சர்வதேச குழு: 31,000க்கும் அதிகமான ஹஜ் யாத்திரிகர்கள், டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜித்தா மற்றும் மதீனா நகர்களுக்குப் பயணிக்க உள்ளனர். எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் மற்றும் சவூதி அரேபிய எயார்லைன்ஸ் ஆகியவற்றின் இணை முயற்சியால் இது சாத்தியமாகின்றது என அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார்.
இவற்றுக்கான விமான சேவைகள் நவம்பர் 12ம் திகதி ஆரம்பமாகும் என டுபாய் விமான நிலையத்தின் ஹஜ் கமிட்டியின் தலைவர் முஹம்மத் காதிம் தெரிவித்தார்.
டுபாயிலிருந்து புறப்படும் இந்த இணை முயற்சிகள் வியாழக்கிழமை ஆரம்பமானது. இது வரை 12,000 ஹாஜிகள் எமிரேட்ஸ் மூலமாகவும் 4000 ஹாஜிகள் சவூதி எயார்லைன்ஸ் மூலமாகவும் பயணித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
ஹாஜிகளில் 70 வீதமானோர் டுபாய் விமான நிலையத்தினூடாக ஜித்தாவை அல்லது மதீனாவை வந்தடைகின்றனர் என மேலும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து சேவைப் பிரிவுகளும், அவசர சிகிச்சைப் பிரிவுக்கான வசதிகளுடன் கூடிய அம்பியுலன்ஸ், வைத்தியர் சேவைகள், தாதிகள் மற்றும் உதவியாளர்கள் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி:http://www.iqna.ir/ta/news_detail.php?ProdID=691618
Thursday, November 11, 2010
மக்காவில் இடம்பெற்ற இஸ்லாமிய நல்லிணக்க மாநாடு
சர்வதேச குழு: இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான மாநாடொன்று, நவம்பர் 10ம் திகதியாகிய இன்று காலை, புனித மக்கா நகரிலுள்ள ஆன்மீகத் தலைவரின் பிரதிநிதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஈரானிய ஹஜ் அமர்வுக்கான குழுவுக்கு தலைமை தாங்கும் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் செய்யித் அலி காஸி அஸ்கர் இம்மாநாட்டில் உரையாற்றினார் என இக்னாவின் கிளை தெரிவிக்கின்றது.
இஸ்லாமிய நல்லிணக்கம் என்பது, உலகெங்கும் பல்வேறு கருத்தரங்குகளும் மாநாடுகளும் இதற்காக நடத்தப்பட்ட ஒரு முக்கிய விடயமாகும் என அவர் தனதுரையில் வலியுறுத்தினார்.
ஒற்றுமையெனும் அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்ற அல்குர்ஆன் வசனம், இஸ்லாமிய நல்லிணக்கத்தை மிகவும் வலியுறுத்தும் ஒரு வசனம் எனக் குறிப்பிட்ட அவர், இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளிடையே இத்தகைய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் அதற்காக உழைப்பதும் மிகப் பெரும் கடமைகளும் நன்மையும் எனத் தெரிவித்தார்.
முஸ்லிம்களிடையிலான வேற்றுமையும் முரண்பாடும் முஸ்லிம்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சந்தர்ப்பத்தை எதிரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விடுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஹுஜ்ஜதுல் இஸ்லாம் காஸி அஸ்கர் மேலும் குறிப்பிடுகையில், ஒரே இறைவன், ஒரே குர்ஆன், ஒரே இறைத்தூதர் மற்றும் அஹ்லுல்பைத் போன்ற பல விடயங்கள் ஒற்றுமையை ஏற்படுத்தும் பொதுப் பண்புகளாக இருக்கையில், முஸ்லிம்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மிகவும் சிறியவையும் அற்பமானவையும் எனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி:http://www.iqna.ir/ta/news_detail.php?ProdID=693272

மக்காவில் இடம்பெறவுள்ள முஸ்லிம் உலக முன்னணி மாநாடு
சர்வதேச குழு: முஸ்லிம் உலக முன்னணியின் 11 சர்வதேச மாநாடு, நவம்பர் 11 தொடக்கம் 13 வரை, புனித மக்கா நகரில் இடம்பெறவுள்ளது என நசீஜ் இணையத்தளம் தெரிவிக்கின்றது.
