அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, November 5, 2010

அல்அஸ்ஹர் நிறுவவுள்ள குர்ஆனிய அச்சகம்

சர்வதேச குழு: அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் அசெம்பிளியின் உறுப்பினர்கள், தமது அண்மைய சந்திப்பின் போது, அல்அஸ்ஹரில் குர்ஆனிய அச்சகமொன்றை நிறுவுவது தொடர்பாக கலந்தாலோசித்தனர் என அல்மிஸ்ரி அல்யவ்ம் தினசரி தெரிவிக்கின்றது. இச்சந்திப்பு, அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைவர் அஹ்மத் அல்தையிபின் பிரசன்னத்துடன் இடம்பெற்றது. பல்கலைக்கழகப் பேச்சாளர் முஹம்மத் ரிபா அல்தஹ்தாவி தெரிவிக்கையில், எகிப்தில் அச்சிடப்படுகின்ற சில குர்ஆன் பிரதிகளின் பிரச்சினைகள் மற்றும் அச்சுப்பிழைகள் தொடர்பான முறைப்பாடுகைளயடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். அச்சுப் பிழைகளுடன் குர்ஆனை வெளியீடு செய்தால் அத்தகைய வெளியீட்டு நிறுவனங்களின் அனுமதி இரத்துச் செய்யப்படும் என, இவ் அசெம்பிளி எச்சரிக்கை விடுத்துள்ளது. குர்ஆனிய அச்சகமொன்றை நிறுவுவதனூடாக, எகிப்து, சவூதி அரேபியாவின் முன்மாதிரியைப் பின்பற்றும். ஏனெனில், சவூதி அரேபியா, புனித அல்குர்ஆனை அச்சிடுவதற்கென, மன்னர் பஹ்த் காம்ப்ளக்ஸ் ஒன்றை நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது
நன்றி:http://www.iqna.ir/ta/

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்