அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, January 28, 2011

இரு நாடு கருத்துக்கு முதலில் வித்திட்டவர் வீர சவர்க்கர்தான், ஜின்னா அல்ல-காங்.

வெள்ளிக்கிழமை, ஜனவரி 28, 2011, 11:54[IST]

Dig Vijay Singh
Vote this article
Up (169)
Down (112)
Ads by Google
Lastest News Pakistan www.France24.com/Pakistan
International news from France 24 English, French & Arabic broadcasts
டெல்லி: இந்தியா இரு நாடுகளாக பிரிய வேண்டும் என்ற கருத்தை முதலில் வைத்தவர் முகம்மது அலி ஜின்னா அல்ல, மாறாக, சுதந்திரப் போராட்ட வீரர் வீர சவர்க்கர்தான் என்று கூறியுள்ளார் சமீப காலமாக சர்ச்சையாகவே பேசி வரும் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்.

டெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு சிங் பேசுகையில், சுதந்திரப் போராட்ட வீரர் வீர சவர்க்கர்தான் முதன் முதலில் இரு நாடு என்ற கொள்கையை பரப்பியவர் ஆவார். இதுதான் பின்னர் தீவிரமடைந்து இந்தியா, பாகிஸ்தான் என நாடு சிதறக் காரணமாக அமைந்தது.

வீர சவர்க்கர் பரப்பிய இந்த பிரசாரத்தைத்தான் பின்னர் முகம்மது அலி ஜின்னா தனது கொள்கையை வரித்துக் கொண்டார். பாகிஸ்தான் பிரிவினையில் போய் அது முடிந்தது.

எப்போதுமே தீவிர மத, இனக் கொள்கைகள் பிரிவினையில்தான் போய் முடியும் என்பதை சொல்லவே இதைக் கூறுகிறேன். வீர சவர்க்கரும் சரி, ஜின்னாவும் சரி எதிலுமே நம்பிக்கை இல்லாதவர்கள். தீவிரவாத கொள்கைகளைக் கொண்டவர்கள் எப்போதுமே இப்படித்தான் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள்.

அதேசமயம், ஒரு நல்ல இந்து அல்லது நல்ல முஸ்லீம், நம்பிக்கை உணர்வுடன் கூடியவர்களாக இருப்பார்கள் என்றார் திக்விஜய் சிங்.

திக்விஜய் சிங்கின் இந்தப் பேச்சு புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

நன்றி::thatstamil.com

Dr. Abdullah periyardasan-இஸ்லாத்தின் தனித்தன்மைகள்

நான் கடந்து வந்த மதங்கள்-Dr.Abdullah Periyardasan Speech

வெற்றி அடைவோம் - Dr.Abdullah Periyar Dasan

என்னை பாகிஸ்தான் அனுப்புங்கள்-காவி பயங்கரவாதி அசிமானந்தா (Video)


E-mailPrintPDF

செய்த குற்றச்செயல்களுக்கு பிராயச்சித்தம் தேடும் காவி பயங்கரவாதி.

நன்றி:tmmk.in

Thursday, January 6, 2011

இஸ்லாமியர்கள் ஐரோப்பாவை ஆட்சி செய்த காலங்களில் ஆவணப்படம்

புத்தாண்டை வரவேற்கும் முன்

மில்லர் கண்ட குர் ஆனின் அதிசயங்கள்

ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்!



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருநேரத்தை, ஒருநாளை,ஒருமாதத்தை, ஒருஆண்டை சிறப்பித்து சொல்வதாக இருந்தாலும் அல்லது மேற்கண்ட விசயங்களை கெட்டவை என்று கருதுவதாக இருந்தாலும் அவை அல்லாஹ்வாலோ,அல்லது ரசூல்[ஸல்] அவர்களாலோ சொல்லப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு சொல்லப்படாத எதுவும் மார்க்கமாகாது என்பதுதான் அடிப்படையான விஷயமாகும்.

