவை விட்டு விட்டு நான் வர மாட்டேன் என்றார்கள்.
இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே..!
சரி..! சிரியாவிலிருந்து உங்களது பாதுகாப்பிற்காக படைகளை அனுப்புவதற்காகவாவது ஒப்புக் கொள்ளுங்களேன்ää அவர்கள் உங்களது தனிப்பட்ட பாதுகாப்பாளர்களாகச் செயல்படுவார்கள் என்றார்ää முஆவியா (ரலி) அவர்கள்.
''முடியாது""ää என்ற பதிலைத் தெரிவித்த உதுமான் (ரலி) அவர்கள்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிக அருகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களை என் பொறுட்டுää பிரச்னையில் மாட்டி வைக்க விரும்பவில்லை என்றார்கள்.
பின் கலீஃபா உதுமான் (ரலி) அவர்கள்ää நான்கு ஆய்வாளர்களைத் தேர்ந்தெடுத்து இஸ்லாமிய சாம்ராஜ்யமெங்கும் சென்றுää அங்கிருந்து தகவல்களைச் சேகரித்து வருமாறு அனுப்பி வைத்தார்கள். அவர்களில் மூன்று நபர்கள் திரும்பி வந்துää நிலைமை கட்டுக்குள் இருப்பதாகத் தகவல் தந்தார்கள். அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள்ää எகிப்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர் மட்டும் திரும்பி வரவில்லை. எகிப்தின் கவர்னர் கலிபாவுக்கு எழுதிய கடிதத்தில் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் அப்துல்லா பின் ஸபாவின் குழுவில் இணைந்து விட்டதாகத் தெரிவித்தார்கள்.
பிரச்சனைகள் ஆரம்பம்
மதீனாவில் கவர்னர்கள் அனைவரும் மாநாடு நிமித்தமாக ஒன்று கூடியிருக்கும் சமயத்தைää தங்களது திட்டங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்கவும்ää பொது மக்களின் உணர்வுகளை உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிராகத் திரட்டவும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் நிறைவேற்ற நினைத்த சதிச் செயல்களை அவ்வளவு எளிதில் நிறைவேற்ற முடியாதிருந்தது. மதீனாவில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு கூஃபாவிற்குத் திரும்பிய கவர்னரைää கூஃபாவிற்குள் அனுமதிக்க மாறுத்தார்கள்ää கூஃபா வில் இருந்த சதியாளர்கள். அவர்கள் அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் தான் தங்களது கவர்னராக வர வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தார்கள். இவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கலீஃபா அவர்கள்ää அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அவர்களையே கூஃபாவின் கவர்னராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள்.
தங்களது முதல் சதியில் வெற்றி பெற்றதனைத் தொடர்ந்துää அடுத்தடுத்த சதித் திட்டங்களை நிறைவேற்ற முனைப்புடன் களமிறங்கினார்கள். இப்பொழுது இஸ்லாமிய சாம்ராஜ்யமெங்கும் பரவி இருந்த இந்த சதியாளர்களின் கூட்டம் மதீனாவில் ஒன்று கூடுவது என்று முடிவெடுத்தது. தலைநகரில் நிலவும் சூழ்நிலைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காகவே அந்தந்தப் பகுதியின் தலைவர்கள் அனைவரும் மதீனாவில் ஒன்று கூடினார்கள்.
அவர்களது திட்டப்படி வந்திருந்த அனைத்துப் பிரதேசத்து சதியாளர்களின் தலைவர்கள் அனைவரும் மதீனாவின் புறநகர்ப் பகுதியில் ஒன்று கூடினார்கள். இப்பொழுது இந்த சதியாளர்களின் சந்திப்புப் பற்றிய தகவல் கலீபா உதுமான் (ரலி) அவர்களை எட்டுகின்றது. தனக்கு மிகவும் நெருக்கமான நம்பிக்கையான இருவரை அவர்களிடம் உதுமான் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட இருவரும்ää இந்த சதியாளர்களின் சதித் திட்டங்கள் குறித்துää மிகவும் ஆபத்தான சதி வேலைகள் பற்றிய தகவல்களை உதுமான் (ரலி) அவர்களிடம் அளித்தார்கள். ''இவர்கள் தங்களது தாயகத்திற்குத் திரும்பிச் சென்றுää அங்குள்ள மக்களிடம் கலீபா அவர்கள் தங்களது பிரச்னைகள் குறித்த புகார்களைச் செவிமடுக்க மறுத்து விட்டார்ää என்ற கற்பனைச் செய்தியை விஷமப் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் அந்தத் தூதுவர்கள் தெரிவித்தார்கள். இதன் மூலம் திரட்டப்பட்ட தங்களது ஆதரவாளர்களுடன் வருகின்ற ஆண்டில் மதீனாவிற்குள் நுழைந்து கலீஃபாவையே தீர்த்துக் கட்டவும் திட்டமிட்டிருப்பதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்தார்கள். தனது தூதுவர்கள் கொண்டு வந்த தகவல்கள் அனைத்தையும் கவனமாகக் கேட்ட உதுமான் (ரலி) அவர்கள்ää அந்த தகவல்களை அடுத்து எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.
இப்பொழுதுää இந்த சதி ஆலோசனைக் கூட்டத்தின் தலைவர்கள் தலைநகர் மதீனாவிற்குள் நுழைந்தார்கள். இந்த சதியாளர்களின் சதிகளைப் பற்றி கலீபா அவர்கள் தனக்கு நெருக்கமான தோழர்களிடம் தெரிவித்த பொழுதுää இவர்களைக் கொன்று விடும்படி சிலர் ஆலோசனை கூறினார்கள். இதன் மூலம் அவர்களது சதித் திட்டங்களை நீர்த்துப் போகச் செய்யலாம் என்று கூறினார்கள்.
ஆனால்ää உதுமான் (ரலி) அவர்கள்ää ''தகுந்த காரணம் இல்லாமல் நான் அவர்களைக் கொல்ல முடியாது"". இந்த மக்களிடம் சில தவறான கருத்துக்கள் பரவி இருக்கின்றன. அதனை நான் நீக்க முயற்சி செய்கின்றேன். அவர்களிடம் இரக்கத்துடன் நடந்து கொள்வதன் மூலம்ää அவர்களை மன்னித்துää நேர்வழிப்படுத்தும் வேலையைச் செய்யப் போகின்றேன் என்றார்கள். இன்னும்ää அவர்களை இரக்கதுடன் நடத்துவதன் மூலம் நேர்வழிப்படுத்த முடியாதெனின்ää இதனைப் பற்றிய பொறுப்பை வல்ல அல்லாஹ்வின் இறுதி முடிவுக்கே விட்டு விடுவேன்"" என்றார்கள்.


உதுமான் (ரலி) அவர்களின் மறுப்பு
இப்பொழுது உதுமான் (ரலி) அவர்கள் தலைநகரில் வாழ்ந்து வந்த முன்னணித் தோழர்களையும்ää இந்த சதிகாரக் கூட்டத் தலைவர்களையும் ஒன்று கூட்டினார்கள். இவ்வாறு ஒன்று கூட்டப்பட்ட அந்தக் கூட்டத்தில் கலீபா உதுமான் (ரலி) அவர்கள் இவ்வாறு உரை நிகழ்த்தினார்கள் :
பொதுமக்களுக்குச் சொந்தமானதொரு மேய்ச்சல் நிலத்தை எனக்காக ஒதுக்கி இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இறைவன் மீது சத்தியமாகää எனக்கு உரிமை இல்லாத எந்த மேய்ச்சல் நிலத்தையும் எனக்காக நான் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த மேய்ச்சல் நிலத்தில் மேய்கின்ற கால்நடைகள் யாவும் அரசுக்குச் சொந்தமானவை. இன்னும்ää இந்த மேய்ச்சல் நிலங்கள் பொது மக்கள் அனைவருக்கும் உரித்தானதே. யார் தங்களது தேவைக்கு அதிகமாகவும்ää இன்னும் அதனை குறுக்கு வழியிலும் அடைய முற்படுகின்றார்களோ அவர்களுக்குத் தான் அதில் நுழைய அனுமதியில்லை. அந்த மேய்ச்சல் நிலத்தில் மேயும் கால்நடைகளைப் பொறுத்தவரைää எனக்கு இரண்டே இரண்டு ஒட்டகங்கள் தான் அங்கு மேய்கின்றன. இந்த ஒட்டகங்கள் ஹஜ்ஜுக் காலத்தின் பொழுது எனக்கு உதவக் கூடியவையாக இருக்கின்றன. உங்கள் அனைவருக்கும் தெரியும்ää நான் கலீபாவாக ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்ää என்னிடம் இருந்த ஒட்டகங்களின் எண்ணிக்கையின் அளவுக்கு நிகராக அரேபியாவில் யாரும் வைத்திருந்தது கிடையாது.
திருமறைக் குர்ஆனின் அதிகாகரப்பூர்வ பிரதிகளை பிரதேசங்கள் தோறும் அனுப்பி வைத்துள்ளேன். இத்தகைய என்னுடைய செயல்பாடுகளை எதிர்க்கும் மக்களும் உண்டு. இந்தத் திருமறைக் குர்ஆன் என்னும் வேதத்தை அனுப்பி வைத்தவன் வல்ல அல்லாஹ் தான் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட வேதத்தின் பிரதிகளை எழுதியவர்கள் யாவும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கண் முன்னர் அதனை எழுதி வைத்தவர்கள் என்பதும்ää இன்னும் அத்தகையவர்கள் உயிருடன் நம்முடன் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் நீங்கள் அறிந்ததே. அவர்களால் தொகுக்கப்பட்ட பிரதிகளைத் தான் அனைத்து இடங்களுக்கும் நான் அனுப்பி வைத்திருக்கின்றேன்.
பொறுப்பான பதவிகளில் இளைஞர்களை நியிமித்திருப்பதாக என்மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. உண்மை என்னவெனில்ää வயது என்பது ஒரு பொருட்டே அல்லää திறமைகளும் இன்னும் குண நலன்களும் தான் அவர்களை நியமிப்பதற்கான காரணிகளாக இருந்திருக்கின்றன. நீங்கள் பல தேசங்களில் இருந்தும் இங்கு வந்திருக்கின்றீர்கள். நீங்கள் அவர்களது திறமைகளைப் பற்றியும் அவர்களது கண்ணியமான செயல்பாடுகள் பற்றியும் எந்தவித புகார்களையும் கூற முடியாத அளவுக்கு நல்லவர்கள் என்பதை மறுக்க மாட்டீர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களுக்கு மிகப் பெரும் படையை நடத்தும் பொறுப்பை வழங்கினார்கள்ää இன்னும் அந்தப் படையில் இருந்த அத்தனை பேரில் மிகவும் இள வயது கொண்டரவாக உஸாமா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.
வடக்கு ஆப்ரிக்காவில் பெற்ற வெற்றியின் மூலம் கிடைத்த போர்ப் பொருட்களை எகிப்தின் கவர்னருக்கு முழுமையான வழங்கப்பட்டு விட்டதே என்று என்மீது குற்றம் சுமத்துகின்றார்கள். ஆனால் உண்மை என்னவென்றால்ää ஐந்தில் ஒரு பகுதிதான் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்படுவதற்கான முன்மாதிரிகள் என்னுடைய ஆட்சிக்கு முன்பிருந்தே காணப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும்ää இதனை மக்கள் எதிர்க்கின்றார்கள் என்பதை அறிந்தவுடன்ää கவர்னரிடமிருந்து அதனை நான் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டேன்.
நான் எனது உறவினர்களை அதிகம் நேசிப்பதகாகக் கூறப்படுகின்றது. உறவினர்களை நேசிப்பது ஒன்றும் பாவமான செயலல்லவே. ஆனால்ää அவ்வாறு நேசிப்பதன் மூலம் பிறருடைய உரிமையில் தலையிடும் அளவுக்குப் போய் விடக் கூடாது. அவர்களுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்களைப் பொறுத்தவரைää அவர்களுக்கு எது உரித்தானதோ அதனைத் தான் வழங்கப்படுகின்றதே ஒழியää அநீதமான முறையில் பொதுச் சொத்துக்களை எடுத்து அவர்களுக்கு நான் வழங்கவில்லை. ஆனால் என்னுடைய சொந்தப் பணத்திலிருந்து என்னுடைய உறவினர்களுக்கு நான் பரிசுப் பொருட்களை வழங்குகின்றேன். நான் கலீபாவாக ஆகுவதற்கு முன்பிருந்தே நான் இதனைப் பேணி வருகின்றேன். இப்பொழுது எனக்கு வயதாகி விட்டதுää நீண்ட நாட்கள் வாழும் எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லைää எனக்காக எதனையும் சேர்த்து வைத்துக் கொள்ளும் எண்ணமும் எனக்குக் கிடையாது. பொதுச் சொத்துக்களை எடுத்து எனது உறவினர்களுக்கு வழங்குவததை சரியாது என்றும் நான் கருதவில்லை. எனது சொந்த தேவைகளுக்குத் தவிர வேறு எதற்காகவும் பொதுச் சொத்திலிருந்து நான் எதனையும் எடுத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு பிரதேசத்தின் வருமானமும் அந்தந்தப் பகுதி மக்களுக்காகவே செலவிடப்படுகின்றன. மதீனாவில் உள்ள மத்திய கருவூலமானது போர்ப் பொருட்களில் இருந்து கிடைக்கும் ஐந்தில் ஒரு பகுதியைத் தவிர வேறு எந்த வித வருமானத்தையும் பெற்றுக் கொள்வதில்லை. அந்தப் பணம் கூடää தேவையின் நிமித்தம் பொதுமக்களுக்குத் தான் செலவிடப்படுகின்றது.
எனது நண்பர்களுக்கு நிலங்களை வழங்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. அதில் உண்மையில்லை. மதீனாவில் இருந்து கிளம்பிய படையுடன் சென்றவர்கள்ää வெற்றி கொள்ளப்பட்ட பகுதிகளில் தங்கி விட்டார்கள். அங்கு அவர்கள் சிறிது நிலங்களைப் பெற்றுக் கொண்டார்கள். தாங்கள் பெற்றுக் கொண்ட நிலங்கள் தலைநகரை விட தூரமாக இருந்த காரணத்தினால்ää தங்களுக்குரிய நிலங்களை சிலர் விற்று விட்டார்கள்.
