அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, November 5, 2010

பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டம்!

பணி இடங்களில் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை அபாரதம் விதிக்க வகை செய்யம் சட்ட முன்வரைவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக் கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், "பணி இடங்களில் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2010" என்ற இச்சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரின் போது இச்சட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.பொது அல்லது தனியார் மற்றும் முறைப்படுத்தப்படாத நிறுவனங்கள் ஆகியவற்றில் பணி புரியும் பெண்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் பாலியல் தொல்லைகளின்றி வேலை செய்வதை இச்சட்டம் உறுதி செய்யும். ஆனால், வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் இச்சடத்தின் கீழ் கொண்டு வரப்படவில்லை.பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், நிறுவனத்தின் உரிமையாளர் மீது ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க இச்சட்டத்தில் வகை செயயப்பட்டுள்ளது.

நன்றி:http://www.inneram.com/

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்