Author: பி. மூர்த்தி செல்வகுமரன் |
- பேராசிரியர். பி. மூர்த்தி செல்வக்குமரன்
செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம், ஈரோடு.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
மருத்துவக் கல்லூரி சேர்க்கை
பெரும்பாலான மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் விருப்பம் மருத்துவத் துறையாகும். சிலரின் இளம்வயது மருத்துவக் கனவு குறிக்கோளாக மாறி மருத்துவத் துறையில் தடம் பதிக்கின்றனர். நமது நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். நகர்ப்புறங்களில் கிடைக்கும் மருத்துவ சேவையை பார்க்கையில் கிராமப்புறங் களில் குறைவான மருத்துவர்களே பணியாற்று கின்றனர். அதனால்தான் இந்திய அரசு ஒரு வருட கிராமப்புற சேவையை கட்டாயமாக்குகின்றனர்.
உலகப்பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த ஆண்டில் பொறியியல் (B.E) படித்துக் கொண்டிருக் கும் மற்றும் முடித்த 22 மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வு மூலம் MBBS படிப்பில் சேர்ந்தனர்.
தமிழ்நாட்டில் மருத்துவ சேர்க்கை
தமிழ்நாட்டில் இந்தாண்டு புதிதாக தொடங்கவிருக்கும் திருவாரூர் மற்றும் விழுப்புரம் மருத்துவக்கல்லூரிகள் உட்பட மொத்தம் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரிகளில் 1653 இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 348 இடங்களும் உள்ளன.
மருத்துவச் சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே 17ம் தேதி வழங்கப்படு கின்றது. அதை தொடர்ந்து ஜுன் 11ம் தேதி தரவரிசை (Rank) பட்டியல் வெளியிடப்பட்டு ஜுன் 21ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்.
மருத்துவம் சார்ந்த படிப்புகள்
தமிழ்நாட்டில மருத்துவ சேர்க்கைக்கு மிகவும் கடினமாக போட்டி நிலவுகின்றது. கடந்த ஆண்டில் 9 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முன்னிலை பெற்றனர். 193.50 கட் ஆப் மதிப்பெண்கள் வரை 2000 மாணவர்கள் தங்களுடைய தரவரிசை பெற்றனர்.
அரசு மருத்துவ (MBBS) கல்லூரிகளில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு தலா 3 இடங்களும், பாதுகாப்புப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு 2 இடங்களும், மாற்றுத் திறனாளி களின் (PD) ஒதுக்கீட்டில் 45 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அரசு ஙஆஆந கல்லூரிகளில் ஆண்டு கட்டணமாக ரூ.10,495ஐ மாணவர்கள் செலுத்துகின்றனர்.
MBBS படிப்பில் இடம் கிடைக்கப் பெறாதவர்கள் அடுத்து மருத்துவ துறையாக விளங்கும் ஆ.ஈ.ந. எனப்படும் பல் மருத்துவ படிப்பைத் தொடங்கலாம்.
பல் மருத்துவ படிப்பில் ஒரு அரசு கல்லூரியில் 85 இடங்களும், 18 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 965 இடங்களும் உள்ளன. பல் மருத்துவ படிப்பிற்கான தகுதி மதிப்பெண்ணை 50% ஆக குறைந்ததன் மூலம் அதிகப்படியான பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்களுடைய BDS சேர்க்கையில் கலந்து கொண்டனர். அரசு கல்லூரியில் ரூ.8,495ஐ ஆண்டு கட்டணமாகவும், தனியார் கல்லூரிகளில் கடந்த ஆண்டு ரூ.82,000ஐ படிப்பு கட்டண மாகவும் நிர்ணயம் செய்தனர்.
BDS படிப்பிற்கு அடுத்து மாணவர்களின் இலக்காக இருப்பது Para Medical Course எனப்படும் துணை மருத்துவப் படிப்புக்கான B.Pharm, B.Sc (Nursing), BPT மற்றும் BOT.
பிளஸ் டூ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று MBBS மற்றும் BDS படிப்பில் இடம் கிடைக்கப்பெறாதவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள படிப்பில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
மருந்தியல் (B.Pharm) படிப்பு
மருந்தியல் படிப்பிற்கு 17 வயதும், பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% Aggregate மதிப்பெண்ணும் தகுதியாக நிர்ணயம் செய்துள்ளனர். மருந்தியல் படிப்பிற்கு சென்னை மற்றும் மதுரை உட்பட இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 103 இடங்களுக்கு மாணவர்களிடம் ரூ.1,200ஐ ஆண்டு கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளனர்.