இதனைச் செவிமடுத்துக் கொண்டிருந்தவர்களிடன்ää நான் சொன்னவைகள் அனைத்தும் உண்மை தானே என்று கேட்டார்கள். அனைவரும் 'ஆம்" என்றார்கள். கலீபாவின் மீது கூறப்பட்ட அனைத்தும் இட்டுக் கட்டப்பட்டவைகளே என்பதை அங்கிருந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். இருப்பினும்ää பொது மக்களிடம் இருந்து வருகின்ற தவறான கருத்துக்களைக் களைவதெவ்வாறு என்பது பற்றிää யாரும் கருத்துக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மதீனாவில் எதிர்ப்பாளர்களின் அலை
சதிக் கூட்டத் தலைவர்கள் இப்பொழுது தங்கள் தங்கள் பிரதேசங்களுக்குத் திரும்பிச் சென்று விட்டார்கள். இவ்வாறு திரும்பி வந்தவர்கள்ää கலீபா இந்தப் பிரச்னையில் தலையிட்டு எளிதாகத் தீர்த்து வைப்பதற்கு விரும்பவில்லை. அடுத்து வரும் ஹஜ் வரைக்கும் காத்திருப்போம் என்றார்கள். ஹஜ்ஜுக் காலம் மிக அண்மித்து வருகையில்ää பஷராää கூஃபா மற்றும் எகிப்திலிருந்து வலிமையான குழுக்களைத் தயார் செய்து ஹஜ்ஜுச் செய்பவர்களைப் போல மக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். மக்காவிலிருந்து புறப்படும் இவர்கள் மதீனாவிற்குச் சென்றுää வாள் முனையில் பிரச்னைகளைத் தீர்ப்பார்கள் என்றும் அவர்கள் முடிவு செய்திருந்தார்கள். இந்தச் சதிகாரர்களின் சதிகளை கலீபா முன்னமே அறிந்து வைத்திருந்தார்கள். ஆனால்ää அவர்களுக்கு எதிராக வலிமையைப் பிரயோகப்படுத்துவதற்கு கலீபா அவர்கள் விரும்பவில்லை. அவர்களை அன்பினாலும் வெல்வது அல்லது இந்த முயற்சியில் தன்னையே இழப்பது என்ற முடிவில் தான் உதுமான் (ரலி) அவர்கள் முடிவெடுத்திருந்தார்கள்.
ஹிஜ்ரி 35 ஷவ்வால் மாதத்தில்ää இந்த கலவரக்காரர்கள் பஷராää கூஃபா மற்றும் எகிப்திலிருந்து கிளம்பினார்கள். அவர்கள் சிறு சிறு குழுக்களாக அங்கிருந்து வெளியேறினார்கள். ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் ஆயிரம் பேர் என்னும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை இருந்தது. அவர்கள் மதீனாவை நோக்கி வந்துää மதீனாவை விட்டும் சில மைல்கள் அப்பாலேயே தங்களது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டதோடுää மூன்று வௌ;வேறு நிலைகளில் தங்கிக் கொண்டார்கள். அவர்களில் சில எகிப்தைச் சேர்ந்தவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் வந்துää தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அலீ (ரலி) அவர்கள்ää அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். பஷராவிலிருந்து வந்த சிலர் தல்ஹா (ரலி) அவர்களைச் சந்தித்து இதே கோரிக்கையை முன் வைத்தார்கள். அவரும் மறுத்து விட்டார். கூஃபாவிலிருந்து வந்த சிலர் ஜுபைர் (ரலி) அவர்களைச் சந்தித்தார்கள்ää அவரும் இந்த கொடுமைதியாளர்களின் சதித் திட்டத்தில் தலையிடுவதில்லை என்று புறக்கணித்து விட்டார்கள்.


அலி (ரலி) கலவரக்காரர்களை அப்புறப்படுத்தல்
இப்பொழுதுää இந்தக் கலவரக்காரர்களின் நிலைப்பாடு என்னவென்பதை உதுமான் (ரலி) அவர்கள் முழுமையாக உணர்ந்து கொண்டார்கள். அலீ (ரலி) அவர்களிடம் சென்ற உதுமான் (ரலி) அவர்கள்ää உங்கள் மீது அவர்கள் கொண்டிருக்கின்ற நன்மதிப்பைப் பயன்படுத்தி இந்த சதியாளர்களை மதீனாவை விட்டும் அப்புறப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.
இதற்குää உங்களது உறவினர்களின் சொல் பேச்சைக் கேட்டு நடக்காதீர்கள்? என்று நான் உங்களிடம் அடிக்கடி கூறி வந்தேனல்லவா. ஆனால் நீங்கள் மர்வான்ää முஆவியாää இப்னு உமர்ää இப்ன அலீ ஸர்ஆ மற்றும் ஸயீத் பின் ஆஸ் ஆகியோர்கள் கூறுவதைத் தானே நீங்கள் கேட்டு செயல்பட்டு வந்தீர்கள். இப்பொழுது வந்துää அவர்களை மதீனாவை விட்டும் வெளியேற்றும்படி என்னிடம் வந்தால் நான் என்ன செய்ய முடியும்? என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இனி நான் என்னுடைய உறவினர்களது சொல்லை நான் கேட்காமல் நடப்பேன் என்று உறுதி கூறினார்கள்.
இதனை நீங்கள் பொதுமக்களின் முன்னிலையில் கூறுவது நல்லது என்று கூறிய அலீ (ரலி) அவர்கள்ää இவ்வாறு நீங்கள் கூறுவதானதுää அரசின் கொள்கையாகவும் கூட எடுத்துக் கொள்ளப்படும். இதன் காரணமாகää கலவரக்காரர்கள் தங்களது கலவரத்திற்காக எந்த முகாந்திரத்தையும் கூற முடியாது போய் விடும்ää அவர்களது கருத்து பொதுமக்கள் மத்தியில் வலுவிழந்து விடும் என்றார்கள்.
அதன்படியேää உதுமான் (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று இவ்வாறு உரை நிகழ்த்தினார்கள் : நான் தவறு செய்திருக்கும்பட்சத்தில்ää அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். உங்களில் மிகச் சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் எனக்கு அறிவுரை வழங்குங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாகää சத்தியத்தை நிலை நாட்டுவதற்காகää ஒரு அடிமைக்குக் கூட செவி தாழ்த்தத் தயாராக இருக்கின்றேன். உங்களது விருப்பம் எதுவோ அதன்படி நான் நடப்பதற்குச் சித்தமாக இருக்கின்றேன். இனி நான் எப்பொழுதும் மர்வானுக்கோ இன்னும் எனது உறவினர்கள் சொல்வதையோ கேட்டு நடக்க மாட்டேன்"" என்று உதுமான் (ரலி) அவர்கள் கூறி உரையை முடித்த பொழுதுää அவரது கன்னங்களிலிருந்து கண்ணீர்த் துளிகளி உருண்டோடிக் கொண்டிருந்தன. அதனைத் தொடர்ந்து அவையோரும் தேம்பி அழ ஆரம்பித்து விட்டனர்.
அதனை அடுத்து எகிப்திலிருந்து வந்தவர்களைச் சந்தித்த அலீ (ரலி) அவர்கள்ää உங்கள் புகார்கள் அனைத்தும் களையப்பட்டு விட்டன என்றார்கள். அலீ (ரலி) அவர்களின் பதிலால் திருப்தியடைந்த கலவரக்காரர்கள்ää எகிப்தை நோக்கி திரும்ப ஆரம்பித்தனர். பஷரா மற்றும் கூஃபாவிலிருந்து வந்திருந்தவர்களும் தங்கள் தங்கள் பிரதேசங்களுக்குத் திரும்ப ஆரம்பித்தார்கள். புயல் கரையைக் கடந்தது போலத் தான் இருந்தது. ஆனால்..ää


மர்மக் கடிதம்
மதீனாவைச் சூழ்ந்து கொண்டிருந்த கவலை மேகங்கள் அகன்று விட்டன என்று தான் மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்கு மாற்றமாக இப்பொழுதுää கிளர்ச்சிக்காரர்களின் குரல்கள் மதீனா நகரமெங்கும் ஒலிக்கத் துவங்கின. அவ்வாறு கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் இப்பொழுது கலீபா உதுமான் (ரலி) அவர்களின் வீட்டினை முற்றுகையிட்டுää சுற்றிலும் நின்று கொண்டனர். அவர்கள்ää பழிக்குப் பழி! பழிக்குப் பழி..! என கத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களது இந்த கூப்பாட்டுக் குரல்கள் மதீனா நகரெங்கும் எதிரொலிக்கத் துவங்கியது. இப்பொழுதுää எகிப்திலிருந்து வந்தவர்களை நோக்கிச் சென்ற அலீ (ரலி) அவர்கள்ää எகிப்தினை நோக்கி திரும்பிச் சென்ற நீங்கள் ஏன் மீண்டும் இங்கு வந்தீர்கள்? என்று கேட்டார்கள்.
எங்களைப் பற்றி புகார்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன என்று நீங்கள் வாக்குறுதி அளித்ததற்கு மாற்றமாகää எங்களை முந்திக் கொண்டு ஒரு தூதுவரை நீங்கள் ஏன் அனுப்பி வைத்தீர்கள். அந்த தூதுவரை நாங்கள் தடுத்து நிறுத்திச் சோதனையிட்ட பொழுதுää அவரிடம் கலீபா அவர்கள் கொடுத்தனுப்பியதொரு தபாலைப் பறிமுதல் செய்தோம். அதில் மதீனாவிலிருந்து திரும்பி வரும் எங்களைத் தீர்த்துக் கட்டி விடும்படிää கலீபா அவர்கள் கவர்னருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதோ அந்தக் கடிதம்ää அதில் கலீபா அவர்களின் அரச முத்திரையும் கூட இருக்கின்றது. இது கொடுத்த வாக்குறுதியை மீறும் செயலாகும். அதற்கான தண்டனையை கலீபா அவர்கள் பெற்றே ஆக வேண்டும் என்று அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
இனி கூஃபா மற்றும் பஷராவிற்கு புறப்பட்டுச் சென்று மீண்டும் திரும்பி வந்தவர்களைப் பார்த்துää உங்களை இங்கு வர வைத்தது எது? என்று அலீ (ரலி) அவர்கள் வினவினார்கள். நாங்கள் எங்களது எகிப்திய சகோதரர்களுக்கு உதவும் பொருட்டே திரும்பி வந்தோம் என்றார்கள்.
உங்களது வழியும்ää அவர்களது வழியும் வேறு வேறாக இருக்கும் பொழுதுää பல மைல் தூரம் இடைவெளி இருவருக்குமிடையே இருந்து கொண்டிருக்கின்ற நிலையில்ää இந்த தபாலைப் பற்றிய செய்தி உங்களுக்கு எவ்வாறு கிடைத்தது? என்று அவர்களிடம் வினா எழுப்பினார்கள் அலீ (ரலி) அவர்கள்.
இதற்கான சரியான பதில் எதுவும் அவர்களிடமிருந்து வரவில்லை.
''நீங்கள் ஒரு சதித் திட்டத்தோடு இங்கே வந்திருக்கின்றீர்கள். அதற்கான காரணமாக இதனை ஆக்கி இருக்கின்றீர்கள்"" என்றார்கள் அலீ (ரலி) அவர்கள்.
''நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள்""ää என்று கூறிய கலவரக் காரர்கள்ää நாங்கள் கலீபாப் பதவியில் உதுமான் (ரலி) அவர்கள் நீடிப்பதை விரும்பவில்லை. அவரது இரத்தத்தை எங்களுக்கு ஆகுமானதாகவும் அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான். அதாவது அவருக்குத் தண்டனை அளிப்பது எங்களது உரிமை என்று கூறினார்கள். அதற்குää நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று அலீ (ரலி) அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்.
இறைவன் மீது சத்தியமாக..! இதில் எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவிகரமாக நான் இருக்க மாட்டேன்"" என்று பதிலளித்தார்கள்.
பின்ää ''எதற்காக எங்களுக்கு நீர் கடிதம் எழுதினீர்கள்?"" என்றார்கள்.
என்ன..! நான் உங்களுக்கு கடிதம் எழுதினேனா? என்று ஆச்சரியத்தோடு அலீ (ரலி) அவர்கள் வினவினார்கள். இறைவன் மீது சத்தியமாக..! நான் எந்தக் கடிதத்தையும் யாருக்கும் எழுதவில்லை"" இது அலீ (ரலி) அவர்களின் பதிலாக இருந்தது.
இப்பொழுது நிலைமை தன்னையும் மீறிச் சென்று கொண்டிருப்பதையும்ää இன்னும் தன்னையும் அவர்கள் சதி திட்டத்திற்குள் தள்ளி விட்டுக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார்கள். இன்னும் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கவேää மதீனாவினை விட்டும் அஹ்ஜருஸ்ஸத் என்ற இடத்தை நோக்கிச் சென்று விட்டார்கள்.
இப்பொழுது கலவரக்காரர்கள் உதுமான் (ரலி) அவர்களைச் சந்தித்துää எங்கள் மீது மரண தண்டனை விதித்து அனுப்பிய இந்தக் கடிதத்தை எழுதியது நீங்கள் தானே? என்றார்கள்.
இறைவன் மீது சத்தியமாகää 'இந்த தபால் பற்றி எனக்கு எதுவும் தெரியாது" என்றார்கள்.
இந்தத் தபால் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது எனில்ää கலீபா பதவியில் நீங்கள் நீடிப்பதற்கு உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது என்றார்கள்ää ஒருமித்த குரலில். ''இந்தக் கடிதத்தை நீங்கள் எழுதினீர்கள் என்று சொன்னால்ää நீங்கள் கலீபா பதவியில் நீடிப்பதற்கு தகுதியற்றவராவீர் என்பது தெளிவானது. ஆனால் இந்தக் கடிதத்தை நீங்கள் அல்லாமல் இன்னொருவர் எழுதி இருந்தார் எனில்ää அது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது எனும் பொழுதும் நீங்கள் கலீபா பதவியில் நீடிப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது என்று கூறினார்கள். இந்தளவு அதி முக்கியத்துவம் வாய்ந்ததொரு கட்டளை உங்களை அறியாமலேயே உத்தரவிடப்படிருக்கின்றது என்றால்ää நீங்கள் நாட்டின் தலைமைப் பதவியில் நீடித்திருக்கவே கூடாது என்றார்கள். எனவேää கலீபா பதவியையும் விட்டும் நீங்கள் கீழிறங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும் என்றார்கள் கலவரக்காரர்கள்.
கலவரக்காரர்களது கோரிக்கையை உதுமான் (ரலி) அவர்கள் நிராகரித்தார்கள். அல்லாஹ் என்மீது சுமத்திய சுமையைää அவனது அளித்த கண்ணியமிக்க பணியை நான் என்றைக்கும் நானாகவே கீழிறக்கி வைக்க முடியாது என்று கூறி விட்டார்கள்.


