அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, November 11, 2010

நான்காம் கலீஃபா அலி (ரலி) வாழ்க்கை வரலாறு


கவலையோடு.. சில வார்த்தைகள்!

மற்ற கலீஃபாக்களின் வாழ்க்கை வரலாற்றை ஆரம்பிக்கும் பொழுது இல்லாத கவலைää அலி (ரலி) அவர்களது வாழ்க்கையை ஆரம்பிக்கும் பொழுதுää கண்ணீர் நீர்ப் பூக்கள் கோர்த்துக் கொண்டன. அன்றைக்கு ஆரம்பித்த உள்வீட்டுப் பிரச்னை இன்று வரைக்கும் தீர்க்கப்படாமலேயே சென்று கொண்டிருப்பதை வரலாறு நெடுகிலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். மேலும்ää இன்றைக்கு மார்க்க அறிஞர்கள் முதல் சாதாரண முஸ்லிம் வரைக்கும்ää அலீ (ரலி) வாழ்ந்த காலப் பகுதியில் வாழ்ந்தவர்களில் யார் மீது தவறு இருக்கின்றதுää தவறிழைத்தவர்கள் யார்? என்பதில் குழப்பம் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றது. எனவேää அலி (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை உங்களுக்கு நாம் வழங்கும் பொழுதுää அதில் தவறுகளைக் காண்பீர்கள் என்று சொன்னால் அது நாம் எடுத்துக் கொண்ட மொழியாக்கத்தினைச் சார்ந்து தான்ää நாம் மொழிபெயர்த்து வழங்குகின்றோமே ஒழிய யார் மீதும் தவறு கண்டு பிடிக்கும் நோக்கத்துடன் இந்த மொழியாக்கத்தைச் செய்யவில்லை என்பதை மனதில் கொண்டுää விவாதங்களுக்கு வழி வகுக்காமல் வரலாற்றை மட்டும் பார்த்துää படிப்பினை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

ஆரம்பகால வாழ்க்கை

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியை முதன் முதலில் தனது இரத்த சொந்தங்களில் இருந்து ஆரம்பித்த பொழுதுää அவர்களது குடும்பத்தவர்களில் அப்பொழுது அலீ (ரலி) அவர்களுக்கு வயது பத்து தான் ஆகியிருந்தது. அப்பொழுதே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதோடுää 'நான் எப்பொழுதும் உங்களுக்கு மிக நெருக்கமாகவே இருப்பேன்" யா ரசூலுல்லாஹ்..! என்று வாக்குறுதி அளித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு 30 வயது இளமைமையானவர். இவருடைய தந்தை அபூதாலிப்ää தாயார் ஃபாத்திமா ஆவார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே தந்தையாரை இழந்தார்கள். தந்தை இறந்ததன் பின்பு பாட்டார் அப்துல் முத்தலிப் அவர்களின் அரவணைப்பிலும்ää அடுத்ததாக தாயார் அமீனா அவர்களும் மரணமடைந்ததன் பின்புää அலீ (ரலி) அவர்களின் தந்தையாரும்ää தனது சிறிய தந்தையுமான அபூதாலிப் அவர்களின் அரவணைப்பிலும் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வளர்ந்தார்கள்.

அபூதாலிப் அவர்களின் குடும்பம் மிகப் பெரியது. என்றாலும் அவர்களது குடும்பம் வசதியானது தான். அலீ (ரலி) அவர்கள் பிறந்த பொழுதுää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நல்ல வாலிப் பருவத்தில் இருந்தார்கள். அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மனைவியும்ää குழந்தைகளும் இருந்தார்கள். எனவேää அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களை தன்னுடன் வைத்துப் பராமரித்துக் கொண்டார்கள். இந்த நிலையில்ää அலீ (ரலி) அவர்கள் மிகவும் உன்னதமான குடும்பப் பராமரிப்பின் கீழ்ää எந்த வீடும் அளிக்கவியலாத பண்புப் பாசறையின் கீழ் அவர்களது இளமைக் கால வாழ்வு ஆரம்பமானது.

தனது இளமைக் காலத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலம் பெற்றுக் கொண்ட பயிற்சிகள்ää அவரது இறுதிக் காலம் வரைக்கும் நீடித்தன. மிகவும் கூர்மையான அறிவும்ää தொலைநோக்குச் சிந்தனையையும்ää சத்தியத்தை விரும்புகின்ற நெஞ்சத்தையும் அவை தந்து கொண்டிருந்தன. அனைத்திலும்ää அவரை எதற்கும் அஞ்சாத மாவீரராகவும்ää அல்லாஹ்வின் பாதையில் தன்னை அற்பணிக்கக் கூடியவராகவும் அவரை பரிணமிக்கச் செய்தது. இத்தகைய அரும் பெருங்குணங்கள் இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் அரிதாகக் காணக் கிடைக்கும் வரலாற்றுப் பொக்கிஷங்களாகும்.2. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பயிற்சிப் பாசறையில் இளமைக் கால வாழ்வை ஆரம்பித்த அலீ (ரலி) அவர்களுக்கு அப்பொழுது ஒன்பது வயதே ஆகியிருந்தது. அப்பொழுது தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துப் பணியை ஆரம்பம் செய்திருந்த கால கட்டம். ஒருநாள் அலீ (ரலி) அவர்கள் வீட்டில் இருந்த பொழுதுää இறைத்தூதர் (ஸல்) அவர்களும்ää அவர்களது துணைவியாரும் தரையில் தலையை வைத்துää சுஜுது நிலையில் இருப்பதைக் காண்கின்றார்கள். அவர்கள் அப்பொழுது அல்லாஹ்வைப் புகழ்ந்த வண்ணமும் இருந்தார்கள். இந்த அதிசய நிகழ்ச்சியை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த அலீ (ரலி) அவர்கள்ää இதுபோன்றதொரு நிகழ்வை நாம் எங்கும் எப்பொழுதும் கண்டதில்லையேää என்ற சிந்தனையில் ஆழ்ந்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்த பின்ää அவர்களை அணுகிய அலீ (ரலி) அவர்கள்ää சற்று முன் நான் பார்த்த காட்சிக்கு என்ன அர்த்தம் என்று வினவினார்கள்.

நாங்கள்ää நம்மைப் படைத்த வல்லோனாகியää ஏகனாகிய அல்லாஹ்வைத் தொழுது கொண்டிருந்தோம் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலிறுத்து விட்டு ...ää

நான் உங்களுக்கு ஒரு அறிவுரை ஒன்றைக் கூறுகின்றேன். நீங்கள் எப்பொழுதும் அந்த லாத்ää உஸ்ஸாää அல்லது வேறு எந்த சிலைகளுக்கு சிர வணக்கம் செய்யாதீர்கள்ää சற்று நீங்கள் பார்த்தீர்களே..! அதைப் போல உங்களைப் படைத்த ஏகனுக்கு மட்டும் சிர வணக்கம் செய்யுங்கள் என்று கூறினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

நான் இதுபோல எப்பொழுதும் கேள்விப்பட்டதில்லையேää! இது அலீ (ரலி) அவர்கள். நான் எனது தந்தையிடம் முதலில் இது பற்றிக் கலந்து விட்டு வந்து உங்களுக்குப் பதில் சொல்கின்றேன் என்று கூறினார்கள் அலீ (ரலி) அவர்கள்.

அலீயே..! நீங்கள் இங்கு பார்த்ததை யாரிடமும் இப்போதைக்குக் கூற வேண்டாம். நீங்களாகவே சிந்தியுங்கள்ää அதனை உங்களது மனதிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த அறிவுரை அவருக்கு நல்லதாகவே பட்டது. எனவேää அதுபற்றிச் சிந்திக்கலானார்கள். சிந்தனைத் தெளிவுக்குப் பின்னர்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களுயை கருத்தினை ஏற்றுக் கொண்டார்கள். அடுத்த நாள் காலை இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். இளைஞர்களிலேயே அலீ (ரலி) அவர்கள் தான் முதன் முதலில் இஸ்லாத்;தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட வரலாற்றுப் பெருமை கொண்டவர்கள். இந்த வயதில் இவ்வளவு சுதந்திரமாக சிந்தித்துää ஒரு கொள்கையை ஏற்றுக் கொள்வது என்பது மிகவும் அரிதானதொன்று..! அதனைக் காட்டிலும் தனது கண் முன் தனது சமுதாயம் ஒரு பாதையில் போய்க் கொண்டிருக்கும் பொழுதுää சத்தியத்தைத் தேடி தனது சிந்தனைக் கதவுகளைத் திறந்து வைப்பதென்பது நினைத்தும் கூட பார்க்கவியலாத வயது அது..! ஆனாலும் சத்தியத்தை அவர்கள் எவ்வளவு விரும்பினார்கள்ää அதன் மீது எந்தளவு காதல் கொண்டிருந்தார்கள் என்பதைத் தான் அவர்களது சிந்தனைத் தெளிவு நமக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது.

3. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நெருக்கம்

அலீ (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வளர்ந்தார்கள். அதன் காரணமாக வாழ்க்கை பற்றியும்ää இன்னும் இறைநம்பிக்கை பற்றியும் அதன் அடிப்படைகள் பற்றியும் மிகவும் ஆழமான அறிவைப் பெற்றார்கள். எனவேää இது பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறும் பொழுது :

''நான் அறிவுலகத்தின் நகரம் என்றால்ää அலீ அதன் வாசலாவார்"" என்று கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது அலீ (ரலி) அவர்கள் தீராத அன்பு கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் கிளம்பிய அன்றைய இரவில்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கொன்று விடுவதற்கு இரத்த தாகம் எடுத்த குறைஷிகள் அவர்களது வீட்டைச் சுற்றிலும் தயாராகக் காத்திருந்தார்கள். வீட்டைச் சுற்றிலும் எங்கும் வாள்கள் பளபளத்துக் கொண்டிருந்தன. காலையில் வீட்டை விட்டு வெளியே வரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை கண்ட துண்டமாக வெட்டிக் குதறுவதற்காக அந்த மனிதக் கழுகுகள் காத்துக் கொண்டிருந்தன.

அப்பொழுதுää இறைத்தூதர் (ஸல்) அலீ (ரலி) அவர்களைப் பார்த்துää நீங்கள் எனது படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள். நான் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிää மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்கின்றேன் என்று கூறினார்கள்.

மிகவும் உவகையோடு அலீ (ரலி) அவர்கள் எந்த மறுப்புமின்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படுக்கையில் படுத்துக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களை எதிரிகளின் சதித்திட்டத்திலிருந்து காத்து விட்ட நிம்மதி. அந்த நிம்மதியிலேயே அன்றைய இரவை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படுக்கையில் தூங்கிக் கழித்தார்கள்.

மறுநாள் காலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களது படுக்கையில் அலீ (ரலி) அவர்களைக் கண்ட மக்கத்துக் குறைஷிகள் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோமே என கைசேதப்பட்டனர்ää அலீ (ரலி) தான் தன்னுடைய உயிரைப் பணயமாக வைத்துää முஹம்மதைத் தப்பி ஓட வைத்து விட்டார் என்று உறுமிக் கொண்டனர். அலீ (ரலி) அவர்கள் இவை அத்தனையும் எந்த சலனமுமில்லாமல் எதிர்கொண்டதுடன்ää அலீ (ரலி) அவர்களை எதுவும் செய்யமால்ää அந்த இடத்தை விட்டும் அகன்றனர்.

மக்கத்துக் குறைஷிகள் தங்களது பொருட்களை பாதுகாப்பிற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமே கொடுத்து வைத்திருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவ்வளவு அவர்கள் எதிர்த்த பொழுதும்ää தங்களது பொருட்களை பாதுகாப்பதற்கு அவரை விட்டால் வேறு யார் இருக்கின்றார்கள் என்று நினைத்துää அவரிடம் தான் கொடுத்தும் வைத்திருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஹிஜ்ரத்திற்கு முன்பாகவே அனைத்துப் பொருட்களையும் உரியவர்களிடம் சேர்ப்பித்து விடும்படிää அலீ (ரலி) அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். அதன் பின் அலீ (ரலி) அவர்கள் மக்காவில் மூன்று நாள் தங்கி இருந்தார்கள். மக்களின் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டுää இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சேர்ந்து கொள்வதற்காக மக்காவை விட்டு அலீ (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குக் கிளம்பினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அலீ (ரலி) அவர்கள் மிகவும் நெருங்கிய இரத்த உறவு முறை உடையவராக இருப்பினும்ää இன்னும் அதிக நெருக்கத்துடன் அலீ (ரலி) அவர்களைப் பார்க்க விரும்பிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää தனது கடைசி மகளும்ää தனது அன்பிற்குப் பாத்திரமான மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அலீ (ரலி) அவர்கள் தனக்குக் கிடைத்த கௌரவத்தை உணர்ந்தவர்களாக நடந்து கொண்டார்கள். இன்னும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் வரைக்கு அடுத்த பெண்ணை அவர்கள் மணக்கவில்லை. அலீ (ரலி) மற்றும் ஃபாத்திமா (ரலி) தம்பதியினருக்கு ஹஸன் மற்றும் ஹ{ஸைன் என்ற இரு மகன்கள் பிறந்தனர். அவர்களை தனது சொந்த மகனைப் போல இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாசமழை பொழிந்தார்கள்.

ஹிஜ்ரி 9 ம் ஆண்டுää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரியாவை நோக்கிப் படையெடுப்பு ஒன்றை நடத்தினார்கள். அது தபூக் போர் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் படைக்குத் தலைமை தாங்கிச் செல்கின்ற காரணத்தால்ää அவர்கள் வரும் வரைக்கும் மதீனாவின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்துமாறு அலீ (ரலி) அவர்களைப் பணித்தார்கள். இதுவேää அலீ (ரலி) வருத்தமடையச் செய்தவற்கான வழியை வேஷதாரிகள் உண்டாக்க காரணமாக அமைந்தது.

அலீயைத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு விருப்பமில்லை என்று அந்த வேஷதாரிகள் பிரச்சாரம் செய்தார்கள்.

இந்தச் செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களது காதுகளுக்குச் சென்ற பொழுதுää அலீ (ரலி) அவர்களை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää

அலியே..! ''மூஸா (அலை) அவர்களுக்கும் ஹாரூன் (அலை) அவர்களுக்கும் இருந்த உறவு முறை போல நமது உறவு முறை இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பவில்லையா?"" என்று கேட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த வார்த்தை அலீ (ரலி) அவர்களை அன்பால் கட்டிப் போட்டது. வேஷதாரிகளின் விஷ வார்த்தைகளும் அடங்கியது.

ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு முதல் ஹஜ் நடைபெற்றது. அந்த நேரத்தில்ää இணைவைப்பாளர் கஃபாவில் நுழையக் கூடாது என்று இறைவன் கட்டளை விதித்தான். இந்தக் கட்டளையை ஹஜ்ஜில் மக்கள் கூடுகின்ற பொழுது தான் அறிவிக்க முடியும். அன்றைய கால வழக்கப்படிää இந்த அறிவிப்பை இறைத்தூதர் (ஸல்) அவர்களோää அல்லது அவருக்கு நெருங்கிய உறவினர்களோ தான் செய்ய முடியும் என்றிருந்த நிலையில்ää இந்தப் பணிக்கு அலீ (ரலி) அவர்களை இறைத்தூதுர் (ஸல்) அவர்கள் தேர்வு செய்தார்கள். தனது சொந்த ஒட்டகமான கஸ்வாவை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்துää அல்லாஹ்வின் உத்தரவை அறிவிக்கச் சொன்னார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது இறுதிக்காலத்தில் சுகவீனம் அடைந்த பொழுதுää அவர்களுக்கு மிக அருகிலேயே இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்திய பொழுதும் அங்கே தான் இருந்தார்கள்.

இறைவசனங்களை எழுதக் கூடிய எழுத்தாளராகவும் அலீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் அனுப்பப்படக் கூடிய கடிதங்களை எழுதக் கூடிய எழுத்தராகவும் அலீ (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்ட 10 நன்மக்களில் அலீ (ரலி) அவர்களும் ஒருவராவார். இவருக்கு முன் ஆட்சி செலுத்திய மூன்று கலீபாக்களும் அலீ (ரலி) அவர்களிடம் நிர்வாக விஷயங்களில் ஆலோசனை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.

''அலீ (ரலி) அவர்கள் நம்மிடையே உள்ள மிகச் சிறந்த நீதிபதி"" என்று உமர் (ரலி) அவர்கள் அடிக்கடி கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். ஒருமுறை அல்ல பலமுறை உமர் (ரலி) அவர்கள் மதீனாவை விட்டு வெளியே செல்ல நேர்ந்த பொழுதெல்லாம்ää அலீ (ரலி) அவர்களை தற்காலிக கலீபாவாக நியமித்து விட்டுச் செல்லக் கூடியவர்களாக இருந்தார்கள். ஏனெனில்ää கொடுக்கப்பட்ட பொறுப்பை திறம்படச் செய்யக் கூடியவர் என்று உமர் (ரலி) அவர்கள் கருதியதே காரணமாகும். உமர் (ரலி) அவர்கள் தனக்குப் பின் அலீ (ரலி) அவர்களைக் கலீபாவாக நியமனம் செய்து விட்டுப் போகாததன் காரணம் என்னவெனில்ää தனக்குப் பின் அலீ (ரலி) அவர்களைத் தான் மக்கள் நிச்சயம் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்பியதே காரணமாகும்.

உதுமான் (ரலி) அவர்களது காலத்தில்ää அரசியல் விவகாரங்களில் சரியான நிர்வாக அமைப்பினை உருவாக்குவதற்கு அலீ (ரலி) அவர்கள் தனது வலிமையான கருத்தைப் பயன்படுத்தினார்கள். இதற்கு முன்னிருந்த கலீபாக்களும் இதே நடைமுறையைப் பின்பற்றிää ஆட்சி முறையில் தமது தோழர்களால் வழிநடத்திச் செல்லப்படக் கூடியவர்களாகத் தான் இருந்தார்கள்.

கலந்து கொண்ட போர்கள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போர்களில்ää தபூக் போரைத் தவிர மற்ற அனைத்துப் போர்களிலும் அலீ (ரலி) அவர்கள் கலந்து கொண்டார்கள்.

பத்ருப் போரில் அலீ (ரலி) அவர்கள் கலந்து கொண்டு போரிட்ட பொழுதுää அவர்களது வாள் அற்புதத்தையே நிகழ்த்தியது எனலாம். குறைஷித் தரப்பிலிருந்து மார்தட்டிக் கொண்டு களத்தில் இறங்கிய மூன்று எதிரிகளில் இருவரை அலீ (ரலி) அவர்கள் ஒருவரே கொன்று தரையில் வீழ்த்தினார்கள்ää அலீ (ரலி) அவர்களின் இந்த வீர விளையாட்டைப் பார்த்த எதிரிகளின் மனதில் அப்பொழுதே தோல்வி பயம் கவ்விக் கொண்டது.

உஹதுப் போர்க்களத்தில்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிக அருகில் நின்று போரிடக் கூடிய வாய்ப்பை; பெற்றார்கள். வில் வித்தை வீரர்கள் செய்த தவறின் காரணமாக அந்தப் போரில் முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. முஸ்லிம் வீரர்களின் அணிகள் கூட பயத்தின் காரணமாகää கலைந்தன. ஏன்ää களத்தை விட்டே ஓட்டமெடுத்தனர். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாகக் கூட வதந்திகள் பரப்பப்பட்டன. இத்தகைய குழப்பமான அந்த நேரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நிலைகுலையாமல் நின்று கொண்டிருந்த ஒரு சில நபித்தோழர்களில் அலீ (ரலி) அவர்களும் ஒருவராவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது விழுந்த பலத்த அடியின் காரணமாக அவர்களது முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டது. தலைக்கவசத்தின் இரும்புப் பகாம் ஒன்று அண்ணலார் (ஸல்) அவர்களின் முகத்தில் ஊடுறுவி இருந்தது. அதனை அபுபக்கர் (ரலி) அவர்களும்ää தல்ஹா (ரலி) அவர்களும் பிடுங்கி எடுத்துää வேதனையைக் குறைத்தனர். அந்தக் காயத்திற்கு அலீ (ரலி) அவர்களும்ää பாத்திமா (ரலி) அவர்களுமே சிகிச்சை அளித்தார்கள். இந்தப் போரில் அலீ (ரலி) அவர்களுக்குக் கூட 17 இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது.

ஹிஜ்ரி 5ம் ஆண்டில்ää இஸ்லாத்தின் அனைத்து எதிரிகளும் முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்று திரண்டனர். மதீனாவை நோக்கி மிகப் பெரும் படையுடன் கிளம்பினர். மதீனாவைக் காக்கும் பொருட்டு மதீனாவைச் சுற்றிலும் அகழ் ஒன்றை இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் தோண்டினார்கள். ஒருநாள் எதிரிகளின் தரப்பிலிருந்துää அரேபியாவின் மிகப் பிரசித்தி பெற்ற வீரனான அப்து என்பவன்ää அந்த அகழியை குதிரையில் இருந்தவாறே தாண்டி விட்டான். அவனை எதிர்த்து நிற்பதற்கு அனைவரும் பயந்தனர்ää அவனருகே செல்வதற்குக் கூட முஸ்லிம்கள் பயந்து கொண்டிருந்த பொழுதுää அவனை எதிர்த்துப் போர் புரிவதற்கு அலீ (ரலி) அவர்கள் முன் வந்தார்கள்.

அலீ அவர்களே..! கவனம் தேவை. அவன் அப்தூத்..! இது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையாக இருந்தது.

நல்லதுää அவனைப் பற்றி நான் அறிவேன்ää இது அலீ (ரலி) அவர்களது பதிலாக இருந்தது.

சற்றுச் சில நிமிடங்களில் அலீ (ரலி) அவர்கள்ää அந்த எதிரியினுடைய கழுத்தை அவனது உடலிலிருந்து துண்டித்தார்கள். அவன் சாய்ந்த பனை மரம் போல விழுந்தான்.

இன்னும் மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்த பனூ குரைளா என்ற யூதக் குலத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வந்த காரணத்தாலும்ää இஸ்லாத்தின் எதிரிகளுக்கு உதவிக்கரம் நீட்டி வந்ததாலும்ää அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் முஸ்லிம்களின் நிலை இன்னும் மோசமாக மாறி விடும் என்ற நிலையில்ää அவர்களே தங்களது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் நிலை உருவாகியது. இறுதியாகää அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முடிவெடுத்தார்கள். யூதர்களது வலுவான கோட்டைகளை முற்றுகையிட்டார்கள்ää அவர்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள்ää இன்னும் அவர்களது கோட்டைகளிலேயே அன்றைய தொழுகையை நடத்தினார்கள்.

இன்னும் கைபர் என்ற இடத்தில் யூதர்களது வலுவான கோட்டைகள் தொடர்ச்சியாக இருந்தன. இந்தக் கோட்டைகள் இருந்து வருவது என்றைக்கும் முஸ்லிம்களுக்கு ஆபத்துக்களை விளைவிக்கக் கூடியதாக இருந்தது. முஸ்லிம்களை அச்சுறுத்தும் விதத்தில் அமைந்துள்ள அந்தக் கோட்டைகளை எதிர்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது படைகளை அனுப்ப முடிவு செய்தார்கள். முஸ்லிம்களை எதிர்த்துää கடுமையான தடைகளை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள் யூதர்கள். இருப்பினும்ääஅவர்களது கோட்டைகள் ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்களின் வசம் வீழ்ந்து கொண்டிருந்தது. இருப்பினும்ää 'குமாஸ்" என்ற கோட்டையை மட்டும் முஸ்லிம்களால் ஒன்றும் செய்ய இயலாமல் இருந்தது. அந்தக் கோட்டையின் தளபதியாக இருந்த மர்ஹப் என்பவனின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக முஸ்லிம்களால் அந்தக் கோட்டையை ஒன்றும் செய்ய இயலாமல் இருந்தது.  இந்த நிலையில்ää இறைத்தூதர் (ஸல்) அவாகள் கூறினார்கள்ää ''நாளைக்கு நான் அல்லாஹ்வையும்ää அவனது தூதரையும் மிகவும் நேசிக்கக் கூடிய புதியதொரு தளபதியை நியமிக்கப் போகின்றேன். அல்லாஹ் அவருக்கு வெற்றியை அருளுவான்"" என்று கூறினார்கள்.

யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில்ää மறுநாள் காலையும் புலர்ந்தது. அடுத்த நாள் காலையில்ää மக்கள் அனைவரும் எதிர்பார்த்த அந்த வீரரை மக்களுக்கு அறிமுகம் செய்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்றைய போரின் தலைமைப் பொறுப்பை ''அலீ (ரலி) அவர்களிடம் வழங்கினார்கள். அன்றைய தினம் நடந்த போரில் மர்ஹப் ம் அவனது சகோதரனும் கொல்லப்பட்டார்கள்ää கோட்டை முஸ்லிம்களின் வசம் வீழ்ந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பும் நிறைவேறியது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..!

ஹ{தைபிய்யா என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கையை மக்கத்துக் குறைஷிகளுடன் முஸ்லிம்கள் முதன் முதல் ஏற்படுத்தின் கொண்ட போதுää அதன் எழுத்தராக அலீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää அந்த உடன்படிக்கையின் வாசகங்களைக் கூறக் கூறää அலீ (ரலி) அவர்கள் எழுதிக் கொண்டு வந்தார்கள். குறைஷிகளின் தூதர்கள் அந்த உடன்படிக்கையின் எழுதப்பட்ட வாசகமானää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெயருக்கு முன்னால்ää அல்லாஹவின் தூதர் என்று எழுதப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அதற்குப் பதிலாக முஹம்மது பின் அப்துல்லாஹ் என்று எழுதும்படி வற்புறுத்தினர். அவ்வாறு மாற்றி எழுதுவதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இருப்பினும் எழுதப்பட்ட அந்தää ''அல்லாஹ்வின் தூதர்"" என்ற வார்த்தையை தனது கரங்களால் அழிப்பதற்கு அலீ (ரலி) மறுத்து விட்டார்கள். அதன் பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களே.. தனது கரங்களால் அந்த வார்த்தையை அழித்தார்கள்.

மக்காவின் வெற்றியின் பொழுதுää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழையும் பொழுது முஸ்லிம்களின் கொடியை அலீ (ரலி) அவர்களின் கரங்களில் தான் கொடுத்தார்கள்.

உஹதுப் போரிலும்ää ஹ{னைன் போரிலும் முஸ்லிம்களின் தரப்பில் சில சலனங்கள் ஏற்பட்ட பொழுதுää அந்த சலனங்களுக்கு இடம் கொடாமல்ää துணிந்த நின்று போர் செய்த ஒரு சில பெருமக்களில் அலீ (ரலி) அவர்களும் ஒருவராவார்.கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்படுதல்

உதுமான் (ரலி) அவர்கள் இறந்த பிறகுää கலீபாவாக யாரையும் தேர்ந்தெடுக்கப்படாமலேயே மூன்று நாட்கள் கழிந்தன. இப்பொழுது மதீனா முழுவதும் கலவரக்காரர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. காஃப்கி என்ற எகிப்தினைச் சேர்ந்த இவர் தான் கலவரத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்ää இப்பொழுது இவரே தலைமை தாங்கி இமாமாக நின்று கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். இந்த கொடூரமான மனித இனப் படுகொலையானது மதீனாவில் நடந்து கொண்டிருந்த இந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமான நபித்தோழர்கள் மதீனாவை விட்டும் வெளியேறிச் சென்று விட்டார்கள். மதீனாவை விட்டும் வெளிச் செல்லாமல் தங்கி இருந்தவர்களோää எந்தவித உதவியுமின்றிää இதனைத் தடுத்த நிறுத்த சக்தியற்றவர்களாக இருந்தார்கள். இன்னும்ää இவர்கள் தங்கள் வீடுகளுக்குள் இருந்து கொண்டுää கலவரக்காரர்கள் தாங்கள் நினைத்ததை சாதித்து முடித்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டுää அமைதி காத்தார்கள்.

இந்த கலவரக்காரர்கள் தான் அலீ (ரலி) அவர்களின் பெயரை கலீபா பதவிக்கு முன்மொழிந்தார்கள். இன்னும் அவரையே கலீபாவாக பதவியேற்றுக் கொள்ளும்படி வேண்டி நின்றார்கள். அலி (ரலி) அவர்களோ முதலில் அவர்களது இந்தக் கோரிக்கையை மறுத்தார்கள். ஆனால்ää இந்தக் கலவரச் சூழலை யாராவது ஒருவர் முன்னின்று அமைதிக்குக் கொண்டு வர வேண்டிய அவசியமும் அங்கு நிலவியது. தலைநகரத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்ற அத்தனையும் இஸ்லாத்திற்கு முரணாகவே நடந்து கொண்டிருந்தன. இப்பொழுது அலி (ரலி) அவர்கள்ää மதீனாவில் எஞ்சியிருந்த நபித்தோழர்களை அழைத்து கலந்தாலோசனை நடத்த ஆரம்பித்தார்கள்.

அலீ (ரலி) அவர்களே..!

கலவரச் சூழல் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்ää இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஏதேனும் செய்யுங்கள்ää மக்களுக்கு அமைதி தேவையாக இருக்கின்றது என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.

எனவேää நிலைமையின் பாரதூரத்தை எடை போட்டுப் பார்த்த அலீ (ரலி) அவர்கள்ää முஸ்லிம்களிடையே ஏற்பட்டு விட்ட இந்த விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவராகää கலீபா பதவியைத் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்கள்.

இப்பொழுது மதீனாவில் வசித்த அனைவரும்ää அலீ (ரலி) அவர்களிடம் வந்து தங்களது பைஅத் என்ற வாக்குறுதியை அளித்தார்கள். மாலிக் உஸ்தர் என்பவர் தான் இந்த வாக்குறுதி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.

தல்ஹா (ரலி) மற்றும் ஜுபைர் (ரலி) ஆகிய இருவரும்ää அப்பொழுது மதீனாவில் இருந்த முக்கியமான நபித்தோழர்களாவார்கள். தனக்குப் பின் கலீபாவாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று உமர் (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவில் இந்த இருவரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவேää இந்த இருவருடைய சம்மதத்தையும்ää இன்னும் இந்த இருவரில் யாருக்காவது கலீபாவாக ஆக விரும்பம் இருக்கும்பட்சத்தில் அதனையும் முயற்சி செய்து பார்த்துவிடுவது என்ற நோக்கத்தில் இருவரையும் அழைத்து வர ஆள் அனுப்பி வைத்தார்கள்.

இன்னும் இவர்களில் எவரொருவராவது கலீஃபாவாக ஆக விரும்பினார் எனில்ää அவரிடம் நான் எனது வாக்குறுதியை அளிக்கத் தயராக இருக்கின்றேன் என்றும் அலீ (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.

ஆனால் இந்த இருவரும்ää இந்த மிகச் சுமையான பொறுப்பை ஏற்பதிலிருந்தும் விலகிக் கொண்டனர். அப்படியானால்ää என்னிடம் வாக்குறுதி அளியுங்கள் - பைஅத் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார்ää அலீ (ரலி) அவர்கள்.

சம்மதமின்மை காரணமாக ஜுபைர் (ரலி) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்பொழுதுää அங்கிருந்த மாலிக் உஸ்தர்ää கூறினார் :

ஜுபைரே..! அலீ (ரலி) அவர்களிடம் பைஅத் செய்கின்றீர்களா? எனத் தனது வாளை உருவியவாறே..ää இல்லை உங்களது தலையைத் துண்டாடட்டுமா? எனக் கேட்டார்.

பின்ää ஜுபைர் (ரலி) அவர்கள் தனது வாக்குறுதியை அளித்தார்.

அடுத்ததுää சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது முறைää அவரும் அழைக்கப்பட்டார்ää உமர் (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட அறுவரில் இவரும் ஒருவர்.

என்னைப் பற்றிப் பயப்பட வேண்டாம்ää இத்தனை நபர்களும் உங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கும் பொழுதுää நான் மறுக்க மாட்டேன்ää நானும் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கின்றேன் என்றார்.

அடுத்ததுää அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களது முறை. அவரும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் பதிலையே கூறிää வாக்குறுதி அளித்தார்.

யாராவது ஒருவர் உங்களுக்காக பிணையாளாக வந்து வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றார் அலீ (ரலி).

எனக்காக யாரையும் பிணையாளாகத் தர வேண்டியதில்லை. பதில் வந்தது.

மாலிக் உஸ்தர் எழுந்தார். அவரை என்னிடம் விடுங்கள்ää தலையைக் கொய்து விடுகின்றேன்.

வேண்டாம்ää வேண்டாம்..! என்று கூறிய அலீ (ரலி) அவர்கள்ää அவருக்கு நானே பிணையாளாக இருந்து கொள்கின்றேன் என்று கூறினார்கள்.

இன்னும் முன்னணி நபித்தோழர்கள் பலர் அலீ (ரலி) அவர்களுக்கு வாக்குறுதி வழங்கவில்லை. உமைய்யா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிரியாவை நோக்கிச் சென்று விட்டார்கள். இரத்தம் தோய்ந்த உதுமான் (ரலி) அவர்களின் ஆடைகளைத் தங்களுடனேயே எடுத்துச் சென்று விட்டதல்லாமல்ää உதுமான் (ரலி) அவர்களின் மனைவியாகிய நைலா (ரலி) அவர்களின் துண்டிக்கப்பட்ட விரல்களையும் எடுத்துச் சென்று விட்டார்கள்.

முதல் உரை

அலீ (ரலி) அவர்கள் கலீபாவாகப் பதவியேற்ற பின்பு முதன்முதலாக உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள். அவர்களது உரை தெளிவாகவும்ää கடுமையாகவும் இருந்தது.

கஃபாவும்ää அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் புனிதமானவை. முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். ஒரு முஸ்லிம் இன்னொரு மனிதரைத் தனது நாவினாலோ அல்லது செயல்களினாலோ துன்பம் விளைவிக்க மாட்டார். உங்களது செயல்பாடுகளில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றிää உயிர் கொடுத்து எழுப்பப்படக் கூடிய அந்த மறுமை நாளில் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றீர்கள்ää மனிதர்களிடம் மட்டுமல்ல விலங்கினங்களிடம் கூட உங்களது செயல்பாடுகளைப் பேணிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். அவனது கட்டளைகளைப் புறக்கணித்து விடாதீர்கள். நன்மையைச் செய்யுங்கள்ää தீமைகளில் இருந்து விலகியிருங்கள்.

தான் செல்லக் கூடிய பாதை மிகவும் கடினமானது என்பதை அலீ (ரலி) அவர்கள் நன்கறிந்தவர்களாக இருந்தார்கள். சட்டம் ஒழுங்கு பேணப்படாத அந்த நேரத்தில்ää அதனை மீட்டுக் கொண்டு வர வேண்டியதிருந்தது. இன்னும் அதற்காகத் தொடர்ந்து இடைவிடாது பாடுபட வேண்டி இருந்ததுää அதற்காகப் பொறுமையுடன் பணியாற்ற வேண்டி இருந்தது. அலீ (ரலி) அவர்கள்ää இந்த விஷயத்தில் மக்கள் தனக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்.

பிரச்னைகளைச் சந்தித்தல்

அலீ (ரலி) அவர்களது முதல் உரை முடிந்தவுடன்ää நபித்தோழர்களில் சிலர் அலீ (ரலி)ää ஜுபைர் (ரலி) மற்றும் தல்ஹா (ரலி) ஆகியோரைச் சந்தித்தார்கள்.

நீங்கள் இப்பொழுது கலீபாவாகப் பதவி ஏற்றிருக்கின்றீர்கள் என்று வந்தவர்களில் ஒருவர் கூறி விட்டுää நீங்கள் செய்ய வேண்டிய முதல் பணிää இஸ்லாமிய ஷரீஆ வை நிலைநாட்ட வேண்டும் என்றார். இன்னும் உதுமான் (ரலி) அவர்களைப் படுகொலை செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் இதில் தவறு செய்ய மாட்டீர்கள் என்பதால் தான் நாங்கள்ää உங்களுக்கு எங்களது வாக்குறுதியைத் தந்தோம் என்று கூறினார்கள்.

உதுமான் (ரலி) அவர்களைப் படுகொலை செய்தவர்களைத் தண்டிக்காமல் நான் விட்டு விடப் போவதில்லை. ஆனால் அதற்கு சற்று கால அவகாசம் தேவைää சற்றுப் பொறுத்திருங்கள் என்று கேட்டுக் கொண்டார் அலீ (ரலி) அவர்கள்.

மதீனாவின் நிலமை இன்னும் சீராகவில்லை. கலவரக்காரர்கள் இன்னும் பலத்துடன் மதீனாவில் உலா வந்து கொண்டிருக்கின்றார்கள். நாம் கூட அவர்களது அச்சுறுத்தல்களின் கீழ் தான் இருந்து வருகின்றோம் என்று கூறினார். இன்னும் சொல்லப் போனால்ää என்னுடைய நிலமையே ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றது. எனவேää தயவு செய்து பொறுமையோடிருங்கள். சூழ்நிலைகள் நமக்கு சாதகமானதுடன்ää நிச்சயமாகää குற்றவாளிகளை நான் தண்டிப்பேன்ää அது என்னுடைய கடமையும் கூட என்று கூறினார்ää அலீ (ரலி) அவர்கள்.

அலீ (ரலி) அவர்களின் பதில் வந்திருந்தோருக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை. அவர்களில் சிலர்ää அலீ (ரலி) அவர்கள்ää பிரச்னையில் இருந்து ஒதுங்க நினைக்கின்றார் என்றே கருதினார்கள்.

அலீ (ரலி) அவர்களே நீங்கள் விபரம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்ää

மக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுதுää உதுமான் (ரலி) அவர்களைப் படுகொலை செய்தவர்களை நீங்கள் தண்டிக்கவில்லை என்று சொன்னால்ää மக்களே சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டுää செயல்பட ஆரம்பித்து விடுவார்கள்ää என்று கூறினார்கள்.

இப்பொழுதுää என்ன நடக்கும் என்பதை கலவரக்காரர்களுக்கு உணர்த்த வேண்டும். கலவரத்தை நிறுத்தவில்லை எனில்ää அலீ (ரலி) அவர்கள் நிச்சயம் நம்மைத் தண்டிப்பார் என்பதை அவர்கள் உணர வேண்டும். மதீனாவில் நிரந்தரமாகக் குழப்பம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். இதற்காகவே ஒரு குழுவினர் மற்ற குழுவினரிடம் இணக்கமாகி விடாமல்ää குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டே வருகின்றார்கள். இன்னும் ஒவ்வொரு இடத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள். அவர்களது முழுமையான நோக்கம் என்னவெனில்ää மதீனாவில் உள்ள தலைவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கிää அதன் மூலம் குழப்பத்தை நீடிக்கச் செய்துää தாங்கள் தண்டனையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்பதேயாகும். இதன் மூலம் தங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள நினைக்கின்றார்கள்.

அலீ (ரலி) அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்புää தான் இன்னும் மிக மோசமாக பாதையைக் கடக்க வேண்டியதிருக்கின்றது என்பதை உணர ஆரம்பித்தார்.

தன்னை கலவரக்காரர்கள் ஏன் தேர்ந்தெடுக்க முன் வந்தார்கள் என்பதும்ää இன்னும் அதற்காக அவர்கள் கையாண்ட முறையையும் அலீ (ரலி) அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இன்னும் அவர்களைத் தண்டித்தே ஆக வேண்டும் என்பதிலும் அலீ (ரலி) அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதற்காக ஒட்டு மொத்த நபித்தோழர்கள் மற்றும் அனைத்து அதிகார மட்டத்தின் ஆதரவும் தனக்குத் தேவை என்பதையும் அலீ (ரலி) அவர்கள் விரும்பினார்கள். ஆனால்ää அவர் விரும்பியவாறு அவருக்கு முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை. எனவேää பொறுத்திருந்து நிலைமையைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் அலீ (ரலி) அவர்களுக்கு உருவானது.

ஆனால்ää நபித்தோழர்களோ..! உடனடி நடவடிக்கையை விரும்பினார்கள். அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் எடுக்கப்பட்டது போன்றதொரு நடவடிக்கை அவசியம் என்று விரும்பினார்கள். ஆனால்ää அப்போதிருந்த சூழ்நிலைக்கும்ää இப்பொழுது உள்ள சூழ்நிலைக்கும் உள்ள வேறுபாட்டைப் பிரித்தறியத் தவறி விட்டார்கள்.

இது தான் நபித்தோழர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்குமிடையே கருத்துவேறுபாட்டை உருவாக்கியது. தவறு செய்தவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே முன்னணி நபித்தோழர்களின் விருப்பமாக இருந்ததுää அதற்கு அலீ (ரலி) அவர்களின் ஆட்டம் கண்டு கொண்டிருந்த தலைமைப் பதவி இடம் கொடுக்க மறுத்தது. எனவேää இந்தப் பிரச்னையில் சரியான முடிவெடுக்கத் திணறி நின்ற அலீ (ரலி) அவர்கள்ää நபித்தோழர்களுக்கு சரியான பதிலை வழங்க இயலவில்லை.பேச்சுவார்த்தை முயற்சிகள்

உதுமான் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் யாவும்ää அவரைச் சுற்றி இருந்த அவரது உறவினர்களினால் விளைந்தவைகள் தான் என்பதில் அலீ (ரலி) அவர்கள் மிகவும் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார்கள். உதுமான் (ரலி) அவர்களைச் சுற்றி ஆட்சிப் பொறுப்பில் இருந்த உமையாக்களின் வாரிசுகள் தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தலையாய காரணமாக இருந்தார்கள். உதுமான் (ரலி) அவர்களின் நற்பெயரை அவர்கள்ää தங்களது சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவரை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டுää ஆட்சிப் பொறுப்புகளில் ஊடுறுவிக் கொண்டனர்ää ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டு அதனை தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டனர். இத்தகைய சுயநலக் காரர்கள் தான்ää உதுமான் (ரலி) அவர்களது நற்பெருக்குக் களங்கள் விளைவித்தனர். உதுமான் (ரலி) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள்ää அவரது மரணத்திற்குப் பின் விளைந்த அமைதியற்ற நிலைää ஆகிய அனைத்தின் மூல வேர்களும் மேலே உள்ள சுயநலக்காரர்களின்ää சுயநலத்திலிருந்து தான் ஆரம்பமாகின்றன. எனவேää அவர்களை ஆட்சி மற்றும் அதிகாரப் பொறுப்பில் இருந்து அகற்றுவது வரைää இனி மதீனாவில் நிம்மதி திரும்பப் போவதில்லை. எனவேää பிரச்னையின் மூல வேர்களைக் களைந்தாலொழிய இந்தப் பிரச்னைக்கான சரியான தீர்வை எட்ட முடியாது என்பதில் உறுதியாக இருந்த அலீ (ரலி) அவர்கள்ää இப்பொழுது அதன் ஆணி வேர்களைக் களைவதற்குண்டான முயற்சியில் இறங்கினார்கள்.

எனவேää அலீ (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன் முதல் பணியாகää அனைத்து பிராந்தியக் கவர்னர்களையும் ஆட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்தார்கள். இந்த நிலையில்ää அலீ (ரலி) அவர்களது மிகவும் விருப்புக்குரிய நெருக்கமான நண்பர்களான இப்னு அப்பாஸ் மற்றும் முகீரா பின் ஷப்பா (ரலி) போன்றவர்கள்ää இத்தகைய நடவடிக்கைகளை சற்றுப் பிற்போடுமாறும்ää இன்னும் இதற்கு எதிராகவும் கருத்துத் தெரிவிக்கலானார்கள்.

முதலில்ää அனைத்துக் கவர்னர்களிடமும் ''உங்களிடம் விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்ளுமாறு முதலில் வேண்டிக் கொள்ளுங்கள்"" என்று அவர்கள் அறிவுரை கூறலானார்கள். நீங்கள் ஆட்சிக் கட்டிலில் உறுதியாகää ஸ்திரத் தன்மையுடன் அமர்ந்து கொண்ட பிறகுää நீங்கள் விரும்பிய நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்று அவர்கள் அறிவுரை கூறலானார்கள். இப்பொழுதுää உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கு முன் நீங்கள் அவர்களை பதவியில் இருந்து அகற்றினீர்கள் என்று சொன்னால்ää அவர்கள் உங்களுக்கு எதிராகக் கூட திரும்பக் கூடும்ää இன்னும் உங்களை ஒரு கலீஃபாவாகக் கூட அவர்கள் அங்கீகரிக்க மறுக்கக் கூடும். இந்த நிலையில்ää உதுமான் (ரலி) அவர்களது படுகொலை கூட மிகச் சிறிய பிரச்னையாகி விடலாம்ää இன்னும் இதன் பின்னணியில்ää உங்களுக்கு எதிராகக் கூட அவர்கள் ஆயுதங்களைக் கூட தூக்கும் நிலை வந்தும் விடலாம் என்றும் கூறலனார்கள்.

ஆனால் அலீ (ரலி) அவர்கள் இந்த அறிவுரைகளை யாவும் செவி மடுக்கவில்லைää தனது நிலையில் உறுதியாக இருந்ததோடுää நடவடிக்கையில் இறங்க ஆரம்பித்தார்கள். இந்த நிலையில்ää முகீரா பின் சுப்பா (ரலி) அவர்கள்ää மிகவும் சிக்கலான நிலையில் தான் இருப்பதாகவும் உணர ஆரம்பித்தார்கள். அலீ (ரலி) அவர்களின் நடவடிக்கையில் அதிருப்தியுற்றவர்களானார்கள்.

கலீபா அவர்களே..!

உங்களது இந்த விபரீதமான நடவடிக்கைகள் என்னையும்ää என் போன்றவர்களையும் சிக்கலில் மாட்டி வைத்து விடும் என்றும் எச்சரித்தார்கள்.

பின் அவர்ää மதீனாவை விட்டும் வெளியேறி மக்காவில் வந்து குடியேறலானார்கள்.

புதிய கவர்கனர்களுக்கு இனிமையான வரவேற்பு ?

இப்பொழுது அலீ (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட அனைத்துப் புதிய கவர்னர்களும் தங்களுக்கப் பணிக்கப்பட்ட பிராந்தியங்களுக்குச் சென்றுää பணியில் அமர ஆரம்பித்தார்கள். ஆனால்ää அவர்கள் பணியில் அமர்ந்தார்களோ இல்லையோää அவர்களது பயணங்கள் கூட அமைதியற்றதாகவும் மிகவும் சிரரமாகவுமே அமைந்தது.

எகிப்து தேசமானது அலீ (ரலி) அவர்களின் ஆதரவாளர்களை அதிகம் கொண்ட பூமியாக இருந்தது. இருப்பினும் புதிய கவர்னர் தனது பொறுப்பை ஏற்கச் செல்லும் காலத்தில்ää நிலைமை முற்றிலும் மாறி விட்டிருந்தது. சிலர் புதிய கவர்னரை அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட போதிலும்ää மிகவும் உறுதியான மக்கள் கூட்டம் ஒன்றுää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்கு உடனடித் தீர்வு ஒன்றை எடுக்க வேண்டும்ää கொலைகாரர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும்ää அதற்கான உடனடி நடவடிக்கையை அவர்கள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்யலானார்கள். இவ்வாறான உறுதியான நடவடிக்கையை அலீ (ரலி) அவர்கள் எடுக்கவில்லை என்று சொன்னால்ää புதிய கவர்னருக்கும் அவரது அரசுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்கள் கூற ஆரம்பித்தார்கள். இந்த முறையீட்டுக்கு எதிர்ப்புகள் இல்லாமலில்லைää இன்னுமொரு கூட்டத்தார் உதுமான் (ரலி) அவர்களைக் கொலை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்த ஆரம்பித்தார்கள்.

இதே போன்ற பிரச்னையைää பஸராவின் புதிய கவர்னரும் எதிர் கொண்டார். ஒரு கூட்டத்தார் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு ஆதரவாகவும்ää இன்னொரு கூட்டத்தார் இவர்களுக்கு எதிராகவும் நின்றார்கள்.

கூபா கவர்கர் இன்னும் தனது இருப்பிடத்திற்குச் செல்லவில்லைää செல்லும் வழியில் இருந்து கொண்டிருந்த பொழுதுää ஒரு மிகப் பெரும் ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டார். அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கூபாவின் கவர்னரைப் பார்த்துää

'நீங்கள் இங்கிருந்து திரும்பிச் சென்று விடுங்கள்"ää அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் இருந்த இடத்தில் உங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லைää உங்களது வாழ்வை நீங்கள் விபரீதத்திற்குள்ளாக்கிக் கொள்ள வேண்டாம்"" என்று கூறி எச்சரித்தார்கள்.

இந்த எச்சரிக்கையினால் பயந்து போன அலீ (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட அந்த கவர்னர்ää மீண்டும் அவர் மதீனாவிற்கே வந்து விட்டார்.

சிரியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த இன்னொரு கவர்னர்ää தபூக்கை அடைந்த பொழுது - அங்கே முஆவியாவின் வீரர்கள் அவர் செல்லும் பாதையை அடைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்.

அப்பொழுதுää அலீ (ரலி) அவர்களால் வழங்கப்பட்ட பதவிப் பிரமாணக் கடிதத்தை அவர்களிடம் காண்பித்த பொழுது அவர்கள் கூறினார்கள்ää

'உங்களை நியமித்தது உதுமான் (ரலி) அவர்களாக இருப்பினும்ää உங்களது வரவு நல்வரவாகட்டும்"ää அவ்வாறல்லாது 'வேறு யாராலும் நீங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பின் தயவு செய்து திரும்பிச் சென்று விடுங்கள்" என்று கூறினார்கள். இவர்களை எதிர்த்து எதனையும் செய்ய இயலாத அந்தக் கவர்னரும் மதீனாவிற்கே திரும்பி வந்து விடுகின்றார்.

யமனை நோக்கிச் சென்ற கவர்னர்ää எந்த வித சிரமமுமில்லாமல் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து கொண்டாலும்ää அவருக்கு முன்னாள் இருந்த ஆட்சியாளர்கள் அரசின் கஜானாவைக் காலிக்கி வைத்து விட்டுச் சென்றிருந்தார்கள்.

அலி (ரலி) நடவடிக்கை

கூபா மற்றும் சிரியாவின் கவர்னர்கள் வெளிப்படையாக தாங்கள் அலீ (ரலி) அவர்களை எதிர்ப்பதாக அறிவித்தார்கள். எனவேää தன்னை எதிர்ப்பதற்கான காரணமென்ன என்பதற்கு விளக்கமளிக்குமாறு இரண்டு கவர்னர்களுக்கும் ஒரு தூதுவரை அனுப்பி வைத்தார்கள் அலீ (ரலி) அவர்கள்.

கூபா கவர்னராக இருந்த அபூ மூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் தன் சார்பாக திருப்திகரமான பதிலை அனுப்பி வைத்ததோடுää புதிய கலீபாவுக்குத் தான் விசுவாசமாக நடந்து கொள்வதாகவும் பதில் அனுப்பி வைத்தார்.

