அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, November 5, 2010

நமூனே குர்ஆன் விளக்கவுரையே நூலகங்களில் அதிகம் வாசிக்கப்படும் நூல்

கல்வி கலாச்சார குழு: புனித அல்குர்ஆனுக்கான நமூனே விளக்கவுரையே பொது நூலகங்களில் மிகவும் அதிகமாக வாசிக்கப்படுகின்ற நூல் என, பொது நூலகங்களின் கலாசார விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவிக்கின்றார். மஜ்துதீன் முஆலிமி இக்னாவுக்குத் தெரிவிக்கும் போது, கடந்த வருட புள்ளிவிபரங்களின் பிரகாரம், இந்நூல் ஏனைய எல்லா நூல்களையும் விட மிக அதிகமாக இரவல் பெற்றுச் செல்லப்பட்டுள்ளது என்றார். நமூனே விளக்கவுரை என்பது, சிரேஷ்ட ஆயத்துல்லாஹ் நாசிர் மகாரிம் ஷீராசி மற்றும் முஹம்மத் ரிஸா அஷ்தியானி, முஹம்மத் ஜாபர் இமாமி, தாவுத் இல்ஹாமி, அஸதுல்லாஹ் இமானி, அப்துல் ரசூல் ஹஸனி, செய்யித் ஹஸன் ஷுஜாயி, செய்யித் நூருல்லாஹ் தபதபாயி, மஹ்மூத் அப்துல்லாஹ், ஹுஜ்ஜதுல் இஸ்லாம் கராஅதி மற்றும் முஹம்மத் முஹம்மதி இஷ்திஹார்தி உள்ளிட்ட பல சமய அறிஞர்களினால் உருவாக்கப்பட்ட நூலாகும். பாரசீக மொழியிலான இதன் விளக்கவுரை 27 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. இது ஆங்கிலம், அரபு, மற்றும் உர்து ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது

நன்றி:http://www.iqna.ir/ta/

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்