அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Saturday, May 15, 2010

டென்ஷனைக் குறைத்து மனதை ரீசார்ச் செய்வீர்..!

ஆரோக்கியம்

ஒவ்வொரு நாளும் நம்முடன் விடாமல் கூடவே வரும் தொல்லையாக 'டென்ஷன்' நீங்காமல் இருக்கின்றது.

அலுவலகத்திலும் டென்ஷன்... வீட்டிலும் டென்ஷன்... காலையில் தொடங்கி மாலை வரை ஒரு போர் செய்து முடித்தது போல் நமக்கு இருக்கிறது!

அந்தப் போர் முடிந்ததுமே சோர்வடைந்து விரக்தியடைகிறோம்.

மறுநாளும் ஆதே டென்ஷன்... அதே விரக்தி.... இப்படியே தொடர்கின்றது நமது அன்றாட வாழ்க்கை!

என்றைக்காவது இந்தத் தொல்லையிலிருந்து தப்பிக்க முடியாதா என்று ஆசைப்படாதவர்கள் ரொம்ப குறைவு.

அமெரிக்காவில் ஒரு சைக்காலஜி அசோசியேஷன் நடத்திய ஆய்வில், அதிகமாக மன அழுத்தத்தை அனுபவிக்கின்றவர்கள், 'மேலதிகாரிகள்' என்று தெரியவந்துள்ளது.

* மன அழுத்தம், விரக்தி பலநேரங்களில் உடலை பாதிக்கின்றது.

* அதிகமான மன அழுத்தம் ஹார்மோன் வித்தியாசத்துக்கு காரணமாகின்றது.

* உயர் ரத்த அழுத்தம் இதய சம்பந்தமான நோய்களுக்கு காரணமாகின்றது.

* உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது மட்டுமல்லாமல், எலும்புகளில் அதிக அழுத்தம் ஏற்படுகின்றது.

* மறதி, அதிக கோபம், சோம்பேறித்தனம், நாடி சம்பந்தமான நோய்கள் வரை வருவதற்கான காரணமாகின்றது, இந்த மன அழுத்தம்!

ஒவ்வொரு நபரும் அனுபவிக்கிற 'டென்ஷன்', ஒவ்வொரு விதமாக இருக்கும்.

அலுவலகத்தில்...

நமக்கு பிரச்னைகள் ஏற்படுவதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடிந்தால், ஒரு அளவிற்கு நம்மால் டென்ஷனை குறைக்க முடியும். அவ்வாறு காரணத்தை அறிவதால், அதைப் போக்குவதற்கான மன உறுதியைப் பெற முடியும். அதற்காக முயற்சிக்க வேண்டும். வேலை செய்யும்போது டென்ஷன் ஆகாமல் இருக்க, உங்களை மனரீதியாக தயார்படுத்துங்கள்.

சிரிக்கலாமே...

சிரித்து பேசுவது உங்களுக்கும், உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. சிரிப்பு என்றால் வாய்வலிக்க சிரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அது, சில நேரங்களில் உங்களுடைய வேலைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும். அப்படி நடந்து கொள்ளாமல் இருப்பது உங்களுக்கு நல்லது. சிரிப்பு நம்முடைய மன அழுத்தத்தை குறைக்கின்றது. அலுவலக இடைவெளியில் நண்பர்களுடன் சிரித்து பேசுவதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் வேண்டும். அதற்காக டைம் டேபிள் போட்டு சிரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. உணவு இடைவெளிக்கு பிறகு நண்பர்களுடன் சற்று நேரம் அரட்டை அடிப்பது நல்லதே.

ஒய்வு நேரங்களில் ஜோக்ஸ் சொல்வதற்க்கும், கார்ட்டூன் பார்ப்பதற்கும், புத்தகம் படிப்பதற்கும் முயற்சிக்கவும். இது ஓரளவிற்கு நம்முடைய மன அழுத்தத்தை குறைகின்றது.

தூங்குங்கள்...

நன்றாக தூங்குவது ஓரளவிற்கு டென்ஷன் குறைக்கின்றது. தூங்குவதற்கு மாத்திரை
எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, சூடான பால் பருகலாம். நன்றாக தூங்க முடியும். காப்பி, டீ
போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும்.

உறவுகள்...

வேலைக்கு போகின்ற ஆண், பெண் இருவருமே கவனிக்க வேண்டிய விஷயம்தான் இது.
வேலைதான் முக்கியமென்று நினைக்கின்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. இது, உங்களுடைய
உறவுகளில் பிரிவு ஏற்பட காரணமாக இருக்கின்றது. அப்படி ஒரு நிலைமை வராமல்
பார்த்துகொள்ளும் கடமை உங்களுக்கு இருக்கின்றது. வாழ்க்கை வெற்றிகரமாக இருப்பதற்கு, ஆரோக்கியமும் உடலுறுதியும் மட்டுமல்ல; நல்ல ஒரு திட்டமும் தேவைதான்.

கணவன், மனைவி எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றாக தீருமானிப்பது உங்களுடைய பிரச்னைகளை ஓரளவிற்கு குறைத்து கொள்ள உதவும். அது மட்டுமில்லாமல் உங்களுடைய
துணை சொல்கின்ற நல்ல உபதேசங்கள் பல நேரங்களில் டென்ஷனை குறைக்க மட்டுமல்லாமல், அடுத்த நாள் வேலை நல்ல மனதோடு தொடங்குவதற்கும் வழிவகுக்கும்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் செலவழிப்பதால் மனதிற்கு ஆறுதலாகவும், நிம்மதியாகவும் இருக்கும்.

உடற்பயிற்சி...

உடற்பயிற்சி ஓரளவிற்கு டென்ஷனை குறைக்கின்றது. இது உடலுக்கும், மனதிற்கும்
புத்துணர்வு தருகின்றது. இந்த புத்துணர்வு மனதினை சரிவர செயல்பட துணைபுரியும்.

காலையிலோ, மாலையிலோ மனைவி உடனோ, நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ ஒரு மணி நேரம் நடப்பதால், உடலிலுள்ள பாரம் குறைப்பது மட்டுமல்லாமல், மனதிலுள்ள பாரமும் குறையும்...

ஆன்லைன் ஜோக்ஸ்...

இன்டர்நெட்டில் வருகின்ற ஜோக்ஸும், விளையாட்டுகளும், ஆரோக்கியமான சாட்டிங்கும் ஓரளவிற்கு நம்முடைய டென்ஷனை குறைக்கின்றது. இப்போது, ஜோக்குகளை ரசிப்பதற்கான நிறைய இணையதங்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அதில் அவ்வப்போது வலம் வாருங்கள். நல்ல ஜோக்குகளை நண்பர்களுக்கு மின்னஞ்சலில் பகிர்ந்து மகிழுங்கள்!

சுற்றுலா...

நேரம் கிடைக்கும் பொது குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ குறைந்த தூரத்திலுள்ள சுற்றுலா தலங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு செயல்படலாம். இப்பயணத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக்கிக்கொள்ள முயற்சிக்கவும். இப்படிப்பட்ட பயணங்கள் ஓரளவிற்கு நம்முடைய மனதை ரீசார்ச் செய்ய நமக்கு உதவுகின்றது.

நன்றி:http://www.nigazhvugal.com

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்