முஆவியா (ரலி) அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்ää 'எனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளுங்கள் அல்லது யுத்தத்திற்குத் தயாராகுங்கள்" என்று அலீ (ரலி) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

மிகவும் தந்திரசாலியான முஆவியா (ரலி) அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமானதொரு பதிலை அலீ (ரலி) அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அலீ (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களிடமிருந்து வந்த பதில் கடிதத்தைத் திறந்து பார்த்தார்கள். அதில்ää 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" - (அளவற்ற அருளாளனும்ää நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரைக் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்) என்பதைத் தவிர வேறொன்றும் எழுதப்படாமல் இருந்தது. அலீ (ரலி) அவர்கள் அந்தக் கடிதத்தைப் பார்த்துப் பிரமித்து நின்றார்.

கடிதத்தைக் கொண்டு வந்தவரிடம்ää

இந்த கடிதத்தின் மூலம் மூஆவியா (ரலி) அவர்கள் என்னிடம் எதிர்பார்ப்பதென்ன? என்ற அர்த்தத்தில் அவரை நோக்கினார்.

வந்திருந்த அந்தத் தூதுவர் எழுந்திருந்துääää..

கண்ணியமிக்கவர்களே..!

நான் சிரியாவை விட்டுக் கிளம்பும் பொழுதுää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையை நினைத்து 50 ஆயிரம் மக்கள் அழுது கொண்டிருக்கக் கண்டேன். அவர்களது தாடிகள் கூட அதனால் நனைந்து விட்டிருந்தன. முந்தைய கலீபாவின் படுகொலைக்கு பழிக்குப் பழி எடுப்பது என்று அவர்கள் சூளுரைத்துக் கொண்டிருப்பதையும் கண்டேன். மேலும்ää பழிக்குப் பழி எடுக்காமல்ää தங்களது வாட்களை உறையிலிடுவதில்லை என்றும் அவர்கள் சபதம் செய்திருக்கவும் கண்டேன் என்று கூறினார்.

அலீ (ரலி) அவர்களின் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர்ää

என்ன சிரியாவிலிருந்து வந்த தூதுவரே..! மதீனாவின் ராணுவத்தை சிரியாவின் ராணுவம் மிகைத்து விடும் என்றா நீர் கருதுகின்றீர்? என்று கேட்டு விட்டுää அல்லாஹ்வின் மீது சத்தியமாகää உதுமான் (ரலி) அவர்களின் ஆடை யூசுப் (அலை) அவர்களின் ஆடையைப் போன்றதுமல்லää இன்னும் அவரது பிரிவுத் துயரம் யாக்கூப் (அலை) அவர்கள் கொண்ட பிரிவுத் துயரத்தைப் போன்றதுமல்ல. சிரியாவின் மக்கள் உதுமான் (ரலி) அவர்களுக்காக அழுது கொண்டிருக்கின்றார்கள் என்றால்ää ஈராக் மக்கள் அதே உதுமானைப் பற்றி தவறாக அல்லவா பேசிக் கொண்டிருக்கின்றார்கள்..! என்று கூற ஆரம்பித்தார்.

சிரியாவிலிருந்து வந்த தூதுவர் தந்த விளக்கம் அலீ (ரலி) அவர்களின் மனதைக் காயப்படுத்தியது. மிகவும் அதிர்ந்த நிலையில்ää அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்ää

இறைவா! உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்காக என்னால் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருக்கின்றேன் என்பதை நீ அறிவாய்..! அல்லாஹ்வின் மீது சத்தியமாகää அந்தப் படுகொலைகாரர்கள் தப்பி விட்டார்கள்.

முஆவியா (ரலி) அவர்களின் பதிலும்ää சிரியாவின் கவர்னருமான அவரது நோக்கமும் இப்பொழுது என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட அலீ (ரலி) அவர்கள்ää அவருடன் யுத்தம் செய்யாமல் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி ஒன்று உருவாகப் போவதில்;லை என்ற கணிப்பிற்கு வந்தார். எனவேää யுத்தத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணித்தார்.

இப்பொழுது அலீ (ரலி) அவர்களின் மூத்த மகன் ஹஸன் (ரலி) அவர்கள் தனது தந்தையைப் பார்த்துää

'தந்தையே..! நமக்கு இந்த கலீபாப் பதவி வேண்டாம்ää பேசாமல் அதனை உதறித் தள்ளி விடுங்கள். உள்நாட்டு யுத்தம் ஒன்று நமக்குள் ஏற்பட்டுää அதன் மூலம் முஸ்லிம்களின் இரத்தம் இந்தப் பூமியில் சிந்துவதைத் தவிர்த்திடுங்கள்ää என்று தனது தந்தையைப் பார்த்துக் கெஞ்சும் குரலில் கூறினார். 'முதலும் முடிவுமாகக் கூறுகின்றேன்"ää 'மக்கள் அனைவரும் உங்களை ஏற்றுக் கொள்ளும் நிலையும் வேண்டுமல்லவா" என்றும் கூறினார். ஆனால்ää தனது மகனின் ஆலோசனையை அலீ (ரலி) அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றார்கள்.

அலீ (ரலி) அவர்களுக்கும் முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே ஆரம்பித்த இந்தப் பனிப்போர்ää மதீனாவில் அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கியது. சிரியாவின் கவர்னரான முஆவியா (ரலி) அவர்கள் எந்தளவு திறமையும்ää நுணுகி ஆய்வு செய்யும் வலிமையும் பெற்றவர் என்பதை மதீனாவின் மக்கள் நன்கு அறிவார்கள். முஆவியா (ரலி) அவர்களை வழிக்குக் கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

ஒட்டகப் போர்

முஆவியா (ரலி) அவர்களைச் சந்திப்பதற்கு முன் இன்னொரு ஆபத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு அலீ (ரலி) அவர்கள் தள்ளப்பட்டார்கள். ஆம்! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பிரியத்திற்குரிய மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் அவசியம் அலீ (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டது.

ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜிற்காக மக்காவிற்குச் சென்றிருந்த நேரத்தில் தான் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலை நடந்தது. மதீனாவிற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கும் வழியில் தான் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைச் செய்தியை அவர்கள் அறிய நேரிட்டது.

இது என்ன கொடுமை..! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உவப்பிற்குரிய நகரத்தில்ää அதுவும் ஒரு கலிஃபாவை இப்படித்தான் படுகொலை செய்வார்களா? என்று ஆச்சரியத்தோடு வினவினார்கள். இன்னும்ää இந்தப் படுகொலைக்கு நிச்சயம் பாடம் புகட்டியே தீர வேண்டும் என்று அங்கிருந்தவர்களிடம் கூற ஆரம்பித்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களின் கோரிக்கையைச் செவிமடுத்த நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்திற்கு முன் வந்தார்கள். இவர்களில் மக்காவின் கவர்னரும் கூட அடங்குவார். இந்த நிலையில் தல்ஹா (ரலி) அவர்களும்ää சுபைர் (ரலி) அவர்களும் மதீனாவை அடைந்திருந்தார்கள். அங்கு என்ன நடந்தது என்பது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களுக்குத் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். மதீனாவில் உடனடி நடவடிக்கை ஒன்று அவசியப்படுவதாகவும்ää அவ்வாறானதொரு நடவடிக்கையை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுக்கும்பட்சத்தில்ää அதற்குத் தாங்கள் ஆதரவளிப்பதாகவும் அவர்கள் வாக்குறுதியும் அளித்தார்கள். இன்னும்ää மதீனா இருக்கும் நிலையில் நீங்கள் இங்கு வருவதற்குப் பதிலாக பஸ்ரா நகருக்குச் செல்லுங்கள்ää அங்கும் இதற்கான ஆதரவுகளைத் திரட்டுங்கள் என்று இருவரும் அறிவுரை கூறினார்கள். இந்த நேரத்தில் அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களும் மக்காவில் தான் இருந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்களது நோக்கத்தை வலுவடையச் செய்வதற்காகää அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு வேண்டிக் கொண்ட போதும்ää அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் இந்த உள்நாட்டு யுத்தத்தில் தான் தலையிட முடியாதுää என்னை இந்த வம்பில் மாட்டி விட வேண்டாம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்கள்.

இப்பொழுது ஆயிஷா (ரலி) அவர்கள் பஸராவை நோக்கிச் செல்லலானார்கள். வழிநெடுகிலும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆதரவு பெருக ஆரம்பித்தது. இப்பொழுது ஆயிரம் ஆண்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் தலைமையில் பஸராவில் ஒன்று கூட ஆரம்பித்தார்கள்.

நிலைமையை உணர்ந்த பஸராவின் கவர்னர்ää ஆயிஷா (ரலி) அவர்கள் பஸரா வந்திருப்பதன் நோக்கமென்ன என்பதை அறிய விரும்புவதாகää ஒரு தூதுவரை ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார். அதற்குää படுகொலை செய்யப்பட்ட உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்கான போராட்டத்தில்ää மக்களின் பங்கு என்னவென்பது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கவே வந்தேன் என்று கூறினார்ää ஆயிஷா (ரலி) அவர்கள். பின்புää பஸராவின் தூதுவர்ää தல்ஹா (ரலி) மற்றும் சுபைர் (ரலி) அவர்களிடமும் சென்று இதே கேள்வியைக் கேட்டார்.

உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குப் பழி எடுக்கவே இங்கு வந்தோம் என்ற பதிலைக் கூறினார்கள்.

'நீங்கள் அலீ (ரலி) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் அல்லவா!" என்று அந்தத் தூதுவர் திரும்பக் கேட்டார்.

அந்த உறுதிப் பிரமாணங்கள் யாவும் வாளின் முனையின் கீழ் வைத்து எடுக்கப்பட்டது. இருப்பினும்ää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குச் சரியான நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில்ää அல்லது அதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்பட்சத்தில்ää நாங்கள் அவருக்குக் கட்டுப்படவே விரும்புகின்றோம் என்று கூறினார்கள்.

இப்பொழுதுää அலீ (ரலி) அவர்களிடமிருந்து உதவி வரும் வரை தாமதித்த பஸராவின் கவர்னர்ää நகருக்கு வெளியே படையைத் திரட்டிக் கொண்டு ஆயிஷா (ரலி) அவர்களை எதிர்ப்பதற்காகத் தயாராகி விட்டார். இப்பொழுதுää இரண்டு படைகளும் நேருக்கு நேராக நின்று கொண்டுää சமிக்ஞைக்காகக் காத்துக் கொண்டிருந்தன.

போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக தனக்கு எதிராக நின்று கொண்டிருந்த படை வீரர்களிடம் உருக்கமான முறையில் ஒரு சிறிய உரை ஒன்றை ஆயிஷா (ரலி) அவர்கள் ஆற்றினார்கள்.

கலீபா உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களைத் தண்டிக்காமல் விட்டு விடுவதா? என்று எதிரே நின்று கொண்டிருந்த வீரர்களைப் பார்த்துக் கேட்க ஆரம்பித்தவுடன்ää பஸராவின் ராணுவத்துடன் வந்திருந்த வீரர்களில் பாதிப்பேர் இப்பொழுதுää ஆயிஷா (ரலி) அவர்களின் படையோடு சேர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.

போர் ஆரம்பமாகியது. மாலை வரை நடந்த போர் முடிவுக்கு வந்துää பின் மறு நாளும் ஆரம்பமாகியது. அன்றைய தினம் மதிய வேளையில் இரு தரப்பும் சமாதானமான முடிவொன்றை எடுப்பது குறித்த முடிவுக்கு வந்தனர். இன்னும் மதீனாவிற்கு ஒருவரை அனுப்புவது என்றும்ää அவர் தல்ஹா (ரலி) அவர்களும்ää சுபைர் (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர்களிடம் விரும்பி பைஅத் - உறுதிப் பிரமாணம் செய்தார்களா? அல்லது வற்புறுத்தலின் பேரில் அவர்களிடம் பைஅத் பெறப்பட்டதா? என்பதை அறிந்து வருவது என முடிவாகியது.

இதன் அடிப்படையில்ää இருவரும் அலீ (ரலி) அவர்களிடம் விரும்பி பைஅத் செய்திருக்கும்பட்சத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் பஸராவை விட்டும் திரும்பிச் சென்று விடுவது என்றும்ää அவ்வாறன்றிää இருவரும் வாள் முனையின் கீழ் வற்புறுத்தலின் காரணமாக பைஅத் செய்திருப்பார்களென்றால்ää பஸராவின் கவர்னர் பதவி விலகிää பஸராவின் பொறுப்பை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கையளிப்பது என்ற முடிவெடுக்கப்பட்டது.

இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்கும் நடுநிலையாளராகää பஸராவின் தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டார். அவரை மதீனாவிற்கு அனுப்பி உண்மை நிலை என்னவென்பதை அறிந்து வருமாறு அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டது. இவர் கொண்டு வரும் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்வது என்றும் இறுதி முடிவெடுக்கப்பட்டது.

எனவேää பஸராவின் தலைமை நீதிபதியாகக் கடமையாற்றிய கஅப் பின் தவ்ர் என்பவர்ää மதீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர்ää மதீனாவை வெள்ளிக் கிழமையன்று அடைந்தார். அவர் நேரடியாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிக்குச் சென்றுää மக்களின் முன்னிலையில் நின்று கொண்டுää

என்னருமை மக்களே..! என்னை பஸராவின் மக்கள் இங்கே அனுப்பி வைத்திருக்கின்றார்கள். நான் வந்ததன் நோக்கம் என்னவெனில்ää தல்ஹா (ரலி) அவர்களும்ää சுபைர் (ரலி) அவர்களும் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் பைஅத் பெறப்பட்டார்களா? அல்லது அவர்களது விருப்பத்திற்கு மாற்றமாக அச்சுறுத்தலின் அடிப்படையில் வலுக்கட்டாயமாகப் பைஅத் பெற்பட்டார்களா? என்பதை அறிந்து வருவதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டேன் என்று கூறினார்கள்.

அப்பொழுதுää

அல்லாஹ்வின் மீது சத்தியமாக..! 'வாளின் முனையின் கீழ் வைத்துத் தான் பைஅத் பெறப்பட்டது" என்று உஸா பின் ஸைத் (ரலி) அவர்கள் எழுந்திருந்து கூறினார்கள். உஸாமா (ரலி) அவர்களின் கருத்திற்கு வலுச் சேர்க்குமுகமாகää மிகவும் பிரபலமான பல நபித்தோழர்கள் எழுந்திருந்துää உஸாமா (ரலி) அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மையே என்று கூறினார்கள். இப்பொழுதுää தல்ஹா (ரலி) அவர்களும்ää சுபைர் (ரலி) அவர்களும் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை அறிந்து கொண்ட பஸராவின் நீதிபதி இப்பொழுதுää பஸராவை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார்.

ஆயிஷா (ரலி) பஷராவைக் கைப்பற்றுதல்

பஷராவில் நடந்து வருபவைகள் பற்றி அலீ (ரலி) அவர்கள் கேள்விப்படுகின்றார்கள். அதனையடுத்துää பஷராவை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று கவர்னருக்குக்கு எழுதிய கடிதத்தில் அலீ (ரலி) அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.

இந்த நிலையில்ää மதீனாவிற்கு சென்ற நீதிபதி பஷராவிற்குத் திரும்பி வருகின்றார். அவர்ää தல்ஹா (ரலி) மற்றும ஜுபைர் (ரலி) அவர்கள் இருவரும் கூறிய அனைத்தும் உண்மையே என்று கூறுகின்றார். இதனையடுத்துää தல்ஹா (ரலி) அவர்களும்ää ஜுபைர் (ரலி) அவர்களும் கவர்னரைப் பார்த்துää நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்ää பஷராவை எங்கள் பொறுப்பில் ஒப்படையுங்கள் என்று கேட்கும் பொழுதுää

இப்பொழுது நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கை விடää கலீபா அவர்களின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலையில் உள்ளேன் என்று அலீ (ரலி) அவர்கள் இட்ட கட்டளையை அவர்களிடம் எடுத்துக் கூறுகின்றார். எனவேää நான் கலீபா அவர்களின் உத்தரவினை மதித்து இந்த நகரைப் பாதுகாக்கும் நடவடிக்கையை எடுக்கும் நிலையில் உள்ளேன் என்று கூறுகின்றார். இருப்பினும்ää பஷரா கைப்பற்றப்படுகின்றதுää கவர்னர் சிறைபிடிக்கப்படுகின்றார்.

பஷரா ஹிஜ்ரி 36ää ரபிய்யுல் ஆகிர்ää 4 ம் நாள் கைப்பற்றப்படுகின்றது. பஷராவை கைப்பற்றப்பட்டவுடன்ää தல்ஹா (ரலி) அவர்களும்ää ஜுபைர் (ரலி) அவர்களும் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக இறங்கி விடுகின்றார்கள். நூற்றுக்கணக்கான ஆண்கள் சுற்றி வளைக்கப்பட்டுää அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். சிலர் கைது செய்யப்பட்டுää விசாரணையும் முடுக்கி விடுப்பட்டது. அதில் பலர் இந்தப் படுகொலையில் சந்தப்பட்டிருப்பது தெரிந்ததும்ää அவர்களை விசாரணைக்குப் பின் கொலை செய்யவும்படுகின்றார்கள். இப்பொழுது பஷரா நகரமே திகில் பிடித்த நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது. பஷரா கைப்பற்றப்பட்ட செய்தியை கடிதம் மூலமாக நாட்டின் பல பாகங்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது. தல்ஹா (ரலி) அவர்களும்ää ஜுபைர் (ரலி) அவர்களும் அனுப்பி வைத்த செய்தியில்ää உதுமான் (ரலி) அவர்களைப் படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது இறைவனின் தண்டனை எவ்வாறு இறங்கியிருக்கின்றதுää அதற்கான தண்டனையை அவர்கள் பஷராவில் பெற்றுக் கொண்டார்கள் என்றும் குறிப்பிட்டு அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்கள்.

அலி (ரலி) தோழர்களும்

பஷராவில் நடந்து கொண்டிருப்பவைகள் அத்தனையும் அலீ (ரலி) அவர்களைக் கவலை கொள்ளச் செய்தன. இப்பொழுது முஆவியா (ரலி) அவர்களை அவர்களின் போக்கில் விட்டு விட்டுää முதலில் நாம் ஈராக்கின் மீது முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்ற முடிவை அலீ (ரலி) அவர்கள் எடுக்கின்றார்கள்.

மதீனாவின் இளவல்களை அழைத்தார் அலீ (ரலி) அவர்கள். மதீனாவின் மக்களே..! வாருங்கள் என் பின்னால் அணி திரண்டு.

ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களின் விஷயத்தில் அலீ (ரலி) அவர்கள் உதவி செய்யப்பட முடியாத நிலையில் இருந்தார். மதீனத்து மக்கள் தன் பின்னால் அணி திரள்வார்கள் என எதிர்பார்த்த அலீ (ரலி) அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மிகச் சிலரே போராட முன் வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பின்னால் இறைநிராகரிப்பிற்கு எதிராக தங்களது உயிரையும்ää பொருளையும் துச்சமாக மதித்து அணி திரண்ட அந்த இளவல்கள் இப்பொழுதுää இது எங்களால் தாங்கவியலாத பளுவாக இருக்கின்றது அமீருல் முஃமினீன் அவர்களே..! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவி.. இறைநம்பிக்கையார்களின் தாய்..! அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை எதிர்த்தா எங்களைக் களமிறங்கச் சொல்கின்றீர்கள்? மன்னித்து விடுங்கள் என்று ஒதுங்க ஆரம்பித்தார்கள்.

ஈரானை வென்றெடுத்த வேங்கைää சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

இறைநம்பிக்கையாளர்களின் தலைவர்.. அமீருல் முஃமினீன் அவர்களே..!

நம்பிக்கையார்களையும்ää நம்பிக்கையற்றோர்களையும் பிரித்து இனங்காணக் கூடிய வாள் ஒன்றை எனக்குத் தாருங்கள். அத்தகைய வாள் ஒன்றை என் கையில் தருவீர்கள் என்று சொன்னால்...ää உங்கள் பின்னால் நின்று நான் போர் செய்யக் காத்திருக்கின்றேன். அத்தகைய வாள் ஒன்றை எனக்குப் பெற்றுத்தர இயலாதபட்சத்தில்....ää தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்..!

அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்..!

அல்லாஹ்வின் திருப்பெயரால் கேட்டுக் கொள்கின்றேன்..! எனது மனது விரும்பாத ஒன்றை என்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்க வேண்டாம்..!

முஹம்மது பின் முஸ்லிமா (ரலி) அவர்கள் கூறினார்கள்..!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருக்கின்றார்கள்..! முஸ்லிமாவே..! உனது வாளை நீ என்றைக்கும் இறைநிராகரிப்பாளர்களை எதிர்த்துப் பயன்படுத்துவீராக..! முஸ்லிம்களை எதிர்த்துப் போர் புரியும் நிலை ஏற்பட்டால்ää அந்த வாளை உடைத்து விடும்..! என்று எனக்கு அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். எனவேää நான் ஏற்கனவே என்னுடைய வாளை சுக்குநூறாக உடைத்தெறிந்து விட்டேன்ää அமீருல் முஃமினீன் அவர்களே..!

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்..!

''வணங்கத்தக்க இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவன் இல்லை""ää என்று சான்று பகர்ந்திருக்கின்ற ஒரு மனிதரை எதிர்த்து நான் போர் செய்வதில்லை என்று சத்தியம் செய்திருக்கின்றேன்ää என்னை மன்னித்து விடுங்கள்..! அமீருல் முஃமினீன் அவர்களே...!

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நிழலில் நின்று போராடிய இந்த வேங்கைகளின் கூற்றைக் கேட்டää உஸ்தர் என்பவர் கூறினார்..ää உங்களது சொல்லுக்குக் கட்டுப்படாத இவர்களை சிறையில் தள்ளுங்கள்...!

'இல்லை"ää யாருடைய விருப்பத்திற்கும் எதிராகவும்ää என்னுடைய பலத்தைப் பிரயோகிக்க விரும்பவில்லைää என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

கடைசிப் போர்

சிப்பீன் போர்

கூஃபாவிலிருந்து வந்த உதவி

ஹிஜ்ரி 36 ரபிய்யுல் அவ்வல் மாதம் அலீ (ரலி) அவர்கள் ஈராக்கை நோக்கிப் புறப்பட்டார்கள். எதிர்தரப்பினர் பஷராவை அண்மிக்கு முன்பாகவே நாம் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்பதே அலீ (ரலி) அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் நீண்ட பயணம்ää அதிகப்படியான நேரம் எடுத்துக் கொண்டதால் குறித்த காலக்கெடுவுக்குள் போய்ச் சேர இயலவில்லை. தி கார் என்ற இடத்தை அடைந்த பொழுதுää பஷரா நகரம் ஆயிஷா (ரலி) அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக தகவல் வருகின்றது. எனவேää அங்கேயே அலீ (ரலி) அவர்கள் தங்கி விடுகின்றார்கள்.

கூஃபாவின் கவர்னராக இருந்த அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்களுக்குää பலமுறை உதவி கேட்டுப் பல முறை செய்தி அனுப்பி வைத்தார்கள் அலீ (ரலி) அவர்கள். உள்நாட்டு யுத்தம் ஒன்று நடக்கவிருப்பதை அபூ மூஸா (ரலி) அவர்கள் விரும்பவில்லை. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமினுடைய தொண்டைக்குழியை அறுப்பதா? என்று அவர் இந்த உள்நாட்டு யுத்தத்தை வெறுக்க ஆரம்பித்தார். இந்தப் பிரச்னையிலிருந்து ஒதுங்கி இருக்கவே அவர் விரும்பினார். தன் நாட்டு மக்களுக்கும் அதனையே அறிவுரையாகவும் வழங்கினார்.

ஆயிஷா (ரலி) அவர்களுக்கும்ää அலீ (ரலி) அவர்களுக்குமிடையே நடக்கும் இந்தப் போரில் நாம் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்த அபூ மூஸா (ரலி) அவர்கள்ää தன் நாட்டு மக்களுக்கும் அவ்வாறே இருந்து கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

இறுதியாகää அலீ (ரலி) அவர்கள் தனது மகன் ஹஸன் (ரலி) அவர்களை கூஃபாவிற்கே அனுப்பி வைத்தார்கள். ஹஸன் (ரலி) அவர்கள் கூஃபா வை அடைந்த நேரத்தில்ää அபூ மூஸா (ரலி) அவர்கள் அங்கிருந்த பள்ளிவாசலில் மக்களிடம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அந்த உரையில்ää முஸ்லிம்களுக்கிடையே நடக்கும் இந்த உள்நாட்டு யுத்தத்தில் இருந்துää முற்றிலும் தவிர்ந்து இருந்து கொள்ளுமாறு அறிவுரை கூறிக் கொண்டிருந்தார். அபூ மூஸா (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தி முடிந்ததும்ää ஹஸன் (ரலி) அவர்கள் மேடை மீது ஏறிää உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள்.

அந்த உரையில்ää தன்னுடைய தந்தை எந்தளவு நேர்மையான கலீஃபா என்பதனையும்ää தல்ஹா (ரலி) அவர்களும்ää ஜுபைர் (ரலி) அவர்களும் தந்த வாக்குறுதியை மீறி நடந்து கொண்டிருக்கும் நிலையையும்ää இந்த நிலையில்ää நீதியை நிலைநாட்டுவதற்காக கலீஃபா விற்கு உதவுவது பொதுமக்களின் கடமையாக இருக்கின்றது என்பதனையும்ää தனது உரையில் ஹஸன் (ரலி) அவர்கள் விளக்கிக் கூற ஆரம்பித்தார்கள்.

ஹஸன் (ரலி) அவர்களின் உரை அங்கே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கூஃபா வின் முன்னணித் தலைவர்கள் ஒருவர் எழுந்திருந்துää கூஃபாவின் மக்களே..! நம்முடைய கவர்னருடைய கூற்றுää சரிதான். ஆனால்ää தேசத்தின் ஒற்றுமை என்பதும் அவசியமானதொன்று. அந்த ஒருமைப்பாடு இல்லையெனில்ää அமைதியும்ää நீதியும் இல்லாமல் போய் விடும். அலீ (ரலி) அவர்கள் கலீஃபா வாகää ஆட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர். அவர் நீதியை நிலைநாட்டுவதற்காக உங்களுடைய உதவியைக் கேட்டிருக்கின்றார். அவரது கோரிக்கைக்கு உங்களால் முடிந்த அளவு உதவி வழங்க வேண்டியது கடமையாகும் என்று உரையாற்றி முடிக்கின்றார்.

இவரது இந்த உரையை அடுத்துää இதே போன்ற கருத்தை முன் வைத்து இன்னும் சில தலைவர்கள் பேச ஆரம்பிக்கின்றார்கள். இப்பொழுது மக்களிடையே ஒருவித உணர்ச்சிகரமான நிலை நிலவ ஆரம்பிக்கின்றது. அந்த இடத்திலேயே ஒன்பதனாயிரம் பேர் அலி (ரலி) அவர்களின் படையில் சேர்ந்து கொள்வதற்காகத் திரண்டு விடுகின்றார்கள்.

இயன்றவரைக்கும்ää அதிகபட்ச முயற்சியாக நமக்கிடையே இரத்தம் சிந்துவதை நாம் தவிர்ந்து கொள்ள முயற்சி செய்வோம் என்று கூஃபாவின் மக்களுக்கு அலீ (ரலி) அவர்கள் வாக்குறுதியும் அளிக்கின்றார்கள். போர் செய்வது தவிர்க்கவியலாத நிலைக்கு தள்ளபட்டாலும்ää அதனைத் தவிர்த்துக் கொள்ள நாம் இயன்ற வரைக்கும் முயற்சிப்போம் என்றும் அலீ (ரலி) அவர்கள் தன்பின்னால் அணி திரண்ட மக்களுக்கு வாக்குறுதி அளிக்கின்றார்கள்.

அலீ (ரலி) அவர்களின் இந்த வாக்குறுதியானதுää கூஃபாவின் மக்களின் இதயத்தைக் கவர்ந்ததுää கலீஃபா அவர்கள் நியயமான காரியங்களுக்காகத் தான் இங்கு வந்திருக்கின்றார்கள் என்று நல்லபிப்பராயத்தையும் அலீ (ரலி) அவர்களின் மீது தோற்றுவித்தது. இது அலீ (ரலி) அவர்களுக்கு ஆற்றலையும்ää இன்னும் கௌரவத்தையும் பெற்றுத் தந்தது.

பேச்சுவார்த்தை தோல்வி

இப்பொழுது பஷராவை அண்மித்து விட்ட அலீ (ரலி) அவர்கள்ää ஆயிஷா (ரலி) அவர்களுக்கும்ää அவரது ஆதரவாளர்களுக்கும் இருந்து கொண்டிருக்கின்ற தவறான புரிந்துணர்வைக் களைந்து விடுமுகமாக ஒரு மனிதரை அவர்களிடம் அனுப்பி வைக்கின்றார்கள்.

சென்ற அந்த தூதுவர்..கேட்டார்..!

உண்மையில்ää உங்களது ஆதரவாளர்கள் விரும்புவது என்னவென்பதை அறிந்து கொள்ளலாமா?

நாங்கள் முஸ்லிம்களின் நலத்தை அன்றிää வேறெதனையும் விரும்பவில்லைää என்று ஆயிஷா (ரலி) அவர்களின் தரப்பில் இருந்து பதில் வந்தது. ''முஸ்லிம்களின் நலம்.. என்பது உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குப் பழிஎடுக்கும் வரையிலும் சாத்தியமற்றது"".

உதுமான்(ரலி) அவர்களின் படுகொலைக்குப் பழி வாங்க வேண்டும் என்று நீங்கள் கேட்பது நியாயம் தான். அலீ (ரலி) அவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். குழப்பவாதிகளின் கரங்களை ஒடுக்குவதற்கும்ää அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அலீ (ரலி) அவர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டியவது அவசியமில்லையா? இதில் நான் சொல்லித் தெரியாத அளவுக்குää இதில் உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கின்றது. நீங்கள் இப்பொழுது பஷராவில் உள்ள குழப்பவாதிகளுக்கு தண்டனை வழங்க ஆரம்பித்து விட்டீர்கள். ஆனால் ஹர்கஸ் பின் சுபைர் என்பவரைப் பொறுத்தவரை இன்னும் நீங்கள் உதவி செய்யப்பட முடியாத நிலையில் அல்லவா இருக்கின்றீர்கள். நீங்கள் அவரைக் கொல்ல நினைத்தாலும்ää அவரைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காக ஆயிரம் பேர் நின்று கொண்டிருக்கின்றார்கள். அவரைத் தப்பிக் விட்டு விடுவீர்கள்.

உண்மையிலேயே நீங்கள் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விரும்பினால்ää கலீபாவின் பின்னால் ஒன்று திரளுங்கள். தயவுசெய்து மக்களை உள்நாட்டுக் குழப்பத்தில் தள்ளி விட்டு விடாதீர்கள். இது தனிப்பட்ட நபர்களின் பிரச்னையல்லää ஒட்டு மொத்த சமுதாயத்தை பாதிக்கக் கூடியது. பொதுமக்களின் இரத்தம் இந்தப் பூமியில் சிந்தப்படுவதை விடää நீங்கள் அமைதியை விரும்புவீர்கள்ää அமைதியை விரும்பக் கூடியவர்கள் என்று நினைக்கின்றேன்.

ஆயிஷா (ரலி)ää தல்ஹா (ரலி)ää சுபைர் (ரலி) ஆகியோர்கள் வந்தவரது வேண்டுகோளின் மூலம் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டனர்.

உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்கு அலீ (ரலி) அவர்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள் எனும் பட்சத்தில்ää நமக்குள் எந்தக் கருத்துவேறுபாடும் கிடையாதுää அதனை மிகவும் எளிதாக நாம் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.

இவர்களின் இந்த செய்தியைää வந்த அந்த தூதுவர் அலீ (ரலி) அவர்களிடம் எடுத்துச் சென்றார். மேலும்ää நம்பிக்கை தரும் அந்தச் செய்தியுடன்ää பஷரா நகரைச் சேர்ந்த சிலரும் அந்தத் தூதுவருடன் அலீ (ரலி) அவர்களைச் சந்திக்கச் சென்றனர். இன்னும்ää இதுவரை ஏற்பட்ட பிரச்னைகளின் காரணமாகää அலீ (ரலி) அவர்கள் தங்களை எதிரியாகக் கருதக் கூடாது என்ற கோரிக்கையையும் அலீ(ரலி) அவர்களிடம் முன் வைத்தனர். அலீ (ரலி) அவர்கள் இதுவிஷயத்தில் நீங்கள் என்னிடம் பயப்படத் தேவையில்லைää நான் எந்த எதிர்நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி அளித்தார்கள்.

இப்பொழுதுää அமைதி திரும்புவதற்கான எதிர்பார்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருந்தன. ஆனால் அலீ (ரலி) அவர்களுடன் வந்திருந்த அப்துல்லா பின் சபா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இந்த அமைதிப் பேச்சுவார்த்தை அதிக மன உளைச்சலைக் கொடுக்க ஆரம்பித்தது. இன்னும் பஷராவிலிருந்து வந்தவர்களுக்கு அலீ (ரலி) அவர்கள் தந்த வாக்குறுதி அப்துல்லா பின் சபா வை மிகவும் கலவரத்திற்குள்ளாக்கியது.

இன்னும் இதனை விட பஷராவிற்குத் திரும்பிய பின் அலீ (ரலி) அவர்கள் ஆற்றிய உரைää அப்துல்லா பின் சபா வை மேலும் கலவரத்திற்குள்ளாக்கியது. அலீ (ரலி) அவர்கள் உரையின் சாரம் :

என்னுடைய மக்களே..! ஒற்றுமை தான் அல்லாஹ் நம்மீது புரிந்திருக்கக் கூடிய மிகப் பெரும் அருட்கொடையாகும். ஒற்றுமை தான் நம்மை பலமிக்கவர்களாகவும்ää மேன்மை மிக்க மக்களாகவும் மாற்றும். இஸ்லாத்தினுடைய எதிரிகள் நாம் ஒற்றுமையாக இருப்பதை விரும்பவில்லை. அவர்கள்ää நம்முடைய ஒற்றுமையைச் சீர்குலைப்புச் சதிகளைச் செய்யவே விரும்புகின்றார்கள். இத்தகையோர்களிடமிருந்து நீங்கள் மிகவும் கவனமாகவும்ää எச்சரிக்கையாகவும் இருந்து கொள்ளுங்கள். நாளை நாம் பஷரா நகருக்கு அமைதிப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றோம். உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் இந்தப் பயணத்தில் கலந்து கொள்ளாமல்ää இருந்து விடுங்கள் என்றும் கூறினார்கள்.

அலீ (ரலி) அவர்களின் இந்த அறிவிப்புக்குப் பின் அப்துல்லா பின் சபா வின் ஆட்கள் இந்தப் பயணத்தில்கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொண்டதோடுää அவர்கள் ரகசியமாக ஒரு இடத்தில் ஒன்று கூடலானார்கள்.

உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவதற்கு கலீஃபா அலீ (ரலி)அவர்கள் தயாராகி விட்டார்கள் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். தல்ஹாää சுபைர் மற்றும் ஆயிஷா ஆகியோர்கள் எதனை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார்களோää அதற்கு அலி அவர்கள் உடன்பட்டு விட்டார்கள் என்றே தோன்றுகின்றது. இதனைத் தடுத்து நிறுத்த நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்றும் அப்துல்லா பின் சபாவின் ஆட்கள் தங்களுக்குள் கருத்துப்பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

அலீ(ரலி) அவர்கள் அறிவிப்புச் செய்ததன்மறுநாள் சொல்லியபடியேää பஷரா நகரை நோக்கி அலீ (ரலி) அவர்களும் அவர்களது படையினரும் புறப்பட்டார்கள். இப்பொழுது மறு கூடாரத்திலிருந்து தல்ஹா (ரலி) மற்றும் சுபைர் (ரலி) அவர்களும் தங்களது படையினருடன் பஷரா நகரைவிட்டும் வெளிக்கிளம்பி வந்தார்கள். இந்த இரண்டுபடைகளும் மூன்று நாட்கள் நேருக்கு நேர் நின்று கொண்டிருந்தன. அமைதிப் பேச்சுவார்த்தைகளும் நடந்துகொண்டே இருந்தன. மூன்றாவது நாள்..!

இரண்டு தரப்பிலிருந்தும் உள்ள மிகப் பெரும் தலைவர்கள் நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார்கள். அலீ (ரலி) அவர்கள் தனது குதிரையின் மீதமர்ந்துகொண்டு முன்னே சென்றார்கள். மறுமுனையிலிருந்து தல்ஹா (ரலி) மற்றும் சுபைர் (ரலி) ஆகியோர்கள் தங்களது குதிரைகளில் அலி (ரலி) அவர்களை நோக்கி வந்தார்கள். இரு குழுக்களும் நேருக்கு நேராகää இரண்டு அணிக்குதிரைகளின் கழுத்துக்கள் ஒன்றிணைந்து கொள்ள முகத்துக்கு முகம் பார்த்துப் பேசலானார்கள். (அவர்கள் பேசிய வரிகள் வரலாற்று வரிகள். எதிரிகளென்று கருதுபவர்களைக் கூட இங்கிதமான முறையில் அழைக்கக்கூடிய வைர வரிகள். இன்றைய முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுப் பொக்கிஷங்கள்.)

''நான் உங்களது சகோதரனல்லவா?"" என்று எதிர்தரப்பிலிருந்து வந்த தல்ஹா (ரலி) மற்றும் சுபைர்(ரலி) ஆகியோர்களைப் பார்த்துää அலீ (ரலி) அவர்கள் கேட்டார்கள்.

ஒரு முஸ்லிம் சகோதரனது இரத்தம் இன்னொரு முஸ்லிம் சகோதரனுக்குப் புனிதமானதல்லவா? என்றும் அலீ (ரலி) அவர்கள்ää அவர்களைப் பார்த்துக் கேட்டார்கள்.

''ஆனால் நீங்கள் உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிரான கலவரத்தில் நீங்கள் பங்கு கொண்டு விட்டீர்களே""ää என்று தல்ஹா அவர்கள் கோபத்துடன் கூறினார்கள்.

உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இறைவனது சாபம் உண்டாகட்டுமாக..! என்று கூறிய அலீ (ரலி) அவர்கள்ää ஓ தல்ஹா..! என்னுடைய ஆட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பதாக எனக்கு வாக்குறுதி வழங்கியிருக்கவில்லையா?

ஆம்..! வாளையின் முனையின்மீது என்னை நிறுத்தி வாங்கப்பட்ட வாக்குறுதி அது? என்று தல்ஹா (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.

ஓ சுபைர்..! உங்களுக்கு நினைவிருக்கின்றதா""ää அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்ää என்னை (க் குறித்து) நீங்கள் விரும்புகின்றீர்களா என்று உங்களிடம் கேட்டார்கள் அல்லவா? அதற்கு நீங்கள்ää 'ஆம்" என்றீர்கள் அல்லவா. அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää சுபைரே..! ஒருநாள் வரும்ääஅப்பொழுது ஒன்றுமில்லாததொரு விஷயத்திற்காக அலியுடன் நீங்கள் சண்டைக்கு நிற்பீர்கள் என்று முன்னறிவிப்புச் செய்தார்களே ஞபாகமிருக்கின்றதா? என்று அலி (ரலி) அவர்கள் சுபைர் (ரலி) அவர்களைப் பார்த்துக் கேட்டார்கள்.

நிச்சயமாக..! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது உண்மை தான். நான் இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவுபடுத்திக் கொண்டேன் என்றார்கள். இந்தக் கலந்துரையாடல்களுக்குப் பின்ää இரண்டு தரப்பாரும் அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பி விட்டார்கள். இரு குழுக்களுக்குமிடையே நடைபெற்ற உரையாடல்கள் இருதரப்பினரது மனதையும் இளக வைத்திருந்தது. நெருக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. உள்நாட்டு யுத்தத்தின் மூலமாக சிந்தப்படவிருக்கின்ற இரத்தங்கள்ää மற்றும் இஸ்லாமிய சமுதாயம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் குறித்தும் இரு தரப்பாரும் சிந்திக்கலானார்கள். ஆனால்ää அமைதிக்கான அறிகுறிகள் முழு அளவில் தென்படவில்லையே என்று இரு தரப்பார்களும் உணரத் தளைப்பட்டார்கள்.

அலீ (ரலி) அவர்கள் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது குறித்துää மிகவும் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி தனது கூடாரத்திற்குத் திரும்பினார்கள். முஸ்லிம்கள் தங்களுக்கு அடித்துக் கொண்டு இரத்தம் சிந்துவது தவிர்க்கப்பட்டு விட்டது என்றே அலீ (ரலி) அவர்கள் கருதலானார்கள். இன்னும் யாருக்கு எதிராகவும் ஒரு சிறு துரும்பைக் கூட எடுத்துப் போடக் கூடாதுää அதாவது ஒரு அம்பைக் கூட எறியக் கூடாது என்று கடுமையான உத்தரவை தனது படையினருக்கு அலீ (ரலி) அவர்கள் கடுமையான கட்டளையிட்டார்கள். அன்றைய இரவில்ää யா அல்லாஹ்..! இந்த உள்நாட்டு யுத்தத்தின் மூலம் முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப்படுவதனின்றும்ää அதன்கொடுமைகளிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பாயாக என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
போரே..! முடிவு

இரவு வந்தது. இரவின் நிசப்தத்தில் இரண்டு படைகளும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால்ää அப்துல்லா பின் சபா வும்ää அவனது ஆட்கள் மட்டும் தூங்கவில்லை. இரவு முழுவதும் சதிகளைப் பற்றிய திட்டமிடுதலில் கழித்தார்கள். இது தான் நமது கடைசிச் சந்தர்ப்பம் இதனை நழுவ விடக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டார்கள். இரவின் இருள் இன்னும் விலாகமல் இருந்தது. ஆனாலும் அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு வாட்களின் பேரிரைச்சல் எங்கும் சூழ ஆரம்பித்தது. யாருமே நினைத்துப் பார்த்திராத திடீர்க் குழப்பம். சபா வும் அவனது ஆட்களும்ää திடீரென ஆயிஷா (ரலி) அவர்களின் படையினரின் மீது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தார்கள். விரைவில்ää முழு அளவிலான யுத்தம் ஆரம்பமாகி விட்டது.

திடீரென ஏற்பட்ட இந்தக் குழப்பத்தைப் பார்த்துää தல்ஹா (ரலி) மற்றும் சுபைர் (ரலி) ஆகியோர் செய்வதறியாது நின்றார்கள்.

என்ன நடந்து கொண்டிருக்கின்றது? என்று தன்னுடைய ஆட்களைப் பார்த்து தல்ஹா (ரலி) கேட்கää

அலீயினுடைய ஆட்கள் நம்மைத் தாக்குகின்றார்கள் என்ற பதில் வந்தது.

என்ன இது நாம் இப்படி நடக்குமென்று நினைத்தும் கூட பார்க்கவில்லையே..! முஸ்லிம்களினுடைய இரத்தம் சிந்தப்படாமல்ää அலி ஓய மாட்டார் போலிருக்கின்றதுää இந்தப் பயம் எமக்கு எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருந்தது என்று தல்ஹா கருதத் தலைப்பட்டார்.

இங்குää தல்ஹா எதனை நினைத்தரோ அதனையே அந்த முகமாமில் இருந்த அலி (ரலி) அவர்களும் கருதலானார்கள்.

அலி (ரலி) அவர்கள் தனது படையினரைப் பார்த்துää என்ன நடந்து கொண்டிருக்கின்றது? என்றார்கள்.

தல்ஹா (ரலி) அவர்களும்ää சுபைர் (ரலி) அவர்களும்ää அவர்களது ஆட்களும் நம்மீது எதிர்பாராத தாக்குதலை நடத்தி முற்றுகையிட்டு விட்டார்கள்""ää என்ற பதிலை சபா வினுடைய ஆட்களில் ஒருவர் பதிலாகத் தந்தார்.

அப்படியா..! என்று கூறிய அலி (ரலி) அவர்கள்ää முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதனின்றும் இந்தப் பெருந்தகைகளைத் தடுக்க முடியாது போலிருக்கின்றதே..!ää இந்தப் பயம் எமக்கு எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருந்தது என்று தல்ஹா (ரலி) அவர்கள் கருதியது போலவே அலி(ரலி) அவர்களும் கருதத் தலைப்பட்டார்கள்.

இப்பொழுது போர் உச்சக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. முஸ்லிம்களின் தொண்டைக் குழிகள் முஸ்லிம்களாலேயே அறுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கானோர் இரு பக்கமும் வீழ்ந்துபடலானார்கள். தல்ஹா (ரலி) அவர்களும் போரில் மூழ்கிப் போனார். சுபைர் (ரலி) அவர்கள் போர் முகாமை விட்டும் வெளியேறி விட்டார். ஆயிஷா (ரலி) அவர்கள் முக்கிய படைவீரர்கள் களைந்து விட்டார்கள். ஆனாலும்ää ஆயிஷா (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த ஒட்டகத்தைச் சுற்றிலும் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது. ஒட்டகத்தின் முதுகில் அமைக்கப்பட்டிருந்;த ஹவ்தா என்ற கூடாரத்தில் அமர்ந்து கொண்டே படைகளுக்குக் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார் ஆயிஷா (ரலி) அவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவி என்ற பிரியத்தின் காரணமாகää மிகப் பெரிய குழுவொன்று அற்பணிப்புடன் போர் செய்து கொண்டிருந்தது. ஆயிஷா (ரலி) அவர்களைச் சுமந்து கொண்டிருந்த ஒட்டகத்தின் கடிவாளைத்தைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக எழுபது நபர்கள் தங்களது இன்னுயிரை இழந்தார்கள்.

போர்க்களக் காட்சிகளைப் பார்வையிட்ட அலீ (ரலி) அவர்களின் இதயத்தில் இரத்தம் பீறிட்டு ஓடியது. வலியால் துடிக்க ஆரம்பித்தது. எந்தவொரு காரணமுமில்லாமல் முஸ்லிம்களது உயிர்கள் அநியாயமாகக் கொள்ளையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றதே என்று வேதனைப்படலானார்கள். இறுதியாகää தனக்கு நெருக்கமானதொரு தோழரை அழைத்த அலி (ரலி) அவர்கள்ää ஆயிஷா (ரலி) அவர்களைச் சுமந்து கொண்டிருந்த ஒட்டகத்தின் பின்னங்காலைத் தரித்து விடும்படிக் கூறினார்கள். அவர் அவ்வாறே செய்தார். அந்த ஒட்டகம் நிற்க இயலாமல் தனது முன்னங்காலை ஊண்றிக் கொண்டு தரையில் உட்கார ஆரம்பித்ததுää ஆயிஷா (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த அந்த ஹவ்தா என்ற கூடாரமும் கீழிறங்கியது. அத்துடன்ää போரும் முடிவுக்கு வந்தது.

ஆயிஷா (ரலி) அவர்களைக் கண்ணியத்துடன் ஹவ்தா என்ற கூடாரத்தை விட்டும் இறக்கப்பட்டார்கள். அவர்களுக்கு எந்தக் காயமும் படவில்லை. ஆயிஷா (ரலி) அவர்களை நெருங்கிய அலி (ரலி) அவர்கள்ää அன்னையவர்களே..! நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்..! உங்களுக்கு ஒன்றுமில்யே..! என்றார்கள்.

எனக்கும் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லைää நான் நலமாகவே இருக்கின்றேன்..! என்றார்கள். ''அல்லாஹ் உங்களது பாவங்களை மன்னிக்கட்டும்"" என்றார்கள் ஆயிஷா (ரலி) அவர்கள்.

''அல்லாஹ் உங்களது பாவங்களையும் மன்னிக்கட்டும்"" என்று மறுமொழி பகர்ந்தார்கள் அலி (ரலி) அவர்கள்.

இப்பொழுது அலி (ரலி) அவர்கள் போக்களத்தைச் சற்று சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முகாமில் தோளோடு தோள் நின்று கொண்டிருந்த எண்ணிலடங்கா தோழர்கள்ää ஒன்றுமில்லாத காரணத்திற்காகத் தங்களது இன்னுயிர்களை நீத்தவர்களாக அந்த போர்க்களத்தின் புழுதி மணலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் இஸ்லாம் ஈன்றெடுத்த உன்னதப் புதல்வர்களல்லவா..! என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு வந்த அலி (ரலி) அவர்களது இதயம் கனக்க ஆரம்பித்ததுää அங்கு இரத்தம் கசிந்தோட ஆரம்பித்தது. கவலையால் அலி (ரலி) அவர்கள் சோர்ந்து தான் போனார்கள். இன்னும் போர்க்களத்தில் கிடக்கின்ற கனீமத்துப் பொருட்கள் எதனையும் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டாம் என்றும்ää அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து பஷரா மக்களை அழைத்துää அவரவர் பொருட்களை எடுத்துக் கொண்டு செல்லுமாறு கூறி விட்டார்கள்.

போர்க்களத்தை விட்டும் ஓடிய சுபைர் (ரலி) அவர்கள்ää இப்பொழுது மக்காவை நோக்கிப் பயணமாகிக் கொண்டிருந்தார். பயணத்தின் இடையில் ஒரு பள்ளத்தாக்கில் தொழுவதற்காக தனது பயணத்தை சுபைர் (ரலி) அவர்கள் இடைநிறுத்தினார்கள். தொழுகையில் தனது முழுக்கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்த பொழுதுää அம்ர் பின் ஜர்மூஸ் என்பவர் சுபைர் (ரலி) அவர்களின் தலையைக் கொய்து விட்டார். அவரைக் கொலை செய்ததோடு நில்லாமல்ää சுபைர் (ரலி) அவர்களின் கையைக் கொய்துää அலி (ரலி) அவர்களிடம் கொண்டு வந்தார். அலி (ரலி) அவர்களின் எதிரியான சுபைர் (ரலி) அவர்களைக் கொலை செய்ததற்காக கலீஃபா அவர்கள் தனக்குச் சன்மானம் தருவார் என்று அவர் எதிர்பார்த்தார்கள்.

ஆனால்ää அலி (ரலி) அவர்களிடமிருந்து கடுமையான வசைகளைத்தான் பெற்றுக் கொள்ள முடிந்தது அவரால். இந்தக் கைகளுக்குச் சொந்தக்காரர்ää பலமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முகாமில் இருந்து எதிரிகளுக்கு எதிராக வாள் பிடித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கின்றேன் என்று கூறிய அலி (ரலி) அவர்கள்ää கொலைகாரர்களுக்கு நரகமே சித்தமாகட்டும் என்று கத்தினார்கள்.

