அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, May 27, 2010

நீங்கள் விசாரிக்கபடும் முன் உங்களை நீங்களே விசாரித்து கொள்ளுங்கள் : சுய பரிசோதனை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)மரியாதைக்குரிய வாசகர்களே அல்லைஹ்வின் மாபெரும் கிருபையினால் முஸ்லிம்களாக இருக்ககூடிய நாம் உண்மையில் அல்லாஹ் காட்டித்தந்த வழிமுறைகளை முழுமையாக பின் பற்றுகின்றோமா நபி முகம்மது முஸ்தபா ரசூலே கரீம் (ஸல்) அலைஹிவசல்லாம் அவர்கள் வாழ்ந்து காட்டிய முறைப்படி நாம் நம்முடைய வாழ்க்கைமுறையை அமைத்து கொண்டுல்லோமா மருமையிலே அந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் என்று சொல்லக்கூடிய சுவனத்திலே இருப்பதற்கு தகுதியானவர்களாக இருக்கின்றோமா அல்லது பெயர் அளவிலே முஸ்லிம்களாக இருக்கின்றோமா நம்முடைய ஒவ்வொரு அசைவுகளும் இஸ்லாமாக இருக்கின்றதா என்று நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளக்கூடிய அவசியம் நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது அதன் அடிப்படையிலே நம்மைநாமே சுயபரிசோதனை செய்துகொள்ள இந்த கட்டூரை இன்ஷா அல்லாஹ் துணைபுரியும் என்று நினைக்கின்றேன் இதை படித்துவிட்டு நமது சகோதரர்களுக்கும் நண்பர்களுக்கும் இதை அனுப்புங்கள் அறிமுகம் செய்யுங்கள் நம்முடைய எந்த ஒரு செயலும் நம்மை சார்ந்து இருக்ககூடியவர்களுக்கு ஒருசதவிகிதமேனும் ஈமானின் அளவை அதிகரிக்க பயன்படுமானால் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமையும் இந்த கட்டூரை http://nagoreflash.blogspot.com என்ற இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது

(முகம்மது சுல்தான் நாச்சியார்கோவில்)


ஒரு இண்டர்விவ் நாம் போகிறோம் என்று வைத்துகொள்வோம், அங்கே என்னவெல்லாம் கேட்ப்பார்கள் அதெற்கு எப்படி நாம் பதில் சொல்வது, இப்படி கேட்டால் எப்படி பதில் சொல்வது , அப்படி கேட்டால் எப்படி பதில் சொல்வது என்று பல கேள்விகளை கேட்டுக்கொண்டு முதலில் நாம் நம்மை அதற்காக தயார்படுத்தி கொள்வோம்,அந்த குறிப்பிட்ட வேலைக்கு நம்மை தகுதியான ஆளாக மற்றிகொள்வோம்.

வெற்றி பெற்றால் மிகவும் சந்தோசபடுவோம் ஆனால் தோல்வி என்றால் மனவருத்ததோடு அடுத்த வேலையை தேடி அலைவோம் இது இந்த உலகத்தில் நடக்கும் சங்கதி - ஒன்றை விட்டால் அடுத்தது ..

அதை போல் நாம் ஏற்று இருக்கும் இஸ்லாம் இருக்கிறதே,மறுமைக்கான ஒரு இண்டர்விவை இம்மையில் நமக்கு வைக்கிறது ... ஆனால் பாருங்கள் அந்த இண்டர்விக்கு என்ன கேள்வி என்பதையும் , அதற்க்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் சொல்லிகொடுக்கபட்டிருகிறது என்றால் இதை விட சுலபமான இண்டர்விவ் இந்த உலகத்தில் இருக்கிறதா என்ன ? நிச்சியமாக இல்லை…..

ஆனால் உலக வாழ்விற்காக காலம் பூராக கஷ்டபட்டு செல்வத்தை
சேர்க்கும் நாம் , மறுமை வாழ்விற்கு சேர்க்க வேண்டிய செல்வத்தில் கோட்டை விட்டு விட்டு ஏழையாக இருகிறோம்.


நிரந்தரமில்லாத இவ்வுலக வாழ்க்கைக்கு நாம் பணம் சம்பாரிக்க வேண்டும் என்பதற்க்காக பிறந்து சில வருடங்களிலே படிக்க ஆரம்பித்து விடுகிறோம். சராசரியாக 20 வருடங்கள் தொடர்து படிக்கிறோம் சிலர் வேளையில் இருந்தாலும் அதிக வருமானத்திற்காக மேலும் படிக்கிறார்கள். ..

உண்மையை சொன்னால் ஒரு இண்டர்விவிர்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட மறுமையில் அல்லாஹ்வின் முன் நிற்பதற்கு கொடுப்பதில்லை சிந்திக்க கடமை பட்டுளோம் .

