இன்று முதல் எம்.பி.பி.எஸ் விண்ணப்பம்: 17 அரசு கல்லூரிகளில் விநியோகம்
First Published : 17 May 2010 12:00:00 AM IST
சென்னை, மே 16: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 16) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,483 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி, புதிதாகத் திறக்கப்பட உள்ள விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.மொத்தம் 20,000 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படும்.ஒரே விண்ணப்பம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்பில் சேர வழக்கம் போல ஒரே விண்ணப்பம் வழங்கப்படும். சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்படும். கட்டணம் ரூ.500-க்கு டி.டி. அளித்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆதிதிராவிட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.மே 31 கடைசி: விண்ணப்ப விநியோகம் மே 31-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர கடைசி நாள் மே 31-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஜூன் 11-ல் ரேங்க் பட்டியல்: எம்.பி.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வரும் ஜூன் 11-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். சென்னை கீழ்ப்பாக்கத்தில் முதல் கட்ட கவுன்சலிங் ஜூன் 21-ம் தேதி தொடங்கும்
நன்றி:www.dinamani.com
No comments:
Post a Comment