சிறிது நாட்களை பஷராவிலேயே கழித்த பின் ஆயிஷா (ரலி) அவர்களை பத்திரமாக மதீனாவிற்கு அனுப்பி வைத்தார்கள்ää அலி (ரலி) அவர்கள். அவருடன்ää அவருடைய தம்பியான முஹம்மது அபுபக்கர் (ரலி) அவர்களையும் துணைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் மதீனாவிற்குப் புறப்பட்ட இருந்த நிலையில்ää அவர்களது ஒட்டகத்தைச் சுற்றிலும் பலர் கூடி நின்றார்கள். அப்பொழுது அவர்களை நோக்கிää என்னருமைக் குழந்தைகளே..! உங்களில் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்ள வேண்டாம். இறைவன் மீது சத்தியமாக..! எனக்கும் அலி க்ககும் இடையில் எந்தவித முன்விரோதமும் இல்லை. அது ஒரு குடும்பம் பிரச்னை போன்றதது தான். அலி ஒரு நல்ல மனிதர் என்பதை நானறிவேன் என்றார்கள்.

அன்னையவர்கள் சொன்னது மிகச் சரியானது என்று பதிலுரைத்த அலி (ரலி) அவர்கள்ää எங்களுக்குள் இருக்கும் பிரச்னை எல்லாம் குடும்பப் பிரச்னை போன்றது தான். அன்னையவர்கள் இறைநம்பிக்கையாளர்களில் எல்லாம் மிகச் சிறந்த உன்னதமான இடத்தைக் கைப்பற்றிக் கொண்டிருப்பவர்கள். இந்த உலகிலும் மறு உலகிலும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவி என்ன உன்னதான அந்தஸ்திற்குச் சொந்தமானவர்கள் அவர்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் பயணப்படää அவர்களை பல மைல் தூரம் பின்தொடர்ந்து சென்று வழியனுப்பி விட்டு வந்தார்கள் அலி (ரலி) அவர்கள்.

இப்பொழுது அலி (ரலி) அவர்கள் பஷராவில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் முயற்சியில் கவனம் செலுத்தலானார்கள். சற்று முன் இந்த நகரம் தான் அலி (ரலி) அவர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி நின்றது. இருப்பினும்ää அனைவருக்கும் பொதுமன்னிப்பை அலி (ரலி) அவர்கள் வழங்கினார்கள். அதன்பின் பள்ளிவாசலில் ஒன்று கூடிய மக்களைப் பார்த்து உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றிய அலி (ரலி) அவர்கள்ää இறைவனுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் மக்களிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்ட அலி (ரலி) அவர்கள் அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்களை பஷராவின் கவர்னராக நியமித்தார்கள்.

பஷரா நகரம் அலி (ரலி) அவர்கள் வசம் வீழந்த பொழுதுää சில பனூ உமைய்யாக் கோத்திரத்தின் மிகப் பெரிய மனிதர்கள் அங்கு இருந்தார்கள். அவர்களில் குறுகிய நோக்கங்களுக்குச் சொந்தக் காரரான மர்வான் என்பவரும் இருந்தார். அவர் பஷராவில் ஒளிந்து மறைந்திருந்தார். அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கியது போலää அலி (ரலி) அவர்கள் மர்வானுக்கும் பொதுமன்னிப்பு வழங்கினார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்வான்ää அங்கிருந்து சிரியாவிற்குப் பயணமாகிää முஆவியா (ரலி) வுடன் இணைந்து கொண்டார்.

அலி (ரலி) ஆளுகையின் கீழ் பஷரா – நல்லடக்கப்பணி

போருக்குப் பின்ää போர் நடந்த களத்தை அலி (ரலி) அவர்ள் பார்வையிட்டார்கள். அந்தப் பகுதியே இரத்தக் களமாக மனிதர்களின் எலும்புகள் நிறைந்த குப்பைக் கூலமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அவ்வாறு தங்களது இன்னுயிரை இழந்து கிடந்த எண்ணற்றோர்களின் முகங்கள் அலி (ரலி) அவர்களுக்கு மிகவும் பரிச்சியமானவர்களும் இருந்தார்கள்ää அவர்களைப் பார்த்த அலி (ரலி) அவர்களின் உள்ளம் குமுற ஆரம்பித்தது. அவர்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோளோடு தோள் நின்ற மிகவும் நெருங்கிய தோழர்களின் உடல்களும் அங்கு காணக் கிடந்தன. இந்தப் போரின் காரணமாகத் தானே இவர்களது உயிர்கள் அநியாயமாகப் பழி வாங்கப்பட்டு விட்டனääஇனி இது போன்ற போர்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று முடிவு செய்து கொண்டார்.

என்ன வேதனை..! முஸ்லிம்களே.. முஸ்லிம்களே தொண்டைக் குழியை எவ்வாறு அறுக்க முடிந்தது.. அலி (ரலி) அவர்களைப் போல போர்க்களக் காட்சியைப் பார்த்து விட்டு மனம் குமுறியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. எப்பொழுது போருக்கான ஆயத்தம் துவங்கியதோ அன்றிலிருந்து இரு தரப்பிலிருந்தும் கசப்பான எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன. ஆனால் இப்பொழுது தங்களது இன்னுயிரை இழந்து கிடக்கும் இவர்களுக்குள் ஏதாவது வேற்றுமை தெரிகின்றதா? இல்லையே..! எந்தப் பிணக்குகளும் இல்லாமல் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கிடக்கின்றார்களே..! அலி (ரலி) அவர்களின் உள்ளம் எரிமலையாய் குமுற ஆரம்பித்தது.

அலி (ரலி) அவர்கள் இரு பக்கங்களிலிருந்தும் இறந்தவர்களின் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். இப்பொழுது போர்க்களத்தைச் சுற்றிலும் பல வல்லூறுகள் பறந்து திரிய ஆரம்பித்தனää அவ்வாறு ஊடுறுவிய ஒரு வல்லூறு ஒருவரது கை எலும்பைக் கவ்விக் கொண்டு சென்றது. அதனைக் கவ்விக் கொண்டு மதீனாவிற்குச் சென்றுää அங்கே போட்டு விட்;டது. அந்த எலும்பின் விரலில் அணிவிக்கப்பட்டிருந்த மோதிரத்தை வைத்துää அந்தக் கைக்குச் சொந்தக்காரர் அப்துர் ரஹ்மான் பின் அதாப் (ரலி) என்ற பிரபல நபித்தோழர் என்றறியப்பட்டது. அலி (ரலி) அவர்கள் வெற்றியை பெற்று விட்டோம் என்ற சந்தோஷத்தில மிதக்கவில்லை. மாறாகää மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு தனதுதோழர்களைக் கேட்டுக் கொண்டார். இந்த மூன்று நாட்களும் இறந்தவர்களின் உடல்களை அடக்குவதற்காகவே கழிந்தது.

போருக்குப் பின் பஷரா மக்களின் நிலை

அலி (ரலி) அவர்களின் ஆதரவாளர்கள் சிலர் அலி (ரலி) அவர்களிடம் வந்துää தோல்வியைத் தழுவிய பஷரா மக்களை அடிமைகளாக ஆக்கிää வெற்றி பெற்றவர்களுக்கு பங்கிட்டுக் கொடுங்கள் என்றார்கள். இது 'தாருஸ் ஸலாம்" - இஸ்லாமிய ஆட்சிப் பூமியாகும்ää இங்கு முஸ்லிம்களே முஸ்லிம்களை அடிமைகளாக்கி வைத்திருப்பதை என்னால் அனுமதிக்க முடியாது என்று அவர்களை கோரிக்கையை மறுத்து விட்டார்கள். சரி.. அவர்களை அடிமைகளாகத் தரவில்லை என்றால்ää அவர்களது சொத்துக்களையாவது 'கனீமத்" பொருட்களாக எங்களுக்குப் பங்கிட்டுக் கொடுங்கள் என்றார்கள். இந்தக் கோரிக்கையையும் அலி (ரலி) அவர்கள் மறுத்து விட்டார்கள்.

போர்க்களத்திற்குக் கொண்டு வரப்படும் பொருட்களை வேண்டுமென்றால் 'கனீமத்" பொருட்களாக கணக்கிட்டுக் கொள்ள முடியும். ஆனால் போர்க்களத்திற்குக் கொண்டு வரப்படாமல் வீட்டில் வைத்திருக்கக் கூடிய பொருட்களின் மீது கைவைப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை என்று அந்தக் கோரிக்கையையும் அனுமதிக்க மறுத்து விட்டார்கள்.

அலி (ரலி) ஆளுகையின் கீழ் பஷரா

மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டதன் பின்புää அலி (ரலி) அவர்கள் பஷரா நகரத்திற்குள் நுழைந்துää அதனைக் கைப்பற்றிக் கொண்டார்கள். பஷரா மக்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக அறிவித்த அலி (ரலி) அவர்கள்ää அம் மக்கள் அனைவரையும் பள்ளிவாசலில் ஒன்று கூடும்படி கேட்டுக் கொண்டார்கள். மக்கள் அனைவரும் ஒன்று கூடியதன் பின்புää அவர்களிடையே அலி (ரலி) அவர்கள் உரையாற்ற ஆரம்பித்தார்கள்.

நடந்து விட்ட கொடூரமான சம்பவத்தினை எண்ணிää எனது இதயத்தில் இரத்தம் கசிந்து கொண்டிருக்கின்றதுää இதற்கு உங்களைத் தான் நான் குற்றம் சுமத்த முடியும்.

ஏனெனில்ää பஷரா மக்கள் அலி (ரலி) அவர்களின் ஆட்சியை ஏற்றுக் கொண்டதாக முன்பு வாக்களித்து விட்;டதன் பின்னர்ää தவறான முறையில் வழிநடத்தப்பட்டதன் விளைவாக தங்களது சத்தியங்களை முறித்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாக்கப்பட்டதோடுää எந்தவித நோக்கமுமின்றி அவர்கள் தங்களது வாக்குகளை மீற வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாக்கப்பட்டு விட்டார்கள். புனிதமான நோக்கத்திற்காக வாக்களித்து விட்டுää அதனை மீறலாகாது.

உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சியிலும்ää பின்பு அவர்களது படுகொலையின் பொழுது நடைபெற்ற சம்பவங்களையும் மக்களுக்கு மிக நீண்ட அளவில் எடுத்துக் கூறி விட்டுää தான் எந்தச் சூழ்நிலையில் ஆட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பது குறித்தும் அந்த மக்களுக்கு அலி (ரலி) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

பின்னர்ää நான் ஆட்சித் தலைவராக ஆவதற்காக என்னிடம் முதன்முதலாக பைஅத் என்ற வாக்குறுதியை வழங்கியவர்களாக தல்ஹாவும்ää சுபைரும் இருந்தார்கள்ää அதனைப் போலவே வாக்கினை முறித்துக் கொண்டவர்களிலும் அவர்கள் தான் முதலிடம் வகித்தார்கள். உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்காக நாங்கள் வஞ்சம் தீர்க்கப் போகின்றோம் என்று களத்தில் இறங்கிய அவர்களது பணியானதுää எந்தவித நோக்கமுமில்லாத சில வேண்டத்தகாத விளைவுகளை மட்டுமே அந்த நோக்கம் சம்பாதித்துக் கொள்ள முடிந்திருக்கின்றது.

ஆயிஷா (ரலி) அவர்களைப் பொறுத்தவரைää அவர்கள் கண்ணியத்திற்கும்ää மரியாதைக்கும் உரியவர்களாக இருக்கின்றார்கள். எனக்கும் அவர்களுக்குமிடையில் மிகச் சிறிய அளவு தான் கருத்துவேறுபாடு இருந்ததுää அந்தக் கருத்துவேறுபாடு கூட ஆயுதம் தூக்கிப் போராடும் அளவுக்கு மிகப் பெரியதொரு பாரதூரமானதும் கூட கிடையாது. பெண் என்ற நிலையில்ää இன்னும் அவர்களுக்கு இருக்கின்ற கண்ணியம்ää அந்தஸ்து ஆகியவற்றைப் பொறுத்து நோக்குமிடத்துää ஆயுதம் தூக்கி போராடுவதற்கு இஸ்லாமிய சட்டங்கள் அனுமதிப்பதில்லைää பெண்கள் அவர்களுக்கு உகந்த கண்ணியமான இருப்பிடம் வீடு தான்ää இது குறித்து தனது மனைவிமார்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றும் அலி (ரலி) அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்கள்.

இந்தக் கலவரத்தில் தங்களது கரத்தினில் ஆயுதங்களைத் தூக்கிப் போராடியவர்கள்ää தவறாக வழிநடத்தப்பட்டு விட்டார்கள். அவ்வாறு தவறான வழியில் வழி நடத்தப்பட்டதன் விளைவாகää முஸ்லிம் உம்மத் பாதிப்பிற்குள்ளாகி உள்ளதுää அந்தப் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கும் வேதனைகளும்ää அதன் அழிவுகளும் என்னை மிகவும் பாதிப்பிற்குள்ளாக்கி விட்டனää என்னைவிட அதிகம் கவலைக்குளானவர்கள் இங்கு யாரும் இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு என்னை மிகவும் பாதித்துள்ளது. இப்பொழுது பஷரா நகரமே இரத்த வெள்ளத்தில் கிடக்கின்றது. உங்களது நகரத்தின் நிலையினை எண்ணிää எனது இதயம் இரத்தத்தால் கசிந்து கொண்டிருக்கின்றது. எனவேää இந்த பஷரா நகரத்திற்கு பொதுமன்னிப்பை வழங்கி விட்டேன்ää பழையனவைகளை மன்னிப்போம்..ää மறப்போம்ää உங்கள் மீது கண்ணியமான முறையில் நடந்து கொள்வோம் என்று வாக்குறுதி அளிக்கின்றேன் என்று தனது உரையை முடித்த பொழுதுää அங்கிருந்த மக்களிடம் அலி (ரலி) அவர்களது உரை மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததைக் காண முடிந்தது.

அப்பொழுது அந்த உரையைக் கேட்டுக் கொண்டிருந்த பஷராவின் முக்கியஸ்தர் ஒருவர் எழுந்து நின்றுää நடந்து விட்ட தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்ததோடுää உங்களது ஆட்சியின் மீது நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்ää கட்டுப்பட்டு நடப்போம் என்று வாக்குறுதியும் அளிக்கின்றோம் என்றார். அதனை அடுத்துää பஷரா நகர மக்கள் அனைவரும் அலி (ரலி) அவர்களிடம் வாக்குறுதி அளித்தார்கள். பைஅத் செய்து கொண்டார்கள். அப்பொழுது அங்கு எழுந்து நின்ற ஒருவர்ää அலி (ரலி) அவர்களே..! உங்களை எதிர்த்துப் போரிட்டு உயிர் துறந்தோரை ஷஹீத் கள் கூறலாமா என்றார். அதற்குää முஸ்லிம்கள் என்ற நிலையில் அவர்கள் எந்தப் பக்கம் நின்று போரிட்டு உயிர் துறந்திருந்தாலும்ää அவர்கள் போராடிய நோக்கத்திற்குக் கூலியாக ஷஹீத் என்ற அந்தஸ்துடன் இறந்தவர்களாகவே அவர்கள் கணிக்கப்படுவார்கள் என்று பதில் கூறினார்கள். அதன் பின் அலி (ரலி) அவர்கள் தொழுகையை இமாமாக முன்னின்று நடத்தினார்கள்ää ஓரணியில் இப்பொழுது திரண்டு நின்று கொண்டிருந்த அந்த மக்களின் மீது இறைவனின் கருணை சூழ்ந்து கொண்டது.

பஷராவின் நிர்வாகத்தினைக் கவனிப்பதற்காகவென சில தேவையான முன்னேற்பாடுகளை அலி (ரலி) அவர்கள் செய்ய ஆரம்பித்தார்கள். பைத்துல் மாலை தனது கைவசம் வைத்துக் கொண்டுää தங்களது பிரியத்திற்குரியவர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு பிரதியீடாக உதவிகளை வழங்க ஆரம்பித்தார்கள். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையை அளிக்க ஏற்பாடு செய்தார்கள். இப்பொழுது அலி (ரலி) அவர்களை எதிர்ப்பதில் முன்னணியில் இருந்த சிலர் பஷராவில் இருந்து தப்பித்துச் சென்று அருகில் உள்ள பாலைவனக் குழுக்களிடம் அடைக்கலம் தேடிக் கொண்டார்கள். அவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கிய அலி (ரலி) அவர்கள்ää அவ்வாறு சென்றவர்கள் தாராளமாக தங்களது இல்லங்களுக்குத் திரும்பி வர அனுமதிப்பதோடுää அவர்கள் மீது எந்தநடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றேன் என்றும் உறுதி அளித்தார்கள்.

ஆயிஷா (ரலி)

போர் தந்த மனஉளைச்சல்ää தோல்விää மற்றும் தனது நோக்கம் நிறைவேறாததுää இதனை விட தனக்கு மிக நெருக்கமானவர்கள் பலரை இழந்தது ஆகிய அனைத்தும் ஆயிஷா (ரலி) அவர்களை கவலையுறச் செய்தது. இருப்பினும் தைரியமாக முன்னின்று களத்தைச் சந்தித்திருந்த அவர்ää நடந்து விட்ட நிகழ்வுகளை எண்ணி எண்ணி இரவும் பகலும் அழுததன் விளைவுää அன்னையவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அலி (ரலி) அவர்கள் அன்னையவர்களை அடிக்கடி சந்தித்துää ஆறுதல் கூறி வந்தார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும்ää அவர்களைக் கவனித்துக் கொள்வதிலும் தனிக்கவனம் செலுத்தினார்கள். கொல்லப்பட்ட ஆயிஷா (ரலி) அவர்களின் ஒட்டகத்திற்குப் பகரமாக பஷராவின் மிகச் சிறந்த ஒட்டகம் ஒன்றை வாங்கிää அஷ்தர் என்ற தலைவரால் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. இன்றைக்கு முஸ்லிம் உம்மத் இந்த அவல நிலையைச் சந்தித்ததற்கு உன்போன்ற தலைவர்கள் தான் காரணம் என்று கூறிää அதனை வாங்கிக் கொள்ள ஆயிஷா (ரலி) அவர்கள் மறுத்து விட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் நோயின் பிடியிலிருந்து மீண்டுää உடல் நலம் தேறிய பின்னர் தான் மதீனாவுக்குப் பயணப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களது பயணத்திற்குத் தேவையான அனைத்தையும் அலி (ரலி) அவர்கள் முன்னின்று செய்தார்கள். இன்னும் அவர்களுடன் துணைக்காக ஒரு பெண்களின் குழுவும் மதீனாவிற்குச் சென்றது. முஹம்மது பின் அபுபக்கர் (ரலி)ää ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரரை பாதுகாப்பிற்கு நியமித்துää அன்னையவர்களுடன் மதீனாவிற்கு அனுப்பி வைத்தார்கள் அலி (ரலி) அவர்கள்.

இறுதியாகää பஷராவின் எல்லைப் புறம் வரை வந்து அன்னையவர்களை வழியனுப்பி வைத்த அலி(ரலி) அவர்கள்ää அன்னையவர்களே..! இனி நாம் இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்குமோ அல்லது கிடைக்காதோ என்பதை நாமறிய மாட்டோம். தயவுசெய்து நடந்து முடிந்த அனைத்தையும் மறந்து விடுங்கள்ää மன்னித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். அலி (ரலி) அவர்களின் நல்லெண்ணத்தைப் புரிந்து கொண்ட ஆயிஷா (ரலி) அவர்கள்ää நட்புடன் பிரியாவிடை பெற்றுக் கொண்டார்கள். மதீனாவைச் சென்றடைந்தது முதல்ää ஆயிஷா (ரலி) அவர்கள் பொதுப் பிரச்னைகளில் ஈடுபடுவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். தவிரää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிகளை மக்களுக்குக் கற்றுக் கொடுத்தல் போன்ற கல்விப் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள்.வெற்றியும் விளைவுகளும்

ஒட்டக யுத்தத்தில் அலி (ரலி) அவர்களே வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றியின் மூலமாக அனைத்து இஸ்லாமிய சாம்ராஜ்யங்களில் சிரியாவைத் தவிர மற்ற அனைத்தும்ää அலி (ரலி) அவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. பஷராவின் வெற்றியின் மூலமாக சிரியாவையும் வெற்றி பெறுவது என்பது இயலுமான ஒன்றே எனினும்ää அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பஷராவின் வெற்றியானதுää அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கான வெற்றியின் அடித்தளமாக அமையவில்லை. பஷராவின் வெற்றியினைப் பற்றி பெருமிதப்படும் அளவுக்கு அந்த வெற்றி அமையவில்லை. அந்த வெற்றிக்காகக் கொடுக்கப்பட்ட விலை மிகவும் அதிகமாக இருந்தது. ஒவ்வொரு குடும்பத்திலும் தங்களது உறுப்பினர்களில் எவராவது ஒருவரை இழந்த சோகத்தில் இருந்தார்கள். இருந்த போதிலும்ää அவர்கள் அலி (ரலி) அவர்களிடம் பைஅத் என்ற உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட போதிலும்ää அவர்கள் அதில் சந்தோஷப்படவில்லை. பொதுவாகää அவர்களுக்கிடையே கருத்து பேதங்களும்ää பிரிவினைகளும் அவ்வப்பொழுது தலைதூக்கி வந்து கொண்டிருந்தன. அதாவதுää பொதுவாகப் பார்க்கப் போனால்ää அலி (ரலி) அவர்களைப் பொறுத்தவரை அவரது பதவிக்கு தற்போதைக்கு ஆபத்தில்லாதää ஸ்திரமானதொரு சூழ்நிலை உருவாகி இருந்தது தான் அப்போதைக்குக் கிடைத்த வெற்றியாகும். இருப்பினும்ää அவருக்கு அங்கும் இங்கும் என சிலர் எதிர்ப்புத் தெரிவித்த வண்ணம் இருக்கவே செய்தார்கள். பஷராவின் வெற்றி முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். பஷராவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைதி ஏற்பட வேண்டுமென்றால்ää அலி (ரலி) அவர்களின் ஆட்சியும் ஸ்திரமானதாக அமைய வேண்டும்ää அதன் மூலமே அமைதி ஏற்பட முடியும் என்று தல்ஹா (ரலி) அவர்களும்ää சுபைர் (ரலி) அவர்களும் அலி (ரலி) அவர்களிடம் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். ஆனால்ää தல்ஹா (ரலி)ää மற்றும் சுபைர் (ரலி) ஆகியோரின் மரணம்ää முஆவியா (ரலி) அவர்களுக்கு சாதகமாதொரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது. மேற்கண்ட இருவரும் உயிரோடு இருந்திருக்கும்பட்சத்தில்ää முஆவியா (ரலி) அவர்கள் மூன்று எதிரிகளுக்கு..ää அதாவது அலி (ரலி)ää தல்ஹா (ரலி)ää மற்றும் சுபைர் (ரலி) ஆகிய மூவருக்கு முகம் கொடுக்க வேண்டியதிருந்திருக்கும். பஷரா போருக்கும் பின் முஆவியா (ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களை மட்டுமே எதிரி என்ற நிலை இருந்ததால்ää இதுவே முஆவியா (ரலி) அவர்களுக்கு சாதகமானதாக அமைந்து விட்டது. இப்பொழுதிலிருந்து முஆவியா (ரலி) அவர்களுக்கும் அலி (ரலி) அவர்களுக்குமிடையே மறைமுக யுத்தம் ஆரம்பமானது. முஆவியா (ரலி) அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தாதிருப்பதுää மக்களால் அங்கீகரிக்கப்பட்டதொரு அரசுக்கு ஏற்றதொரு செயலுமல்லää அது அரசின் பலவீனத்தைத்தான் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தும் என்பதையும் அலி(ரலி) அவர்கள் உணர்ந்திருந்தார்கள். இஸ்லாமிய ஆட்சித் தலைமையை திறம்பட நடத்த வேண்டுமென்றால்ää ஆயுத பலத்தைப் பிரயோகித்தேயாக வேண்டும் என்ற நிலையும் இருந்தது. பஷராவின் மக்கள் அலி (ரலி) அவர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் செய்ய இயலுமெனில்ää சிரியா மக்கள் எனக்கெதிராக ஏன் திரள முடியாது என்றும் முஆவியா (ரலி) அவர்கள் சிந்திக்கலானார்.

இன்னும்ää பஷராவின் வெற்றியானது அலி (ரலி) அவர்கள் தனது ஆட்சியை எளிதாக நடத்துவதற்குக் கிடைத்த பலமாக இருந்திருக்குமென்றால்ää அது முழு வெற்றியாக அமைந்திருக்கும். ஆனால்ää காலம் நெடுகிலும்ää தினம் தினம் அது அலி (ரலி) அவர்களின் தலைமையின் கீழியங்கக் கூடிய அரசை பலவீனப்படுத்திக் கொண்டே இருந்தது. வெற்றிக்குப் பின் மக்களில் அநேகர் அலி (ரலி) அவர்களின் பக்கம் சாய்ந்தனர் என்றாலும்ää அவர்களின் இந்த ஒரு பக்கச் சார்புக்கும் ஒரு நோக்கமிருந்தது. அலி (ரலி) அவர்கள் தோல்வியைத் தழுவிய மக்களின் சொத்து சுகங்களைச் சூறையாடிக் கொள்வதற்கு தங்களுக்கு அனுமதி வழங்கக் கூடும் என்று அவர்கள் எதிர்பார்த்ததே காரணமாகும். ஆனால்ää அலி (ரலி) அவர்களோää இவ்வாறு முஸ்லிம்களே முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடிக் கொள்வதற்கு அனுமதியளிக்கவில்லை. இதன் காரணமாக எழுந்த கருத்துவேறுபாடுகள்..ää இனி அலி (ரலி) அவர்களின் பக்கம் இருந்து கொண்டிருந்தால் தங்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது என்று முடிவுக்கு அவர்களைத் தள்ளியது. இதன் காரணமாகää முஆவியா (ரலி) அவர்களுக்கு எதிரான போர் தயாரிப்பிற்கு மக்கள் முன் வந்து அலி (ரலி) அவர்களுக்கு ஆதரவும் தரவில்லைää அவரது படையிலும் இணைய விருப்பம் கொள்ளவில்லை. இதன் காரணமாக முஆவியா (ரலி) அவர்களுக்கு எதிரான படையைத் திரட்டுவதில் அலி (ரலி) அவர்கள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்தார்கள்.

அலி (ரலி) அவர்கள் விரும்பத்திற்கு மாறாக குழப்பக்காரர்கள் பஷரா யுத்தத்தினை நடத்தி முடித்திருந்தார்கள். பஷராவின் வெற்றி குழப்பக்காரர்களின்பலத்தை அதிகரித்திருந்தது. இது அலி (ரலி) அவர்கள் வெற்றி பெறுவதற்கும் காரணமாக அமைந்தது. பஷராவில் இருந்த அநேக குழப்பக்காரர்களை ஆயிஷா (ரலி) அவர்களின் தலைமையில் அமைந்த படை பலி வாங்கியிருந்தது. இந்த நிகழ்வானதுää முஆவியா மற்றும் அலி (ரலி) அவர்களின் எதிரிகளுக்கு அலி (ரலி) அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளுக்குக் காரணமாக அமைந்ததோடல்லாமல்ää அலி (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததன் பின்னாள்ää குழப்பக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவர்களைப் பாதுகாத்ததன் காரணமாக உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்கும் அலி (ரலி) அவர்களுக்கும் ஏன் சம்பந்தமிருக்கக் கூடாது என்ற எண்ண ஓட்டத்தையும் அவர்களிடையே விதைத்து விட்டது.

போர் துவங்குவதற்கு முன்பாக நடந்த சமாதானக் கூட்டத்தில்ää பஷராவின் கலவரக்காரர்களுக்கு எதிராக ஆயிஷா (ரலி) அவர்கள் நடவடிக்கை எடுத்தது போன்று கூஃபாவின் கிளர்ச்சிக்காரர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலி (ரலி) அவர்கள் விரும்பினார்கள். ஆனால்ää அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இயலாமல் செய்து விட்டது. இந்த மக்கள் இயற்கையிலேயே போர்க்குணம் கொண்டவர்கள்ää இதுவே அலி (ரலி) அவர்களுக்கு மிகவும் தலையிடியாகவும் அமைந்தது. அலி (ரலி) அவர்கள்தனது ஒன்று விட்ட சகோதரரான அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை பஷராவின் கவர்னராக நியமித்த பொழுதுää இந்த மக்கள் அதனை தப்பபிப்ராயத்துடன் பார்க்க ஆரம்பித்துää ''ஒவ்வொரு ஆட்சித் தலைவரும் தங்கள் தங்கள் உறவினர்களை ஆட்சிப் பொறுப்பில் நியமித்துக் கொண்டே இருந்தால்ää பின் எதற்காக நாங்கள் உதுமான் அவர்களைக் கொலை செய்திருக்க வேண்டும்?"" என்றார்கள். காலம் செல்லச் செல்ல இந்தப் பிரச்னை வலுவடைய ஆரம்பித்தது. கலவரக்காரர்கள் சிறிது சிறிதாக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற ஆரம்பித்தார்கள்ää அதேநேரத்தில் அலி (ரலி) அவர்களின் கௌரவம்ää கண்ணியம்ää மற்றும் அவரிடமிருந்து சிறப்புத் தகைமைகள் ஆகிய அனைத்தும் அவரிடம் இருந்தும்ää அலி (ரலி) அவர்களே ஏதும் செய்யத் திராணியற்ற சூழ்நிலைக் கைதியாகää கலவரக்காரர்களின் பிடியில் அகப்பட்டுக் கொண்டார்கள். பஷராவில் நடந்த யுத்தமானது இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் ஒருவித குழப்ப மேகத்தை விதைத்து விட்டது. இதுவேää முஸ்லிம்களுக்கிடையே நடந்த முதல் உள்நாட்டு யுத்தமாகவும் அமைந்துவிட்டது. தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்ட முஸ்லிம்கள் இறுதியில்ää இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழுகின்ற சூழலை விட்டு விட்டுää ஜனநாயகப் பாதைக்கு தங்களை மாற்றிக் கொண்டார்கள். அடுத்த தலைமுறையில் நிகழ்ந்த கர்பலாப் படுகொலைகளுக்கு ஆரம்பப் புள்ளியை பஷரா யுத்தமே வைத்துக் கொடுத்தது.

மேலும்ää யஸீத் தன்னுடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கும் இது காரணமாக அமைந்து விட்டது. அலி (ரலி) அவர்களிடம் பைஅத் என்ற உறுதிப்பிரமாணத்தை பஷராவின் அநேகமான மக்கள் எடுத்திருந்த நிலையில்ää தன்னுடைய ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வாளை உயர்த்த முடியும் என்றிருந்தால்ää ஆட்சியையும் அதிகாரத்தையும் பெற்றிருந்த நானும் என்னுடைய ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இமாம் ஹ{ஸைன் (ரலி) அவர்கள் மீது எடுத்த நடவடிக்கையும் நியாயமானதே என்றார்.கூஃபாää புதிய தலைநகர்

பஷராவின் வெற்றிக்குப்பிறகு அலி (ரலி)அவர்கள் மதீனாவிற்குச் செல்லவில்லை. மாறாகää கூஃபாவை நோக்கிப் பயணமானார்கள். பஷராவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஆதரவாக கூஃபாவின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக அலி(ரலி) அவர்கள் தூதுக் குழு ஒன்றை அனுப்பிய பொழுதுää பஷராவிற்கு எதிரான நடவடிக்கையில் வெற்றி பெற்று விட்டால்ää தனது ஆட்சிபீடத்தின் தலைமையிடமாக கூஃபா ஆக்கிக் கொள்வதாக வாக்குறுதியும் அளித்தார். பஷராவின் வெற்றிக்குப் பின்ää அலி (ரலி) அவர்கள் கூஃபாவை தனது தலைநகராக ஆக்கிக் கொண்டார்கள். தல்ஹா மற்றும் சுபைர்(ரலி) ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காகää மதீனாவை விட்டும் அலி (ரலி) அவர்கள் கிளம்பிய பொழுதுääஇனி நாம் மதினாவிற்குத் திரும்பி வர மாட்டோம் என்ற எண்ணம் அவரிடம் இருந்ததில்லை. பஷராவின் வெற்றிக்குப் பின்ää நாம் ஆயிஷா (ரலி)ää சுபைர் (ரலி) தல்ஹா (ரலி) ஆகியோருக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதைப் போல சிரியாவின் மீது போர் தொடுத்து முஆவியாவையும் வெற்றி பெற்று விட வேண்டும் என்று எண்ணத் துவங்கினார். ஆனால்ää அவரது அந்த எண்ணத்திற்கு மதீனாவிலிருந்து மிகக் குறைந்த ஆதரவே கிடைத்தது. மற்ற நகரங்களைக் காட்டிலும்ää மதீனத்து மக்கள் இஸ்லாமிய ஆன்மீக உணர்வில் மேம்பட்டவர்களாக இருந்த காரணத்தால்ää முஸ்லிம்களுக்கிடையில் உருவாகி இருக்கும் இந்த அதிகாரப் போட்டியில் யார் பக்கமும் சாய்ந்துவிடாமல் - அதாவது ஒரு பக்கச் சார்பு நிலையில் சென்று விடாமல் இருப்பது என்ற முடிவுக்கு வந்தனர். இன்னும்மதீனாவில் அப்பொழுது வாழ்ந்து வந்த சில முக்கிய நபித்தோழர்கள் பலர்ää அலி (ரலி) அவர்களிடம் பைஅத் என்ற சத்தியப்பிரமாணத்தையும் எடுத்துக் கொள்ள மறுத்து விட்டனர். நடுநிலையோடு நடந்துகொள்வது என்ற முடிவில் அவர்கள் இருந்தது தான் அதன் காரணமாகும். எனவேää முஆவியா (ரலி) அவர்களுடன் நடைபெறவிருக்கின்ற யுத்தத்திற்கு எந்த வகையில் மதீனா ஆதரவு தராது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

உதுமான் (ரலி) அவர்கள் படுகொலை ஆன சமயத்தில்ää கலவரக்காரர்கள் புனிதமிக்க மதீனா நகரத்தின் புனிதத்தைக் கெடுத்து விட்டார்கள். எனவேää மீண்டும் ஒரு அரசியல் யுத்தம் நிகழுமானால் இன்னும் மதீனா சீரழிக்கப்பட்டு விடும் என்று கருதியதன் காரணமாகää இத்தகைய சீரழிவுகளிலிருந்து மதினா பாதுகாக்கப்பட வேண்டுமென்றால்ää நிச்சயமாக தலைநகரமானது மதீனாவை விட்டும் வேறு ஒரு இடத்தில்தான் அமைய வேண்டும் என்று அலி (ரலி) அவர்கள் விரும்பினார்கள். அதன் மூலம் மதீனாவின் கண்ணியம் காக்கப்படும் என்றும் நம்பினார்கள்.

இப்பொழுது பஷராவுக்கு எதிரான போருக்கு ஆதரவாக கூஃபாவிலிருந்து மிகப் பெரும் படை ஒன்றும் தயாராகி விட்டது. பஷராவினை வெற்றி கொண்டதன் பின்புääஇன்னும் அதிகமான படையை கூஃபாவிலிருந்து பெற்றுக் கொண்டுää முஆவியாவிற்கு எதிராகக் களமிறங்கி விடலாம் என்றும் அலி (ரலி) அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். புவிஇயல் அடிப்படையில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மத்திய தளமாக கூஃபா விளங்கியதுää இதன் மூலம் மதீனாவிலிருந்து படைநடத்தி வருவதைக் காட்டிலும் கூஃபாவிலிருந்து படை எடுத்துச்செல்வது சாதகமான அம்சமாக விளங்கியது. எனவே தான் அலி (ரலி) அவர்கள் தனது தலைநகராக கூஃபா ஏற்படுத்திக் கொண்டார்கள்.

கூஃபா வின் தன்மைகளும் அதன் மக்களும்

உமர் (ரலி) அவர்களின் காலத்தில் அதாவது ஏழாம் நூற்றாண்டின் பொழுது உருவாக்கப்பட்டது தான் கூஃபா நகரம். ஈராக்கினை முஸ்லிம்கள் வெற்றி கொண்டதன் பின்புää இராணுவத் தலைமையிடமாக - காலனியாக அது உருவாக்கப்பட்டது. வடக்கு அரேபியாவைச் சேர்ந்த பழங்குடி மக்களை அதிகம் கொண்ட நகரமாகவும் அது திகழ்ந்தது. இவர்கள் உண்மையில் எமன் தேசத்தைச் சேர்ந்தவர்கள். பழங்காலத்தில் எமன் புகழ் பெற்ற கலாச்சார நகரமாகத் திகழ்ந்தது. இன்னும் எகிப்திற்கு நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் நாங்கள் என்ற பெருமிதம் கூட அவர்களிடம் இருந்தது. அவர்களது கலாச்சாரம் இன ரீதியானதொன்றாக இருந்தது. அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போதிலும்ää அறியாமைக் காலத்தில் அவர்கள் பின்பற்றி வந்த பல்வேறு கலாச்சாரங்கள் அவர்களுடனேயே தொடர்ந்து இருந்து வரலாயிற்று.

கூஃபா நகரம் பல்வேறு பரிவுகளாகப் பிரிந்துää ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு கோத்திரத்தவர்களைக் கொண்டதாக இருந்தது. இவர்கள் இஸ்லாத்திற்குள் மிகவும் தாமதமாக நுழைந்த மக்களாவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின் எழுந்த பொய்த் தூதர்கள் பிரச்னையில் எழுந்த போர்களில் கலந்து கொண்டவர்களாகவும்ää தூதுத்துவத்தை அப்பொழுது மறுத்தவர்களாகவும் மாறியவர்கள். அபுபக்கர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் பொய்த்தூதர்களுக்கு எதிரான போருக்குப் பின்னால் இவர்கள் மீண்டும் இஸ்லாத்திற்குள் நுழைந்தார்கள். இன்னும் உமர் (ரலி) அவர்களது காலத்தில் பெர்ஸியாää ஈரான் மற்றும் சிரியாவை வென்றெடுப்பதற்கு இவர்கள் முக்கியப் பங்காற்றினார்கள். தனது இராணுவத்தின் பல்வேறு பொறுப்புகளில் இவர்களை நியமித்த உமர் (ரலி) அவர்கள்ää மிகவும் நம்பிக்கைக்குரிய உயர் பொறுப்புகளில் இவர்களை நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதுமான் (ரலி) அவர்களது காலத்தில் இவர்கள் உயர் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டார்கள். வெளிதேசங்களை வெற்றி கொள்வதற்காக இஸ்லாமியப் படைகள் மும்முரமாக இருந்த காலத்தில் எல்லாம் நிலைமைகள் சுமூகமாகவும் அமைதியாகவும் சென்று கொண்டிருந்தன. எப்பொழுது இந்த நடவடிக்கையில் சற்று தொய்வு விழுந்ததோää அப்பொழுதிலிருந்து உள்நாட்டில் உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிரான கலவரங்கள் வெடிக்க ஆரம்பித்தனää இதில் கூஃபா மக்கள் முக்கிய பங்காற்ற ஆரம்பித்தார்கள். உதுமான் (ரலி) அவர்களது மறைவுக்குப் பின்னர் அலி (ரலி) அவர்க்ள ஆட்சிப் பொறுப்பிற்கு வருகின்றார்கள்ää உதுமான் (ரலி) அவர்களது படுகொலைக்குப் பழிக்குப் பழி வாங்கியே தீருவது என்ற வஞ்சகம் அதிகரிக்கின்றதுää நிலைமை மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கும் நிலையில்ää அலி (ரலி) அவர்கள் கூஃபா வின் உதவியை நாட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இந்த நிலையில் பஷராவின் வெற்றி என்பது கூஃபா மக்கள் அலி (ரலி) அவர்களுக்கு நல்கிய உதவியின் காரணமாகவே கிடைத்தது. உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் நேரடியாகப் பங்கு கொண்டவர்களாக கூஃபாவின் கலவரக்காரர்கள் அலி (ரலி) அவர்களை கலிபாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்புää சுபைர் (ரலி) அவர்களையே உதுமான் (ரலி) அவர்களுக்குப் பிந்தைய கலிபாவாகத் தேர்வு செய்து வைத்திருந்தனர்ää ஆனால் அவர்களது அந்த எண்ணத்தைப் பின்னர் மாற்றிக் கொண்டு அலி (ரலி) அவர்களுக்கு ஆதரவு நல்கினார்கள்ää பின் நிலைமை தலைகீழாக மாறி சுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக பஷராவில் களத்தில் இறங்கினார்கள். நிச்சயமாக கூஃபா மக்கள் இஸ்லாத்திற்குள் மிகவும் தாமதமாக வந்த காரணத்தால்ää இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களில் அவர்களுக்குக் குறைவான பயிற்சியும்ää அறிவும் இருந்ததுää எனவே அவர்கள் கலவரங்கள் மற்றும் சதிச் செயல்களில் நிதானமின்றிச் செயல்பட ஆரம்பித்தார்கள். இவர்கள் குறித்து ஹிஜாஸ் மக்களின் கருத்து எவ்வாறு இருந்ததெனில்ää ''நடோடிகள்""ää அரபுக்களின் கலவரக்கும்பல் என்றே கருதி வந்தார்கள்.

கூஃபாவில் அலி (ரலி)

அலி (ரலி) அவர்கள் இப்பொழுது நிர்வாகத்தைச் சீர்திருத்த ஆரம்பித்துää பல்வேறு பகுதிகளுக்கு கவர்னர்களையும்ääநிர்வாகிகளையும் நியமித்தார். இன்னும் மார்க்க விசயங்களில் தீர்ப்புக் கூறக் கூடிய தலைவர்களையும் நியமித்தார். இன்னும் நீதியை நிலைநாட்டுவதில் இரும்புக் கரம் கொண்டு செயல்படுமாறு தனது அதிகாரிகளுக்கு உத்தரவே பிறப்பித்தார். வரி வசூலிப்பவர்கள் நேர்மையான முறையில் செயல்படுமாறு அறிவுறுத்தினார். எந்த நிலையிலும்ää அடக்குமுறையைக் கடைபிடிக்க வேண்டாம் என்றும் வரி வசூலிப்பவர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதிகாரிகள் நேர்மையான முறையில் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்திய அலி (ரலி) அவர்கள்ää சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக் கொண்டார். தவறு செய்பவர்களை கண்டிப்பான முறையில் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்ää அதற்கான தண்டனையையும் அவர்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என்றும் உத்தரவிட்;டார். அதிகாரிகளைப் பொறுத்தவரையில் சிறியதோ அல்லது பெரியதோ எந்தவித சாக்குப் போக்குகளுக்கும் இடம் கொடாமல் கவனக் குறைவின்றி செயலாற்ற வேண்டும் என்றும்ää கடமை தவறுபவர்களை சகித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். குறிப்பாக இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் அனைத்து வகைகளிலும் பேணப்பட வேண்டும்ää அவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்என்றும் அவர் விரும்பினார்.

பஷராவின் வெற்றிக்குப்பின்னர்ää தனது இராணுவத்தின் ஒழுக்க விசயங்கள் சரி செய்யப்பட்டு சீர்திருத்தம் ஆனதன் பின்னர்ää அந்தப் படையைக் கொண்டு ஒரு முற்றுகைப் போரை சிரியாவின் மீது தொடுத்து முஆவியா (ரலி) அவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றே அலி (ரலி) அவர்களின் விருப்பமாக இருந்தது. ஆனால்ää தனது திட்டம் அவ்வளவு எளிதில் நிறைவேறாதுää அதில் பல தடைகள் உள்ளன என்பதை விரைவிலேயே அலி (ரலி) அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். இப்பொழுது கூஃபாவின் இந்த பழங்குடிகள் மீண்டும் தங்களது கெட்ட நடவடிக்கைகள் மூலம் தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் சதித் திட்டத்தில் இறங்கினார்கள். ஒட்டகை யுத்தத்தில்ää அலி (ரலி)அவர்கள் வெற்றி பெறுவதற்காகää கூஃபாவின் பலர் கொல்லப்பட்டிருந்தார்கள். சுருங்கச் சொல்லப் போனால் கூஃபாவின் ஒவ்வொருவீட்டிலும் ஒருவராவது இந்தப் போரில் கொல்லப்பட்டிருந்தார்கள் என்றே கூற வேண்டும். தங்களது உற்றார்களை இழந்த துக்கத்தில் இருந்த கூஃபா மக்கள்ää மீண்டும் இன்னொரு போரைச் சந்தித்து மீண்டும் தங்கள் ஆருயிர் இளவல்களை இழக்க அவர்கள் மனதளிவில் தயாராக இல்லை. பஷராவில்ää அந்த மக்களின் பொருட்களைக் கைப்பற்றுவதற்குத் தனது ஆதரவாளர்களுக்குத் தடை பிறப்பித்திருந்த அலி (ரலி) அவர்கள்ää பஷரா மக்களை அடிமைகளாகவும்ää அல்லது அவர்களை சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கும் தடை விதித்திருந்தார்கள். எனவேää பஷராவின் வெற்றியின் மூலமாக எந்தவித உலகாதாய ஆதாயங்களையும் பெறவில்லைää எனவே சிரியாவின் மீதான போர் முஸ்தீபுக்கு கூஃபா மக்கள் ஆர்வத்துடன் கிளம்பாமல் தயக்கம் காட்டினார்கள்ää பொருளாதார ஆதாயத்திற்கான வாக்குறுதியைத் தராத வரையிலும் அவர்கள் அதில் கலந்து கொள்ளும் நிலையில் இல்லை என்பதே நிதர்சனமான நிலையாக இருந்தது.

சில பகுதிகளுக்கு அலி (ரலி) அவர்கள் தனது உறவினர்களையே கவர்னர்களாகவும் நியமித்திருந்தார்கள். கூஃபாவின் பழங்குடி மக்களின் ஒரு குழுவிற்குத் தலைவராக இருந்த அஸ்தர் என்பவர்ää இதனைச் சாக்காகக் காட்டி குழப்பத்தை உண்டாக்கினார். அவர் கூஃபா மக்களைப் பார்த்துää ''உதுமான் அவர்கள் தனது விருப்பத்திற்குரியவர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்கியமைக்காக அவரது இரத்தம் சிந்த வைக்கப்பட்டிருக்கும் பொழுதுää அவரை அடுத்து வந்தவரும் கூட முன்னவரைப் போலவே நடந்து கொள்வாரென்று சொன்னால் இதனல் நமக்கு என்ன லாபம்?"" என்று கேட்டார். இப்பொழுது தங்களது உற்றார் உறவினர்களை இழந்த கூஃபா மக்கள்ää ''இறைநம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எதிரான நாம் போர் செய்து என்ன லாபத்தை அடைந்தோம்? என்ற கேள்வியை தங்களுக்குள் எழுப்பிக் கொள்ளலானார்கள். எனவேää அலி (ரலி) அவர்களின் புதிய தலைநகரான கூஃபாவில் கருத்துவேறுபாடுகள் மேகங்களாகச் சூழ ஆரம்பித்தன. எனவேää தனது உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கூடிய இராணுவத்தை அவர் தயார் செய்ய முடியாமலிருந்தது. எந்த நடவடிக்கைக்கும் தயாரக இருப்பதற்கான சிறப்பு அணியை அவர் உருவாக்க விரும்பினாலும்ää அதுவும் நடைபெற இயலாதாகவே இருந்தது. இப்பொழுது கூஃபா வாசிகள் தாங்கள் போரில் கலந்து கொண்டால் எங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்வியை எழுப்பலானார்கள். மதீனாவிலிருந்த தலைநகரை கூஃபாவிற்கு மாற்றியமைத்துக் கொண்டதன் காரணமாகää மதீனாவிலிருந்தும்ää மக்காவிலிருந்து ஆதரவினைப் பெற இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார் அலி (ரலி) அவர்கள். எனவேää எல்லா விதமான நடவடிக்கைகளுக்கும் கூஃபா வாசிகளையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு அலி (ரலி) அவர்கள் தள்ளப்பட்டார்கள். ஆனால் கூஃபா வாசிகளோ உன்னத நோக்கத்திற்காகவே போர் என்ற நிலையை விட்டும்ää பொருளாசைக்காகவே போர் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

சீஸ்டன் என்ற பகுதியில் குழப்பம் ஆரம்பமானதுடன்ää அலி (ரலி) அவர்களுக்கு சங்கடங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்த குழப்பத்தை ஆரம்பித்து வைத்தவன் குழப்பத்தின் தந்தையான அப்துல்லா பின் ஸபா - உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிராக குழப்பத்தை முன்னின்று நடத்தியவனும் இவனே. இவர்களில் மிகவும் தீவிரவாதிகளாக இருந்தவர்கள்ää ஒவ்வொரு ஆட்சியாளரை அடுத்தும் வரக் கூடிய ஆட்சியாளரைக் கொலை செய்தாவதுää தங்களுக்கென ஒரு ஆட்சிப் பிரதேசத்தை உருவாக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் பஷராவைக் கைப்பற்றிய சமயத்தில்ää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைத்து பஷரா வாசிகளையும் கொலைத் தண்டனைக்கு உட்படுத்தி விட்;டார்கள். ஆனால் அலி (ரலி) அவர்களோ பஷராவை வெற்றி கொண்டிருந்த போதிலும்ää உதுமான்(ரலி) அவர்களுக்கு எதிராக களத்தில் இறங்கியவர்களில் எவரின் மீது சட்ட நடவடிக்கையை எடுக்காமல் இருந்தார்கள். தங்களது ஆட்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக பழிக்குப் பழி எடுக்க வேண்டும் என்ற வஞ்சக எண்ணத்தை ஸபாவின் ஆட்கள் தூவ ஆரம்பித்தார்கள். இதற்கு சீஸ்தான் ல் அவர்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்ததோடல்லாமல்ää இஸ்லாமிய அரசுக்கு எதிராக வெளிப்படையாகவே கலவரத்தில் இறங்கினார்கள்ää அரசுக்குச் சேர வேண்டிய வரியைக் கட்ட மறுத்தார்கள். கூஃபா விலிருந்து ஒரு படையை அனுப்பி இந்தக் கலவரத்தை அடக்க முற்பட்டார்கள். ஆனர் அலி (ரலி) அவர்களின் படை தோற்கடிக்கப்பட்டது. அதனை அடுத்து அனுப்பி வைக்கப்பட்ட படையும் தோல்வியைச் சந்தித்தது. அதன் மூன்றாவது அணி ஒன்றைää எமன் மற்றும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஏனைய பகுதி மக்களையும் இணைத்ததொரு படையை உருவாக்கிää அதற்கு பஸராவின் கவர்னராக அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களின் தலைமையில் அனுப்பி வைத்தார்கள். இந்தப் படை கலவரக்காரர்களை வெற்றி கொண்டதுää கலவரம் அடக்கப்பட்டது. இருப்பினும்ää சீஸ்தான் ல் நடைபெற்ற மோதல்கள் அலி (ரலி) அவர்களின் ஆடசிக்குரிய மரியாதையை பாதித்தனää அலி (ரலி) அவர்களின் உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டிய வளங்கள் யாவும் குறைந்து விட்டன என்பதை உணர்த்தின. இன்னும் சீஸ்தான் மீது அலி (ரலி) அவர்கள் முழுமையான கவனத்தைச் செலுத்தியதன் காரணமாக ஏற்பட்ட நேர விரயம்ää முஆவியா (ரலி) அவர்களுக்கு எதிராகத் திரட்டப்பட வேண்டிய படைத் தயாரிப்பைத் தாமதப்படுத்தியது. இதுவும் கூட அலி (ரலி) அவர்களுக்கு பாதகமாகவே அமைந்தது. இன்னும் சில அறிவிப்புகளின்படிää உதுமான் (ரலி) அவர்கள் படுகொலையில் சம்பந்தப்பட்;டவர்களின் மீது நடவடிக்கை எடுப்பது என்ற பொது நல முயற்சிக்கு உதவுவதனை விட்டு விட்டுää சீஸ்தானில் முஆவியாவின் ஆட்களே கலவரத்தினை திட்டமிட்டு உருவாக்கினார்கள் என்றும் கூறப்படுகின்றது.கைஸ் பின் ஸஅத் அன்ஸாரி

எகிப்தின் முக்கியத்துவம்

முஸ்லிம்களின் கூட்டமைப்புப் பகுதிகளைப் பொறுத்தவரைää எகிப்தானது மிக பிரதான பங்கினை வகிக்கின்றது. உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிரான கலவரத்தை இந்த எகிப்து வாசிகளே முன்னின்று நடத்தினார்கள். எகிப்து வாசிகளின் மத்தியில் அலி (ரலி) அவர்களின் பெயர் மிகவும் பிரதானமாக இருந்ததுää இன்னம் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குப்பின் நடந்த ஆட்சியாளர் தேர்வில்ää இவர்கள் மற்ற அனைவருக்கும் முன்னதாக அலி(ரலி) அவர்களின் பெயரை முன்மொழிந்தார்கள். முஆவியா (ரலி) அவர்கள் சிரியாவில் அலி (ரலி) அவர்களுக்கு எதிரான கருத்துப் போரை உருவாக்கி வைத்திருக்கின்ற வேளையில்ää எகிப்தின் மீது தனது பிடியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் அலி (ரலி) அவர்களுக்கு இயல்பிலேயே உருவாகி விடுகின்றது. இந்த அடிப்படையில்ää எகிப்தில் நியமிக்கப்படவிருக்கின்ற கவர்னர் பதவியும் இங்கே முக்கியத்துவம் பெற ஆரம்பிக்கின்றது.