முற்றுகை
முற்றுகை
கலவரக்காரர்கள் உதுமான் (ரலி) அவர்களது வீட்டை முற்றுகையிட்ட பொழுதும்ää ஆரம்ப கட்டத்தில் முற்றுகை கடுமையாக இருக்கவில்லை. உதுமான் (ரலி) அவர்களின் வீட்டைச் சுற்றி வலம் வந்த வண்ணம் கண்காணித்துக் கொண்டே இருந்தார்கள். உதுமான் (ரலி) அவர்கள் தனது வீட்டை விட்டு வெளியேறுவதற்கு அவர்கள் எந்தவித தடையும் செய்யவில்லை. எப்பொழுதும் போல வழமையாக உதுமான் (ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களது பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையை நடத்தி வந்தார்கள். இந்தக் கலவரக்காரர்கள் கூட உதுமான் (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து தொழுது வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறைத்தூதர் (ஸல்) அவர்களது பள்ளியில் உதுமான் (ரலி) அவர்கள் ஆற்றிய உரை
முற்றுகைக்குப் பின்புää ஒரு வெள்ளிக்கிழமையன்று உதுமான் (ரலி) அவர்கள் மக்களிடம் ஜும்ஆ தினத்தின் குத்பா பேருரை ஒன்றை நிகழ்த்தினார்கள். அல்லாஹ்வையும்ää அவனது தூதர் (ஸல்) அவர்களையும் போற்றிப் புகழ்தோதி விட்டுää மக்களைப் பார்த்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குக் கட்டுப்படுவதுடன்ää அதிகாரம் பெற்றிருப்பவர்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். இன்னும் முஸ்லிம்கள் தங்களது விவகாரங்களில் பரஸ்பரம் கலந்தாலோசனைகளின் அடிப்படையில் தங்களது பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வார்கள். நான் கலந்தாலோசனையின் கதவுகளை மிகவும் விசாலமாகவே திறந்து வைத்துள்ளேன். இன்னும் தன்மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் சரியான விளக்கத்தைத் தந்து அவற்றை பொய்யென நிரூபிப்பதற்கும் தான் தாயாராக இருப்பதாகவும் அவர் அந்த உரையில் குறிப்பிடத்தவறவில்லை. மக்களின் மனங்களை அரித்துக் கொண்டிருக்கக் கூடிய கேள்விகள் அனைத்திற்கும் தான் பதில் தந்துää அதனைத் தீர்த்து வைப்பதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் அந்த உரையில் குறிப்பிட்டார். இவ்வாறு இருக்கையில்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த நகரத்தில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவது விரும்பத்தக்கதல்லää நன்மையானதுமல்ல என்றும் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்கள். நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லைää ஆனால் முஸ்லிம்கள் தங்களுக்குள் பிளவுண்டு இரத்தத்தை ஓட்டிக் கொள்வார்களே என்று தான் அஞ்சுகின்றேன். முஸ்லிம்களின் ஒற்றுமை தான் எனக்குப் பிரியமானதுää இன்னும் பிரிவினைகள் தலைதூக்காமல் இருப்பதற்காக தனது ஆதரவாளர்களாக இருப்பவர்கள் எக்காரணம் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டு விடக் கூடாது என்றும் அவர்கள் வேண்டிக் கொண்டார்கள். மக்களே..! உங்களைப் படைத்த இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்ää இஸ்லாத்தை மூழ்கடித்து விடக் கூடிய செயல்பாடுகளில் இருந்தும் உங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். முஸ்லிம்களின் வலிமையினால் தோல்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் அந்நிய சக்திகள்ää முஸ்லிம்களுக்குள் பிரிவுகளையும்ää பிளவுகளையும் ஏற்படுத்தி இஸ்லாத்தை தடந் தெரியாமல் ஆக்கி விட வேண்டும் என்று துடிக்கின்றனää அதற்கான செயல்திட்டத்துடன் களம் இறங்கி உள்ளன. மதீனத்து மக்களே..! சத்தியத்திற்குச் சான்று பகர உங்களை அழைக்கின்றேன்ää கலவரக்காரர்களுக்கு ஆதரவளிக்காமல் அவர்களது சதி நடவடிக்கைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கு எனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்கள்.
பள்ளிக்குள் குழப்பம்
உதுமான் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த பொழுதுää அங்கிருந்த ஒரு சிலர் எழுந்து உதுமான் (ரலி) அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அவர்களை அடக்கி அமர வைத்தார்கள் கலவரக்காரர்கள். ஒருவர் எழுந்து உதுமான் (ரலி) அவர்களைப் பார்த்துää ''கிழட்டு மனிதனே எச்சரிக்கையாக இரும்..! இல்லையேல் உம்மை மரணப்படுகுழியில் தள்ளி விடுவோம்"" என்று கூறினார். இன்னொருவர் எழுந்தார்..! உதுமானே..! உமக்கு ஒரு பழைய ஆடை ஒன்றையும்ää வயதான ஒட்டகம் ஒன்றையும் கொண்டு வந்திருக்கின்றேன். அந்த ஆடையை அணிந்து கொண்டு ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு செல்லும்ää ஆட்சிப் பொறுப்பை அலங்கரிப்பதற்கு உமக்கு எந்தத் தகுதியும் கிடையாதுää என்று கூறினார்.
''அல்லாஹ்வின் சாபம் உன் மீது உண்டாவதாகää நீர் கொண்டு வந்தவைகளின் மீதும் இறைவனின் சாபம் உண்டாவதாக! என்று பதில் கூறியதோடு அந்த மனிதரை உதாசினம் செய்து விட்டார்கள் உதுமான் (ரலி) அவர்கள்.
இப்பொழுது உதுமான் (ரலி) அவர்களுக்கு ஆதரவாகச் சிலர் எழுந்தார்கள். கடுமையான வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இரு பக்கமும் உணர்ச்சிப் பிழம்புகள் அனலாகத் தகிக்க ஆரம்பித்தனää முடிவில் ஒருவரையொருவர் கற்களால் எறிந்து கொள்ள ஆரம்பித்தனர். இப்பொழுது பள்ளிவாசலுக்குள் முழுமையான அளவில் கலவரம் நடந்து கொண்டிருந்தது. அதில் பறந்து வந்த கல் ஒன்று உதுமான் (ரலி) அவர்களைப் பதம் பார்த்ததுää உதுமான் (ரலி) அவர்கள் காயத்தின் காரணமாக மயக்கமுற்று வீழ்ந்தார்கள். அன்றைய இக்கட்டான சூழ்நிலையின் காரணமாக குத்பா தொழுகை ஒத்தி வைக்கப்பட்டுää மயக்கமுற்ற நிலையில் இருந்த உதுமான் (ரலி) அவர்களை அவரது இல்லத்திற்குக் கொண்டு வந்தார்கள்.
முற்றுகை கடுமையானது
இந்தக் கலவரச் சூழலின் பின்னணியில்ää முழு மதீனா நகரமும் உதுமான் (ரலி) அவர்களுக்கு ஆதரவாக இல்லை என்பதை கலவரக்காரர்கள் இப்பொழுது உறுதி செய்து கொண்டார்கள். பனூ உமைய்யாக் கோத்திரத்தவர்களும்ää இன்னும் சிலரும் தான் உதுமான் (ரலி) அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். அநேகமான மதீனத்து மக்கள் நடுநிலையோடுää நடைபெறுகின்ற நிகழ்வுகளை கவனித்தவாறு இருந்தார்கள். மதீனத்து மக்கள் முழுமையான அளவில் உதுமான் (ரலி) அவர்களின் பக்கம் இல்லை என்பதையும்ää இந்தக் கலவரச் சூழலுக்கு எதிராக அவர்கள் நடவடிக்கையில் இறங்காததையும் கண்டு கொண்ட கலவரக்காரர்கள்ää தங்களது திட்டங்களை மாற்றிக் கொண்டுää உதுமான் (ரலி) அவர்களின் வீட்டின் மீதான முற்றுகையை இப்பொழுது இறுக்கமாக்கிட ஆரம்பித்தார்கள். உதுமான்(ரலி) அவர்கள் முன்பு போல் சுதந்திரமான முறையில் வெளியில் வந்து போக அனுமதிக்கப்படவில்லை. பள்ளிவாசலுக்குக் கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை. இப்பொழுது ஆமிர் காஃபிகி என்பவர் தொழுகையைத் தலைமையேற்று நடத்த ஆரம்பித்தார். இப்பொழுது மதீனா நகரமே கலவரக்காரர்களின் பிடிக்குள் வந்து விட்;டது.
இவ்வாறாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தனää கலவரக்காரர்களை எதிர்ப்பதற்கு யாரும் துணியவில்லைää இதனால் மிகவும் துணிவுடன் செயல்பட ஆரம்பித்த அவர்கள்ää உதுமான் (ரலி) அவர்கள் மீது கடுமையான நெருக்குதலைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். கொடுமை என்னவென்றால்ää உதுமான் (ரலி) அவர்களின் வீட்டிற்குள் உணவு மற்றும் அத்தியாவசியப் பண்டங்களைக் கூட கொண்டு போக இப்பொழுது அவர்கள் அனுமதிக்க மறுத்தார்கள். இறுதியாக தண்ணீரைக் கூட உள்ளே கொண்டு போக தடை விதித்தார்கள்.
ஒரு காலம் ஒன்றிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வேண்டுகோளிற்கிணங்கää மதீனாவில் இருந்த ஒரு கிணற்றை தனது சொந்தப் பணத்தில் வாங்கிää அதனை பொது மக்களுக்கு உரிமையாக்கிய உதுமான் (ரலி) அவர்களுக்குää தனது கிணற்றிலிருந்து கூட தண்ணீர் கொண்டு வந்து குடிப்பதற்கு இந்த மக்கள் தடை விதித்தார்கள்.
உம்மு ஹபீபா (ரலி)ää இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியும்ää முஆவியா (ரலி) அவர்களின் தங்கையுமாவார். இவர் உதுமான் (ரலி) அவர்களின் நிலையைக் கண்டுää தண்ணீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்து விட்டுச் செல்லலாம் என்று வந்தார்கள். கலவரக்காரர்கள் உதுமான்(ரலி) அவர்களின் வீட்டிற்குள் செல்ல அன்னையவர்களை அனுமதிக்கவில்லை. இவரைப் போலவே அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் முயன்றார்கள்ää உதுமான் (ரலி) அவர்களைக் காண அனுமதிக்க மறுத்து விட்டார்கள். உதுமான் (ரலி) அவர்களைப் பார்க்காமலேயேää அன்னையவர்கள் திரும்பிச் செல்லப்பணிக்கப்பட்டார்கள்.
உதுமான் (ரலி) அவர்களின் ஹஜ்ஜாஜிகளுக்கான அறிவிப்புக் கடிதம்
உதுமான் (ரலி) அவர்கள் கலீஃபாவாக கிட்டத்தட்ட 12 வருடங்கள் தொடர்ந்து இருந்து வந்தார்கள். இந்தக் காலப் பகுதியில் நடைபெற்ற ஹஜ்ஜில் 10 ஹஜ்ஜுகளை தலைமையேற்று நடத்தி வந்தார்கள். அவரது மூக்கிலிருந்து வழிந்து கொண்டிருந்த இரத்த ஒழுக்கின் காரணமாக ஆட்சியின் ஆரம்ப காலப் பகுதியின் முதல் வருடத்தில் உதுமான் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுச் செய்யவில்லை. அந்த வருடத்தில் உதுமான் (ரலி) அவர்களுக்குப்பதிலாக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் ஹஜ் வழிநடத்திச் செல்லப்பட்டது. இன்னும் தனது இறுதிக்காலத்தில் கலவரக்காரர்களால் தனது வீட்டிலேயே பிணைக் கைதியாக்கப்பட்டிருந்ததன் காரணத்தினாலும் உதுமான் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுச் செய்யவில்லை. அப்பொழுது அவருக்குப் பதிலாக அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்களை உதுமான் (ரலி) அவர்கள் நியமித்துää ஹஜ்ஜை வழி நடத்தச் செய்தார்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது.
மக்காவில் கூடியிருந்து மக்களுக்கு அறிவிப்பதற்காக வேண்டிää ஒரு அறிவிப்பை உதுமான் (ரலி) அவர்கள் தயாரித்து அனுப்பி இருந்தார்கள். இந்த அறிவிப்பை அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கொடுத்துää இதனை மக்காவில் வைத்து ஹஜ்ஜுக்கு வந்திருப்பவர்களின் முன்னிலையில் படித்துக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இந்தக் கடிதத்தைப் பற்றிய தகவல்கள் ஜியா மிஸ்ரி மற்றும் தாஹா ஹ{ஸைன் ஆகியோர் எழுதியிருக்கும் உதுமான் (ரலி) அவர்களைப் பற்றிய நூற்களில் காண முடியும். இந்த அறிவிப்புக் கடிதத்தின் வாசகங்களாவன :
அளவற்ற அன்பாளனும்ää நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..ää அமீருல் முஃமினீன் உதுமான் அவர்களிடமிருந்து அனைத்து முஸ்லிம்களுக்கும்..ää அஸ்ஸலாமு அலைக்கும்..!
இறைவனைப் போற்றிப் புகழ்ந்ததன் பின்னர்ää இறைவன் உங்கள் மீதுசொறிந்திருக்கக் கூடிய அருட்கொடையின் பக்கம் நான் திரும்புகின்றேன்ää இன்னும் இஸ்லாம் என்னும் மார்க்கத்தைப் பின்பற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உம்மத்தான நாம் இருப்பதற்கும் நன்றி செலுத்தக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதையும் நான் உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன். அவனே உங்களை நேர்வழிப்படுத்தினான். இன்னும் குஃப்ர் என்றழைக்கக் கூடிய இணைவைப்பிலிருந்து உங்களைப் பாதுகாத்தான். இன்னும் (திருமறைக்குர்ஆன் என்ற) நேர்வழியைக் கொண்டு உங்களை பாதுகாப்புச் செய்தான். இன்னும் அநேக அருட்கொடைகளைச் சொறிந்திருக்கின்றான். உங்களது எதிரிகளை மிகைக்கும் வண்ணம் உங்களுக்கு வெற்றியை அளித்திருக்கின்றான். இன்னும் பற்பல அருட்கொடைகளை அளித்திருக்கின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்ää ''உங்கள் மீது அருளப்பட்டிருக்கும அருட்கொடைகளை நீங்கள் கணக்கிட்டுப் பார்ப்பீர்கள் என்று சொன்னால்ää ஏராளமான அருட்கொடைகளை உங்கள் மீது அருளியிருப்பதை நீங்கள் காண்பீர்கள்"". ஆனால்ääஇவற்றுக்கெல்லாம் நன்றி செய்வதை விட்டு மனிதன் மோசக்காரனாகவே நடந்து கொள்ளக் கூடியவனாக இருக்கின்றான்.
இறையச்சம் கொண்டவர்களே..! உங்களது இதயங்களில் இறைவனைப் பற்றிய அச்சத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அவனைத் தொழுது துதித்துக் கொள்ளுங்கள்ää நீங்கள் இஸ்லாத்தின் மீதிருந்து கொண்டு மரணத்தைச் சந்தியுங்கள். ஒற்றுமையாக இருங்கள்ää இன்னும் இறைவனுடைய திருமறை என்னும் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
இன்னும் அல்லாஹ் கூறுகின்றான் : உங்கள் மீது சொறிந்திருக்கக் கூடிய அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். அவனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை எப்பொழுதும் ஞாபகம் வைத்திருங்கள்ää அவனுக்கு கீழ்ப்படிந்த நிலையிலும் இன்னும் இறைநம்பிக்கையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்ää ''இறைநம்பிக்கை கொண்டவர்களேää ஒரு கபடதாரி ஒரு செய்தியைக் கொண்டு வந்தான் என்று சொன்னால்ää அதனை உண்மை என்று அறிவதற்கு முன்னால் அதனைப் பற்றி தீர விசாரித்துக் கொள்ளுங்கள்"".
இந்த உலகத்தை அனந்தரமாகக் கொள்கின்றார்களே அவர்களே நஷ்டவாளிகள் இன்னும் அவர்களுக்கு மறுமையில் எந்த நன்மையும் கிடையாதுää என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்ää நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறாதீர்கள்.
அல்லாஹ்வுக்கும்ää அவனது தூதருக்கும் இன்னும் உங்கள் மீது அதிகாரம் உள்ளவர்களுக்கும் கட்டுப்பட்டு நடக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டிருக்கின்றான்ää என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
யாரொருவர் (அவனின் மீது இறை)நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கின்றார்களோää அத்தகையவர்களுக்கு இந்தப் பூமியின் ஆட்சி உரிமை வழங்குவதாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். அவனது வரம்பு மீறுகின்றவர்களுக்குää அல்லாஹ் சாபமே கிடைக்கும்.
