அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, September 20, 2013

ஏன் வேண்டும் இந்த மாற்றம்?


அஸ்ஸலாமு அலைக்கும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே!

இப்போதைய நமது தலைமுறையில் பெரும்பாலானவர்கள்  இந்த மார்கத்தை விட்டு பாராமுகமாக இருப்பதும் பெயருக்கு முஸ்லீம்களாக வாழ்வதும் மார்க்க கல்வியை விட உலகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், இஸ்லாமிய வாழ்வியலுக்கு நேர் விரோதமாக இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறை இருப்பதும் எனக்கு நெருடலை ஏற்படுத்தியது இதற்கு என்னக் காரணம் என்று ஆராயும் பொழுது, இஸ்லாத்தின் ஆணிவேரான, இம்மை மறுமை என்று ஈருலகத்திற்கும் தேவையான எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை தன்னுள்ளே வைத்துள்ள திரு மறை குர் ஆனை ஒரு மந்திரமாக கற்று கொண்டதோடு நம்மில் பெரும்பான்மையினர் நிறுத்திக் கொண்டோம்,

அதற்கு காரணம் நாம் இந்த அற்புத வேதத்தை கற்றுக் கொடுக்கும் முறை! அதை கற்று கொள்ளும் முறை என்று இரண்டுமே பெரும்பாலும் ஒரு சம்பிரதாயதிர்காகவே நடைப் பெருவதால்தான் என்பதாக உணருகின்றேன்,

எனவே என் மனதில் தோன்றிய சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசை படுகின்றேன் இதில் தவறு இருந்தால் மன்னிக்கவும், இந்த கட்டுரையில் நீங்கள் எதை தவறாக உணருகின்றீர்களோ அதை தெரிய படுத்துங்கள் இன்ஷா அல்லாஹ் தவறாக இருக்கும் பட்சத்தில் திருத்திக் கொள்கின்றேன்  

மேன்மை மிகு கண்ணியமிக்க  முஸ்லிம்களே நான் இங்கே குறிப்பிட விரும்புவது ஈருலக வெற்றியின் இரகசியங்களை தன்னுள்ளே வைத்துள்ள அற்புத சத்திய வேதமான அருள்மறை திருக்குர் ஆணை நாம் கையாளும் விதம் குறித்து,

நமது மதரசா கல்வி முறை எப்படி உள்ளது! அது எப்படி மாற வேண்டும் 
 ஏன்  மாற வேண்டும் என்பது போன்ற விசயங்களை நாம் இங்கே படிக்க இருக்கின்றோம் 

அல்லாஹ் திருமறை குர் ஆனிலே கூறுகின்றான் 


2:53   وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
2:53இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).
மேலே உள்ள திருக்குர் ஆன் வசனத்தை புரிந்து நன்மை தீமைகளை பிரிந்து அறிந்து அதன் அடிப்படையில் தீமைகளை விட்டு விலகி நன்மையின் பக்கம் நமது பயணம் இருக்கின்றதா? 
அப்படி இருந்து இருக்குமேயானால் இந்த சமூகம் நன்மைகளின் பூங்காவாக,ஒழுக்க மாண்புகளின் கோட்டையாக இருந்து இருக்கும், இறை அச்சம் நிறைந்த மனித அரண்களின் கூடாரமாக இருந்து இருக்கும்!
இப்படி தான் இருந்தது நபி முகம்மது (ஸல்) அவர்கள் கட்டமைத்த சகாபாக்கள் வாழ்ந்த சமூகம்,  திருக்குர் ஆனுக்கும் தங்களது வாழ்க்கை முறைக்கும் எந்த வித்யாசமும் இருந்தது இல்லை, திருக்குர்  ஆனாகவே வாழ்ந்து காட்டினார்கள், உலக மக்களுக்கு ஒரு முன்மாதிரி சமூகமாக வாழ்ந்து காட்டினார்கள்,
இந்த அற்புதமான வாழ்க்கை முறை நம்மிடையே இருக்கின்றதா ?  இல்லை என்றால் அது இல்லாமல் போனதற்கு காரணம் என்ன?
இந்த அற்புத திருமறையின் ஆழமான அர்த்தங்களை நாம் விளங்காமல் இருப்பதே! இதை நம் அனைவரும் தெரிந்து கொள்வதற்கு நாம் எடுத்த நடவடிக்கைதான் என்ன?
நாம் இந்த மார்க்க கல்வியை கற்று தருவதில் நாம் என்ன நடவடிக்கை எடுத்து இருக்கின்றோம் என்பதை பாப்போம்,
 தினமும் இந்த மார்க்க கல்வியை நமது வீட்டு பிள்ளைகளுக்கு கற்று கொடுப்பதற்கு மதரசாவிற்கு அனுப்பி வைக்கின்றோம் அங்கே அந்த குழந்தைகள் கற்று கொள்ளும் முறையை பற்றிதான் இப்போது அலச போகின்றோம், இந்த கல்வி முறை எந்த மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும், ஏன் இந்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதை என்பதை பற்றி இப்பொது விரிவாக பாப்போம்  
தினமும் நமது மதரசாக்களில் குழந்தைகளுக்கு முதலில் அலீப் ஜூசு அதாவது அரபு எழுத்துக்களை படிக்க கற்று கொடுப்பார்கள் பிறகு அல்ஹம்து ஜூசு இதில் திருக்குர் ஆணின் சிறிய சூராக்களின் தொகுப்பு பிறகு திருக்குர் ஆன் பிறகு சுன்னத் சுபியான் இவை இத்தனையும் அரபு மூலத்தில் வாசிப்பதற்கு இந்த மதரசாக்களில் கற்று தரப்படும் இதோடு சேர்த்து இஸ்லாத்தில் கடமைகள் எத்தனை உளுவின் பர்ளுகள் எத்தனை போன்ற சில அடிப்படை விஷயங்கள் கற்று தரப்படும் இவைதான் அன்றாடம் ஒவ்வொரு ஊரிலும் காலை நேர மதரசாக்களில் கற்றுத்தரப்படும் மார்க்க கல்வி ஆகும்.
இதை கற்று கொடுப்பதும், கற்றுக் கொள்வதும் வெறும் சம்ப்ரதாயதிற்குதான் நடை பெறுகின்றது எனபதை படிக்கும் பொது மனதுக்கு வருத்தம் ஏற்படுத்தினாலும் அதுதான் நிதர்சனம் 
சரி இதை குறை கூறுவது நமது நோக்கம் இல்லை, ஆனால் இந்த கல்வி முறையால் என்ன மாற்றத்தை தாக்கத்தை இந்த சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை பற்றிதான்
திருக்குர் ஆனை அரபு மூலத்தில் வாசிக்க கற்றுகொள்வது நல்ல விஷயம் தான் ஆனால் அது மட்டும் போதுமா, இந்த அற்புத மறையின் அர்த்தங்களை விரிவாக தெரிந்து  கொள்ளாத வரை, அதை நமது உள்ளத்தில் சரியாக பதிந்து வைத்து கொள்ளாத வரையில், அதை நமது வாழ்கையில் முழுமையாக கொண்டு வராத வரையில், இந்த சமூகத்தில் எந்த அற்புத மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது,
அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான் 
3:110   كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَّهُم ۚ مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ
3:110மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; என்று இறைவன் கூறுகின்றான், திருமறையின் அர்த்தத்தை விளங்கி கொள்ளாமல் நம்மால் எப்படி சிறந்த சமூகமாக மாற முடியும் எனவே இந்த அற்புத மறையின் விரிவான அர்த்தங்களை நமது வீட்டு குழந்தைகளின் உள்ளத்தில் எப்படி போய் சேர்ப்பது,  இந்த கல்வி முறை எப்படி மாற வேண்டும் என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்தக் காட்டுரையில் பாப்போம் 

