அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, November 11, 2010

இரு வாரங்களில் 31,000 ஹாஜிகள் பயணம்

சர்வதேச குழு: 31,000க்கும் அதிகமான ஹஜ் யாத்திரிகர்கள், டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜித்தா மற்றும் மதீனா நகர்களுக்குப் பயணிக்க உள்ளனர். எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் மற்றும் சவூதி அரேபிய எயார்லைன்ஸ் ஆகியவற்றின் இணை முயற்சியால் இது சாத்தியமாகின்றது என அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார்.
இவற்றுக்கான விமான சேவைகள் நவம்பர் 12ம் திகதி ஆரம்பமாகும் என டுபாய் விமான நிலையத்தின் ஹஜ் கமிட்டியின் தலைவர் முஹம்மத் காதிம் தெரிவித்தார்.
டுபாயிலிருந்து புறப்படும் இந்த இணை முயற்சிகள் வியாழக்கிழமை ஆரம்பமானது. இது வரை 12,000 ஹாஜிகள் எமிரேட்ஸ் மூலமாகவும் 4000 ஹாஜிகள் சவூதி எயார்லைன்ஸ் மூலமாகவும் பயணித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
ஹாஜிகளில் 70 வீதமானோர் டுபாய் விமான நிலையத்தினூடாக ஜித்தாவை அல்லது மதீனாவை வந்தடைகின்றனர் என மேலும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து சேவைப் பிரிவுகளும், அவசர சிகிச்சைப் பிரிவுக்கான வசதிகளுடன் கூடிய அம்பியுலன்ஸ், வைத்தியர் சேவைகள், தாதிகள் மற்றும் உதவியாளர்கள் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

நன்றி:http://www.iqna.ir/ta/news_detail.php?ProdID=691618

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்