அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Wednesday, December 22, 2010

தலையங்கம்: முன்னுதாரண முதல்வர்!






First Published : 20 Dec 2010 04:22:39 AM IST
ஓரு மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமையும் என்றால், அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு வானத்தின் கீழ் உள்ள எல்லா சலுகைகளும் கிடைத்து விடுகின்றன என்பது இன்றைய அரசியல் தலையெழுத்தாக இருக்கும்போது, பிகார் மாநிலத்தில், இந்தியாவே அதிசயப்படும் வகையில் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்ற போதிலும், அவர் செய்திருக்கும் முதல் பணி எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்திருப்பதுதான்.
கடந்த ஆட்சியிலும் தானே முதல்வராக இருந்துள்ள நிலையில், எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் ஊழல் நடப்பதால் இதை ரத்து செய்கிறேன் என்று சொன்னால், அது தன்னையும், தன் கட்சி எம்.எல்.ஏ.க்களையும் கறைப்படுத்துவது போல ஆகுமே என்கிற எண்ணம் இல்லாமல், உண்மையை வெளிப்படையாகச் சொல்லி, இந்தத் திட்டத்தை ரத்து செய்துள்ளார்.
இதற்காக அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சியாக உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம்கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. எதிர்ப்புத் தெரிவிக்க இயலாத நிலையில், இதே நடைமுறையை நிதீஷ் குமார் சார்ந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அரசாளும் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வலியுறுத்த வேண்டும் என்று வஞ்சப்புகழ்ச்சியை மட்டுமே கொட்ட முடிந்திருக்கிறது. இதற்குக் காரணம் இந்தத் திட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மேம்பாடு அடைந்தார்களே தவிர, தொகுதி மேம்படவில்லை. இது பிகார் மாநிலத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இதே நிலைமைதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுவோர் தங்கள் தொகுதிக்கான தேவைகளை அரசிடம் சொல்லி அல்லது சட்டப்பேரவையில் இதைப் பற்றிப் பேசி, அரசின் கவனத்தைத் திருப்பி, தொகுதிக்கான தேவையைப் பூர்த்தி செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால், ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினர் வெற்றிபெற்ற தொகுதிகளை ஏதோ மாற்றாந்தாய் பிள்ளைகளைப் போல கருதிக்கொண்டு, அங்கு எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செய்யாமல் தள்ளிப்போடுவதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு மக்களிடத்தில் அதிருப்தி ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியதால், எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் திருப்திப்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம்தான் தொகுதி மேம்பாட்டு நிதி.
இந்த நிதி ஆண்டுக்கு ரூ. 25 லட்சத்தில் தொடங்கி, இப்போது தமிழ்நாட்டில் 1.80 கோடியாகவும் (தொகுதிக்காக ரூ. 1.75 கோடி மற்றும் 5 லட்சம் மாற்றுத்திறனாளிகளின் நலவாழ்வுக்காக) சில மாநிலங்களில் ரூ. 2 கோடி வரையிலும் ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி மூன்று வகையாகச் செலவிடப்படுகிறது. முதலாவது, அவசியத் தேவை என்றில்லாத திட்டங்கள், இரண்டாவது, மக்கள் எளிதில் மறந்துபோய்விடக்கூடிய திட்டங்கள், மூன்றாவது, மக்களே குறைசொல்ல முடியாத திட்டங்கள்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் இந்த நிதி எதற்காக அதிகம் செலவிடப்பட்டுள்ளது என்று பார்த்தோமானால், புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கவும், பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கவும், ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஓர் ஊருக்குப் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவையே இல்லை என்றாலும்கூட, அங்கே பேருந்து நிலையம் அமைக்க கருத்துரு அனுப்பி, அதைக் கட்டி முடித்துவிடுவதில் குறியாக இருப்பார்கள். பேருந்து நிலையங்களில் கொட்டை எழுத்தில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது என்று விளம்பரப்படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான் இதன் நோக்கம்.
அடுத்ததாக, பேருந்து நிறுத்த நிழற்குடை. உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் திடீர்திடீரென பேருந்து நிறுத்தங்களைத் தள்ளிப் போடுவார்கள். எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் அங்கே கூரை வரும். பழைய பேருந்து நிறுத்தம் மிகவும் ஸ்திரமான நிலையில் இருந்தாலும், ஓரிரு ஆண்டுகள்கூட முடிந்திராவிட்டாலும் புதிய பேருந்து நிறுத்தம் அவசியமாக்கப்படும். பழைய நிழற்குடை பிச்சைக்காரர்கள் தங்குமிடமாக மாறிப்போகும். இதுவும் தான் ஏதோ மக்கள் தொண்டாற்றுவதுபோன்ற தோற்றத்தை உருவாக்க சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குப் பயன்படுகிறது என்பதுதான் உண்மை.
மூன்றாவதாக, ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்துதல் மற்றும் புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல். இதுபோன்ற மோசடியை வேறு எங்கும் பார்க்க முடியாது. அடிபம்புக்கு வெறும் வாஷர் போட்டாலே தண்ணீர் தாராளமாக வரும் என்றாலும், அதைச் செய்யாமல் அதைத் தண்ணீர் வராத குழாயாக கணக்குக் காட்டி, அதை ஆழப்படுத்தியதாகக் கணக்கு எழுதி, ரசீதும் தயார் செய்து, வாஷர் போட்டு, பெயின்ட் அடித்து, திறப்பு விழாவை போட்டோ சகிதம் நடத்துவதுதான் பெரும்பாலும் நடக்கிறது.
எத்தனை ஆழ்துளைக் கிணறுகளைத்தான் தண்ணீர் இல்லாதவை என்று சொல்வது? ஆகவே இப்போது இதில் புதிய உத்தியைப் புகுத்தியிருக்கிறார்கள். சிறு மின்விசை நீரேற்றியுடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டி கட்டும் உபாயத்தில் இறங்கிவிட்டார்கள்.
மூன்றாவது வகை - சாலை அமைக்கும் திட்டம். ஒரு மழை வந்தால்போதும், தார்ச்சாலை மண்சாலையாக மாறிவிடும். மழையைக் குற்றம் சொல்லி தப்பித்துக் கொள்வார்கள். சாலையின் தரம் சரியில்லாததால் இந்த நிலை என்பதைச் சொல்வதோ, ஒப்பந்ததாரைப் பொறுப்பேற்கச் செய்வதோ கிடையாது.
ஒரு புதிய மாநகராட்சிக்கு உள்பட்ட புதிய பேருந்து நிலையத்துக்கு வரவேற்பு வளைவு அமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு வளைவு ரூ. 5 லட்சம் செலவாகக்கூடியதா என்பதை விட்டுத்தள்ளுவோம். இந்த வரவேற்பு வளைவு மக்களுக்கு எந்த வகையில் பயன்தரக்கூடியது? அந்த எம்.எல்.ஏ.வின் பெயரை, பேருந்து நிலையத்தின் திறப்பு விழா கற்பலகையில் எழுதி வைத்தால் போதாதா?
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தொகுதி மேம்பாட்டு நிதியில் தாங்கள் செய்த நற்காரியங்கள் என்ன என்பதை பணியின் வகை, நிதி ஒதுக்கீடு, ஒப்பந்ததாரர் பெயர் என விரிவாகப் பட்டியலிட்டால், இதில் எத்தனை பணிகள் உண்மையாகவே மக்களுக்கு இன்றியமையாத தேவையாக இருந்தன அல்லது இன்றும் பயன்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இதைச் செய்ய எம்.எல்.ஏ.க்கள் முன்வராவிட்டாலும், தகவல் அறியும் சட்டத்தில் எந்தவொரு குடிமகனும் அரசிடம் இத்தகைய பட்டியலைக் கேட்க முடியும். இந்தப் பட்டியலைப் பார்த்தால் ஒவ்வொரு குடிமகனும் பிகார் முதல்வரைப் பாராட்டுவான்.
பிகார் முதல்வரைப் பாராட்டுவது ஒருபுறம் இருக்கட்டும். அவரை ஏனைய முதல்வர்கள் பின்பற்றட்டுமே... செய்வார்களா?
Email
Print

Tuesday, December 21, 2010

இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப் பழக்கம்!

தற்போதைய இளைஞர்களின் சீரழிவுக்குக் காரணம் புகைப்பழக்கம், பான்பராக், ஹான்ஸ், மது, செல்போன். இவை தவிர சினிமா மற்றும் தொலைக்காட்சி ஆகியவைதான். தமிழக கலாசாரத்தைச் சீரழித்து மாற்றுகிற மிகப்பெரும் சக்தியாக இவை திகழ்கின்றன. காலம் மாறுகிறபோது கலாசாரத்தையும் மாற்றுகின்ற மனநிலைக்கு இளைஞர்கள் தள்ளப்படுகின்றனர். மேலும் இதில் வேதனைக்குரிய தகவல் என்னவென்றால் ஹான்ஸ் என்ற புகையிலையை மாணவர்கள் கண் முன்னே சில ஆசிரியர்கள் பயன்படுத்துவதுதான்.இது வேதனைக்குரியது. இதைத் தடுத்து நிறுத்த அரசு முயற்சிக்க வேண்டும். சிகரெட் பாக்கெட்டிலும், மது புட்டியிலும் மண்டைஓடு படம் போட்டால் மட்டும் போதாது. முற்றிலுமாக போதைப்பொருள்களை ஒழிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். இந்த கலாசாரம் தொடர்ந்தால் வரும் காலத்தில் மது குடிப்பது ஒரு டீ டைம் போல் ஆகிவிடும்.மது நாட்டுக்கும் கேடு, வீட்டுக்கும் கேடு என்ற வாசகம் பாட்டிலில் அச்சிடப்பட்டு இருந்தாலும் அதை எவரும் ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை. இதேபோல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் கொண்டு வந்த, பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதற்குத் தடைச் சட்டத்தை யாரும் மதிப்பதில்லை. இதற்கு அரசு அதிகாரிகளே காரணம். ஏன் என்றால் அவர்களே பொது இடத்தில் சிகரெட் பிடிக்கின்றனர்.பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுஇடங்களில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதைத் தடுக்கும் அதிகாரிகளும் முனைப்பாகச் செயல்படவில்லை. அப்படி சிகரெட் பிடிப்பவர்களைக் கண்டு 200 அபராதம் விதிக்கின்றனர். ஆனால் அவரிடம் அந்த அளவுக்கு ரூபாய் இல்லை என்றால் அபராதம் விதிக்காமல் 30 அல்லது 50ஐ பிடுங்கிக்கொண்டு விட்டுவிடுகின்றனர். இதனால் ஒரு சமுதாயத்தைத் திருத்திவிட முடியும் என்ற கருத்து தவறானது. தற்போதுள்ள இளைஞர்கள் எதை நோக்கிப் பயணிக்கின்றனர் என்பதை அரசு கவனிக்க வேண்டும். அவர்கள் செல்வது நிச்சயம் அழிவுப்பாதையை நோக்கி என்று தெரிந்தால், அதைத் தடுக்க அரசு முயற்சிக்க வேண்டும். முதலில் சிகரெட், பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் பயன்பாட்டுக்கு கடும் தடைவிதிக்க வேண்டும். பள்ளி கல்லூரி அருகே நிச்சயமாக கடை இருக்கக் கூடாது. இதையடுத்து, இவற்றைத் தயார் செய்யும் நிறுவனங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்.செல்போனில் பரவிவரும் ஆபாசப் படங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்போன் எடுத்துவர தடை விதிக்க வேண்டும். இளைஞர் சமுதாயத்தை நல்வழிபாதைக்கு அழைத்துச் செல்லும் அக்கறை உள்ள அரசாக அரசு செயல்பட வேண்டும்.

