அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, November 5, 2010

அல்முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் குர்ஆன் ஹதீஸ் ஒலிம்பியாட்டின் பேச்சுப் பிரிவு ஆரம்பம்

கல்வி கலாச்சார குழு: அல்முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் 16ஆவது குர்ஆன் ஹதீஸ் ஒலிம்பியாட்டின் பேச்சுப் பிரிவு புனித கும் நகரில், அக்டோபர் 23ம் திகதி ஆரம்பமானது. ஒலிம்பியாட் செயலகத்தின் பொறுப்பாளர் அலி ரிசா குர்பானி இக்னாவுக்குத் தெரிவிக்கையில், இது இப்பல்கலைக்கழகத்திலுள்ள ஈரானியர் அல்லாத மாணவர்களுக்காக நடத்தப்படுகின்றது என்றார். பேச்சுப் பிரிவுப் போட்டிகள், மஷ்ஹத் மற்றும் குர்கான் உள்ளிட்ட பல கிளைகளில் இடம்பெற்றதுடன், கும், மற்றும் இஸ்பஹான் போன்ற பகுதிகளிலுள்ள ஏனைய கிளைகளில் விரைவில் இடம்பெறும் என மேலும் அவர் தெரிவித்தார். நிபுணர்களான டெஹ்தஷ்தி, துர்கமான், முஹம்மதி மற்றும் நஸ்ருல்லாஹி ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்றுவர். இப்போட்டி, தர்தீல், தஹ்கீக் ஓதல், குர்ஆன் மனனம், அதான், நஹ்ஜுல் பலாகா மனனம் மற்றும் பிரார்த்தனைகள் ஆகிய பிரிவுகளில் இடம்பெறுகின்றது. பெண் மாணவியருக்கான போட்டி, அக்டோபர் 27 மற்றும் 28ம் திகதிகளில், கும்மிலுள்ள பிந்துல் ஹுதா பாடசாலையிலர் இடம்பெறும்.
நன்றி:http://www.iqna.ir/ta/

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்