கைஸ் பின் ஸஅத் அன்ஸாரி

உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சியின் பொழுது அப்துல்லா பின் ஸரா என்பவரைத் தான் எகிப்தின் கவர்னராக நியமித்திருந்தார்கள். உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உச்சத்தை அடைந்த பொழுது அப்துல்லா பின் ஸராவை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிந்து விட்டு முஹம்மது பின் ஹ{தைபா ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து கொண்டார்கள். முஹம்மது பின் ஹ{iதா - இவர் உதுமான் (ரலி) அவர்களின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார். இவரது தந்தை ஹ{தைபா மரணத்திற்குப்பின்ää முஹம்மதை வளர்த்தெடுக்கும் பொறுப்பை உதுமான் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இவர் வளர்ந்தவுடன் உதுமான் (ரலி) அவர்களிடம் கருத்துவேறு ஏற்பட்டதன் காரணமாகää எகிப்திற்கு தப்பிச் சென்று விட்டார்கள்ää அங்கு உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிராகத் திரண்டிருந்த கலவரக்காரர்களுடன் இணைந்து கொண்டுää உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்தார்கள். உதுமான் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் நிகழ்ந்த குழப்பமான காலத்தில்ää முஹம்மது பின் அபீ ஹ{தைபா அவர்களை தந்திரமான முறையில் பாலஸ்தீனின் எல்லைப் பகுதியில் உள்ள ஆரிஸ் என்ற இடத்திற்கு வரவழைத்த முஆவியா (ரலி) அவர்கள்ää தந்திரமான முறையில் அவரைக் கொலை செய்து விடுகின்றார்கள். இருப்பினும்ää எகிப்தினைக் கைப்பற்றும் முஆவியா (ரலி) அவர்களின் முயற்சி கை கூடவில்லை.

கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அலி (ரலி) அவர்கள் போர் வீரரும்ää ஞானமிக்கவரும்ää தந்திரக்காரருமான கைஸ் பின் ஸஅத் என்பவரை எகிப்தின் கவர்னராக நியமித்தார்கள். இவர் மதீனாவின் மிகச் சிறப்பு வாய்ந்ததொரு அன்ஸார்களைச் சேர்ந்தவர். அவரது பாரம்பர்யமும் கூட புகழ் வாய்ந்ததாக இருந்ததுடன்ää அலி (ரலி) அவர்களுக்காக தன்னை அற்பணிக்கக் கூடியவராகவும் இவர் இருந்தார். மதீனாவிலிருந்து ஒரு படையைத் தயார் செய்து கொள்ளும்படி கைஸ் பின் ஸஅத் அவர்களை அலி (ரலி) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். மதீனாவிற்கென்று பாதுகாப்புப் படை ஒன்று அவசியமாக இருப்பதால்ää எந்தக் காரணம் கொண்டு மதீனாவைப் பலவீனப்படுத்தக் கூடியதொரு நடவடிக்கையில் நான் ஈடுபட மாட்டேன் என்று படை திரட்ட மறுத்து விட்ட கைஸ் பின் ஸஅத் அவர்கள்ää தன்னுடன் வெறும் ஏழு நபர்களை மட்டும் அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டார்.

எகிப்தின் நிலவரம்

இந்தச் சூழ்நிலையில் எகிப்தின் நிலவரம் மிகவும் குழப்பமாகவே இருந்தது. கைஸ் பின் ஸஅத் அவர்களின் திறமைääமற்றும் தைரியமான நடவடிக்கைகளின் காரணமாகää எகிப்தில் தனது ஆட்சிப் பொறுப்பினைத் தக்க வைத்துக் கொள்வதில் வெற்றி பெற்றார்கள். பள்ளிவாசல்களில் நிகழும் ஒன்று கூடல்களில் அலி (ரலி) அவர்களின் நல்லெண்ணச் செய்திகளை மக்களுக்கு அறிவித்தார். அலி (ரலி) அவர்களின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்போம் என்ற உறுதி மொழியை மக்களிடம் பெற்றுக் கொண்டார். இப்பொழுது அதிகாரக் கட்டிலில் அமர்ந்துää எகிப்தின் பல பாகங்களுக்கும் தன்னுடைய ஆட்களை அனுப்பி வைத்துää அந்த மக்களிடம் எல்லாம் வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டார். முழு எகிப்து மக்களும் அலி (ரலி) அவர்களுக்கு ஆதராவ வாக்குறுதி அளித்திருந்த போதிலும்ää இரண்டு பகுதி மக்கள் மட்டும் வாக்குறுதி அளிக்க மறுத்து விட்டார்கள். ஃகர்பதா என்ற பகுதியை நிர்வகித்து வரும் யஸீத் ஹாரித் என்பவரும்ää உதுமான் (ரலி) அவர்களின் ஆதரவாளரும்ää உமையாக்களின் மீதும் இன்னும் முஆவியா (ரலி) அவர்களின் மீதும் பேரன்பு வைத்திருந்தவர்களான முஸ்லமா பின் முகல்லத் என்பவரது தலைமையில் இருந்த கோத்திரத்தவர்களும் அலி (ரலி) அவர்களின் ஆட்சித் தலைமைக்கு தங்களது வாக்குறுதியை அளிக்க மறுத்து விட்டனர். கைஸ் பின் ஸஅத் அவர்களின் பெருமுயற்சி மற்றும் சாதுர்யத்தின் காரணமாகää அந்த இரு கோத்திரத்தவர்களிடமும் நடுநிலையானதொரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டார்கள். அதாவது அந்த ஒப்பந்தத்தின்படிää அலி (ரலி) அவர்களுக்கு பைஅத் என்ற வாக்குறுதி அளிக்கும்படி வற்புறுத்துவதில்லை என்றும்ää அதற்குப் பதிலாக இவர்கள் எகிப்தின் அரசுக்கு எதிராகவோ அல்லது அலி (ரலி) அவர்களின் கலீஃபா பதவிக்கு எதிராகவோ செயல்படுவதில்லை என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த மக்கள் நடுநிலைப் போக்கோடு இருப்பது அலி (ரலி) அவர்களின் ஆட்சிக்கு சிறந்தது என்பதன் காரணமாகää அவர்களை வற்புறுத்துவதில்லை என்ற முடிவுக்கு கைஸ் அவர்கள் வந்தார்கள்.

முஆவியா(ரலி) அவர்களின் தந்திரம்

யஸீத் பின் ஹாரித் மற்றும் மீயாஸ்மல் பின் முகல்லத் ஆகிய இருவரையும் எகிப்து அரசுக்கு எதிராகத் திருப்பி விட வேண்டும் என்றிருந்தது. மேற்கண்ட இருவரிடமும் நடுநிலையான ஒப்பந்தம் ஒன்றை கைஸ் செய்து வைத்திருந்ததன் காரணமாக முஆவியா (ரலி) அவர்களின் தந்திரம் பலிக்கவில்லை. அதன் மூலம் எகிப்தில் தனது பாதங்களை வைக்க இயலாமல் போன முஆவியா (ரலி) அவர்கள் இப்பொழுது கைஸ் அவர்களையே தனது வலைக்குள் வீழ்த்த முயற்சி செய்தார்கள். தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு கைஸ் அவர்களைக் கேட்டுக் கொண்ட முஆவியா (ரலி) அவர்கள்ää அதற்குப் பிரதியீடாக எகிப்தின் நிலையான ஆட்சியாளராக கைஸ் அவர்களை ஆக்குவதற்கு தான் ஒத்துழைப்புத் தருவதாகக் கூறினார். இதனைக் கேட்ட கைஸ் அவர்கள் வெகுண்டெழுந்ததோடுää எந்தநிலையிலும் தான் அலி (ரலி) அவர்களுக்கு ஆதரவாளனாகவே இருப்பனே ஒழியää எந்த பேரத்திற்கும் தான் பணியப் போவதில்லை என்று கூறி விட்டார். தனது இந்தத் தந்திரம் பலிக்காது போனதால்ää இன்னொரு தந்திர அஸ்திரத்தைக் கையில் எடுத்த முஆவியா (ரலி) அவர்கள்ää நீங்கள் அலி (ரலி) அவர்களுக்கு ஆதரவு நல்குவது என்பது உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையை ஆதரிப்பதாகாதா என்று கேட்டார். இந்தக் கருத்தை மறுத்த கைஸ் அவர்கள்ää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையின் பொழுது நான் மதீனாவில் இருந்தவன் என்ற காரணத்தினால் உங்களுக்குச் சொல்லுகின்றேன்ää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் அலி (ரலி) அவர்களுக்கு எந்தச் சம்பந்தமுமில்லைää அதனை அவர்கள் ஆதரிக்கவுமில்லைää உங்களது கருத்து தவறானது என்று கூறி விட்டார்கள்.

கைஸ் அவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்துவதில் தோல்வியடைந்த முஆவியா (ரலி) அவர்கள்ää இப்பொழுது அலி (ரலி) அவர்களுக்கும் கைஸ் க்கும் இடையே சந்தேக எண்ணங்களைத் தூவி விட ஆரம்பித்தார். கைஸ் அவர்கள் அலி(ரலி) அவர்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டுவதற்கான சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்பதே அந்த சந்தேகமாகும். இதற்கு கைஸ் தன்னுடன் நட்புடன் இருப்பதையும்ää இன்னும் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்கு பழிக்குப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் அலி (ரலி) அவர்களின் ஆட்சிக்கு ஆதரவாக வாக்குறுதி வாங்காமல் இருப்பதையும் காரணமாகச் சுட்டிக் காட்டினார்.

இந்தக் கருத்தினை மையமாக வைத்து முஆவியாவின் ஆட்கள் கூஃபாவில் வதந்திகளைக் கிளப்பி விட்டார்கள். இந்த வதந்திகளைச் செவிமடுத்த அலி (ரலி) அவர்களது உள்ளத்தில் கைஸ் அவர்களின் மீதான நம்பிக்கையின் மீது சிறிது ஓட்டை விழ ஆரம்பித்தது. இதனிடையே முஹம்மது பின் ஜாஃபர் மற்றும் முஹம்மது பின் அபுபக்கர் ஆகிய இருவர் அலி (ரலி) அவர்களிடம் வந்துää இது உண்மையா அல்லவா என்பதை கைஸ் அவர்களைப் பரிசோதித்து அறிவது தான் சிறந்த வழி என்றனர். இந்த வதந்தியில் உண்மை இருக்க வாய்ப்புள்ளது என்பதை தாங்கள் நம்புவதாகக் கூறி அந்த இருவரும்ää 'உங்களது ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க மறுத்துவிட்ட மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டுää அவர்களிடம் இவர் சமாதான ஒப்பந்தம் செய்திருப்பதிலிருந்து உங்களுக்கு விளங்கவில்லையாää அவர் உங்களுக்கு எதிராக ஏதோ சதியில் ஈடுப்ட்டிருக்கின்றார் என்று" என்று தங்களது சந்தேகத்தை உறுதிப்படுத்த ஆரம்பித்தார்கள். கைஸ் அவர்களை பரிசோதித்துப் பார்க்க விரும்பிய அலி (ரலி) அவர்கள்ää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குப் பகரமாக பழிக்குப் பழி எடுக்க உறுதி கொண்டிருக்கும் அந்த இரு தலைவர்களையும் கைது செய்து தங்களது பொறுப்பில் வைத்துக் கொள்ளுமாறு கைஸ் அவர்களுக்கு அலி (ரலி) அவர்கள் உத்தர விட்டார்கள்.

அந்த இரு தலைவர்களையும் கைது செய்வது என்பது பொறுத்தமான செயலல்ல என்று அலி (ரலி) அவர்களுக்கு பதில் எழுதி அனுப்பினார்கள். அவர்கள் நடுநிலையான சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலமாகää அவர்கள் தங்களது ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டவர்களாகி விடுகின்றார்கள். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாம் அவர்களை வாக்குறுதி அளிக்க கட்டாயப்படுத்துவதில்லைää இந்த நிலையில் அவர்கள் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தை வலிய வந்து மீறாத வரைக்கும்ää அவர்கள் அலி (ரலி) அவர்களுக்கு எதிராகவோ அல்லது உதுமான் (ரலி)அவர்களின் படுகொலைக்குப் பகரமாக எந்த நடவடிக்கைகளிலும் இறங்க மாட்டார்கள். நான் இப்பொழுது தான் சிரமப்பட்டு சட்ட ஒழுங்கை இந்தப் பகுதிகளில் நிலை நாட்டி வருகின்றேன்ää இந்த நிலையில் இந்த இரு தலைவர்களையும் கைது செய்தால் இந்தப் பகுதிகளில் அமைதி குலைவதோடுää சட்ட ஒழுங்கும் சீர் குலைந்து விடும். எகிப்து அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுமானால்ää அது எகிப்தின் மீது முஆவியா (ரலி) அவர்கள் மூக்கை நுழைப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கியது போலாகி விடும். அலி (ரலி) அவர்களின் தலைமைக்கு பங்கம் வராமல் எப்படி நடப்பது என்பதை நானறிவேன் என்று குறிப்பிட்டு அதில் கைஸ் எழுதி இருந்தார்கள். மேலும் நான் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகள் யாவும் அலி (ரலி) அவர்களின் ஆட்சியின் நன்மைக்காகவே அன்றி வேறில்லைää இதில் எதையாவது மாற்ற முனைவோமானால் அதுவே அலி (ரலி) அவர்களின் ஆட்சிக்கு பாதகமான அம்சமாக மாறி விடும் என்றும் கைஸ் அவர்கள் குறிப்பிட்டுக் கூறினார்கள். அலி அவர்களே..ää உங்களது கட்டளை மறுபரிசீலனை செய்யுங்கள்ää உங்களது ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிக்காத அந்த மக்களுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் கைவிடுங்கள்ää இதுவே உங்களது நிர்வாகத்திற்கு எந்தவித குழப்பத்தை ஏற்படுத்தாதிருப்பதற்கான சிறந்த வழிமுறையாகும் என்று கூறுகின்றேன். எனது இந்த ஆலோசனைகளை நீங்கள் ஏற்காதபட்சத்தில்ää என்னை கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டுää எனக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்"" என்றும் அவர் அந்த மடலில் குறிப்பிடத்தவறவில்லை.

கைஸ் பதவியிறக்கம் செய்யப்படுதல்

கைஸ் முன்வைத்த கருத்துக்கள் அலி (ரலி) அவர்களின் முன் எந்தவித பெறுமதியையும் பெறவில்லைääமாறாகää கைஸ் அவர்கள் மீது சந்தேகத்தையே அதிகப்படுத்தியது. அலி (ரலி) அவர்களின் உத்தரவினை நிலைநாட்டாமல் அதற்குக் காரணம் கற்பித்தது என்பது கைஸ் அவர்களுக்கு எதிராகவே அலி (ரலி) அவர்களைச் சிந்திக்க வைத்ததுää ''உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்கு எதிராக வஞ்சகம் தீர்க்கக் காத்துக் கொண்டிருக்கும்ää இன்னும் அதன் மூலம் என்னுடைய ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தக் காத்திருக்கும் மக்களுக்கு எதிராக இவர் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுகின்றார்? கைஸ் அவர்கள் மீதாக சந்தேகம் இன்னும் இறுகியது. அலி (ரலி) அவர்களின் சந்தேகம் வலுவடைந்து வருவதை அறிந்து கொண்ட முஆவியாவ (ரலி) அவர்கள் முகத்தில் சந்தோச ரேகைகள் படர ஆரம்பித்தனää அலி (ரலி) அவர்களுக்கும் கைஸ் அவர்களுக்கும் இடையே தான் விதைத்த வித்து வளர ஆரம்பித்திருப்பது குறித்துத் தான் முஆவியா (ரலி) அவர்கள் சந்தோசமடைந்தார்கள். இதற்குப் பின் கைஸ் க்கு வலையை விரித்த முஆவியா (ரலி) அவர்கள்ää இதற்குப் பின்னரும் நீங்கள் ஏன் அங்கிருக்க வேண்டும்ää நீங்கள் என்னுடன் வந்து விடுங்கள் உங்களுக்கு உயர் பதவியை நான் தருகின்றேன் என்று கூறினார். இந்த பேரத்தையும் கைஸ் அவர்கள் உதறித் தள்ளி விட்;டார்கள். தன்னை அலி (ரலி) அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டாலும்ää தன்னை நீதமற்ற முறையில் நடத்தினாலும்ää அலி (ரலி) அவர்களின் மீதுள்ள தன்னுடைய நம்பிக்கையை அவர் கைவிடத் தயாராக இல்லை. கைஸ் பதவியிறக்கம் செய்யப்பட்டார். அதன் பின் அவர் மதீனாவிற்கு வந்து விட்டார். கைஸ் அவர்களைப் பதவியிறக்கம் செய்தது அலி (ரலி) அவர்கள் செய்த மிகப் பெரும் தவறாகும். இந்தத் தவறு எகிப்தின் மீது தன்னுடைய ஆக்கிரமிப்பை வலுப்படுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பத்தை முஆவியா (ரலி) அவர்களுக்கு வழங்கியது.

கைஸ் மற்றும் அலி (ரலி)

கைஸ் அவர்கள் பதவியிறக்கம் செய்யப்பட்டது முஆவியா அவர்களுக்கும் அவரது ஆட்களுக்கும் சந்தோசத்தைக் கொடுத்தது. அடுத்த நடவடிக்கையாகää கைஸ் அவர்களைத் தன் பக்கம் ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்று முஆவியா (ரலி) அவர்கள் திட்டமிடலானார். இதில் அவர் தோல்வியையே அடைய நேரிட்டதுää ஏனென்றால் கைஸ் அவர்கள் அலி (ரலி) அவர்களிடம் செய்திருந்த வாக்குறுதியை முறித்து விடவில்லை என்பதனாலாகும்ää இன்னும் இருவருக்கிடையிலும் இன்னும் சமாதனத்திற்காக அறிகுறிகள் இருக்கின்றதுவா அல்லது இல்லையா என்பதையும் அவர் உறுதிப்படுத்தி அறிந்து கொள்ள முயற்சித்தார். முஆவியா (ரலி) அவர்களின் ஆட்கள் கைஸ் அவர்களை தங்கள் வசப்படுத்தி அலி (ரலி) அவர்களுக்கு எதிராகசஷத் திருப்பி விட வேண்டும் என்று கடுமையான முயற்சிகளைச் செய்தார்கள்ää ஆனால் இவர்களது வலையில் அவர் விழ மறுத்து விட்டதோடுää உங்களது சேவைக்குரிய மரியாதையை வழங்க மறுத்துää உங்களைக் கண்ணியப்படுத்தாதவருக்கா நீங்கள் அளித்த வாக்குறுதியைப் பேண வேண்டும் என்று நினைக்கின்றீர்கள் என்று முஆவியா (ரலி) அவர்களின் ஆட்கள் கைஸ் அவர்களைப் பார்த்துக் கேட்க ஆரம்பித்தார்கள். இத்தகைய இவர்களின் முயற்சிக்குப் பலியாகி விடாத கைஸ் அவர்கள்ää கூஃபாவிற்குச் சென்று அலி (ரலி) அவர்களை நேரிடையாகவே சந்திப்பது என்று முடிவெடுத்தார்கள். நீதமான தீர்ப்பு ஒன்றை அலி (ரலி) அவர்களிடம் எதிர்பார்த்தே அவர்கள் சென்றார்கள். கைஸ் அவர்களை மரியாதையோடு அலி (ரலி) அவர்கள் வரவேற்றார்கள். இருவரும் தங்கள் மனதில் உள்ள அத்தனையும் வெளிப்படையாகத் திறந்து பேசினார்கள். இருவரது பேச்சுவார்த்தைக்குப் பின்னர்ää கைஸ் அவர்கள் மீது நன்னம்பிக்கை கொண்டு விட்ட அலி (ரலி) அவர்கள்ää கைஸ் இன்னும் தன்னுடைய ஆதாரவாளராகத் தான் இருக்கின்றார் என்று நம்பிக்கை கொண்டார். கைஸ் அவர்களை எப்பொழுதும் தன்னுடைய ஆதரவாளராகவே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அலி (ரலி) அவர்கள்ää அவரைத் தனது பிரதான ஆலோசகராகவும் ஆக்கிக் கொண்டார். கைஸ் அவர்கள் அலி (ரலி) அவர்களின் பிரதான ஆலோசகராக ஆகி விட்டதனை அறிந்த முஆவியா (ரலி) அவர்கள்ää தன்னுடைய வலையில் கைஸ் அவர்களை விழ வைக்க முயற்சி எடுத்துக் கொண்ட மதீனாவில் இருந்த தனது ஆதரவாளர்களுக்கு இது பற்றி எழுதிய கடிதத்தில் இவ்வாறு தனது வெறுப்பைக் கொட்டி இருந்தார் : ''நீங்கள் கைஸ் அவர்களை நடத்திய விதத்தின் விளைவுää அவரை அலி (ரலி) அவர்களைச் சென்று சந்திக்க வைத்து விட்டதுää முட்டாள் தனமாக நீங்கள் நடந்து கொண்டதன் விளைவு ஆயிரக்கானவர்களை அலி (ரலி) அவர்களின் பக்கம் கொண்டு சேர்த்து விட்டது போலாகி விட்டதுää இந்த ஆயிரக்கானவர்களின் மூலமாக விளையக் கூடிய தீமைகள் என்பது கைஸ் போன்ற ஆலோசகர்கள் எனது எதிரிக்குக் கொடுக்கக் கூடிய ஆலோசனையின் மூலமாக விளையக் கூடிய தீமைகளைக் காட்டிலும் கொஞ்சமானதே"" என்று புலம்பினார்.

முஆவியா (ரலி)

ஆரம்ப கால வாழ்வு

மக்கத்துக் குறைஷிக் கோத்திரங்களில் ஒன்றான உமைய்யாக் கோத்திரத்தைச் சேர்ந்தவர் முஆவியா (ரலி) அவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களும்ää முஆவியா (ரலி) அவர்களும் அப்து மனாஃப் என்ற மூதாதையரின் வழி வந்த பரம்பரையினர் ஆவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரது தந்தை அப்துல்லாää இவரது தந்தை அப்துல் முத்தலிப்ää இவரது தந்தை ஹாஷிம்ää இவர் அப்து மனாஃப் அவரது மகனாவார். முஆவியா (ரலி) அவர்களோ..ää இவரது தந்தை அபூ சுஃப்யான்ää இவரது தந்தை அபூ ஹர்ப்ää இவரது தந்தை உமைய்யாää இவரது தந்தை அப்து ஷம்ஸ்ää இவர் அப்து மனாஃப் என்பரது மகனாவார். ஹாஷிம் மற்றும் அப்து ஷம்ஸ் இருவரும் அப்து மனாஃப் ன் மகன்களாவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹாஷிம் என்பவரது கோத்திரத்தின் வழிவந்தவராகவும்ää முஆவியா (ரலி) அவர்கள் அப்து ஷமஸ் என்பரவது வழி வந்தவராகவும் இருந்தார். இந்த பரம்பரை வரிசையில் அப்து ஷமஸ் என்பவர் உமைய்யாக் கோத்திரத்தில் மிக முக்கியமானவராவார்ää இவரது பெயரைக் கொண்டே இந்தப் பரம்பரையை உமைய்யாக் கோத்திரத்தார் என்றழைக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முஆவியா (ரலி) அவர்களின் தந்தை அபூசுஃப்யான் குறைஷிக் கோத்திரத்தாரில் மிகவும் முக்கியமான புள்ளியாவார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவத்தை வெளிப்படையாக அறிவிப்புச் செய்த பொழுதுää இறைத்தூதர் (ஸல்) அவர்களை முழு மூச்சாக எதிர்த்தவர் தான் இந்த அபூசுஃப்யான்ää அது மட்டுமல்ல இஸ்லாத்திற்கு எதிராகää முஸ்லிம்களுக்கு எதிராக உஹத் மற்றும் அகழ் போரினை முன்னின்று தலைமையேற்று நடத்தியவரும் இவர் தான். இன்னும் முஆவியா (ரலி) அவர்களின் தாய் முஸ்லிம்களின் மீது எந்தளவு வெறுப்புணர்வுடன் இருந்தார் எனில்ää உஹத் போரில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் காதுகளையும்ää மூக்குகளையும் அறுத்தெடுத்து அதனை தனது கழுத்து மாலையாகப் போட்டுக் கொண்டிருந்தார். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சிறிய தந்தையாரான ஹம்ஸா (ரலி) அவர்களை உடலைக் கீறி ஈரலை எடுத்து தனது பல் இடுக்குகளில் வைத்து கடித்துத் துப்பினார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்ää முஆவியா (ரலி) அவர்களின் குடும்பம் அதாவது அவர்ää அவரது தந்தை அபூசுஃப்யான்ää அவரது தாய் ஹிந்த் ஆகியோர் மக்கா வெற்றிக்குப் பின்னால் தான் இஸ்லாத்திற்குள் நுழைந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர்ää முஆவியா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காரியதரிசியாக சில காலம் செயல்பட்டிருக்கின்றார். அபுபக்கர் (ரலி) அவர்கள் மற்றும் உமர் (ரலி) அவர்களது ஆட்சிக்காலப் பிரிவில் முஆவியா (ரலி) அவர்களும் அவரது சகோதரர் அபூ யஸீத் (ரலி) அவர்களும் பைஸாந்தியர்களுக்கு எதிராக சிரியாவில் நடந்த போரில் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.

முதலில் சிரியாவின் கவர்னராக அபூ உபைதா (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் நியமித்தார்கள். இவர் இறந்ததுடன் அபூ யஸீத் (ரலி) அவர்களை சிரியாவின் கவர்னராக நியமிக்கப்பட்டார்கள். அபூ யஸீத் (ரலி) அவர்கள் இறந்ததுடன் முஆவியா (ரலி) அவர்களை சிரியாவின் கவர்னராக உமர் (ரலி) அவர்கள் நியமனம் செய்தார்கள். இவரது ஒன்று விட்ட சகோதரரான உதுமான் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பொழுது சிரியாவின் கவர்னராக முஆவியா (ரலி) அவர்களை பணி நிரந்தரம் செய்ததுடன்ää இவரது ஆட்சிப் பொறுப்பிற்குள் மேலும் சில பகுதிகளை உதுமான் (ரலி) அவர்கள் வழங்கினார்கள்.முஆவியா (ரலி) அவர்கள் பண்புகள்

ஆரம்ப கால அரபுக்களுக்கே உரிய தனிச்சிறப்பான குணநலன்களைக் கொண்டவராக இருந்தார்ää இஸ்லாத்திற்குள் நுழைவதற்கு முன்பே பல நல்ல பண்பு நலன்களைக் கொண்டிருந்தார். சிரியாவின் கவர்னராக நியமிக்கப்பட்டதன் பின்பு மக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கியும்ää பல சலுகை நடவடிக்கைகளின் மூலமாக மக்களின் நன்மதிப்பிற்குரியவராக ஆனார். நல்ல உயரமானää பார்ப்பதற்கு அழகான தோற்றத்துடன் இன்னும் கண்ணியமிக்கவராகவும் திகழ்ந்தார். இவரைப் பற்றி உமர் (ரலி) அவர்கள்ää ''முஆவியா அரபுக்களில் சீஸர்"" என்று வர்ணித்துக் கூறுபவர்களாக இருந்தார்கள். அவரது தோற்றம்ää ஆளுமைää கவர்ச்சிää நல்ல பண்புகள் ஆகிய அத்தனையும் இணைந்து மக்களை வசீகரிக்கச் செய்வதாக இருந்தது. இன்னும்ää 'நாவன்மை படைத்த தலைவர்" என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தார். இன்னும் புத்திக் கூர்மைää தந்திரம்ää கவிதை படைத்தல்ää ஹாஷ்யம் மிகுந்தவராக இருந்தார். சுயக்கட்டுப்பாட்டிற்கு பெயர் பெற்றவராக இருந்தார். இன்னும் ராஜதந்திரம் மிக்க அரசியல் சாணிக்கயராகவும் திகழ்ந்தார். போர்க்களத்தில் வாள் முனையைக் கொண்டு வெற்றி பெறுவதைக் காட்டிலும் நாவன்மையைக் கொண்டே வெற்றியை ஈட்டுபவராக இருந்தார். கடந்த காலத்தில் மக்காவில் வதந்திகளை முன்னின்று பரப்புவதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். தனது நோக்கத்தை அடைந்து கொள்தவற்கு எந்தவித தயக்குமுமின்றி பல தகிடுதத்தங்களில் கூட ஈடுபடுவதைக் கொள்கையாகக் கொண்டவராகவும் அவர் முன்பு இருந்தார். இஸ்லாம் எளிமையான வாழ்க்கையை வாழ்வதற்கே முன்னுரிமை வழங்கியிருக்கää இவரோ பைஸாந்தியர்களைப் போல ஆடம்பரமான வாழ்வு வாழவே ஆசைப்பட்டார். அரசவையில் பல ஆடம்பர நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வழி வகுத்தார். தனக்காக மிகவும் ஆடம்பரமான அரண்மனையையும் கட்டிக் கொண்டார். சிரியா முஸ்லிம்களும் கூட பைஸாந்திய மக்களைப் போலவே ஆடம்பர வாழ்வு வாழ முற்பட்டார்கள். ஆனால்ää இஸ்லாத்தை முழுமையான வாழ்க்கை நெறியாகப் பின்பற்ற வேண்டும் என்று துடித்த முஸ்லிம்களுக்கோ முஆவியா (ரலி) அவர்களின் இந்த நடைமுறைகள் முகத்தை சுழிக்க வைத்தன.அலி (ரலி)ää முஆவியா (ரலி) கருத்துவேறுபாடுகள் தோன்றுதல்

அலி (ரலி) அவர்களை கலீஃபாக - ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்புää சிரியாவின் கவர்னர் பதவியிலிருந்து முஆவியா (ரலி) அவர்களை விலக்கம் செய்தார்கள். ஆனால் முஆவியா (ரலி) அவர்கள் பதவி இறங்க மறுத்ததோடுää அலி (ரலி) அவர்களின் கட்டளையை ஏற்றுக் கொள்ளவும் மறுத்து விட்டார். ஏனைய பிரதேசங்களில் உள்ள மக்கள் அனைவரும் அலி (ரலி) அவர்களுக்கு பைஅத் என்ற வாக்குப் பிரமாணம் செய்து விட்ட பொழுதும்ää முஆவியா (ரலி) அவர்களின் தலையீட்டின் காரணமாக சிரியாவினைச் சேர்ந்த எவரும் அலி (ரலி) அவர்களின் ஆட்சிக்கு ஆதரவாக வாக்குப் பிரமாணம் செய்ய முன்வரவில்லை. வெளிப்படையாக இஸ்லாமிய கிலாபத்திற்கு எதிராக முஆவியா (ரலி) அவர்களும்ää சிரியா மக்களும் செயல்பட்டதன் காரணமாகää தன்னுடைய கட்டளையை மீறியதற்காகவும் அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்காகவும் சிரியாவின் மீது நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்திற்கு அலி (ரலி) அவர்கள் தள்ளப்பட்டார்கள்.

இந்தப் பிரச்னை தீர்வதற்குப் பதிலாக நாட்கள் செல்லச் செல்ல பிரச்னை முற்றிக் கொண்டே வந்தது. சிரியா மக்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட ஆரம்பித்தார்கள். இஸ்லாமிய கிலாபத்தின் தலைமையை ஏற்றிருந்த போதிலும் தனக்குக் கீழ் பதவி வகிக்கக் கூடிய ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க இயலாத நிலையில் தான் அலி (ரலி) அவர்கள் இருந்தார்கள். முஆவியா (ரலி) அவர்களை பதவி நீக்கம் செய்துதான் ஆக வேண்டும் எனில்ää அவருக்கு ஆதரவாக இருக்கக் கூடிய சிரியா மக்களின் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் முஸ்லிம்களே..ää முஸ்லிம்களுடன் மோதக் கூடிய சூழல் தான் உருவாகும். இது இஸ்லாம் விரும்பாததொன்றாக இருப்பினும்ää அலி (ரலி) அவர்கள் சிரியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதற்கான அழைப்பை மதீனாவில் விடுத்த பொழுதுää அலி (ரலி) அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லைää மாறாக மிகக் குறைந்த ஆதரவே மதினாவில் கிடைத்தது. சிரியாவிற்கு எதிரான போர் நடவடிக்கை இதன் காரணமாகவும் இன்னும் சில காரணங்களினாலும் தாமதமானதன் காரணமாகää தாமதமான நடவடிக்கை முஆவியா (ரலி) அவர்களின் இருப்பை பலப்படுத்த ஆரம்பித்ததுää அவரது அதிகாரத்தை வலுவாக்கிக் கொள்ளவே அந்தத் தாமதம் உதவியது.

இதற்கு முன்னர் அலி (ரலி) அவர்களின் ஆட்சித் தலைமையை ஏற்று வாக்குப் பிரமாணம் செய்திருந்த தல்ஹா (ரலி) மற்றும் சுபைர் (ரலி) ஆகியோர் ஆயிஷா (ரலி) அவர்களின் பக்கம் இணைந்து கொண்டனர். இப்பொழுது ஆயிஷா (ரலி)ää தல்ஹா (ரலி) மற்றும் சுபைர் (ரலி) ஆகியோர் பஷராவைக் கைப்பற்றிக் கொண்டனர்ää இந்த நிலையில் சிரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பஷராவை நோக்கி அலி (ரலி) அவர்கள் தனது படையை நகர்த்த ஆரம்பித்தார்கள். இந்தப் படையெடுப்பில் அலி (ரலி) அவர்கள் வெற்றி பெற்றாலும் கூடää அதிக இழப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டனர்ää இது முஸ்லிம் உலகிற்கு மிகப் பெரிய இழப்பாக இருந்தது. இப்பொழுது அலி (ரலி) அவர்களின் பக்கம் குறைந்த அளவு இராணுவ வளங்களே எஞ்சியிருந்தன. பஷராவின் மீது எடுக்கப்பட்ட போர் நடவடிக்கைகள் முடிந்ததன் பின்னர்ää அலி (ரலி) அவர்கள் சிரியாவை நோக்கிக் கிளம்பிய பொழுது அலி (ரலி) அவர்களின் பக்கம் பலவீனமாகவும்ää முஆவியா (ரலி) அவர்களின் பக்கமோ மிகவும் வலுவான படையும் இருந்தனää இந்தப் பாதகமான நிலை அலி (ரலி) அவர்களுக்கு மிகப் பெரிய இழப்பையும்ää மிகப் பெரும் சிரமத்தையும் சந்திக்க வைத்தது.முஆவியா (ரலி) திட்டம்

அலி (ரலி) அவர்களுக்கும் முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே நிலவி வந்த பிரிவினைகள்ää கருத்துவேறுபாடுகள் என்பது இவர்களுடைய பரம்பரை பரம்பரையாக தடம் பதித்து விட்டதொன்று. ஹாஷிமியாக்களும்ää உமைய்யாக்களும் ஒரே பரம்பரையினராக இருந்ததன் காரணமாகவோ என்னவோää இவர்களுக்கிடையே தீராப் பகையும்ää விரோதமும்ää குரோதமும் பரம்பரை பரம்பரையாகவே நீடித்து வந்தன. ஹாஷிமிய்யாக்களில் ஒருவரான அப்துல் முத்தலிப் அவர்கள் குரைஷிக் குலத் தலைவராக இருந்தார். அவர் மறைவுக்குப் பின் அந்தத் தலைமைத்துவம் உமையாக்களின் வழி வந்தவரான அபூசுஃப்யான் அவர்களுக்கு மாறியது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவத்தை வெளிப்படையாக அறிவித்த பொழுதுää அதனை எதிர்ப்பதில் முழு மூச்சாக இருந்தவர்கள் இந்த உமையாக்கள் தான். இதனை அவர்கள் மத அடிப்படையில் மட்டும் நோக்கவில்லைää மாறாகää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தூதுத்துவம் மக்காவில் வேர் பிடிக்க ஆரம்பித்து விட்டால்ää உமையாக்களின் கைக்கு சற்று முன்பு தான் மாறி இருந்த தலைமைத்துவம் மீண்டும் ஹாஷிமிய்யாக்களின் கைகளுக்குச் சென்று விடுமே என்றே சுயநலம் தான்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களையும்ää அவர்களது தூதுத்துப் பணியையும் முழு மூச்சாக எதிர்க்க வைத்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் வந்த ஆட்சியாளர்களான அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகிய இருவரும் ஹாஷிமிய்யாக்களும் கிடையாதுää உமைய்யாக்களும் கிடையாது. மூன்றாவது கலிஃபாவான உதுமான் (ரலி) அவர்கள் உமைய்யாக் கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் உமைய்யாக்கள் அதிகாரத் தலைமைப் பீடங்களில் வேரூன்ற ஆரம்பித்தார்கள். உதுமான் (ரலி) அவர்களின் மீதுள்ள பிரதானக் குற்றச்சாட்டேää அவர் தனது கோத்திரத்தவர்களான உமைய்யாக்களுக்கே அதிகார ஆசனத்தை வழங்கி விட்டார் என்பதேயாகும். உதுமான் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்புää அலி (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகின்றார்கள்ää எனினும் உமைய்யாக் கோத்திரத்தவர்களின் கைகளில் இருந்த அதிகாரத்தை எளிதில் மாற்றுவதற்கு இயலாததாக ஆகி விட்டது. உண்மையிலேயே முஆவியா (ரலி) அவர்களின் திட்டம் எதுவாக இருந்ததெனில்ää உமையாக்களின் கைகளில் இப்பொழுது இருந்து கொண்டிருக்கின்ற அதிகாரத்தை கை மாற்றுவதில் தடைகளையும்ää சுணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்பதாகவே இருந்தது. உண்மையில்ää இருவருக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த முரண்பாடுகள் இன்று நேற்றல்லää அது வரலாற்று ரீதியானது என்று பார்வையாளர்கள் கருதுகின்றார்கள்.

அலி (ரலி) அவர்களின் பண்பு எவ்வாறிருந்ததெனில்ää வெளிப்படையாகப் பேசக் கூடியவராகவும்ää மிகவும் நேர்மையாக நடக்கக் கூடியவராகவும்ää எதற்கும் எளிதில் வளைந்து கொடுத்துப் போகாதவராகவும் இருந்தார். தான் ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்புää அதிகாரம் என்பது எனது கைகளில் உள்ளதுää எனது கட்டுப்பாட்டிற்குக் கீழ் உள்ளவர் தான் முஆவியா (ரலி) என்று கருத ஆரம்பித்தார். தன்னிடம் உள்ள சில சிறப்புத் தகைமைகள் மற்றும் ராஜதந்திரம் ஆகிய அனைத்தையும் கொண்டு அலி (ரலி) அவர்களின் செல்வாக்கை குறைப்பதற்கு முஆவியா (ரலி) அவர்கள் தந்திரம் செய்தார்ää இதற்காக சில பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். அவரை ஏதாவது ஒரு வகையில் பிரச்னையில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவேää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரச்னையைத் தோற்றுவித்தார். உதுமான் (ரலி) அவர்களின் இரத்தம் தோய்ந்த ஆடையையும்ää வெட்டி எடுக்கப்பட்ட அவரது மனைவி நைலா (ரலி) அவர்களின் விரலையும் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் பள்ளியில் வைத்து மக்களிடம் எடுத்துக் காண்பித்தார். இந்த நிகழச்சி மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடுவதற்கான மிகச் சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது.

உதுமான் (ரலி) அவர்களது படுகொலையிலும் அதற்குப் பின்னர் நிலைமைகள் இவ்வளவு முற்றியதற்கும் அலி (ரலி) அவர்களே காரணம் என்று முஆவியா (ரலி) அவர்கள் மக்கள் மத்தியில் குற்றம் சாட்டினார். இன்னும் அலி (ரலி) அவர்கள் தலைமைப் பதவிக்கு வந்ததற்கு காரணமானவர்கள் யார் என்றால்ää உதுமான் (ரலி) அவர்களைக் கொலை செய்தவர்களே.. என்றார். இன்னும்ää அலி (ரலி) அவர்களிடம் வாக்குப் பிரமாணம் செய்திருந்த தல்ஹா (ரலி) அவர்களும்ää சுபைர் (ரலி) அவர்களும் தங்களது வாக்குப் பிரமாணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டதற்கு அவர்கள் கூறிய காரணம் என்னவெனில்ää கலவரக்காரர்களின் வற்புறுத்தல் காரணமாகவே தாங்கள் அலி (ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்ய நேரிட்டது என்று அவர்கள் கூறியதையும் இங்கு மக்கள் முன்பாக முஆவியா (ரலி) அவர்கள் எடுத்துரைத்தார்கள். மேற்கண்ட அலி (ரலி) அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை அடுத்துää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குப் பகரமாகää அதற்கு எதிராகப் போரிட்டு அலி (ரலி) அவர்களால் கொலை செய்யப்பட்ட தல்ஹா (ரலி) அவர்களும்ää சுபைர் (ரலி) அவர்களும் இறைவழிப் போராளிகள் என்று மக்கள் முன் அறிவிப்பும் செய்தார் முஆவியா (ரலி) அவர்கள். அலி (ரலி)..ää இவர் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் மட்டும் சம்பந்தப்படவில்லைää பஷராவில் போர் செய்ததன் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் காரணமாகி விட்டார் என்று அடுக்கடுக்காக அலி (ரலி) அவர்கள் மீது குற்றம் சாட்டிய முஆவியா (ரலி) அவர்கள்ää மேலும் இந்தப் போரில் ஆயிஷா (ரலி) அவர்களை மிகவும் கீழ்த்தரமாக அலி (ரலி) அவர்கள் நடத்தியதாகவும் மக்கள் மத்தியில் குறிப்பிட்டார்.

அலி (ரலி) அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களைப் பொழிந்ததோடு மட்டும் நின்று விடவில்லைää அலி (ரலி) அவர்களின் கைவசம் இருந்த ஆட்சிப் பகுதிகளில் அலி (ரலி) அவர்களின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடபடலானார். இன்னும் எகிப்து அலி (ரலி) அவர்களுக்கு விசுவாசமாக இருப்பதுää தனது முதுகில் குத்தும் வேலைக்கு இடம் கொடுத்ததாகி விடும் என்று நினைத்தார் முஆவியா(ரலி). எனவேää எகிப்து மீது அலி (ரலி) அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பலவீனப்படுத்தி விட வேண்டும் என்று முயற்சி செய்தார். அதற்காக எகிப்து கவர்னருக்கு லஞ்சமாக எதையாவது கொடுத்தாவதுää அவரைத் தன் பக்கம் இழுத்து விட வேண்டும் என்று முயற்சி செய்தார். இவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால்ää அதில் துவண்டு விடாத முஆவியா (ரலி) அவர்கள்ää எகிப்து கவர்னருக்கும் அலி (ரலி) அவர்களுக்கும் இடையே சந்தேக எண்ணத்தை விதைத்து விட்டார்ää எகிப்து கவர்னர் தன் மீது விசுவாசமாக இல்லை என்று சந்தேக எண்ணத்திற்கு அலி (ரலி) அவர்களும் ஆட்பட்டு விட்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வின்மை வளர்ந்த காரணத்தால்ää எகிப்தின் கவர்னரை அவரது பதவியிலிருந்து நீக்கம் செய்தார் அலி (ரலி) அவர்கள். அலி (ரலி) அவர்களின் இந்த நடவடிக்கை எகிப்தின் மீதான பிடியை தளர்ச்சியுறச் செய்தது. அலி (ரலி) அவர்களின் இந்தத் தவறை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்வதை விடுத்துää தனக்குச் சாதகமானதொருவர் எகிப்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்றே முஆவியா (ரலி) அவர்கள் விரும்பினார்கள். தனக்குத் தோதானவராக எகிப்தினை வென்றெடுத்தவரான அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களைக் கருதினார் முஆவியா (ரலி) அவர்கள். உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலப் பிரிவில் எகிப்தின் கவர்னராக இருந்தவர் தான் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள். உதுமான் (ரலி) அவர்களுக்கும் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாகää உதுமான் (ரலி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில்ää எகிப்தின் கவர்னர் பதவியிலிருந்து அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களை நீக்கம் செய்தார்கள். இதன் காரணமாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்தது. இந்த மனக்கசப்பு எந்தளவுக்குச் சென்றதென்றால்ää உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிராக எகிப்தினையே ஒன்று திரட்டுவேன் என்று அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் சபதமே செய்தார்கள். உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிராகத் திரண்ட ஒருவரோடு நாம் உறவு கொள்கின்றோமேää இன்னும் உதுமான் (ரலி) அவர்களின் இரத்தத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக இணைகின்றோமே என்ற சங்கடம் ஏதுமில்லாமல்ää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தட்ட ஒருவரோடு முஆவியா (ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களுக்கு எதிராக கூட்டுச் சேர்ந்து கொண்டார்கள்.

அலி (ரலி) அவர்களோடு போர் புரிய முற்பட்டால்ää முஸ்லிம்களுக்கு இடையே ஏற்பட்ட பிளவினைப் பயன்படுத்திக் கொண்டு பைஸாந்தியர்கள் சிரியாவிற்குள் நுழைவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து விடலாம் எனக் கணித்தார்கள். இதற்காகää பைஸாந்தியர்களுடன் அவர்களுக்குச் சாதகமாகவே ஒரு அமைதி ஒப்பந்தத்தை முஆவியா (ரலி) அவர்கள் செய்து கொண்டார்கள்ää இன்னும் வருடாந்திரம் ஒரு தொகையை அதற்காக தருவதாகவும் ஒப்புக் கொண்டார்கள்.

இன்னும் அதிகாரத்தை எப்பொழுதும் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் எனில்ää மிகவும் உறுதியானதொரு வலிமை மிக்க இராணுவம் தன் கைவசம் இருந்தாக வேண்டும் என்பதையும் முஆவியா (ரலி) அவர்கள் உணர்ந்தார்கள். அதற்காகவே வலிமை மிக்கதொரு இராணுவப் படையை உருவாக்கினார்கள். ஆனால்ää அலி (ரலி) அவர்கள் தரப்பிலோ மிகப் பெரிய இராணுவப் படையும் கிடையாதுää இன்னும் தனக்கு ஆதரவாக அவ்வப்பொழுது தன்னாவார்த்துடன் வரும் உதவியாளர்களைத் தான் நம்பிக் கொண்டிருக்க வேண்டிய நிலையே தொடர்ந்தது.

எப்பொழுது அலி (ரலி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றார்களோ அப்பொழுதிலிருந்து உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற பிரச்னையை உயர்த்திப் பிடித்துக் கொண்டே இருந்த முஆவியா (ரலி) அவர்கள்ää இந்த இடைப்பட்ட நேரத்தில் தன்னுடைய தரப்பை மிகவும் வலிமை வாய்ந்ததாகவும் ஆக்கிக் கொண்டார்கள் முஆவியா (ரலி) அவர்கள். அலி (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து ஒரு வருடம் தான் ஆகியிருக்கும்..ää அலி (ரலி) அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்குவதற்கான வலிமையை முஆவியா (ரலி) அவர்கள் உருவாக்கிக் கொண்டு விட்டார்கள்.அமருப்னுல் ஆஸ் (ரலி)

இஸ்லாத்திற்கு முன்பு..!