Friday, September 13, 2013

ரியாளுஸ்ஸாலிஹீன் ஆடியோ (mp3)


எழுதியவர்/பதிந்தவர்/உரை 
riyadussaliheen image2
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு,
ஸாஜிதா பதிப்பகத்தார் வெளியிட்ட “ரியாளுஸ்ஸாலிஹீன்” புத்தகம், வாசகர்கள் எளிமையாகக் கேட்டு பயன் பெறும் வண்ணம் MP3 ஆடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்ய கீழுள்ளவைகளை அழுத்தவும்.
நபிகளாரின் பொன்மொழிகளை ஒலி வடிவில் கேட்பதற்க்கு முனையும் தங்களுக்கு இதனை முழுவதுமாக கேட்டு, நினைவில் நிறுத்தி வாழ்வில் கடைபிடிக்கவும், தம்மோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஊரிலுள்ளவர்களுக்கும், இன்னும் உலகெங்கும் வாழும் தமிழ் கூறும்மக்களுக்கும் இதனை CD க்கள் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், இன்னும் பல வழிகளிலும் இதனை கிடைக்கச் செய்து சதக்கதுல் ஜாரிய்யாவை பெற்றுக்கொள்ளவும், இறுதியில், மறுமை வாழ்க்கையில் வெற்றி பெறவும், எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் உதவட்டுமாக.
புத்தகங்களை படிக்க, நேரமின்மையையும், சலிப்பையும் காரணம் காட்டி நபிகளாரின் பொன்னான மொழிகள் நம் உள்ளத்தை அடையாமல் இருப்பதை தவிர்க்க இவ்வகை ஒலி வடிவங்கள் உதவக்கூடும். இதனை வாகனங்களில் பயணிக்கும்போதும், கடைகளில் வேலைப்பார்க்கும்போதும், பெண்கள் வீட்டு வேலைகளைப் பார்க்கும்போதும், சமையலறையில் இருக்கும்போதுமாக, இப்படி பல நேரங்களிலும், வகைகளிலும் கேட்கலாம். மேலும் தங்கள் அலைபேசியில் சேமித்து வைத்து நண்பர்களுக்கு ப்ளூடூத் (Bluetooth) மூலமும் அனுப்பலாம்.
ரியாளுஸ்ஸாலிஹீன்” என்ற இந்த புத்தகம், அபூ ஸக்கரியா யஹ்யா பின் ஷரஃப் அன் நவவி (ரஹ்) அவர்களின் தொகுப்பு. மிக பிரபலமான-அதாரப்பூர்வ ஹதீஸ் தொகுப்புகளாகக் கருதப்படும், புகாரி, முஸ்லிம், திர்மிதி.. போன்ற கிரந்தங்களிலிருந்து மக்களுக்கு மிகவும் பயன்படும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டவையே இப்புத்தகம்.

Source: tamilaudioislam.com
Image courtesy: satyamargam.com
நன்றி:iislamkalvi.com

Friday, August 30, 2013

ஜும்ஆத் தொழுகை (ஸஹீஹ் புகாரி ஹதீஸ்)

877. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்"
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :11
878. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஆரம்ப காலத்திலேயே ஹிஜ்ரத் செய்த நபித்தோழர் ஒருவர் வந்தார். அவரை உமர்(ரலி) அழைத்து 'ஏனிந்தத் தாமதம்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'நான் அலுவலில் ஈடுபட்டு விட்டேன். பாங்கு சப்தத்தைக் கேட்டு(க் குளிக்காமல்) உளூ மட்டும் செய்துவிட்டு வேகமாக வருகிறேன்' என்று கூறினார். அதற்கு உமர்(ரலி) 'உளூ மட்டும்தான் செய்தீரா? நபி(ஸல்) அவர்கள் குளிக்குமாறு கட்டளையிட்டுள்ளனர் என்பது உமக்குத் தெரியுமே!" என்று கேட்டார்கள்.
Volume :1 Book :11
879. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்."
என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :11
880. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
"ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ ஸயீத்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அம்ர் இப்னு ஸுலைம் 'குளிப்பது அவசியம்' என்பதை நான் உறுதியாக அறிவேன். ஆனால் பல் குலக்குவதும் நறுமணம் பூசுவதும் கடமையா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஹதீஸில் அப்படித்தான் உள்ளது' என்று குறிப்பிட்டார்கள்.
Volume :1 Book :11
881. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :11
882. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்தும்போது ஒருவர் வந்தார். தொழுகைக்கு ஏன் தாமதமாக வருகிறீர்?' என்று உமர்(ரலி) கேட்டார்கள். அதற்கு அவர் 'நான் பாங்கைக் கேட்டதும் உளூச் செய்வதற்குத் தவிர (குளிப்பதற்கு) நேரமில்லை' என்றார். அதற்கு, 'உங்களில் ஒருவர்ஜும்ஆவுக்குச் செல்வதாயிருந்தால் குளித்துக் கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீர் கேள்விப் படவில்லையா?' என்று உமர்(ரலி) கேட்டார்கள்.
Volume :1 Book :11

Friday, July 19, 2013

நோன்பும் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் (தொடர்-1) (தொடர்-2) எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி மன்சூர் மதனீ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பிற்கினிய இஸ்லாம் கல்வி இணையதள வாசகர்களுக்கு,
புனித ரமழான் மாதத்தில் நோன்பு சம்மந்தமான மக்களுக்கு ஏற்பட கூடிய நவீன பிரச்சனைகள் நோன்போடு சம்மந்தப்பட்ட சந்தேகங்களுக்கான விளக்கத்தினை எமது இணையதளத்திறக்காக சிறப்பு நிகழ்சியாக பதிவு செய்து வெளியிடப்படுகின்றது.
சவூதி அரேபியாவின் கிழக்குமாகாணத்தின் தம்மாம் நகரத்தில் உள்ள இஸ்லாமிய கலச்சார நிலையத்தின் அழைப்பாளர் மரியாதைகுரிய மவ்லவி ஹாபிழ். முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.
இந்த முதல் தொடரில் நோன்பாளி நோன்புடன்
  1. பற்பசையை பயன்படுத்தி பல்துலக்கலாமா?
  2. ஊசி மற்றும் குளுக்கோஸ் போடலாமா?
  3. பற்சிதைவு மற்றும் உதடு வெடிப்பின் காரணமாக இரத்தம் வெளியேறினால் நோன்பு பாதிக்குமா?
  4. இரத்த காயம் அல்லது உடல் வலிக்காக வாசனையுடன் கூடிய கீரிம் உபயோகிக்கலாமா?
  5. வாசனை திரவியங்கள் பயன் படுத்தலாமா?
  6. கண், மூக்கு மற்றும் காது-க்கு சொட்டு மருந்து பயன்படுத்தலாமா?
மேற்கண்ட கேள்விகளுக்கு குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் அதிகமான விளக்கங்களை தருகின்றார் ஆசிரியர் ஹாபிழ். முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள்.
இதன் தொடர்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை வெளியிடப்படும் …
ஓளிப்பதிவு: Islamkalvi Media Unit
படத்தொகுப்பு: தென்காசி S. A. ஸித்திக்
இந்த இரண்டாவது தொடரில் நோன்பாளி நோன்புடன் …
  1. மூக்கின் வழியாக சொட்டு மருந்து கொடுப்பது சம்மந்தமாக அறிஞர்களிடம் உள்ள கருத்துக்களும் அதற்கான விளக்கமும்.
  2. சுவாச கோளறு உள்ளவர்கள் நோன்பின் போது Inhalar பயன்படுத்தலாமா?
  3. வாய்யை சுத்தம் செய்வதற்க்கு Mouthwash பயன்படுத்தலாமா?
  4. பல்லை அகற்றுவது அல்லது பல்லின் தூவரத்தினை அடைப்பது கூடுமா?
  5. மருத்துவ பரிசோதனைக்காக (blood test) இரத்தம் எடுப்பது பற்றி விளக்கம்…
  6. குடல் மற்றும் வயிறு பிரச்சனை உள்ளவர்கள் Endoscopy என்ற மருத்துவ பரிசோதனையை செய்யலாமா?
  7. விமான பயணத்தின் போது நோன்பை திறப்பது மற்றும் வைப்பது எப்படி?
போன்ற சந்தேகங்களுக்கு மிக தெளிவான ஒரு விளக்கத்தை குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் தருகின்றார்கள். ஒரு முறை பார்க்கலாமே!
இத்துடன் இத்தொடர் நிறைவு பெறுகின்றது இன்ஷா நாளை முதல் நபிகளால் வாழ்வினிலே என்ற சிறப்பு தொடர் வெளியிடப்படும். காண தவறாதீர்கள்
ஓளிப்பதிவு: Islamkalvi Media Unit
படத்தொகுப்பு: தென்காசி S. A. ஸித்திக்