நன்றி: தினமணி நாளிதழ்

உள்ளதைச் சொன்னால் சிலருக்கு குத்தலும்,குடைஞ்சலும் வரத்தானே செய்யும்!

உள்ளதைச் சொன்னால் சிலருக்கு குத்தலும்,குடைஞ்சலும் வரத்தானே செய்யும்!(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ,எஸ்(ஓ)

19.12.2010 அனைத்துப் பத்திரிக்கைகளிலும் பரபரப்பான செய்தியாக ராகுல் காந்தி அவர்களின் தனிப்பட்ட சம்பாசனையும், அதற்கு பதிலளித்தாற்போல பி.ஜே.பியும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் தெரிவித்த கருத்துக்களும் வெளியிட்டன. ராகுல் காந்தி, மத்தியில் அரசாளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர், மற்றும் வருங்கால பிரதமராவதிற்கு எல்லா தகுதியும் பெற்றவர் என்று இந்திய பிரதமரால் வர்ணிக்கப் பட்டவர் ஆவார். அப்படி யென்ன ராகுல் காந்தி சொன்னார்? இந்திய பிரதமர் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ந்தேதி அளித்த விருந்தில் கலந்து கொண்ட அமெரிக்க தூதர் டிமேட்டி ரோமரிடம் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்த போது, ‘இந்தியாவில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு துணை போனதில்லை எனவும், அவர்கள் தேசியத்திலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள், ‘லஸ்கர் இ தொய்பா’ என்ற தீவிர வாதிகளை விட இந்து தீவிரவாதிகளால்தான் மிகவும் இந்திய தேசிய மக்களுக்கு அச்சுறுத்தல்’ இருப்பதாகவும் கூறினார் என்று அமெரிக்க தூதர் தனது நாட்டு அரசுக்கு செய்தி அனுப்பியதாக ‘விக்கிலீக்’ நிறுவனம் வெளியிட்ட செய்தியில் வெளியாகி உள்ளது. அது மட்டுமா நண்பர்களே? இதற்கு முன்னால் இருந்த அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்டு அனுப்பிய செய்தியும் இப்போது வெளியாகி உள்ளது. என்ன செய்தி அது என கேட்க ஆவல் உண்டாவது இயற்கையே! அது, ‘பிரிவினைவாதமும், மதத்தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களுக்கு பரவலான ஆதரவைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும், சமூகத்தில் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம் விரும்புகிறார்கள் எனவும் டேவிட் முல்போர்டு கூறியிருக்கிறார் என்றும் விக்கிலீக் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைகளுக்கு பி.ஜே.பியும், வலதுசாரி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸ_ம் கண்டனக் கணைகளை தொடுத்துள்ளன. பி.ஜே.பியின் பொதுச் செயலாளர் ரவி சங்கர் பிரசாத் சொல்லும் போது, ‘ராகுல் காந்தியின் கருத்து பொறுப்பில்லாதது மற்றும் ராகுல் தீவிரவாதக் கொள்கையுடன் சமரசம் செய்து கொண்டார் மற்றும் பி.ஜே.பி எந்த தீவிரவாத கும்பலுக்கும் சமரசம் செய்து கொள்வதில்லை என கூறியிறுக்கிறார். ராகுல் காந்தி தனது கருத்துக்களை வெளியிடுவதிற்கு முன்பு நடந்த சம்பவங்களை வைத்துத்தான் இந்திய வலது சாரி தீவிரவாதத்தின் கோரமுகங்களையும் அதன் தாண்டவங்களையும் பார்த்த பின்னர்தான் தனது அபிப்பிராயத்தினை வெளிக்காட்டியிருப்பார் என கீழ்க்கண்ட சம்பவங்கள் மூலம் தெரிவிக்கலாம் என நினைக்கின்றேன்:1) பாபரி மஸ்ஜித் இடிப்பு: பாபரி மஸ்ஜித் இடிப்பு கரசேவகர்களின் இயற்கையான உணர்வில் ஏற்பட்டது என பி.ஜே.பி தலைவர்கள் சொன்னாலும் அவர்கள் கூற்று பொய்ப்பது போல பாரதிய ஜனதாவின் முன்னாள் எம்.பி. ராம்விலாஸ் விஸ்வதாஸ 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி தான் பிரதமர் நரசிங்கராவ் அவர்களை சந்தித்ததாகவும், அவர் என்னிடம் கரசேவகர்களை ஒன்று திரட்டி என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்டதாகவும் அதற்கு விஸ்வதாஸ் மஸ்ஜிதை இடிக்கப் போகிறோம் என்று சொன்னதாகவும் ஒரு பேட்டியில் கூறிவிட்டு அந்தக் குற்றத்திற்காக தான் தூக்கு மேடைக்கும் செல்லத்தயார் என்றும் சொல்லியுள்ளதினை வைத்து எவ்வாறெல்லாம் சதித்திட்டம் தீட்டி பாரம்பரிய மிக்க மஸ்ஜிதை தரை மட்டமாக்கி விட்டு இந்தியாவின் இறையாண்மைக்கும், மதசார்பில்;;;;லாக சமதர்ம சமுதாய அமைப்பிற்கும், வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் வேட்டு நீங்கா கலங்கத்தினை ஏற்படுத்தி விட்டார்கள் என்றால் மிகையாகுமா? அது மட்டுமா? ஹிந்து மகாசபை அமைப்பின் பொதுச் செயலாளர் டோகாடியா டிசம்பர் மாதம் சென்னை வந்தவர் நிருபர்களிடம் அயோத்தியில் சர்ச்சைக்குள்ளான இடத்தினையும் சேர்த்து 63 ஏக்கரில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்றும் அதனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சவால் விட்டுள்ளார். எப்போது? அயோத்தி பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அக்டோபர் மாதம் கூறப்பட்ட வழக்கில் மத நம்பிக்கை அடிப்படையில் மூன்று நிதிபதிகள் தீர்ப்பளித்து மூன்று பகுதிகளாக தீர்ப்பளித்து அதில் ஒரு பகுதி முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுவதிற்கு சொந்தமான இடமென்று தீர்ப்பளித்த பின்னரும், முஸ்லிம் அமைப்பினர் அந்தத்தீர்ப்பினை ஏற்காது உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையிட்ட பின்னரும் டோகாடியா கூறியிருக்கிறார் என்றால் அவரும் அவருடைய வலது சாரி மத வெறியர்களும் எந்தளவிற்கு உச்ச நீதிமன்றத்தினையும், அரசுpயல் அமைப்பினையும் மதிக்கின்றனர் என தெரிந்து கொள்ளலாம்.2) குஜராத் மாநிலம் என்றால் முன்பெல்லாம் தேசிய தந்தை மகாத்மா காந்தி சபர்மதி நதிக்கரை ஓரத்தில் ஆசிரமம் நடத்தி தலித் இன மக்கள் மேம்பாடுகளுக்கு உழைத்தது ஞாபகத்திற்கு வரும். நானும் ஆவடி மத்திய ரிசர்வ் போலிஸ் படை கமாண்டன்ட் நண்பர் ராமலிங்கமும் அந்த ஆசிரமத்தனை 1997ஆம் ஆண்டு சென்று பார்த்திருக்கின்றேன். ஆனால் இன்று ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கோத்ரா ரயில் விபத்திற்குப் பின்னர் அரசு ஆதரவுடன் வலது சாரி அமைப்பினர் ஆடிய மனித கொலை கொள்னை தீ வைப்பு போன்ற கோரச் சம்பவங்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறது. அரசு ஆதரவுடன் நடத்தப்பட்டது என்று நான் மட்டும் சொல்லவில்லை, மாறாக அன்றைய மாநில உளவுத்துறையின் தலைவராக இருந்த ஸ்ரீகுமார், ஐ.பீ.எஸ்(ஓ) அவர்களே தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார். அதற்காக அவரை அரசு பந்தாடி, பதவியுயர்வு கொடுக்காததால் நீதிமன்றம் வரை சென்று பதவியுயர்வும் பெற்றார் என்றால் பாருங்களேன் எவ்வளவு தூரம் அவர்கள் உண்மையினை வெளிக் கொணரும் அதிகாரி மீத காழ்ப்புணர்ச்சி கொண்டார்கள் என்று. அன்றைய பி.ஜே.பி மத்திய அரசில் இந்திய நாட்டுடைய ஜனாதிபதியாக இருந்த அப்பழுக்கற்ற மதிப்புமிகு கே. ஆர்.நாரயாணன் அவர்கள் தனது சாவிற்கு முன்னாள் வெளியிட்ட செய்தியில் கோத்ரா சம்பவத்திற்குப் பின் நடந்த குற்ற நடவடிக்கையினை கண்டு மனம் வெம்பியதாக எல்லா ஊடகங்களும் வெளியிட்டன.அது மட்டுமா தீவிரவாதிகள் என்று அப்பாவி முஸ்லிம்கள் பலரையும் அவர்களின் நண்பர்களையும் போலி என்கவுண்டரில் மந்திரி, மற்றும் உயர் ஐ.பீஎஸ் அதிகாரிகள் துணையுடன் கொலை செய்துள்ளனர். உதாரணத்திற்கு சொகராபுதீன் அவரது மனைவி கௌசர் பீ, அவரது நண்பரும் சொகராபுதீன் கொலை வழக்கில் ஒரே சாட்சியுமான பிரஜாபதியும் கொலை செய்யப்பட்டு அதனை உச்ச நீதி மன்ற ஆணையின் பேரில் சி.பி.ஐ விசாரணைக்குழு நேரடி விசாரையும் செய்து முன்னாள் மாநில உள்துறை போலீஸ் மந்திரி அமித்ஜா, உயர் ஐ.பீ.எஸ் அதிகாரிகள் வன்ஜாரா மற்றும் விஜைய் அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.3) ஒரஸ்ஸா மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் அவதிப்படும் தொழு நோய் குணமாவதிற்கான ஒரு மருத்துவ மனையும், கல்விக்காக கல்விக் கூடங்களையும் நடத்தி வந்த ஆஸ்திரேலியா நாட்டு தன்னார்வ தொண்டர் கிருத்துவ மதத்தினைச் சார்ந்த ஸ்nயின் என்பவர் அந்த மாநிலத்தில் தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் தங்கியிருந்தார். மதத்தின் அடிப்படையில் அவரை விரும்பாத வலது சாரி அமைப்பினர் கோவிந்த் சிங் தலைமையில் ஸ்டெயினும், அவருடைய அருமை மகனும் தங்களது ஜீப்பில் தூங்கிக் கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியது மட்டுமல்லாமல் தீ வைத்தும் எரித்துக் கொன்று விட்டனர் என்பதும் அனைவரும் அறிந்த செய்தியே!4) சென்ற 17.10.09 தேதி தீபாவளிக்கு முன்பு ஒரே பரபப்பு-என்னவென்று நினைக்கிறீர்கள். தீபாவளி கொண்டாட்டத்தினை சீர் குழைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சி என்று பத்திரிக்கைகளிலும்-எலக்ட்ரானிக் மீடியாக்களிலும் செய்தி வெளியானதினை அனைவரும் அறிந்ததே.