அல்லாஹ் கூறுகின்றான்ää நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்து(வாக்குறுதி) செய்தார்களோää அவர்கள் அல்லாஹ்விடமே பைஅத்(வாக்குறுதி) செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது.
மேற்கண்ட வசனத்தை நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்ää உங்கள் மீது அதிகாரம் உள்ளவர்களுக்குக் கட்டுப்பட்டு நடங்கள்ää இன்னும் அத்தகையவருடன் ஒற்றுமையுடனும்ää ஒருங்கிணைந்தும் செயல்படுங்கள். அல்லாஹ் கருத்துவேறுபாடு கொண்டு பிரிந்து போவதைத் தடைசெய்திருக்கின்றான். இவ்வாறு பிரிந்து போன பல்வேறு சமுதாயங்களைப் பற்றி இறைவன் நமக்கு திருமறை நெடுகிலும் அறிவுறுத்தி இருக்கின்றான்ää அதன் மூலமாகவே அல்லாஹ் நம்மை இங்கே இந்த வீட்டில் ஒன்று சேர்த்திருக்கின்றான். எனவேää அல்லாஹ்வின் கட்டளைப்படி நடந்து கொள்ளுங்கள். அவனது தண்டனைக்குப் பயந்து கொள்ளுங்கள். முந்தைய வரலாற்றைச் சற்று ஆய்வு செய்து பார்ப்பீர்கள் என்று சொன்னால்ää அவர்களுக்கிடையே எழுந்து கருத்துவேறுபாடுகளினால் அவர்கள் பிரிந்து போனதன் காரணமாக அவர்கள் அழிக்கப்பட்டார்கள் என்பதையும் நீங்கள் கண்டு கொள்வீர்கள். மக்களின் நன்மையின் பொருட்டுää ஒரு தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதை விட வேறு ஒரு தேர்வு இல்லைää கீழ்ப்படிந்து நடக்க விரும்புபவர்கள் ஒற்றுமையோடு இருப்பது அவசியம். நீங்கள் உங்களுக்குள் கருத்துவேறுபாடு மற்றும் பிணக்குகளுடன் இருப்பீர்கள் என்றால்ää உங்களது சமூக அமைப்பு சீர்குலைநை;து போகும்ää எதிரிகள் உங்களை அதன் காரணமாக மிகைத்து விடுவார்கள்.
இத்தனைக்கும் நீங்கள் வழிவிடுவீர்கள் என்று சொன்னால்ää இறைவனது மார்க்கம் பின்னடைவைச் சந்திக்கும்ää நீங்கள்பல பிரிவினர்களாக ஆகி விடுவீர்கள். அல்லாஹ்வின் தனது திருத்தூதர் (ஸல்) அவர்களிடம்ää ''ஒற்றுமையைக் குலைத்துää பலவாறாகப் பிரிந்து சென்று விட்டார்களேää அவர்கள் மீது உமக்கு எந்த சம்பந்தமுமில்லை"" என்று கூறியிருக்கின்றான். வழிகேடர்களை ஒதுக்கிகத் தள்ளுங்கள். அல்லாஹ் நாளை மறுமையில் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி கணக்குக் கேட்பான்ää அவர்கள் அவனது விசாரணையைச் சந்தித்துக் கொள்ளட்டும். அதற்கான வெகுமதிகளை அவனிடம் பெற்றுக் கொள்ளட்டும்.
அல்லாஹ்வின் அறிவுரைகளின்படி நடப்பதற்காக உங்களை அழைக்கின்றேன். அவனது தண்டனைகளுக்குப் பயந்துகொள்ளும்படி உங்களை நான் கேட்டுக் கொள்கின்றேன். சுஐப் (அலை) அவர்கள் தனது மக்களைப் பார்த்துää ''நூஹ்ää ஹ{து மற்றும் ஸாலிஹ் (அலை) ஆகியோர்களது சமூகங்கள் மீது எத்தகைய முடிவுகள் விதிக்கப்பட்டனவோ அத்தகைய முடிவுகளை நோக்கியே எதிரிகள் உங்களை இட்டுச் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்பதையிட்டு எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்"". சற்று சில நாட்களுக்கு முன்னதாக நம்மில் சிலர் தம்மை இறைவனது தூதர்களாக பிரகடனப்படுத்திக் கொள்ள முயற்சி செய்தார்கள். அத்தகையவர்களை சத்தியத்தின் முன் நிறுத்திய பொழுதுää சிலர் சத்தியத்தை ஏற்றுக் கொண்டார்கள்ää சிலர் சத்தியத்தை ஏற்காமல் அதனுடன் கருத்துமுரண்பாடு கொண்டார்கள். சிலர் சத்தியத்திற்கு வக்காலத்து வாங்கினார்கள்ää இன்னும் அவர்கள் தங்களது அணியின் பக்கம் தான் நியாயம் இருப்பதாகக் கருதிக் கொண்டார்கள். இத்தகையவர்கள் நான் தொடர்ந்து பதவியில் இருப்பது குறித்து நிராசையடைந்தார்கள். பதவியைக் கைப்பற்றிக் கொள்தவற்காக குறுக்கு வழியில் முயற்சிக்கின்றார்கள். அவர்கள் உடனடி மாற்றம் அல்லது மறுமலர்ச்சியைக் காண விரும்புகின்றார்கள். இத்தகையவர்கள் தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்தவற்காக வேண்டிää அதற்கான போராட்டம் நடத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து உங்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கின்றார்கள். அவர்கள் என்னிடம் வற்புறுத்திக் கொண்டிருக்கின்ற அவர்களது எந்த உரிமையை நான் பாழ்படுத்தினேன் என்பது பற்றி நானறிய மாட்டேன். சட்டத்தின் முன் அனைவரும் சமமமே என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுடன்ää நான் உடன்படுகின்றேன். அவர்களது பிரச்னைகள் குறித்த வழக்கை என்னிடம் கொண்டு வரட்டும்ää உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்ற பாகுபாடு பாராட்டாது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நான் அவர்களுக்கு நிரூபித்துக் காட்டத் தயாராக இருக்கின்றேன். ஆனால்ää அவர்கள் என்னிடம் எந்தவித வழக்கையும் கொண்டு வரவில்லைää சட்டத்தை மீறிய செயலை யாராவது செய்திருப்பார்களென்று நிரூபிக்கப்படுமானால்ää அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு நான் தயராக இருக்கின்றேன். குர்ஆனின் சட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் வைத்திருக்கின்றார்கள். அவர்களது கோரிக்கையை நான் முழுமனதாக வரவேற்கின்றேன்ää ஆனால் நூதனமாக எதனையும் அல்லது வழிகேடுகள் எதனையும் நான் அனுமதிக்கவே மாட்டேன். ஏழைகள் உணவளிக்கப்பட வேண்டும் என்றும் உழைப்பாளிகள் ஊதியத்தினை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள். அத்தைகய கோரிக்கையை முன்வைப்பவர்களில் நானும் ஒருவன்ää அவர்களது கோரிக்கை மற்றும் ஆலோசனைகளை வெளிப்படையாகத் தெரிவிக்கட்டும். தான தர்மங்கள் மற்றும் கும்ஸ் ஆகியவற்றைப் பொறுத்தவரை ஆரம்ப கால மக்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றார்கள். அவர்களது வேண்டுகோளை நான் ஏற்கின்றேன்ää அவர்களது சார்பாக இவர்கள் தங்களது ஆலோசனைகளை என்னிடம் முன் வைக்கட்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்களது மனைவிமார்களைச் சந்திக்கின்றேன்ää இன்னும் அவர்களது ஆலோசனைப்படியும் நடந்து கொள்கின்றேன். நியாயமான கோரிக்கைகளை நான் ஏற்றுக் கொள்கின்றேன்ää ஆனால் அதன் காரணமாகவே நான் அடக்குமுறைக்கும்ää சீண்டுதல்களுக்கு ஆளாகின்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியில் நான் தலைமை தாங்கி தொழ வைப்பதற்கும் தடுக்கப்படுகின்றேன். கலவரக்காரர்கள் தங்களது கரங்களை மதீனா நகரத்தின் மீது முழு அளவில் பிரயோகித்துää தங்களது மேலாதிக்கத்தைக் கொண்டு வந்து விட்டார்கள்.
கலவரக்காரர்கள் என்மீது மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளார்கள். கலீஃபாவாகப் பொறுப்பேற்றதற்குப் பின்பாகää நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயங்களை வழங்க வேண்டும். இது நிறைவேற்றப்படவில்லை எனில்ää கலீஃபா பதவியிலிருந்து நானகவே விலகிக் கொள்ள வேண்டும் என்றும்ää அதன் மூலம் அவர்கள் இன்னொரு புதிய கலீஃபாவைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களாம். மூன்றாவதாகää இதற்கும் நான் சம்மதிக்கவில்;லையென்றால்ää அவர்களது ஆதரவாளர்கள் அனைவரையும் ஒன்று கூட்டிää ஆட்சிக்கு ஆதரவாக அளித்த சத்தியப்பிரமாணத்தை வாபஸ் பெற்றுக் கொள்வோம் என்றும் அவர்கள் மூன்று கோரிக்கைகளை என்னிடம் முன் வைத்துள்ளார்கள்.
இவர்களது அனைத்து கோரிக்கைகளும் மூடத்தனமானவை. இதற்கு முன்னர் ஆட்சியாளர்களும் இன்னும் கலீஃபாக்களும் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டங்களை பிரயோகப்படுத்தி உள்ளனர். அவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்புகள் நியாயமானவையாகவும் இருந்திருக்கின்றன அல்லது பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருக்கின்றனää ஆனால் அந்த தீர்ப்பின் மீது அதிகாரத்தைச் செலுத்தி அதனை மாற்றுவதற்கோ அல்லது அந்த தீர்ப்பிற்கு எதிரான நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்தவற்கான உரிமையை எவருக்கும் வழங்கப்படவில்லை. நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராக நஷ்ட ஈடு கோருவது சட்டஅமைப்பிற்கே முரணானது. என்னுடைய பதவியை ராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையைப் பொறுத்தவரை இதனை நான் இறைவனிடமே பொறுப்புச் சாட்டுகின்றேன்ää என்னுடைய பதவியை யாருடைய நிர்ப்பந்தத்திற்காகவும் நான் விட்டு விட மாட்டேன். அவர்களது மூன்றாவது கோரிக்கை மூடத்தனமானதுää எந்த ஆட்சியாளரும் தனக்கு எதிராகச் சூழ்;ச்சி செய்வதற்கான வசதியையும் வாய்ப்பையும் தன்னுடைய எதிர்ப்பாளர்களுக்கு வழங்கவே மாட்டார்.
நிச்சயமாக இத்தகையவர்கள் என்னுடைய வாழ்வின் மீது கண் வைத்து விட்டார்கள்ää அவர்களது முழு நோக்கமே என்னை கொலை செய்வதில் தான் இருக்கின்றது. இதற்கு எதிராக எந்தப் பலப்பிரயோகத்தையும் பிரயோகிக்க வேண்டாம் என்று என்னுடைய ஆதாரவாளர்களுக்கு நான் அறிவுரை கூறியுள்ளேன். இந்த முஸ்லிம் சமூகம் உள்நாட்டுக் குழப்பத்தில் தன்னை ஆழ்த்தி விடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கின்றேன்ää அதனை நான் விரும்பவும் இல்லை. நடந்து கொண்டிருப்பவைகளை நான் பொறுமையுடன் கவனித்துக் கொண்டு வருகின்றேன். அல்லாஹ்வின் முடிவிற்காகக் காத்திருக்கின்றேன். அல்லாஹ்வின் பாதையில் என்னுடைய உயிரை இழக்க வேண்டும் என்றிருந்தால்ää அத்தகைய தியாகத்திற்காக எந்தவித தயக்கமுமில்லாமல் காத்துக் கொண்டிருக்கின்றேன். கலீஃபாவாக நான் பொறுப்பேற்றதிலிருந்து எந்தவித தவறான பாதையில் நான் ஆட்சி செய்யவில்லை. அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோராமல் இருந்ததுமில்லை. அல்லாஹ் நம்முடைய அனைவரது பாவங்களையும் மன்னிக்கட்டும். முஸ்லிம்கள் அனைவரின் மீது அல்லாஹ் கருணை காட்டுவானாக..!
கடிதத்தின் நோக்கம்
மேலே உள்ள கடிதத்தின் வாசகங்களை நாம் கவனமாக ஆய்வு செய்வோமென்றால்ää பிரச்னையின் தீவிரத்திலிருந்து தன்னை விடுவித்துக் காப்பாற்றுமாறு எந்தவிதத்திலும் உதுமான் (ரலி) அவர்கள் கோரிக்கையை முன்வைக்கவில்லை என்பது தெளிவாகும். கலவரக்காரர்களுக்கு எதிராக ஒன்று திரளுமாறுää மக்களின் உணர்வுகளின் மீது தீப்பொறியைப் பற்ற வைக்கக் கூடிய அளவும் அந்த கடிதத்தின் வாசகங்கள் அமையவில்லை. நிலைமையை மக்களுக்கு விளக்கப்படுத்த உதுமான் (ரலி) அவர்கள் தன்னுடைய கடிதத்தில் முயற்சி செய்திருக்கின்றார்கள் என்பது தான் விளங்குகின்றது. உள்நாட்டுக் குழப்பத்தைத் தடுக்கவும்ää முஸ்லிம்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு இரத்தத்தை ஓட்டிக் கொள்வதைத் தவிர்க்கவுமே அவர் முயற்சி செய்துள்ளார். அல்லாஹ்வினுடைய தீர்ப்பு எவ்வாறிருந்தாலும் அதனை புன்னகையுடன் ஏற்றுக் கொள்வதற்கு அவர் தயாராவே இருந்தார். இன்னும் அந்தக் கடிதத்தின் மூலம்ää இஸ்லாத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகளை தவறாது நிறைவேற்ற வேண்டும் என்று முஸ்லிம்களை அறிவுறுத்துவதே அதன் முழு நோக்கமாக இருந்தது என்பதையும் கவனிக்கலாம். முஸ்லிம்கள் இறையச்சத்துடன் நடந்துகொள்ள வேண்டும்என்பதையும்ää அல்லாஹ்வின் மார்க்கத்தை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும்ää ஒற்றுமையை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்ää வரலாற்றிலிருந்து பாடம் படித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும்ää அல்லாஹ்வுக்கும் அவனதுதூதருக்கும் இன்னும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பவர்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியம் குறித்தும்ää தீமைகளைக் அடக்கவும்ää கருத்துவேறுபாடுகள்ää இன்னும் அதனால் ஏற்படும் பிளவுகளிலிருந்து தவிர்ந்து வாழும்படியும் முஸ்லிம்களை இக்கடிதம் ஏவுகின்றது. குறிப்பாக தன்னுடைய சுயநலம் சுய பாதுகாப்பு என்பதையெல்லாம் விட இஸ்லாமிய சமூகத்தின் நல்வாழ்வே முக்கியமானதுää பிரதானமானது என்பதை உதுமான் (ரலி) அவர்களது மடல் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.