நன்றி:Islamkalvi.com

Thursday, July 18, 2013

நோன்பு

ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பில் இருந்து 
 
பாடம் : 1 ரமளான் மாதத்தின் சிறப்பு
1956. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 13
1957. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ரமளான் மாதம் நுழைந்துவிட்டால்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
பாடம் : 2 (முதல்)பிறையைப் பார்த்து ரமளான் நோன்பு நோற்பதும் (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுவதும் கடமையாகும். மாதத்தின் ஆரம்பத்திலோ அல்லது இறுதியிலோ (வானில்) மேகமூட்டம் தென்பட்டால் அம்மாதத்தின் எண்ணிக்கை முப்பது நாட்களாக முழுமையாக்கப்படும்.
1958. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறுகையில், "ரமளான் பிறையைக் காணாதவரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணாதவரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
1959 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறுகையில் தம்மிரு கைகளையும் (மூன்று தடவை) அடித்தவாறு, "மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறினார்கள். (மூன்றாவது தடவையில் தமது பெருவிரலை மடக்கிக் கொண்டார்கள்.) மேலும் "பிறை பார்த்து நோன்பு நோறுங்கள்; பிறை பார்த்தே நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை முப்பது (நாட்கள்) ஆகக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
Book : 13
1960. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், முப்பதாக (அந்த மாதத்தின் நாட்களை)க் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதம் குறித்துக் கூறுகையில், "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும்; மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறி (மூன்றாவது தடவையில் பெருவிரலை மடக்கி)னார்கள். மேலும், அதில், "(மேகமூட்டம் தென்பட்டால்,) அந்த மாதத்தைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்" என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது. "முப்பதாக" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
Book : 13
1961. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும். எனவே, பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1962. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும். எனவே, நீங்கள் பிறை பார்த்ததும் நோன்பு நோறுங்கள்; பிறை பார்த்ததும் நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1963. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிறை பார்த்ததும் நோன்பு நோறுங்கள். (மறு)பிறை பார்த்ததும் நோன்பை விடுங்கள். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1964. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளா(கவும் இருக்)கும். எனவே, பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டால் தவிர. அவ்வாறு உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
Book : 13
1965. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ரமளான் பற்றிக் கூறுகையில்) "மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறினார்கள். மூன்றாவது தடவையில் தமது பெருவிரலை மடக்கிக்கொண்டார்கள்.
Book : 13
1966. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1967. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ரமளான் பற்றிக் கூறுகையில்) "மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறி, பத்து + பத்து + ஒன்பது (=இருபத்தொன்பது) என்று (கைகளால் சைகை செய்து) கூறினார்கள்.
Book : 13
1968. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரு கைவிரல்களையும் இருமுறை அடித்து (கைதட்டி), மூன்றாவது முறை வலக் கை,அல்லது இடக் கையின் பெருவிரலை மடக்கியவாறு "மாதம் என்பது இவ்வளவு இவ்வளவு இவ்வளவு தான்" என்று சொன்னார்கள்.
Book : 13
1969. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் இதைக் கூறுகையில், இரு கைகைளையும் முன்று முறை கோத்துக் காட்டி, முன்றாவது தடவையில் பெருவிரலை மடித்துக்கொண்டார்கள்.
அறிவிப்பாளர் உக்பா பின் ஹுரைஸ் (ரஹ்) அவர்கள், "ஒரு மாதம் என்பது முப்பது நாட்களாகும் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறி, தம்மிரு கைகளையும் மூன்று முறை கோத்துக் காட்டியதாகவே நான் கருதுகிறேன்" என்று கூறினார்கள்.
Book : 13
1970. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "நாம் எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயம் (உம்மத்துன் உம்மிய்யா) ஆவோம்; எழுதுவதை நாம் அறியமாட்டோம்; (நட்சத்திரக்) கணிதத்தையும் நாம் அறியமாட்டோம். மாதம் என்பது (சில வேளைகளில்) இப்படியும் இப்படியும் இப்படியும் (இருபத்தொன்பது நாட்களாக) இருக்கும்" என்று (மூன்று தடவை) கூறி, மூன்றாவது தடவையில் பெருவிரலை மடக்கிக்கொண்டார்கள். மேலும், மாதம் என்பது (சில வேளைகளில்) இப்படியும் இப்படியும் இப்படியும் -அதாவது முப்பது நாட்களாகவும்- இருக்கும் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. அதில் இரண்டாவது மாதத்தைக் குறிப்பிடுகையில், "அதாவது முப்பது இரவுகள்" எனும் விளக்கக் குறிப்பு இடம்பெறவில்லை.
Book : 13
1971. சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் "இன்றைய இரவு (மாதத்தின்) பாதி இரவாகும் (இன்றிரவுடன் அரை மாதமாகிறது)" என்று கூறியதை இப்னு உமர் (ரலி) அவர்கள் செவியுற்றார்கள். உடனே அந்த மனிதரிடம் "இன்றைய இரவுதான் (மாதத்தின்) பாதியாகும் என உமக்கு எப்படித் தெரியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கை விரல்களால் இரண்டு முறை பத்து பத்து எனச் சைகை செய்து) "மாதம் என்பது இவ்வளவு இவ்வளவு இரவுகளாகும்" என்று கூறிவிட்டு, (மூன்றாவது தடவையில்) "இவ்வளவு" (என்று கூறியவாறு எல்லா விரல்களாலும் சைகை செய்து பெருவிரலை மட்டும் மடக்கிக்காட்டி மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகவும் இருக்கும்) என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
Book : 13
1972. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு நோறுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். (ரமளான் பிறை இருபத்தொன்பதாம் நாள் மாலை) உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் முப்பதாவது நாளும் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1973. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (ஷஅபான் மாதத்தின்) எண்ணிக்கையை (முப்பது நாட்களாக) முழுமையாக்கிக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1974. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; (மேக மூட்டத்தால்) உங்களுக்குத் திங்கள் தென்படவில்லையானால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1975. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறை குறித்துக் கூறுகையில், "நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (மாதத்தை) முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

Tuesday, May 28, 2013

பாவம் இன்பமானதா? எழுதியவர்/பதிந்தவர்/உரை முஹம்மத் நூஹ் அல்தாஃபி

வழங்குபவர்: முஹம்மத் நூஹ் அல்தாஃபி
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா
நாள்: மே 24, 2013
ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
நன்றி:islamkalvi.com

