அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, November 11, 2010

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு, பல யாத்திரிகர்களை மக்காவுக்குப் புறப்படுவதிலிருந்து தடுத்துள்ளது

சர்வதேச குழு: பலஸ்தீன கைதிகள் நிருவாகம் குறிப்பிடுகையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபைகள், மேற்குக் கரையிலுள்ள பல யாத்திரிகர்கள், தமது ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மேற்குக் கரையிலிருந்து அம்மானுக்குச் செல்வதை தடுத்து விட்டன எனக் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அந்நிருவாகம் மேலும் குறிப்பிடுகையில், அலன்பை பால எல்லைக்கருகிலுள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சபையினர், யாத்திரிகர்களை மிகக் கடுமையான சோதனைக்கு உட்படுத்தி மிகவும் தீவிரவமாகப் பரிசொதனை செய்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில யாத்திரிகர்கள், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனும் பெயரில், இஸ்ரேலிய படைகளினால் ஹஜ்ஜுக்குச் செல்ல விடாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாக்கிரமிப்பு அதிகார சபைகளினால் யாத்திரிகர் நடத்தப்படும் கடுமையான மற்றும் அவமதிக்கும் செயற்பாடுகள் குறித்தும் இந்நிருவாகம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது

நன்றி:http://www.iqna.ir/ta/news_detail.php?ProdID=689871

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்