அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, November 11, 2010

மக்காவில் இடம்பெறவுள்ள முஸ்லிம் உலக முன்னணி மாநாடு

சர்வதேச குழு: முஸ்லிம் உலக முன்னணியின் 11 சர்வதேச மாநாடு, நவம்பர் 11 தொடக்கம் 13 வரை, புனித மக்கா நகரில் இடம்பெறவுள்ளது என நசீஜ் இணையத்தளம் தெரிவிக்கின்றது.
மாநாட்டின் பிரதான கருப்பொருள் 'பூகோள சகாப்தத்தில் ஊடக சவால்கள்' என்பதாக அமையும் என முன்னணியின் செயலாளர் நாயகம் அப்துல்லாஹ் அல்துர்க் தெரிவித்தார்.
நவம்பர் 9ம் திகதியாகிய நேற்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில், உலகெங்குமுள்ள முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் மற்றும் இஸ்லாமிய நிலையங்களின் பணிப்பாளர்கள் போன்றோர் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்றார்.
'பூகோள சகாப்தத்தில் ஊடக யதார்த்தங்கள்', 'குடும்பம், சமூகம் மற்றும் ஊடுக சவால்கள்', 'இஸ்லாமிய உம்மாஹ்வும் ஊடக சவால்களும்' மற்றும் 'சவால்களை எதிர்கொள்வதில் நடைமுறை அணுகுமுறைகள்' என்பன இந்நிகழ்வில் ஆராயப்படவுள்ள பிரதான தலைப்புகளாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
உலகெங்குமிருந்து முஸ்லிம்கள் பெருந்திரளாக ஒன்றுகூடும் ஹஜ் பற்றிக் குறிப்பிட்ட அவர், ஹஜ் என்பது உண்மையான முஸ்லிம் ஐக்கியத்திற்கான அற்புதமான வாய்ப்பு எனத் தெரிவித்தார்.
முஸ்லிம் உலக முன்னணியின் சர்வதேச மாநாடு, உலக முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்வதற்காக புனித மக்கா நகரில் வருடாந்தம் நடத்தப்பட்டு வருகின்ற ஒன்றாகும்.
நன்றி :http://www.iqna.ir/ta/news_detail.php?ProdID=693271

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்