உங்கள் தாயின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான்.( 16:78)


ஒன்றுமே இல்லாத , படைக்கபடாத நிலையில் இருந்த நமக்கு " உயிர் கொடுத்து , உணவு கொடுத்து , மனைவி மக்களை கொடுத்து வாழவைத்த நம் இறைவனுக்கு நன்றி செலுத்துவதில் கஞ்சத்தனம் காட்டுகிறோம் , இஸ்லாத்தில் தூய வடிவம் நமக்கு தெரியவில்லை , எப்படி அல்லாஹ்வை பயப்படுவது என்று தெரியவில்லை, ஏதோ முஸ்லிமா பொறந்துட்டோம் தொழுகிறோம் . ஓதுகிறோம் என்று தான் நம்மில் பலரின் நிலைமை

ஆனால் இஸ்லாம் நம்மை ஏதோ அலுவலகத்தில் வேலை செய்யும் பகுதி நேர ஊழியனாக இருக்க சொல்ல வில்லை , மாறாக நீ வாழ்வதே இஸ்லாமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது .

இவ்வுலகில் ஒரு கம்பெனியில் பெரிய பதவி வேண்டும் என்று ஆசை படும் நாம் ,மறுமையில் சொர்க்கத்தில் உயர்ந்த சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசை படுவதில்லை ஏன் ? அதன் முக்கியத்துவம் நமக்கு தெரியவில்லை ..


நாம் ஒரு அமலை நன்மை என்று நினைத்து செய்கிறோம், அது யாரோ நமக்கு தெரிந்தவர்கள் இஸ்லாத்தின் பெயரால் சொல்லிகொடுத்தது, சரி என்று செய்து கொண்டு இருக்கிறோம் - மரணம் நமக்கு வருகிறது , நாளை மறுமையில் நிறுத்த படுகிறோம் : மீஜான் திராசு தட்டில் நன்மை மிக குறைவாக இருக்கிறது .., ( நீங்கள் செய்து வந்தது அல்லாஹ் , ரசூல் சொல்லிகொடுகாத செயல் அதலால் நீங்கள் நன்மை என்று எண்ணி செய்த செயல் தூக்கி ஏறிய படுகிறது )

என்ன செய்வீர்கள் ? நஷ்டவாலி யார் ? யாரிடம்போய் நியாயம் கேட்பீர்கள்..?
எந்த ஜாமத்தை அங்கே போய் குறை கூறி கொண்டு இருப்பீர்கள் ..?
காலில் முல் குத்தினால் தாங்க முடியாத நாம் நரகத்தில் ...????? நினைத்து பார்க்கவே நடுங்குகிறது ...


இஸ்லாமியர்களான நாம் இஸ்லாத்தை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
இஸ்லாம் நமக்கு எவ்வாறு கட்டளை இட்டுள்ளதோ , அதன் படி தான் பின்பற்ற வேண்டும். ஆனால் அனேக முஸ்லிம்களின் செயல்பாடுகள் இஸ்லாத்தின் பெயரால் செய்யப்பட்டாலும் இஸ்லாம் அல்லாத செயலாகதான் இருக்கிறது...


இஸ்லாம் சொல்லவில்லை என்றால் அது 1000 வருடம் செய்யபட்ட செயலாக இருந்தாலும் நிராகரிக்க வேண்டும்..

மனம் போன போக்கில் ஒரு விஷயத்தை செய்து விட்டு , மறுமையில் நன்மையை எதிர்பார்ப்பது முட்டாள் தனமில்லையா ?
(நபியே!) நீர் கூறுவீராக "ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்."(al-quran 17:84)


அப்படி மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்றால் - இஸ்லாத்தை நாம் ஒவ்வொருவரும் நபி ( ஸல் ) சொல்லிகொடுத்த பிரகாரம் அமைத்து கொள்ள வேண்டும் .

குரானை படிக்க வேண்டும் , ஹதிதை படிக்க வேண்டும் , வாழ்க்கை முறையை எப்படி இஸ்லாம் அமைத்து கொள்ள சொல்கிறது என்பதை இஸ்லாத்தின் ஒளியில் அறிந்து அதை நடை முறை படுத்த வேண்டும் ..

நிச்சயாமாக இவ்விஷயத்தில் அல்லாஹ்விற்கு பயந்து தூய இஸ்லாத்தை அறிந்து செயல் பட வேண்டும் மன இச்சையை பின்பற்ற கூடாது .


