அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Wednesday, May 26, 2010

காலத்தின் அருமை


‘வல்அஸ்ர்’ காலத்தின் மீது ஆணையாக.எனத் தொடங்கும் திருமறையின் 103 வது அத்தியாயத்தின் முதல் வசனம் காலத்தின் அருமையைக்காட்டும் அற்புதமான வசனமாகும்.. இவ்வாறு காலத்தை முன்னிறுத்தித் தொடங்கியிருப்புத மிகவும் சிந்தனைக்குரியதாகும்.. இச்சொல் அளவில் மிகச்சிறியதாக இருப்பினும் அது காட்டும் நுட்பமும் திட்பமும் மிக்க பொருள் வானைவிட விரிவானது.

எனத் தொடங்கும் திருமறையின் 103 வது அத்தியாயத்தின் முதல் வசனம் காலத்தின் அருமையைக்காட்டும் அற்புதமான வசனமாகும்.. இவ்வாறு காலத்தை முன்னிறுத்தித் தொடங்கியிருப்புத மிகவும் சிந்தனைக்குரியதாகும்.. இச்சொல் அளவில் மிகச்சிறியதாக இருப்பினும் அது காட்டும் நுட்பமும் திட்பமும் மிக்க பொருள் வானைவிட விரிவானது.ஆணைப் பொருளாகிய காலத்திற்கும் அதைத் தொடர்ந்து நிறுவப்படும் கருத்துக்குமிடையே இழையோடுகின்ற தொடர்பினை காணும் போது நாம் வியந்து நிற்கிறோம். காலத்தின் அருமை பெருமைகளால் தான் காலத்தின் மீது ஆணையாக என இந்த அத்தியாயம் தொடங்குகிறது.

“காலத்தின் அருமையும் பெருமையும்”

காலத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றலை இவ்வுலகில் எந்தப் பெருவீரனும், பேரரசனும் பெற்றிருக்கவில்லை. ஏழையும், ஏந்தலும், கோழையும், வீரனும், இளைஞரும் முதியவரும், ஆடவரும் பெண்டிரும் காலத்தின் ஆட்சிக்கு அடங்கியே ஆக வேண்டும்.

நாள் தோறும் மாறி வரும் சிறு பொழுதும் , ஆண்டுதோறும் மீண்டுவரும் பெரும் பொழுதும் காலத்தின் அருமையைல்லவா ? மழலைக்குழந்தை சிறுவனாகி, இளைஞனாகி, காளையாகி, முதுமையாகி கூனற்கிழவனாகி மாறுவதும் காலத்தின் விந்தையன்றோ ?

காலத்தின் பார்வையிலிருந்து எதனையும் நாம் மறைத்து விடமுடியாது.மனிதன் காலத்திற்கு அடங்கி நடக்கவேண்டுமே தவிர, காலம் ஒருபோதும் மனிதனுக்கு அடங்கி நடக்காது.

“காலமும் கடலலையும் எவருக்காகவும் காத்திராது”என்பது ஆங்கிலப்பழமொழி. “ஓரங்குலத் தங்கம் கொடுத்தாலும் ஓரங்குலக் காலத்தை விலைக்கு வாங்க முடியாது” என்பது சீனப்பழமொழி. “காலம் கண் போன்றது ! கடமை பொன் போன்றது” என்பது தமிழகப் பழமொழி.

“காலமென்பது ஓய்வற்றது !, உலகின் உயிர் போன்றது!நிகழ்ச்சிகளை சுமந்தோடும் ஆறு’.” இவ்வாறெல்லாம் அறிஞர் பெருமக்கள் பலர் இயம்பியுள்ளனர்.

காலத்தின் அருமையையும், நேரத்தின் பெருமையையும் இவையனைத்தும் தெளிவுபடுத்துகின்றன.

சிறு துள்ளி பெருவெள்ளமாதல் போன்று, பல மணித்துளிகள் ஒன்றிக்கலப்பதே காலமாகும். ஓரு நிமிட நேரம் அளவிற்குறுகியதாயினும் அந்நேரத்துள் உலகில் நிகழும் நிகழ்ச்சிகள் உலகோரை அதிசயிக்க வைக்கின்றன.

1. ஒரு நிமிட நேரத்தில் நாம் வாழும் பூமி 950 மைல்கள் தன்னைத்தானே சுற்றிவிடுகின்றன.

2. 14000 கன அடி மழை மாநிலத்தில பொழிந்து விடுகின்றது.
3. 35000 டன் தண்ணீர் கடலில் கலந்து விடுகின்றது.
5. 68 கார்களும் 4600 செருப்புகளும் உற்பத்தியாகின்றன.
6. 114 குழந்தைகள் பிறக்கின்றன.
7. 100 பேர் இறக்கின்றனர்.
8. 34 திருமணங்களும் 3 மணவிடுதலைகளும் நிகழ்கின்றன.
9. 6000 விண்கற்கள் வீழ்கின்றன.

பல்லாண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு ஒரு புள்ளி விவரக்கணக்கெடுத்து காலத்தின் அருமையினை உணர்த்தினார் ஜெர்மானிய அறிஞர் ஒருவர். மிக வேகமாக வளர்ந்து வரும் இன்றைய நாளில் இவற்றை நூறாகப் பெருக்கினால் நேரத்தின் அருமை புரியும். இத்தகைய சீரும் சிறப்புமிக்க காலத்தின் மீது ஆணையிட்டு இறைவன் கூறும் மாண்புமிக்க அறிவுரை மனித குலத்துக்கு சீரிய அறிவுரையாகும்.

அதே வேளையில் வாழ்வின் குறிக்கோளை உணராமல் தான்தோன்றித்தனமாக நடக்கும் மக்களுக்கெல்லாம் இக்கருத்து ஒரு எச்சரிக்கையாக அமைகின்றது.

எடுத்ததும் துவக்கமே “மனிதன் நஷ் டத்திலிருக்கிறான்” என்ற தொடர் மனிதனுக்கு ஒரு வகை நடுக்கததைத் தருகிறது. தன்னைப் படைத்த நாயனை மறந்து பொருளைத் தேடுவதிலும் மனைவி மக்களோடு உல்லாசமாக பொழுதைக் கழிப்பதிலும் ஈடுபடுவோரும், வல்ல நாயனின் வழியிலே நடவாது சுகபோகங்களிலே மூழ்கி நிற்போரும் ஆடிப்பாடி குடித்துக் கும்மாளமடித்து சிற்றின்ப வேட்கையிலே தோய்ந்து கிடப்போரும் இறைவனை மறந்து ஆட்சி அதிகாரத்திலே செருக்கோடு வீற்றிருப்போரும் காலத்தின் வன்மையான பிடியிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது.

” காலம் வரும்போது இறைவனின் பிடி மிகவும்கடுமையானது” என்பதை
85: 12 என்ற மறை வசனம் எச்சரிக்கிறது. காலத்தின் அருமையும் அது உணர்த்தும் உண்மையும் உணராது புதைகுழியை சென்றடையும்வரை மனிதன் அதிகமதிகமாகச் செல்வத்தைத்தேடி குவித்து மகிழ எண்ணுகிறானே தவிர அவற்றை வழங்கிய வல்ல நாயனை எண்ணிப்பார்க்கவோ நன்றிப்பெருக்கோடு வணங்கி வழிபடவோ செய்யாது அவற்றிற்காக மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதையும் மறந்து வாழும் மனிதன் ‘பெரும் நஷ் டத்திலல்லவா’ உள்ளான் என்பதை மனிதன் சிந்தித்துப் பர்க்கவேண்டாமா

நன்றி:http://albaqavi.com/

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்