12 மாதங்களில் இஸ்லாம் நான்கு மாதங்களை புணிதமாதம் என்று அடையாளம் காட்டி இந்த மாதங்களில் போர்செய்வது கூடாது என்று தடுத்திருக்கிறது. அவை முறையே துல்கஃதா,துல்ஹஜ்,முஹர்ரம்,ரஜப் ஆகியவையாகும். அதுபோல பீடை மாதங்கள் என்று ஏதாவது ஒருமாதம் மார்க்கத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளதா? என்றால் இல்லை. ஆனால் இன்று முஸ்லிம் சமுதாயம் ஸஃபர் மாதத்தை பீடைமாதம் எனக்கருதி அம்மாதத்தில் சுபகாரியங்கள் எதையும் செய்வதில்லை.

இந்துக்கள் ஆடிமாததை பீடைமாதமாக கருதி, அம்மாதத்தில் சுபகாரியங்களை மேற்கொள்ளமாட்டார்கள். கடைகளில் 'ஆடித்தள்ளுபடி' என்று இருப்புகளை தள்ளிவிடுவார்கள். அதுபோல முஸ்லிம்களும் ஸஃபர் மாதத்தை தள்ளுபடி மாதமாக்கிவிட்டனர். ஒரு மாதத்தை பீடை என நம்புவது முஸ்லிம்களின் வழிமுறையல்ல. மாறாக மக்கத்து காஃபிர்களின் வழிமுறையாகும்.

அறியாமைக்காலத்தில் மக்கள் ஷவ்வால் மாதத்தை பீடைமாதமாக கருதிவந்தனர். நபி[ஸல்]அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் செய்தனர்.ஷவ்வால் மாதத்தில்தான் நபியவர்களுடன் இல்லறவாழ்வை தொடங்கினேன். என்னைவிட நபியவர்களுக்கு விருப்பமான மனைவி யாரும் உண்டா? என்று அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் அறிவிக்கும் செய்தி முஸ்லீம்,அபூதாவூத் ஆகிய கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளது.

பீடைமாதம் என்று கருதப்பட்ட மாதத்தில், அதை உடைத்து எரியும்வன்னம் நபியவர்கள் ஆயிஷா[ரலி]அவர்களை திருமணம் செய்து, சிறப்புற வாழ்ந்துகாட்டி,அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் மடியிலேயே உயிர்துறந்தார்களே! இதிலிருந்து விளங்கவில்லையா? பீடைஎன்று எதுவுமில்லை என்று.

மேலும், ஒருநேரத்தில் உலகத்திலுள்ள அனைவருக்கும் நல்லது மட்டும் நடக்கும் நேரம் ஏதாவது உண்டா? ஒருநேரத்தில் உலகத்திலுள்ள அனைவருக்கும் தீயது மட்டும் நடக்கும் நேரம் ஏதாவது உண்டா? உதாரணத்திற்கு பத்துமணிக்கு எனக்கு குழந்தை பிறக்கிறது. இந்தநேரம் எனக்கு மகிழ்ச்சியான நேரம். என்வீட்டிற்கு நாலுவீடுதள்ளி ஒருவரின் குழந்தை அதேநேரத்தில் இறந்துவிடுகிறது. இது அவருக்கு சோகமான நேரம். ஒருநிமிடத்தில் உலகத்தில் அனைவருக்கும் ஒரேமாதிரி சம்பவங்கள் நிகழாதபோது, ஒருமாதத்தை பீடைஎன ஒதுக்குவது பகுத்தறிவிற்கு ஏற்றதா?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். [புகாரி]

மேலும் இம்மாதத்தில் பீடையை போக்குகிறேன் என்ற பெயரில் மாவிலையில் எழுதிக்குடிப்பது, கடலில் குளிப்பது, புல்வெளியை மிதிப்பது இப்படியான மூடபழக்கங்களும் அரங்கேறுகிறது. இது நிச்சயமாக மார்க்கம் காட்டித்தராத வழியாகும். மேலும் ஒடுக்கத்துப்புதன் என்ற ஒரு வார்த்தையைக்கூட அல்-குர்'ஆனிலோ, ஹதீஸிலோ காணஇயலாது.