Friday, May 3, 2013

மறுமையின் பெரிய பத்து அடையாளங்கள்


மறுமையின் பெரிய பத்து அடையாளங்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
மறுமை நாள் ஏற்படுவதற்கு முன் ஒன்றன் பின் ஒன்றாக பத்து அடையாளங்கள் ஏற்படும். அவை ஏற்பட்டு விட்டால் அடுத்து உடனெ மறுமை வந்து விடும். அந்த பத்து அடையாளங்களைப் பற்றிய விரிவான அலசல். மிகவும் பயன் உள்ள கல்வி சார்ந்த வகுப்பு.
பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள். மறுமை நாளின் வெற்றிக்காக இப்போதே உழைப்போம்.
அன்புடன் – தமிழ் அழைப்புக்குழு, Bahrain


thanks:islamkalvi.com

Friday, April 5, 2013

மறைவான இணைவைப்பு


மஹ்மூத் பின் லபீத் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர்அவர்கள் சொன்னார்கள். ‘நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அச்சப்படுவது சிறிய இணைவைப்பைப் பற்றித்தான். சிறிய இணைவைப்பு என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டபோது, அவர்கள் ‘ரியா” என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்
அபுஸையீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தொிவிக்கவா? அது மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்.) ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்கriத்துக் கொள்கிறார்.” என்று கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா
அல்லாஹ்வே! இந்த ஹஜ்ஜை ரியா இல்லாத அல்லது பகட்டு இல்லாத ஹஜ்ஜாக ஆக்கியருள்வாளாக” என்று பிரார்த்தனை புரிந்தார்கள். ஆதாரம்: ஸஹீஹ் அல் ஜாமி
அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்:
‘ஒருமனிதர் தொழுவதற்கு எழுந்து நிற்கிறார். மக்கள் தன்னை நோக்குகின்றார்கள் என்று தெரிந்து கொண்டதால் தனது தொழுகையை அழகுபடுத்திக் கொள்கிறார். இதுவே மறைவான இணை வைப்பாகும்.” ஆதாரம்: இப்னு மாஜா, மிஷ்காத் அல் மஸாபீஹ்.
‘இந்த உலகில் புகழின் ஸ்தானத்தில் இருந்து பகட்டாக அதனைக் காட்டிக் கொண்ட எந்தவொரு மனிதனையும், இறுதித் தீர்ப்பு நாளில் தனது படைப்புகள் அனைத்தின் முன்பும் அம்பலப்படுத்தாமல் அல்லாஹ் விட மாட்டான்” நூல்: சஹீஹ் அத்தா;கீப் வத் தா;ஹீப்
மனிதர்களிடையே புகழடைவதற்காக நற்செயல்களைப் புரிவது, சுவனத்திற்குள் நுழைவதையும் தடை செய்யும். அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்…
‘அல்லாஹ்விற்காக என்ற நோக்கத்துடன் மட்டும் பெற வேண்டிய அறிவை இவ்வுலகில் அதனால் பயன் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ஒருவர், கற்பாரேயானால், அவர் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்.” நூல்: அபூதாவூத், இப்னு மாஜா
அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் சொல்கிறான் ‘பெருமை என்னுடைய மேலாடையாகவும், பெரும் வல்லமை என்னுடைய அங்கியாகவும் உள்ளது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன் போட்டியிடுகிறானோ, அவனை நான் நரக நெருப்பில் வீசுவேன்” நூல்கள்: அபுதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்
இந்த வகையான ரியாவைப் பற்றி அண்ணல் நபி அவர்கள் குறிப்பிடும் போது, ‘மனிதர்களே, மறைவான இணைவைப்பு குறித்து எச்சரிக்கையாக இருங்கள்” என்று குறிப்பிட்டார்கள். மக்கள், நாயகம் அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! மறைவான இணைவைப்பு என்றால் என்ன?” என்று வினவினார்கள். அண்ணல் நபி அவர்கள் ‘ஒருமனிதர் தொழுகைக்காக எழுந்து நிற்கிறார். மக்கள் அவரை உற்று நோக்குவதைக் கண்டவுடன் தனது தொழுகையை அவர் அலங்கரித்துக் கொள்கிறார். இது தான் மறைவான இணைவைப்பு” என்று நபி விளக்கம் அளித்தார்கள். ஆதாரம்: இப்னு குஸைமா மற்றும் சுனன் இப்னு மாஜா
அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஒரு நாள் எங்கள் மத்தியில் இறைவனின் தூதர் அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, அவர்கள் ‘மறைவான இணைவைப்பு குறித்து அச்சம் கொள்ளுங்கள். ஏனெனில் அது எறும்பு ஊர்ந்து செல்வதை விட கண்ணுக்கு புலப்படாத வகையில் அமைந்துள்ளது” என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (எழுந்து) ‘அல்லாஹ்வின் தூதரே, எறும்பு ஊர்ந்து செல்வதை விட மறைவாக இருக்கும் அதனை நாங்கள் எப்படி தவிர்த்துக் கொள்ள முடியும்?” என்று வினவினார்கள். அப்போது அண்ணல் நபி அவர்கள்…
‘அல்லாஹ்வே! நாங்கள் அறியாது செய்யும் இணைவைப்பிலிருந்து உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்” என்று (பிரார்த்தனை செய் என்று) சொன்னார்கள். நூல்: அஹ்மத்
நன்றி :http://www.readislam.net