அத்தோடு அமெரிக்க உளவு நிறுவனமும் தன் பங்கிற்கு எச்சரிக்கை செய்தது வழக்கம் போல். ஆனால் நடந்தது என்ன?கோவா மாநிலம் பண்டா நகரில் தீபாவளி இரவு அன்று ஸ்கூட்டரில் சென்ற இருவர் குண்டு வெடித்து பின்பு மரணம் அடைந்தனர். கோவா மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து இறந்தவர்கள் பட்டேல்-நாயக் என்று அடையாளம் கண்டு, அவர்கள் கொண்டு சென்ற பையிலிருந்து தான் வெடி குண்டு நேரத்திற்கு முன்பாகவே வெடித்து விட்டதாகவும் சொல்லியுள்ளதினை அனைவரும் அறிவர். அவர்கள் யார் என்ற விசாரணையில் அவர்கள் இந்து தீவிரவாத அமைப்பான சமாதா சான்ஸ்தாவினைச் சார்ந்தவர்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.சாமாதா சான்ஸ்தா என்ற வலது சாரி அமைப்பு எது தெரிகிறதா நண்பர்களே? மகாராஸ்ட்ரா மாநிலத்தில் சில காலங்களுக்கு முன்பு மாலேகான் நகரில் வெள்ளிக்கிழமை ஜூம்மாத் தொழுகை நேரத்தில் சைக்கிள் குண்டு வெடித்து பலர் மாண்ட சம்பவத்திலும், அஜ்மீர் தர்ஹா குண்டு வெடிப்பிலும் கைது செய்யப் பட்ட பெண் சாமியார் பிராக்யா சிங்-ராணுவ அதிகாரி புரோகித,; சுவாமி அசிமானன்தா, ஆர்.எஸ்.எஸ் சுனில் ஜோசி போன்றவர்கள் கொண்ட இயக்கமாகும். ஆகவே பயங்கர வாத-நாசவேலைகளை செய்து விட்டு காவல் துறையினரை ஏவி முஸ்லிம்களை கைது செய்யத் தூண்டும் நடவடிக்கைக்காவும்-அதன் மூலம் இந்திய சமூகத்தினரிடையே கலவரம் ஏற்பட வழிவகை செய்யும் நடவடிக்கையாகும் அவர்களுடைய நடவடிக்கை என்றால் அது மிகையாகுமா?அது மட்டுமா? மத்திய பிரதேச ஆர.எஸ்.எஸ் இயக்கத்தினைச் சார்ந்த நான்மேலே குறிப்பிட்ட சுனில் ஜோசி அஜ்மீர் தரிஹா, மக்கா மஸ்ஜித் தர்கா மற்றும் சம்ஸ்ஹாட்டா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு ஆகியவைகளில் முக்கிய பங்காற்றியவர், அவர் தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தொண்டர்களை குண்டு தயாரிக்க பயிற்சி கொடுத்தவர் என்றும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவரையே அவர் பாதுகாப்பு துறையினரிடம் பிடிபட்டால் அனைத்து ரகசியமும் வந்து விடுமே என்று அவரையும் 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மத்திய பிரதேசம் திவாஸ் மாவட்டத்தில் கொலையும் செய்து விட்டனர். அந்த விசாரணையினை ம.த்திய பிரதேச மாநில போலீஸார் சரிவர விசாரணை செய்யாது முடித்து விட்டதால், அந்த விசாரணையினை மேற்கொண்டிருக்கும் தேசிய விசாரணை குழுவினரும், ராஜஸ்தான் காவல் துறையினரும் இணைந்து ஹர்சாத் சோலங்கி என்பரை கைது செய்துள்ளனர். ஆகவே தான் காங்கிரஸின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் ஆர்.எஸ்.எஸ் பற்றி விசாரணை வேண்டும் என வேண்டுகோள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தீயில்லாமல் புகை வராது என்ற பழமொழிக்கிணங்க மேற்காட்டிய தகவல்களை வைத்து ராகுல் சொன்னதும் உண்மையே என்று அறிய முடிகிறது அல்லவா?ஏன் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் புனிதமானதா? மகாத்மாவினை 1948ஆம் அண்டு கொலை செய்த பின்பு தடை செய்யப்பட்ட இயக்கம் தானே! 5) மும்பை வெடிகுண்டுச் சம்பவத்திற்குப் பின்னர் முஸ்லிம்களை பயங்கரவாதத்தினர் என்பது போல சித்தரிக்கப்படுகிறது. ஆனால் அந்த மும்பை குண்டு வெடிப்பிற்கு பின்னர் சிவசேனா மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் ஆடிய வெறியாட்டம் பற்றி நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷனைப்பார்த்தால் எப்படியெல்லாம் பயங்கரவாத செயலினை அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகும். பி.ஜே.பியை தீவிரவாத நபர்களுடன் ஒப்பிடுவதா என கேள்வி கேட்கும் தலைவர்கள் பின் ஏன் குண்டு வெடிப்பில் கைதாகி சிறையில் இருக்கும் பெண் சாமியார் பிராக்யா சிங்கை பி.ஜே.பி முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங்கும், குஜராத் போலி என்கவுண்டரில் சாகடிக்கப்பட்ட சொகராபுதீன் மற்றும் இருவர் வழக்கில் கைது செய்யப்பட்ட குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவினை பி.ஜே.பி தலைவர் அத்வானி சந்திக்க வேண்டும் என்ற பொது மக்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லித்தானே வேண்டும்.ராகுல் காந்தி இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முஸ்லிம் ஆற்றிய தொண்டினை தெரிந்திருப்பதாலும், இந்கிய சுதந்திரத்திற்கு பின்பு எப்படி முஸ்லிம்கள் ஜனநாயகத்தின் பேரில் நம்பிக்கை கொண்டிருக்கிறாரகள் என்பதினை கண்ணிய மிகு காயிதே மில்லத் முஸ்லிம் மக்களிடையே உரையாற்றியதினை தெரிந்து வைத்திருப்பதாலும், தனது முன்னோர்களான கொள்ளு பாட்டனார் ஜவகர்லால் நேரு, பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜிவ் ஆகியோர்களுடன் பணியாற்றிய முஸ்லிம் பிரமுகர்கள் வரலாறு தெரிந்திருப்பதாலும், தற்போது தன் தாயான சோனியா காந்திக்கு எப்படி முஸ்லிம் தலைவர்களான அஹமது படேல், குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் பெரும் உறுதுணையாக இருக்கிறார் என்று அறிந்திருப்பதாலும், தற்போது மேற்கு வங்காளம், சட்டிகார், ஜார்கண்ட், பிகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தீவிர வாத செயல் போன்ற எந்த முஸ்லிம் அமைப்பும் ஈடுபட வில்லை என்று தெரிந்திருப்பதாலம் தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதற்கு ஏன் பி.ஜே.பியும், ஆர.எஸ்.எஸ்யும் குய்யோ முய்யோ எனக் கூக்கிரல் இட வேண்டும்.ராகுல் கூறிய கருத்தினை ஆமோதிப்பது போல டேவிட் முல்போர்டு தெரிவித்த கருத்தான ‘முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கையில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்’ என்பது அமைந்துள்ளது என்றால் மிகையாகுமா?அடுத்து முல்போர்டு கூறும் போது முஸ்லிம்கள் சமூகத்தில் இணைந்து வாழ்வதினையே விரும்புகிறார்கள் என்றும் சமூக தொண்டில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றும் கூறியிருப்பதினை எந்த ஒரு முஸ்லிம் மெஜாரிட்டியாக இருக்கும் கிராமத்தினை உதாரணமாக எடுத்துக் கொண்டாலும் அல்லது முஸ்லிம் மைனாரிட்டியாக உள்ள கிராமத்தினை எடுத்துக் கொண்டாலும் எப்படி முஸ்லிம் அல்லாத மக்களுடன் உடன் பிறவா அண்ணன் தம்பிகளாக, அக்காள் தங்கைகளாக நட்புறவுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பது புரியும். ஆனால் அந்த நட்பை முறிக்கும் வேலையினை இந்து வலது சாரி இயக்கங்கள் மேற்கோள் காட்டிய பயங்கர வாத செயல்களால் செய்து கொண்டுள்ளது என்றால் உண்மைதானே! ‘முஸ்லிம்கள் சமூக தொண்டில் ஈடுபாடுள்ளவர்கள்’ என்று முல்போர்டு கூறியிருப்பதினை ஒரு உதாரணம் மூலம் உண்மையே என சொல்ல ஆசைப்படுகிறேன். பிரபல நடிகர் அமிதாப் பட்சன் நடத்தும் குரோர்பதி என்ற பிரபலமான டி.வி பொது அறிவு கேள்வி அறிவுப்போட்டியில் தஸ்லிம் என்ற இரண்டு குழந்தைகளுக்கு தாயான முஸ்லிம் பெண்மணி கலந்து கொண்டு ஒரு கோடி ரூபாய் ஜெயித்து புகழடைந்தார். அவரை எப்படியாவது கிரிக்கட் பிரபலம் சச்சின் டெண்டுல்கரை எப்படி விளம்பர டி.வி.படங்களில் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து நடிக்க வைத்தார்களோ அதே போல திட்டமிட்டு தஸ்லிமையும் விளம்பர நிறுவனங்கள் பலகோடிக்கள் தருகிறோம் என்று ஆசைகாட்டு போட்டிபோட்டு அனுகின. ஆனால் அதனையெல்லாம் மறுத்ததோடு மட்டுமல்லாது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் ஏன் மறுத்தேன் என்று சொல்லும்போது, ‘ தன் இரண்டு குழந்தைகள் படிப்பினையும மற்றும் வசதியில்லாத குழந்தைகள் படிப்பிற்கு அந்த ரூபாய் ஒரு கோடியையும் செலவழிக்கவே விரும்புகிறேனென்று’ சொன்னதின் மூலம் சாதாரண முஸ்லிம் தான் உண்டு, தன் குடும்பமுண்டு என்று இல்லாமல் வாழ்வாதாரமற்ற மற்றவர்களையும் முன்னேறவே விரும்புகிறார்கள் என்று சொல்லாமல் சொல்லவில்லையா? ஆகவே தான் அமெரிக்கா முன்னாள் தூதர் முல்போர்டு முஸ்லிம்கள் சமூகத்துடன் இணைந்தே வாழ விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார். முஸ்லிம்கள் ஏக இறை பக்தியும், பொது அமைதியையும், மற்றவர்களை மதித்து ஒற்றுமையுடன் வாழும் சமூகமாக ராகுல் சித்தரித்து போலவே விரும்புகிறார்கள் ஆனூல் இந்திய மண்ணில் காலூன்றத் தோன்றியிருக்கும் சமீபத்திய பயங்கரவாத செயலுக்கு இந்துத்துவா வலது சாரி அமைப்புகளே காரணம் என்று உண்மையினைத்தானே சொன்னார் அதற்கு குத்தலாக இருப்பதும் குடைஞ்சலாக இருபபதும் இயற்கைதானே!!

