அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, November 11, 2010

மக்காவில் இடம்பெற்ற இஸ்லாமிய நல்லிணக்க மாநாடு

சர்வதேச குழு: இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான மாநாடொன்று, நவம்பர் 10ம் திகதியாகிய இன்று காலை, புனித மக்கா நகரிலுள்ள ஆன்மீகத் தலைவரின் பிரதிநிதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஈரானிய ஹஜ் அமர்வுக்கான குழுவுக்கு தலைமை தாங்கும் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் செய்யித் அலி காஸி அஸ்கர் இம்மாநாட்டில் உரையாற்றினார் என இக்னாவின் கிளை தெரிவிக்கின்றது.
இஸ்லாமிய நல்லிணக்கம் என்பது, உலகெங்கும் பல்வேறு கருத்தரங்குகளும் மாநாடுகளும் இதற்காக நடத்தப்பட்ட ஒரு முக்கிய விடயமாகும் என அவர் தனதுரையில் வலியுறுத்தினார்.
ஒற்றுமையெனும் அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்ற அல்குர்ஆன் வசனம், இஸ்லாமிய நல்லிணக்கத்தை மிகவும் வலியுறுத்தும் ஒரு வசனம் எனக் குறிப்பிட்ட அவர், இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளிடையே இத்தகைய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் அதற்காக உழைப்பதும் மிகப் பெரும் கடமைகளும் நன்மையும் எனத் தெரிவித்தார்.
முஸ்லிம்களிடையிலான வேற்றுமையும் முரண்பாடும் முஸ்லிம்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சந்தர்ப்பத்தை எதிரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விடுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஹுஜ்ஜதுல் இஸ்லாம் காஸி அஸ்கர் மேலும் குறிப்பிடுகையில், ஒரே இறைவன், ஒரே குர்ஆன், ஒரே இறைத்தூதர் மற்றும் அஹ்லுல்பைத் போன்ற பல விடயங்கள் ஒற்றுமையை ஏற்படுத்தும் பொதுப் பண்புகளாக இருக்கையில், முஸ்லிம்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மிகவும் சிறியவையும் அற்பமானவையும் எனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி:http://www.iqna.ir/ta/news_detail.php?ProdID=693272

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்