குறைஷிக் கோத்திரத்தில் ஒன்றான பனூ ஸாம் கோத்திரத்தைச் சேர்ந்தவர் தான் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள். இவரது தந்தை அல் ஆஸ் பின் வாயில் அவர்கள் பனூ ஸாம் கோத்திரத்தின் தலைவராவார்ää மக்கத்துக் குறைஷிகளில் மிகச் சிறந்த வியாபார விற்பன்னராக இவர் திகழ்ந்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியை வெளிப்படையாக ஆரம்பித்த பொழுதுää அதனை முழு மூச்சாக எதிர்த்தவர். அம்ருப்னுல் ஆஸ் அவர்களின் சகோதரர் ஹிஸாம் (ரலி) அவர்கள் ஆரம்ப நாட்களிலேயே இஸ்லாத்தைத் தழுவி விட்டார். இவரது தந்தையார் தலையிட்டு வற்புறுத்தி இஸ்லாத்தை துறக்கச் சொன்ன பொழுது கூடää அதற்கு மறுப்புத் தெரிவித்து தொடர்ந்து இஸ்லாமியராகவே வாழ்ந்தவர் தான் ஹிஸாம் (ரலி) அவர்கள். இவர் அபீஸீனியாவிற்கு முதன் முதல் ஹிஜ்ரத் செய்த குழுவில் இடம் பெற்றிருந்தார். அப்பொழுதுää ஹிஜ்ரத் செய்து சென்றவர்கள் மீது அபீசீனியா மன்னரிடம் புகார் செய்துää அவர்களை திரும்ப அழைத்து வருவதற்காக குறைஷிகளின் தரப்பில் அப்பொழுது சென்றவர் தான் இந்த அம்ர். இவரது இந்தப் பயணம் தோல்வியில் முடிந்ததோடுää முஸ்லிம்களை திரும்ப அனுப்ப இயலாது என்று அபீசீனிய மன்னர் இவரிடம் தெரிவித்து விட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் சென்றதன் பின்னர்ää முஸ்லிம்களுடன் நடைபெற்ற போர்களில் இந்த அம்ர் அவர்கள் குறைஷிகளின் தரப்பில் கலந்து கொண்டுää முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் புரிந்தார்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்

ஹ{தைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்னர்ää அம்ருப்னுல் ஆஸ் அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் இஸ்லாத்தைப் பற்றிய நற்சிந்தனையை ஊட்டினான். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக அம்ருப்னுல் ஆஸ் அவர்களும் காலித் பின் வலீத் அவர்களும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு புறப்பட்டு வந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர்ää இஸ்லாத்தின் மிகப் பெரிய பொக்கிஷமாக அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் மாற்றம் பெற்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சில பொறுப்பான பணிகளை நம்பி இவரிடம் ஒப்படைத்தார்கள். அதில் அவர் வெற்றியையும் பெற்றார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவரை ஓமன் நாட்டின் கவர்னராக நியமனம் செய்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்னர்ää அபுபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபொழுதுää இஸ்லாத்துக்கு எதிராக கிளர்ந்தவர்களை அடக்குவதற்காக ஓமன் கவர்னர் பொறுப்பிலிருந்த அம்ர் (ரலி) அவர்களை திரும்ப அழைத்துக் கொண்டார்கள். இஸ்லாத்தினைப் புறக்கணித்து கிளர்ச்சி செய்த பாலஸ்தீன் மற்றும் சிரியா நாட்டின் மீதான நடவடிக்கைக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்கள். உமர் (ரலி) அவர்களின் காலப் பகுதியில் எகிப்தின் மீது இவரது தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுää அதில் வெற்றி பெற்று எகிப்தினைக் கைப்பற்றினார். இஸ்லாமிய வரலாற்றில் இதன் காரணமாகவே இவரைää 'எகிப்தின் வெற்றியாளர்" என்று பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. உமர் (ரலி) அவர்கள் இவரை எகிப்தின் கவர்னராக நியமனம் செய்தார்கள். உதுமான் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர்ää சில காலம் மீண்டும் கவர்னராக அவரை பொறுப்பிலிருக்கும்படிச் செய்தார்கள். பின்னர்ää அவரை பதவியிலிருந்து நீக்கி விட்டுää உதுமான் (ரலி) அவர்கள் தனது ஒன்று விட்ட சகோதரரை அந்தப் பதவிக்கு நியமித்தார்கள்.

உதுமான்; (ரலி) அவர்களை எதிராக அம்ருப்னுல் ஆஸ் (ரலி)

தன்னை பதவி நீக்கம் செய்தது குறித்து மிகவும் மன வேதனை அடைந்தார் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள். மதீனாவிற்குத் திரும்பியவுடன் உதுமான் (ரலி) அவர்களுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தை மிகவும் மனக்கசப்புடனேயே முடிந்தது. அதுமுதல் உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சியை விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிரான அதிருப்தி அலைகளைப் பரப்புவதில் மிகப் பெரும் பங்காற்றினார். இந்த அதிருப்தி நடவடிக்கையில் எகிப்தியர்களே முன்னணி வகித்தனர்ää அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களை பதவி நீக்கம் செய்ததே அவர்களது மனக்குறையாக இருந்ததுää உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் மறைவாக அல்லாமல் வெளிப்படையாகவே அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் செய்ய ஆரம்பித்தார்கள். இன்னும்ää உதுமான் (ரலி) அவர்களைப் பார்த்துää 'உங்களுக்கு எதிராக முழு முஸ்லிம் உலகையும் திருப்பிக் காட்டுவேன்" என்றே சபதம் செய்தார். உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிரான கிளர்ச்சி வலுவடைந்த பொழுதுää முஸ்லிம் உலகின் பல பாகங்களிலிருந்தும் கிளர்ச்சியாளர்கள் மதினாவில் வந்து கூடலானார்கள். இந்தப் பின்னணி இவ்வாறிருக்கää அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் மதீனாவை விட்டும் பாலஸ்தீனத்திற்குச் சென்று விட்டார்கள். அவர் பாலஸ்தீனத்தில் இருந்த பொழுது தான் உதுமான் (ரலி) அவர்கள் மதீனாவில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி நடந்தேறியது.

அலி (ரலி) ஆட்சிப் பகுதி

உதுமான் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர்ää இனி நடுநிலையாக இருந்து கொள்வது என்ற முடிவுக்கு வந்த அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள்ää நடக்கக் கூடிய நிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்தார். அலி (ரலி) அவர்கள் கலிபாவாகத் தேர்வு செய்யப்பட்டவுடன்ää அவருக்கு வாக்குப் பிரமாணமும் செய்யவில்லைää அவரை எதிர்க்கவும் இல்லை. ஆனால் தன்னை எகிப்தின் கவர்னராக நியமனம் செய்யும்பட்சத்தில் அலி (ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்யும் மனநிலையில் தான் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் இருந்தார்கள். இந்த வாய்ப்பு கைநழுவிப் போனதன் காரணமாகää இனி பாலஸ்தீனத்திற்குச் சென்று விடுவதுää நடக்கக் கூடியவற்றை ஒதுங்கி நின்று பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தார். இப்பொழுது அலி (ரலி) அவர்கள் கைஸ் பின் ஸஅத் (ரலி) அவர்களை எகிப்தின் கவர்னராக நியமனம் செய்து விட்டார். கைஸ் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த கவர்னர் என்ற பெயரெடுத்தன் காரணமாகää அலி (ரலி) அவர்களுக்கு கட்டுப்பட்ட பிரதேசமாக எகிப்து மாறியது. அலி (ரலி) கைஸ் (ரலி) இருவருக்குமிடையே முஆவியா (ரலி) அவர்கள் ஏற்படுத்தி விட்ட சந்தேகப் பொறியின் காரணமாகää கைஸ் (ரலி) எகிப்து கவர்னர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அலி (ரலி) அவர்கள் தனது சுயநலத்திற்காக தன்னை எகிப்து கவர்னர் பதவியில் நியமிக்கக் கூடும் என்று அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடந்தது வேறு. அலி (ரலி) அவர்களோ..ää எகிப்தின் கவர்னராக முஹம்மது பின் அபுபக்கர் (ரலி) அவர்களை நியமனம் செய்தார்கள். மிகவும் வெறுத்துப் போன மனநிலைக்கு வந்த அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள்ää முஆவியா (ரலி) அவர்கள் விரித்த வலையில் வீழ்ந்து போனார்கள்.

முஆவியா (ரலி)ää அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களும்

அலி (ரலி) அவர்களுடன் மோதல் ஆரம்பிப்பதற்கு முன்னால்ää அலி (ரலி) அவர்களின் கைவசம் இருந்து எகிப்து விலகி விட வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட்டார் முஆவியா (ரலி) அவர்கள். எகிப்துடன் அலி (ரலி) அவர்கள் நல்லுறவு பேணுவது தனக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்ததே இதன் காரணமாகும். இதன் காரணமாகவே அலி (ரலி) அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற கவர்னராக கைஸ் (ரலி) அவர்களை நீக்குவதற்காக பல்வேறு திட்டங்களுடன் செயல்பட்டு இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார். அதற்குப் பின்னர் முஹம்மது பின் அபுபக்கர் (ரலி) அவர்களை கவர்னராக அலி (ரலி) அவர்களால் நியமனம் செய்யப்பட்டார். கைஸ் (ரலி) அவர்கள் அளவுக்கு முஹம்மது பின் அபுபக்கர் (ரலி) அவர்கள் திறமை குன்றியவர் என்பதால்ää எகிப்தின் ஆட்சியை அவரால் திறமையாக நிர்வகிக்க இயலாது என்று கணித்தார் முஆவியா (ரலி) அவர்கள். இதற்காகää எகிப்தில் முதலில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்ää பின்னர் அந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி எகிப்தினைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அதற்கு எகிப்தில் நல்ல பரிச்சமுள்ளதொரு நபர் தேவை என்பதை உணர்ந்தார். அதற்காக கடுமையான முறையில் சிந்தித்த பொழுதுää இதற்குத் தகுந்த நபராக அம்ருப்னுல் ஆஸ் (ரலி) தான் என்ற முடிவுக்கு வந்த முஆவியா (ரலி) அவர்கள்ää அம்ரு (ரலி) அவர்களை டமாஸ்கஸ் க்கு வரவழைத்தார். அம்ர் (ரலி) அவர்கள் டமாஸ்கஸ{க்கு வருகை தந்த பொழுது மிகப் பெரிய வரவேற்புக்கு ஏற்பாடு செய்தார் முஆவியா (ரலி) அவர்கள். தங்களுக்கிடையே இருக்கும் பொதுவான நலன்களை முன்னிட்டு இரண்டு பேரும் அலி (ரலி) அவர்களுக்கு எதிராகச் செயல்படுவது என்ற முடிவுக்கு வந்தார்கள். அம்ர் (ரலி) அவர்களை தனது படைகளுக்கான தலைமைத் தளபதியாக நியமித்தார் முஆவியா (ரலி). எகிப்தின் மீது வெற்றி பெற்று விட்டால்ää எகிப்தின் கவர்னர் பதவியை அம்ர் (ரலி) அவர்களுக்கு வழங்குவதற்கு சம்மதமும் தெரிவித்தார். அம்ர் (ரலி) அவர்களும்ää முஆவியா (ரலி) அவர்களும் இணைந்து கொண்டதுää அலி (ரலி) அவர்களின் ஆட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அலி (ரலி) அவர்களுக்கு எதிராக முஆவியா (ரலி) அவர்கள் கிளர்ந்தெழுந்த பொழுது அதற்கான காரணமாக அவர் முன்வைத்ததுää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதாக இருந்ததுää ஆனால் இங்கே மிகப் பெரிய குழப்பம் என்னவென்றால்ää யார் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைச் சம்பவத்திற்கு காரணகர்த்தாவாக நேரடியாகவோ அல்லது மறைமுகவோ செயல்பட்டரோ அவரும்ää இன்னும் எகிப்தியர்களை உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிராகத் திருப்பி விட்டவருமான ஒருவரோடு முஆவியா (ரலி) அவர்கள் கைகோர்த்து செயல்பட்டது தான் வரலாற்றில் புரியாத..ää விடை காண முடியாத நோக்கத்தைக் கொண்டதாகää அதிர்ச்சி தரத்தக்கதாகவும் இருக்கின்றது.

முஆவியா (ரலி) அவர்களுடன் அமைதிப் பேச்சுக்கான முன்முயற்சி

அலி (ரலி) அவர்கள் முன்னிருந்த திட்டம்

அலி (ரலி) அவர்கள் தனது தலைநகராக கூஃபாவை ஆக்கிக் கொண்டதன் பின்னர்ää சிரியாவின் பிரச்னையை ஒன்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்வதுää அதற்கு இயலாத பட்சத்தில் போர் நடவடிக்கைகளில் இறங்கி விடுவதுää இந்த இரண்டில் ஒன்றை எப்படியும் செயல்படுத்தியாக வேண்டும் என்ற முடிவு முன்னிருந்து கொண்டிருந்தது. இஸ்லாமிய ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் ஏற்படாதிருக்க வேண்டுமெனில்ää முஆவியா (ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களின் அதிகாரத்தின் கீழ் வந்து விட வேண்டும். அலி (ரலி) அவர்களுக்கு அவர் கீழ்ப்படிய மறுப்பாரென்றால்ää அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க மறுப்பாரென்றால்ää எந்த ஒரு அரசின் மீதும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கட்டாயமாகி விடும்.

உண்மையில்ää தான் ஆட்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டவுடன் சிரியாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே அலி (ரலி) அவர்கள் விரும்பினார்கள். சிரியாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு மதீனா மக்கள் மிகக் குறைந்த ஆதரவே வழங்கினார்கள். இன்னும் தல்ஹா (ரலி)ää சுபைர் (ரலி) ஆகியோர்களது பிரச்னையும் முன்னின்றது. இவர்களுடன் இணைந்து கொண்டு ஆயிஷா (ரலி) அவர்கள் பஸராவைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்தச் சூழ்நிலைää பஸராவின் மீது முதல் நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்தித்ததுää அதிகபட்ச இழப்புக்குப் பின்பு பஸராவை மீண்டும் கைப்பற்றப்பட்டது. பஸராவின் வெற்றிக்குப் பின்னர் சிரியாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற திட்டம் இருந்தது. ஆனால் இந்த போர் நடவடிக்கை தாமதம் ஆனது. கூஃபாவில் தனது ஆட்சியை ஒருங்கிணைப்பதற்காக அவருக்கு சில காலம் தேவைப்பட்டது. சிரியாவுக்கு எதிரான போருக்கு கூஃபாவில் போதுமான ஆதரவு கிடைத்தும்ää நடவடிக்கையை மேற்கொள்ள அது உதவிகரமாக அமையவில்லை. இன்னும் ஸீஸ்தான் ல் கிளர்ச்சி வெடிக்க ஆரம்பித்தது. அங்கே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர்ää சிரமப்பட்டே கிளர்ச்சியை அடக்க முடிந்தது.

சிரியாவிற்கான தூது

ஸீஸ்தானில் ஏற்பட்ட புரட்சியை அடக்கியதற்குப் பின்புää மீண்டும் அலி (ரலி) அவர்கள் தனது கவனத்தை சிரியாவின் மீது திருப்பி பொழுதுää அவர் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவேறி இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் முஆவியா (ரலி) அவர்கள் தனது இருப்பை பலப்படுத்திக் கொண்டு விட்டார். உதுமான் (ரலி) அவர்களது படுகொலைக்குப் பழி வாங்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில்ää தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு விட்;டார். சிரியாவின் மீதான நடவடிக்கை ஏற்கனவே மிகவும் தாமதமாகி விட்டதுää வெகு விரைவில் அந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இப்பொழுது அவருக்கு உருவாகியது.

சிரியாவின் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்துக் காரணங்களும் இருந்த போதிலும்ää அந்தப் பிரச்னையை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்வதற்கு அவர் தயக்கம் காட்டவில்லை. முஆவியா (ரலி) அவர்களிடம் ஒரு தூதுவரை அனுப்ப விரும்பிய அலி (ரலி) அவர்கள்ää அதற்குப் பொறுத்தமானதொரு நபர் வேண்டுமே என்று நினைத்தார். அதற்காக அவர் ஜரீர் பின் அப்துல்லா (ரலி) என்பவரைத் தேர்வு செய்தார். உதுமான் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தின் பொழுது ஹம்தான் என்ற பிரதேசத்தின் கவர்னராகச் செயல்பட்டவர் அவர். அவரை அவரது பொறுப்பில் தொடர்ந்து இருக்க அனுமதித்தார்கள் அலி (ரலி) அவர்கள்ää இன்னும் அவர் அலி (ரலி) அவர்களுக்கு வாக்குப்பிரமாணம் செய்தவராகவும் இருந்தார். இன்னும் முஆவியா (ரலி) அவர்களுக்கு நெருங்கிய நண்பரும் கூட. ஜரீர் பின் அப்துல்லா (ரலி) அவர்களை கூஃபாவிற்கு வரவழைத்த அலி (ரலி) அவர்கள்ää தன்னுடைய சார்பாக முஆவியா (ரலி) அவர்களுக்கான தூதுவராக அனுப்பியதோடுää அலி (ரலி) அவர்களின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்க அவரைப் பணிக்குமாறு கூறி அனுப்பி வைத்தார்கள். இதற்கிடையில் மாலிக் பின் அஸ்தர் என்பவர் குறுக்கிட்டுää ஜரீர் பின் அப்துல்லாவை அனுப்புவதற்குப் பதிலாக என்னை அனுப்பி வையுங்கள்ää அவர் முஆவியா (ரலி) அவர்களின் ஆத்ம நண்பராக இருப்பதால்ää ஒருவேளை அவர் தனது நண்பருக்குச் சாதகமாக நடந்து உங்களுக்கு பாதகமான முடிவைக் கொண்டு வந்து விடலாம் என்று அதற்கான காரணமாகக் கூறினார். ஆனால் மாலிக் பின் அஸ்தர் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் நேரடியாக தலையிட்டிருப்பவர் என்ற அடிப்படையில் அவரது யோசனையை அலி (ரலி) அவர்கள் தள்ளுபடி செய்து விட்டார்கள்.

ஜரீர் பின் அப்துல்லா அவர்கள் சிரியாவிற்குச் சென்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் அவரை நல்லமுறையில் வரவேற்றார்கள். அலி (ரலி) அவர்களின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு முஆவியா (ரலி) அவர்களை கேட்டுக் கொண்டார்கள். அலி ..ää தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதொரு ஆட்சியாளர்..ää முஸ்லிம் உம்மத் தன்னுடைய ஒருமைப்பாட்டைப் பேணிக்காக்க வேண்டியது அவசியமானதொன்றுää அதற்காகவேனும் நீங்கள் அலி (ரலி) அவர்களின் தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜரீர் (ரலி) அவர்கள் வாக்குவாதம் செய்தார்கள்.

ஆனால் முஆவியா (ரலி) அவர்களோää ஜரீர் நீங்கள் இங்கு நடந்து கொண்டிருப்பது என்னவென்பதை நீங்களே நேரடியாகக் காண வாருங்கள் என்றழைத்துää டமாஸ்கஸ் பள்ளிவாயில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உதுமான் (ரலி) அவர்களின் இரத்தம் தோய்ந்த ஆடையையும்ää நைலா (ரலி) அவர்களின் வெட்டி எடுக்கப்பட்ட கைவிரலையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதையும்ää அதைக் கண்டு விட்டு பள்ளியில் நுழைகின்ற ஒவ்வொருவரும் கண்ணீருடன் உதுமான் (ரலி) அவர்கள் படுகொலைக்கு துக்கம் அனுஷ்டிப்பதையும் பார்த்தார்கள். இன்னும் அவர்கள்..ää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குப் பழிக்குப் பழி வாங்காமல் விடுவதில்லை என்று சபதம் எடுப்பதையும் பார்த்தார்கள். இன்னும் ஜரீர் பின் அப்துல்லா (ரலி) அவர்கள் சிரியாவின் ஏனைய பகுதிகளுக்கும் சென்று பார்த்த பொழுதுää காணும் இடமெல்லாம் மக்கள் போருக்காக தாயாராகிக் கொண்டிருப்பதையும் கண்டார்கள்.

தான் கண்டவற்றை அலி (ரலி) அவர்களிடம் ஜரீர் பின் அப்துல்லா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குப் பழி வாங்குவதற்காக சிரியாவே தயாராகிக் கொண்டிருக்கின்றது என்றார்கள். இதன் மூலம் ஜரீர் (ரலி) அவர்களை அனுப்பியதன் நோக்கம் தவிடு பொடியானது.

இதனைக் கண்ட மாலிக் பின் அஸ்தர் (ரலி)ää நான் ஏற்கனவே என்ன சொன்னேனோ அதுவே இப்பொழுது நடந்திருக்கின்றது. அவர் முஆவியா (ரலி) அவர்களின் ஆள்..ää என்னை நீங்கள் அனுப்பி இருக்கும்பட்சத்தில்..ää அதன் விளைவே வேறாகத் தான் இருந்திருக்கும் என்றார்.

நீர் அங்கு போனால் உன்னை சிரியா மக்கள் கொலை செய்து விடுவார்கள்..ää ஜாக்கிரதை என்றார் ஜரீர் (ரலி) அவர்கள். அதற்கு முன் நான் முஆவியாவைக் கொன்று விடுவேன் என்றார் அஸ்தர்.

இப்பொழுது சூடான வார்த்தைகளை இருவரும் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

இனி இங்கிருப்பது நல்லதல்ல என்ற முடிவுக்கு வந்த ஜரீர் (ரலி) அவர்கள்ää சிரியாவில் தன்னை நன்கு கவனித்துக் கொண்ட தனது நண்பர் முஆவியா (ரலி) அவர்களிடமே திரும்பிச் சென்று விட்டார்.முஆவியா (ரலி) அவர்களுடைய தூது

அலி (ரலி) அவர்களுக்கு எதிராக முஆவியா (ரலி) அவர்கள் சிரியா மக்களை உசுப்பேற்றி விட்ட பின்னர்ää முஸ்லிம்களுக்கிடையே நடைபெறவிருக்கும் இந்த சண்டையை தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்று சிலர் களம் இறங்கினார்கள். அபூ முஸ்லிம் என்பவரது தலைமையில் இயங்கிய அந்த சமாதானக் குழுää போரைத் தவிர்க்கும்படி முஆவியா (ரலி) அவர்களுக்கு அறிவுரை கூறியது. ஆனால்ää முஆவியா (ரலி) அவர்களோ..ää இரத்த இழப்புக்கு இரத்த இழப்பீடு பெறப்பட வேண்டும் என்பது ஒன்றே தனது நோக்கம் என்றும்ää அது மார்க்கம் வலியுறுத்துகின்றதொன்று தான் என்றும் கூறினார். உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்துää அதில் சம்பந்தப்பட்டவர்களை என்னிடம் ஒப்படைக்கும்பட்சத்தில்ää நான் அலி (ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்வதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று கூறினார்.

சரி..ää அப்படியென்றால் சமாதானத் தூதுவராக உங்கள் சார்பில் கூஃபா செல்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்று அபூ முஸ்லிம் முன்வந்தார். முஆவியா (ரலி) அவர்களும் இதற்குச் சம்மதித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களிடமிருந்து வந்த தூதுவரை பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்ற அலி (ரலி) அவர்கள்ää அங்கு வைத்து வந்தவரின் நோக்கம் என்னவென்பதை மக்களுக்கு விளக்கினார்கள். இதனைக் கேட்ட அனைவரும் ஒருமித்த குரலில்ää 'நாங்கள் அனைவருமே உதுமான் (ரலி) கொலை செய்தவர்கள் தான்" என்றார்கள்.

தூதுக்குழுவைத் திரும்பிப் பார்த்த அலி (ரலி) அவர்கள்ää இங்கு நீங்கள் என்ன காட்சியைக் கண்டீர்களோ அதனை நீங்கள் முஆவியா (ரலி) அவர்களிடம் கூறி விடுங்கள் என்றார்கள். தனது நோக்கத்தில் வெற்றி பெற இயலவில்லையே என்ற ஏமாற்றத்தோடு..ää கவலையோடு அபூ முஸ்லிம் அவர்கள் அங்கிருந்து சிரியாவிற்கு பயணமானார்கள்.

இரண்டு பக்கமும் விட்டுக் கொடுக்காத போக்கு நிலவுமானால்ää பிரச்னையை எவ்வாறு தான் அமைதியாகத் தீர்க்க முடியும். ஒரு பக்கம் சிரியா மக்கள் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்கு எதிராக பழி வாங்க வேண்டும் என்று துடிக்கின்றார்கள்ää மறுபக்கம் நாங்கள் அனைவருமே உதுமான் (ரலி) அவர்களின் கொலை பங்கெடுத்தவர்கள் தான் என்று கூறுகின்றார்கள். இந்த சூழ்நிலையில் போர் என்பது தவிர்க்க இயலாத ஒன்றே என்று தான் தோன்றுகின்றது.

உதுமான் (ரலி) அவர்களது படுகொலையில் சம்பந்தப்பட்ட பஸரா மக்களுக்கு எதிராக ஆயிஷா (ரலி) அவர்கள் நடவடிக்கை எடுத்ததைப் போலää நானும் ஏன்.. அந்த மக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஆயிஷா (ரலி) அவர்களது அந்த நடவடிக்கையை தனக்குச் சாதகமானதொரு ஏற்பாடாகää முஆவியா (ரலி) அவர்கள் கணக்கிட்டுக் கொண்டார்கள்.

ஆனால்ää முஆவியா (ரலி) அவர்களின் வாதம் வெறுமனே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக கூறப்படுகின்ற சாக்குப் போக்கு தானே ஒழிய வேறில்லை என்பதாக அலி (ரலி) அவர்களின் நிலைப்பாடு இருந்தது.

உண்மையில் அவர் இரத்த இழப்பீட்டு கோரிக்கையை முன் வைப்பவராக இருந்தால்ää முதலில் தேர்வு செய்யப்பட்டதொரு அரசுக்கு தனது வாக்குப் பிரமாணத்தைச் செலுத்தி விட்டுää பின்பு முறைப்படி அதற்கான கோரிக்கையை வைக்கட்டும் என்று அலி (ரலி) அவர்கள் கருதினார்கள்.

ஆட்சியாளர் என்ற முறையில் நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பதை செவி கொடுத்து கேட்பதற்கு முஆவியா (ரலி) அவர்கள் தயாராக இல்லாதபட்சத்தில்ää போர் என்பது தவிர்க்க இயலாதது. எவ்வாறு தனக்கு எதிராகத் திரும்பிய பஷரா மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதோää அதனைப் போலவே சிரியாவின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவது தவிர்க்க இயலாத ஒன்றே என்று அலி (ரலி) அவர்கள் முடிவுக்கு வந்தார்கள்.

முஆவியா (ரலி)ää அலி (ரலி) இடையே நடந்த கடிதப் போக்குவரத்துகள்

நஹ்ஜுல் பலகா என்ற நூலில் அலி (ரலி) அவர்கள் எழுதிய கடிதங்கள் சில இடம் பெற்றுள்ளன. இந்த கடிதங்கள் இஸ்லாமிய வரலாற்றுப் பொக்கிஷங்களாகவும்ää இன்னும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளின் பின்னணிகள் குறித்தும் பல்வேறு தகவல்களை இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

கலிஃபா தேர்தல் குறித்த விமர்சனம்

அலி (ரலி) அவர்களை கலிஃபாவாகத் தேர்வு செய்யப்பட்டதை முஆவியா (ரலி) அவர்கள் எதிர்த்தார்கள். அதற்குää

அபுபக்கர் (ரலி) அவர்களையும்ää உமர் (ரலி) அவர்களையும்ää உதுமான் (ரலி) அவர்களையும் ஆட்சியாளர்களாக எந்த மக்கள் தேர்ந்தெடுத்தார்களோää அந்த மக்களைக் கொண்டே நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றேன்ää இன்னும் என்னை ஆட்சியாளராக அவர்கள் ஒப்புக் கொண்டு சத்தியப் பிரமாணமும் செய்து விட்டார்கள்ää இன்னும் என்னை அவ்வாறான முறையில் தேர்வு செய்யப்பட்டதன் பின்புää அங்கிருப்பவர்கள் இன்னும் அந்த சபையில் இல்லாதவர்கள் என யாரும் அதனை மறுத்துரைக்க முடியாது. இன்னும் தேர்வுக் கமிட்டியில் முஹாஜிர்களும்ää அன்ஸார்களும் தவிர வேறு யாரும் இல்லைää எப்பொழுது என்னை அவர்கள் ஆட்சித்தலைவராக தேர்ந்தெடுத்து விட்டார்களோää அதனை முழு இஸ்லாமிய உம்மத்தும் ஏற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமும் ஆகி விட்டது. இவ்வாறு ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்ததன் பின்னர்ää அவ்வாறு தேர்வு செய்யப்பட்டதையும்ää தேர்வு செய்தவர்களையும் எவராவது மறுத்து அதற்கு எதிராக விமர்சித்து கருத்துரைப்பாராகில்ää அவர் கிளர்ச்சியாளராகவே கருதப்படுவார்ää கிளர்ச்சியாளர்களை எவ்வாறு நடத்தப்பட வேண்டுமோ அவ்வாறே அவரும் நடத்தப்படுவதற்குரியவராவார்.

ஓ முஆவியா..! இந்த விவகாரத்தில் உண்மையில்..ää நேர்மையாகää எந்தவித பாரபட்சமுமின்றி நீங்கள் முடிவு எடுப்பீர்களென்று சொன்னால்ää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள். ஆனால் இன்றைக்கு நீங்கள் எழுப்புகின்ற இந்த பிரச்னை முற்றிலும் அதற்கு நேர்மாறானதுää தவிர உங்களது சுய விருப்பங்களின் அடிப்படையில் உள்நோக்கம் கொண்டே தவிர இப்பிரச்னையில் என்னை நீங்கள் குற்றப்படுத்தவில்லை என்றார்கள்.

முஆவியா (ரலி) அவர்களின் பதில்

அலி (ரலி) அவர்கள் கூறிய கருத்துக்கு நேரடியாக பதிலைத் தராமல் மீண்டும் அலி (ரலி) அவர்களையே முஆவியா (ரலி) அவர்கள் குற்றப்படுத்திää உதுமான் (ரலி) அவர்களுடைய படுகொலையுடன் சம்பந்தப்படுத்தினார்கள். அதற்கு அலி (ரலி) அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் : ''நான் உங்களுடைய பதிலைப் பெற்றுக் கொண்டேன்ää அது பொய்கள் நிரம்பிய காகிதமே அன்றி வேறில்லைää இன்னும் அதில் உங்களது கெட்ட நோக்கங்களையே வெளிப்படுத்தி இருந்தீர்கள். அந்தக் கடிதத்தை எழுதிய மனிதர் எத்தகையவர் எனில்ää அவர் இருட்டான பாதையை அறிந்து கொள்ள உதவும் ஒளியைப் போலவும் இல்லைää இன்னும் இருட்டுப் பாதையை அறிந்து கொள்வதற்கு உதவுபவரையும் பின்பற்றியதாகவும் இல்லை. அதில் உங்களது உள்நோக்கத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. உங்களது கடிதம் எந்தவித அர்த்தமுமற்றதுää ஆதாரமுமற்றது. உண்மையில் சட்டப்படி சத்தியப் பிரமாணம் என்பது ஒரே ஒரு முறைதான் எடுக்கப்படும்ää அதுவும் நடந்து முடிந்தாகி விட்டது. இறுதி முடிவும் செய்யப்பட்டு விட்டதுää அதனை மாற்றுவதற்கோää மீண்டும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கவோ இயலாதது. எவரொருவர் பைஅத் என்ற சத்தியப் பிரமாணத்தை எதிர்க்கின்றாரோää அவர் உண்மையில் இஸ்லாத்தைக் கைவிட்டு விட்டவராவார்"" என்று எழுதினார்.

உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் விவகாரம்

சரி..ää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை என்னிடம் ஒப்படைக்க வேண்டியது தானே.. என்றார் முஆவியா (ரலி) அவர்கள். அதற்கு அலி (ரலி) அவர்கள் இவ்வாறு பதில் அனுப்பினார்கள் :

நம்முடைய சமுதாயம் இறைத்தூதர் (ஸல்) அவர்களை படுகொலை செய்வதற்கு முயற்சித்த நிகழ்வுகளைச் சந்தித்திருக்கின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்களையும்ää அவர்களைப் பின்பற்றியோர்களையும் வேரறுத்து விட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அவர்கள் நம்மை அழித்து விட பல்வேறு தந்திரங்களைக் கையாண்டார்கள். தண்ணீர் கூடத் தர மறுத்தார்கள். நம்மீது சொல்லொண்ணா துயரங்களைக் கட்டவிழ்த்து விட்டார்கள். அல்லாஹ்ää நம்முடைய உதவிக்கு வந்தான்ää நம்முடைய மார்க்கத்தைக் காப்பாற்றித் தந்தான். இந்த சமயங்களில் இறைநம்பிக்கையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள்ää ஆனால் நிராகரிப்பாளர்களோ தங்களது குலக் கௌரவத்தையும் தங்களது குலத்தார்களுக்கு ஆதரவாகவுமே இருந்தார்கள். எப்பொழுதெல்லாம் போர் உச்சத்துக்குச் சென்றதோ அப்பொழுதெல்லாம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போரின் முதல் அணியில் தன்னுடைய உறவினர்களையே நிறுத்தினார்கள். அதுவே அவர்களது பழக்கமாகவும் இருந்தது. பத்ருப் போரில் உபைதா பின் ஹாரித் (ரலி) அவர்கள் வீரமரணம் அடைந்தார்கள். உஹதுப் போரில் ஹம்ஸா (ரலி) அவர்கள் வீரமரணம் அடைந்தார்கள். முஅத்தா போரில் என்னுடைய மூத்த சகோதரர் ஜாபர் (ரலி) அவர்கள் வீர மரணம் அடைந்தார்கள். மேற்கண்ட போர்களில் நான் பின்னுக்கு நிற்கவில்லைää மாறாக வீரமரணம் என்னை வந்து அணைத்துக் கொள்ளவில்லை. இது எனது கொடுமையான காலம் போலும்ää எனக்கு முன்னால் இரண்டு அடி கூட எடுத்து வைக்கத் தெரியாத ஒருவருடன் நான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றேன்ää இன்னும் அவர் என்னை விட தனக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வேறு கோரிக்கை விடுக்கின்றார். என்மீது யாராவது பழிசுமத்துவார்களென்றால்ää அவர்களை அல்லாஹ் பார்த்துக் கொள்வான். உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை உங்களிடம் ஒப்படைப்பது என்பதைப் பொறுத்தவரையில்ää அதற்கு நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்ää இது எனது அதிகாரத்திற்கு எதிராக நீங்கள் செய்யும் கிளர்ச்சியாகும்ää இன்னும் நான் உங்களை கிளர்ச்சியாளராகவே கருதுகின்றேன்"" என்று எழுதினார்கள்.

சவால்

முஆவியா (ரலி) அவர்கள் போர் தான் இறுதி முடிவு போலும் என்றார்ää அதற்கு அலி (ரலி) அவர்கள் அளித்த பதில் வருமாறு :

ஓ முஆவியா..! நீங்கள் அணிந்திருக்கின்ற இந்த உலக அழகுகளை உங்களிடம் இருந்து அப்புறப்படுத்தி விட்டால் நீங்கள் என்ன தான் செய்வீர்கள். இந்த உலக ஆசை உங்களைக் கவர்ந்து விட்டது. அதன் வலைகளை விரித்து விட்டதுää இன்னும் அதில் நீங்கள் மாட்டிக் கொண்டு விட்டீர்கள். இந்த உலக ஆசை உம்மை அழைக்கின்றதுää அதன் அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டும் விட்டீர்கள். எந்தவித ஒளிவு மறைவுகள் இல்லாதää பாதுகாப்புப் பெற்றுக் கொள்ள முடியாததொரு நாளை நாம் சந்திக்க இருக்கின்றோம் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். எனவே தான் நீங்கள் வழிகேட்டின் பால் சென்று கொண்டிருக்கின்றீர்கள். உங்களது கணக்கைத் தயார் செய்து கொள்ளுங்கள்ääஇன்னும் உங்களை ஆட்கொள்ளவிருக்கின்ற அசம்பாவிதத்திலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளத் தயாராகிக் கொள்ளுங்கள். வழிகேட்டின் பால் சென்று விட்டவர்களின் ஆலோசனைகளை நீங்கள் செவிமடுக்காதீர்கள். நீங்கள் எந்த வழிகேட்டின் பால் இருந்து கொண்டிருக்கின்றீர்களோ அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளவில்லை என்றால்ää கவனத்தில் கொள்ளுங்கள்ää எதனை நீங்கள் மறந்து விட்டீர்களோ அதனை ஞபாகப்படுத்த வைப்பேன். நீங்கள் என்ன? ஷைத்தானின் கபளீகர வலையில் வீழ்ந்து விட்டதொரு மனிதன். ஷைத்தான் தான் உங்களது முழு முதல் வழிகாட்டிää இன்னும் உங்களிடம் காணப்படுகின்ற அனைத்துக்கும் அவனே வழிகாட்டி. ஓ முஆவியா ..! எங்கே சொல்லுங்கள்ää நீங்கள் எப்பொழுது ஒரு சமூகத்திற்கு தலைவராக இருந்திருக்கின்றீர்கள்ää இன்னும் மக்களின் ஆட்சியாளர்களாக இருந்திருக்கின்றீர்கள்..!? இஸ்லாத்தினை விட உங்களுக்கு முன்னுரிமை என்பது கிடையாது. இன்னும் அந்த ஜாஹிலிய்யா காலத்தில் கூட நீங்கள் எந்தவித பதவியிலும் இருந்தது கிடையாது. அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்ளுங்கள். துரதிருஷ்டமானது உங்களை வழிதவறச் செய்து விட்டது. உங்களது விருப்பங்கள் மற்றும் பெருமையும் தான் இப்பொழுது கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்றது. அழிவை நோக்கியே நீங்கள் சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று எழுதினார்கள்.

நீங்கள்.. என்னை போருக்கு அழைக்கின்றீர்கள். நல்லது..ää உங்களோடு இருப்பவர்கள் அனைவரையும் தனியே நிற்கச் சொல்லுங்கள்ää எம்மோடு நீங்கள் நேருக்கு நேர் மோத வாருங்கள் பார்ப்போம். ஏன் அனைத்து நபர்களும் ஆயுதம் கொண்டு கைகலப்பில் இறங்க வேண்டும். முதலில் நமக்குள் இருக்கும் பிரச்னையை நாமே தீர்த்துக் கொள்வோம்ää அப்பொழுது யார் வழிகேட்டில் இருக்கின்றார்கள்ää யார் குருட்டுத்தனமான கொள்கையில் இருக்கின்றீர்கள் என்பதும் தெரிந்து விடும். தெரியுமா உங்களுக்கு.. பத்ருப் போரில் உங்களது தாய்வழி தாத்தாவையும்ää மாமனாரையும்ää இன்னும் சகோதரரையும் நான் தான் கொன்றேன். நீங்கள் இஸ்லாத்துக்குள் வந்ததே வேறு கதை..ää உங்களது வசதிக்காக இஸ்லாத்திற்குள் வந்தீர்கள்ää இஸ்லாத்திற்குள் நீங்கள் நுழைந்தீர்களே தவிரää இஸ்லாம் ஒரு நம்பிக்கையாக இன்னும் உங்களது மனதில் நுழையவில்லை தான் போலும். நீங்கள் தான் இப்பொழுது உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்கு பழிக்குப் பழி வாங்கியே தீருவது என்று களம் இறங்கி உள்ளீர்கள். உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதை நன்றாகவே நீங்கள் அறிவீர்கள். உண்மையில் உங்களது முடிவில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள் என்று சொன்னால்ää யார் யாரெல்லாம் அதற்குக் காரணமானவர்களோ அவர்கள் மீது தான் நீங்கள் பழி தீர்க்க வேண்டும். ஆனால் நானோ..ää உங்களது நோக்கம் வேறாக இருப்பதையே நான் காண்கின்றேன். போர் என்று ஆரம்பித்து விட்டால்ää காயம் பட்ட ஒட்டகம் எப்படி அலறிக் கொண்டு ஓடுமோ அப்படித்தான் நீங்கள் ஓட்டமெடுப்பீர்கள். இந்தப் போரில் உங்களுடைய மனிதர்கள் அடையப் போகும் கதியைப் பற்றி நான் அச்சப்படுகின்றேன். உங்களது ஆட்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பும்படிக் கூறுகின்றார்கள்ää இருப்பினும் அவர்கள் அல்லாஹ்வின் வார்த்தையைப் பொய்ப்பிக்கின்றார்கள்ää இன்னும் எடுத்துக் கொண்ட சத்தியப்பிரமாணத்தையும் அவர்கள் மீறுகின்றார்கள்.

ஆட்சிப் பகுதிகளை பிரித்துக் கொள்வோம்

சரி..ää நமக்கிடையே ஏன் பிரச்னைகளும்ää பிளவுகளும்..ää முஸ்லிம்களுடைய ஆட்சிப் பகுதிகளை நாம் பிரித்துக் கொள்வோம்..ää சிரியாவை என்னுடைய பொறுப்பில் விட்டு விடுங்கள் என்றார் முஆவியா (ரலி) அவர்கள். அதற்கு அலி (ரலி) அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் :

சிரியாவை உங்களது பொறுப்பில் விட்டு விடுவது என்ற உங்களது கோரிக்கையைப் பொறுத்தவரைää அதனை நான் நேற்றைக்கே மறுத்து விட்ட ஒன்றுää இன்றைக்கு அந்தக் கோரிக்கை வைத்தால் நான் எப்படி சம்மதிப்பேன். போர் என்பது அரபுக்களின் வளத்தை அழித்து விடும் என்று கூறுகின்றீர்கள்ää ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்ää யார் அல்லாஹ்வுக்காக யுத்தம் செய்தார்களோ அவர்கள் சுவனத்தைக் கூலியாகப் பெற்றுக் கொள்வார்கள்ää இன்னும் யார் இந்த உலக ஆதாயத்திற்காக யுத்தம் செய்தார்களோ அவர்கள் நரகத்தையே தங்களது இருப்பிடமாக ஆக்கிக் கொள்வார்கள். இராணுவப் பலத்தை பொறுத்தவரைää நீங்கள் செய்யும் மதிப்பீகள்ää வெறும் மதிப்பீடுகள் தான்ää இன்னும் மதிப்பீடுகள் எப்பொழுதும் சரியாக இருந்து விடுவதும் இல்லை. இன்னொன்றையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்ää சிரியாவின் மக்கள் எவ்வாறு இந்த உலகத்தின் மீது எந்தளவு ஆசை வைத்திருக்கின்றார்களோää அதனைப் போலவே ஈராக் மக்களும் சுவனத்தின் மீது ஆசை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். உங்களது கூற்றைப் பொறுத்தவரை நாம் இருவரும் அப்துல் மனாஃப் என்பவருடைய வழித்தோன்றல்கள் தான்ää ஆனால் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுää பனூ உமைய்யாக்கள் எப்பொழுதும் பனூ ஹாஷிம்களுக்கு நிகராகி விட முடியாது.

ஹர்ப் என்பவர் அப்துல் முத்தலிப்புக்கு ஈடாக முடியாது. சுஃப்யான் அபூதாலிப்பிற்கு ஈடாக முடியாதுää இன்னும் சத்தியமும் அசத்தியமும் இணையாக முடியாது. இறைத்தூதர் எங்களில் இருந்தே வந்தவர் என்பதை நீங்கள் மறந்து தான் போனீர்கள். அந்த இறைத்தூதுத்துவத்தின் காரணமாக பலம் பொருந்தியவர்கள் பணிந்தார்கள்ää அடிமட்டத்தில் கிடந்தவர்கள் கூண் நிமிர்ந்தார்கள். இஸ்லாம் தன்னுடைய வெற்றியைக் கண்டு கொண்ட பொழுது சிலர் விரும்பியோ விரும்பாமலோ இஸ்லாத்திற்குள் அடி எடுத்து வைத்தார்கள்ää அச்சத்தின் காரணமாக அல்லது பெருமைக்காக இஸ்லாத்தைக் கொள்கையாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இன்றைய தருணத்தில்ää நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் ஷைத்தான் உங்களை மிகைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய அறிவுரையாகும் என்று கடிதத்தை முடித்தார்கள் அலி (ரலி) அவர்கள்.

அலி (ரலி) அவர்களும்ää அவருக்கு முன்னிருந்த தலைவர்களும்

அலி (ரலி) அவர்களுக்கு முஆவியா (ரலி) அவர்கள் எழுதிய இன்னொரு கடிதத்தில்ää உங்களுக்கு முன் ஆட்சி செய்த தலைவர்களுக்கு நீங்கள் முழு மனதாக ஆதரவு நல்கவில்லை என்று குறிப்பிட்டார்கள். இதில் முஆவியா (ரலி) அவர்களின் நோக்கம் என்னவென்றால்ää அலி (ரலி) அவர்கள் தனது மூத்த தலைவர்கள் பற்றி ஏதாவது வாய் தவறிச் சொல்லி விட வேண்டும்ää அதனை தன்னுடைய பிரச்சாத்திற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாகவே இருந்தது. அதற்கு அலி (ரலி) அவர்கள் இவ்வாறு பதில் கூறினார்கள் :

இறைவன் தன்னுடைய தூதராக இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்ää அவரது போதனைகளை அவரது தோழர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறுகின்றீர்கள். இஸ்லாத்தில் இன்னார் இன்னாருக்கு முன்னுரிமை என்றா கூறுகின்றீர்கள். நீங்கள் கோருவது போல அது இருந்துää அது சரியாகவும் இருக்கும்பட்சத்தில் அதற்கும் உங்களுக்கும் துளிக்கூடச் சம்பந்தமில்லையேää அது அவ்வாறில்லை என்றால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. இதில் இன்னார் இன்னாருக்குத் தான் முன்னுரிமை என்று எப்படி உங்களால் கூற முடிந்தது. இந்தப் பிரச்னையை நீங்கள் கிளப்பியதன் மூலம்ää தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியையே குற்றவாளியாகச் சித்தரிப்பது போலிருக்கின்றது.

நீங்கள் வழிகேட்டின் பக்கம் மிக விரைவாகவே சென்று கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் அனைத்து வரம்புகளையும் மீறி விட்டீர்கள். துர்நடத்தையிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். நினைவில் கொள்ளுங்கள்ää யாரை அல்லாஹ் தன்னுடைய தூதராக ஏற்றுக் கொண்டு விட்டானோää அத்தகைய இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தவர்கள் நாம். எம்முடைய குலத்தினைச் சேர்ந்தவர்கள் உங்களது குலத்தினைச் சேர்ந்தவர்களைக் கண்காணிப்பவர்களாக இருக்கின்றார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களாää ஆனால் அவ்வாறல்லää உங்களுக்குள் இருக்கும் அந்தத் தாழ்வுமனப்பான்மையை அகற்றவே உங்களுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சில திருமணத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். இஸ்லாத்தில் எங்களுக்கு முன்னுரிமை இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம்ää அதனை முன் வைக்கின்றோம் என்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களைச் சேர்ந்தவர்கள்ää இன்னும் அவருக்கு எங்களை நாங்கள் அர்ப்பணித்திருக்கின்றோம். எனக்கு முன்னால் சென்று விட்ட ஆட்சித் தலைவர்களைப் பார்த்து நான் பொறாமைப்பட்டதாகவும்ää இன்னும் அவர்களுடன் நட்புரிமையுடன் இருந்தில்லை என்றும் குற்றம் சாட்டி இருக்கின்றீர்கள்.

தவறான இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் என் மீது வைத்திருந்தாலும்ää அதில் எனக்குப் பெருமையைத் தான் தேடித் தந்திருக்கின்றீர்கள். உதுமான் (ரலி) அவர்களுடன் நான் நடந்து கொண்ட விதம் பற்றி நீங்கள் குற்றம் சுமத்தியிருக்கின்றீர்கள். நீங்கள் கேட்டிருந்த அந்தக் கேள்விக்கு நான் பதில் கொடுத்தே ஆக வேண்டும். தயவுசெய்து உமது இதயத்தைக் கேட்டுப் பாருங்கள்..! உதுமான் (ரலி) அவர்கள் கொல்லப்படுதவற்கான வலையை விரித்தவர் நானா அல்லது நீங்களா. அவருக்கு பாதுகாப்புக் கொடுப்பதில் மாறுபட்ட முறையில் நீங்கள் தான் நடந்து கொண்டீர்கள்ää ஆனால் நானோ அந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதில் என்னால் ஆன அனைத்தையும் செய்தேன். ஆனால் அவரது ஆட்சிக் கொள்கையில் எனக்குக் கருத்துவேறுபாடு இருந்தது என்பதை ஒத்துக் கொள்கின்றேன்ää ஆனால் அதற்காக நான் உம்மிடம் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை. அவருக்கு நான் முடிந்த போதெல்லாம் அறிவுரை கூறி வந்தேன்ää ஆனால் அவரோ அதனை செவியேற்கவும் இல்லைää அல்லது ஒத்துக் கொள்ளவும் இல்லை. வாள் முனையைப் பரீட்சித்துப் பார்ப்பதைத் தவிர வேறு உபாயம் இல்லை என்று நீங்கள் எழுதி இருந்ததைப் பார்த்துää எனக்குச் சிரிப்புத் தான் வந்தது. போர் திணிக்கப்பட்டால்ää அப்துல் முத்தலிப்பின் குழந்தைகள் வாள் முனைக்குப் பயந்தவர்கள் அல்லது போர் முனையை விட்டும் வெருண்டோடுபவர்கள் என்பதை நீங்கள் எப்பொழுது கண்டுபிடித்தீர்கள். இன்ஷா அல்லாஹ்..ää உங்களை நேருக்கு நேர் சந்திக்க என்னுடைய படைகளுடன் புறப்பட்டு வருகின்றேன்.அலி (ரலி) சிரியாவை நோக்கிப் பயணம்

அலி (ரலி) அவர்களது படைகள்

இரண்டு பக்கமும் போர் என்பதைத் தவிர்க்க இயலாது போய் விட்ட பொழுதுää இரண்டு பக்கமும் படைகளைத் தயார் செய்வதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். அலி (ரலி) அவர்களோ மிகவும் உறுதியான 90ää000 படைவீரர்களைக் கொண்ட இராணுவத்தைக் கட்டமைத்தார்கள். அவர்களில் கூஃபாää ஈராக்ää பஷரா மற்றும் மதீனா மக்களும் அடங்குவர். மாலிக் பின் அஸ்தர் அவர்களை தனது தலைமைத் தளபதியாக அலி (ரலி) அவர்கள் நியமித்தார்கள். பல்வேறு பிரிவுகளாக இராணுவம் பிரிக்கப்பட்டுää ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலைமையின் கீழ் பிரிக்கப்பட்டுää அந்தத் தலைமையின் கீழ் சுயமாக இயங்க ஆரம்பித்தது.

இரண்டு பக்கமும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டனää யார் எங்கு வருவது என்பது குறித்த முடிவில் அலி (ரலி) அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதுää அதாவது அலி (ரலி) அவர்கள் சிரியாவுக்கு வருவதா? அல்லது சிரியாவின் படைகள் ஈராக்கிற்கு வருவதா? என்பதில்ää அலி (ரலி) அவர்கள் சிரியாவை நோக்கி வருவதற்கு இணங்கினார்கள். கி.பி.657 மார்ச் மாதம்ää அலி (ரலி) அவர்களின் தலைமையில் ஒட்டு மொத்த படையும் கூஃபாவிலிருந்து புறப்பட்டது. பின்னர் ருஃபா என்ற இடத்திலிருந்து படை மதீனாவை நோக்கிச் சென்றது. அங்கிருந்து மேலும் பல படைகள் அலி (ரலி) அவர்களுடன் இணைந்து கொண்டன. மதீனாவிலிருந்து அலி (ரலி) அவர்கள் சிரியாவை நோக்கிச் சென்றார்கள். மெஸபடோமியாவின் மேற்பகுதிக்குச் சென்று அங்கிருந்து வடக்குப் பக்கமாக சிரியாவிற்குள் நுழைய வேண்டும் என்பதே அலி (ரலி) அவர்களின் திட்டமாக இருந்தது. படையின் முன்னணிக் காவல் படை யூப்ரடிஸ் நதிக் கரையின் மேற்குக் கரைப் பக்கமாகச் சென்றது. முக்கிய படைப்பிரிவானது அலி (ரலி) அவர்களின் கட்டளையின் கீழ் டைக்ரீஸ் நதிக் கரை வழியாகச் சென்றதுää அங்கிருந்து மெஸபபோடோமியாவின் பாலைவனத்திற்குள் படைகள் நுழைந்தன.