உதுமான் (ரலி) அவர்களின் வேண்டுகோளின்படி இக்கடிதம் அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்களால் ஹஜ்ஜின் பொழுது மக்களுக்குப் படித்துக் காண்பிக்கப்பட்டது. இந்தக் கடிதத்தின் மூலம் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பது பற்றியும்ää மக்கள் எத்தகைய முடிவினை மேற்கொண்டார்கள் என்பது பற்றி அறிய முடியவில்லை. இக்கடிதத்தின் உரைகளைக் கேட்டதன் பின்ää உதுமான் (ரலி) அவர்களுக்கு ஆதரவாக மக்கள் ஒன்று திரளவில்லைää இன்னும் இதனைக் கேட்ட பின்பு அவரவர் களைந்து சென்று விட்டார்கள். தனது ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மதீனா வந்த பொழுதுää உதுமான் (ரலி) அவர்களின் எதிர்பார்ப்பின்படியே அனைத்தும் நடந்து முடிவடைந்திருந்ததுää உதுமான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டும் விட்டார்கள்.
உதுமான் (ரலி) அவர்கள் இவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு தவித்துக் கொண்டிருந்த நிலையில்ää ஏன் மதீனா தவிர்த்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மற்ற பகுதிகளிலிருந்து உதவிகள் வந்து சேரவில்லை என்பது கேள்விக்குறியாக தொக்கி நிற்;கின்றது. தாஹா ஹ{ஸைன் தனது வரலாற்று நூலில்ää ''உதுமான் (ரலி) அவர்களின் நீண்டகால ஆட்சியின் மீது மக்களுக்கு சிறிய அலுப்புத் தட்டி விட்டதுää மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதும்ää உதுமான் (ரலி) அவர்களின் ஆதரவாளராக முஆவியா (ரலி) அவர்கள் கூட அரசியல் காரணங்களை முன்னிட்டு உடனே படையை உதவிக்கு அனுப்ப இயலாத சூழ்நிலையில் இருந்ததாகவும்""ää என்பன போன்ற காரணத்தைக் குறிப்பிடுகின்றார்.
உதவி கோரி விண்ணப்பம்
ஒவ்வொரு மாகாண கவர்னர்களுக்கும் உதுமான் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்த உதவி கோரிய கடிதம்ää கீழ்க்காணும் விளைவுகளை உருவாக்கியது :
எல்லாப் புகழும் ஏக இறையோனாகிய வல்ல அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்ää இன்னும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் நமக்கு நேர்வழியைக் காட்டினார்கள். அந்த வகையில் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதில் நாமெல்லாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் தாம். இஸ்லாம் நம்மை ஒரே குலமாகப் பிணைத்தது. இன்னும் ஓரிறைக் கொள்கையின் தத்துவத்தைம் நமக்கு அளித்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய தூதுத்துவப் பணியை நிறைவேற்றி விட்ட பின்ää இறையடி சேர்ந்து விட்டார்கள். அவர்களது மறைவுக்குப் பின் அவர்களது பணியை அபுபக்கர் (ரலி) அவர்களும்ää உமர் (ரலி) அவர்களும் சுமந்து சென்றார்கள். உமர் (ரலி) அவர்களது மறைவுக்குப் பின் அந்தப் பணியைச் சுமக்கும் பொறுப்பு என்னிடம் அளிக்கப்பட்டது. நான் பின்புற வாசல் வழியாக இந்தப் பதவியை அடைந்து கொள்ளவில்லைää ஆனால் இந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்ட பொழுதுää என்னுடைய முழு முயற்சியையும் பிரயோகித்துää என்னால் இயன்றவரை சிறந்த முறையில் நிர்வாகத்தை ஏற்று நடத்துவேன் என்றே என்னிடம் உறுதி மொழி எடுத்துக் கொண்ட மக்களிடம் தெரிவித்தேன். என்னுடைய பதவியின் ஆரம்ப கால கட்டத்தில் நான் என்னுடைய நிர்வாகத்தை கவனமான முறையில் நிர்வகித்தேன்ää மக்களும் திருப்தி கொண்டாhகள். மக்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கினேன்ää இன்னும் அவர்களது தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்தேன். இவை அனைத்தும் மக்களது நன்மைக்காகவே செயல்படுத்தப்பட்டன. என்னுடைய ஆட்சியின் பொழுது மக்கள் மிகவும் செழிப்பாக வாழ்ந்தனர். இஸ்லாத்தின் நிழலில் அவர்கள் பெற்றுக் கொண்ட சேவைகளுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்குப் பதிலாக ஒன்றுக்கும் உதவாத – தவறான குற்றச்சாட்டுகளை கட்டவிழ்த்து விட்டதன் காரணமாகää அமைதியான நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி விட்டிருக்கின்றார்கள். மக்களிடையே எழுந்துள்ள குழப்பமான நிலையைப் போக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நான் எடுத்தே வந்திருக்கின்றேன். விபரீதம் என்னவென்றால் இந்தத் தவறான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருபவர்கள் தங்களது குற்றச்சாட்டுக்களுடன் முன்வந்து புகார் தருவதில்லை. அவர்கள் இன்றைக்கு ஒரு கோரிக்கையையும்ää அதற்கு அடுத்த நாள் அதற்கு முரணான இன்னொரு கோரிக்கையையும்ää வாதத்திற்கு மேல் விவாதங்களையுமே அவர்கள் முன் வைக்கின்றார்கள். இத்தகைய மக்களிடம் நான் மிகவும் பொறுமையுடனும்ää பொறுப்புடனும் நடந்து கொண்டிருக்கின்றேன்ää ஆனால் இவற்றை எல்லாம் விட அவர்களது முழு நோக்கம் இஸ்லாத்தை நிலைகுலையச் செய்துää மக்களிடம் ஒற்றுமையின்மையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமே மேலோங்கி நிற்கின்றது.
சமூக மற்றும் அரசியல் ரீதியாக முஸ்லிம்களைப் பலவீனப்படுத்த விழைகின்ற இத்தகைய சக்திகளிடமிருந்து மக்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும் என்று நான் பொதுமக்களை எச்சரிக்கின்றேன். இந்த நிலைமையின் விபரீதத்தினின்றும் இஸ்லாத்தையும்ää அதனைப் பின்பற்றுகின்ற மக்களையும் பாதுகாப்பதற்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் நாட விழைகின்றேன். என்னுடைய கைகளைப் பலப்படுத்துவதன் மூலம்ää நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


கடிதமும் அதன் விளக்கமும்
உதுமான் (ரலி) அவர்கள் ஆளுநர்களுக்கு அனுப்பி வைத்த கடிதத்தை வரிக்கு வரி ஆய்வு செய்தோமென்றால்ää அதில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மணிமுடியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலைமைகளின் விபரீதத்தை மட்டுமே அவர்களுக்கு விளக்கிக் கூறுவதாக அமைந்திருப்பதைக் காண முடியும். அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆள் திரட்டும் நடவடிக்கைகளோää ஏதேச்சதிகரமான முறையில் நடந்து கொள்பவர்களின் ஆணவத்தைக் கட்டுப்பட்டுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது குறித்தோ அந்தக் கடிதம் முறையிடவில்லை என்பதை அறிந்து கொள்ள முடியும். இருப்பினும்ää நிலமையின் விபரீதத்தை உணர்ந்த சிரியா மற்றும் பஷராவின் கவர்னர்கள் அவரச உதவிப் படையினை அனுப்பி வைத்தார்கள். அந்தப் படை மதீனாவை அடையு முன்பேää உதுமான் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி கிடைத்து விட்டது. இதனை அறிந்து கொண்ட மாத்திரத்திலேயே உதவிப்படைகள்ää மீண்டும் தங்கள் தங்கள் பகுதிக்குத் திரும்பி விட்டன. உண்மையிலேயே இந்தப் படைகள் உதுமான் (ரலி) அவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்குவதற்கென்று வந்திருக்குமென்று சொன்னால்ää அவர்கள் திரும்பிப் போயிருக்கவே மாட்டார்கள். மாறாகää கலவரக்காரர்களுக்கு எதிராக தங்களது அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள். இதனை விட மதீனாவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே அவர்கள் மதீனாவை நோக்கி வந்திருக்கின்றார்கள் என்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது. உதுமான்(ரலி) அவர்கள் கொலைக்குப்பின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது என்பது மிகவும் கடினமானதொரு பணியாகி விட்டிருந்தது. இந்த நிலையில்ää வந்திருந்த அந்தப் படைகள் மதீனாவிற்குள் நுழைந்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியிருக்க வேண்டும்ää சட்டத்தை மீறி நடந்தவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தின் உண்மை நிலை என்னவென்றால்ää உதுமான் (ரலி) அவர்கள் என்றுமே உள்நாட்டு யுத்தத்தை விரும்பவில்லை என்பதேயாகும். இதனை நாம் நினைவு கூற வேண்டுமென்றால்ää சிரியாவிலிருந்து முஆவியா (ரலி) அவர்கள் உதவிப் படைகளை அனுப்பி உதுமான் (ரலி) அவர்களுக்கு பாதுகாப்புத் தர முன்வந்த பொழுதும்ää அத்தகைய பாதுகாப்பினை ஏற்றுக் கொள்ள உதுமான் (ரலி) அவர்கள் மறுத்து விட்டார்கள். ஏனெனில்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மதிப்புமிக்க நகரமான மதீனாவில் முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப்படுவதை விரும்பாததே காரணமாகும். இன்னும்ää உதுமான் (ரலி) அவர்களது அடிமையின் சம்பவமும் இது போன்று நினைவு கூறத்தக்கதே. நிலைமையின் விபரீதத்தைப் புரிந்து கொண்ட உதுமான் (ரலி) அவர்களின் அடிமைää உதுமான் (ரலி) அவர்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்த முற்பட்ட பொழுதுää அதனைத் தடுத்து நிறுத்திய உதுமான் (ரலி) அவர்கள் நீ ஆயுதமேந்வில்லை என்று சொன்னால்ää உன்னை விடுதலை செய்ய விளைகின்றேன் என்று கூறினார்கள். இன்னும் இமாம் ஹஸன் (ரலி) அவர்களும்ää இன்னும் சிலரும் கலவரக்காரர்களுக்கு எதிராக ஆயுதமேந்துவதற்காக உதுமான் (ரலி) அவர்களிடம் அனுமதி கோரிய பொழுதுää அனுமதி மறுத்த உதுமான் (ரலி) அவர்கள் தன்னுடைய வீட்டை விட்டும் வெளியேறிச் சென்று விடுமாறு கேட்டுக் கொண்டார்கள். இந்தச் சூழ்நிலையில்ää இறைவனது கட்டளை என்னவாக இருக்குமோää அதனை தவிர்ந்து விடுவதற்கு உதுமான்(ரலி) அவர்கள் விரும்பவில்லை. மாறாகää இறைவன் நாடியது நடக்கட்டும் என்று எண்ணியதோடல்லாமல்ää தன்னால் ஒரு உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த அவர்கள்ää தன்னுடைய இன்னுயிரையே விலையாகத் தர முன்வந்தார்கள். இந்த நிலையில் உதவிக்கு வந்த படைகள் கூடää உதுமான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டன. இதனையும் கூட கலவரக்காரர்கள் பயன்படுத்திக் கொண்டுää 'பாருங்கள்ää பல்வேறு பகுதிகளுக்கு உதுமான் (ரலி) அவர்கள் தன்னுடைய உறவினர்களேயே கவனர்ராக நியமித்திருந்த போதிலும்ää இக்கட்டான இந்தச் சூழ்நிலையில் கூட அவர்கள் இவருக்கு உதவ முன்வராத அளவுக்குää இவர் மக்களிடம் செல்வாக்கற்றவராக இருந்திருக்கின்றார் என்று ஏளனமாகக் குறிப்பிட்டார்கள். இஸ்லாத்தின் உன்னதம் வாழ வேண்டும் என்பதற்காக தன்னுடைய இன்னுயிரையே இழக்க முன்வந்தார்கள் உதுமான் (ரலி) அவர்கள். இறைவா! உன்னுடைய கருணையின் நிழலின் கீழ் வாழக் கூடிய வாய்ப்பை அவர்களுக்கு வழங்கிடுவாயாக..!


ஷஹீத்..! படுகொலைக்குப் பின் வீபரீதங்கள்
இப்பொழுது ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கள் மக்காவை நோக்கி பயணப்படலானார்கள். இந்தச் சந்தர்ப்த்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள நினைத்த கலவரக்காரர்கள்ää மேலும் விபரீதங்களைக் கட்டவிழ்த்து விடலானார்கள். இன்னும் ஹஜ்ஜுக்கு முஸ்லிம் உம்மத்தின் பெரும்பான்மையானோர் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்து மக்காவில் குழுமியிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில்ää இவர்கள் அனைவரும் மதீனாவின் விபரீதங்களைக் கேள்விப்பட்டுää உதுமான் (ரலி) அவர்களின் உதவிக்காக வந்து விட்டால்ää தங்களது நிலைமை இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு விடும் என்பதனை உணர்ந்த கலவரக்காரர்கள்ää ஹஜ்ஜுக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே தங்களது திட்டத்தை நிறைவேற்றி விட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டார்கள்.


முகீரா பின் ஷ{ப்பா
கலவரக்காரர்கள் உதுமான் (ரலி) அவர்களின் இல்லத்தை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த பொழுதுää கீழ்க்கண்ட சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்படுகின்றது. அந்த நிலையில்ää முகீரா பின் ஷ{ப்பா என்பவர் உதுமான் (ரலி) அவர்களிடம் சென்று மூன்று விதமான முடிவுகளை வெளியிட்டார். இந்த மூன்று தீர்மானங்களில் ஏதாவதொன்றைத் தீர்மானித்துää விரைந்து செயல்படுமாறு கூறினார். அதாவதுää முதலாவதாக கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுää போர் செய்வதுää இரண்டாவதாகää ஒரு ஒட்டகத்தை தயார் செய்து மக்காவிற்குச் சென்று விடுவதுää இறுதியாகää சிரியாவிற்கு என்னுடன் வந்துவிடுவது. இவர் கூறிய மூன்று திட்டங்களையும் உதுமான் (ரலி) அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். முதலாவது திட்டத்தின்படிää முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப்படுவதற்குக் காரணமான முதல் கலீபா என்ற அவப்பெயரை நாம் சுமக்க விரும்பவில்லை. இரண்டாவது திட்டத்தின்படிää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கூற்றுப்படிää மக்காவின் குறைஷிகளுள் ஒருவனாகிய நான் அங்கு புதைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. மூன்றாவது திட்டத்தின்படிää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பிரியமிகு நகரை விட்டு விட்டு நான் செல்ல விரும்பவில்லைää என்று தன்னுடைய மறுப்புக்கான காரணத்தைக் கூறி விளக்கிää அந்த மூன்று திட்டத்தினையும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்.


பத்து தகைமைகள்
அபூ தவ்ர் அல் ஃபஹமீ என்பவர் உதுமான் (ரலி) அவர்கள் முற்றுகையிடப்பட்டிருந்த பொழுதுää அவர்களது பத்து தகைமைகளைப் பற்றி வகைப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவதுää
இஸ்லாத்தைத் தழுவிய முதல் நால்வரில் ஒருவர்
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இரு புதல்வியர்களை மணம் புரிந்தவர்
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கரங்களின் மீது சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட நாள் முதலாகää அந்தக் கரங்களைக் கொண்டு உலகாதாய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தாதிருந்தது
வாரம் ஒரு அடிமை என்று அடிமைகளை விடுதலை செய்து உதவுவது
விபச்சாரத்தின் பக்கம் நெருங்கியே இராத நல்லொழுக்கமுடையவர்
பாவங்களின் பக்கம் நெருங்காத பண்பாளர்
திருமறைக்குர்ஆனை பாதுகாப்புச் செய்யும் பணியில் ஈடுபட்டது
உயிர்வாழ்ந்த காலத்திலேயே சுவனத்திற்கான நன்மாராயத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மூலம் பெற்றுக் கொண்ட பத்து நபர்களில் ஒருவர் என்ற சிறப்புடையவர்
இறைமார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் பாதையில் கணக்கின்றி தன்னுடைய வளத்தை அற்பணித்தவர்
இறைத்தூதர் (ஸல்) அவர்களும்ää அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவரும் ஆவார்.