Friday, March 15, 2013

நல்லவர்களுக்கு ஏற்படும் சோதனை



Post image for நல்லவர்களுக்கு ஏற்படும் சோதனை
وَمِنْ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ
இன்னும் மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் – அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் – இதுதான் தெளிவான நஷ்டமாகும். (அல்குர்ஆன் 22:11)
மேற்கூறிய அல்லாஹ்வின் வசனத்திலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை யாதெனில், அல்லாஹ் இந்த உலக வாழ்கையைச் சோதனைக் களமாக ஆக்கியிருக்கின்றான். இந்த உலகத்தில் வாழும் மக்களை நல்லவர்கள், கெட்டவர்கள் எனத் தரம் பிரித்துப் பார்க்க அனைவரையும் தன் சோதனைக்கு உட்படுத்துகின்றான். இச்சோதனைகளில், கடைசிவரை அவன் கட்டளைக்கு மாறு செய்யாமல் யார் பொறுமை கொள்கிறார்களோ அவர்களுக்கு நல்லடியார்கள் என சான்று பகர்ந்து மறுமையில் சொர்க்கத்தில் நுழையச்செய்வான்.
மனிதர்களில் பலர் இறை வணக்கத்தை சரியான முறையில் நிறைவேற்றுபவர்களாகவும், நல் அமல்கள் புரிபவர்களாகவும், தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களாகவும் இருக்கலாம். இது போன்ற சூழலில் தமக்கு ஒரு இடர் வந்தால் அதைத் தாங்கிக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மீது அதிருப்தி காட்டுவது போல, தான் செய்து கொண்டிருக்கும் நல்ல செயல்களிலிருந்து பின்வாங்கி விடுகிறார்கள். இவர்கள் மனதில் ஷைத்தான் மிக எளிதில் ஊடுருவி மறுமையில் அவரை நரகத்தில் தள்ளிவிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறான்.
அல்லாஹ் சிலர்களுக்கு மரணத்தை விதித்துச் சோதிக்கின்றான். சிலருக்கு செல்வங்களை பெருக்கியும் சிலருக்குச் செல்வங்களைக் குறைத்தும், சிலருக்கு நோயைக் கொண்டும், சிலருக்கு தாம் எதிர்பார்த்த விளைவுக்கு மாற்றமான முடிவைக் கொண்டும், சிலருக்கு உடலில் குறைபாடுகளுடனும் படைத்தும் பலவாறு சோதிக்கின்றான்.
சோதனைகள் எல்லோருக்கும் பொதுவானவையே
ஆதம்(அலை) முதல் முஹம்மது(ஸல்) வரை நபிமார்களும் இன்னும் இறைநேசர்களும் அல்லாஹ்வின் சோதனைக்கு ஆளானவர்களே. அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு நபிமார்களிகன் வரலாறுகளைக் கூறுகின்றான். அதில் எல்லா நபிமார்களும் சோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது. தூதுத்துவத்தைச் சொல்ல வந்த நபிமார்களை, அல்லாஹ் சொல்லெண்ணாத் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் இடர்படுத்திச் சோதித்தான். எனினும் அவர்கள் அல்லாஹ்வின் மீது திடமான நம்பிக்கையை வைத்திருந்தனர். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தூதுத்துவப் பணியை செம்மையென நிறைவேற்றினார்கள்.
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمْ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்) (அல்குர்ஆன் 2:214)
செல்வமும் சோதனையே
إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَاللَّهُ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ
உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். ஆனால் அல்லாஹ்விடமே மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (அல்குர்ஆன் 64:15)
இந்த உலகத்தில் மனிதன் மிகவும் விரும்பக் கூடியதாக செல்வமும், குழந்தைகளும் இருக்கின்றன. அல்லாஹ் இவ்விரண்டையும் மனிதனுக்கு சோதனை என்று அறிவிக்கின்றான். அல்லாஹ் ஒருவருக்கு அளவுக்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்துள்ளான் எனில் அவர் அதைக்கொண்டு சோதிக்கப்படுகிறார் என்பதே உண்மை.
கடன் கேட்டு வருபவனுக்கு கடன் தர வலியுருத்துகிறது இஸ்லாம். இன்னும் இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாக ஜகாத்தை சரியாக நிறைவேற்றச் சொல்கிறது இஸ்லாம். நடைமுறையில் பலர் அல்லாஹ் கொடுத்துள்ள செல்வங்களையெல்லாம் தன் சொந்த முயற்சியிலும் தன் அறிவு மற்றும் உழைப்பாலும் பெற்றவை என எண்ணிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் வட்டித் தொழிலில் மூழ்கிவிடுகிறார்கள். அல்லாஹ் இவர்களுக்கு அதிகமான பொருட்செல்வத்தைக் கொடுத்து சோதிக்கவில்லையெனில் இது போன்ற தவறுகள் செய்ய வாய்ப்புகள் இல்லையென்று உணர்ந்து கொள்ளுங்கள்.
فَإِذَا مَسَّ الْإِنْسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான். பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால், அவன் “இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே – ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 39:49)
குழந்தைகளும் சோதனையே
لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ. أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான். தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான் மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான். அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் ஆக்குகிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:49-50)
ஆகவே இறைவன் நமக்கு கொடுத்த குழந்தைச் செல்வங்களின் மகத்துவத்தை எண்ணி சந்தோசப்படவேண்டும். அவ்வாறல்லாமல், அதனை பாரமாகவோ அல்லது பெண்குழந்தைகள் கிடைத்ததை துக்கமாகவோ கருதக்கூடாது.
வியாபாரத்திலும் சோதனை
اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ
அல்லாஹ் தான் நாடியவருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான் (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான். எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் – இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிடாமல் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 13:26)
இறை வழியில் அதிக நாட்டம் கொண்ட மக்களாக இருப்பினும் அவன் நாடினால் வியாபாரத்திலும் தன் செல்வங்களிலும் சற்று சரிவை ஏற்படுத்தி அல்லாஹ் சோதனையைத் தருவான். நல்லடியார்கள் இதை அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் மேல் மனப்பூர்வமான நம்பிக்கைக் கொண்டு அவனிடமே உதவியையும் நாடவேண்டும்.
மரணத்தைக் கொண்டு சோதனை
அல்லாஹ் கூறுகிறான். உலகில் என் அடியானின் நேசத்துக்குரிய ஒருவரை நான் கைப்பற்றி, அதன் மீது என் அடியான் பொறுமை கொண்டு நற்கூலியை ஆதரவு வைத்தால், அவனுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறெதுவும் இல்லை, என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
குழந்தைகள் பிறந்து மகிழ்ச்சியில் இருக்கும் பெற்றோர்களிடத்திலிருந்து குழந்தைகளை இறக்கச் செய்து சோதிக்கின்றான். சிலருக்கு குழந்தைகளை உயிரோடு விட்டுவிட்டு தாயின் உயிரை எடுத்துக்கொள்கிறான். இதன்மூலம் குழந்தைகளை அனாதையாக விட்டுவிடுகிறானா அல்லது மனைவி இழந்த துக்கத்தில் தன் நேரான வாழ்க்கையை மாற்றிக்கொண்டுவிடுகிறானா அல்லது குழந்தைகளை கவனிப்பாரற்று விட்டுவிடுகிறானா என்று கணவனை சோதிக்கின்றான்.
சிலர் தான் விரும்பக்கூடிய ஒருவரின் உயிரை அல்லாஹ் கைப்பற்றிவிட்டால் அவனுக்கு ஏற்பட்ட துக்கத்தில் அல்லாஹ்வையே மறந்துவிடுகிறனர். இதிலும் சில பெண்கள் ஓலமிட்டு அழுவதும் அல்லாஹ்வுடன் தர்க்கம் செய்வது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் போன்ற நிகழ்வுகளை காணமுடிகிறது. ஆனால் இவர்கள், அல்லாஹ் இதன் மூலம் தங்களை சோதிக்கின்றான் என விளங்கிவிட்டால் இத்தவறுகளிலிருந்தும் நாம் நம்மை விடுவித்துக் கொள்ளலாம்.
قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلْ الْمُؤْمِنُونَ
“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும். முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர்ஆன் 9:51)
நோயைக் கொண்டு சோதனை
நான் நபி(ஸல்) அவர்களிடம் பிளேக் நோயைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், அது அல்லாஹ், தான் நாடுவோர் மீது இறக்கி வைக்கும் வேதனையாகும். (எனினும்) மூஃமின்களுக்கு அதனை அல்லாஹ் ரஹ்மத்தாக ஆக்கிவிட்டான். யார் பிளேக் ஏற்பட்ட ஊரில் அல்லாஹ் (விதியில்) எழுதியிருந்தாலே தவிர, அது தம்மைத் தொடாது என்று உறுதி பூண்டு நற்கூலியை ஆதரவு வைத்தவராக பொறுமை கொண்டு இருப்பாரோ அவருக்கு “ஷஹீது” என்னும் புனித தியாகியின் நற்கூலி கிடைக்கும் எனக் கூறினார்கள். ஆதாரம்: புகாரி அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்பொழுது அவர்கள் காய்ச்சலாக இருந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தாங்களுமா காய்ச்சலால் தாக்கப்படுகிறீர்கள்?” என்று வினவினேன். அதற்கவர்கள், “ஆம் உங்களில் இருவர் காய்ச்சலால் பீடிக்கப்படுமளவு நான் காய்ச்சலால் பீடிக்கப்படுகிறேனே” என்று கூறினார்கள். அதற்கு நான், அப்பொழுது தங்களுக்கு இரு நற்கூலிகள் உள்ளன எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள், “ஆம் அது போன்றே நோவினை வந்தடையும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் – அது முள் குத்துவதாலோ அல்லது அதற்கு மேலுள்ள பொருள்களினாலோ (இருப்பினும் சரியே) அல்லாஹ் அவை கொண்டு அவர் தீமைகளை அழித்தே தவிர வேறில்லை. மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல் அவர் பாவங்கள் அவரை விட்டு நீக்கப்படும்” என்று கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம் – அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி)
உடல் குறைபாடுகள் 
நபி(ஸல்) அவர்கள் கூறத் தாம் செவிமடுத்ததாக அனஸ்(ரலி) அறிவிக்கிறார்: நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான், என் அடியானின் இரு கண்களை (போக்கிவிடுவது) கொண்டு அவனை நான் சோதித்து, அவன் அதன் மீது பொறுமை கொள்வானேயானால், அவ்விரு கண்களுக்குப் பகரமாக நான் அவனுக்குச் சுவர்க்கத்தை வழங்குவேன். (புகாரி : அனஸ்(ரலி))
ஒரு முஸ்லிமை வந்தடையும் கஷ்டம், நோய், கவலை, நோவினை, துக்கம் – அவரது காலில் குத்திவிடம் முள்ளின் வேதனை வரை- அவை அனைத்தைக் கொண்டும் அவர் பிழைகளை அல்லாஹ் அழித்தே தவிர வேறில்லை. (புகாரி, முஸ்லிம் : அபூஸயீது, அபூஹுரைரா(ரலி))
அன்பு சகோதரர்களே! அல்லாஹ் இவ்வுலகில் மனிதனுக்குக் கொடுத்ததிருக்கும் செல்வங்கள், மனைவி, குழந்தைகள், ஆரோக்கியம், கல்வி, அதிகாரம், பதவி மற்றும் பொறுப்புக்கள், நோய், உடல் குறைபாடுகள், மற்றும் மரணம் எல்லாம் சோதனைகளே தவிர வேறில்லை. எனினும் அவன் நல்லடியார்களுக்கும் இதைக்கொண்டு அதிகமாக சோதிப்பான். சோதனைக் காலங்களை அல்லாஹ் மனிதர்களிடத்தில் மாறி மாறி வரச்செய்வது அவன் நியதிக்குட்பட்டதாகும். அவ்வாறு உங்களுக்குச் சோதனைகள் வந்து சேரும் போது பொறுமையைக் கடைபிடியுங்கள். அவன் விதித்த விதியின் மீது அதிருப்தியடையாமல் அவன் மீதே நம்பிக்கையை வையுங்கள். நாம் அனைவரும் அவன் பக்கமே மீள்பவர்களாக இருக்கிறோம்.
மாலிக் MSc, Jeddah