மாநாட்டின் பிரதான கருப்பொருள் 'பூகோள சகாப்தத்தில் ஊடக சவால்கள்' என்பதாக அமையும் என முன்னணியின் செயலாளர் நாயகம் அப்துல்லாஹ் அல்துர்க் தெரிவித்தார்.
நவம்பர் 9ம் திகதியாகிய நேற்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில், உலகெங்குமுள்ள முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் மற்றும் இஸ்லாமிய நிலையங்களின் பணிப்பாளர்கள் போன்றோர் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்றார்.
'பூகோள சகாப்தத்தில் ஊடக யதார்த்தங்கள்', 'குடும்பம், சமூகம் மற்றும் ஊடுக சவால்கள்', 'இஸ்லாமிய உம்மாஹ்வும் ஊடக சவால்களும்' மற்றும் 'சவால்களை எதிர்கொள்வதில் நடைமுறை அணுகுமுறைகள்' என்பன இந்நிகழ்வில் ஆராயப்படவுள்ள பிரதான தலைப்புகளாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
உலகெங்குமிருந்து முஸ்லிம்கள் பெருந்திரளாக ஒன்றுகூடும் ஹஜ் பற்றிக் குறிப்பிட்ட அவர், ஹஜ் என்பது உண்மையான முஸ்லிம் ஐக்கியத்திற்கான அற்புதமான வாய்ப்பு எனத் தெரிவித்தார்.
முஸ்லிம் உலக முன்னணியின் சர்வதேச மாநாடு, உலக முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்வதற்காக புனித மக்கா நகரில் வருடாந்தம் நடத்தப்பட்டு வருகின்ற ஒன்றாகும்.
நன்றி :http://www.iqna.ir/ta/news_detail.php?ProdID=693271

Friday, November 5, 2010
அத்தியாயம் -21- ஆழ்மன சக்தி
ஆழ்மன சக்தி
பனிப்பாறை(iceberg) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டைட்டானிக் எனும் பெரியதொரு கப்பல் அதில் இடித்துக் கவிழ்ந்து போனதே? துருவ மண்டலங்களுக்கு நெருக்கமாயுள்ள கடல்களில் மிதக்கும். ராட்சத மலை போன்ற இவை கடல் நீர் மட்டத்துக்கு மேல் சிறு பாறைபோல் மட்டுமே தென்படும். அப்படித் தென்படுவது ஒன்பதில் ஒரு பங்கு. மீதமுள்ள எட்டுப் பங்கு? அது நீருக்குக் கீழே சமர்த்துப் பிள்ளையாய் மிதந்து கொண்டிருக்கும்.
சரி, அதற்கு என்ன இப்போ?உணர்வு உள்ள நம் அனைவருக்கும் உள்ளுணர்வு என்று ஒன்று உண்டு. கண்ணால் யாரும் பார்த்ததில்லை எனினும் "ஆமாம், இருக்கிறது!" என்று பொத்தாம் பொதுவாய் ஒப்புக்கொள்ளும் அளவிற்கு எல்லோருக்கும் ஓர் அபிப்ராயம் உண்டு. மறுப்பாளர்கள் பண்டிகை நாளன்று தொலைக்காட்சியில் நடைபெறும் பட்டிமன்றத்திற்கு "உள்ளுணர்வு உண்மையா பொய்யா?" என்பதைத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.இந்த உள்ளுணர்வு என்பது என்ன, அது எப்படி இயங்குகிறது, என்பதை விவரிக்கச் சொன்னால்... அது சிரமம். அதற்காகச் சாமான்யர்கள் நாம் வருத்தப்பட ஏதுமில்லை. உள்ளுணர்வு பற்றியும் அது நம்மை இயக்குவது பற்றியும் மனோவியலாளர்கள் மூளையைச் சொறிந்துக் கொண்டு நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து சுருக்கமாய்க் காப்பி அடித்துக் கொண்டால் நமக்குப் போதும்."மனதின் ஆழ்மனம் சக்தி வாய்ந்தது. நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை அடைய வழிவகை செய்து விடுகிறது. அந்த ஆழ்மனதின் ஆதிக்கமும் பயனும் நம்மை முழுவதும் ஆலிங்கனம் செய்யக் கூடியது." இதுதான் சாராம்சம்!