நன்றி:http://mudukulathur.com/?p=3854

சுவாமி அசிமானந்த்துக்கு சம்ஜாதா ரயில் தாக்குதலிலும் தொடர்பு-என்ஐஏ

பன்ச்குலா: ஹைதராபாத்தின் மெக்கா வசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய சாமியார் அசிமானந்த்துக்கு, 68 பேரைர் பலிகொண்ட சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு உள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.மெக்கா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு குண்டுவெடித்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இந்து தீவிரவாதிகள் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.இந்த நிலையில் நவம்பர் 19ம் தேதி 59 வயதாகும் அசிமானந்த்தை ஹரித்வாரில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் தனக்குள்ள தொடர்பை அவர் ஒத்துக் கொண்டார். மேலும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் உள்ள தொடர்பையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் சம்ஜாதா குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு கோர்ட்டான பன்ச்குலா கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், சாமியாருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எங்களுக்கு உள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தனக்கு உள்ள தொடர்பையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து ஜனவரி 3ம் தேதி வரை தொடர்ந்து காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு கோர்ட் அனுமதி அளித்தது.2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி நள்ளிரவில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்று கொண்டிருந்த சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பெட்டிகளில் குண்டுகள் வெடித்தன. இதில் 68 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள். இவர்களில் 38 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். லாகூருக்கு சென்று கொண்டிருந்தவர்கள் இவர்கள்.மொத்தம் 6 பெட்டிகளில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த குண்டுகள் லாகூரில் வாங்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் வழக்கில் புதிய திருப்பமாக இந்து சாமியாருக்கு இதில் உள்ள தொடர்பு தற்போது அம்பலமாகியுள்ளது.
நன்றி:
http://thatstamil.oneindia.in/news/2010/12/21/mecca-masjid-blast-swami-asimanand-samjhauta-train.html

மலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளை காப்பாற்ற அத்வானியும், ராஜ்நாத்சிங்கும் முயற்சித்தது ஏன்? - திக் விஜய் சிங் கேள்வி

மும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரேக்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்ட தகவலை வெளியிட்டதற்காக தன்னை விமர்சிக்கும் பா.ஜ.கவுக்கு பதிலடியாக திக் விஜய் சிங் புதிய கேள்வியொன்றை எழுப்பியுள்ளார்.


கர்காரே விசாரணை மேற்கொண்டிருந்த மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு அத்வானியும், ராஜ்நாத்சிங்கும் முயன்றது ஏன்? என பா.ஜ.க தெளிவுப்படுத்த வேண்டுமென திக் விஜய் சிங் கோரியுள்ளார்.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஒருவரான சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூரை கைதுச் செய்ததைக் கண்டித்து பிரதமரை அத்வானியும், ராஜ்நாத்சிங்கும் சென்று சந்தித்தது ஏன்?

பிரக்யாசிங்கை காண்பதற்கு ராஜ்நாத்சிங் சிறைக்குச் சென்றது ஏன்? என திக் விஜய் சிங் கேட்கிறார்.

கர்காரேக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதுத் தொடர்பாக பிரதமரின் விளக்கத்தை கேட்டுள்ள பா.ஜ.க இந்த கேள்விகளுக்குத்தான் முதலில் பதிலளிக்கவேண்டும் என திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலில் பாகிஸ்தானின் கரங்கள் உள்ளன என்பதுக் குறித்து எனக்கு சந்தேகமில்லை. தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் வலதுசாரி ஹிந்துத்துவா அமைப்புகள் செயல்பட்டுள்ளன என நான் கூறவில்லை. மாறாக, ஹிந்துத்துவா அமைப்புகளிடமிருந்து கர்காரேக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதைத்தான் தெரிவித்திருந்தேன். அது உண்மையானதாகும் என தான் முன்புக் கூறியதை உறுதிச்செய்தார் திக் விஜய்சிங்.

இது காங்கிரஸுடன் தொடர்புடைய பிரச்சனை இல்லை எனவும், தானும், கர்காரேயும் தொலைபேசியில் உரையாடிய விஷயமாகும் எனவும் திக் விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

கர்காரேத் தொடர்பான அறிக்கையின் காரணமாக திக் விஜய்சிங்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் களமிறங்கியுள்ள பா.ஜ.கவுக்கு பதிலடிக் கொடுக்கும்விதமாக தனது நிலைப்பாட்டை உறுதிச்செய்துள்ளார் திக்விஜய்சிங்.

சிங்கின் அறிக்கை அறிவு சூன்யமானது எனவும், அவரின் கூற்று பாகிஸ்தானுக்கு மட்டுமே உதவிகரமாக இருக்கும் எனவும், அவர் தனது அறிக்கைக்கு மன்னிப்புக் கோரவில்லையானால் காங்கிரஸ் கட்சி அவரை வெளியேற்றவேண்டும் என பா.ஜ.கவின் முன்னாள் தேசிய தலைவர் வெங்கய்யா நாயுடு கோரியிருந்தார்.

ஆனால், திக்விஜய் சிங்கின் அறிக்கை பெரிய சர்ச்சையை கிளப்புவதை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சித் தலைமையின் பதில் அமைந்திருந்தது.

திக் விஜய்சிங்கின் அறிக்கையில் உடன்படுவதுக் குறித்த கேள்வியே எழவில்லை என்பது காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜனார்தன் திரிவேதியின் பதிலாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Saturday, December 11, 2010

முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம்


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்


புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம்.

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நிலையான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்களுடன் எவ்விதத்தில் போர் புரிகிறார்களோ, அவ்விதத்தில் நீங்களும் அவர்களுடன் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.(9:36)

.............இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே திருப்திப்பட்டேன்...........(5:3)

இஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு மாதங்கள் துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், மற்றும் ரஜப் மாதங்களாகும். அந்நான்கு மாதங்களில் ஒன்றான முஹர்ரம் மாதத்தை நாம் அடைந்து விட்டோம். ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான இந்த முஹர்ரம் மாதத்திற்கு மெருகூட்டும் விதமாக அதன் பத்தாம் நாள் அமைந்திருக்கின்றது. எனவே நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம் நாளிலும், பத்தாம் நாளிலும் நோன்பு நோற்க நம்மை வலியுறுத்தினார்கள்.

ரமளானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்ததோடு, அதை வைக்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளில் நோன்பு வைப்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

எகிப்தின் ஆட்சிப்பொறுப்பில் இருந்து நானே மிகப்பெரிய கடவுள் என்று கூறி பல அக்கிரமங்களை புரிந்த ஒரு கொடுங்கோல் அரசனான பிர்அவ்னைக் தண்ணீரில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றிய நாள் தான் ஆஷரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள்.

பிர்அவ்னின் கொடூர ஆட்சியில் பாதிக்கப்பட்ட நேரத்தில், மூஸா (அலை) என்ற இறைத்தூதரின் தலைமையில், எகிப்தை விட்டு வெளியேறுவதற்காக புறப்பட்டு வந்த இஸ்ரவேல் மக்களை, அல்லாஹ் தன் வல்லமையால் மிக அற்புதமாக தண்ணீரை பிளந்து காப்பாற்றிய ஒரு முக்கியமான சரித்திர நிகழ்வு முஹர்ரம் மாதத்தில் நடந்ததை நாம் யாரும் மறக்க முடியாது.

ஒரு முஸ்லீம் என்றுமே மறக்க கூடாத அந்த அற்புத நிகழ்வை, மறைப்பதற்காக யூதர்களின் கூட்டு சதியால் உருவாக்கப்பட்டது தான், தற்போது கர்பலாவின் பெயரால் படுகளம் என்ற பெயரில் நடைபெற்றுவரும் படு கேவலமான இந்த முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்

கர்பலா என்ற போரில் நடந்த துயரச்சம்பவங்களை கூறி தற்போது புனிதமான முஹர்ரம் மாதத்தை கேவலப்படுத்தும் விதமாக நமதூர் ஏர்வாடியிலும் ஒவ்வொரு வருட முஹர்ரம் மாதத்திலும் இஸ்லாத்திற்கு கடுகளவும் சம்மந்தமில்லாத ஏராளமான அனாச்சாரங்கள் முஸ்லீம் பெயர் தாங்கிகளால் அரங்கேற்றப்படுகிறது.

சூரியனை மறைக்கும் பூரண கிரகணத்தைப் போல ஆஷுரா தினத்தில் நடைபெற்ற அல்லாஹ்வின் வல்லமை செயலை, கர்பலாவும், அதையொட்டி ஷியாக்கள் கிளப்பி விட்ட மூடப் பழக்கங்களும் மறைத்து விட்டன. ஆஷுரா தினத்தை மையமாக வைத்து நடக்கும் மூடத்தனமான செயல்பாடுகளையும், இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களையும் இப்போது பார்ப்போம்.

சோக நாளாக்கி மாற்றப்பட்ட ஆஷுரா

ஹுசைன் (ரளி) கொல்லப்பட்ட சோக சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாளில் நடந்ததால் அந்த நாள் துக்க நாளாக ஒரு போதும் ஆகி விடாது. ஏனென்றால் இரண்டாம் கலீபாவாகிய உமர் (ரளி) அவர்களும், மூன்றாம் கலீபாவாகிய உஸ்மான் (ரளி) அவர்களும் இஸ்லாத்தின் எதிரிகளால் கொல்லப்பட்டனர் என்பதை அனைவரும் அறிந்ததே. கலீபாக்கள் கொல்லப்பட்ட அந்த துயரமான நாட்களை யாரும் துக்க தினமாக பார்ப்பதில்லை.

அதே சமயம் நான்காம் கலீபாவாக இருந்த அலி (ரளி) அவர்களின் மகன் ஹுசைன் (ரளி) கொல்லப்பபட்டதாக கூறி துக்க தினம் கொண்டாடுவது எப்படி இஸ்லாத்தில் நுழைந்தது என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இதற்கு ஷியாக்களின் திட்டமிட்ட சதிதான் காரணம் என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.

மேலும் நபி (ஸல்) அவர்கள் இறந்தது ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் திங்கள்கிழமை தான். அன்றைய தினத்தை யாரும் துக்க தினமாக கொண்டாடுவது கிடையாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை மரணித்தார்கள்...... (நூல்: புகாரி 1387)

ஹுசைன் (ரளி) அவர்கள் கொல்லப்பட்டதை துக்க தினமாக கொண்டாடுபவர்கள், நபி(ஸல்) அவர்கள் மரணத்திற்காகவோ, உமர்(ரளி), உஸ்மான் (ரளி) போன்ற முக்கியமான நபித்தோழர்கள் கொல்லப்பட்டதற்காகவோ ஏன் துக்க தினம் கொண்டாடுவதில்லை.?

ஷியாக்கள் என்போர் யார்?

நாம் உயிரினும் மேலாக நேசிக்கக்கூடிய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூதர்(நபி)ஆவதற்கு தகுதியில்லாதவர், உண்மையில் தூதராக வேண்டியது அலி (ரளி) அவர்கள் தான் என நம்பி உலகத்தில் பிரச்சாரம் செய்து வருபவர்கள். அதுமட்டுமல்லாமல், அபூபக்கர் (ரளி), உமர் (ரளி), உஸ்மான் (ரளி), நபி(ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரளி) போன்றோர்களை சபிக்கக் கூடியவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

இன்னும் பல மோசமான நம்பிக்கைகளும் வைத்து கொண்டிருக்கக் கூடியவர்கள் தான் இந்த ஷியாக்கள். இதிலிருந்து ஷியாக்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை தகர்த்தெறியக் கூடியவர்கள் என்பதை நாம் புரியலாம். மேலும் இவர்கள் நம்பும் பல கொள்கைகள் யூதர்களிடமிருந்து நடைமுறைப்படுத்தியதாகும். இதன் மூலம் முஹர்ரம் மாத அனாச்சாரங்கள் ஷியாக்களால், முஸ்லீம் சமுதாயத்தில் ஊடுருவியது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

துக்கம் அனுஷ்டிப்பது எவ்வாறு?

இஸ்லாமிய கொள்கை அடிப்படையில், யார் மரணித்தாலும், கொல்லப்பட்டாலும், அந்த நாள் மீண்டும் வரும் போது அந்த தினத்தை துக்க தினமாக கொண்டாடுவது என்பது கிடையாது. அப்படி கொண்டாட நினைத்தால் வருடத்தில் பெரும்பாலான நாட்கள் துக்கத்திலேயே கழிக்க வேண்டியதாக இருக்கும்.

இறந்து போனவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்த நாங்கள் தடுக்கப் பட்டுள்ளோம்........... என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரளி) நூல்: புகாரி 313)

ஹுசைன் (ரளி) கொல்லப்பட்ட பின் மூன்று நாட்களுடன் அந்தச் சோகம் முடிந்து விடுகின்றது. இதை அவர்களது குடும்பத்தார் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டு, இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்லி தங்களுடைய வாழ்நாளில் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டனர். ஹுசைன் (ரளி)யின் குடும்பத்தார் ஒவ்வோர் ஆண்டும் முஹர்ரம் பத்தாம் நாளை சோக தினமாக அனுஷ்டிக்கவில்லை, என்றாலும் ஷியாக்கள் முஹர்ரம் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் படுகளம் என்னும் கொண்டாட்டங்களுக்கு புத்துயிர் கொடுத்து, இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை சிதைத்து வருகின்றனர்.

முஹர்ரத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அனாச்சாரங்கள்

ஷியாக்களால் துவங்கி வைக்கப்பட்ட இந்த படுகளத்தில் நடக்கும் தற்போதைய அனாச்சாரங்கள், அட்டூழியங்கள், கேலிக் கூத்துக்கள் ஆகியவற்றை முதலில் வரிசையாகப் பார்ப்போம்.

பஞ்சா எடுத்தல், ஏழாம் பஞ்சா, தாம்பத்தியத்திற்குத் தடை, பத்தாம் பஞ்சா, பத்தாம் நாள் சந்தனக் கூடு, போதையில் சிலம்பாட்டம், மது போதையில் புலி வேஷம் போடுதல், நோய் நிவாரணத்தை கேட்டு தீக் கிணற்றில் உப்பு மிளகு போடுதல், தீமிதி, தீக்குளிப்பு, தீச்சட்டி தூக்குதல், மாவிளக்கு ஏந்துதல், அல்லாஹ் நமக்கு பரிசுத்தமாக்கி தந்த மீன் உணவை தடுத்து ஹராமாக்குவது, பெண்களின் கவர்ச்சி நடனம், ஆடல் பாடல்கள், ஏர்வாடியிலும் வெளியூரிலும் வசிக்கும் கன்னி பெண்களும், திருமணமான பெண்களும் அன்னியர்கள் முன் தன் அழகு அலங்காரங்களையும் மறைக்காமல் வெளிகாட்டி செல்வது, குழந்தை பாக்கியம் வேண்டி நேர்ச்சை, அதுமட்டுமில்லாமல் இவ்வருட சிறப்பம்சமாக குலுக்கல் பரிசு என்ற பெயரில் சூதாட்டம் போன்ற, இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து அநியாயமான செயல்களையும், முஸ்லீம் என்று கூறி செய்து வருகின்றனர். இஸ்லாத்திற்கும் இந்த அனாச்சாரத்திற்கும் என்ன சம்மந்தம் என்பதை சற்று நிதானமாக சிந்திப்பீர்களா?

மேலும் நபியின் நடைமுறை வாழ்க்கையில் அறியாமைக்கால நேர்ச்சைகளை தடைசெய்ததை கீழ்கண்ட சம்பவங்களின் மூலம் நாம் தெளிவாக அறியலாம்.

ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்களிடையே தொங்கிய படி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இவருக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். (கஅபாவுக்கு) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கின்றார்' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், இவர் இவ்விதம் வேதனைப் படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது' என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரளி) நூல்: புகாரி 1865)

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் கூட, இது போன்று தம்மை வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளைச் செய்யக் கூடாது எனும் போது அதை மற்றவர்களுக்காகச் நேர்ச்சை செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளங்கலாம். அப்படியே பாவமான காரியத்தில் நேர்ச்சை செய்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது என்ற சட்டமும் இந்த மக்களுக்குத் தெரியவில்லை.

அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால், அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரளி) நூல்: புகாரி 6696)

அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை மறந்துவிட்டு, கற்பனையாக ஒன்றை ஏற்படுத்தி, அதை பஞ்சா என்று பெயரும் கூறி அல்லாஹ்விற்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கமான நேர்ச்சையை இந்த சந்தன கூடு சாவடிக்குள்ளும், கொடிமரத்திற்கும் செய்து வரும் இணைவைப்பு என்னும் மாபாதகம் நடப்பதை நாம் அனைவரும் தடுக்க வேண்டாமா? நாம் தடுக்க வேண்டும் என்பதை கீழ்வரும் நபிவழிச் செய்தி நமக்கு அறிவுறுத்துகிறது.

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். (அந்த மரத்தை) தாத்து அன்வாத்' என்று சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே.. அவர்களுக்கு தாத்து அன்வாத்து' என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்தி தாருங்கள் என்று கூறினோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்! அல்லாஹூ அக்பர்.! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும் என்று சொல்லி, என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா(அலை) அவர்களிடத்தில், மூஸாவே அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாக பின்பற்றுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூவாக்கிதுல்லைசி(ரளி) நூல்: திர்மிதி 2106, அஹ்மத் 20892)

அந்த வார்த்தை தற்போது இந்த படுகளம் மூலம் மெய்படுத்தப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். எதை எதை எல்லாம் நபியவர்கள் தடுத்தார்களோ அவை அனைத்தும் ஒரே இடத்தில் நடத்தப்படுவது தான் இந்த படுகளம் என்னும் முஹர்ரம் மாத கொண்டாட்டம். எனவே யூத ஷியாக்களின் கூட்டுச் சதியால், உயிரினும் மேலான இஸ்லாமிய மார்க்கத்தை கீழான நிலையில் மக்களுக்கு காட்டுகின்றனர். இதனால் இஸ்லாத்தை விரும்புபவர்கள், நம்மிடம் உள்ள மூடப்பழக்கங்கள் இங்கேயும் இருக்கிறது என நினைத்து இஸ்லாத்தினுள் நுழைய தயங்குகின்றனர்.

இஸ்லாமிய கொள்கைகளை மேலோங்க செய்வதற்காக தியாகம் செய்ய வேண்டிய இளைய சமுதாயம் தான், இது போன்ற அனாச்சாரங்களை தடுக்க வேண்டியவர்கள். ஆனால் அவர்களோ இதை கண்டு கொள்ளாமல் இருப்பது எந்த வகையில் நியாமான செயலாகும்? நாம் செய்யும் தியாகம் தான் நமக்கு பின்னுள்ள இஸ்லாமிய சமுதாயத்தை நெருக்கடியில்லாமல் வாழ வைக்கும் என்பதை நாம் அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உலகில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை தெளிவான அடிப்படையில தருவதே இஸ்லாத்தின் உன்னத நோக்கமாகும். எனவே இந்த தூய இஸ்லாம், இது போன்ற ஷியாக்களின் சதித்திட்டத்தினால் உருவாக்கப்பட்ட படுகளம் என்ற அனாச்சாரத்தை எப்படி ஆதரிக்கும் என்பதை ஒரு கணம் சிந்திக்கவும்.

மேலும் அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதை பாருங்கள்.

உங்களுக்கு முன் சென்ற தலைமுறையினரில் நாம் காப்பாற்றிய சிலரைத் தவிர பூமியில் நாசமுண்டாக்குவதை தடுக்கக் கூடிய நல்லோர்கள் இருந்திருக்கக் கூடாதா? அநீதி இழைத்தோர் சொகுசு வாழ்க்கையில் முழ்கினார்கள். அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர். இன்னும் ஊரார் சீர்திருத்துவோராக இருக்கும் நிலையில் அநியாயமாக அவ்வூரை அல்லாஹ் அழிக்க மாட்டான். (அல்குர்ஆன் 11: 116-117)

எனவே அல்லாஹ்வின் அழிவும் வேதனையும் நம்மையும், நமது சந்ததிகளையும் அடையும் முன்பே நம்மை தற்காத்துக்கொள்ள, இந்த படுகளத்தை தடுத்தே ஆகவேண்டும் என்பதை யாரும் மறக்க வேண்டாம்.

எனவே நாம் நம்முடைய பொருளாதாரத்தில் இருந்து ஒரு பைசா கூட இந்த அனாச்சாரங்களுக்கு செலவு செய்யவோ, அல்லது வேடிக்கை பார்க்கவோ, வேறு எவ்வகையிலும் ஒத்துழைப்பு கொடுப்பதோ இஸ்லாமிய அடிப்படையில் அல்லாஹ்விடம் நமக்கு வேதனையையும், தண்டணையையும் ஏற்படுத்திவிடும் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

நமது கடமைகள்

இஸ்லாத்தை பாதுகாப்பது ஒரு முஃமீனுக்கு முக்கிய கடமையாகும். இஸ்லாத்தை பாதுகாப்பது என்றால், குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் மூலம் போதிக்கப்பட்ட கொள்கைகளையும், கோட்பாடுகளையும், கூட்டாமல் குறைக்காமல் செய்து வருவது தான். அப்படி யாராவது கூட்டுவதோ குறைப்பதோ செய்யும் பொழுது அதை தட்டிக் கேட்க வேண்டிய, தடுத்து நிறுத்த வேண்டிய, அதை மனதால் வெறுக்க வேண்டிய கடமை முஸ்லீம்கள் அனைவருக்கும் உண்டு.

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் 3:104)

எனவே மேற்குறிப்பிட்ட வசனத்தின் அடிப்படையில், ஜமாஅத் நிர்வாகிகள் நன்மையை ஏவி தீமையை தடுப்பது கட்டாய கடமையாக உள்ளது. எனவே ஜமாஅத்தின் கீழ் வாழும் முஸ்லீம்களை, படுகளத்தை தடுத்து நிறுத்த ஒத்துழைப்பு தரும்படி உத்தரவிடுவதும், அதை தடுப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதும் ஜமாஅத் நிர்வாகிகளின் முக்கிய கடமையாகும்.

ஜமாஅத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளில் உள்ளவர்கள் யாராவது, இதை தடுக்க முன்வராத நிலையில், முஸ்லீமாக இருக்க கூடிய ஒவ்வொருவரும் நீங்கள் இதை ஏன் தடுக்கவில்லை என்று அந்த ஜமாஅத்தின் நிர்வாகிகளிடம் கேட்பது ஒவ்வொரு முஹல்லாவில் வசிக்கும் முஸ்லீம்களின் கடமையாகும். இக்கடமை நாம் செய்யாவிட்டால், நமக்கும் நமது ஊருக்கும், அல்லாஹ்வின் கடுமையான தண்டணை வருவதை நாம் பயந்து கொள்ளவேண்டும். இப்படிபயந்து கொள்ள இதற்கு முன் சென்ற நபிமார்களின் சமுதாயத்தவர்களுடைய நிலைமையை நமக்கு போதுமான சான்றாக உள்ளது.

எனவே இதை படிக்கும் நீங்கள், உங்கள் முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளிடம், ஏன் படுகளத்தை இதுநாள் வரை தடுக்காமல் இருந்தீர்கள்? இனிமேலாவது இதை தடுப்பீர்களா? இதை தடுக்க நீங்கள் என்றுதான் முயற்சி எடுப்பீர்கள்? ஏன் இதை தடுக்க முயற்சி எடுக்கக் கூடாது? அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளின் நிர்வாக பொறுப்பேற்று நடத்த கூடிய நீங்கள், இந்த அனாச்சாரங்களை தடுக்காமல் எப்படி பொறுமையாக இருக்கிறீர்கள்? மக்களே இனிமேலாவது நீங்கள் ஜமாஅத் நிர்வாகத்திடம் இதை கேட்பீர்களா?

இளைஞர்களே! உங்கள் முஹல்லா தலைவர்களை சந்தித்து இந்த அனாச்சாரங்களை தடுக்கும் படி என்றாவது முயற்சி செய்தீர்களா? செய்யவேண்டாமா? ிந்திக்கவும். பெண்களே! நீங்கள் இந்த அனாச்சாரங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருப்பதோடு, உங்கள் வீட்டு ஆண்மக்களை படுகளத்தை தடுத்து நிறுத்த, வீதிக்கு சென்று போராடுங்கள் என்று கூறி என்றாவது அனுப்பியுள்ளீர்களா? சிந்திக்கவும். எனவே மேற்கூறிய அனைத்தையும் சிந்தித்து தெளிவு பெற்று அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டுவதற்கு முன்வாருங்கள்.

நன்றி: அனைத்து முஹல்லா வாசிகள் - ஏர்வாடி திருநெல்வேலி

Saturday, December 4, 2010

உலக மனிதனே இஸ்லாத்தின் சாரம்! தினமணியின் அற்புதமான கட்டுரை!