பாலைவன வழியாக..

பாலைவன வழியாக படைகள் செல்வது மிகவும் கடினமாக இருந்தது. மிக நீண்ட பயணத்தில் தண்ணீர் மிக முக்கியமான பிரச்னையாக உருவெடுத்ததுää தண்ணீர் இல்லாதது படைக்குள் மிகப் பெரிய பிரச்னையை உருவாக்கியது. அலி (ரலி) அவர்கள் சிறியதொரு குழுவை அனுப்பிää பாலைவனத்தில் வாழக் கூடிய நடோடி மக்களிடம் அருகில் எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டு வருமாறு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அந்த நாடோடி மக்களோ இங்கு அருகில் கிணறோ அல்லது ஊற்றுக்களோ ஏதுமில்லை என்று தெரிவித்து விட்;டார்கள்.

இந்தப் பகுதியில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் யூத குருமார்கள் சிலர் கிணறு தோண்டியதாக ஒரு வரலாற்றுத் தகவலை அலி (ரலி) அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். அலி (ரலி) அவர்கள் அனுப்பி வைத்த குழுக்களில் எதுவும் அப்படிப்பட்டதொரு கிணறோ அல்லது ஊற்றோ இந்தப் பகுதியில் இல்லை என்ற தகவலைத் தான் கொண்டு வந்திருந்தார்கள். எனினும் ஒரே ஒரு குழு மட்டும் தங்களுடன் ஒரு கிறிஸ்தவ துறவி ஒருவரை அழைத்து வந்திருந்தார்கள். அவரது கூற்றுப்படி இந்தப் பகுதியில் அப்படிப்பட்டதொரு ஊற்று இருந்ததாகவும்ää இப்பொழுது அது வற்றி விட்டதாகவும் தகவல் தந்தார். மேலும் அந்தத் துறவி கூறினார்ää பழக்கால செவிவழிச் செய்திப்படிää இந்தப் பகுதியில் ஒரு மறைவானதொரு கிணறு இருப்பதாகவும்ää அதன் வாய்ப்பகுதி கல்லால் அடைக்கப்பட்டிருப்பதாகவும்ää ஆனால் அதன் சரியான இடத்தை எவரும் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் கூறினார். பரம்பரை பரம்பரையாக வரும் இந்தச் செய்தியின் மூலம்ää எவரும் அந்தக் கிணற்றை அறிந்து கொள்ள முடியாது என்றும்ää ஆனால் ஒரு இறைத்தூதர் அல்லது அவரது பிரதிநிதியான ஒருவரால் மட்டுமே தவிர வேறுயாராலும் அதனைக் கண்டு பிடிக்க முடியாது என்ற தகவலையும் அவர் கூறினார்.

அதிசயமான அந்தக் கிணறு

இப்பொழுது அலி (ரலி) அவர்கள் தானே முன் சென்று அந்தக் கிணற்றை கண்டுபிடிக்கப் புறப்பட்டார்கள். அப்பொழுது ஒரு இடத்தில் ஏராளமான கற்குவியல்கள் கிடந்தன. அந்தப் பகுதியைத் தோண்டும்படி தன்னுடைய தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள். அதிசயமான வகையில் அந்த இடத்தில் கிணறு கண்டுபிடிக்கப்பட்டதோடல்லாமல்ää அந்தப் படையினரின் தேவைக்கும் போக மிச்சமாகவே அதில் தண்ணீர் இருந்தது. பழங்காலக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டதை தனது கண்ணால் நேரில் கண்ட அந்த கிறிஸ்தவத் துறவி அதிசயத்துப் போனார். எங்களது வேதங்கள் முன்னறிவித்தபடிää நீங்கள் தான் அந்த இறைத்தூதரின் பிரதிநிதியாவீர்கள் என்று கூறினார். அப்பொழுதே அந்தத் துறவி அலி (ரலி) அவர்களின் கரங்களில் இஸ்லாத்தைத் தழுவினார். அப்பொழுது ஈஸா (அலை) அவர்களது தோழர்களில் ஒருவரான ஸிமோன் என்பவருக்குச் சொந்தமானதும்ää இறைத்தூதர் ஒருவர் தோன்றவிருக்கின்றார் என்ற முன்னறிவிப்பைக் கொண்டதுமானதொரு பழங்கால ஓலை ஒன்றை அலி (ரலி) அவர்களுக்கு அந்தப் புதியவர் பரிசாக வழங்கினார். இன்னும் அந்த பழங்கால ஏடானதுää இறுதித் தூதர் ஒருவரது பிரதிநிதியாகிய ஒருவர் அந்தக் கிணற்றைத் திறப்பார் என்றும் அதில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது.

அந்தப் பாலை வனத்தில் ஒரு கிணறு கண்டுபிடிக்கப்பட்டதுää அலி (ரலி) அவர்களுடன் வந்திருந்த படையினருக்கு மிகப் பெரிய நிம்மதியைத் தந்தது. இன்னும் இந்த நிகழ்ச்சியானது அவர்களிடம் பண்பாட்டு நடவடிக்கையை மேம்படுத்தி இருந்ததுää இன்னும் நாம் சத்தியத்திற்காகவே போர் செய்யக் கிளம்பியிருக்கின்றோம் என்றதொரு உணர்வை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லää இந்தக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது அந்தப் பாலைவனத்து நாடோடிகளிடமும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியதோடுää அலி (ரலி) அவர்கள் மீது ஏற்பட்ட அந்த நல்லெண்ணத்தின் காரணமாகää அவர்களும் முஆவியா (ரலி) அவர்களுக்கு எதிராகப் போரில் கலந்து கொள்ளப் புறப்பட்டார்கள்.

சிப்பினை நோக்கி..

இப்பொழுது பாலைவனத்தைக் கடந்தாகி விட்டதுää அலி (ரலி) அவர்களது படையினரும் இப்பொழுது யூப்ரடிஸ் நதிக் கரையின் இடது பக்கமாக உள்ள அல் ரக்கா என்ற பகுதியை நோக்கிச் சென்றார்கள். அங்கிருந்து நதியைப் படையினர் கடந்தாக வேண்டும். அல் ரக்கா பகுதியினரிடம் தங்களுக்காக படகுகளையும்ää இன்னும் அந்த நதியைக் கடப்பதற்கு ஏதுவாக பாலத்தையும் கட்டித் தருமாறு கோரினார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கிடையில் நடக்கும் இந்தப் போரில் நாங்கள் நடுநிலையாக இருந்து கொள்ளவே விரும்புகின்றோம்ää எனவே எங்களால் கட்டித் தர இயலாது என்று கூறி விட்டனர். ஆனால்ää மாலிக் பின் அஸ்தர் அவர்களோ..ää அவர்களைப் பார்த்துக் கூறினார்ää ஒன்று எங்களுக்கு நீங்கள் படகுகளையும்ää இன்னும் பாலத்தையும் கட்டித் தாருங்கள்..ää இல்லை என்றால் விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருங்கள் என்றார். பின்னர்ää அவர்களுக்குள் கலந்து பேசிய பின்னர்ää அலி (ரலி) அவர்களது படையினர் கோரியவற்றைச் செய்து தருவதாக ஒப்புக் கொண்டுää அதனை நிறைவேற்றியும் கொடுத்தனர். பின்னர் அலி (ரலி) அவர்களின் படை யூப்ரடிஸ் நதியைக் கடக்க ஆரம்பித்தது.

நதியைக் கடந்தவுடன் நதியின் வலது பக்கக் கரையோரமாகச் சென்ற படைää அலிப்போ வை நோக்கி நகர ஆரம்பித்தது. அங்கே சிரியாவினைச் சேர்ந்த பாதுகாப்புப் படை ஒன்றைச் சந்திக்க நேர்ந்தது. அலி (ரலி) அவர்களுடன் மோதி ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொள்ளத் தயாராக இல்லாத அவர்கள்ää எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அங்கிருந்து விலகிச் சென்று விட்டார்கள்.

சுர் ரும் என்ற இடத்தில்ää அதாவது சிரியாவின் எல்லைக்கருகில் வந்தாகி விட்டதுää அலி (ரலி) அவர்களுடன் வந்த படையுடன்ää சிரியாவைச் சேர்ந்த பாதுகாப்புப் படைகள் கைகலப்பில் இறங்கின. சிரியப் படைகள் தோற்கடிக்கப்பட்டதுää அவை பின்வாங்கிச் செல்ல ஆரம்பித்தன. அதன் பிறகு அலி (ரலி) அவர்கள் சிப்பீன் என்ற சமவெளிக்கு வந்தார்கள்ää அங்கே முஆவியா (ரலி) அவர்கள் பெரும் படையுடன் அலி (ரலி) அவர்களை எதிர்கொள்வதற்காகக் காத்து நின்றார்.தண்ணீருக்கான யுத்தம்

தண்ணீர் - முஆவியா (ரலி) அவர்களின் உத்தரவு

அலி (ரலி) அவர்களின் படை சிப்பீன் சமவெளிக்கு வந்த பின் தான் தெரிந்ததுää முஆவியா (ரலி) அவர்களின் படைகள் அந்தச் சமவெளியின் மிகவும் நல்லதொரு பகுதியாகப் பார்த்து தங்களது படையை நிறுத்தி இருக்கின்றார்கள் என்பதும்ää இன்னும் அந்தப் பகுதியில் ஒரே ஒரு தண்ணீர் கிணறு மட்டும் தான் இருந்ததுää அந்தக் கிணறும் கூட முஆவியா (ரலி) அவர்களின் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததுää இதனால் அலி (ரலி) அவர்களின் படைகள் அந்தப் பகுதியில் இருந்து எங்கெனும் தண்ணீரைப் பெற்றுக் கொள்ள இயலாத நிலையே இருந்தது. அலி (ரலி) அவர்களின் படையினர் தண்ணீர் தாகத்தால் சிரமத்தை அனுபவித்துää அதன் மூலம் இக்கட்டான சூழ்நிலைக்கு அவர்களைத் தள்ளி விட்டுää தன்னுடைய வெற்றியை மிக எளிதாக்கிக் கொள்ள வேண்டும் என்பதாகவே முஆவியா (ரலி) அவர்களின் திட்டம் இருந்தது.

தண்ணீருக்கான பேச்சுவார்த்தை

இப்பொழுது அலி (ரலி) அவர்களின் முன் இருந்த பிரதான பிரச்னை என்னவென்றால்ää தண்ணீரைப் பயன்படுத்துவதற்கான வழிமுறையைக் காண வேண்டும் என்பதாகவே இருந்தது. இப்பொழுது அலி (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களிடம் ஒரு தூதுக் குழுவை அனுப்பி வைத்தார்கள். இஸ்லாத்தின் சட்ட அடிப்படையிலும்ää போர்க் காலச் சட்ட அடிப்படையிலும்ää எதிர் எதிர் அணியில் இருப்பவர்களுக்கு தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை மறுக்கக் கூடாது என்பதை முஆவியா (ரலி) அவர்களுக்கு அலி (ரலி) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். இன்னும் இரண்டு பக்கமும் நிகழவிருக்கும் எந்தவிதமான ஆயுத மோதல்களும் மிகப் பெரிய மனித அழிவைக் கொண்டு வரும். எனவேää நம் இருவருக்குமிடையே உள்ள பிரச்னையை பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியாகத் தீர்த்துக் கொள்வதே மிகவும் நல்லது. பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகள் தாளிடப்படும் வரைக்கும் நானே வலிய வந்து போரை ஆரம்பிக்க மாட்டேன். தண்ணீர் இருக்கும் பகுதியானது இருவருக்கும் பொதுவானது என்பதை அறிவிக்க வேண்டும்ää இன்னும் இரண்டு பக்கத்தினருக்கும் பொதுவானதொரு பகுதியாக அதாவது 'சூனியப் பகுதியாக"வும் அதனை அறிவிக்க வேண்டும் என்று அலி (ரலி) அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

அலி (ரலி) அவர்களின் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட முஆவியா (ரலி) அவர்கள்ää தனது ஆலோசனைக் குழுவைக் கூட்டி அவர்களிடம் கலந்தாலோசனை செய்ய ஆரம்பித்தார்கள். அப்பொழுதுää போர் சமயத்தில் தண்ணீர் இருக்கும் பகுதியை இரு தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை இரு தரப்பினரும் கடைபிடிக்க வேண்டியதொன்றே என்ற கருத்தை அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.

இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதொரு திட்டத்தின் அடிப்படையில்ää தண்ணீர் இருக்கும் பகுதியை நாம் நமது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதும்ää இன்னும் எதிர் தரப்பினருக்குத் தேவையான தண்ணீரை ஒரு குறிப்பிட்ட பகுதி நேரத்தில் அதனைப் பயன்படுத்திட அனுமதிப்பதற்கான வழிவகைகளைச் செய்ய முடியும் என்றும் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்.

அப்துல்லா பின் அபி ஸிரா என்பவர்ää இவர் முன்னாள் எகிப்தின் கவர்னர்ää இன்னும் உதுமான் (ரலி) அவர்களின் வளர்ப்புச் சகோதரர் தனது கருத்தாகää தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்றும் சொல்ல வேண்டாம்ää ஆனால் தண்ணீர் கொடுப்பதாக பாசாங்கு செய்து கொண்டு தண்ணீர் கொடுப்பதனை தாமதப்படுத்த வேண்டும் என்றார். இவ்வாறு செய்வதன் மூலம் அலி (ரலி) அவர்களின் படையினர் வெகுசீக்கிரத்தில் இந்தப் பகுதியை விட்டும் அவர்கள் திரும்பிச் செல்ல வழியேற்பட்டு விடும் என்றார். அவ்வாறு அவர்கள் திரும்பிச் செல்லும் பொழுதுää அவர்களை நாம் விரட்டிச் சென்று தாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இன்னும் சிலர்ää நாம் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்கு பழிவாங்கவே இங்கு கூடியிருக்கின்றோம். அந்தக் கிளர்ச்சியாளர்கள் உதுமான் (ரலி) அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதனைக் கூடத் தடுத்தார்கள். உதுமான் (ரலி) அவர்கள் தண்ணீர் இன்றி எவ்வாறு சிரமப்பட்டார்களோ அது போன்றே இவர்களுக்கும் தண்ணீர் கிடைக்காமல் செய்ய வேண்டும்.

இதையெல்லாம் கேட்டு முடித்து விட்ட முஆவியா (ரலி) அவர்கள்ää வந்திருந்த தூதுக் குழுவிடம் மழுப்பலாகப் பதில் கூறி அனுப்பி விட்டார். அலி (ரலி) அவர்களின் கோரிக்கையை அவர் நேரடியாக மறுக்கவும் இல்லைää இன்னும் அதனை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அவரது நோக்கமே இப்பொழுது நேரத்தைக் கடத்த வேண்டும் என்பதாகவே இருந்தது. இதற்கிடையில்ää மேலும் ஒரு படையை அனுப்பி வைத்துää தண்ணீர் இருக்கும் பகுதியின் காவலை பலப்படுத்திட ஆரம்பித்தார் முஆவியா (ரலி) அவர்கள்.

தண்ணீருக்கான போர்

முஆவியா (ரலி) அவர்களிடம் சென்ற தூதுக் குழு திரும்பி வந்தவுடன்ää அலி (ரலி) அவர்கள் தனது ஆலோசனைக் குழுவைக் கூட்டினார்கள். எதிர்பாராத விதமாக விரைவானதொரு தாக்குதலைத் தொடுத்துää தண்ணீர் இருக்கும் பகுதியை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட வேண்டும் என்ற ஆலோசனை அங்கு முன் வைக்கப்பட்டது. திட்டமிட்டபடி தாக்குதல் ஆரம்பமானதுடன்ää மிகப் பெரிய யுத்தம் வெடித்ததுää இரு பக்கமும் வாட்கள் சுழன்றாடின. இரு பக்கமும் சிலர் கொல்லப்பட்டனர்ää ஆனால் இந்த தாக்குதல் அலி (ரலி) அவர்களுக்குச் சாதகமாகி அலி (ரலி) அவர்களின் தரப்பினரின் கைகள் ஓங்க ஆரம்பித்தனää தண்ணீர் இருக்கும் பகுதியில் பல முனைகளிலும் காவலுக்கு நின்று கொண்டிருந்த முஆவியா (ரலி) அவர்களின் படைகள் அங்கிருந்த விலகிச் செல்ல ஆரம்பித்தன.

இப்பொழுது நிலைமை தலைகீழானதுää தனது படையினர் தண்ணீர் பகுதிக்குச் சென்று தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு முஆவியா (ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது அங்கு கூடியிருந்த ஆலோசகர்கள்ää அலி (ரலி) அவர்களேää சிரியாக் காரர்கள் தங்களது சொந்த நாணயத்தைச் செலுத்தி நம்மிடம் தண்ணீர் பெற்றுக் கொள்ளட்டும் என்றார்கள். அலி (ரலி) அவர்களோ..ää அந்த ஆலோசனையை ஏற்க மறுத்து விட்டுää அவர்களைப் பார்த்துää அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் கூட..ää தண்ணீரைப் பயன்படுத்துவதிலிருந்து அவர்களைத் தடுத்து விடுவதற்கு இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்கவில்லை என்றார்கள். நான் அல்லாஹ் வழங்கிய வேதத்தைக் கொண்டு தான் செயல்படுவேனே தவிரää அறியாமைக்கால மக்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றிச் செயல்பட மாட்டேன் என்றார்கள். அலி (ரலி) அவர்களின் கட்டுப்பாட்டில் அந்தத் தண்ணீர்ப் பகுதி இருந்தும் கூடää குறிப்பிட்ட நேரத்தில் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முஆவியா (ரலி) அவர்களின் படையினருக்கு அலி (ரலி) அவர்கள் அனுமதி வழங்கினார்கள். தண்ணீருக்குக் காவலாக இருந்தவர்களும்ää தண்ணீர் எடுக்க வந்தவர்களும் இப்பொழுது நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் நிலை உருவாகியது. பிரிந்து நின்று கொண்டிருந்த இதயங்கள் இணைவதற்கு அவை வழிவகுத்தன.

போரைத் தவிர்த்து விட்டு பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்த்துக் கொண்டால் என்ன என்ற கேள்வியை இரு தரப்பினரும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள ஆரம்பித்தது மட்டுமல்லää அதனை விரும்பவும் செய்தார்கள். அமைதிப் பேச்சுவார்த்தை அவசியம் என்று கருத ஆரம்பித்தார்கள்.அமைதியாகக் கடந்தன மாதங்கள்

படைகள்

இஸ்லாமிய வரலாற்றில் முன்னெப்பொழுதும் நடந்திராத அதிசயத்தைப் போலää இரு பக்கமும் மிகப் பெரிய படைகள் அந்த சிப்பீன் ல் நின்று கொண்டிருந்தன. அதனைப் போலவேää இறைவனின் திருப்பொருத்தத்திற்காகää இறைநிராகரிப்பாளர்களை எதிர்த்துக் கூட இஸ்லாமிய வரலாற்றில் இவ்வளவு பெரிய படை திரட்டப்பட்டிருக்கவில்லை. துரதிருஷ்டம் என்னவென்றால்ää இங்கே எதிர் எதிர் முகாமில் இருப்பவர்கள் முஸ்லிம்களே..ää அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாகவும்ää அந்த நியாயத்தை நிலைநாட்டும் நோக்கத்துடனேயே போருக்குப் புறப்பட்டு வந்திருப்பதாகவும் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்லää ஆயுத மோதலின்றி பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றார்கள். இன்னும் முந்திக் கொண்டு எவரும் தங்களது ஆயுதத்தை எதிர் தரப்பினர் மீது எறிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் கூட..ää தான் முதன் முதலில் போரை வலிய ஆரம்பிக்கக் கூடாது என்றே இப்பொழுது கருத ஆரம்பித்தார். என்ன..ää இவ்வளவு படை முஸ்தீபுகள் செய்யப்பட்டதன் பின்னர் அமைதி என்பது அங்கே கேள்விக் குறியாகவே இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் மரணத்தின் வாடையைக் கண்முன் நிறுத்தி விட்டுச் சென்று கொண்டிருந்தது. பறக்கும் சிறு பொறியும் எண்ணற்ற முஸ்லிம்களின் உயிரைக் குடிப்பதற்குத் தயராக இருந்தது. இருப்பினும்ää நேரடியான எந்த மோதலும் இதுவரை நடக்கவில்லை. படை நடத்தி வந்த இந்த இரண்டு மாதங்களாகää இரண்டு பக்கமும் அமைதியாகவே கழிந்து கொண்டிருந்ததுää அந்த அமைதியே.. போர் நடக்குமா அல்லது அமைதி ஏற்பட்டு விடுமா என்ற சந்தேகத்தை வலுவாக்கிக் கொண்டே சென்றது. இப்பொழுது முஹர்ரம் மாதம் வந்ததுää இரு தரப்பினரும் தங்களுக்குள் இருக்கும் பகைமைப் போக்கிற்கு சற்று ஓய்வு கொடுக்க சம்மதித்தார்கள்.

அமைதிப் பேச்சுவார்த்தைகள்

இந்த அமைதி நிலவிய மாதங்களில்ää இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள் தொடர ஆரம்பித்தனää இன்னும் தூதுக்குழுக்கள் அமைக்கப்பட்டுää இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

அலி (ரலி) அவர்கள் தனது தூதுக் குழுவின் மூலமாகää இறைவனை அஞ்சிக் கொள்ளுமாறும்ää இன்னும் முஸ்லிம்களுக்குள் பிரிவினை விதையைத் தூவ வேண்டாம் என்றும் முஆவியா (ரலி) அவர்களைக் கேட்டுக் கொண்டார்கள். அலி (ரலி) அவர்களை ஆட்சியாளராக நியமனம் செய்தாகி விட்டதுää இனி அவருக்கு வாக்குப் பிரமாணம் செய்ய வேண்டியது முஆவியா (ரலி) அவர்களின் மீதான கடமை என்பதையும் அந்தத் தூதுக் குழுவினர் தெளிவுபடுத்தினார்கள். அலி (ரலி) அவர்களின் கல்வியறிவுää இறையச்சம்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களுடனான தொடர்புää இஸ்லாத்திற்கு அவர் செய்த சேவைகள்ää இன்னும் தலைமைத்துவப் பண்புகளும்ää இதய சுத்தியும் நிறைந்தவரான அவர்ää அந்தப் பதவிக்கு மிகவும் பொருத்தமானவரே என்றும் அந்த தூதுக் குழுவினர் முஆவியா (ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள்.

அலி (ரலி) அவர்களின் தேர்வு முறையற்ற விதத்தில் நடந்துள்ளதுää கிளர்ச்சியாளர்களின் வாளின் முனையின் அச்சுறுத்தலின் கீழ் நடந்துள்ளது. இன்னும் அவர் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையோடு சம்பந்தப்பட்டிருக்கின்றார். நான் உதுமான் (ரலி) அவர்களின் ஒன்று விட்ட சகோதரனாக இருப்பதால்ää அவரது இரத்த இழப்பீட்டுக்கு சட்ட உரிமை 'கஸஸ்" கோருவது இஸ்லாமிய சட்ட அடிப்படையில் என்மீதான உரிமையாகவும் இருக்கின்றது என்று முஆவியா (ரலி) அவர்கள் தனது தரப்பு நியாயங்களாக எடுத்துரைத்தார்கள்.

அலி (ரலி) அவர்களின் தேர்வு மதீனாவில் வாழுகின்ற அனைத்து மக்களின் முன்னிலையில் தான் நடந்தது. இதற்கு முன் நடந்த ஆட்சியாளர்களின் தேர்வுகளும் இதே மதீனத்து மக்களின் முன்னிலையில் தான் நடந்திருக்கின்றதுää இன்னும் முன்னிருந்தவர்களை யார் தேர்வு செய்தார்களோ அவர்களே தான் அலி (ரலி) அவர்களையும் தேர்வு செய்தார்கள். இவரைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கிளர்ச்சியாளர்கள் மதீனா மக்களை வற்புறுத்தவில்லை. ஆனால் அவர்கள் இன்னும் வேறு சிலரைக் காட்டி அவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்பினர். பலர் போட்டியிட்டதில் அவர்கள் அனைவரைக் காட்டிலும் அலி (ரலி) அவர்களே முன்னணியில் இருந்தார்ää பொதுவான கருத்தபிப்பராயத்தின் அடிப்படையில்ää அவரது சிறப்புத் தகுதிகளைக் கணக்கில் கொண்டு அவரே சிறப்பானவராகக் கருதப்பட்டார். நிச்சயமாகää மற்ற அனைத்து வேட்பாளர்களும் தங்களது தரப்பினை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள்.

என்ன தான் சமாதானம் கூறினாலும்..ää விளக்கமளித்தாலும்..ää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் அலி (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால்ää அலி (ரலி) அவர்களது தேர்வு நியாயமற்றது என்ற கருத்தையே முஆவியா (ரலி) அவர்கள் தனது தரப்பு வாதமாக வைத்தார். நீங்கள் கூறுகின்ற இந்த கருத்து தவறானது என்று அந்த சமாதானக் குழுவினர் எடுத்துரைத்தார்கள். உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் அலி (ரலி) அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயல்படவில்லை என்பது தான் உண்மை என்றுரைத்தார்கள். உண்மை என்னவென்றால்ää உதுமான் (ரலி) அவர்களுக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கியவர் தான் அலி (ரலி) அவர்கள் என்றார்கள். நீங்கள் கூறுகின்ற தவறான இந்தக் குற்றச்சாட்டுக்கு ஏற்புடையவரல்ல அலி (ரலி)அவர்கள் என்றும் கூறினார்கள்.

சரி அப்படி என்றால்..ää அவர் உதுமான் (ரலி) அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினார் என்று நீங்கள் கூறியபடி பார்த்தால்ää இந்தப் படுகொலையே நடந்திருக்காதேää தவிர்க்கப்பட்டிருக்குமே என்றார் முஆவியா (ரலி) அவர்கள்.

இப்பொழுது அலி (ரலி) அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட தூதுக் குழுவினர் முஆவியா (ரலி) அவர்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டனர் :

சிரியாவின் அசைக்க முடியாத சக்தியாக நீங்கள் இப்பொழுது இருந்து கொண்டிருக்கின்றீர்கள்ää உங்களிடம் மிகப் பெரிய இராணுவமும் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த இராணுவம் உங்களது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றது. மதீனாவில் நடந்த சம்பவங்களின் பின்னணியும்ää அதன் பிரச்னைகள் பற்றியும் நீங்கள் அறிந்தே வைத்திருக்கின்றீர்கள். அப்படிப்பட்ட நீங்கள்ää உதுமான் (ரலி) அவர்களைப் பாதுகாப்பதற்காக வேண்டி உங்களது படைகளை ஏன் அனுப்பி வைத்திருக்கக் கூடாது.

இந்தக் கேள்விக்கு முஆவியா (ரலி) அவர்களிடமிருந்து திருப்திகரமான பதில் வரவில்லை.

இப்பொழுது முஆவியா (ரலி) அவர்களைப் பார்த்து இன்னொரு கேள்வியையும் வீசினார்கள் : உதுமான் (ரலி) அவர்கள் முற்றுகையிடப்பட்டிருந்த நாட்களில்ää ஒவ்வொரு பிரதேச கவர்னர்களுக்கும் வேண்டுகோள் அனுப்பிää கிளர்ச்சியாளர்களிடமிருந்து தன்னைப் பாதுகாப்பதற்காக உதவிப் படையை அனுப்பி வைக்கும்படி உதுமான் (ரலி) அவர்கள் கேட்டிருந்தார்களே.. அவ்வாறே உங்களிடமும் கேட்டிருந்தார்களே..! இதன்படி அவரைப் பாதுகாக்க உதவிப் படையை அனுப்பாத உங்களது நடவடிக்கையை வைத்துää அவரது படுகொலைக்கு மறைமுகமாக நீங்களும் சம்பந்தப்பட்டிருக்கின்றீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா என்று கேட்டார்கள். இதற்கும் முஆவியா (ரலி) அவர்களிடமிருந்து சரியான பதில் வரவில்லை. அதனைத் தொடர்ந்து இருதரப்பாரும் சூடான வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

அலி (ரலி) அவர்களின் தூதுக் குழுவினர் இன்னுமொரு கேள்வியையும் முஆவியா (ரலி) அவர்களைப் பார்த்துக் கேட்டார்கள் :

அலி (ரலி) நினைத்திருந்தால்..ää உதுமான் (ரலி) அவர்களுக்கு முறையான ஆதரவு வழங்கியிருக்கும்பட்சத்தில் அந்தப் பிரச்னையை தவிர்த்திருக்கலாம் என்று கூறினீர்கள். அப்பொழுது அலி (ரலி) அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் இராணுவம் அவர் கைவசம் இருந்ததா? மிகப் பெரிய இராணுவத்தைக் கைவசம் வைத்திருக்கும் நீங்களே அந்தப் பிரச்னையைத் தீர்க்க முன்வர முடியவில்லைää எந்தவித உதவிப் படைகளும் இல்லாத ஒரு மனிதர் எவ்வாறு அந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும்.

சரி..! அலி (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் சம்பந்தப்படவில்லை என்றால்ää படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை என்னிடம் ஒப்படைக்கலாம் அல்லவா என்றார் முஆவியா (ரலி) அவர்கள்.

உண்மையில்..ää 'கஸஸ்" என்ற இரத்த இழப்பீடு கோரும் முறை என்னவென்றால்ää முதலில் அவருடைய தலைமையை ஏற்று அவருக்கு வாக்குப் பிரமாணம் செய்யுங்கள்ää பின்னர் அவரிடம் இரத்த இழப்பீட்டுக் கோரிக்கையை முன் வையுங்கள்ää இதுவே முறையானதாக இருக்கும். முஆவியா (ரலி) அவர்களே.. நீங்கள் தவறாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்றார்கள்.

நீங்கள் இரத்த இழப்பீடு கோருவது உண்மையாக இருக்குமென்றால்ää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன்னால் நிறுத்துவதற்குää ஆட்சியாளர் என்ற முறையில் அலி (ரலி) அவர்களின் கரத்தை வலுப்படுத்த முன்வர வேண்டியது அவசியமில்லையா என்றார்கள் அந்த தூதுக் குழுவினர். நீங்கள் அலி (ரலி) அவர்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவதன் மூலம்ää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் இப்பொழுது அலி (ரலி) அவர்களின் பக்கமாக நிற்கும் வாய்ப்பைத்தான் ஏற்படுத்தித் தந்துள்ளது. இப்பொழுது அவர்கள் அலி (ரலி) அவர்கள் பக்கமாகää அவருக்கு உதவியாக நிற்கும் பொழுது உண்மையில் எவ்வாறு தான் அவர்கள் மீது அவர் நடவடிக்கை எடுக்க முடியும்.

இதில் கவனிக்கத் தக்கது என்னவென்றால்ää உண்மையில் முஆவியா (ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களின் ஆட்சிக்கு மிகப் பெரிய இடையூறை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பொழுதுää இன்னும் மிகப் பெரிய படையுடன் அவர் அதனைச் செய்து கொண்டிருக்கும் பொழுதுää உதுமான் (ரலி) அவர்கள் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுப்பாரா அல்லது தன் மீது எதிர்ப்பாய்ச்சல் பாய்கின்ற முஆவியா (ரலி) அவர்களைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்குவாரா என்பது சிந்திக்கத்தக்கது.

இந்தப் பிரச்னை இத்தோடு தீர வேண்டுமென்றால் நான் சொல்லும் இந்த யோசனையை செயல்படுத்துவோம். அவர் என்னை சிரியாவின் ஆட்சியாளராக அங்கீகரிக்க வேண்டும். தொடர்ந்தும் என்னை சிரியாவின் ஆட்சியாளராக இருக்க அனுமதித்து விட்டுää ஏனைய முஸ்லிம் பிரதேசங்கள் அனைத்தையும் அவர் தன் கைவசம் வைத்துக் கொள்ளட்டும் என்ற முடிவை அலி (ரலி) அவர்களின் தூதுக்குழுவினரிடம் தெரிவித்தார் முஆவியா (ரலி) அவர்கள்.

முஆவியா (ரலி) அவர்களின் இந்த இறுதித்திட்டத்தை அலி (ரலி) அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லைää இது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறி நிராகரித்து விட்டார்கள். இன்னும் அவர் இவ்வாறு சொன்னதன் காரணமாகää உண்மையிலேயே அவரது நோக்கம் என்னவென்பது இப்பொழுது தெளிவாகி விட்டது. உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்கு வஞ்சகம் தீர்க்கப் போகின்றேன் என்று அவர் கூறுவதெல்லாம்ää தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவர் போடும் நாடகமே அன்றி வேறில்லை என்ற முடிவுக்கு அலி (ரலி) அவர்கள் வந்து விட்டார்கள்.

சரி..! இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அத்தனை அசம்பாவிதங்களும் ஆட்சியைப் பிடிப்பதற்காகவே என்றாகி விட்ட பின்னர்ää நம் இருவருக்கும் இடையே நடைபெறும் இந்தப் பிரச்னையில் ஏன் முஸ்லிம்கள் தங்களுக்குள் பிளவுபட்டு அடித்துக் கொள்ள வேண்டும்ää தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்ள வேண்டும்? வழமையாக நடைபெறும் அரபுக்களின் பழக்கத்தின் அடிப்படையில் நம்முடைய பிரச்னையைத் தீர்த்துக் கொள்வோம்ää அதாவது நாம் இருவர் மட்டும் நேருக்கு நேர் யுத்தம் செய்வோம். நம் இருவருக்குமிடையில் நடைபெறும் அந்த மோதலில் யார் ஜெயிக்கின்றார்களோää அவர்கள் கலிஃபாவாக - ஆட்சித்தலைவராக இருந்து கொள்வோம் என்ற யோசனையை முன்வைத்தார்கள் அலி (ரலி) அவர்கள்.

அலி (ரலி) அவர்களின் இந்த யோசனையை நீங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என்று முஆவியா (ரலி) அவர்களுக்கு அறிவுரை கூறினார் அம்ருப்னுல் ஆஸ் (ரலி).

அலி (ரலி) அவர்கள் இப்படிப்பட்ட எத்தனையோ நேரடி யுத்தங்களைக் கண்டிருக்கின்றார்ää அவ்வாறு நடைபெற்ற அத்தனை யுத்தங்களிலும் அவரை எதிர்;த்தவர்களே உயிரை விட்டிருக்கின்றார்கள் என்று கருதிய முஆவியா (ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கு தயக்கம் காட்டினார்கள்.

அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களோ..ää இது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கின்ற வழக்கம் தானே என்றார்.

இடைப்பட்ட நாட்களில் அலி (ரலி) அவர்கள் சற்று பெருத்து விட்டிருந்தார்ää சற்று அவரைப் போக்குக் காட்டினாலே அவர் தனது சுயநிலையை இழந்து தடுமாறி விடுவார்ää அவ்வாறு சுயநிலையை இழந்து தடுமாறும் பொழுது அவரை மிகைத்து விடக் கூடிய சந்தர்ப்பம் உண்டு.

ஆனால்ää இதிலெல்லாம் சந்தர்ப்பத்தை எப்பொழுதும் எதிர்பார்க்க முடியாது என்று கருதி அலி (ரலி) அவர்களின் கோரிக்கையை முஆவியா (ரலி) அவர்கள் தள்ளுபடி செய்து விட்;டார்கள்.

இதன் பின்னர்ää அமைதிக்கான அனைத்து கதவுகளும் சாத்தப்பட்டு விட்டனää இரு தரப்பாரும் போர் செய்வதற்குண்டான அனைத்துத் தயாரிப்புகளிலும் இறங்க ஆரம்பித்து விட்டார்கள்.சிப்பின் யுத்தம்

புனிதமிக்க முஹர்ரம் மாதம் முடிவுக்கு வந்திருந்த வேளையில்ää யுத்தத்தை நிறுத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளும் கைநழுவிப் போயிருந்ததுää இரு பக்கமும் எப்பொழுது தீப்பொறி பறக்கும் என்ற நிலைதான் உருவாகி இருந்தது. இருப்பினும்ää முழு யுத்தமும் தவிர்க்கப்பட முடியா விட்டாலும்ää இருவருக்குமிடையில் இருக்கும் பகையுணர்வைச் சற்று மங்கச் செய்து விட முடியுமா என்று எதிர்பார்ப்புக்கு மேல் எதிர்ப்பார்ப்பு நிலவியதுää அமைதி திரும்பி வரும் என்ற நம்பிக்கையை மக்கள் இன்னும் இழந்து விடவில்லை. இருதரப்பிலிருந்தும் ஒரு குழுவினர் அன்றைய பகல் பொழுதினில் சண்டையிடுவர்ää அன்றைய மாலை மங்கிய நேரத்தில் மீண்டும் தங்களது இருப்பிடத்திற்கு வந்து விடுவர். மறுநாள் இன்னொரு குழு சென்று சண்டையிட்டு வரும்ää மறுநாள் வேறொரு குழு சென்று சண்டையிடும் என்ற அடிப்படையில் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்த நிலையிலான போர் ஒரு வார காலம் நீடித்தது. இரண்டு பக்கமும் உயிர்சேதங்கள் ஏற்பட்டனää ஆனால் போரில் ஏற்படக் கூடிய மிகப் பெரிய அழிவு இந்த வகைப் போரில் ஏற்படவில்லை. ஒருவார கால பொறுமைக்குப் பிறகுää இரண்டு தரப்பும் வெறுப்பின் எல்லைக்குச் சென்றவர்களாகää முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பித்து விட்டார்கள்.

முக்கியமான போர்

போரின் முக்கியமான நாள்ää ஹிஜ்ரி 37ää ஸஃபர் மாதம் 8 ம் நாள் ஆரம்பமாகியது. அன்றைய தினம் அலி (ரலி) அவர்களின் படையணியினர் ஒரு அடி முன்வைத்துää முஆவியா (ரலி) அவர்களின் படையை நோக்கி..ää சத்தியத்தை ஏற்றுக் கொண்டு அலி (ரலி) அவர்களின் ஆட்சியை ஏற்றுக் கொள்ளும்படி உரத்து முழங்கினார்கள். இப்பொழுதுää அந்தப் பகுதியிலிருந்துää நாங்கள் உதுமான் (ரலி) அவர்கள் படுகொலைக்கு பழிவாங்குவதற்காகவே வந்துள்ளோம் என்று முழங்கினார்கள். உண்மையில் நீங்கள் சத்தியத்தின் அடிப்படையில் செயல்படுபவர்களாக இருந்தால்ää அந்தப் படுகொலையில் ஈடுபட்டவர்களை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்றும் முழங்கினார்கள். இரண்டு தரப்பின் முழக்கத்திற்கும் எந்தவித பிரயோஜனமும் இல்லாது போய் விட்ட நிலையில்ää போரை ஆரம்பிப்பதற்குண்டான முழு அளவு தயாரிப்புகளையும்ää உஷார் நிலையையும் மேற்கொண்டார்கள்.

அலி (ரலி) அவர்களின் படையினர் மூன்று பிரிவுகளாக எப்பொழுதும் நடைபெறும் யுக்தியைப் பின்பற்றி பிரிக்கப்பட்டார்கள். வலது அணிää இடது அணி மற்றும் மத்திய அணி என்று அவர்கள் பிரிக்கப்பட்டார்கள். மத்திய அணிக்கு அலி (ரலி) அவர்கள் தலைமை தாங்கää அந்த அணியில் மதினாவைச் சேர்ந்தவர்களே முக்கியமாக இடம் பெற்றிருந்தார்கள். இன்னொரு அணி கூஃபா மக்களையும்ää மற்றொரு அணி பஷரா மக்களையும் கொண்டதாக இருந்தது. கூஃபாவின் குதிரைப் படைக்கு மாலிக் பின் அஸ்தர் அவர்களும்ää காலாட் படைக்கு உமர் பின் யாஸிர் அவர்களும் தலைமை தாங்கினார்கள். பஷராவின் குதிரைப்படைக்கு ஸஹ்ல் பின் ஹனீஃப் என்பவரும்ää காலட் படைக்கு கைஸ் பின் ஸஅத் அவர்களும் தலைமை தாங்கினார்கள்.

போர் துவங்குவதற்கு முன்னர் அலி (ரலி) அவர்கள் தன்னுடைய படையினரிடம் உரையாற்றினார். அந்த உரையில்ää நாம் அல்லாஹ்வின் உவப்பைப் பெறுவதற்காகவே போர் செய்கின்றோம்ää சத்தியத்தை நிலைநாட்டவே இந்தப் போரில் நாம் ஈடுபட்டுள்ளோம். இந்தப் போரில் நீங்கள் உங்களது வீரத்தை வெளிப்படுத்துங்கள். நீங்கள் உயிரோடு இருப்பீர்களென்றால் தலைமைத்துவம் உங்களுக்குää மரணத்தைத் தழுவுவீர்கள் என்றால் சுவனமே உங்களுக்காகக் காத்திருக்கின்றது. இன்னும் நீங்களாக உங்களது அம்பை முதலில் எறியாதீர்கள். நம்முடைய எதிரிகளே அதனைத் துவங்கி வைக்கட்டும்ää ஆனால் போர் என்று துவங்கி விட்டால் எதிரிகள் வெற்றி கொள்ளப்படும் வரையிலும் நீங்கள் ஓய்வெடுக்கக் கூடாது என்றார். ஆண்களாகிய நீங்கள் புறமுதுகு காட்டி ஓடக் கூடாது. நீங்கள் ஒரு வரலாற்று நாயகர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். காயம்பட்ட எந்த மனிதரையும் நீங்கள் தாக்காதீர்கள்ää இறந்த மனிதனின் அங்கத்தைச் சிதைக்காதீர்கள்ää பெண்களைத் தீண்டு விடாதீர்கள்ää குழந்தைகளையும்ää வயதானவர்களை கொன்று விடாதீர்கள். அவர்களை அச்சத்திற்குள்ளாக்கி விடாதீர்கள். நீங்கள் நேர்மையான முறையில் நடந்து கொள்ளுங்கள்ää குறைவாகப் பேசுங்கள்ää இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

யுத்தம் துவங்க இருக்கின்றதுää அன்றைய கால அரபுக்களின் வழக்கப்படி தனி மனிதர்கள் மோதும் களம் தயாராகியது. அலி (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களை தன்னுடன் மோத வருமாறு அழைத்தார்கள். முஆவியா (ரலி) அவர்களோ..ää அலி (ரலி) அவர்களுடன் மோத விருப்பம் தெரிவிக்கவில்லை. மாலிக் பின் அஸ்தர்ää அலி (ரலி) அவர்களின் தலைமைத் தளபதி ஒரு அடி முன்வந்து அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களை தன்னுடன் மோத வருமாறு அழைத்தார்கள்ää அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களும் அந்த சவாலை ஏற்க மறுத்து விட்டார்கள்.

யுத்தக் களம்

முஆவியா (ரலி) மற்றும் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களுக்கு விடப்பட்ட சவால்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையாதலால் தனிப்பட்ட நபர்கள் மோதும் களம் கைவிடப்பட்டதுää முழு படையினர்களும் மோதும் யுத்தம் ஆரம்பமாகியது. இரு தரப்பினரும் முழு நாளும் மோதியும் யாருக்கும் வெற்றி கிடைக்காமல்ää போர் அன்றைய தினம் மாலையில் நிறுத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாள் மாபெரும் எழுச்சியுடன் மக்கள் களம் இறங்கினார்கள். அலி (ரலி) அவர்களின் மத்திய படையைச் சுற்றிலும்ää மதீனாவைச் சேர்ந்த முஸ்லிம்கள் இருந்தார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பரணமைத்துக் கொண்டு அதன் மீது அமர்ந்து கொண்டு போர் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டார்ää அவரைச் சுற்றிலும் மெய்க்காப்பாளர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் ஒரு குதிரையின் மீதமர்ந்து கொண்டு மிகவும் உக்கிரமமாகப் போர் செய்து கொண்டிருந்தார்ää இன்னும் அலி (ரலி) அவர்களின் படைகளை கடுமையாகத் தாக்கிப் பின்வாங்கச் செய்து கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களுக்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தினார்கள். அலி (ரலி) அவர்களும் அவரது மத்தியப் படை வீரர்களும் மிகவும் வீரமாகப் போர் செய்துää அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களது படையை பின்வாங்கச் செய்தார்கள். அலி (ரலி) அவர்களின் படைத்தளபதி மாலிக் பின் அஸ்தர் அவர்கள் இப்பொழுது முஆவியா (ரலி) அவர்கள் இருக்கும் பகுதியை நோக்கி தனது தாக்குதலை ஆரம்பித்தார்கள். பரணில் அமர்ந்து போர்க்களக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த முஆவியா (ரலி) அவர்களைச் சுற்றிலும் இருந்த அவரது பாதுகாப்பாளர்கள் ஒருவர் பின் ஒருவராக மாய்க்கப்பட்;ட பின்ää முஆவியா (ரலி) அவர்கள் போர்க்களத்தில் நேரடியாகப் பங்கு பெற ஆரம்பித்தார்கள். இப்பொழுது அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களின் உதவிக்கு விரைந்தார்கள்ää இன்னும் தைரியத்தை இழந்து விட வேண்டாம் என்றும் புத்திமதி கூறினார்கள். அவர் கூறினார்ää 'இன்றைக்கு வீரத்துடன் இருää நாளை வெற்றி உமதே" என்றார். அவரது அந்த சமயோசித புத்திமதியின் காரணமாக மன எழுச்சி அடைந்த முஆவியா (ரலி) அவர்களும் அவர்களது படையினரும் மிகவும் எழுச்சியுடன் போர் செய்ய ஆரம்பித்தார்கள்ää இரு படைகளும் இப்பொழுது சமமான அளவில் வீரத்துடன் போர் செய்து கொண்டிருந்தார்கள். இரு பக்கமும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டிருந்தன.

மூன்றாவது நாள் யுத்தமும்ää மிகவும் உக்கிரத்துடன் ஆரம்பமாகியது. சிரியாவிலிருந்து வந்த படைகள் அலி (ரலி) அவர்களது படையை மிகவும் உக்கிரமாகத் தாக்கினாலும்ää அவர்களை மாலிக் பின் அஸ்தர் அவர்கள் எதிர்த்துப் போராடி பின்னுக்குத் தள்ளினார். அதன் பின்னர் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களின் உதவிக்கு வந்தார்கள்ää முஆவியா (ரலி) அவர்களது படையை துவம்சம் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் எதிரிகளை ஊடறுத்துக் கொண்டு எதிரிகளுக்கு மத்தியில் சென்று விட்டார். எதிரிகளைக் கடுமையாகத் தாக்கியவாறே போரிட்டுக் கொண்டிருந்த அம்மார் (ரலி) அவர்கள்ää கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் இறையடி சேர்ந்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வாய்த்த தோழர்களில் மிகவும் போற்றுதற்குரியவராக அம்மார் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலப் பகுதியில் அம்மார் (ரலி) அவர்கள் கூஃபாவின் கவர்னராக நியமிக்கப்பட்டார்கள். அதன் பின்னர் உதுமான் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபின்னர்ää உதுமான் (ரலி) அவர்களுக்கும் அம்மார் (ரலி) அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அலி (ரலி) அவர்கள் ஆட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர்ää அலி (ரலி) அவர்களின் ஆதரவாளராக அம்மார் (ரலி) அவர்கள் செயல்பட ஆரம்பித்தார்கள். ஒட்டகப் போரில் அலி (ரலி) அவர்களின் அணியில் இருந்து அம்மார் (ரலி) அவர்கள் போர் செய்திருக்கின்றார்கள். அம்மார் (ரலி) அவர்கள் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முன்னறிவிப்பைச் செய்திருக்கின்றார்கள்ää அதாவது ஒரு இறையச்சமற்ற கூட்டத்தாரால் அம்மார் (ரலி) அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று கூறியிருக்கின்றார்கள். அதன்படிää அம்மார் (ரலி) அவர்கள் தனது 90 வது வயதில் இறைவழியில் உயிர்நீத்தார்கள். அம்மார் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டதும்ää இன்னும் அவரைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பையும் நினைவிற்குக் கொண்டு வந்த முஸ்லிம்களின் மனதுää இப்பொழுது தடுமாற ஆரம்பித்தது. அம்மார் (ரலி) அவர்கள் மிகவும் வயதாகி விட்டிருந்தும் கூடää அவரை போருக்கு அழைத்து வந்ததன் மூலம் அலி (ரலி) அவர்கள் தான் அவர் கொல்லப்படுவதற்குக் காரணமாகி விட்டார் என்று தனது படையினரிடம் கூறிää அவர்களது உள்ளத்தைத் திடப்படுத்தினார் முஆவியா (ரலி) அவர்கள். அம்மார் (ரலி) அவர்களை இழந்ததுää அலி (ரலி) அவர்களுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியதுääஅவரது வலது கையே வீழ்ந்தது போல உணர்ந்தார் அலி (ரலி) அவர்கள்.

அதற்கு அடுத்த நாள் போரில் மிகப் பெரிய மனித இழப்புகள் ஏற்பட்டன. அன்றைய தினப் போரில் முஆவியா (ரலி) அவர்களின் தரப்பு மிகவும் பலவீனமாகி விட்டது. அம்புகளின் இருப்பு குறைந்து விட்;டதுää அதனால் கல்லை எடுத்து அலி (ரலி) அவர்களின் தரப்பை நோக்கி எறிய ஆரம்பித்தார்கள். அதனை அடுத்து கம்புகளையும்ää தடிகளையும் எடுத்து எறிய ஆரம்பித்தார்கள். இறுதியாக அலி (ரலி)அவர்களின் வாளுக்கு இரையாகிப் போனார்கள். போர் இரவிலும் நீண்டு தொடர்ந்தது. அன்றைய தினப் போரில் அலி (ரலி) அவர்கள் மிகவும் தீரத்துடன் போரிட்டார்கள். மலை போல உறுதியாக நின்றார்கள்ää சிரியப் படைகளைக் கடுமையாகத் தாக்கிய அலி (ரலி) அவர்களின் இரு பக்கமும் தீட்டப்பட்ட வாளுக்கு கிட்டத்தட்ட 500 பேர் இரையாகிப் போனதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

முஆவியா (ரலி) அவர்களின் தந்திரம்

இதுவரை நடந்த போர்களில் அலி (ரலி) அவர்களின் கரமே ஓங்கி இருந்ததுää இன்னும் இறுதியாக சிரியப் படைகள் முற்றாக சிதைந்து போகக் கூடிய நிலை தோன்றியது. தாங்கள் தோற்கடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக இப்பொழுது சிரியாவினர் ஒரு தந்திரத்தில் இறங்கினார்கள். மறுநாள் போர் ஆரம்பிக்கும் பொழுதுää முஆவியா (ரலி) அவர்களின் படையில் இருந்த அனைவரும் குர்ஆனின் பிரதிகளைத் தொங்க விட்டவர்களாகää இவ்வாறு முழங்க ஆரம்பித்தார்கள். ஓ ஈராக் வாசிகளே..! நீங்கள் எங்களைக் கொன்று போட்டால் எங்களது குடும்பத்தவர்களின் கதி என்ன ஆகும்..ää அதேபோன்று நாங்கள் உங்களைக் கொன்று போட்டால் உங்களது மனைவிää மக்களின் நிலை என்னவாகும். இந்த துக்ககரமான போரை நாம் நிறுத்திக் கொள்வோம்ää திருமறையின் வழியாக நம்முடைய பிரச்னையைத் தீர்த்துக் கொள்வோம்" என்று முழங்கினார்கள்.