உள்ளுணர்வெனும் அந்த ஆழ்மனச் சக்தியைத்தான் மேலே சொன்ன பனிப்பாறையை உவமையாகக் கூறி விவரிக்கிறார்கள். நாம் உணர்ந்த, அறிந்த நம் வெளியுணர்வு வெளியே தெரியும் பனிப்பாறை அளவே (tip of the iceberg). வலிமையான மீதம் நம்முள்ளே புதைந்திருக்கும் நம் உள்ளுணர்வு! பிரமிப்பாயில்லை?வங்காள விரிகுடாவிலும் அரபிக் கடலிலும் பனிப்பாறைக்கு எங்கு செல்வது; எப்படிப் புரிந்து கொள்வது? எனவே நாம் வேறு சில உதாரணங்களை ஊருக்குள் தேடுவோம்.
சைக்கிள் ஓட்டப் பழகுவதற்குப் பெரும் பிரயத்தனம் தேவைப்படும்; கவனித்திருப்பீர்கள். சைக்கிளின் கைப்பிடியை ஆட்டாமல் பிடிக்க வேண்டும் என்பார்கள்; முதுகைச் சாய்க்கக் கூடாது என்பார்கள்; பேலன்ஸ் தவறாமல் பெடலை மிதிக்க வேண்டும் என்பார்கள்... விழுந்து சில்லறை எண்ணாமல் சைக்கிள் ஓட்டக் கற்றவர்கள் மிகவும் குறைவாகவே இருக்க வேண்டும். அப்படிப் பலவற்றையும் மனமானது உள்வாங்கி, உடலானது செயல்படுத்தி, சைக்கிளானது நம்மைச் சுமந்து கொண்டு ஓடத் துவங்கியபின், கற்பதற்குச் சிந்தனை செலுத்திய அத்தனையும் பொருட்டின்றி மறைந்துபோய், சைக்கிள் ஓட்டனுமா நீங்கள் ஏறி உட்கார்ந்தால் போதும்; செயல்படுத்துவது உங்கள் உள்மனமே. உங்கள் வெளியுணர்வு பழகி உணர்ந்த அனைத்தும் உள்மனதில் ஆழப்பதிந்து, நீங்கள் சைக்கிளில் எவ்விதச் சிரமமுன்றிச் சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரையும் அதைத் தின்று கொண்டிருக்கும் மாட்டையும் பார்த்துக்கொண்டே செல்ல வேண்டியதுதான்.
பிரக்ஞையுடன் கூடிய நமது சிந்தனைகள், நமது உடலின் செயல்பாடுகள், மனோபாவம், செயல் திறன் ஆகியன எல்லாம் உள்ளுணர்வுக்குள் பலமாய் பதிக்கப்பட்டுவிடுகின்றன. இவை நம்முடைய உள்ளுணர்வை வடிவமைக்கின்றன. அது தன்னிச்சையாய் நம்மை இயக்குகிறது.அதாவது?