குறிப்பு; செய்தியின்மீது க்ளிக் செய்து படிக்கவும்.
மீலாது மேடைகளிலும், வாழ்த்துச்செய்தியிலும் தங்களுடைய அறியாமையின் காரணமாக, இஸ்லாத்திற்கு மாற்றமாக கருத்துச்சொல்லும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இஸ்லாம் சம்மந்தமாக மிக அற்புதமான கட்டுரையை திரு. பழ.கருப்பையா அவர்கள் வடித்துள்ளார்கள். அதை தினமணி இதழிலிருந்து எடுத்து நன்றியுடன் வெளியிட்டுள்ளோம். கட்டுரையாசிரியர் அவர்களுக்கும், தினமணி குழுமத்திற்கும் அல்லாஹ், நேர்வழிகாட்ட துஆ செய்வோம்.
நன்றி:தினமணி

Thursday, November 25, 2010

பீகார் தேர்தல் முடிவுகள் தரும் பாடங்கள்

தேர்தல் கருத்துக் கணிப்புகளை உண்மை என நிரூபிக்கும் முடிவுகள் பீகார் தேர்தலில் நிகழ்ந்தேறியுள்ளது.நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க கூட்டணிக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து பீகார் மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். இந்த தேர்தல் முடிவின் பின்னணியில் பீகார் மக்கள் எதனை விரும்புகின்றார்கள் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகின்றது.முதல்வர் என்ற நிலையில் இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமரும் நிதீஷ்குமாரின் அரசியல் தந்திரங்கள், நல்லதொரு ஆட்சிமுறைக்கும் கிடைத்த வெற்றிதான் இது.மாநில மற்றும் தேசிய அளவில் பிரபலமான லாலுபிரசாத் என்ற அரசியல் ராவணனுக்கு கிடைத்த மிகப்பெரிய அடியாகவே பீகார் தேர்தல் முடிவுகள் மாறியுள்ளன.யாதவ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையேதான் லாலுவின் வாக்கு வங்கிகள் அடங்கியிருந்தன. இந்த வாக்கு வங்கியை தன் பக்கம் நிதீஷ்குமார் ஈர்த்துவிட்டார் என்பதைத்தான் இத்தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.தொலைநோக்கு பார்வையுடன் கூடிய ஆட்சி நடவடிக்கைகளின் மூலம் முஸ்லிம்கள், தலித்துகள், பிற்பட்ட வகுப்பினரின் ஆதரவைப் பெறுவதற்காக வன்முறையற்ற பீகார் என்ற நிதீஷின் முழக்கம் பீகார் மக்களிடம் எடுபட்டது. கால்நடை தீவன ஊழலும், மனைவி ராஃப்ரி தேவியை முதல்வராக்கி ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சிபுரிந்த லாலுவின் நடவடிக்கையில் பழகிப்போன பீகார் மக்களுக்கு நிதீஷின் ஊழலற்ற ஆட்சி என்ற நிலைப்பாடு ஈர்த்தது எதிர்பார்த்த ஒன்றுதான்.வெளிநாடுகளில் பணியாற்றும் பீகாரிகளிடமிருந்து முதலீடுகளைப் பெற்று தொழில் துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் திட்டத்திற்கு துவக்கம் குறித்ததும், அடிப்படை வசதிகளின் வளர்ச்சியும், விவசாயத்திற்கு ஆதரவான கொள்கைகளும் நிதீஷின் ஆட்சியை மக்கள் விரும்பும் ஆட்சியாக மாற்றிவிட்டது.உறைவிடமில்லாதவர்களுக்கு நிலம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் நிதீஷிற்கு ஆதரவாக மாறின.பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட போதிலும் மதசார்பற்ற நம்பிக்கையை நிலைநிறுத்துவதில் நிதீஷ்குமார் மிகவும் கவனமாக இருந்தார். இது தேர்தலில் அதிகமாகவே பிரதிபலித்துள்ளது.பா.ஜ.கவின் பிரச்சார பீரங்கியான நரேந்திர மோடியை பீகாரில் கால் ஊன்ற அனுமதிக்காதது, மோடியுடன் இணைந்து நிற்பது போன்ற புகைப்படத்துடன் வெளியான விளம்பரத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது, அத்வானி பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் வரும் முன்பே நிதீஷ்குமார் விடைப்பெற்றது, பா.ஜ.க தலைவர்களுடனான இரவு விருந்தில் கலந்துக் கொள்ளாதது போன்ற நிலைப்பாடுகள் நிதீஷின் மீது முஸ்லிம் வாக்காளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டதும் இன்னொரு காரணமாகும். ஜாதி,மத உணர்ச்சிகளில் சிக்கித் தவித்த பீகார் அரசியலில் வளர்ச்சித் திட்டங்களின் மூலம் நிதீஷ்குமார் பெருவாரியான ஆதரவைப் பெற்றார் என்பது சரியல்ல, மாறாக ஜாதி,மத வாக்கு வங்கிகளை தனக்கு அனுகூலமாக மாற்றினார் என்பதுதான் உண்மை.

நன்றி:http://paalaivanathoothu.blogspot.com/

பீகார் தேர்தல்:19 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி. 37 பேர் 2-வது இடம்

பாட்னா,நவ.25:நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் பல்வேறு கட்சியைச் சார்ந்த முஸ்லிம் வேட்பாளர்கள் 19 பேர் புதிய சட்டசபைக்கு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.கடந்த பீகார் சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில் இம்முறை 4பேர் கூடுதலாக வெற்றிப் பெற்றுள்ளனர். இரண்டாவது இடத்தை பிடித்த 37 முஸ்லிம் வேட்பாளர்களில் ஒன்பது பேர் 5 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளனர்.இதில் வெற்றிப் பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களில் 4 பேர் பா.ஜ.க சார்பிலும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஒருவரும், ஐக்கிய ஜனதா தளம் சார்பாக 7 பேரும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் சார்பாக 5 பேரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும், சுயேட்சையாக ஒருவரும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

செய்தி:twocircles.net

எகிப்து எல்லையில் இஸ்ரேல் மின்வேலி அமைக்கிறது

டெல்அவீவ்,நவ.23:இஸ்ரேலில் சட்டவிரோதமாக எகிப்து நாட்டு எல்லை வழியாக நுழைபவர்களை தடுப்பதாக கூறி இஸ்ரேல் எகிப்திய நாட்டு எல்லையில் 250 கிலோமீட்டர் நீளத்திற்கு நவீன கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் அடங்கிய மின்சார வேலியை அமைக்கவுள்ளது.37.2 கோடி டாலர் செலவில் அமைக்க திட்டமிட்டுள்ள இவ்வேலி ஒருவருடத்தில் முடிவடையும் எனக் கருதப்படுகிறது.ஆப்ரிக்காவிலிருந்து வருவோர் எகிப்து வழியாக இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைவதாக கூறப்படுகிறது. கடந்த வருடங்களில் எகிப்திய எல்லைப் படை இவ்வாறு நுழைபவர்களை சுட்டுக் கொன்றது. ராணுவத்தின் எச்சரிக்கையை இவர்கள் மீறி உள்ளே நுழைய முற்பட்டதால் சுட்டதாக கூறப்படுகிறது.இஸ்ரேல் மற்றும் யூதர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனை களையவே இந்த வேலி அமைக்கப்படுவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கிறார்.வாரத்திற்கு 700 பேர் வீதம் இஸ்ரேலுக்குள் எல்லை வழியாக நுழைவதாக குடியேற்ற அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஹாரட்ஸ் என்ற இஸ்ரேலிய பத்திரிகை இம்மாத துவக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.2010 ஜனவரி முதல் நவம்பர் வரை 10858 பேர் இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. 2009 ஆம் ஆண்டில் 4341 பேர் மட்டுமே எல்லை வழியாக நுழைந்துள்ளனர்.இத்தாலியும், லிபியாவும் 2009 ஆம் ஆண்டு உருவாக்கிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஐரோப்பாவை நோக்கிய் ஆப்ரிக்க குடியேற்றக்காரர்களின் கடல் மார்கம் தடைச் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சிறந்த வேலைத்தருவதாக வாக்களித்து சில நிறுவனங்கள் இவர்களை இஸ்ரேலுக்குள் அனுப்புகின்றனர் என கூறப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வரதட்சணை மரணங்களில் குற்றஞ்சாட்டப்பட்டோர் மீது கொலைக்குற்றம் சுமத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி,நவ.23:வரதட்சணை மரணங்கள் அதிகரித்துவரும் சூழலில், இக்குற்றம் சாட்டப்பட்டோர் மீது கொலைக் குற்றம் சுமத்த உச்சநீதிமன்றம் கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனை விதிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியது. இதுவரை வரதட்சணை மரணங்களுக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

திருமணமாகாத இளம்பெண்கள் செல்ஃபோன் உபயோகிக்கத் தடை

முஸஃபர் நகர்: திருமணமாகாத இளம்பெண்கள் காதல் வலையில் சிக்கி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைத் தடுக்கும் முகமாக, அவர்கள் செல்ஃபோன் உபயோகிக்க கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ள சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தின் முஸஃபர் நகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸஃபர் நகர் மாவட்டத்திலுள்ள லன்க் என்ற கிராமத்தில் அனைத்து சாதி மற்றும் மத பஞ்சாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து செல்ஃபோனால் இளம்பெண்களுக்கு ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விவாதித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
திருமணமாகாத இளம்பெண்கள் காதல் வலையில் சிக்கி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைத் தடுக்கும் முகமாகவே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கிராம பஞ்சாயத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர் கூறினார்.
திருமணமாகாத இளம்பெண்களையும், கணவனை இழந்த விதவைப் பெண்களையும், வெளிநாட்டில் பணிபுரியும் கணவன்மார்களின் மனைவிகளையும் குறி வைத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சமூக விரோத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இது போன்ற பெண்களுக்கு தவறவிட்ட செல்பேசி அழைப்பு (மிஸ்டு கால்) கொடுப்பது, பின்னர் அதன் மூலம் ஏற்படும் தொடர்பை பயன்படுத்தி அவர்களை தங்கள் காம வலையில் சிக்க வைத்து அவர்களது வாழ்வை சீரழிப்பது, அதன் பிறகு அவற்றை வீடியோக்களில், நிழற்படங்களில் பதிவு செய்து அவர்களை மிரட்டி அவர்களது பணம், நகைகளை சூறையாடுவது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன் நண்பர்களுக்கும் அவர்களை இரையாக்குதல், விபச்சார விடுதிகளில் அவர்களை விற்று விடுதல் போன்ற சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுவதை அன்றாடம் செய்திகளில் பார்க்க நேரிடுவது குறிப்பிடத்தக்கது.
நன்றி http://www.inneram.com/

நெதர்லாந்தில் 10,000 குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகள் விநியோகம்

குர்ஆன் செயற்பாட்டுக் குழு: புனித இஸ்லாத்தின் வேத நூலான அல்குர்ஆன் மொழிபெயர்ப்பின் சுமார் 10,000 பிரதிகள், நெதர்லாந்திலுள்ள முஸ்லிம்களுக்கும் ஏனையோருக்கும் இடையே விநியோகிக்கப்படவுள்ளன என துருக்கியின் ஹர்ரியம் தினசரி தெரிவிக்கின்றது.
இம்மொழிபெயர்ப்புகள் டச் மொழியில் உள்ளதுடன், இவற்றின் வெளியீட்டுப் பணிகள் புனித ரமழான் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
இப்பணி, 2010ம் வருடம் அல்குர்ஆனின் வருடமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையை நினைவுகூரும் வகையில், துருக்கியின் வக்ப் தியானத் அமைப்பினால் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் இஸ்லாமோபோபியா போக்கின் வளர்ச்சியைத் தடுத்தல் மற்றும் ஐரோப்பியரிடையே புனித இஸ்லாத்தினதும் அல்குர்ஆனினதும் உண்மையான சிறப்பைத் தெரியப்படுத்தல் என்பன இதன் பிரதான நோக்கங்களாகும்.
இத்திட்டம், சமய ஒருங்கிணைப்புக்கான அமைப்பின் ஒத்துழைப்புடன் அமுல்படுத்தப்படவுள்ளது
நன்றி:http://www.iqna.ir/ta/news_detail.php?ProdID=697719

Thursday, November 18, 2010

வரலாற்றை நிராகரிக்கும் தீர்ப்பு


இடுகையிட்டது பாலைவனத் தூது

கட்டுரையாளர்:பிரபல வரலாற்றாய்வாளர் ரொமீலா தாப்பர்
அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பாகும். ஆட்சியாளர்களால் பல வருடங்களுக்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய ஒரு தீர்மானம் மட்டுமே அந்த தீர்ப்பில் தெளிவாக காணக்கிடைக்கிறது.