சிரியப் படையினர் முழங்கிய முழக்கத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே ஈராக்வாசிகள் தங்களது ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டனர்ää அத்துடன்..ää சரி.. அவ்வாறே திருமறையின் மூலம் நம்முடைய பிரச்னையைத் தீர்த்துக் கொள்வோம்" என்று பதிலுக்கு கூவ ஆரம்பித்தார்கள்.

இந்த சூழ்நிலையின் மாற்றத்தை உணர்ந்து கொண்ட அலி (ரலி)அவர்கள் இது முஆவியா (ரலி) அவர்களின் தந்திரமான வேலைää போரின் தோல்வியைத் தவிர்ப்பதற்காக அவர் செய்திருக்கும் யுக்தி என்று கூறினார். இந்த தந்திரமான வலைப் பின்னலில் சிக்கி விட வேண்டாம்ää போரைத் தொடர்ந்து நடத்திää இறுதி வெற்றி காண்போம் என்று தனது ஆதரவாளர்களைப் பார்த்துக் கூறினார்கள். அலி (ரலி) அவர்களின் இந்த அறிவுரைää ஈராக் வாசிகளைக் கவரவில்லை. நாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகவே போராடுகின்றோம் எனில்ää அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று அவர்கள் முன்வரும் பொழுதுää அதனை நாம் எவ்வாறு உதாசினம் செய்ய முடியும் என்று அந்தத் தோழர்கள் அலி (ரலி) அவர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்கள். நீங்கள் சொல்வது சரிதான்ää ஆனால் இந்த உலகமே இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவன் நான்ää இன்னும் முஆவியா (ரலி) அவர்களோ அவரது தோழர்களோ இஸ்லாத்தைப் பற்றியும்ää குர்ஆனின் போதனைகள் பற்றியும் முழுதாக அறிந்தவர்கள் அல்ல என்பதையும் இத்துடன் நானறிவேன் என்றார்கள். தங்களது சுய லாபத்திற்காக அவர்கள் குர்ஆனைப் பயன்படுத்துகின்றார்கள்ää அவர்கள் அவர்களது நோக்கத்தில் விரக்தி அடைந்து விட்டார்கள். நாம் வெற்றி பெறும் வரைக்கும் போரிட வேண்டியது அவசியம் என்று தனது தோழர்களுக்குக் கூறினார்கள்.

அலி (ரலி) படையில் கிளர்ச்சி

அலி (ரலி) அவர்களின் புத்திமதியினால் எந்தவித பிரயோஜனமும் ஏற்படவில்லை. ஈராக்கைச் சேர்ந்த ஸைத் பின் ஹஸன் என்பவர் மற்றும் முஸ்தர் பின் பித்கி என்பவரது தலைமையில் இயங்கிய கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் கொண்ட படையானது அலி (ரலி) அவர்களுக்கு எதிராக வெளிப்படையாகக் கிளர்ச்சி செய்ததுää தங்களது ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டார்கள். கிளர்ச்சியாளர்கள் அலி (ரலி) அவர்களை அண்மித்துää கலிஃபா அலி என்று அழைப்பதற்குப் பதிலாக வெறுமனே அலி என்று அழைத்துää நீங்கள் இனி எங்களது ஆட்சித் தலைவர் அல்ல என்றார்கள். அத்துடன்ää அலியே..! நீங்கள் வாளுடன் பேசுவோம் வாருங்கள் என்கிறீர்கள்ää அவர்களோ குர்ஆனுடன் பேசுவோம் வாருங்கள் என்கிறார்கள். ஒரு கலிபாவாக..ää ஆட்சித் தலைவராக இருந்து கொண்டு நீங்கள் குர்ஆனை விட்டு விலகி ஓடுவது நல்லதா.. என்றார்கள். இன்னும் அவர்கள் அலி (ரலி) அவர்களை எச்சரிக்கும் தொணியில்ää எதிரிகளைப் போலப் பேச ஆரம்பித்தார்கள்..ää அலியே..! நீங்கள் எங்களது கோரிக்கைக்குச் செவியேற்கவில்லை என்றால்..ää உங்களுக்கு முன் ஆட்சி செய்தவருக்கு..ää உதுமானுக்கு என்ன நேர்ந்ததோ அதுவே உங்களுக்கும் நேர்ந்து விடலாம் என்றார்கள்.

இவர்களின் மிரட்டல் தொணியைக் கேட்ட மாத்திரத்தில் அலி (ரலி) அவர்களது இதயமே வெடித்து விடும் போலிருந்ததுää இன்னும் ஆச்சரியத்தில் உறைந்து போனவராகää என்ன கொடுமை இது..ää இந்த இக்கட்டானதொரு சூழ்நிலையில் என்னைக் கைகழுவி விட்டுச் செல்கின்றிர்களே..ää இது நியாயமா..! என்றார்கள். ம்.. அந்த சிரியப் படையினருடன் சேர்ந்து கொண்டு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் விரோதமாகச் செயல்படுங்கள் என்றார்கள். ஆனால் அந்தக் கிளர்ச்சிக் காரர்களோää தங்களது நடவடிக்கையிலிருந்து சற்றும் விலகுவதாக இல்லை. இன்னும் மிகப் பெரிய படை ஒன்று அஸ்தர் அவர்களது தலைமையில் நின்று கொண்டு மிக உக்கிரமாகப் போர் செய்து கொண்டிருந்ததுääஇன்னும் அவர்களது கை ஓங்கியும் இருந்தது. இப்பொழுதுää அந்தக் கிளர்ச்சிக் காரர்கள்ää அஸ்தர் ன் படைகளை வாபஸ் பெற்று அவர்களை திரும்பி வருமாறு உத்தரவிடுமாறு அலி (ரலி) அவர்களைக் கேட்டார்கள். இப்பொழுது அலி (ரலி) அவர்களை கிளர்ச்சிக்காரர்கள் கடுமையாகச் சாட ஆரம்பித்தார்கள். உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கின்றது என்றார்கள். சிரிய மக்களுக்கு எதிரான போரே உங்களது சுயநலத்தின் கீழ் விளைந்தது தானே என்றும் கூறினார்கள்.

அலி (ரலி) அவர்களோ..ää 'உங்களது இந்த கிளர்ச்சியைக் கைவிடவில்லை என்றால் மிகப் பெரிய விளைவைச் சந்திக்க நேரும்" கிளர்ச்சியாளர்களைப் பார்த்து எச்சரித்தார்கள். பதிலுக்கு கிளர்ச்சியாளர்களும் அலி (ரலி) அவர்களை எச்சரிக்க ஆரம்பித்தார்கள். இறுதியில் கிளர்ச்சியாளர்களின் பிடிவாதம் இறுக ஆரம்பித்தவுடன்ää வேறு வழியின்றி அஸ்தர் அவர்களின் தலைமையில் இயங்கிய படையை வாபஸ் பெற்று வருமாறு உத்தரவிட்டார்கள் அலி (ரலி) அவர்கள். வேண்டா வெறுப்பாக அஸ்தர் அவர்கள் திரும்பி வரää கிளர்ச்சியாளர்களுக்கும்ää அவர்களுக்கும் இடையே சூடான வார்த்தைப் பறிமாற்றங்கள் ஆரம்பமாகின.

கோபடைந்த அஸ்தர் கிளர்ச்சியாளர்களை நோக்கிää நீங்கள் வேஷதாரிகள்ää கபட எண்ணம் கொண்டவர்கள்ää இன்னும் எதிரிகள் என்று கர்ஜித்தார்கள். அவர்களும் பதிலுக்கு கத்த ஆரம்பித்தார்கள். தனது படைக்குள்ளே கிளர்ச்சியாளர்களின் கை ஓங்க ஆரம்பித்ததுடன்ää வெற்றி கைக்கு எட்டிய தூரத்தில் இருந்தும் அலி (ரலி) அவர்கள் போரை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்;டார். அப்போதிலிருந்து துரதிருஷ்டமானது அலி (ரலி) அவர்களை நோக்கி மிக விரைவாகவே வர ஆரம்பித்தது.பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள்

குர்ஆனின் பக்கங்களை காட்டியதன் பின்னணியும்ää முக்கியத்துவமும்

எப்பொழுது அலி (ரலி) அவர்களுக்கு எதிராக அவரது தோழர்களே கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தார்களோ அப்பொழுதிலிருந்து அலி (ரலி) அவர்களால் சுயமாகச் செயல்பட இயலவில்லைää மாறாகää அந்தக் கிளர்ச்சியாளர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். கிளர்ச்சியாளர்கள் தங்களது தலைவரான அஷாஸ் பின் கைஸ் அவர்களை முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்துää சிரியாக்காரர்கள் குர்ஆன் பிரதியைக் காட்டியதன் காரணம் என்ன என்பதை அறிந்து வருவதற்காக அனுப்பி வைக்குமாறு கோரினார்கள்.

அவ்வாறே அனுப்பி வைக்கப்பட்டார் கைஸ். முஆவியா (ரலி) அவர்களிடம் இது பற்றி அவர் வினவிய பொழுதுää ஆம்..ää ஆயுத முனையில் நாம் தீர்வு பெறுவதைக் காட்டிலும்ää திருமறையின் விளக்கத்தின் மூலம் இரு குழுக்களும் தங்களது பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளலாம்" என்பதே அதன் அர்த்தமாகும் என்று முஆவியா (ரலி) அவர்கள் அதற்கு விளக்கமளித்தார்கள். இப்பொழுதிலிருந்து இரு தரப்பாரும் போரிலிருந்து விலகி விடுவது. நம் இருவருக்கும் இடையே பேசி நியாயம் வழங்குவதற்காக இருநீதிபதிகளை நியமிப்போம். அந்த நீதிபதிகளில் ஒருவர் எங்களிலிருந்தும்ää ஒருவர் உங்களிலிருந்தும் வரட்டும். இரண்டு பேர்களும் அமர்ந்து திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் அதிகாரம் யார் கைக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கட்டும். நீதிபதிகளின் முடிவுக்கு நாம் அனைவரும் கட்டுப்பட வேண்டும். இந்த முடிவுக்கு அலி (ரலி) அவர்களின் சம்மதத்தைப் பெறாமலேயேää சரி அவ்வாறே நடக்கட்டும் என்று அஷாஸ் அவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டு வந்து விடுகின்றார்கள். அலி (ரலி) அவர்களின் நிலையோää இனி அந்த முடிவை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாத நிலை உருவாகி விட்டது. இங்கு நடப்பது அதிகாரம் யார் கைக்கு மாறுவது என்பதைப் பற்றி அல்ல என்ற தனது நிலைப்பாட்டில் அலி (ரலி) அவர்கள் உறுதியாக இருந்தார்கள். நான் முறையாகத் தேர்வு செய்யப்பட்டதொரு ஆட்சியாளன்ää ஆட்சியினை நடத்துவதற்கு அதிகாரம் பெற்றவன்ää என்னுடைய அதிகாரத்தை இரு தரப்பு நியாயத்தைப் பேசுவது போலப் பேசி அதனை மாற்ற இயலாதது. அலி (ரலி) அவர்கள் என்னதான் விளக்கமளித்தாலும் அதனைக் கேட்கும் நிலையில் அந்தக் கிளர்ச்சியாளர்கள் இல்லை. எந்தவித உதவியுமற்ற நிலையில் அலி (ரலி) அவர்கள் கிளர்ச்சியாளர்களைப் பார்த்துää ''நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பதை நீங்கள் கேட்பதற்குத் தயராக இல்லாத பட்சத்தில்ää நீங்கள் எதை விரும்புகின்றீர்களோ அதனைச் செய்து கொள்ளுங்கள்"" என்று கூறி விட்டார்.

அஷாஸ் பின் கைஸ்

முஆவியா (ரலி) அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட இந்த அஷாஸ் பின் கைஸ் என்பவர் பனூ கிந்தி எனும் கோத்திரத்தைச் சேர்ந்தவர். இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தவுடன்ää இஸ்லாத்தை விட்டு வெளியேறி கிளர்ச்சி செய்தவர். இந்தக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அபுபக்கர் (ரலி) அவர்களது காலத்தில் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்டவர். பின்னர்ää அவர் மதீனாவிற்கு வந்து மன்னிப்புக் கோரி பின்னர்ää மீண்டும் இஸ்லாத்திற்குள் நுழைந்தவர். உமர் (ரலி) அவர்களின் காலத்தில் பாரசீகர்களுக்கு எதிராக நடந்த போரில் கலந்து கொண்டார். இருப்பினும் உமர் (ரலி) அவர்கள் இவரை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்கவில்லை. உதுமான் (ரலி) அவர்கள் தான் இவரை ஒரு பகுதிக்கு கவர்னராக நியமித்தார்கள். அலி (ரலி) அவர்கள் இவரை பதவியிலிருந்து கீழிறக்கினார்கள். கூஃபாவிற்கு வந்த இவர்ää அலி (ரலி) அவர்களிடம் வாக்குப் பிரமாணம் செய்து கொண்டார். சிப்பீனை நோக்கிச் சென்ற படைக்கு இவரை அலி (ரலி) அவர்கள் தளபதியாக்கினார்கள்ää இன்னும் தண்ணீருக்காக நடந்த யுத்தத்தில் இவர் சிறந்த பங்காற்றினார்ää சிரியா படைகள் பின்வாங்குவதற்குக் காரணமாக அமைந்தார். ஆரம்பத்தில் அலி (ரலி) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராகத் தன்னைக் காட்டிக் கொண்ட இவர்ää பின்னர் மனது மாறி அலி (ரலி) அவர்கள் மீது தனக்கிருந்த நெருக்கத்தை விட்டும் விலக ஆரம்பித்தார். முஆவியா (ரலி) அவர்களின் ஆட்கள் குர்ஆனின் பிரதிகளை காண்பிப்பதற்கு முன்பாகவே அஷாஸ் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார். அந்த முடிவினை தனது கிந்தா கோத்திரத்தார்களிடம் இவ்வாறு தெரிவிக்கவும் செய்தார். ஓ என்னருமை முஸ்லிம்களே..! இந்த போரில் என்னென்ன நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு நீங்கள் சாட்சியங்களாக இருக்கின்றீர்கள்ää எத்தனை முஸ்லிம்கள் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். நானோ வயதாளியாகி விட்டேன்ää ஆனால் இப்படிப்பட்ட கொடூரமான நிகழ்வுகளை நான் எனது வாழ்நாளில் பார்த்ததே கிடையாது. நான் சொல்வதை யார் யாரெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்களோää அவர்கள் அதனைக் கேட்காதவர்களுக்கு எத்தி வைத்து விடுங்கள். இறைவன் மீது சத்தியமாக..ää அதாவது இதற்கு ஒரு முடிவு வர வேண்டுமென்றல்ää இன்றிலிருந்து நாம் போர் செய்யப் போவதில்லைää முஸ்லிம்களைக் கொலை செய்வதிலிருந்து நாம் விலகியே நிற்போம். இறைவன் மீது சத்தியமாக..! போருக்கு பயந்தோ அல்லது கபட எண்ணத்தை என் மனதில் மறைத்து வைத்துக் கொண்டோ நான் இதனை உங்களுக்குச் சொல்லவில்லை. இதனை உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய காரணம் என்னவென்றால்ää முஸ்லிம் பெண்கள்ää குழந்தைகள் மற்றும் அவர்கள் அடையப் போகும் இன்னல்கள் குறித்தும்ää இந்தப் போரில் தங்களது இளவல்களை இழந்து அவர்கள் துன்பமடைவதைப் போவதையும் இட்டுத் தான் நான் இவ்வாறு கூறுகின்றேன் என்று கூறி உரையை முடித்தார்.

இது ஒரு வெளிப்படையான சூழ்ச்சியே. இந்த சூழ்ச்சிகரமான பண்பு அவரது இரத்தில் ஓடக் கூடியது. இவர் தனது மகளை இமாம் ஹஸன் அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார். யஸீத் உடைய ஆசை வார்த்தை காரணமாக இமாம் ஹஸன் அவர்களுடைய உணவில் விஷத்தைக் கலந்து வைத்தார்ää அதாவது இமாம் ஹஸன் அவர்களுக்கு விஷத்தை கலந்து கொடுத்தால் அதற்குப் பிரதியீடாக இவரை மணந்து கொள்வதாக யஸீத் வாக்களித்திருந்தார். இமாம் ஹஸன் அவர்களுக்கு விஷமும் வைக்கப்பட்டது. ஆனால்ää தனது கணவனுக்கு விஷம் வைத்ததொரு பெண்ணை எவ்வாறு தான் நம்பி வாழ இயலும் என்று கூறிää தனது வாக்குறுதியை மறுத்து விட்ட யஸீத்ää அஷாஸின் மகளை மணக்கச் சம்மதிக்கவில்லை.

அலி (ரலி) உதவியின்றிப் போனதன் பின் விளைவுகள்

சிப்பீன் யுத்தம் எவரும் நினைத்திராத மாத்திரத்தில் முடிவுக்கு வந்ததும்ää கிளர்ச்சியாளர்கள் அலி (ரலி) அவர்களுக்கு எதிராக கிடைக்க இருந்த வெற்றி பறிபோனதைத் தவிரää அவர்கள் ஏன் அவருக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கினார்கள் என்பதற்கான யூகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. குர்ஆனினுடைய பிரதிநிதிகளை அவர்கள் எதிர்முகாமில் இருந்து பார்த்தவுடன்ää உடனே போர்க்களக் காட்சிகள் மாற ஆரம்பித்து விட்டன. ஏன் அவ்வாறு திடீரென்று சூழ்நிலை மாறியது என்பது குறித்து இன்னும் மர்மமாகவே இருக்கின்றது. ஆனால்ää அலி (ரலி) அவர்களின் படையில் இருந்த பல முக்கியமான தளபதிகள் முஆவியா (ரலி) அவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு அடிபணிந்து விட்டார்கள் என்றே தோன்றுகின்றது. அலி (ரலி) அவர்கள் திரட்டி வந்த படை எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததே தவிரää ஒழுக்கத்தில் அவர்கள் பலவீனர்களாகத் தான் இருந்தார்கள்ää ஒழுக்கத்தின் வீழ்ச்சியே அலி (ரலி) அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது. இன்னும் அலி (ரலி) அவர்களின் படையில் இருந்த படைத் தளபதிகள் பொறாமை கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அலி(ரலி) அவர்கள் அஷாஸ் அவர்களை தலைமைத்தளபதியாக நியமித்தார்கள். இதனை மாலிக் பின் அஸ்தர் அவர்கள் எதிர்த்தார்கள். இந்த இரண்டு தளபதிகளுக்கும் இடையே ஏற்பட்ட பேதங்கள்ää போரின் பொழுதும் எதிரொலிக்க ஆரம்பித்தன. இன்னும் அலி (ரலி) அவர்கள் தான் சத்தியத்தில் இருந்து கொண்டிருக்கின்றேன் நம்பிக் கொண்டிருந்தார்களே தவிரää அதனை பிரச்சாரம் செய்துää தனக்கான ஆதரவுத் தளத்தை அவர்கள் உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் முஆவியா (ரலி) அவர்கள் இத்தகைய பிரச்சாரங்களில் ஆரம்ப காலத்திலிருந்தே கைதேர்ந்தவராக இருந்தார்ää இந்த வகையில் அலி (ரலி) அவர்களை விட முஆவியா (ரலி) அவர்கள் மிஞ்சியவர்களாக இருந்தார்கள்.

நடுவர்களின் ஒப்பந்தம்

நடுவர்கள் அமர்ந்து ஒப்பந்தத்தை எழுத முற்பட்ட பொழுதுää அதன் முதல் வரியிலேயே இரண்டு தரப்பினருக்கும் இடையே தர்க்கம் ஆரம்பமாகி விட்டது. அந்த ஒப்பந்தத்தில்ää அலி (ரலி) அவர்களை இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் என்று குறிப்பிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். அவரை நாங்கள் எங்களது கலீஃபாவாகவே நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனும் பொழுதுää அவரது பெயருக்கு முன்னால் எப்படி அவரது பட்டத்தை இணைக்க முடியும் என்று கேட்டனர். இன்னும் ஒரு படி மேலே சென்றார்கள்ää அலி (ரலி)அவர்களின் அணியில் இருந்த கிளர்ச்சிக்காரர்கள்ää அவர்கள் கூறினார்கள்..ää ஹ{தைபிய்யா உடன்படிக்கையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெயருக்கு முன்னால் இறைத்தூதர் என்று எழுதப்படவில்லை எனும் பொழுதுää இப்பொழுது மட்டும் அலி க்கு பொருந்தாமல் போனது ஏனோ? என்று அலி (ரலி) அவர்களுக்கு எதிராகக் கோஷமிட ஆரம்பித்தார்கள். அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பெயருக்கு முன்னால் இறைத்தூதர் என்று போடுவதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டார்களே என்றார்கள். பின்னர் ஒப்பந்தம் எழுதப்பட்டுää இரு குழுக்களுக்குமிடையே நிலவும் இந்தப் பிரச்னையை நடுவர்கள் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பர் என்று தீர்மானிக்கப்பட்டது.

நடுவர்கள் தங்களது தீர்ப்பை குர்ஆன் மூலமாக முதலில் வழங்க வேண்டும்ää இன்னும் குர்ஆனில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனின் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவின் நடைமுறையின் கீழ் அந்தத் தீர்ப்பை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இன்னும் நடுவர்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம் என்றும்ää வெளிவருகின்ற தீர்ப்பு எதுவாக இருப்பினும்ää அவர்களது உயிர்ää உடமைகள்ää குடும்பங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாத்தையும் வழங்கினார்கள். நடுவர்கள் தங்களது தீர்ப்பை வழங்குவதற்கு ஆறு மாத காலம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். கூஃபாவுக்கும்ää டமாஸ்கஸ{க்கும் இடையே ஒரு நடு நிலையான பகுதியில் வைத்துää அவர்கள் தங்களது தீர்ப்பை எழுதட்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். அதிகாரம் யாருடைய கைவசம் செல்ல வேண்டும் என்பதை அந்த நடுவர்கள் தீர்மானிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அப்பொழுதுää அலி (ரலி) அவர்களின் ஆதாரவாளர்கள் குறிக்கிட்டுää அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்பது இங்கு பிரச்னை அல்லவேää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்கான 'கஸஸ்" இரத்த இழப்பீடு கோருவது தானே பிரதான பிச்னை என்றார்கள். அதனை அலி (ரலி) அவர்களின் தரப்புக் கிளர்ச்சியாளர்கள் மறுத்துரைத்துää உண்மையான பிரச்னையே அலி க்கும் முஆவியாவுக்கும் இடையே யார் ஆட்சியாளராக இருப்பது தான். எப்பொழுது அதிகாரம் யாருடைய கையில் இருப்பது என்பதனைத் தீர்மானித்து விட்டோமோää அப்பொழுது உதுமான் (ரலி) அவர்கள் படுகொலைப் பிரச்னையில் அதற்கான 'கஸஸ்" ம் தீர்மானிக்கப்பட்டும்ää அந்தப் பிரச்னை அதுவாகவே முடிவுக்கு வந்து விடும் என்று கூற ஆரம்பித்தார்கள். நடுவர்கள் இப்பொழுது ஒப்பந்த தீர்மானத்தை நிறைவு செய்திருந்த பொழுதுää அந்தத் தீர்மான ஒப்பந்தம் அலி (ரலி) அவர்களுக்கு மரண ஒப்பந்தமே அன்றி வேரொன்றாக இருக்கப் போவதில்லை என்பதனை அப்பொழுதே அது உணர்த்தியது. அலி (ரலி) அவர்களுக்கு உதவி செய்ய யாருமின்றிää தனிமையில் விடப்பட்டவரானார். வரையப்படும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதைத் தவிர்த்து வேறு வழி ஏதும் அவருக்கு இருக்கவில்லை.

நடுவர்கள்

இப்பொழுது தீர்ப்பு செய்து ஒப்பந்தத்தை எழுதக் கூடிய நடுவர்களாக யாரை நியமிப்பது என்ற பிரச்னை எழுந்தது. அலி (ரலி) அவர்கள் யாரைக் கை காட்டுகின்றார்கள் என்று வினவப்பட்டது. அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்களை நான் வழிமொழிகின்றேன் என்றார்கள் அலி (ரலி) என்றார்கள். அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் உங்களது உறவினராக இருப்பதால்ää அவரை நீங்கள் எவ்வாறு நியமனம் செய்ய முடியும் என்று கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். பின்னர் மாலிக் பின் அஷ்தர் அவர்களை தனது தேர்வாக அலி (ரலி) அவர்கள் கூறிய பொழுதுää இந்தப் போரில் மாலிக் பின் அஷ்தர் அவர்கள் கலந்து கொண்டிருப்பதால்ää அவரிடம் நடுநிலையான தீர்ப்பை எதிர்பார்க்க முடியாது என்ற காரணத்தைக் கூறி விட்டுää அபூ மூஸா பின் அஷ்அரி (ரலி) அவர்களை நியமிக்குமாறு கிளர்ச்சியாளர்கள் கேட்டுக் கொண்டார்கள். முந்தைய கூஃபாவின் கவர்னராக இருந்த அவரை நான் பதவி நீக்கம் செய்திருக்கின்றேன்ää இன்னும் அவர் நடுநிலையான தீர்ப்பு வழங்குவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினார் அலி(ரலி) அவர்கள். அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் நடுநிலைக்குப் பெயர் போனவர்கள்ää அவரைத் தவிர வேறு யாரையும் நம்முடைய தரப்பு நீதிபதியாக நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறினார்கள். இறுதியாக அலி (ரலி) அவர்களுக்கு வேறு வழியின்றிப் போனதுää அலி (ரலி) அவர்கள் தனது தரப்பு நீதிபதியாக அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள்.

அடுத்த பக்கத்தில் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்கள். அவர் போரில் கலந்து கொண்டது மற்றும் பாரபட்சமாக நடந்து கொண்ட தன்மைகள் எதுவும் அவரைப் பொறுத்தவரை எவரும் கணக்கில் கொள்ளவில்லைää எந்தவித எதிர்ப்புமின்றி முஆவியா (ரலி) அவர்களின் தரப்பு நீதிபதியாக அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் ஆகி விட்டார்கள்.காரிஜிய்யாக்கள்

போர்க்களத்திலிருந்து திரும்புதல்

நடுவர்களின் தீர்ப்புக்கு முன்னால் இரண்டு தரப்பினரும் போர்க்களத்தை விட்டும் வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். நடுவர்கள் தீர்ப்பு அலி (ரலி) அவர்களின் மீது திணிக்கப்பட்டது என்றே கூற வேண்டும்ää கையறு நிலையிலிருந்து அலி (ரலி) அவர்கள் நடுவர்களின் தீர்ப்புக்குக் கட்டுபட்டு நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள். நடுவர்களின் வேண்டுகோளின்படி அவர் தன்னுடைய தரப்பினரை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி அறிவித்தார். அலி (ரலி) அவர்களும் மிகவும் கனத்த இதயத்துடன் சிப்பீன் யுத்தக் களத்தை விட்டும் வெளியேறினார். வெற்றி கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்தும் தனது கைக்குக் கிடைக்கவில்லையே என்று ஏக்கம் அவரது நெஞ்சை அடைத்தது. சொந்த குழுவினராலேயே தனது வெற்றி பறி போய் விட்டதே..! எனது முதுகில் குத்தி விட்டனரே என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டார். இரண்டு தரப்பிலும் ஏராளமான முஸ்லிம்கள் தங்களது உயிர்களைப் பறி கொடுத்து விட்டார்களே என்ற கவலை அவரை வாட்டியது. இன்னும் அம்மார் பின் யாஸர் (ரலி) போன்ற மிகச் சிறந்த தோழர்களையும் அல்லவா நான் இழந்து விட்டேன்ää அவரது வெற்றிடத்தை யாரால் தான் நிரப்ப முடியும். அதுமட்டுமா முஸ்லிம்களின் ஒற்றுமை பறிபோய் விட்;டதே.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து ஒரு நூற்றாண்டு கழிவதற்கு முன்பாகவேää முஸ்லிம்கள் தங்களது ஒழுக்க மேம்பாட்டை இழந்துää மீண்டும் அந்த அறியாமைக்கால வாழ்வுக்குத் திரும்பி விட்டார்களே..! இன்னும் சத்தியம் தோற்கடிக்கபட்டுää அசத்தியத்தின் கைகள் ஓங்கி விட்டனவே..! என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியதும்ää இன்னும் முஸ்லிம்கள் இப்படிப்பட்ட விகாரத்தில் சிக்க வைக்கப்பட்டு கடுஞ் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால்ää இறைவன் நம்மைச் சோதிக்க விரும்புகின்றான் என்றே தோன்றுகின்றது. இறைவனுடைய விதியின் அமைப்பை ஒப்புக் கொண்ட அலி (ரலி) அவர்கள் தனது தரையை நிலத்தில் வைத்து ஸ{ஜுது செய்துää இறைவா இந்தப் பிரச்னையில் எனக்கு பொறுமையை வழங்குவாயாக..! கஷ்டமான இந்தச் சூழ்நிலையில் அதனைச் சந்திப்பதற்கான மனதைரியத்தை வழங்குவாயாக..! என்று பிரார்த்தித்தார்கள்.

இப்பொழுது படைகள் குறுக்குப் பாதையாக யூப்ரடிஸ் நதிக்கரையில் வலது பக்கமாக திரும்ப ஆரம்பித்தன. சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக தீப்பொறியாகக் கிளம்பி வந்தவர்கள்ää இப்பொழுது தளர்ந்த நிலையில்ää ஏமாற்றத்தோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அமைதி ஒப்பந்தம் நிறைவேற ஆரம்பித்தவுடன்ää ஒருவர் மற்றவை குற்றப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள். இந்த நிலைக்கு நாமே காரணம் என்று ஒவ்வொருவரும் தன்னையே நொந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.

கூஃபாவிற்குத் திரும்பி வந்தாகி விட்டதுää எங்கு நோக்கினும் சோகமே நிலவியது. சிப்பீன் யுத்தத்தில் பலியான தங்களின் உறவுகளை நினைத்துää நகரின் பெரும்பாலான வீடுகளில் பெண்களின் அழுகையொலியே கேட்டது. தங்களது உறவுகளை வீணானதொரு காரியத்திற்காக இழந்து விட்டோமே என்ற கருத்தே அனைவரிடமும் மிகைத்திருந்தது. அரசு நிர்வாகம் அதளபாதாளத்தில் வீழ்ந்து கிடந்தது. அரசின் பொருளாதார இருப்புக் குறைவால் கடுமையான சோதனையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சட்டம் ஒழுங்கு திருப்திகரமான நிலையில் இல்லை. அரசநிர்வாகத்தை மீட்டுக் கொண்டு வருவதற்கு அலி (ரலி) மிகவும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. போரில் தங்களது உயிர்களை இழந்தவர்களின் குடும்பத்தார்கள் மீது அலி (ரலி) அவர்கள் மிகவும் பரிவுடன் நடந்து கொண்டார்கள்ää உங்களது இழப்புக்கு நிச்சமாயக பழிவாங்கப்படும் என்று உறுதியளித்தார்கள்.

பள்ளிவாசலில் வைத்து மக்களுக்கு ஆற்றியதொரு உரையில்ää அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்ää இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்ää ஒருவர் மற்றவருடன் பிணைந்து ஒற்றுமையுடன் வாழுங்கள்ää இன்னும் இறுதி வெற்றிக்கு அல்லாஹ்விடம் பிரார்த்தனையும் செய்யுங்கள் என்று அறிவுரை கூறினார்.

இன்னும் தனக்கு நம்பிக்கையான மக்களை அழைத்துää தான் சிப்பீன் யுத்தத்தில் எப்படி ஏமாற்றப்பட்டேன் என்பது குறித்த விளக்கத்தை விவரித்தார்கள். அவர்களின் உணர்வுகளை அமைதிப்படுத்தியதன் பின்புää சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக என்னுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

காரிஜிய்யாக்கள்

சிப்பீன் யுத்தத்திற்குப் பின்னால் தான் இஸ்லாமிய வரலாற்றில் முதன்முதலாகää இஸ்லாத்தின் பெயரில் ஒரு குழு உருவாகியது எனலாம்ää அவர்களைத் தான் காரிஜிய்யாக்கள் என்றழைக்கின்றோம். இதற்கு சரியான அர்த்தம் என்னவெனில்ää பிரிவினைவாதிகள்ää வெளியேறியவர்கள் எனப்படும். இவர்கள் தங்களைää தங்களது உயிர்களையும்ää பொருள்களையும் அல்லாஹ்விற்காக தியாகம் செய்துää அதற்கு ஈடாகச் சுவனத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றார்கள். இந்த காரிஜிய்யாப் பிரிவானதுää பனூ தமீம்ää பனூ பக்ர் மற்றும் பனூ ஹம்தான் ஆகிய கோத்திரத்தாரிலிருந்தே உருவானது. இந்தக் கோத்திரத்தார்கள் தான் உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிரான கிளர்ச்சியில் முன்னணி வகித்தார்கள். எப்பொழுது முஆவியா (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்கு 'கஸஸ்" என்ற இரத்த இழப்பீட்டுக் கோரிக்கையை முன் வைத்தார்களோ அப்பொழுதே இவர்கள்ää அலி (ரலி) அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டார்கள். ஒட்டகப் போரில் அலி (ரலி) அவர்களுடன் கலந்து கொண்டார்கள். அலி (ரலி) அவர்கள் தனது படையை சிரியாவை நோக்கி நகர்த்திய பொழுதுää அலி (ரலி) அவர்களுடைய படையில் இந்தப் பிரிவின் குறிப்பிட்ட அளவுக்கு இருந்தனர்.

சிப்பீன் யுத்தத்தில் எந்தவித இறுதி முடிவும் கிடைக்கப் பெறாததற்குää இந்தப் பிரிவினர் போரிலிருந்து பின்வாங்கிக் கொண்டதே காரணமாகும். இந்தப் போரானது அலி (ரலி) மற்றும் முஆவியா (ரலி) ஆகியோருக்கு இடையே நடக்கும் பதவிப் போர்தான் என்று அவர்கள் கருத ஆரம்பித்தார்கள். இந்த மக்களிடம் சுயமான போக்கு என்பது மிகவும் ஆழமாக வேரூன்றி விட்டதொன்றுää அதிகாரத்திற்கான போட்டி என்பது அவர்களைப் பொறுத்தவரை வெறுப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. இன்னும் இந்த அதிகாரப் போட்டியில் நாம் ஏன் வெற்றிலைக்கு நடுவில் இருக்கும் பாக்குப் போல மாட்டிக் கொண்டு விழிக்க வேண்டும். எனவே தான் முஆவியா (ரலி) அவர்கள் படைகள் குர்ஆன் பிரதியைக் காண்பித்தவுடன்ää அதற்கு செவிமடுத்ததோடுää கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வெற்றி இருந்த போதும்ää போரைக் கைவிடும்படிக் கூறி அலி (ரலி) அவர்களை வலியுறுத்தினார்கள்.

உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்ததோடுää அலி (ரலி) அவர்களிடம் கூட்டுச் சேர்ந்து கொண்டேää முஆவியா (ரலி) அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றவே அவர்களின் இந்தச் செயல்பாடு உதவியது. இதற்கு நன்றிக்கடன் அடைக்கும் முகமாக உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் ஈடுபட்டிருந்ததற்கானää அதாவது காரிஜிய்யாக்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கையைää நடுவர்களின் ஒப்பந்தத்தில் வசதியாகக் குறிப்பிடப்படவில்லைää அதனை முஆவியா (ரலி) அவர்கள் வலியுறுத்தவும் இல்லை. நடுவர்களின் தீர்ப்பிற்குரிய விஷயமாகää யாரிடம் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது. அவர்கள் சிப்பீன் ல் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த பொழுதுää இன்னொரு பிரச்னையையும் தோற்றுவித்தனர். அதாவதுää தீர்ப்புக்காக நீதிபதியை நியமிப்பதிலும் அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களின் கூற்றுப்படிää மனிதர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளில் அல்லாஹ் மட்டுமே தீர்ப்பு வழங்கக் கூடிய தகுதியைப் பெற்றிருக்கின்றான்ää அவனை விடுத்து மனிதர்கள் தீர்ப்பு வழங்குவது பாவமாகும் என்று கூற ஆரம்பித்தார்கள்.

இதற்கு ஆதாரமாகää 'லா ஹ{க்ம இல்லா லில்லாஹ்" என்ற வசனத்தைக் கையில் எடுத்துக் கொண்டுää இறைவனைத் தவிர வேறு யாரும் தீர்ப்புக் கூறவியலாது என்று கூறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் ஆட்சி இந்தப் பூமியில் நிலைபெறுவதற்காக பாடுபடுவோமே ஒழியää மனிதர்களது ஆட்சிக்காக அல்ல என்றார்கள். மனிதன் என்ற அந்தஸ்தில் இருந்து இறைவன் இங்கு ஆட்சி செய்ய முடியாதுää அதற்காக சில அமீர்கள்- தலைவர்கள் நியமிக்கப்படுகின்றார்கள்ää ஆனால் அந்த அமீர் இறைவனது சட்டத்தை வலுவாகப் பின்பற்றக் கூடியவராக இருத்தல் வேண்டும். அவர் இறைவனது சட்டத்தைச் செயல்படுத்தும் வரைக்கும் அவர் அவரது அதிகாரத்தில் நீடிப்பார். அதிலிருந்து அவர் சிறிதேனும் விலகிச் செல்வாரென்றால்ää அவரைக் கொலை செய்து விட வேண்டும். நாங்கள் உதுமான் (ரலி) அவர்களைக் கொலை செய்தோமென்றால்ää அவர் இறைவனது கட்டளைக்கு மாறாக நடந்து கொண்டதே காரணமாகும் என்று கூற ஆரம்பித்தார்கள். யாராவது பாவம் செய்து விட்டார்களென்றால்ää அவர்கள் நிராகரிப்பாளர்களாக ஆகி விட்டார்கள்ää இன்னும் அவர் இஸ்லாத்திற்குள் மீண்டும் நுழைய வேண்டும் என்றால் தனது பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்ள வேண்டும்ää பாவ மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கூறினார்கள். அமைதி ஒப்பந்தத்தை ஆதரித்ததன் மூலமாக நாங்கள் பாவம் செய்து விட்டோம். அதற்காக வெளிப்படையாக ஒப்புக் கொண்டுää அல்லாஹ்வின் மன்னிப்பைக் கோருகின்றோம். நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என்றார்கள். நிராகரிப்பாளர்களைக் கொல்வது எங்களது உரிமை என்றும் கூறினார்கள். எங்களல்லாத ஏனைய நிராகரிப்பாளர்களுக்கு மத்தியில் எங்களால் வாழ இயலாது என்றார்கள். எனவேää சிப்பீன் ல் இருந்து திரும்பிக் கொண்டிருக்கும் பொழுதுää கூஃபாவுக்கு வெளியே ஹரூரா என்ற இடத்தில் தங்க ஆரம்பித்தார்கள். இந்த வகையில் அவர்கள் முஸ்லிம்களிலிருந்து தங்களை வேறு பிரித்துக் கொண்டார்கள்ää இவர்களைத் தான் நாம் காரிஜிய்யாக்கள் என்கிறோம். அப்பொழுது அவர்களது எண்ணிக்கை 12 ஆயிரமாக இருந்தது. அவர்களது தலைவர்களாக ஷபாத் பின் ரபீää அப்துல்லா பின் கவ்வா அல் யஷ்குரிää யஸீத் பின் கைஸ் அல் ஹரபி மற்றும் அப்துல்லா பின் வஹப் அல் ரஸிபி ஆகியோர் இருந்தார்கள்.

அலி (ரலி) அவர்களும் காரிஜிய்யாக்களும்

ஆரம்பத்தில் அலி (ரலி) உடைய ஆதரவாளர்களாக இருந்த இவர்கள்ää இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிய நேரிட்டார்கள்ää பின்னர் அலி (ரலி) அவர்களைத் தொடர்பு கொண்டு சமாதானப் பேச்சுக்கு வருமாறு அழைத்தார்கள். நடுவர் தீர்ப்பை ஒப்புக் கொள்வதாக நீங்கள் கூறியது தவறு என்று அலி (ரலி) அவர்களை விமர்சித்தார்கள். அதற்குää வெற்றிக் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த பொழுதுää அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்தது நீங்கள் தானேää இன்னும் நான் அதனை வேண்டா வெறுப்பாகவேää இன்னும் உங்களது நிர்ப்பந்தத்தின் பேரில் தானே ஏற்றுக் கொண்டேன் என்றார்கள். நாங்கள் செய்த அந்த பாவத்திற்கு நாங்கள் இறைவனிடம் பிராயச்சித்தம் செய்து கொண்டோம் என்றார் பதிலுக்கு அவர்கள். இதனால்ää நீங்கள் பாவத்திற்குள்ளாகி விட்டதால்ää நீங்களும் பாவப் பிராயச்சித்தம் தேடிக் கொள்ள வேண்டியது கடமை என்று கூறினார்கள்.

இது ஒரு அரசியல் தவறுää இது பாவத்தினைச் சேர்ந்ததல்லää இதற்காக பிரத்யேகமாக பாவப்பிராயச்சித்தம் தேட வேண்டியதில்லையே என்றார்கள் அலி (ரலி). நான் தினமும் அல்லாஹ்விடம் பிராயச்சித்தம் தேடிக் கொண்டிருக்கின்றேன்ää அதன் மூலம் அன்றாடம் எனது பாவங்களுக்கு மன்னிப்புக் கோரிக் கொண்டிருக்கின்றேன்.

இறைவனை நீதிபதியாக ஏற்று அவனது தீர்ப்பினை ஏற்றுக் கொள்வதனை விடுத்துää மனிதர்களை நீதிபதிகளாக ஏற்றுக் கொண்டது தவறு என்றார்கள்.

அந்த நீதிபதிகள் தான் அல்லாஹ்வின் வேதத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதாக உறுதி கூறியுள்ளார்களேää அவர்கள் வாக்குறுதி அளித்தபடி அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்கவில்லை என்றால் அதனை நாம் தள்ளுபடி செய்து விடுவோம் என்றார்கள்.

இப்பொழுது நீங்கள் சிரியா மக்களுக்கு எதிராக போருக்கு எங்களை அழைத்துச் செல்ல வேண்டும்ää இன்னும் நீங்கள் தான் எங்களது தளபதியாக இருக்க வேண்டும் என்றார்கள்.

சரி..ää உங்களது கோரிக்கையை நான் வரவேற்கின்றேன்ää ஆனால் இப்பொழுது சமாதான ஒப்பந்தம் போடப்பட்டுää போர்அமைதி செய்யப்பட்டு விட்ட பின் ஆயுதத்தைத் தூக்குவது இஸ்லாத்திற்கும் அதன் கொள்கைகளுக்கும் முரணானது அல்லவா என்றார்கள். எப்பொழுது எதிர் பக்கத்தில் போர் அமைதி ஒப்பந்தத்தை மீறுகின்றார்களோää அப்பொழுது உங்களுக்குத் தலைமை தாங்கி நான் போர் முகத்துக்கு அழைத்துச் செல்வேன்ää இந்த இடைப்பட்ட நேரத்தில் நாம் போருக்கான ஆயத்தைச் செய்து கொள்வோம் என்று கூறியபின் சமாதானம் அடைந்த காரிஜிய்யாக்கள்ää ஹரூரா வில் அமைத்திருந்த தங்களது குடில்களை தகர்த்து விட்டுää கூஃபாவிற்குத் திரும்பினார்கள்.அலி (ரலி) அவர்களின் வாக்குப்பிரமாணம்

சிப்பின் யுத்தம் நடந்து முடிந்த விட்ட நேரம்ää அப்பொழுது இனி தனது அருமை மகன் இமாம் ஹ{ஸைன் (ரலி) அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவானதொரு வாக்குப்பிரமாணத்தை அலி (ரலி) எழுதினார்கள். இந்த வாக்குப்பிரமாணம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்றுப் பின்பற்றத்தக்க அறிவுரைகளைக் கொண்டதாக இருந்தது. இந்த வாக்குப்பிரமாணம் நஹ்ஜுல் பலகா என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

என்னருமை மகனே..!

அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும் என்பதனை உனக்குக் கடமையாக்குகின்றேன். அவனது கட்டளைகளையும் பின்பற்றி நடந்து கொள். அவனது நினைவு கொண்டு உனது இதயத்தைப் பண்படுத்திக் கொள். அவனது மார்க்கத்தை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள். உனக்கும் உன்னைப் படைத்தவனுக்கும் இடையே இருக்கும் உறவைக் காட்டிலும் இன்னொரு உறவு உனக்கு விருப்பம் மிகுந்தாக ஆகி விடக் கூடாது.

மறுமை நாள்

என்னருமை மகனே..!

தொழுகையைக் கொண்டு உனது இதயத்தை வெளிச்சப்படுத்திக் கொள். கருணையைக் கொண்டு அனைத்து வித சபலங்களையும் துடைத்தெறிந்து விடு. இறைநம்பிக்கை கொண்டு உனது இதயத்தைப் பலப்படுத்திக் கொள். ஞானத்தைக் கொண்டு அதனை வெளிச்சப்படுத்திக் கொள். மரணத்தை நினைத்து இதயத்து ஆசைகளை வெல்வதற்கு முயற்சியுங்கள். இதயம் செத்து விடுவதிலிருந்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். கொடூரமான அந்த நேரத்தை அது அஞ்சிக் கொள்ளட்டும். மரணத்திற்குப் பின் உள்ள நிலைகள் குறித்து அது பாடம் பெற்றுக் கொள்ளட்டும். இதற்கு முன் சென்று விட்ட சமுதாயங்களிலிருந்து அது படிப்பினை பெற்றுக் கொள்ளட்டும். உமது இதயம் மூன்று விதமான கேள்விகளைக் கேட்டுக் கொள்ளட்டும் :

அந்த மக்கள் (அழிக்கப்படுவதற்கு) என்ன செய்தார்கள்?

அவர்கள் எங்கு சென்று விட்டார்கள்?

இப்பொழுது அவர்களது இருப்பிடம் எங்கே?

இதிலிருந்து அவர்கள் தங்களது நண்பர்களிடமிருந்தும் மற்றும் உறவினர்களிடமிருந்தும் நீங்கிச் சென்று விட்டார்கள் என்பதை உனது இதயம் உணர்ந்து கொள்ளும்ää இன்னும் அவர்கள் இப்பொழுது மரணக்குழியில் தனிமையில் தங்களது இருப்பிடத்தை ஆக்கிக் கொண்டவர்களாக.. இருப்பதையும்ää இன்னும் வெகுசீக்கிரத்திலோ அல்லது சற்று தாமதமாகவோ அதே இருப்பிடத்திற்கு நாமும் செல்ல இருக்கின்றோம் என்பதையும் நினைவு கொள்ளுங்கள்.

நீங்கள் பொடுபோக்காக இருந்த நாட்களை நல்லறங்கள் செய்து சரி செய்து கொள்ளுங்கள். இந்த உலக வாழ்க்கையின் ஆடம்பரத்திற்காக மறுமையை விலை பேசி விடாதீர்கள். அறியாமைக்காரர்கள் போல பேசாதீர்கள். தேவையற்ற பேச்சுக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். வழிகேட்டிற்கு இட்டுச் செல்கின்ற பாதை இது தான் என்று கண்டு கொண்டதன் பின்பு அதில் நடைபோட முயற்சிக்காதீர்கள். தீமைக்கு இட்டுச் செல்லப்படுவதிலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்ää அதுவே மிகவும் பாதுகாப்பானதாகும்.

நல்லொழுக்கம் மற்றும் இறைநம்பிக்கை

நீங்கள் நல்லொழுக்கத்தைப் பரப்புவீர்கள் என்றால்ää நீங்களும் நல்லொழுக்கமுடையவர்களுடன் இருப்பீர்கள். தீமைகளை உங்களது நாவால் எதிர்கொள்ளுங்கள். கபடத்தனத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாதுச் செய்யுங்கள். அல்லாஹ்வின் பாதையில் போராடும் பொழுதுää தீமையாளர்களின் குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்தாதீர்கள். சத்தியத்தை நிலைநாட்டும் பணியில் இருக்கும் பொழுது புயல் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்ää அதனை எதிர்க்கத் தயக்கம் காட்ட வேண்டாம். இறைநம்பிக்கை கொண்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் பாதுகாவல்

எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்விடம் பாதுகாப்புப் பெற்றுக் கொள்ளுங்கள்ää அப்பொழுது தான் நீங்கள் மறைவான பதுங்கு குழியில் இருப்பது போல பாதுகாக்கப்பட்ட அரண் மற்றும் பிறருக்கு கண்ணுக்குத் தெரியாத மறைவிடத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் அவனிடம் எதனைக் கேட்கும் பொழுதும்ää அவனுக்கு இணைகற்பித்து விடாதீர்கள்ää அனைத்து வித அருட்கொடைகளும் அவனது வசமே உள்ளன. நேர்வழியைப் பின்பற்றுங்கள். கபடத்தனம்ää அது நமக்குப் பொறுத்தமற்றது.

மூத்தவர்கள்

என்னருமை மகனே..! உங்களது கடமைகளைச் செய்வதனின்றும் பொடுபோக்காக இருந்து விடாதீர்கள். பெரியார்களின் வழித்தடத்தைப் பின்பற்றுங்கள். நீங்கள் எதனை இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களோ அதனை அவர்கள் நேற்றே பார்த்து விட்டவர்கள். அவர்கள் கற்றுக் கொண்டு விட்டவர்கள். அனுபவமிக்கவர்களின் வழிகாட்டுதல்கள் பின்பற்றுவதற்கு ஏற்றதேயாகும்.

உங்களது சொந்த வழிமுறை

உங்களது சுயமதிப்பீடு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்று விரும்பினால் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள்ää ஆனால் அதில் கவனமும்ää ஞானமும் அவசியம். நீங்களாக வலியச் சென்று சந்தேகமானவற்றிலும்ää விவாதத்திலும் இறங்கி விட வேண்டாம். இத்தகைய நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால்ää அல்லாஹ்வினுடைய ஆதரவையும்ää உதவியையும் வேண்டுங்கள். எப்பொழுது உங்களது மனது தெளிவாகவும்ää உங்களது புத்திக்கூர்மையடைந்த நிலையிலும்ää இன்னும் சத்தியத்தையும்ää அசத்தியத்தையும் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு உங்களது அறிவு திறன் பெற்றிருக்கும் நிலையில் மட்டுமே இந்தப் பள்ளத்தாக்கின் பக்கம் அடி எடுத்து வையுங்கள். மேற்கண்ட தகுதிகள் இல்லாத நிலையில் இங்கு வருவது வழிகள் இருட்டாகவே தென்படும்ää இன்னும் நீங்கள் ஆபத்தில் மாட்டிக் கொள்ளவும் கூடும். உண்மையில் சத்தியத்தைத் தேடக் கூடியவர்ää நேரான பாதையை விட்டும் விலகிச் செல்வதும் கூடாதுää சந்தேகமானவற்றினால் மூழ்கடிக்கப்படவும் கூடாது.