குழப்பமும்ää படுகொலையும்
அப்துல்லா பின் ஸலாம் என்பவர் உதுமான் (ரலி) அவர்களைச் சந்தித்து விட்டுää கலவரக்காரர்களை நோக்கிää இது பாவகரமான செயல் என்று கூறினார்.
இந்த நிலையில் நய்யார் பின் அய்யாழ் அஸ்லமி என்பவர்ää கலவரக்காரர்களுக்கு துணை நின்றதுடன்ää உதுமான் (ரலி) அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் அவர்களது வீட்டிற்குள் நுழைந்தார். நய்யார் உதுமான் (ரலி) அவர்களது வீட்டினை நோக்கி வருவதனைக் கண்ட உதுமான் (ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான கதீர் பின் ஸலத் குந்தி என்பவர் ஒரு அம்பை பாய்ச்சிää நய்யார் அவர்களைக் கொலை செய்து விடுகின்றார். இந்தக் கொலையானது கலவரக்காரர்களை கொதித்தெழச் செய்து விட்டது. அவர்கள் இப்பொழுது இன்னொரு கோரிக்கையை முன்வைக்கலானார்கள். நய்யாரைக் கொன்ற குற்றத்திற்காக கதீரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரலானார்கள். ஆனால் உதுமான் (ரலி) அவர்களோää தன்னுடைய தற்காப்பிற்காக அம்பெய்தவரை தன்னால் ஒப்படைக்க இயலாது என்று கூறி விட்டார்கள். இப்பொழுது விவகாரம் மேலும் மேலும் முற்ற ஆரம்பித்தது. உதுமான் (ரலி) அவர்களின் வீட்டுக் கதவு தாழிடப்பட்டு விட்டது. வாசற் கதவினைப் பாதுகாக்கும் பொறுப்பினை ஹஸன் (ரலி)ää ஹ{ஸைன் (ரலி)ää அப்துல்லா பின் ஸ{பைர் (ரலி)ää மர்வான் (ரலி) மற்றும் சிலர் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இப்பொழுதுää உதுமான் (ரலி) அவர்களின் ஆதரவாளர்களுக்கும்ää கலவரக்காரர்களுக்குமிடையே முழு அளவிலான போர் ஆரம்பமானது. கலவரக்காரர்களின் பக்கம் சிலர் கொலை செய்யப்பட்டனர். மற்றும் இந்தப் பக்கம் ஹஸன் (ரலி)ää மர்வான் மற்றும் சிலர் காயமடைந்தார்கள்.
இந்த நிலையில் கலவரக்காரர்களின் கை ஓங்க ஆரம்பித்ததுää அவர்கள் மேலும் மேலும் வலுவடைய ஆரம்பித்ததுடன்ää உதுமான் (ரலி) அவர்களின் வீட்டினை நெருங்கி வந்து அதற்குத் தீயும் வைத்து விட்டார்கள். அவர்களில் பிரதானமாக முஹம்மது பின் அபுபக்கர் அவர்களின் தலைமையின் கீழ் சில கலவரக்காரர்கள்ää உதுமான் (ரலி) அவர்களின் பக்கத்து வீட்டுச் சுவர் மீது ஏறிää உதுமான் (ரலி) அவர்களின் வீட்டிற்குள் குதிக்கத் துவங்கினார்கள். அன்றைய தினம் உதுமான் (ரலி) அவர்கள் நோன்பும் வைத்திருந்தார்கள். அதற்கு முந்தைய தினம் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கனவிலும் கண்டிருந்தார்கள். அப்பொழுதுää உதுமானே..! இன்றைய தினம் மாலையில் எங்களுடன் இணைந்து நோன்பு திறப்பீராக..! உம்மை நாங்கள் வரவேற்கின்றோம்ää என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருந்தார்கள். இந்தக் கனவின் மூலம்ää இன்றைய தினம் தம்முடைய இறுதி தினம் என்பதை உதுமான் (ரலி) அவர்கள் ஊகித்துக் கொண்டார்கள். மரணத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவரது மனைவி நைலா (ரலி) அவர்கள் அருகில் அமர்ந்திருக்கää திருமறைக் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது கலவரக்காரர்களில் சிலர் உதுமான்(ரலி) அவர்கள் அமர்ந்திருந்த அறைக்குள் நுழைந்து விட்டார்கள். ஆனால்ää அறைக்குள் நுழைந்த எவருக்கும் உதுமான் (ரலி) அவர்களைக் கொலை செய்யும் துணிச்சல் வரவில்லை. இந்த நிலையில்ää முஹம்மது பின் அபுபக்கர் அவர்கள் உதுமான் (ரலி) அவர்களை நெருங்கி அவரது தாடியைப் பற்றி இழுத்தார்கள். அப்பொழுதுää முஹம்மது பின் அபுபக்கரே..! நீங்கள் எனக்கு மருமகன் போல..ää எனக்கு எதிராக கலவரத்தில் இறங்குவதன் மூலமாகää உங்கள் தகப்பானரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விடாதீர்கள். இதனைக் கேட்ட மாத்திரத்திலேயே தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்ட முஹம்மது பின் அபுபக்கர் அவர்கள்ää அந்த அறையை விட்டும் வெளியேறி விட்டார்கள். இதனைக் கவனித்துக் கொண்டிருந்த கலவரக்காரர்கள் சிலர்ää உதுமான் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த அறைக்குள் நுழைந்து அவரது தலையின் மீது ஒரு அடி கொடுத்தார்கள். உதுமான் (ரலி) அவர்களின் மனைவி கணவரின் மீது விழுந்து அவர்களைப் பாதுகாக்க முயன்றார்கள். அவரை அப்புறம் தள்ளி விட்ட கலவரக்காரர்கள்ää மீண்டும் மீண்டும் உதுமான் (ரலி) அவர்களின் மீது வன்முறையைப் பிரயோகித்தார்கள்ää அவர் மரணமடையும் வரைக்கும் அவரை நய்யப் புடைத்துக் கொண்டிருந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். நோன்பு வைத்திருந்த நிலையிலேயே உதுமான் (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள். அவர் கண்ட கனவும் நனவாகியதுää அன்றைய தினம் மாலை இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நோன்பு திறப்பதாக அவர் கண்ட கனவு இதன் மூலம் நனவாகியது.
இந்தக் கொடூரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த உதுமான் (ரலி) அவர்களின் அடிமைகளில் சிலர் கலவரக்காரர்கள் மீது பாய்ந்துää அவர்களில் சிலரைக் கொன்று போட்டார்கள். அங்கும் இங்கும் என கலவரக்காரர்களுக்கும்ää உதுமான் (ரலி) அவர்களின் ஆதரவாளர்களுக்குமிடையே கலவரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வீட்டிற்குள் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. உதுமான் (ரலி) அவர்கள் இறந்ததை அடுத்துää வீட்டிலிருந்து பெண்கள் உதுமான் (ரலி) அவர்களின் உடல் மீது விழுந்து அழுது கத்த ஆரம்பித்தவுடன்ää கலவரக்காரர்கள் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.


உடல் அடக்கம்
உதுமான்(ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பும் திருப்தி அடையாத கலவரக்காரர்கள்ää மேலும் மேலும் அவர் மீது வஞ்சகத்தைத் தீர்த்துக் கொள்ள விரும்பினர். அவரது உடலையும் சிதைக்க விரும்பினார்கள். இன்னும் அவரது உடலை அடக்கம் செய்வதற்குக்கூட அனுமதிக்க மறுத்தனர். கலவரக்காரர்களில் சிலர் உதுமான்(ரலி) அவர்களின் உடலை சிதைக்க முயன்ற பொழுதுää உதுமான்(ரலி) அவர்களின் விதவை மனைவியர்கள் தங்களது கணவரது உடல் மீது விழுந்துää உரத்துக் குரல் எழுப்பினார்கள். அவர்களது அபயக் குரலின் ஓசையானதுää கலவரக்காரர்களை சற்றுத் தள்ளியே நிற்க வைத்தது. இந்த நிலையில்ää உதுமான்(ரலி) அவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதித்து விடக் கூடாது என்ற முடிவில் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தனர் கலவரக்காரர்கள்.
இறந்த உடல் அடக்கம் செய்யப்படாமல்ää மூன்று நாட்கள் வீட்டிற்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுதுää உதுமான்(ரலி) அவர்களது மனைவிää உதுமான் (ரலி) அவர்களின் ஆதரவாளர்களை அணுகிää உடலை அடக்கம் செய்வதற்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள். அவர்களது அழைப்பிற்கு மிகச் சிலரே செவிமடுக்கின்றார்கள். அவர்களில் மர்வான் பின் ஹகம்ää ஸைத் பின் தாபித் (ரலி)ää ஹ{வாதிப் பின் அல்ஃபராஅää ஜாபிர் பின் முத்அம்ää அபூ ஜஹ்ம் பின் ஹ{தைஃபாää ஹாகிம் பின் ஹஸம் மற்றும் நியார் பின் முகர்ரம் ஆகியோர்களாவார்கள். மாலை மங்கும் நேரத்தில் உடல் எடுக்கப்பட்டது. வீட்டைச் சுற்றிலும் முற்றுகை இருந்ததன் காரணமாகää ஜனஸாவை எடுத்துச் செல்லப் பயன்படும் கூடு பயன்படுத்தப்படவில்லை. தண்ணீர் கிடைக்காததன் காரணமாக உடலும் கழுவப்படவில்லை. அவர் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் அணிந்திருந்த ஆடையுடன் மைய வாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஒரு அறிவிப்பின்படிää உதுமான் (ரலி) அவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு அலி(ரலி) அவர்களிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது என்றும்ää இன்னொரு அறிவிப்பின்படி அவ்வாறான அனுமதி பெறப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இன்னும் யாருக்கும் தெரியாமல் உதுமான்(ரலி) அவர்களது உடல் ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டது. இன்னுமொரு அறிவிப்பின்படிää உதுமான் (ரலி) அவர்களது உடல் மைய வாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டதை அறிந்து கலவரக்காரர்கள்ää உதுமான்(ரலி) அவர்களின் உடல் மீது கற்களை எறிந்ததாகவும் கூறப்படுகின்றது. ஆனால்ää இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அவர்களை அலி (ரலி) அவர்கள் எச்சரிக்கை செய்ததாகவும் அறிவிப்புகள் கூறுகின்றன. அதன் பின் அவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். சில அறிவிப்புகளின்படி அலி (ரலி) அவர்கள் அடக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றன. ஆனால்ää பெரும்பாலான அறிவிப்புகளின்படிää அடக்க நிகழ்ச்சியில் அலி (ரலி) அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றே தெரியவருகின்றது. உதுமான் (ரலி) அவர்களது மனைவி நைலா (ரலி) அவர்கள் கையில் விளக்கை ஏந்திக் கொண்டு உதுமான் (ரலி) அவர்களது அடக்க இடத்திற்கு ஆயிஷா பின்த் உதுமான் (ரலி) மற்றும் சில பெண்களுடன் பின்தொடர்ந்ததாகவும்ää இன்னும் ரகசியம் பேணப்படுவதின் அவசியத்தை முன்னிட்டு விளக்கு அணைக்கப்பட்டு விட்டதாகவும் அறிவிப்புகள் கூறுகின்றன.
உதுமான் (ரலி) அவர்களது உடல் 'பக்கி அல் ஃபர்கத்"" என்னும் அடக்கத் தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கூடிய கலவரக்காரர்களில் சிலர்ää முஸ்லிம்களை அடக்கப் பயன்படும் அடக்கத்தளமாகிய இதில் கூட அவரை அடக்கம் செய்யக் கூடாது என்று அவர்கள் கலவரம் செய்ய ஆரம்பித்தார்கள். முஸ்லிம்களின் அடக்கத் தளத்தில் தான் உதுமான் (ரலி) அவர்கள் அடக்கப்பட வேண்டும் என்று உதுமான்(ரலி) அவர்களின் ஆதரவாளர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுதுää கலவரக்காரர்களின் குரல் ஓங்க ஆரம்பித்ததுää இன்னும் இந்த நிலை நீடித்தால்ää மேலும் கலவரத் தீ பரவ ஆரம்பித்து விடும் என்ற நிலை உருவாக ஆரம்பித்தது. அதன் பின்ää வேறு வழியின்றி உதுமான் (ரலி) அவர்களின் உடல் அருகில் உள்ள யூதர்களின் அடக்கத் தளமாகிய ''ஹ{ஷ் கவ்கப்"" என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கேயே அவசரம் அவசரமாக அடக்கம் செய்யப்பட்டது. ஜனஸாத் தொழுகையை ஜாபிர் பின் முத்ஆம் (ரலி) அவர்கள் முன்னின்று நடத்தினார்கள். அடக்க நிகழ்ச்சி முடிந்ததன் பின்புää உதுமான் (ரலி) அவர்களது மனைவி நைலா அவர்களும் ஆயிஷா அவர்களும் அங்கிருந்தோர்களிடம் பேச விரும்பினார்கள். கலவரக் சூழல் காரணமாக தற்போதைக்கு அமைதியாக இருக்கும்படிää உதுமான்(ரலி) அவர்களின் ஆதரவாளர்களால் அறிவுரை கூறப்பட்டது.
அடக்க நிலை பற்றிய மதிப்பீடு
முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடு நிலைகுலைந்து விட்டதன் காரணமாகää ஒரு இஸ்லாமிய ஆட்சித்தலைவரின் அடக்க நிகழ்ச்சி கூட அமைதியான முறையில் நடக்க இயலாமல் போனது குறித்து நாம் வருத்தப்பட முடிகின்றதோ ஒழியää வேறு என்னதான் செய்ய இயலும். உதுமான் (ரலி) அவர்களின் அடக்க நிகழ்ச்சி இஸ்லாமிய மாண்புகளுக்கு அழகு சேர்ப்பதல்லää இன்னும் அதனை விடக் கொடுமையான நிகழ்ச்சி வேறு எதுவும் இல்லை. கடந்த 12 வருடங்களாக மதீனா மக்களின் தேவையைக் கவனித்து கவனித்துச் செய்த அந்த மனிதரது உடல் அடக்கம்ää அதுவும் ஆட்சித் தலைவரின் உடல் அடக்கம் இந்த அளவு மோசமாகப் போனதற்கு யார் காரணம். காலமெல்லாம் இந்த சமுதாய முன்னேற்றத்திற்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட அந்தத் தலைவர்ää தனது இறுதி இருப்பிடத்தை யூதர்களின் சமாதிகளுக்கு மத்தியில் அமைத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டதே.
