சர்வதேச குழு: சுமார் 90,000 ஈரானியர்கள், புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இது வரை சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர் என இக்னாவின் கிளை தெரிவிக்கின்றது.
அவர்களுள் 70,000 பேர் புனித மக்காவிலும் ஏனையோர் புனித மதீனாவிலும் உள்ளனர் என ஈரானிய ஹஜ் அதிகாரி ஹமித் ஹபிபி இக்னாவுக்குத் தெரிவித்தார்.
மக்காவிலுள்ள 95 வீதமான ஈரானிய ஹாஜிகள், மஷாஇர் மற்றும் மினா என்பவற்றுப்பு நெருக்கமாக உள்ள அஸிஸியா மாவட்டத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விரு நகரங்களுக்கும் வெளியே உள்ளவர்களுக்கென விசேட பேரூந்துச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாப் ஹபிபி மேலும் குறிப்பிடுகையில், மக்காவிலுள்ள ஈரானிய ஹாஜிகளுக்கான அனைத்து உணவுகளும், இரு சமையலறைகளில் சமைக்கப்படுகின்றன. நீரிழிவு போன்ற நோயுள்ளவர்களுக்கென விசேட உணவு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன எனவம் அவர் குறிப்பிட்டார்.
இவ்வருடம் சுமார் 100,000 ஈரானியர்கள் தமது ஹஜ் கடமையை நிறைவேற்றுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்
நன்றி: http://www.iqna.ir/ta/news_detail.php?ProdID=690752
No comments:
Post a Comment