அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Wednesday, November 17, 2010

அரஃபாவில் லட்சக் கணக்கானோரின் சங்கமம்




மக்கா,நவ.16:பிரார்த்தனையுடன் கூடிய மனங்களுடன் உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்த 25 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹாஜிகள் நேற்று அரஃபாவில் சங்கமித்தனர்.

மினாவிலிருந்து ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றிவிட்டு அரஃபா மைதானத்திற்கு புறப்பட்ட ஹாஜிகள் நமீரா மஸ்ஜிதில் ஒன்றிணைந்து தொழுகை, பிரார்த்தனை உள்ளிட்ட வணக்க வழிபாடுகளில் மூழ்கினர்.
லுஹர் தொழுகையைத் தொடர்ந்து முஃப்தி ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் ஆலு ஷேக் குத்பா என்ற பேருரையை நிகழ்த்தினார். இன, நிற, தேச, மொழி பாகுபாடில்லாத மனிதர்களை ஒன்றாக்குவதே இஸ்லாம் கற்றுத் தரும் பாடம் எனவும், செயல்களை அவர்களை வேறுபடுத்துகிறது எனவும் அவர் தனது பேருரையில் தெரிவித்தார்.


குத்பாவுக்கு பிறகு ஹாஜிகள் மாலை வேளைவரையில் அரஃபாவில் ஜபலுற்றஹ்மாவிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அங்கு இரவு தங்கியபிறகு இன்று சூரியன் உதித்த பிறகு மீண்டு மினாவிற்கு செல்கின்றனர்.


ஜம்ராக்களில் கல் எறிவது இன்றைய ஹஜ் கிரியையாகும். பின்னர் தலைமுடியை மழித்தல், தவாஃப், ஸஈ, குர்பான் கொடுத்தல் உள்ளிட்ட ஹஜ் கிரியைகளை மேற்க்கொள்வர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


நன்றி: http://paalaivanathoothu.blogspot.com/

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்