படுவேகமாய்த் தட்டச்சு செய்யும் திறன் கொண்ட ஒருவரிடம் எந்த எழுத்து எங்கிருக்கிறது என்று கேட்டால் அவரால் உடனே சொல்ல முடியாது. கீ போர்டை நைஸாய் அவர் எட்டிப் பார்க்க வேண்டியிருக்கும். அல்லது மேசையில் தன் விரல்களால் தட்டச்சுவது போல் பாவனை செய்தே சொல்ல வேண்டியிருக்கும். வியப்பாயில்லை? இது உள்ளுணர்வின் மகிமை என்கிறார்கள்.
க்ளாட் பிரிஸ்டல் (Claude Bristol) தன்னுடைய The Magic of Believing என்ற புத்தகத்தில், "உள்ளுணர்வு நம் வலிமைக்கு மூலம்" என்கிறார்.நாம் நடப்பது, பேசுவது, சட்டென சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென நம்மை நோக்கி ஓடிவரும் எருமை மாட்டினிடமிருந்து சரேலென விலகுவது என இப்படிப் பலவற்றிற்கும் நம் மனதின் உள்ளே ஆழ்மனதில் கச்சிதமான ப்ரோக்ராம் ஒன்று அமர்ந்து கொண்டு நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.தினசரி நமக்கு எழும் எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியன சிறிது சிறிதாக உள்மனதில் பதிவாகிப் பதிவாகி, நம்மைத் தன்னிச்சையாய் வலிமையுடன் இயக்கிக் கொண்டே இருக்கின்றன. எந்த அளவிற்கு? நம்முடைய வெற்றி தோல்விகளின் காரணிகளை நிர்ணயிக்கும் அளவிற்கு!
உங்களது உள்ளுணர்வு உண்மையென்று நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, உங்களது உள் மனம் தயாராகியுள்ளதற்கு ஏற்பவே நீங்கள் வாழ்க்கையின் இலக்கினை அடைவீர்கள் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
அதனால்தான் "வெற்றி" என்பதைக் குறிக்கோளாய்க் கொண்டவருக்கு வெற்றியை எட்டுவதே உள்மனதின் எதிர்பார்ப்பாக மாறிப்போய், அது ஆழப் பதிந்துவிடுகிறது. அதற்கேற்ப அந்த வெற்றியின் இலக்கிற்கு அவரது ஆழ்மனம் அவரைச் செலுத்துகிறது. அதற்கு எதிர்மறையான எண்ணம் கொண்டவருக்கு மனதின் எதிர்பார்ப்பும் மாறிப்போகிறது.ஆழ்மனம் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் அசாதரணமான ஆற்றல் கொண்டது. ஏதோ ஒரு பிரச்சனை; என்ன செய்வதென்று தெரியாமல் தூக்கமும் வராமல் புரண்டுக் கொண்டிருப்பீர்கள். ஒருநிலையில் அலுத்துப்போய், "சரி நாளை பார்த்துக் கொள்ளலாம்" என்று தூங்கியும்போய் மறுநாள் எழும்போது திடீரென்று ஒரு வழி தோன்றியிருக்கும்.இதையே, "ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதிலோ, ஏதோ ஒன்றைத் தேர்வு செய்வதிலோ குழப்பம் இருந்தால் அதை ஒத்திப்போடுங்கள்; இன்னம் உசிதம் இரவு தூங்கிவிட்டுக் காலையில் எழுந்து பாருங்கள்; சட்டெனத் தெளிவான ஒரு முடிவை நீங்கள் அடைய முடியும்," என்று நெதர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் சமீபத்தில் நிகழ்த்திய ஆராய்ச்சியின் மூலம் மேலும் உறுதிப்படுத்துகிறார்கள்.இது எவ்விதம் நிகழ்கிறது? இதுதான் என்று அடித்துச் சொல்ல முடியாது. மூளை என்பது மிகவும் சிக்கலான, மனிதனால் முழுதும் பிரித்துப் போட்டு ஆராய முடியாத ஒரு சதை. அது இன்னும் மனிதனுக்குப் புதிரே! எனவே வெளியுணர்வற்ற ஆழ்மன சிந்தனா நிலையினால் நிகழ்கிறது என்று மட்டும் அறிந்து கொள்ளலாம்.மனதில் உள்ளது தானே வார்த்தையில் வரும்! மிகவும் புழக்கத்தில் உள்ள வாசகம். இங்கு அந்த மனம் ஆழ்மனம்!நமது எண்ணங்களே நமது ஆழ்மன உணர்வை நிர்ணயிக்கின்றன. ஆழ்மனமே நம்மை நடாத்துகிறது. எனவே நமது எண்ணம் தூய்மையாய் இருப்பது,மனதிற்கு நல்லது!உடம்பிற்கு நல்லது!சூழ்ந்திருக்கும் சுற்றத்துக்கும் நட்புக்கும் நல்லது.