முஆவியா (ரலி) அவர்கள் அதிகாரத்தின் உச்சியில் இருந்த பொழுதுää முஸ்லிம்களின் மண்ணறைக்கும்ää யூதர்களது மண்ணறைக்கும் நடுவே இருந்த மதில் சுவரை இடித்தார். உதுமான்(ரலி) அவர்களின் மண்ணறையைச் சுற்றிலும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்தார்ää அதுமுதல் குஷ் கவ்கப் என்ற யூதர்களின் மண்ணறைää 'பகீ" அல் ஃபர்கத் என்ற முஸ்லிம்களின் மண்ணறையாக மாறியது.
ஆயிஷா பின்த் உதுமான் அவர்களின் இரங்கல் உரை
உதுமான் (ரலி) அவர்களது உடல் நல்லடக்கதிற்காக எடுத்துச் செல்லப்பட்டவுடன்ää அவரது மகளாரான ஆயிஷா அவர்கள் அங்கே ஒரு சிறிய உரையை ஆற்றினார்கள் :
''நான் எனது தந்தையின் மரணத்திற்காக மிகவும் பரிதாபமான முறையில் துக்கம் அனுஷ்டிக்கிறேன். அவர் எனக்கு மட்டும் தந்தையல்லää மாறாக முழு முஸ்லிம் உம்மத்திற்கும் அவர் தந்தை போன்றவர். எவர்களையெல்லாம் தனது மகனாகப் பாவித்தாரோää அந்த மகன்களே தனது தந்தையைக் கொன்று விட்டார்கள்.
எனது தந்தை உதுமான் (ரலி) அவர்களைக் கொன்ற கொலை பாதகர்களே..ää நாம் அனைவரும் அல்லாஹ்வின் படைப்பினங்கள்ää நாம் அனைவரும் அவனிடமே மீள வேண்டியதிருக்கின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த புனித மிகு நகரத்தில்ää இன்னும் அவருடன் நெருக்கமான தோழராக இருந்த ஒருவரைக் கொன்று போடுவதற்கு உங்களுக்கு எப்படித் தான் மனது வந்தது. அவரைக் கொன்ற பின்னும் கூடää அவரது அடக்கத்தைக் கூட நிம்மதியாக சிரமமில்லாமல் நடைபெற அவர்கள் அனுமதிக்கவில்லையே..!
யா அல்லாஹ்..! ஆட்சியாளர் என்ற அடிப்படையில் தனது அதிகாரத்தை அவர் நிலைநிறுத்த முயற்சித்திருப்பாரென்றால்ää அவருக்கு ஆதரவாக ஏராளமானோர் வந்திருப்பார்கள். சத்தியமும்ää நீதியும் அவரது பக்கத்தில் தான் இருந்ததுää இன்னும் இறையச்சமுடையவர்கள் உதுமான் (ரலி) அவர்கள் பக்கமே இணைந்திருப்பார்கள். அந்தக் கலவரக்காரர்கள் பிடிக்கப்பட்டுää அவர்களது தலைகள் கொய்யப்பட்டிருக்கும்ää இன்னும் இரத்த ஆறு ஓடியிருந்திருக்கும். இது உதுமான் (ரலி) அவர்களின் வழிமுறையல்லவே. எதனை நாம் சரியென்று இப்பொழுது நினைக்கின்றோமோää அதனை வேண்டாமென்றார்ää அவர் இரத்த ஆறு ஓடுவதனை எதிர்த்தார். உள்நாட்டு யுத்தம் ஒன்று நடைபெற இருப்பதைத் தவிர்க்கும் பொருட்டுää தன்னையே அதற்காக அற்பணிப்பதற்கு முன் வந்தார்.
கொலை பாதகர்களே..ää நீங்கள் முஸ்லிம்களாக இருந்து கொண்டிருக்கின்ற நிலையில்ää உங்களது ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது அவசியம்ää இன்னும் நீங்கள் அவரது கரத்தில் பைஅத் என்ற வாக்குறுதியும் அளித்திருக்கின்றீர்களே. உங்களது ஆட்சியாளரைக் கொலை செய்ததன் மூலமாகää நீங்கள் இஸ்லாத்தை அல்லவா மறுத்திருக்கின்றீர்கள். உங்களையே நீங்கள் பொய்ப்படுத்தி இருக்கின்றீர்களே. அவருக்கு எதிராக வதந்திப் பிரச்சாரத்தை அல்லவா நீங்கள் செய்திருக்கின்றீர்கள்ää அவர் மீது சுமத்தப்பட இயலாத அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களை அல்லவா புனைந்திருக்கின்றீர்கள். அவர் மீது புனைந்துரைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுக்களையும் மறுத்திருக்கின்றாரேää அதனைக் கேட்ட பின்பும் உங்களது கேடு கெட்ட செயல்களை உதறித் தள்ளவில்லையே. ஏதுமறியாத மனிதரை நீங்கள் கொலை செய்திருக்கின்றீர்கள்ää அவரது இரத்தம் இப்பொழுது உங்களை பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கின்றது.
எனது தந்தையே..! அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவானாக. உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து உங்களது கடமையை நீங்கள் சரிவரச் செய்துள்ளீர்கள். கடுமையான சோதனையாக கால கட்டங்களில் நீங்கள் பொறுமையுடன் இருந்திருக்கின்றீர்கள்ää இன்னும் உங்கள் மீது புனைந்துரைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் பொறுமையுடன் எதிர் கொண்டு பதிலுரைத்திருக்கின்றீர்கள். உங்களது மரணத்தை சிரித்த முகத்துடனேயே சந்தித்திருக்கின்றீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்த தியாகச் செம்மல். இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய தோழராக அந்த சுவனத்தில் சுற்றி வருகின்றீர்கள்.
இப்பொழுது உங்களைக் கொன்றவர்களுக்கிடையிலேயே கருத்து மோதல்கள்ää அவர்கள் தங்களுக்குள்ளேயே வாதப் பிரதிவாதங்கள் செய்து தர்க்கம் செய்து கொண்டிருக்கின்றார்கள். எங்கும் விஷமம் தலைவிரித்தாடுகின்றதுää உங்களது எதிரிகளுடைய அடக்குமுறை எங்கும் வியாபித்து விட்டது. நயவஞ்சகர்களுடைய முகத்திரை இப்பொழுது கிழிய ஆரம்பித்துள்ளதுää இன்னும் அவர்கள் தங்களுக்குள் பிணக்கு ஏற்பட்டுää பிரச்னைகளுக்கு முகம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
உதுமான் அவர்களைக் கொன்ற கொலை பாதகர்களேää நீங்கள் எவ்வளவு கொடுமையானää இன்னும் அநீதமானவர்கள். உங்களது கோரிக்கைகைள முன்வைத்து உதுமான் (ரலி) அவர்களிடத்தில் வரம்பு மீறி விட்டீர்கள். அவர் தனக்கு முன்னிருந்தவர்களின் அடிச்சுவட்டையே பின்பற்றினார். உமரின் காலத்தில் அவரிடம் நீங்கள் எந்தக் கோரிக்கையையும் முன் வைக்காமல் ஏன் மௌனமாக இருந்தீர்கள். அவர் கடுமையானவர்ää எனவே அவருக்குப் பயந்து அவரிடம் உங்களது கோரிக்கையை முன்வைக்கவில்லை. அதேநேரத்தில் உதுமான் உங்களை கனிவுடன் நடத்தினார். ஆனால் அந்த கனிவான தன்மையை பாராட்டுவதற்குப் பதிலாகää அவரையே நீங்கள் எதிர்க்கத் துணிந்து விட்டீர்கள். இது நன்றி கெட்டதனமாகும். இறைவனுக்கும் மனிதனுக்கு நன்றி செலுத்தாத பண்பு மிகப் பெரும் குற்றமாகும். நன்றி கெட்ட மனிதர்கள் நிச்சயமாக நல்வாழ்வு வாழ மாட்டார்கள். உங்களது நன்றி கெட்ட தனத்தின் காரணமாக நீங்கள் நடந்து கொண்ட ஈனத்தனமாக செய்கைக்காக உங்களை வரலாறு என்றைக்கும் மன்னிக்காது. உங்களது இறுதி இருப்பிடம் நரகமேயாகும்.
உமருடைய ஆட்சிக் காலத்தில் நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள் என்பதை சற்று நினைத்துப் பாருங்கள். நீங்கள் எப்பொழுது அச்சத்தாலும்ää பயத்தாலும் சூழப்பட்டிருந்தீர்கள். உங்களது நடவடிக்கைகளுக்கு அவர் தடை பிறப்பித்திருந்தார். அவர் உங்களது சுதந்திரத்திற்குத் திரை போட்டிருந்தார். அவருக்கு எதிராக எந்த எதிர்ப்பையும் காட்டாமல்ää அவருக்குக் கட்டுப்பட்டவர்களாக நீங்கள் இருந்தீர்கள். அவருக்கு முன்னால் நின்று பேசவே பயந்தீர்கள்ää அவரை எதிர்த்துப் பேசவும் இயலாதிருந்தீர்கள். தன்னுடைய கையில் எப்பொழுதும் சாட்டையைக் கையில் வைத்துக் கொண்டே திரிந்தää ஆட்சியாளர் அவர். செவிட்டுக் கால்நடையைப் போன்றே உங்களை அவர் நடத்தினார். ஆனால்ää உதுமான் உங்களை மனிதர்களாக நடத்தினார். உங்களுக்கு முழுச் சுதந்திரத்தை வழங்கினார். உங்களது அனைத்து நடவடிக்கைகளின் மீதிருந்த அனைத்துத் தடைகளையும் நீக்கினார். உங்களது உதவித் தொகைகளை உயர்த்தினார்ää உங்களது அனைத்து வாழ்க்கை வசதிகளையும் பார்த்துப் பார்த்துää கவனித்துச்செய்தார். அதற்குப் பிரதியீடாக அவரை நீங்கள் கொலை செய்திருக்கின்றீர்கள். இது மிகவும் வித்தியாசமானது. நீங்கள் இஸ்லாத்தின் மாண்புகளைப் பொய்ப்பித்திருக்கின்றீர்கள். நன்மைக்குப் பதிலாக தீமையைச் செய்துள்ளீர்கள். இன்றைய தினம் அல்லாஹ் தனது கருணையினால் உங்களிடமிருந்து எங்களைப் பிரித்து விட்டான். நீங்கள் படுபாதகமான குற்றமிழைத்து விட்டவர்கள். புரிந்து கொள்ளுங்கள்ää அநீதி எப்பொழுதுமே வெற்றி பெற்று விடாது. அதே நேரத்தில் சத்தியம் தழைக்கும்ää வெற்றி பெறும்ää அப்பொழுது நீங்கள் செய்தவைகள் குறித்து வினவப்படுவீர்கள். இறைவன் மீது நான் முழுமையான நம்பிக்கை வைத்திருக்கின்றேன்ää உதுமானைக் கொலை செய்தவர்களை அவன் நிச்சயமாகப் பழி வாங்குவான். உதுமான் (ரலி) அவர்களின் ஆத்மா சுவனத்தில் என்றென்றும் நிலை பெறட்டுமாக! அநீதமான முறையில் அவர் தனது இன்னுயிரை இந்த உலகத்தில் இழந்து விட்டார்ää நிச்சயமாக அதற்கு பிரதியீடாக அல்லாஹ் அவருக்கு மறுமை நாளிலே தீர்ப்புச் செய்வான். பிரதியுபகாரம் வழங்குவான்.
நெய்லா - உதுமான் (ரலி) அவர்களின் மனைவியின் இரங்கல் உரை
உதுமான் (ரலி) அவர்களின் அடக்க நிகழ்ச்சியில்ää உதுமான் (ரலி) அவர்களின் மனைவி நெய்லா அவர்கள் மதீனாவாசிகளின் முன்னிலையில் ஆற்றிய உரை வருமாறு :
என்னருமை இஸ்லாமியச் சகோதரர்களேää என்னுடைய இதயத்திலே உறைந்து போயிருக்கின்றவைகளை உங்கள் முன்னிலையில் நான் பேச விரும்புவது குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். என்னுடைய பேச்சு வீணானதும் அல்லது வெட்டிப் பேச்சுமல்ல. பாதிப்புக்குள்ளானää இன்னும் துக்கத்தில் தோய்ந்த நிலையில் உங்கள் முன் நிற்கின்றேன். எனது ஆருயிர்க் கணவர் கொலை செய்யப்பட்டது குறித்தும்ää அதன் சோகம் குறித்தும் என்னால் வார்த்தைகளால் வடிக்க இயலவில்லை. கடுமையாக நான் அழுததன் விளைவுää எனது கண்ணில் கூட கண்ணீர்ப் பூக்கள் உறைந்து போய் விட்டன. கடுமையான சோகத்தில் நான் இருக்கின்றேன். அது ஈடு செய்ய இயலாததொரு சம்பவமாகி விட்டது. இந்த நிலையில்ää மனிதர்களாகிய நாம் உதவி செய்யப்பட இயலாத நிலைக்கு ஆளாகி விட்டோம். நாம் அல்லாஹ்விடமிருந்தே வந்தோம்ää அவனிடமே நம்முடைய மீளுதலும் இருக்கின்றது. அவருடைய மரணத்திற்கு எனது அனுதாபங்கள். அவரது மரணம் எனக்கு மட்டும் அதிர்ச்சியானதல்லää அது முழு முஸ்லிம் உம்மத்தையும் மிகப் பெரிய அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆருயிர்த் தோழர். ஒருவர் பின் ஒருவராக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இரண்டு மகள்களை மணந்து கொண்ட உயர் தகுதி படைத்தவர். அதற்காகவே அவருக்கு துன்நூரைன் என்ற பட்;டமும் வழங்கப்பட்டது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆலோசகராகவும் இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது மறைவுக்குப் பின்னர்ää அபுபக்கர் (ரலி) ää உமர் (ரலி) ஆகியோர்கள் உதுமான் (ரலி) அவர்கள் மீது உயர்ந்த நன்மதிப்பு வைத்திருந்ததோடுää முக்கியமான அரச விவகாரங்களில் அவரிடம் கலந்தாலோசனை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். அவரது தகைமைப் பண்புகளிலும்ää இன்னும் இரக்க மனப்பான்மையிலும் அவரை மிஞ்சக் கூடியவர்கள் எவரும் இல்லை. கண்ணியமிக்கää அதிக நாணமுடையää அதிக தயாளத் தன்மையுடையää உயர் பண்புகளையுடையää நேர்மையானää அதிக இரக்க சுபாவமுடைய ஒரு மனிதராகத் திகழ்ந்தார். அவர் நன்மையை ஏவினார்ää தீமையைத் தடுத்தார். அவரது தயாளத் தன்மைக்கு எல்லையே கிடையாது. அவர் ஏராளமான அனாதைகளுக்கும்ää வாழ்விழந்த பெண்களுக்கும் உதவிக்கரம் நீட்டினார். நிர்க்கதியானோருக்கு உதவுவதில் எப்பொழுதும் முன்னணியில் இருந்தார். அவரது நற்கொடைகள் யாவும் எல்லோரும் அறிந்த ஒன்றே. அதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
அவர் ஆட்சித் தலைவராக 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவருக்கு முன்னர் ஆட்சி செய்த ஆட்சியாளர்களை எல்லாம் விட இவரது ஆட்சிக்காலம் நீண்டது. இவரது ஆட்சிக் காலம் மக்கள் நினைவு கூறத் தக்கவை. இவரது ஆட்சிக் காலத்தில் ஏராளமான நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டன. இவரது ஆட்சிக் காலத்தில் தான் முதன் முதலாக முஸ்லிம்கள்ää கடல் பகுதிக்கும் தலைவர்களாக ஆனார்கள்.