நன்றி :http://www.readislam.net

Friday, February 1, 2013

உம்ரா செய்யும் முறை

உம்ரா செய்வது ஹஜ்ஜை நிறைவேற்றுவது போல் கடமை இல்லாவிட்டாலும் சிறந்ததாகவும் அதிக நன்மை பெற்றுத்தரக் கூடிய காரியமாகவும் இருக்கிறது.

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்.(அல் குர்ஆன் 2:196)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். பாவம்கலவாத ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(புஹாரி 1773)


ரமளானில் உம்ரா செய்தல்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம் -இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள்; நான் அதை மறந்துவிட்டேன்! என அவரிடமிருந்து அறிவிக்கும் அதாஉ (ரஹ்) கூறுகிறார்- நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை? எனக் கேட்டார்கள். அதற்கவர், எங்களிடம் இருந்த, தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவருடைய மகனும் (எனது கணவரும் மகனும்) ஏறிச் சென்றுவிட்டனர்; மற்றொரு ஒட்டகத்தை விட்டுச்சென்றுள்ளனர்; அதன் மூலம் நாங்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறோம்! என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ரமளான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்! எனக் கூறினார்கள்; அல்லது அது போன்ற கருத்தைக் கூறினார்கள்.(புஹாரி 1782)


இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்

ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை இஹ்ராம் கட்டுவதற்காக நிர்ணயம் செய்துள்ளனர். அந்த இடங்களை அடைந்ததும் இஹ்ராம் கட்ட வேண்டும்.

மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாஎன்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ஜுஹ்ஃபாஎன்ற இடத்தையும், நஜ்துவாசிகளுக்கு கர்னுல் மனாஸில்என்ற இடத்தையும், யமன்வாசிகளுக்கு யலம்லம்(இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும்எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1524, 1526, 1529, 1530, 1845.

இந்தியாவிலிருந்து செல்பவர்கள் யலம்லம்வழியாகச் செல்வதால் அங்கே இஹ்ராம் கட்ட வேண்டும். ஆடை அணிவதற்குப் பெயர் இஹ்ராம் அல்ல என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். விமானம், கப்பல், போன்றவற்றில் புறப்படுபவர்கள் முன்பே ஆடையை அணிந்து விட்டாலும், அந்த இடத்தை அடையும் போது தல்பியா கூறி இஹ்ராம் கட்ட வேண்டும்.

துல்ஹுலைஃபா என்ற இடம் மக்காவுக்குத் தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஜுஹ்ஃபா என்ற இடம் மக்காவுக்கு வடக்கில் 187 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கர்ன் அல்மனாஸில் என்பது மக்காவுக்குக் கிழக்கில் உள்ள ஒரு மலையின் பெயராகும். மக்காவிலிருந்து 94 கிலோ மீட்டர் தொலைவில் அது அமைந்துள்ளது.


மக்கா நகரின் புனிதம்

மக்கா நகரை இறைவன் புனித பூமியாக ஆக்கியிருக்கிறான். அதன் புனிதம் கெடாத வகையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் புனிதத் தன்மை மக்கா நகருக்கு மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஹரம் எல்லை முழுவதற்கும் பொதுவானதாகும்.

அல்லாஹ் மக்கா நகரைப் புனித பூமியாக்கியிருக்கிறான். மனிதர்கள் அதைப் புனிதமானதாக ஆக்கவில்லை. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் அங்கே இரத்தத்தை ஓட்டுவதும், அங்குள்ள மரங்களை வெட்டுவதும் ஹலால் இல்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ,நூல்: புகாரி 104, 1832, 4295)


இஹ்ராம் பற்றிய விளக்கம்

"இஹ்ராம்' என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும்.

உம்ராவை செய்ய நாடினால் "லப்பைக்க உம்ரதன்" என்று கூற வேண்டும்.இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்'' என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.(அறிவிப்பவர்: அனஸ் (ரலி),நூல்: முஸ்லிம் 2194, 2195)


இஹ்ராமிற்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தடைகள்

1. தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது.

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. (அல்குர்ஆன் 2:196)

பேன், பொடுகு, புண் போன்ற தொந்தரவுகளால் தலைமுடியை மழிக்க நேர்ந்தால் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து "உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்'' என்றேன். "அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று "ஸாவு' பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக!''என்றார்கள்.(அறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (ரலி),நூல்: புகாரி 1814, 1815, 1816, 1818, 4159, 4190, 4191, 4517, 5703)

2. நகங்களை வெட்டக் கூடாது.

"உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்க எண்ணினால் தனது முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது'' என்பது நபிமொழி.(அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி),நூல்: முஸ்லிம் 3653, 3654)

3. நறுமணம் பூசக் கூடாது

யஃலா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) வரும்பொழுது எனக்குக் காட்டுங்கள் என்று உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் ஜிஇர்ரானா எனுமிடத்தில் இருந்தபோது ஒருவர் வந்து 'இறைத்தூதர் அவர்களே! நறுமணம் பூசிய நிலையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர் பற்றி என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மெளனமாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) வந்தது. உமர்(ரலி) என்னை சைகை செய்து அழைத்ததும் நான் சென்றேன். நபி(ஸல்) அவர்களுக்கு நிழல் தருவதற்காக ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. அத் துணிக்குள் நான் தலையை நுழைத்தேன். நபி(ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்த நிலை மாறியது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?' என்றார்கள். கேட்ட மனிதர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் 'உம் மீதுள்ள நறுமணத்தை மூன்று முறை கழுவுவீராக! தைக்கப்பட்ட உடைகளைக் களைவீராக! உம்முடைய ஹஜ்ஜில் செய்வது போன்றே உம்முடைய உம்ராவிலும் செய்வீராக!" என்று கூறினார்கள்.(புஹாரி 1536)

ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் "தல்பியா' கூறியவராக எழுப்பப் படுவார்'' என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851)

"அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப் படுவார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இஹ்ராம் அணிந்தவர் நறுமணம் பூசக் கூடாது என்பதை நாம் அறியலாம்.

4. திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது.

"இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது. பிறருக்குத் திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான்(ரலி),நூல்: முஸ்லிம் 2522, 2524)

5. உடலுறவு கொள்ளக் கூடாது.

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டா வாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 2:197)

6. ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்றவை கூடாது.

மேற்கண்ட வசனத்தில் உடலுறவு கூடாது என்பதைக் குறிக்க 'ரஃபத்' என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதில் ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்ற அனைத்தும் அடங்கும்.

உடலுறவு தான் கூடாது; மற்றவை கூடும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

7. வேட்டையாடுதல் கூடாது

நம்பிக்கை கொண்டோரே! "தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?' என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும், உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களைச் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:94)

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:95)

உங்களுக்கும், ஏனைய பயணி களுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப் பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங் கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப் படுவீர்கள். (அல்குர்ஆன்5:96)

இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட செயல்களில் இந்த ஏழு காரியங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை ஆகும்.


இஹ்ராமில் ஆண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவை


1. தலையை மறைக்கக் கூடாது

ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் "தல்பியா' கூறியவராக எழுப்பப்படுவார்'' என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839)

"மறுமையில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவதற்காக அவரது தலையை மறைக்க வேண்டாம்''என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதிலிருந்து இஹ்ராம் கட்டியவர் தலையை மறைக்கக் கூடாது என்று அறியலாம்.

2. தையல் ஆடை அணியக் கூடாது.

"இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப் பாகையையோ,தொப்பியையோ, கால் சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்'' என்று விடையளித்தார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 134, 366, 1542, 1842, 5794)

பெண்களுக்கு மட்டும் தடையானவை

"இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1838)

இவ்விரண்டும் பெண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவையாகும்.

இஹ்ராமுக்குப் பின்னால் தடுக்கப் பட்ட காரியங்களில் ஆண்களும் பெண்களும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக தாம்பத்யம் போன்ற காரியங்களில் ஈடுபட்டு ஹஜ், உம்ரா போன்ற வணக்கத்தைப் பாழாக்கி விடக் கூடாது.

தலைமுடி மற்றும் நகங்களைக் களைவது இஹ்ராமுக்குப் பின் தடுக்கப்பட்டு உள்ளதால் அவற்றை இஹ்ராமுக்கு முந்தியே முடித்து விட வேண்டும்.இஹ்ராமின் எல்லையை அடைந்ததும்,"லப்பைக்க உம்ரத்தன்'' என்று கூற வேண்டும்.

இந்த இடத்தில் சிலர், ''நான் அல்லாஹ்வுக்காக உம்ரா செய்கிறேன், இந்த உம்ராவை இலேசாக்கி வை''என்பது போன்ற வார்த்தைகளைக் கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.


தல்பியா கூறுதல்

அதன் பின்னர் மக்காவில் ஹரமை அடைகின்ற வரை தல்பியா சொல்ல வேண்டும்.

لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ

"லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(பொருள் : இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1549, 5915
திக்ருகள், துஆக்கள் ஆகியவற்றை உரத்த குரலில் கூறுவது திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.ஆனாலும், தல்பியாவை மட்டும் உரத்த குரலில் சொல்லுமாறு ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.

என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்என்று கட்டளையிட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸாயிப் பின் கல்லாத் (ரலி) ,நூல்கள்: ஹாகிம், பைஹகீ)

ஹரமை அடைந்த பின் தல்பியாவை நிறுத்தி விட்டு, தவாஃபுல் குதூம் என்ற உம்ராவுக்கான தவாஃப் செய்ய வேண்டும்.



தவாஃபுல் குதூம்

"குதூம்' என்றால் வருகை தருவது என்று பொருள். மக்காவுக்கு வருகை தந்தவுடன் செய்யப்படுவதால் இதற்கு "தவாஃப் அல்குதூம்' என்று கூறப்படுகிறது.

இந்த நாளில் தான் "தவாஃப் அல்குதூம்' செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும் கிடையாது. ஒருவர் இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போது இதைச் செய்ய வேண்டும்.

கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.

தவாஃபுக்காக ஹரமுக்குள் சென்றதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள அந்த மூலையிலிருந்து தவாஃபைத் துவக்க வேண்டும்.

ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜருல் அஸ்வதை அடைந்ததும் அதைத் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1611)

அந்தக் கல்லில் வாய் வைத்து முத்தமிடுவது என்பது இதற்கு அர்த்தமில்லை. கையால் அதைத் தொட்டு விட்டு கையை முத்தமிடுவது என்பதே இதன் அர்த்தமாகும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு, கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது முதல் அதை நான் விட்டதில்லை என அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: நாபிவு,நூல்கள்: புகாரி 1606)

கையால் அதைத் தொட முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கைத்தடி போன்றவற்றால் அதைத் தொட்டு அந்தக் கைத்தடியை முத்தமிட்டுக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும் போது தம்மிடமிருந்த கைத்தடியால் அதைத் தொட்டு கைத்தடியை முத்தமிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆமிர் பின் வாஸிலா (ரலி),நூல்: புகாரி 1608

கைத்தடி போன்றவற்றால் கூட அதைத் தொட முடியாத அளவுக்கு நெருக்கம் அதிகமாக இருந்தால் நமது கையால் அதைத் தொடுவது போல் சைகை செய்யலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293)

ஹஜருல் அஸ்வதை முத்தமிடும் போது அது கடவுள் தன்மை கொண்டது என்ற எண்ணம் வந்து விடக் கூடாது.

நீ எந்த நன்மையும் தீமையும் செய்ய முடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்த்திருக்கா விட்டால் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன் என்று உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும் போது கூறினார்கள்.(அறிவிப்பவர்: ஆபிஸ் பின் ரபீஆ (ரலி),நூல்: புகாரி 1597, 1605, 1610)

தவாபை அஸ்வத் கல் பதிக்கப்பட்டிருக்கும் மூளையிளிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.சுற்றின் ஆரம்பத்தையும் முடிவையும் அறிந்துக் கொள்வதற்காக பச்சை விளக்கு பொருத்தப்பட்டு இருக்கும்.கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.முதல் மூன்று சுற்றுக்களின் போது விரைந்து செல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தவாஃப் அல்குதூம்' செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1644, 1617)


ருக்னுல் யமானி

கஅபாவின் இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப் படுகின்றது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொடுவது நபி வழியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் "யமானி' எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 166, 1609)

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار

ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே "ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

(பொருள் : எங்கள் இரட்சகா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!)
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப்(ரலி),நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616)

ஹிஜ்ர் எனப்படும் பகுதியும் கஃபாவில் கட்டுப்பட்டுள்ளதால் அதையும் உள்ளடக்கும் வகையில் தவாஃப் செய்வது அவசியம்.

நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்தனர். ஆலயத்தின் உள்ளே தொழ விரும்பினால் இங்கே தொழு! ஏனெனில், இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டிய போது அதைச் சுருக்கி விட்டனர். மேலும், இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்தி விட்டனர்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),நூல்: திர்மிதீ 802,பார்க்க: புகாரி 126, 1583, 1584, 1585, 1586, 3368, 4484, 7243)



மகாமு இப்ராஹீமில் தொழுதல்

இவ்வாறு ஏழு சுற்றுக்கள் முடிந்த பின் மகாமு இப்ராஹீம் அமைந்திருக்கும் இடத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். இடம் கிடைக்காவிட்டால் மகாமு இப்ராஹீமுக்கு நேராக பின்னல் சென்று தொழலாம்.

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோது வலம்வந்துவிட்டு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களை மக்களிடமிருந்து மறைத்தவாறு ஒருவர் நின்றிருந்தார். அவரிடம் 'நபி(ஸல்) அவர்கள் கஅபாவினுள் சென்றார்களா?' என ஒருவர் கேட்டதற்கு அவர் இல்லை!" என பதிலளித்தார்.(புஹாரி 1600)

وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ۖ وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ


(இதையும் எண்ணிப் பாருங்கள்; "கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்;. இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்" (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் 'என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.(அல் குர்ஆன் 2:125)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்து விட்டு மகாமே இப்ராஹீம்என்ற இடத்தை அடைந்த போது மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்ற (2:125) வசனத்தை ஓதினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் குல்யாஅய்யுஹல் காஃபிரூன்சூராவையும், குல்ஹுவல்லாஹு அஹத்சூராவையும் ஓதினார்கள். பின்னர் திரும்பவும் ஹஜருல் அஸ்வதுக்குச் சென்று அதைத் தொட்(டு முத்தமி)ட்டார்கள். பிறகு ஸஃபாவுக்குச் சென்றார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),நூல்: முஸ்லிம் 2137(பார்க்க புகாரி: 396, 1600, 1616, 1624, 1646, 1647, 1794)


ஸஃபா, மர்வாவில் ஸஃயீ செய்தல்


"தவாஃபுல் குதூம்' எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு ஸஃபா,மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும். இதற்கு ஸஃயீ என்று பெயர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு "ஸஃபா' "மர்வா'வுக்கு இடையே ஓடினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188)

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِر الله فَمَنْ حَجَّ الْبَيْتَ أَو اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَّطَّوَّفَ
بِهِمَا، وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ الله شَاكِرٌ عَلِيْمٌ

இன்னஸ் ஸஃபா வல்மாவத மின் ஷஆயிரில்லாஹ், ஃபமன் ஹஜ்ஜல் பைத அவிஃதமர ஃபலா ஜுனாஹ அலைஹி அய்யத்தவ்வஃப பிஹிமா, வமன் ததவ்வஅ கைரன் ஃபஇன்னல்லாஹ ஷாகிருன் அலீம்(அல் குர்ஆன் 2:158)

பொருள் : ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்;அறிந்தவன்.

لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأحْزَابَ وَحْدَهُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்'' என்ற (2:158)வசனத்தை ஓதினார்கள். "அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக'' என்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'' என்று கூறி இறைவனை பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) "பதனுல் வாதீ' என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),நூல்கள்: முஸ்லிம் 2137)

ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும்.ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு இடையில் செல்லும்போது விரும்பிய துஆக்களை கேட்டுக்கொள்ளலாம்.நபிகள் நாயகம் பிரத்தியமாக ஸஃபாவிர்க்கும் மர்வாவுக்கு நடுவில் எந்த துஆவையும் ஓதியதாக நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லை.

ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று, மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வருவது மற்றொன்று என்ற கணக்கில் ஏழு தடவை சுற்ற வேண்டும்.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயீ செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),நூல்: முஸ்லிம் 2137)

நபி (ஸல்) அவர்கள் மர்வாவில் முடித்ததிலிருந்து "ஸஃபாவிலிருந்து மர்வா வந்தால் ஒரு தடவை என்றும், மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வந்தால் இரண்டு தடவை'' என்றும் விளங்கலாம்.


முடியைக் கத்தரித்தல்

தலை மயிரைச் சிறிதளவு குறைத்துக் கொள்ளவும், முழுமையாக மழித்துக் கொள்ளவும் அனுமதி உண்டு; என்றாலும் முழுமையாக மழித்துக் கொள்வதே சிறந்ததாகும். பெண்கள் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாகஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்(மன்னிப்பாயாக என்று கூறுமாறு) கேட்டுக் கொண்டார்கள். இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாகஎன்றே (மீண்டும்) கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி 1727)

"தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),நூல்: அபூதாவூத் 1694)

இத்துடன் உம்ரா நிறைவேறி விடுகின்றது. ஆண்களாக இருந்தால் தலையை மழித்தல் அல்லது குறைத்தல், பெண்களாக இருந்தால் தலை முடியைக் கத்தரித்தல் மூலம் உம்ரா முடிவுக்கு வருகின்றது.


உம்ரா முடித்துவிட்டுத் திரும்பும் போது கூற வேண்டியது

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்தோ, ஹஜ் அல்லது உம்ராவிலிருந்தோ திரும்பும் போது மேடான இடங்களில் ஏறும்போதெல்லாம் மூன்று தக்பீர்கள் கூறுவார்கள். மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை! அவன் தனித்தவன்; அவனுக்கு இணை யாருமில்லை! அவனுக்கே ஆட்சியும் புகழும்! அவன் அனைத்தின் மீதும் போராற்றலுடையோன்; நாங்கள், தவ்பா செய்தவர்களாகவும், எங்கள் இரட்சகனை வணங்கியவர்களாகவும், சஜ்தா செய்தவர்களாகவும்; அவனைப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகின்றோம்! அல்லாஹ் தனது வாக்குறுதியை உண்மைப்படுத்திவிட்டான்! தன் அடியாருக்கு (முஹம்மத் ளஸல்ன அவர்களுக்கு) உதவி செய்துவிட்டான்! அவன் ஒருவனே (எதிரிகளின்) படைகளைத் தோற்கடித்துவிட்டான்!! என்று கூறுவார்கள்.(புஹாரி 1797)

இப்போது உம்ராவின் வணக்க வழிபாடுகளை ஒருமுறை பார்ப்போம்.

1. குளித்தல்.
2. அனுமதிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொள்ளுதல்.
3. தவாஃபை துவங்கும் வரை தல்பியா கூறுதல்.
4. ஹிஜ்ர் உட்பட ஏழு முறை கஅபாவில் தவாஃப் செய்தல்.
5. மகாமு இப்ராஹீமில் இரு ரக்அத்துக்கள் தொழுதல்.
6. ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸஃயீ செய்தல்
7. தலை முடியைக் கத்தரித்துக் கொள்ளுதல்.

மேற்கண்ட வணக்கங்களைச் செய்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது.
உம்ராவில் இடம்பெற்ற இந்த வணக்கங்களில் 1. இஹ்ராம், 2. கஅபாவை தவாஃப் செய்தல், 3. ஸஃபா,மர்வாவுக்கிடையில் ஸஃயீ செய்தல் ஆகியவை இல்லையெனில் உம்ரா இல்லை என்றாகிவிடும்.
 
நன்றி 
 
- ஆன்லைன்பி.ஜே.காம் & FRTJ.NET

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்