நிலத்தின் உரிமை யாருக்கு? என்பதுதான் வழக்கிய முக்கிய பிரச்சனை. தகர்க்கப்பட்ட மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் ஒரு புதிய கோயிலை கட்டுங்கள் என்பதுதான் அத்தீர்ப்பின் முக்கிய பலன்.

சர்ச்சைக்குரிய இவ்விவகாரம் சமகால அரசியலிலும், மதரீதியான பிளவுகளிலும் மூழ்கிக் கிடக்கிறது. வரலாற்று ரீதியான ஆவணங்களின் அடிப்படையிலேயே இவ்வழக்கில் தீர்ப்புக்கூற வேண்டும் என உரிமைக் கோரப்பட்டது. ஆனால் இதனை நீதிமன்றம் பரிசீலித்திருந்தும்கூட தீர்ப்பு கூறும் வேளையில் அதனை முற்றிலும் புறக்கணித்து விட்டதாகவே காணமுடிகிறது.

ஒரு நீதிபதி கூறியுள்ளது என்னவெனில், தெய்வீக அம்சம் பொருந்திய நபர் ஒருவர் இந்த சர்ச்சைக்குரிய நிலத்தின் துல்லியமான ஒரு இடத்தில் பிறந்தார் என்பதாகும். அதனால்தான், கோயிலை அவ்விடத்தில்தான் கட்டவேண்டும் என கூறுகிறார்.

நாட்டு மக்களின் நம்பிக்கையையும், எண்ணங்களையும்தான் நீதிமன்றம் இவ்விவகாரத்தில் கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால்,இதனை நிரூபிக்க தேவையான எத்தகையதொரு ஆதாரமும் இல்லை. ஆகையால்தான், இந்த நீதிமன்றத்திலிருந்து எதிர்பார்த்தது இத்தகையதொரு தீர்ப்பை அல்ல.

ஹிந்துக்கள் ராமனை தெய்வமாக கருதி வழிபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், அதன் பெயரால் மட்டும் ராமனின் பிறந்த இடம் தொடர்பான, நிலத்தின் உரிமைத் தொடர்பான தீர்மானங்களை ஒரு நீதிமன்றத் தீர்ப்பில் ஏற்றுக்கொள்வது சரியா?

அதுமட்டுமல்ல, இவ்விடத்தை கைப்பற்றுவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னம் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளது என்பதும் நினைவுக் கூறத்தக்கது.

நீதிமன்றம் கூறுகிறது, 12-ஆம் நூற்றாண்டில் இவ்விடத்தில் ஒரு கோயில் இருந்ததாம். அது தகர்க்கப்பட்ட பிறகே அங்கு மஸ்ஜித் கட்டப்பட்டதாக தீர்ப்பில் கூறப்படுகிறது. அதனாலேயே, அங்கு ஒரு கோயிலை கட்டுவதற்கான நியாயமும் தீர்ப்பில் முன்வைக்கப்படுகிறது.

இதுத்தொடர்பாக அகழ்வாராய்ச்சித்துறை (ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா) நடத்திய ஆய்வுகளும் அவர்களுடைய அனுமானங்களும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அகழ்வாராய்ச்சித் துறையின் அனுமானங்களை, ஏராளமான பிரபல அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கடுமையான கேள்வி எழுப்பியதும், நிராகரித்ததுமாகும்.

இவ்விஷயங்கள் அந்தந்த துறைகளின் வல்லுநர்களின் நிலைப்பாடுகளுடன் தொடர்புடையதாகும். அதில், பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகள் தற்பொழுதும் உள்ளன. ஆனால், நீதிமன்றமோ ஒரு தலைப்பட்சமான இந்த நிலைப்பாட்டை, பெரிய அளவிலான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இத்தீர்ப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இதனை கருதவியலாது.

இன்னொரு நீதிபதி கூறுகிறார், தான் ஒரு வரலாற்று அறிஞர் இல்லை என்பதால் இவ்வழக்கின் வரலாற்று ரீதியான விவகாரங்களில் தலையிட முடியாது என. ஆனாலும், அவர் கண்டறிந்தது, இந்த வழக்குகளை தீர்மானிப்பதில் வரலாறோ, அகழ்வாராய்ச்சி அறிவியலோ முற்றிலும் தேவையல்ல என்பதாகும். ஆனால்,இங்கு சர்ச்சைக்குரிய விஷயம் என்னவெனில் நிலம் தொடர்பான உரிமைக்கோரல்களில் வரலாற்றுரீதியான சாத்தியம் என்ன என்பதாகும்.

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இங்கு நிலைப் பெற்றிருந்த வரலாற்றுரீதியான சிதிலங்கள்தான் இங்கு ஆய்வுக்குரிய விஷயம். அங்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மஸ்ஜித் ஒன்று நிலைப்பெற்றிருந்தது. அது, இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக விளங்கியது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர்களின் உணர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகளின் காரணமாக ஒரு கும்பல் வேண்டுமென்றே அதனை இடித்துத் தள்ளியது.

ஆனால், இவ்வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் இதுவரைக் கிடைத்த பக்கங்களில் எந்த ஒரு இடத்திலும் இந்த மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவம் நம்முடைய பாரம்பரியத்திற்கு எதிரானது என்றோ அல்லது கண்டிக்கத்தக்க சம்பவம் என்றோ கூறப்படவில்லை. இனி வரவிருக்கும் ராமர்கோயில் என்பது ராமன் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் ஒரு இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்களின் மீது கட்டப்பட்டது எனக் கூறப்படும்.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் எப்பொழுதோ நடந்ததாக கூறப்படும் கோயில் இடிப்பு நீதிமன்றத் தீர்ப்பில் கண்டிக்கப்படுகிறது. அதுவே, புதிய கோயில் கட்டுவதற்கான நியாயமாகவும் தீர்ப்பில் கூறப்படுகிறது. அங்கே நிலைப்பெற்றிருந்த மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் இந்தளவிற்கு தீர்ப்பில் கண்டிக்கப்படவில்லை. மிகவும் வசதியாக, இவ்வழக்கின் எல்லைக்கு வெளியேதான் மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் என நீதிமன்றம் தீர்மானித்திருக்கும் என தோன்றுகிறது.

நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை நமக்கு தருகிறது. அதாவது, ஏதேனும் ஒரு புனிதர் பிறந்தார் எனக்கூறி ஏதேனும் ஒரு மதப்பிரிவினர் ஏதேனும் ஒரு நிலத்தின் மீது உரிமைக்கோரலாம் என்பதாகும். இனி இத்தகையதொரு ஏராளமான ஜென்மபூமிகள் நாட்டின் பல பகுதிகளிலும் எழும்பும். தமது வசதிக்கேற்ப பொருந்திய ஒரு இடத்தை கண்டறிந்து அதற்கு தேவையான சில உரிமை வாதங்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும் உருவாக்கினாலே போதும்.

இங்கே நடந்த வரலாற்றுச் சின்னத்தின் இடிப்பை நீதிமன்றம் கண்டிக்காத சூழலில் எதிர்காலத்தில் வழிபாட்டுத்தலங்களை இடிக்க பலரும் கிளம்பினால் அதனை எவ்வாறு தடுக்க இயலும்?

வழிப்பாட்டுத்தலங்களின் நிலையை மாற்றுவதை தடைச்செய்யும் 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் பெரிதாக ஒன்றும் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இதுவரையிலான நமது அனுபவம் எடுத்தியம்புகிறது.

வரலாற்றில் நிகழ்ந்ததெல்லாம் நிகழ்ந்ததுதான். அவற்றையொன்றும் இனி மாற்றவியலாது. ஆனால், உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை ஆவணங்கள் பரிசோதிக்கவும், அதன் நம்பிக்கைக்குரிய ஆதாரங்களை கண்டறியவும் நம்மால் இயலும்.

இன்றைய சமகால அரசியல் விருப்பங்களுக்காக வரலாற்றை மாற்றவியலாது. வரலாற்றின் மீதான மரியாதையை சீர்குலைத்து, அதற்கு பதிலாக மதநம்பிக்கையை நிலைநிறுத்துகிறது நீதிமன்றத்தின் தீர்ப்பு.

ஆனால், சமூகத்தில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைப்பெற வேண்டுமானால், நமது நாட்டின் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்கு முக்கியமாக தேவை என்னவெனில், நீதிமன்றங்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவதற்கு மதத்தையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொள்ளக்கூடாது. மாறாக, ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவேண்டும். இந்த உணர்வு மக்களிடையே ஏற்படவேண்டும்.

நன்றி:தி ஹிந்து, தேஜஸ் மலையாள நாளிதழ்

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்