அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, November 5, 2010

ஈராக்கின் நஸ்ரிய்யா நகரில் இடம்பெற்று வரும் மாணவர்களுக்கான குர்ஆன் போட்டி

சர்வதேச குழு: தென் ஈராக்கிய மாணவர்களுக்கான நான்காவது குர்ஆன் போட்டி அக்டோபர் 31ம் திகதி, தியாகர் மாகாணத்தின் நஸ்ரிய்யா நகரில் ஆரம்பமானது. நஸ்ரிய்யா தாருல் குர்ஆன் நிலையத்தின் பணிப்பாளர் ரஅத் அத்னான் இக்னாவுக்குத் தெரிவிக்கையில், இப்போட்டி, குர்ஆன் மனனம் மற்றும் குர்ஆன் ஓதல் ஆகிய இரு பிரிவுகளில் இடம்பெற்றது என்றார். பஸரா, கிகர், வாசிட், மைசான் மற்றும் அல்முதன்னா ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த ஆரம்ப நிலை, வழிகாட்டல் பாடசாலை மற்றும் உயர்பாடசாலை ஆகியவற்றின் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார். இவர்களே, போட்டியின் முதற்சுற்றில் அதி கூடிய புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றோராவர். இப்போட்டி, நவம்பர் 3ம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளதுடன், வெற்றியாளர்கள் இடம்பெறவுள்ள நிறைவு விழாவின் போது தமக்கான பரிசில்களைப் பெற்றுக் கொள்வர். தென் ஈராக்கிய மாணவர்களுக்கான குஆன் போட்டி, நஸ்ரிய்யா தாருல் குர்ஆன் நிலையத்தினால், அந்நாட்டின் கல்வியமைச்சின் ஒத்துழைப்புடன் வருடாந்தம் நடத்தப்பட்டு வருகின்ற ஒரு போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி:http://www.iqna.ir/ta/

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்