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அலி (ரலி) ஆதாரம் : அபூதாவூத், நஸாயீ)

எனவே, ஒருகாலத்தில் முஸ்லிம்களுக்கும்-மார்க்கத்திற்கும் மத்தியில் இருந்த இடைவெளியை பயன்படுத்தி வயிறையும்,பாக்கெட்டையும் ஒருசேர நிரப்ப எண்ணியவர்களின் கண்டுபிடிப்பே ஸஃபர் பீடையும், ஒடுக்கத்துபுதனும் என்பதை விளங்கி இந்த மூடநம்பிக்கையிலிருந்து முஸ்லிம்கள் விலகவேண்டும். மேலும், ஜாஹிலியாக்களின் அறியாமையை நபி[ஸல்] அவர்கள் எப்படி செயல்வடிவில் உடைத்து எரிந்தார்களோ அதுபோல, தவ்ஹீத்வாதிகள் இந்த ஸஃபர்மூட நம்பிக்கையை உடைத்தெறிய, ஸஃபர்மாதத்தில் தங்கள் குடும்ப திருமண மற்றும் சுபகாரியங்களை நடத்த முன்வரவேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் மார்க்கத்தில் உள்ளதை மட்டும் நம்பக்கூடிய,அதனடிப்படையில் அமல் செய்யக்கூடியவர்களாக ஆக்கியருள்வானாக!


ஜிமெயில் - உங்களுக்கு வரும் இமெயிலை அரசும் படிக்கும்

ஜிமெயில் - உங்களுக்கு வரும் இமெயிலை அரசும் படிக்கும்: பாதுகாப்பு காரணங்கள் கருதி இனி இந்தியர்களின் ஜிமெயில் மின்னிதழை மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் படிக்க வாய்ப்பு உண்டு. இதற்கான வசதியை இந்திய ஜிமெயில் நிர்வாகத்திடம் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத அச்சுறுத்தலின் காரணமாக சந்தேகப்படும் நபர்களின் மின்னிதழை அணுகும் வசதியை மத்திய அரசு ப்ளாக் பெர்ரி, நோகியா உள்ளிட்ட சர்வதேச தொலை தொடர்பு நிறுவனங்களோடு பெற்றுள்ளது. தற்போது பிரபலமாக இருக்கும் ஜிமெயில் நிர்வாகத்திடமும் இந்த வசதியை கோரியுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறான வசதியை அரசாங்கம் பெறும் பட்சத்தில், இந்திய கணிணிகளோடு செயல்படும் அனைத்து ஜிமெயில் மின்னிதழ்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு வர வாய்ப்புண்டு. இது குறித்து பேசிய உள் துறை செயலர் ஜி கே பிள்ளை, சந்தேகப்படும் நபர்களின் மின்னிதழ்களை மட்டும் தான் அரசு அனுகும், எனினும் தனி நபரின் தனிமை விஷயத்தில் அரசு கவனமாக இருக்கும் என்றார்.
2008 ஆண்டிடின் தொழில்நுட்ப சட்ட திருத்த மசோதா, இவ்வாறான மின்னிதழ்களை படிக்கும் உரிமையை அரசுக்கு வழங்குகிறது என்பது குறீப்பிடத்தகக்கது


Source: http://inneram.com/2010122312669/2010-12-23-09-41-04

பிரிட்டனில் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


லண்டன்,ஜன.5:கடந்த பத்தாண்டுகளில் பிரிட்டனில் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


ஃபைத் மேட்டர்ஸ் நடத்திய ஆய்வில்தான் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை நினைத்தைவிட ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகம் என தெரியவந்துள்ளது.

இஸ்லாத்தை பற்றிய தவறான பிரச்சாரம் பிரிட்டனில் பரப்பப்பட்டு வந்தாலும் ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்கின்றனர் என ஃபைத் மேட்டர்ஸ் நடத்திய சுதந்திர ஆய்வு தெளிவுப்படுத்துகிறது.

பழைய புள்ளிவிபரங்களின் படி 14 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான நபர்கள் இஸ்லாத்தை தழுவுவதாக கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பில் மதமாறுபவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடாதது சிக்கலை ஏற்படுத்துகிறது.

ஒரு லட்சம் பேராவது இதுவரை இஸ்லாத்தை ஏற்றிருக்கலாம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு பிரிட்டனின் தலைநகரில் மட்டும் 1400 பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.

பிரிட்டனில் தேசிய அளவில் வருடந்தோறும் 5200 பேர் இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். ஜெர்மனியிலும், பிரான்சிலும் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 4000 ஆகும்.

கடந்த 2001 ஆம் ஆண்டில் பிரிட்டனில் 60,699 பேர் இஸ்லாத்தை தழுவியதாக கணக்கிடப்பட்டுள்ளது.
source:times of India

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்