கீழ்காணும் நபி மொழியை பாருங்கள் :
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து ஒளூ பற்றிக் கேட்கலானார். அதற்கவர்கள் ஒவ்வொன்றையும் மூம்மூன்று முறைகள் செய்து காட்டிவிட்டு, இதைவிட கூடுதலாகச் செய்பவர், முறைதவறியவராகவும், எல்லை மீறியவராகவும், அக்கிரமக்காரராகவும் ஆகிவிடுவர் என்றார்கள்.
அம்ருபின் ஷுஐபு(ரழி), --அஹ்மத்.


ஒளு செய்வது சுத்ததிர்காக தான் , ஒரு முறை அதிகமாக செய்தால் ஒன்றும் ஆகிவிடாது ஆனால் அதை கூட நபி அவர்கள் தடுத்தார்கள் , தனது சொல்லுக்கு மாறு செய்ய கூடாது வறம்பு மீறக்கூடாது என்கிறார்கள் என்றால் நாம் எந்த அளவிற்கு பொறுப்புடன் செயல் பட வேண்டும் என்பதை யோசித்து பார்த்து கொள்ள கடமை பட்டுளோம்.

நாளை மறுமையில் அல்லாஹுடைய தூதர் என்ன சொல்லிகொடுதார்களோ , என்ன செய்ய சொன்னார்களோ அதை பற்றி தான் அல்லாஹ் கேட்ப்பான் .. உங்கள் ஜமாஅத் தலைவர் என்ன சொன்னார் , உங்கள் முஹல்லா ஹஜரத் என்ன சொன்னார் என்று கேட்க மாட்டான்..

ஏனென்றால் முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தை உரிய முறையில் அறிந்து கொள்ள வேண்டும் அப்போது தான் , அல்லாஹ்வின் வல்லமையை புரிந்து மனதார ஒவ்வொரு கடமையை செய்ய முடியும் . .

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். ( அல்குரான் 38:29 )


இந்த வசனங்களை சிந்தயுங்கள் என்கிறான் இதுவரை நாம் என்ன சிந்தித்தோம் ?
நல்லுணர்வு பெறுவீர்கள் என்கிறான் என்ன கிடைத்தது ?

குரானை பொருள் உணர்ந்து படித்தால் தானே புரிவதற்கு , அரபியில் மட்டும் படித்தால் போதாது .

அல்லாஹ் நம்மோடு பேசுகிறான் அவன் தன்னை பற்றி என்ன சொல்கிறான் ?அவன் படைப்பான நம்மை பற்றி என்ன சொல்கிறான் ? என்பதை குரானை பொருள் உணர்ந்து படித்தால் தான் புரியும் இன்ஷால்லாஹ்.

நமக்கு புரியாது,தெரியாது என்கிறீர்களா? அல்லாஹ் சொல்கிறான் கேளுங்கள் :

நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்குரான் 54:17)

நம்முடைய நாடி பிடித்து சொல்கிறான் :இக் குர்ஆனை உனக்கு எளிதாக அனுபிவைத்து இருக்கிறேன் , நல்லுணர்வு பெருவியா ? என்று நம் அனைவரிடம் கேட்கிறான் , பதில் சொல்கிறோமா ?

நாம எங்க இருகிறோம் ? உண்மையில் சொர்க்க சோலைகளை அடைவதை குறிகோளாக கொண்ட நாம் ,சத்தமில்லாமல் அசத்தியத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டோம் .

ஆதலால் இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாட்டையும் , இஸ்லாம் நமக்கு கட்டளை இட்டது தானா ? என்று சுய பரி சோதனை செய்ய கடமைபட்டுளோம் .

இஸ்லாம் சொல்லாத அதாவது நபி (ஸல் ) சொல்லி தராத எந்த விஷயமும் நமக்கு தேவை இல்லை .. உலகத்திற்கு அருட்கொடையான நபி ( ஸல்) அவர்களை விட அதிகமாக நன்மையை நம்மால் செய்ய முடியுமா ? ( அவர்கள் அளவிற்கு செய்வதே முடியாத காரியம் )

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (Surat Al-Ahzab 33:36)

அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம் - அல்லாஹ்விற்கு எதையும் , எதுக்காகவும் , யாரையும் , நேரடியாகவோ , மறைமுகமாகவோ இணை வைக்காமல் வாழ்வோம் ..

உலக மக்களுக்கு முன்மாதிரியான அல்லாஹ்வின் தூதர் நபி ( ஸல் ) அவர்களை மட்டும் பின்பற்றி வெற்றி பெறுவோம் . ( வேறு யாரை பின்பற்றி நாளும் தடம் புரழ்ந்து விடுவோம் )
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான வழியை காட்டுவானாக !

என்ன இண்டர்விக்கு ரெடியா ?
மறுமை இண்டர்விக்கு தயாரா ? சத்தமில்லாமல் நெருங்குகிறது மரணம்..!!!! உஷார்


NAGOREFLASH.
நன்றி:http://nagoreflash.blogspot.com

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்