உதுமான் (ரலி) கருணைமிகுந்த ஆட்சியாளர். அவர் உங்களது உதவித் தொகைகளை அதிகரித்தார். அவரது ஆட்சியின் பொழுது நாடு செழிப்பாக இருந்தது. அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பொழுது மதீனா மிகப் பெரிய நகரமாக இருந்ததில்லை. இவரது ஆட்சியின் கீழ் தான் அது மாநகரமாக உருவெடுத்தது. இன்னும் இறைத்தூதர் (ஸல்)அவர்களின் பள்ளியை விஸ்தரிப்பு செய்துää அதன் பரப்பளவை அதிகப்படுத்தினார். இன்னும் மக்களின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க ஏராளமான கிணறுகளையும் அவர் உருவாக்கினார். பஞ்ச காலங்களின் பொழுதுää அல்லாஹ்வின் உவப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டுää தனது சொந்த பணத்தைக் கொண்டு மக்களுக்கு தானியங்களை வாங்கி வழங்கினார்.
உங்களது நகரத்தின் தலைமகன். அவர் உங்களுக்காக அதிக நலன்கள் புரிந்திருக்கின்றார்ää ஆனால் அதற்கு நீங்கள் செய்ததோ கொஞ்சம் தான். உங்களது முன்னிலையிலேயே கலவரக்காரர்கள் அவரைக் கொலை செய்திருக்கின்றார்கள்ää இருப்பினும் அதனைத் தடுக்க முயற்சிக்காதுää உங்களது வீட்டுக் கதவுகளுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டீர்கள். கொலை செய்வது பாதகச் செயல்ää ஆனால் உதுமான் (ரலி) அவர்கள் கொலையானது படுபாதகமானதுää வரலாறு தன்னில் பதிவுசெய்து வைத்திருக்கின்ற மிகவும் சோகமான வரலாறாகும் அது. அவர்கள் உதுமான் அவர்களைக் கொலை செய்ததன் மூலம்ää இஸ்லாத்தைக் கொலை செய்துள்ளார்கள். புனிதமிக்க நகரமான மதீனாவில் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்ää அது மிகவும் கறை படிந்த வரலாறாகும். இன்னும் புனித மிக்க ஹஜ் மாதத்தின் பொழுது படுகொலை செய்யப்பட்டிருப்பதுää அந்த மாதத்தின் புனிதத்தையே குழி தோண்டிப் புதைப்பது போலாகி விட்டது.
இஸ்லாம் மனித குலத்திற்கு அருட்கொடையாக வந்துதித்தது. இஸ்லாம்.. அறியாமைக்காலப் பழக்க வழக்கங்களை முற்றாக ஒழிக்க வந்தது. உதுமான் (ரலி)அவர்களின் படுகொலையானது மீண்டும் அறியாமைக்காலச் சூழல் தலையெடுத்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. அவரது படுகொலையானது முஸ்லிம்களுக்குள் பிரிவினை விதையைத் தூவி விட்டுள்ளது. அவரது படுகொலையின் மூலம் நமது வெற்றி முகாம்கள்ää இப்பொழுது அதன் முன்னேற்றத்தை இழந்து செயலிழந்து நிற்கின்றன. குறிப்பாகää முஸ்லிம்கள் இறைநிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போர் புரிந்த நாட்கள் போகää இப்பொழுது சொந்த சகோதரர்களையே எதிர்த்து போர் புரிய வேண்டிய நிலை உருவாக்கப்பட்டு விட்டது. முஸ்லிம்களை நோக்கி குழப்பமான நாட்கள் வந்து கொண்டிருப்பதை நான் பார்க்கின்றேன். இறைவன் நம்மீது கருணை புரியட்டும்! உதுமான் அவர்களின் மீதும் இறைவன் தனது கருணை மழையைப் பொழியட்டும்ää சுவனத்தின் சிறப்பு மிக்க பகுதியில் அவரைச் சேர்த்தருளட்டும்!
இதனையடுத்துää இஸ்லாமியக் கவிதை புனைவதில் அன்றைக்கு மிகவும் புகழ் பெற்று விளங்கியவர்களாகிய ஹஸன் பின் தாபித்ää கஅப் பின் மாலிக் அன்ஸாரிää கத்தாப் பின் யஸீத் முஜாஷிää காஸிம் பின் உமைய்யா பின் அபீ அல் ஸலாத்ää லைலா அகைலாää இப்னு கஸீமாää வலீத் பின் உக்பாää ஐமன் பின் ஹாஸிம் பின் ஃபதிக் அஸதி (ரலி-அன்ஹ{ம்) ஆகியோர் உதுமான் (ரலி) அவர்களின் மீது இரங்கற்பா பாடினார்கள்.
அமீர் முஆவியாவிற்கு நைலா அவர்கள் எழுதிய கடிதம்
நைலா அவர்கள் பற்றி சிறு குறிப்பு :
நைலா பின் பர்ஃப்ஸாää இவர் உதுமான் (ரலி)அவர்களின் மனைவியாவார். இவர் கிறிஸ்தவ குலத்தைச் சேர்ந்தவர். உதுமான்(ரலி) அவர்களை மணந்து கொண்ட பொழுதுää இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இவர்களது திருமணம் ஏழு ஆண்டுகள் நீடித்தது. இந்த நாட்களில் உதுமான் (ரலி) அவர்களின் பிரியத்திற்குரிய மனைவியாக இருந்தார். இன்னும் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையின் பொழுதுää உதுமான்(ரலி) அவர்களுடன் இருந்தவர்களுள் இவரும் ஒருவர். உதுமான்(ரலி) அவர்களை கொலைகாரர்கள் தாக்கிய பொழுதுää அவர் மீது விழுந்த அடிகளில் சில இவர் மீதும் விழுந்தது. அதில் காயமும் அடைந்தார். உதுமான் (ரலி) அவர்கள் உயிருடன் இருந்த நாட்களில்ää தான் படுகொலை செய்யப்பட்டால்ää தனது படுகொலைக்கான நியாயத்தை கோருபவராக முஆவியா (ரலி) அவர்களை நியமித்திருந்தார்கள். உதுமான் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்புää முஆவியா (ரலி) அவர்களுக்கு ஒரு கடிதத்தை நைலா அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
நைலா அவர்களின் கடிதம்
அவரது கடிதத்தின் சாரம் வருமாறு :
நைலா பின்த் ஃபரஃபஸா விடமிருந்து அமீர் முஆவியா பின் அபீ சுஃப்யான் அவர்களுக்குää
இந்தக் கடிதத்தின் மூலமாகää அல்லாஹ் உங்கள்; மீது சொறிந்திருக்கின்ற அருட்கொடைகளையும்ää முஸ்லிம்களாக உங்களை ஆக்கியிருப்பதையும்ää உங்களுக்கு நேர்வழி காட்டியிருப்பதையும்ää இன்னும் இறைநிராகரிப்பிலிருந்து உங்களை மீட்டிருப்பதனையும் நினைத்துப் பார்க்குமாறு உங்களை அழைக்கின்றேன்.
இறைவனது திருப்பெயரால்..ää உதுமான் (ரலி) அவர்களைப் படுகொலை செய்ததற்கு எதிராக நியாயத்தைக் கோரும்படி உங்களிடம் விண்ணப்பிக்கின்றேன். அவருக்கும் உங்களுக்கும் இடையே இருந்த தொடர்பின் அடிப்படையில்ää அவரது படுகொலைக்கு எதிராக பழி எடுப்பது உங்கள் மீது கடமையாக இருக்கின்றது. இது அல்லாஹ்வின் கட்டளையும் கூடää முஸ்லிம்களின் இரண்டு குழுக்களுக்கிடையே இரத்த சிந்தப்படுமானால்ää அவர்களுக்கிடையே சமாதானத்தை உண்டாக்க முயற்சிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்ää ஆனால் அவர்களில் எவராவது வரம்பு மீறுவாரெனில்ää அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்ää வரம்புமீறுபவர்கள் மீது கொலைத் தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றும் திருமறை கூறுகின்றது.
எந்தவித நியாயமும் இன்றி சிலர் உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிராக நடந்து கொண்டார்கள். இஸ்லாத்தில் அவரது உன்னத நிலை குறித்து நீங்கள் அறிவீர்கள். அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் அருகே நெருக்கமாக இருந்தவர்கள். அவர் சாதுர்யமான முறையில் கொல்லைப் புறமாக அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை. அவரை மக்கள் தான் தங்களது ஆட்சியாளராகத் தேர்ந்தெடுத்தார்கள். கடந்த 12 ஆண்டுகளாக இரவும்ää பகலுமாக மக்களின் நன்மைக்காகவே அவர் உழைத்தார். அவரது ஆட்சிக் காலப் பகுதியில் ஏராளமான பகுதிகள் வெற்றி கொள்ளப்பட்டன. ஏராளமான செல்வங்கள் அரசின் கஜானாவை நிரப்பின. மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிப் பணம் அதிகரிக்கப்பட்டது. மக்கள் வளமான வாழ்க்கைக்குச் சொந்தக் காரர்கள் ஆனார்கள். அவரது ஆட்சியின் பொன்னான நாட்கள் குறித்து போற்றுவதை விட்டு விட்டுää அவருக்கு எதிராகவே சில விஷமங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். அத்தகைய விஷமத்தனமான நடவடிக்கைகளை உதுமான் (ரலி) அவர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும்ää ஆனால் மக்களின் மீது அடக்குமுறையை அவர் கட்டவிழ்க்க மறுத்து விட்டார். இறைவனது கட்டளைக்கு முன்பாக தன்னை உண்மையான முஸ்லிமாக அவனிடமே தன்னை அற்பணித்து விட்டார்.
அவருக்கு எதிராகக் கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் திருப்திகரமான முறையில் பதில் கூறினார். கடந்த 12 ஆண்டுகளாக அவர் தனது சொந்த வாழ்க்கைக்கான அரசின் கஜானாவிலிருந்து எதனையும் எடுத்துச் செலவு செய்ததில்லை. மாறாகää தனது சொந்தப் பணத்தைத் தான் அதிகமான முறையில் மக்களின் நன்மைக்காகச் செலவு செய்திருக்கின்றார். அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அந்த நாளில்ää அரபுப் பிரதேசத்தில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவராக அவர் இருந்தார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்புää அவரது சொத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தன. அவருக்கு எதிராகப் புனைந்துரைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அர்த்தமற்றவைää மனிதர்களின் விவகாரங்களில் நீதி செலுத்தக் கூடிய நீதவான்களில் அவர் சிறந்த மனிதர் இன்னும் அவர் தனக்கு மிகவும் நம்பிக்கையுள்ளவர்களையே பதவியில் அமர்த்தினார்ää இன்னும் அவர்கள் அரசின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே அத்தகைய நியமனங்கள் செய்யப்பட்டன.
உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கிளர்ச்சிகள் யாவும்ää தேச விரோதச் செயல்களாகும். இவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் வெளியார்களே தந்தார்கள். இஸ்லாத்தின் வெற்றிகள் குறித்து தங்களுக்குள் பொறாமைப்பட்டுக் கொண்டவர்களேää இத்தகைய சதிச் செயல்களைச் செய்து இஸ்லாத்தின் வெற்றியை முடமாக்க முயற்சி செய்துள்ளார்கள். இதில் கொடுமை என்னவென்றால்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னணித் தோழர்களில் சிலர் இந்தக் கொடுமைக்காரர்களின் சதிவலைகளில் வீழ்ந்துள்ளார்கள்ää இன்னும் எதிரிகளுக்கு மறைமுகமாக உதவியும் செய்துள்ளார்கள் என்பதே கவலையளிக்கும் செய்தியாகும்.
கலவரக்காரர்கள் உதுமான் (ரலி) அவர்களின் வீட்டினை முற்றுகை இட்டார்கள். அவரது வீட்டுக் கதவருகே முழு ஆயுதபாணிகளாக நின்றார்கள். அவரது வீட்டிற்குள் உணவுää தண்ணீர் என்று எதனையும் கொண்டு செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. உதுமான் (ரலி) அவர்கள் தனது சொந்தப் பணத்தில் இருந்து வாங்கிய கிணற்றில் இருந்து தண்ணீர் பிடித்து எடுத்து வரக் கூட எம்மை அவர்கள் அனுமதிக்கவில்லை. அந்தக் கலவரக்காரர்கள் அனைத்து விவகாரங்களிலும் அலி (ரலி)ää முஹம்மது பின் அபுபக்கர் (ரலி)ää தல்ஹா(ரலி)ää மற்றும் சுபைர்(ரலி) ஆகியோர்களது தலைமையை ஏற்றுக் கொண்டார்கள். இந்தக் கலவரக்காரர்களில் குஸாஆää ஸாஅத் பின் பக்ர்ää ஹ{தைல்ää ஜஹினா மற்றும் முஸினா ஆகிய கோத்திரத்தார்கள் முன்னிலை வகித்தார்கள். மேலும் இவர்கள் பஸரா மற்றும் கூஃபாவிலிருந்து உதவியையும் பெற்றுக் கொண்டார்கள். இந்த முற்றுகையின் பொழுது அம்பு கொண்டு உதுமான் (ரலி) அவர்களைக் காயப்படுத்தினார்கள். இன்னும் உதுமான் (ரலி) அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்ää கலவரக் காரர்களைத் தடுக்க முயன்ற சில தோழர்களை அவர்கள் கொலையும் செய்துவிட்டார்கள். கலிபா உதுமான் (ரலி) அவர்கள் அவரைச் சுற்றிலும் நோட்டமிட்ட வகையில்ää அவருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை தட்டிக் கேட்பதற்கு மதீனாவிலிருந்து எவரும் முன் வரவில்லை.
கலவரக்காரர்கள் வீட்டினை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தார்கள். வீட்டு வாசல் கதவை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள்ää ஜன்னல் கதவை உடைத்தார்கள்ää வீட்டில் உள்ள பொருட்களைச் சூரையாடினார்கள். முஹம்மது பின் அபுபக்கர் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களின் தாடியைப் பற்றி இழுத்தார். கலவரக்காரர்களில் ஒருவர் உதுமான் (ரலி) அவர்களின் தலை மீது ஓங்கி அடி கொடுத்தார்ää அதன்பின் உதுமான் (ரலி) நினைவற்ற கீழே விழுந்தார்கள். கலவரக்காரர்கள் அவரது தலையைக் கொய்து விடவே நாடினார்கள். நானும்ää மகள் ஷிபாவும் உதுமான் (ரலி) அவர்களின் உடல் மீது விழுந்து புரண்டோம்ää எங்களை அவர்கள் அப்புறப்படுத்தியதோடல்லாமல்ää எங்களது நகைகளையும் அபகரித்துக் கொண்டார்கள்.
இந்தக் கடிதத்துடன்ää உதுமான் (ரலி) அவர்களின் இரத்தம் தோய்ந்த ஆடையையும் அனுப்பி வைத்துள்ளேன். தயவுசெய்து இரத்தம் தோய்ந்த அவரது ஆடையைப் பார்க்கவும்ää அதில் உள்ள இரத்தத் துளிகளுக்காக பழிவாங்கப்படாமல் விட்டு விடப்படக் கூடாது.
உதுமான் (ரலி) அவர்களின் ஆத்மா மீது அல்லாஹ் கருணை புரிவானாக! அந்தக் கொலைகாரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!


நன்றி:http://www.alagankulam.in

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்