அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Monday, May 24, 2010

2010 எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


பத்தாம் வகுப்பு மாநில பாடத்திட்டப் பொதுத்தேர்வு மார்ச் 23-ந்தேதி முதல் ஏப்ரல் 7-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6,493 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 56 ஆயிரத்து 906 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.
மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. ஆகிய பாட திட்டத்தை சேர்ந்த மாணவர்களும் இதில் அடங்குவார்கள். விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் தயாராக உள்ளன. இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 26-ந்தேதி வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மார்ச்- ஏப்ரல் 2010ல் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 26.5.2010 புதன்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், அரசுத் தேர்வுகள் துறையினரால் அறிவிக்கப்படும் இணையதளம், எஸ்.எம்.எஸ். தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

1 comment:

  1. I feel happy to post a comment on this blog, Its really very nice blog thanks for sharing this stuff ITBP Payslip

    ReplyDelete

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்