இறைவனது சோதனைகள்

என்னருமை மகனேää எவனது கைவசம் மரணம் இருக்கின்றதோää அவனே வாழ்வையும் தனது கட்டுபாட்டில் வைத்திருக்கின்றான். எவன் பிறப்பைக் கொண்டு வருகின்றானோ அவனே மரணத்தையும் கொண்டு வருகின்றான். அவன் பிரச்னைகளைக் கொண்டு உன்னை சோதிப்பான். அவனே நம்முடைய இறுதி ஒதுங்குமிடம். இன்னும் அவனது சோதனையில் நீங்கள் தோற்று விடக் கூடாது. இந்த உலகமானது அவனது மிகச் சரியான திட்டமிடலின் கீழ் இயங்குகின்றதுää இந்த உலக வாழ்க்கையின் பொழுது மனிதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளுக்கும்ää சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் அவன் பதில் சொல்லக் கடமைப்பட்டவனாவான். இறுதித் தீர்ப்பு என்பது மறுமை நாளில் தான் வழங்கப்படும்ää இன்னும் அது பற்றி நமக்கு எந்தவித ஞானமும் கிடையாது.

இறைவனது தீர்ப்புக் அடிபணிந்து விடுங்கள்

என்னருமை மகனே..!

உங்களுக்கு எது பற்றிய அறிவு இல்லையோ அதில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொள்ளுங்கள்ää ஆனால் அது பற்றிய அறிவைத் தேடிக் கொள்ள முயற்சி செய்தல் வேண்டும்ää இன்னும் அதனை விளங்கிக் கொள்ளும் அளவுக்கு உங்களது அறிவு இன்னும் போதவில்லை என்பதனை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதனை இவ்வாறும் சொல்வது மெச்சத்தக்கதுää அதாவது நீங்கள் பிறந்த பொழுது வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்ற உங்களது புரிதலும் மற்றும் அறிவும் நீங்கள் வளருவது போலவே அதுவும் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றது. இன்னும் நீங்கள் வளர்ந்ததன் பின்னாலும்ää எத்தனை விஷயங்கள் பற்றி இன்னும் நீங்கள் அறியவில்லை என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். சில விஷயங்களை நீங்கள் அறிய நேரிடும் பொழுது அது பற்றி ஆச்சரியப்படுவீர்கள்ää ஆனால் அதனைப் பற்றிய அறிவினைத் தேடிப் பெற்றுக் கொண்டவுடன் அந்த ஆச்சரியம் உங்களை விட்டும் அகல ஆரம்பிக்கும். எனவேää நீங்கள் எப்பொழுதும் உங்களைப் படைத்தவனும்ää இன்னும் வாழ்வாதாரம் வழங்குபவனுமான அவனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். உங்களது வணக்க வழிபாடுகள் அவனுக்காகவென்றே இருத்தல் வேண்டும்ää இன்னும் அவனுடைய விதியின் அமைப்பை நீங்கள் கட்டாயம் ஏற்று அதற்கு அடிபணிந்தாக வேண்டும்.

என்னருமை மகனே..!

இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட எவரும் இறைவனைப் பற்றிக் கற்றுக் கொடுத்து விட முடியாது. அவரை உங்களது வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளுங்கள்ää உங்களுக்கான தீர்வினை அவரிடமிருந்தே பெற்றுக் கொள்ளுங்கள்.

அல்லாஹ் ஒருவனே..!

என்னருமை மகனே..!

அல்லாஹ்வை அன்றி வேறு கடவுள் இருந்திருக்குமென்றால்ää அவர்களது தூதர்களும் வந்திருப்பார்கள்ää இன்னும் அவர்களது ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தி இருப்பார்கள். அவ்வாறான எந்த ஆதிக்கத்தையும் நம்மால் காண முடியவில்லை. நிச்சயமாக அல்லாஹ் ஒருவனே. அவனுக்கு இணை துணை ஏதுமில்லை. அவன் எதுவுமே இல்லாதிருந்த நிலையிலும் அவன் இருந்தான்ää அவனுக்கு மரணம் என்பதே கிடையாதுää நிலையாக இருப்பவன். அவனே ஆதியும்ää அந்தமும். அவனுக்கென்று ஆரம்பமும் கிடையாதுää முடிவும் கிடையாது. அவனே சர்வ சக்தியாளன்ää உருவமற்றவன்ää ஞானமிக்கவன். எஜமானனுக்கு முன்னால் எப்படி வேலைக்காரன் நிற்பானோ அதனைப் போல நீங்கள் அவனிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்ää நன்மையை ஏவிää தீமையைத் தடுப்பதை அல்லாஹ் உங்கள் மீது கடமையாக்கி இருக்கின்றான்.

உலகத்தின் தன்மை

என்னருமை மகனே..!

இந்த உலகம் என்றால் என்ன என்பது பற்றி உங்களுக்கு நான் விளக்கப் போகின்றேன். அதன் தன்மைகள் பற்றி உங்களுக்கு அறிவிக்கின்றேன். எனவே அதனை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக கொண்டுää அதன்படிச் செயல்படுங்கள். இந்த உலகத்தின் சோதனைப் பொருளாகவே நாம் வந்திருக்கின்றோம் என்று கருதக் கூடியவர்கள்ää இந்த உலகத்தை விட்டும் சென்று விடுவதைப் பற்றி வருத்தமடைய மாட்டார்கள்ää எப்படி என்றால் பஞ்சம் தாக்கிய பூமியில் இருக்கின்ற ஒருவர் எவ்வாறு பசுமையான பூமியை நோக்கிச் செல்வாரோ அதனைப் போலää இந்த உலகத்தை விட்டும் அவர் எப்பொழுதும் செல்வதற்குத் தயாராகவே இருப்பார். இந்த மக்கள் பயணத்தின் கஷ்டங்களைச் சந்தித்துää நண்பர்களையும்ää உறவுகளையும் பிரிந்துää இறுதியாக அவர்கள் அந்த சந்தோஷத்தை அள்ளித் தருகின்ற பூமிக்கு வந்து சேர்வார்கள். அவர்கள் நடைபோடுகின்ற ஒவ்வொரு அடியும் அவர்கள் நோக்கி வந்து கொண்டிருக்கின்ற பூமிக்கு அவர்களை நெருக்கமாக்கி வைக்கும். இந்த உலக வாழ்க்கையின் மோகத்துடன் ஒன்றிப் போனவர்களால் அவர்களது இருப்பிடத்தை விட்டும் வருவதற்கு இயலாது. அவர்கள் எத்தகையவர்கள் என்றால்ää பசுமையான பூமியிலிருந்து பஞ்சம் தாக்கிய பூமியை நோக்கிச் செல்பவர்களைப் போன்றவர்கள். அவர்களது பயணமும் சிக்கலானதுää இன்னும் அவர்களது முடிவும் மோசமானது.

உங்களுக்கும் மக்களுக்குமிடையில் நடுநிலைப்போக்கு தேவை

என்னருமை மகனே..!

உங்களுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள விவாகரங்களில் நீங்கள் நடுநிலைப் போக்கைக் கைப்பிடியுங்கள். உங்களுக்கு எதனை நீங்கள் விரும்புகின்றீர்களோääஅதனையே அவர்களுக்கும் விரும்பி விடுங்கள். உங்களை யாரும் அடக்குமுறை செய்ய விரும்ப மாட்டீர்களோää அதனைப் போலவே பிறரையும் அடக்குமுறைக்குள்ளாக்காதீர்கள். உங்களை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அதனைப் போலவே பிறரையும் நடத்துங்கள். உங்களிடம் மக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்களோ அதனைப் போலவே நீங்களும் நடந்து கொள்ளுங்கள்ää புரிந்து கொள்ளுங்கள் இது ஒரு நல்லதொரு தேசத்திற்கானது. உங்களுக்கு எதுபற்றி அறிவில்லையோ அதனைப் பற்றிப் பேசாதீர்கள். உங்களுக்கு எதிராக பேசப்படுவதை நீங்கள் எவ்வாறு விரும்ப மாட்டீர்களோää அதனைப் போன்று எதனையும் நீங்களும் சொல்லாதீர்கள்.

தற்பெருமை

தற்பெருமை கொள்வது முட்டாள்தனமானதுää இன்னும் அது அவனையே அழித்து விடும். பிறரது பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டாம். அறிவு ஞானத்தையும்ää விளக்கத்தையும் இறைவனிடம் தேடிக் கொள்ää இறைவனை மட்டுமே அஞ்சுங்கள்.

என்னருமை மகனே..!

உங்களுக்கு முன் நீண்ட மற்றும் தடை நிறைந்த பயணம் காத்திருக்கின்றது. இந்தப் பயணத்தில் நல்லொழுக்கம் மட்டுமே மிகச் சிறந்த சொத்தாகும். இந்தப் பயணத்தில் உங்களுக்கு எது தேவையோ அதனை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்ää சிரமம் தரக்கூடிய பளுவான எதனையும் சுமந்து திரிய முயற்சிக்காதீர்கள். எது ஒன்றை உங்களால் சுமக்க இயலாதோ அதனைச் சுமந்து திரிவது மிகப் பெரிய அவமானத்தை தரக் கூடியதாக இருக்கும். உங்களால் முடிந்த அளவுக்கு நன்மையைச் செய்யுங்கள். நீங்கள் வசதி படைத்தவராக இருக்கின்ற சமயத்தில் எவராவது வந்து கடன் கேட்டால் கொடுத்து விடுங்கள்ää மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அது உங்கள் கைகளுக்கு வந்து கிட்டும்.

மறுமை நோக்கிய பயணம்

என்னருமை மகனே..!

உங்களுக்கு முன்பாக செங்குத்தான பாறை ஒன்று நிற்கின்றது. இத்தகைய உச்சிப் பாறையில் ஏறுவதற்குää பளுவான சுமையைச் சுமந்து கொண்டிருப்பவனைக் காட்டிலும்ää சுமையே இல்லாதவனுக்குத் தான் அது சாதகமாக இருக்கும். இதனை அடுத்து நரகம் அல்லது சுவனம் காத்திருக்கின்றது. உங்களது இருப்பிடத்தை அடையும் பொழுதுää அந்த உங்களது இருப்பிடத்தில் சுகமாக இருப்பதற்காக உங்களது பயணத்திற்கு முன்பாகவே அதற்குத் தேவையான பொருட்களை அனுப்பி வைத்து விடுங்கள்.

இறைவனைச் சந்திப்பது

மரணத்திற்குப் பின்னால்ää பிராயச்சித்தம் தேட முடியாதுää இந்த உலகத்திற்கும் திரும்ப இயலாது. வானம் மற்றும் பூமியின் வளங்களை எவன் கைவசம் வைத்திருக்கின்றானோ அவனிடம் நீங்கள் விரும்புகின்ற எதனையும் நம்பிக்கையுடன் கேட்டுப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதித்திருக்கின்றான். கருணையை விரும்பினால் அவனிடம் அதனைப் பெற்றுக் கொள்வீர்கள். அவனை சந்திப்பதற்கு நீங்கள் விரும்பினால்ää தடையின்றிச் சந்திக்க முடியும். அவனுக்கு உங்களுக்கும் இடையே எந்தத் தடையும் கிடையாது. இந்த உலகத்து வளங்கள் குறைவான வெகுமதி உடையவைகளே. அவைகள் உங்களுக்காகத் தான்ää நீங்கள் அவைகளுக்காக அல்ல.

மரணத்திற்கான தயாரிப்பு

என்னருமை மகனே..!

நீங்கள் மறுமைக்காகப் படைக்கப்பட்டிருக்கின்றீர்கள். மரணம் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது. நீங்கள் அதனை விட்டு எவ்வளவு தூரம் ஓடினாலும் கூடää அது உங்களை அடைந்தே தீரும். மரணத்தின் பிடியில் நீங்கள் இப்பவோ அல்லது அப்பவோ வீழ்ந்து விடலாம். உங்களது பாவத்திற்கான பிரயாச்சித்தம் தேடிக் கொள்வதற்கான வாய்ப்பு தாளிடப்படுவதற்கு முன்பு மரணம் உங்களை அடைந்து விடலாம் என்பதில் கவனமாக இருங்கள். அவ்வாறு அது முன்பே உங்களை அடைந்து விட்டதென்றால்ää உங்கள் நிலைமை மோசமாகி விடும். என்னருமை மகனே..! எனவே எப்பொழுதும் அதனை எதிர்பார்த்துத் தயாராக இருங்கள்ää அது உங்களை அடைந்து விட்டதென்றால் எந்தவித வேண்டுதலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

உலகத்தின் மீதான ஆசாபாசங்கள்

என்னருமை மகனே..!

இந்த உலகத்தின் ஆசாபாசங்கள் உங்களை மயக்கி விட வேண்டாம்ää அது எந்தவித பெறுமதியுமற்றது என்று இறைவன் எடுத்துரைத்துள்ளான். இன்னும் இந்த உலகம் அழிந்து விடக் கூடியது தான் என்பதையும் அது அறிந்தே வைத்திருக்கின்றது. இந்த உலகத்திற்காகத் தன்னை அற்பணித்துக் கொண்டவர்கள்ää குரைக்கும் நாயை ஒத்தவர்கள்ää கோபம் கொண்ட மிருகங்கள் ஒன்று மற்றொன்றின் மீது வீழ்வதைப் போலவும்ää பலமிக்கவன் பலவீனனின் மீது வீழ்வதையும் அது ஒத்திருக்கின்றது. சில மிருகங்கள் கட்டிப் போடப்பட்டிருக்கின்றனää கேடு இழைக்கும் என்பதால். சில ஒட்டகத்தைப் போல ஓடுகின்றனää அவகைளின் நடமாட்டம் கேடுகளையே விளைவிக்கும். அவை தங்களது அறிவினால் வழிபிறழ்கின்றன. அவர்கள் அழிவின் பக்கம் நோக்கியவர்களாகவும்ää இன்னும் இருளினால் சூழப்பட்டவர்களாகி விட்டவர்கள். அவர்களால் வெளிச்சத்தைப் பார்க்க இயலாது. இந்த உலகத்தின் மாய வலையில் தங்களை இழந்து விட்டவர்கள் அவர்கள். அவர்கள் இந்த உலகத்தின் ஆசைகளால் சூழப்பட்டவர்களாகää இன்னும் அதனைத் தங்களது வழிபாட்டிற்குரிய கடவுள்களாகவும் ஆக்கிக் கொண்டு விட்டார்கள். இந்த உலகமானது அவர்களுடன் விளையாடுகின்றதுää இன்னும் அவர்களும் இந்த உலகத்துடன் விளையாடுகின்றார்கள். அதனால் முற்றிலும் அவர்கள் மறுமையை மறந்தும் விட்;டார்கள்.

பின்பற்றுவதற்குரிய அறிவுரைகள்

மகனே..! உங்களது அனைத்து எதிர்ப்பார்ப்புகளும் நடந்து விடுவதில்லை. உங்களுக்கு விதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டியும் நீங்கள் உயிர் வாழ்ந்து விடப் போவதில்லை. இன்னும் நீங்கள் நடைபோட வேண்டியதிருக்கின்றதுää உங்களுக்கு முன்னால் சென்றவர்களும் இதே பாதையில் தான் நடைபயின்றிருக்கின்றார்கள். உங்களது ஆசைகளில் நடுநிலைமையைப் பேணிக் கொள்ளுங்கள். வரையறைகளைத் தாண்ட முயற்சிக்காதீர்கள். உங்களது ஆசைகளுக்கு அடிபணிந்து விடாதீர்கள். நீங்கள் நல்லதென்று நினைக்கின்ற அத்தனையும் நல்லதல்லää அவை தீமையின் பக்கம் உங்களை அழைத்துச் சென்று விடலாம். செல்வங்கள் எல்லாம் செல்வங்களாகி விடாதுää அது உங்களுக்கு அவமானத்தைத் தந்து விடலாம். உங்களது நோக்கங்களில் கவனம் தேவைää பெருமையானது அழிவின் பக்கம் கொண்டு சென்று விடும். உங்களுக்கு விதிக்கப்பட்ட ஒன்றைப் பெற்றுக் கொள்ள எவருடைய உதவியையும் நாடாதீர்கள்ää எந்த விலை கொடுத்தாகிலும் அது உங்களை அடைந்தே தீரும்.

பேச்சும் அமைதியும்

எந்தவொரு கெடுதியும் அணுகாமல் இருக்க வேண்டுமெனில்ää அதற்கு அமைதியே மருந்தாக இருக்கின்றது. ஆனால் பேச்சினால் ஏற்பட்ட தீங்கிற்கு மருந்திட்டு ஆற்ற முடியாது. (தமிழில் கூறுவார்களேää தீயினால் சுட்டபுண் உள்ளாறும்ää ஆறாதே நாவினாற் சுட்ட வடு என்பதைப் போல). தண்ணீர்ப் பையை நீங்கள் கவனித்ததுண்டாää அந்தப் பையில் உள்ள தண்ணீரானதை ஒழுகி விடாமல் இருப்பதற்காக அதன் வாயினைக் கயிறு கொண்டு கட்டி வைக்கப்பட்டிருக்கின்றது. முதலில் உங்களது ஆசைகளிலிருந்தும் இச்சைகளிலிருந்தும் விலகி தவிர்ந்து கொண்டதன் பின்னால்ää பிறருக்கு கொடுத்துதவ முன் வாருங்கள். முறைதவறிய வழியில் பெற்றது பெரியதாக இருப்பினும்ää நேர்மையாக உழைத்துப் பெற்றது சிறியதாக இருப்பினும்ää இதுவே சிறந்ததாகும். இறைவன் உங்களது ரகசியங்களை மிகவும் அறிந்தவனாக இருக்கின்றான். சிலவேளைகளில் உங்களது செயல்கள் உங்களை சிக்கலில் மாட்டி வைத்து விடலாம். தேவைக்கு அதிகமாக யார் பேசுகின்றானோää அவன் தனக்குத் தானே தவறிழைத்துக் கொள்கின்றான்.

மனிதனும்ää இறைவனும்

இறைவன் மிகக் கருணைமிக்கவன்ää நீங்கள் பாவமன்னிப்புக் கோர மறுத்தீர்கள் என்றால்ää அதற்காக அவன் உங்களைப் பழிவாங்க மாட்டான். நீங்கள் அவன் பக்கம் திரும்பினால் அவன் உங்களை கவனிக்காது அவமதிப்பதில்லைää உங்களது பாவங்களை தவறுகளை மனதில் வைத்துக் கொள்வதில்லை. உங்களது பிரயாச்சித்தங்களை ஏற்றுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுவதுமில்லை. அவனது அருட்கொடையிலிருந்து உங்களை விலக்கி விடுவதுமில்லை. பாவப் பிரயாச்சித்ததை அவன் நன்மையாக உங்கள் கணக்கில் வரவு வைக்கின்றான். எத்தகைய தீமையான காரியங்களைச் செய்து விட்டாலும் அது ஒரு தீமையாக உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும்ää ஆனால் நீங்கள் செய்யக் கூடிய நன்மைகளை ஒன்றுக்கு பத்தாக வரவு வைக்கப்படும். பிராயச்சித்தத்திற்கான வாசல்கள் எப்பொழுதும் திறந்தே வைக்கப்பட்டுள்ளன. உங்களது பிரார்த்தனைகளை அவன் செவிமடுக்கின்றான். அவனை நீங்கள் புகழும் பொழுதும்ää அதனைக் கேட்கின்றான். அவன் தான் உங்களது கஷ்டங்களையும்ää துயரங்களையும்ää இன்னும் நல்ல ஆரோக்கியத்தையும்ää நீண்ட ஆயுளையும் கேட்பதற்குத் தகுதியானவனாகவும்ää இன்னும் உங்களது ஆசைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவனாகவும் இருக்கின்றான். அவனைத் தவிர வேறு யாராலும் உங்களது ஆசைகளை நிறைவேற்றிட முடியாது. உங்களது பிரார்த்தனைகள் நிறைவேறாது தாமதமாகுமென்றால்ää அது குறித்து நிராசையடைந்து விட வேண்டாம். பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுவதென்பதுää உங்களது தகுதியைப் பொறுத்தது. சில நேரங்களில் உங்களது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளத் தாமதமாகும்பட்சத்தில்ää அதற்கு ஈடாக மிகப் பெரிய நற்கூலியைப் பெற்றுக் கொள்ளலாம். சில நேரங்களில் உங்களது வேண்டுகோள்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதுää அது மறுக்கப்படுவதும் கூட உங்களது நலனை முனிட்டுத்தான். எனவே உங்களுக்குத் தேவையானவற்றைக் கேளுங்கள்ää அதில் உங்களுக்கு நன்மை இருக்கின்றது.

தோழமை

நல்லவர்களுடன் தோழமை கொள்ளுங்கள். வேஷதாரிகளிடமிருந்து விலகி இருங்கள். பலவீனர்களை அடக்குபவன் மிகக் கீழ்த்தரமான அடக்குமுறையாளன். மிருதுவானது கடினமாகவும்ää கடினமானது மிருதுவாகவும் கூடும். சிலவேளைகளில் சுகமே வேதனையைத் தரும்ää வேதனை சுகத்தைக் கொடுக்கும். சிலவேளைகளில் கெட்ட எண்ணமுடையவர் நன்மை பயக்கின்றதொன்றை உங்களுக்குச் செய்து விடலாம்ää இன்னும் உங்கள் மீது நன்மையை நாடக் கூடியவர் தீங்கிழைத்து விடலாம். தவறான எதிர்பார்ப்பின் கரையில் நிற்க வேண்டாம்ää அதுவே உங்களது மரணத்திற்கான முதலீடாக இருந்து விடும். புத்திக்கூர்மை என்பது அனுபவத்திற்கான விண்ணப்பம். சிறந்த அனுபவம் எதுவென்றால்ää அதன் மூலம் பாடம் கற்றுக் கொள்வதே. உங்களுக்கு எதிராக சூழ்நிலைகள் மாறுவதற்கு முன்பாகää அதனை சாதகமாக மாற்றிக் கொள்ள முயற்சித்து விடுங்கள்.

இறுதி முடிவு

பயணம் செய்பவர் தனது பயணத்திலிருந்து திரும்பி வர இயலாது போய் விடலாம். எனவேää எதனையும் வீணடித்து விடாதீர்கள். மறுமை நாளின் உங்களது கணக்கை பாழடித்து விடாதீர்கள். மனிதனுடைய இறுதி தங்குமிடம் முடிவு செய்யப்பட்டு விட்டது. உங்கள் மீது விதிக்கப்பட்ட அந்த இறுதி ஒதுங்குமிடம் உங்களை அடைந்து கொள்ள இருக்கின்றது. ஒரு வியாபாரி சிலவேளைகளில் சூதாட்டக்காரனாகவும் இருக்க முடியும். அதிகமான சரக்கு இருப்பைக் காட்டிலும்ää பற்றாக்குறையானது அவனுக்கு மிகவும் லாபத்தைப் பெற்றுத் தரக் கூடியதாக இருக்கும்.

நேரம்

காற்றுள்ள போதே தூற்றிக் கொள். உங்களது நோக்கம் உங்களை பராக்காக்கி விட வேண்டாம். பகைமையானது புத்திசாலித்தனத்தைக் கெடுத்து விட வேண்டாம். ஒரு நண்பன் நட்பின் உறவைத் தளர்த்தினால்ää அதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவன் உங்களை விட்டும் தூரமாகிப் போனால்ää நீங்கள் அவனை நெருங்கிச் செல்லுங்கள். உங்கள் மீது கடுமையான தன்மையைக் காட்டினால்ää நீங்கள் அவன் மீது இலகுவாக நடந்து கொள்ளுங்கள். அவன் தவறிழைத்து விட்டால்ää அதற்காக அவனை மன்னித்து விடுங்கள். நண்பரிடம் பழகும் பொழுது உங்களது எஜமானனிடம் பழகுவது போன்றும்ää நீங்கள் அவரது அடிமை போன்றும் பழகுங்கள். உங்களது நண்பனின் எதிரியிடம் நீங்கள் நட்புக் கொள்ளாதீர்கள். கசப்பாக இருப்பினும்ää உங்களது நண்பரின் புத்திமதிகளைக் கேட்டுக் கொள்வதிலிருந்து விலகி விடாதீர்கள். கோபத்திற்கு வழி சமைக்காதீர்கள். உங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவரிடம் நீங்கள்ää இரக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள். உங்கள் மீது யார் நல்லபிப்பராயம் வைத்திருக்கின்றார்களோää அது பொய்யாகி விடக் கூடாது என்பதில் கவனம் தேவை. தவறான எண்ணத்தின் அடிப்படையில் உங்களது நண்பரின் உரிமைகளை மறுத்தொதுக்கி விடாதீர்கள்ää அவரது உரிமைகளை மறுப்பது நட்புரிமையானது பாதிக்கப்படக் காரணமாகி விடும். அடக்குமுறை வேண்டாம்ää அடக்குமுறையாளன் தன்னுடைய மரணக்குழியை தானே தோண்டிக் கொள்கின்றான்.

வாழ்வாதாரம்

என்னருமை மகனே..! வாழ்வாதாரம் என்பது இருவகைப்படும்ää ஒன்று நீங்கள் தேடுவதுää இன்னொன்று உங்களைத் தேடுவது. அதன்படிää நீங்கள் வாழ்வாதாரத்தைத் தேடா விடினும் அது உங்களைத் தேடி வரும். அது இந்த உலகத்தில் உங்களுக்கான பங்கு எவ்வாறு இருக்க வேண்டுமெனில்ää அது மறுமையில் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு எது கிடைக்கப் பெறவில்லையோ அதற்காக நீங்கள் கவலைப்படுவீர்கள் என்றால்ää உங்களுக்கு எது எதுவெல்லாம் கிடைக்கவில்லையோää அவை அனைத்திற்குமே கவலைப்படுபவர்களாக ஆகி விடுவீர்கள். புத்திமதிகளினால் எந்தவித மாற்றத்தையும் பெற்றுக் கொள்ளாதவர்களைப் போல நீங்களும் ஆகி விட வேண்டாம்ää குற்றச்சாட்டுக்களைக் கேட்டால் கொதித்தெழுபவர்களைப் போலவும் ஆகி விட வேண்டாம். கண்ணியமிக்க மனிதன் அறிவுரையானது எங்கிருந்து கிடைக்கப்பெறினும்ää தன்னை விட அற்பர்களிடமிருந்து அது வந்தாலும் அதனைப் பெற்றுக் கொள்வான்.

அமைதியும் இறைநம்பிக்கையும்

ஆசைகளையும்ää சந்தேகங்களையும் அமைதியைக் கொண்டும்ää இறைநம்பிக்கை கொண்டும் வெல்லுங்கள். எவனொருவன் நடுநிலையைக் கைக்கொள்ளவில்லையோ அவன் அழிந்தான். ஒரு நண்பர் உறவினன் போலாவான். உண்மையான நண்பன் எப்படி இருப்பானென்றால்ää நீங்கள் இல்லாத நிலையிலும் உங்களது நலன்களைப் பாதுகாப்பவனாக இருப்பான். ஒரு புதிய மனிதன் என்பவன்ää அவனை முன்பின் யாரும் அறிய மாட்டார்கள் என்பதால் அவனுக்கு யாரும் நண்பனாக மாட்டார்கள்.

புத்திமதி

யார் நேர்வழியைத் தவற விட்டு விட்டார்களோ அவர்கள் தங்களது வழியை இருளில் அமைத்துக் கொண்டார்கள். யார் தன்னுடைய வருமானத்திற்குத் தகுந்த வாழ்க்கையை வாழுகின்றாரோ அவரது கண்ணியமும் பாதுகாப்பானது. உறுதியான உறவு எதுவென்றால்ää அது மனிதன் இறைவனுடன் வைத்திருக்கின்ற உறவாகத்தான் இருக்கும். எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறா விடின்ää நம்பிக்கையீனமே வாழ்க்கையாகி விடும். ஒவ்வொரு தவறும் கவனிக்கப்படாது விடப்பட மாட்டாது. எப்பொழுதுமே சந்தர்ப்பம் நமது கதவைத் தட்டிக் கொண்டிருக்காது. சிலவேளைகளில் நல்ல கண்பார்வை உள்ளவன் தடுமாறிக் கொண்டிருக்கும் பொழுதுää குருடன் எந்தவித தட்டுத்தடுமாறலும் இல்லாமல் தனது வழியில் போய்க் கொண்டிருப்பான். யார் இந்த உலகத்தை முற்று முழுதாக நம்பினானோää அது அவனை ஏமாற்றி விட்டது. ஆட்சியாளர்களில் மாற்றம் வரும் பொழுதுää நேரமும் மாறும். பயணத்தை ஆரம்பிக்கு முன்பாக உன்னுடைய தோழன் யார் என்பதைத் தீர்மானித்துக் கொள். ஒரு வீட்டில் குடியேறுவதற்கு முன்பாகää உன்னுடைய அண்டை வீட்டான் யார்ää எப்படிப்பட்டவன் என்பதை அறிந்து கொள். உனது பேச்சில் கவனம் தேவைää யாரையும் உனது வார்த்தைகளினால் புண்படுத்தி விடாதே. பெண்களிடம் ஆலோசனை கேட்காதே. அவர்களது புத்திக்கூர்மை குறைவானதேää இன்னும் தீர்வு காண்பதில் பலம் குன்றியவர்களாக இருக்கின்றார்கள். அவர்களை தனிமையில் வையுங்கள். வேற்று நபர் யாரும் அவர்களுடன் தொடர்பு கொள்ள அனுமதித்து விடாதீர்கள். பரிந்துரை செய்வதற்கு அவர்களை உற்சாகப்படுத்தாதீர்கள். உங்களது பணியாட்களை நல்லமுறையில் நடத்துங்கள். ஒவ்வொரு பணியாளனுக்கும் அவருக்கே உரிய வேலை ஒதுக்கிக் கொடுங்கள்ää அதன் மூலம் ஒவ்வொரு பணியாளனும் அவரவர் வேலையை அறிந்து பணியாற்ற முடியும். உங்களது உறவுகளை மதித்து நடங்கள். அதுவே உங்களுக்கு பலத்தைத் தரக் கூடியதாகும்.

முடிவுரை

என்னருமை மகனே..! உங்களது இம்மை மற்றும் மறுமை வாழ்க்கையை அல்லாஹ்விடமே ஒப்படைக்கின்றேன்ää இன்னும் இந்த உலக வாழ்க்கையின் நலனுக்காகவும்ää மறுமையின் நலனுக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.தீர்ப்பாயம்

நடுவர்களின் அமர்வு

அலி (ரலி) அவர்களுக்கும் முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைப்பதற்காகää நடுவர்களான அபூ மூஸா அஷ்அரீ (ரலி) அவர்களும்ää அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களும் தமாதுல் ஜன்தல் என்ற இடத்தில்ää அதாவது டமாஸ்கஸ் மற்றும் கூஃபாவிற்கு இடைப்பட்ட பகுதியில் ஒன்று கூடினார்கள். இது ஜனவரி மாதம் 658 ம் ஆண்டு நடந்தது. இந்த நடுவர்களின் கலந்தாலோசனைக்குச் சாட்சியமாக இரு பக்கங்களிலிருந்தும் 400 பேர் கொண்ட பாதுகாப்புப் படையும் உடன் அனுப்பி வைக்கப்பட்டது. கூஃபாவின் பாதுகாப்புப் படைக்கு அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்களும்ää இன்னும் சுரைஹ் பின் மானி (ரலி) அவர்களும் தலைமை தாங்கினார்கள். அலி (ரலி) மற்றும் முஆவியா(ரலி) அவர்களுக்கும் இடையே நடைபெறும் இந்தப் பிரச்னையில் நடுநிலையான போக்கைக் கொண்ட மக்கா மற்றும் மதீனாவைச் சேர்ந்தவர்களையும் தமாதுல் ஜன்தல் க்கு வருமாறும்ää தங்களது கலந்தாலோசனையில் வந்து கலந்து கொள்ளுமாறும் நடுவர்கள் அழைப்பு விடுத்தார்கள். இந்த அழைப்பினை ஏற்று வந்தவர்களில் முக்கியமானவர்கள்ää அப்துல்லா பின் உமர் (ரலி)ää அப்துல்லா பின் ஜுபைர் (ரலி)ää முகீரா பின் சுப்பா (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் ஹாரித் (ரலி) ஆகியோர்களாவார்கள்.

ஸஅத் பின் அபி வக்காஸ் (ரலி) அவர்கள் தமாதுல் ஜன்தல் க்குச் செல்வதற்கு அவரது மகன் முன்னுரிமை வழங்கியும்ää அவர் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்ததோடுää இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு தனக்கு ஆர்வமில்லை என்று கூறி விட்டார்.

நடுவர்களின் விசாரணை ஆரம்பம்

தீர்மானிக்கப்பட்டதொரு நாளில் இரு தரப்பிலும் பாதுகாப்புப் பணிக்கும்ää சாட்சியத்திற்காகவும் நியமிக்கப்பட்ட மக்களின் முன்பாக நடுவர்கள் விசாரணைக்கு அமர்ந்தார்கள்.

இப்பொழுது அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் தனது முறையை ஆரம்பித்தார்கள்.

உதுமான் (ரலி) அவர்கள் குற்றமற்றவர்ää இன்னும் அவரைப் படுகொலை செய்தது கொடுமையான குற்றமல்லவா என்றார்கள்.

அதனை அமோதிக்கும் முகமாக ஆம்..! என்று அதற்கு பதிலளித்தார்கள்ää அபூ மூஸா அஷ்அரி (ரலி) அவர்கள்.

இந்த நிலையில் உதுமான் (ரலி) அவர்களது படுகொலைக்கு முஆவியா (ரலி) அவர்கள் 'கஸஸ்" இரத்த இழப்பீடு கோருவது என்பது முறையானது தானே..!

திருமறைக் குர்ஆனினது அடிப்படையில் 'கஸஸ்" - அதற்குத் தீர்வு காணப்படும்.

மீண்டும் தொடர்ந்த அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள்ää நாங்கள் அலி (ரலி) அவர்கள் கலிஃபாவாக நீடிப்பதை எதிர்க்கின்றோம்ää எனென்றால் அவர் உதுமான் (ரலி) அவர்களது படுகொலையில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்.

நீங்கள் கூறும் இந்தக் குற்றச்சாட்டு தவறானதுää உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையில் அவர் சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்பதற்கான எந்த ஆதாரமும் நிறுவப்படவில்லை.

உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குப் பகரமாக கஸஸ் - இரத்த இழப்பீட்டுக்கான பழிவாங்கப்படுவதற்காகää அதில் சம்பந்தபட்டவர்களை அவரின் உறவினர்கள் ஒப்படைக்கக் கோரிய போதுää அதனை அவர் நிறைவேற்றவில்லை. இதுவே அவர் மறைமுகமாகää அவ்வாறில்லை எனில் நேரடியாகவே சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்று ஏன் கருதக் கூடாது.

முதலில் முஆவியா (ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களுக்கு வாக்குப்பிரமாணம் செய்யட்டும்ää அதன் பின் அவரிடம் 'கஸஸ்"க்கான கோரிக்கையை வைக்கட்டும்.

உதுமான் (ரலி) அவர்களது படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அலி (ரலி) அவர்களுடன் கூட்டு வைத்திருக்கின்றார்கள்ää 'கஸஸ்"க்கான சரியான நியாயம் அவரிடம் இருந்து கிடைக்கும் என்பதை உதுமான் (ரலி) அவர்களின் வழித்தோன்றல்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. இந்த அடிப்படையில்ää முஆவியா (ரலி) அவர்களைத் தான் கலிஃபாவாக ஆக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன் என்று கூறி முடித்தார்ää அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள்.

கலிஃபா - ஆட்சியாளர் என்ற அடிப்படையில் அலி (ரலி) அவர்களை விட முஆவியா (ரலி) அவர்கள் முன்னுரிமை கோர முடியாது. ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக அவர் இருக்கின்றார். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். அவரது வயதினரில் அவர் நன்கு கற்றறிந்தவர். இஸ்லாத்திற்காக அவர் செய்த சேவைகளை நாமறிவோம்.

கல்வி அறிவிலும்ää இறையச்சத்திலும் மற்றவர்களைக் காட்டிலும் அலி (ரலி) அவர்கள் சிறந்தவர் என்றால்ää அரசியல் மற்றும் நிர்வாகத்தில் அலி (ரலி) அவர்களை விட முஆவியா (ரலி) அவர்கள் திறமை வாய்ந்தவராக இருக்கின்றாரே என்றார் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள். இன்னும் கலிஃபா என்பவர் நாட்டின் நிர்வாகத் தலைவர்ää நிர்வாகமானது இந்த உலக வாழ்வினோடு தொடர்புடையதுää இந்த வகையில் முஆவியா (ரலி) அவர்களே சிறந்த நிர்வாகியாக இருக்கின்றார்.

இஸ்லாத்தைப் பொறுத்தமட்டில்ää இஸ்லாத்திற்குக் கொடுக்கக் கூடிய முன்னுரிமையைக் காட்டிலும் உலக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட முடியாதுää இந்த வகையில் முஆவியா (ரலி) அவர்களைக் காட்டிலும் ஆட்சித் தலைவர் பதவிக்கு அலி (ரலி) சிறந்தவராக இருக்கின்றார் என்றார் அபூ மூஸா அஷ்அரி (ரலி) அவர்கள்.

இப்பொழுது அடிப்படையான பிரச்னையே 'கஸஸ்" இரத்த இழப்பீடுக்கானது தான்ää அவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அலி (ரலி) அவர்களின் பிரச்னையில் தலையிட்டிருப்பதன் காரணமாக அவர்மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த நிலையில் முஆவியா (ரலி) அவர்களை கலிஃபா பதவிக்குத் தேர்வு செய்ய இயலாது என்று வந்து விட்ட பொழுதுää இனி இருவரும் அல்லாத நடுநிலைப் போக்குக் கொண்ட ஒருவரை கலிஃபாவாகத் தேர்வு செய்வது ஒன்று தான் நம் முன் இருக்கின்ற தேர்வாகும் என்று கூறினார் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள்.

இதனை அபூ மூஸா அஷ்அரி (ரலி) அவர்கள் அமோதித்தார்கள்ää இன்னும் உமர் (ரலி) அவர்களது காலத்தில் முஸ்லிம்கள் எந்தளவு பெயரும் புகழோடும் இருந்தார்கள் என்பதை நினைவுக்குக் கொண்டு வந்தார்கள். உமர் (ரலி) அவர்களைப் போன்றதொரு கலிஃபா வர வேண்டும் என்று விரும்பினார். இதன் விளைவாக நடுவர்கள் அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்களைக் கலிஃபாவாக நியமிக்க விரும்பினர்ää ஆனால் தமாதுல் ஜன்தல் ல் இருந்த அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களைத் தொர்பு கொண்டு அவரது சம்மதத்தைக் கேட்ட பொழுதுää அவர் தன்னால் இயலாது என்று கூறி விட்டார். ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அதற்கடுத்த தேர்வாகக் கொள்ளப்பட்டார். ஆனால் அவரோ என்னைத் தேர்வு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் அப்துல்லா பின் ஜுபைர் (ரலி) அவர்களது பெயர் அடிபட்டதுää ஆனால் அவர் ஒட்டகப் போரில் கலந்து கொண்டிருந்த காரணத்தால்ää அவரது ஆட்சி நடுநிலையாக இருக்காது என்று அவரது பெயரைத் தள்ளுபடி செய்து விட்;டனர்.

அத்துடன் இந்தப் பிரச்னையில் முட்டுக்கட்டை ஆரம்பமானதுää இரு நடுவர்களும் ஒரு தீர்வுக்கு வர முடியாது போனது. ஆனால் சில முடிவுகளை எடுத்தாக வேண்டிய தேவையில் அவர்கள் இருந்தார்கள்.

அலி (ரலி) அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள இயலாதுää உங்களால் முஆவியா (ரலி) அவர்களை ஏற்றுக் கொள்ள இயலாதுää இன்னும் நடுநிலையானதொரு தீர்ப்புக்கும் இப்பொழுது வர இயலாத நிலையில் நாம் இருக்கின்றோம்ää இந்த நிலையில் உங்களது கருத்து என்னவாக இருக்கும் என்பதை நான் அறிய வேண்டும் என்றார் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள்.

என்னைப் பொறுத்தவரையில்ää இருவரையும் ஒதுக்கி வைத்து விட்டுää பொதுமக்களே தங்களது விவகாரத்தைத் தாங்களே தீர்த்துக் கொள்ள விட்டு விட வேண்டும் என்பதே என்னுடைய மிகச் சிறந்த முடிவாக இருக்கின்றது என்று அபூ மூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்படியென்றால்ää அந்த அறிவிப்பை நீங்களே செய்து விடுங்கள் என்று கூறினார் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள்.

அறிவிப்பு

அதன் பின்னர் அபூ மூஸா அஷ்அரி (ரலி) அவர்கள் அறிவிப்பை வெளியிடுவதற்காக எழுந்தார்கள். அறிவிப்பை வெளியிடுவதில் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டாம் என்று அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூ மூஸா அஷ்அரி (ரலி) அவர்களைக் கேட்டுக் கொண்டார். அதனைக் காதில் போட்டுக் கொள்ளாத நிலையில்ää அவரும்ää அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களும் இணைந்து எடுத்திருக்கும் முடிவின்படிää அலி (ரலி) மற்றும் முஆவியா (ரலி) ஆகிய இருவரும் கலிஃபாப் பொறுப்பிற்கான தேர்விலிருந்து நீக்கப்படுகின்றார்கள்ää பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒருவரை கலீஃபாவாகத் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டு விட்;டார். அவரது அறிவிப்பின்படிப் பார்த்தால்ää அவர் தன்னுடைய தரப்பு வாதியான அலி (ரலி) அவர்களைத் தேர்வு செய்வதனின்றும் அவரை நீக்கம் செய்து விட்டார் என்றே கருத வேண்டி உள்ளது.

அவரது அறிவிப்பை அடுத்துää மேடைக்கு வந்த அம்ருப்னுல் ஆஸ் (ரலி)அவர்கள்ää நடுவர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டதன் அடிப்படையில்ää அலி (ரலி) மற்றும் முஆவியா (ரலி) இருவரில் யாரை ஆட்சியாளராக நியமிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். சற்று முன் உங்களிடம் அறிவிப்புச் செய்திருக்கும் அலி (ரலி) அவர்களின் தரப்பு நடுவர்ää தனது வாதியான அலி (ரலி) அவர்களை பதவியிலிருந்து நீக்கி விட்டதாக அறிவிப்புச் செய்திருக்கின்றார். அலி (ரலி) அவர்களை நீக்கம் செய்து விட்ட பின் எஞ்சியிருப்பவர் முஆவியா (ரலி) மட்டுமேää அதன்படி ஆட்சிப் பொறுப்பு முஆவியா (ரலி) அவர்களுக்கே என்றாகி விட்டது என்று அறிவித்தார்.

இரண்டு நடுவர்களுக்குள்ளும் என்ன முடிவு எடுக்கப்பட்டிருந்தது என்பது பற்றி கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களின்படிää அலி (ரலி) மற்றும் முஆவியா(ரலி) ஆகிய இருவரையும் பதவியிலிருந்து நீக்கி விட நடுவர்கள் இருவரும் தங்களுக்குள் ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நடந்தது என்னவோää தீர்மானிக்கப்பட்டதொரு தீர்ப்பை வெளியிடாமல் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் தன்னிச்சையாக நடந்து கொண்டுää அபூ மூஸா அஷ்அரி (ரலி) அவர்களை ஏமாற்றி விட்டார்கள்.

என்னதான் நடந்திருக்க வேண்டும் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. இருவருமே அலி (ரலி) அவர்களையும்ää முஆவியா (ரலி) அவர்களையும் பதவி நீக்கம் செய்வதாக ஒப்புக் கொண்டிருப்பார்களேயானால்ää அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அந்த முடிவுக்கு மாற்றமாகச் சென்று மாற்றமாக அறிவிப்பு வெளியிட்ட பொழுதுää அபூ மூஸா (ரலி) அவர்கள் உடனே மேடைக்குச் சென்று அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவித்தது தவறு என்று அந்த மேடையிலேயே அறிவிப்புச் செய்திருக்க வேண்டும்ää அவரது முடிவு செல்லுபடியாகாது என்றும் அறிவித்திருக்க வேண்டும்.

அபூ மூஸா (ரலி) அவர்கள்ää பொதுமக்கள் தங்களது ஆட்சியாளரைத் தாங்களே தேர்வு செய்து கொள்ளட்டும் என்று முடிவினை எடுத்தவுடன்ää அதனைப் பற்றி பரிசீலிக்காது அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் உடனே அதனை பொதுமக்கள் முன்னிலையில் அறிவிக்கும்படி அபூ மூஸா (ரலி) அவர்களைக் கேட்டுக் கொள்ளää அவ்வாறு அறிவிப்பு வெளியிட்டால் என்ன விளைவுகள் உண்டாகும் என்பது பற்றி எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் உடனே எழுந்து அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார்கள்.

ஒன்று மட்டும் நிதர்சனமான ஒன்றுää அதாவது அலி (ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்திருக்கின்ற காரணத்தினால் கூஃபாவின் கவர்னராக இருந்த அபூ மூஸா (ரலி) அவர்கள்ää அலி (ரலி) மற்றும் முஆவியா (ரலி) அவர்களது விவகாரத்தில் நடுநிலையோடு நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். இன்னும் அவரும் கூட சட்டப்படியும்ää தார்மீக அடிப்படையிலும் அலி (ரலி) அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கூடியவராக இருந்தார். இந்த நிலையில் அலி (ரலி) அவர்கள் இவரைக் கவர்னர் பதவியிலிருந்து நீக்கி விடடார்கள். இந்த நிலையில் அபூமூஸா (ரலி) அவர்களை தனது நடுவராக வற்புறுத்தலின் அடிப்படையில் தான் அலி (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்த நிலையில்ää அபூ மூஸா (ரலி) அவர்கள் மீது முழுமையான நம்பிக்கை இல்லாத நிலையில் தான் அவரை அலி (ரலி) அவர்கள் நடுவராக ஏற்றுக் கொண்டார்கள். இருப்பினும்ää இறையச்சமிக்கதொரு நபித்தோழர் என்ற அடிப்படையில் குர்ஆனின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவர் நடுநிலையோடும்ää நீதமாகவும் நடப்பார் என்ற எதிர்பார்ப்பு அலி (ரலி) அவர்களுக்கு இருந்தது. மிகவும் நடுநிலையோடு நாம் இருக்க வேண்டும் என்று அவர் எடுத்துக் கொண்ட சிரத்தையின் அடிப்படையில் தான்ää அலியும் வேண்டாம்ää முஆவியாவும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துää பொதுமக்களின் தீர்ப்புக்கு அதனை விட்டு விட முடிவு செய்தார். இரு நடுவர்களும் இந்த முடிவினை எடுப்பதற்காக ஒன்று கூடவில்லைää மாறாக அலி மற்றும் முஆவியா ஆகிய இருவரில் யாரை ஆட்சித் தலைவராக நியமிப்பது என்ற முடிவினை எடுப்பதற்காகவே ஒன்று கூடினார்கள்ää பேசினார்கள். எப்பொழுது அபூ மூஸா (ரலி) அவர்கள் தனது இறுதி முடிவுக்கு வந்தாரோää துள்ளிக்குதித்து எழுந்த அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் உடனே அந்த முடிவை அறிவிக்கும்படி அவரைக் கேட்டுக் கொண்டார். உண்மையில்ää இருவருக்குமிடையே எந்த ஒப்பந்தமும் ஏற்பட்டிருக்கவில்லை. அபூ மூஸா (ரலி) அவர்களின் அறிவிப்பினால் என்ன விளையும் என்பதை அவர் அறிந்து வைத்திருநதார்ää எனவே அபூ மூஸா (ரலி) அவர்களே அந்த அறிவிப்பை வெளியிடட்டும் என்று விரும்பினார். அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் நடுநிலையோடு நடந்திருந்தால்ää அவர் அபூ மூஸா (ரலி) அவர்களுடன் இணைந்து எடுத்த முடிவை மீறி இருக்க மாட்டார்கள். அலி (ரலி) அவர்களது நடுவரின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு விட்;டார். அலி(ரலி) அவர்களின் வாழ்க்கை முதுகில் குத்தும் ஏமாற்றங்கள் நிறைந்த வேதனை மிக்க வரலாறாகவே இருந்தது. ஏற்கனவே ஏமாற்றத்திற்குள்ளாக்கப்பட்ட நிலையில்ää மீண்டும் தொடராக அவர் இன்னொரு ஏமாற்றத்தையே சந்திக்க வேண்டியிருந்தது.

அபூ மூஸா (ரலி) அவர்களுக்கு அலி (ரலி) எழுதிய கடிதம்

தீர்ப்பாயப் பணிகள் முடிவடைந்ததுடன்ää அலி (ரலி) அவர்களை நேருக்கு நேர் சந்திக்கவே அபூ மூஸா (ரலி) அவர்களுக்கு தைரியம் இல்லை. எனவேää அவர் மக்காவிற்குச் சென்று விட்டார். அங்கிருந்தபடி தன்னை மன்னிக்கும்படி அலி (ரலி) அவர்களுக்கு அபூ மூஸா (ரலி) அவர்கள் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். அதற்கு அலி (ரலி) அவர்களின் பதில் வருமாறு :

பலர் மறுமையில் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பாழடித்து விட்டார்கள். இந்த உலக வாழ்க்கையின் ஆசாபாசங்களில் அவர்கள் வீழ்ந்து விட்டார்கள்ää ஆட்சிப் பதவியில் நான் ஒரு பிரச்னைப் பொருளாக ஆக்கப்பட்டு விட்டேன். நிச்சயமாகää முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை என்னைக் காட்டிலும் இன்னொருவர் விரும்பி இருக்க முடியாதுää முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருப்பதன் மூலமாகää அதற்காக தன்னலமற்று நான் செய்யும் சேவைக்கு இறைவன் எனக்கு அளப்பரிய நன்மைகளை வழங்குவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கின்றேன். அபூ மூஸாவே..ää நீங்கள் சத்தியத்திற்கு எதிராகத் திரும்பி விட்டீர்கள்ää என்னைக் கைவிட்டு விட்டீர்கள். நிச்சயமாகää உங்களைக் காட்டிலும் துரதிருஷ்டசாலி வ