4 ஆண்டுகள் B.Pharm படிப்பிற்கு மேற்படியாக புதியதாக Pharma.D எனப்படும் 6 ஆண்டுகள் மருந்தியல் படிப்பு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யபட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக வேலை வாய்ப்புள்ள படிப்பாக இது கருதப்படுகின்றது.
இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக் கழகம் (IGNOU) பல்வேறு வகையான துணை மருத்துவப் படிப்புகளை வழங்குகின்றது.
மேலும் விளக்கங்கள் தேவைப்படுவோர் பேராசிரியரை விடுமுறை நாட்களில் நேரில் சந்தித்து பயனடைய கேட்டுக் கொள்கின்றோம்.
செவிலியர் (B.Sc. Nursing) படிப்பு
செவிலியர் படிப்பை பொறுத்தவரையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் காத்திருக் கின்றன. தற்போதைய சூழ்நிலையில் பெரும் பாலான மருத்துவமனைகளில் செவிலியர் தட்டுப்பாடு நிலவுகின்றது.
தமிழ்நாட்டில 4 ஆண்டு செவிலியர் படிப்பில் சென்னை, மதுரை மற்றும் செங்கல் பட்டு உட்பட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மாணவர்களுக்கு ஆண்டு கட்டணமாக ரூ.1200 நிர்ணயம் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் டாக்டர் ங.எ.த. மருத்துவ பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் 104 பெண்கள் செவிலியர் கல்லூரிகளும், அவற்றில் அரசு ஒதுக்கீட்டில் 3240 இடங்களும், 44 ஆண்கள் செவிலியர் கல்லூரிகளில் 130 இடங்களும் உள்ளன.
ஒவ்வொரு நாளும் செவிலியர்களுக்கான தேவைப்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. வெளிநாடுகளில் தேவைப்பாடு இன்னும் அதிகம். M.Sc. Nursing முடிப்பவர்களுக்கு கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கான தட்டுப்பாடு அதிகளவில் இருக்கின்றது.
முடநீக்கியல் படிப்பு (B.P.T – Physiotherapy)
பிளஸ் டூ தேர்வில் உயிரியலை ஓர் பாடமாக எடுத்து படித்து 35% மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றவர்கள் ஆடப படிப்பிற்கு தகுதியானவர்கள்.
தமிழ்நாட்டில் 4.5 ஆண்டுகள் முடநீக்கியல் படிப்பில் சென்னை மற்றும் திருச்சி உட்பட இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 48 இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து ஆண்டு கட்டணமாக ரூ.1200 நிர்ணயம் செய்துள்ளனர். தனியாரிடம் உள்ள 25 ஆடப கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 764 இடங்களும், அரசு சேர்க்கை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
BOT (Occupational Therapy) படிப்பிற்கு இரண்டு தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 இடங்கள் உள்ளன.
துணை மருத்துவத்திற்கு அதிக வேலை வாய்ப்புகள்
மருத்துவ படிப்பிற்கு (MBBS & BDS) இணை யாக மற்ற துணை மருத்துவ படிப்புகளுக்கும் (B.Pharm, BSc (N), BPT & BOT) நல்ல எதிர்காலம் மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
2008ம் ஆண்டு சேர்க்கை கலந்தாய்வு முடிவில் நாம் காண்பது என்னவென்றால் மத்தியில் துணை மருத்துவ படிப்பிற்கு குறைவான அளவே ஆர்வம் இருந்தது. 2008ம் ஆண்டு சேர்க்கை முடிவில் Paramedical படிப்பில் 150 கல்லூரிகளில் உள்ள 7910 இடங்களில் 4317 இடங்கள் மட்டுமே நிரம்பி இருந்தன. ஆடப படிப்பில் உள்ள 1050 இடங்களில் 209 இடங்களும், ஆஞப படிப்பில் 2100 இடங்களில் 21 இடங்களும் நிரம்பின. இதன் மூலம் எதிர்காலத்தில் துணை மருத்துவத்திற்கான மருத்துவர்கள் தேவைப்பாடு அதிகமாகும் என்பதனை அறியலாம்.
மாணவர்கள் மேலே குறிப்பிட்ட காரணத்தை அடிப்படையாகக் கொண்டு வரும் காலங்களில் துணை மருத்துவத் துறையை தேர்ந்தெடுப்பார்கள் ஆயின் அவர்களின் வேலை வாய்ப்பு உறுதிப்படும்.
‘மாணவர்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி’ எனக்கருதி செயல்பட்டு வரும் செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம், ஈரோடு மேலும் ஓர் முயற்சியாக தொலைபேசி வாயிலாக கல்வி வழிகாட்டி சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களுடைய உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை அனைத்து வேலை நாட்களிலும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை 0424 2500073 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேராசிரியரின் நேரடி விளக்கங்களை பெற்று பயனடையலாம்.
No comments:
Post a Comment