நன்றி:http://www.inneram.com

பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டம்!
பணி இடங்களில் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை அபாரதம் விதிக்க வகை செய்யம் சட்ட முன்வரைவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக் கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், "பணி இடங்களில் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2010" என்ற இச்சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரின் போது இச்சட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.பொது அல்லது தனியார் மற்றும் முறைப்படுத்தப்படாத நிறுவனங்கள் ஆகியவற்றில் பணி புரியும் பெண்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் பாலியல் தொல்லைகளின்றி வேலை செய்வதை இச்சட்டம் உறுதி செய்யும். ஆனால், வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் இச்சடத்தின் கீழ் கொண்டு வரப்படவில்லை.பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், நிறுவனத்தின் உரிமையாளர் மீது ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க இச்சட்டத்தில் வகை செயயப்பட்டுள்ளது.
நன்றி:http://www.inneram.com/
நன்றி:http://www.inneram.com/
நமூனே குர்ஆன் விளக்கவுரையே நூலகங்களில் அதிகம் வாசிக்கப்படும் நூல்
கல்வி கலாச்சார குழு: புனித அல்குர்ஆனுக்கான நமூனே விளக்கவுரையே பொது நூலகங்களில் மிகவும் அதிகமாக வாசிக்கப்படுகின்ற நூல் என, பொது நூலகங்களின் கலாசார விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவிக்கின்றார். மஜ்துதீன் முஆலிமி இக்னாவுக்குத் தெரிவிக்கும் போது, கடந்த வருட புள்ளிவிபரங்களின் பிரகாரம், இந்நூல் ஏனைய எல்லா நூல்களையும் விட மிக அதிகமாக இரவல் பெற்றுச் செல்லப்பட்டுள்ளது என்றார். நமூனே விளக்கவுரை என்பது, சிரேஷ்ட ஆயத்துல்லாஹ் நாசிர் மகாரிம் ஷீராசி மற்றும் முஹம்மத் ரிஸா அஷ்தியானி, முஹம்மத் ஜாபர் இமாமி, தாவுத் இல்ஹாமி, அஸதுல்லாஹ் இமானி, அப்துல் ரசூல் ஹஸனி, செய்யித் ஹஸன் ஷுஜாயி, செய்யித் நூருல்லாஹ் தபதபாயி, மஹ்மூத் அப்துல்லாஹ், ஹுஜ்ஜதுல் இஸ்லாம் கராஅதி மற்றும் முஹம்மத் முஹம்மதி இஷ்திஹார்தி உள்ளிட்ட பல சமய அறிஞர்களினால் உருவாக்கப்பட்ட நூலாகும். பாரசீக மொழியிலான இதன் விளக்கவுரை 27 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. இது ஆங்கிலம், அரபு, மற்றும் உர்து ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது
நன்றி:http://www.iqna.ir/ta/
நன்றி:http://www.iqna.ir/ta/
அல்முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் குர்ஆன் ஹதீஸ் ஒலிம்பியாட்டின் பேச்சுப் பிரிவு ஆரம்பம்
கல்வி கலாச்சார குழு: அல்முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் 16ஆவது குர்ஆன் ஹதீஸ் ஒலிம்பியாட்டின் பேச்சுப் பிரிவு புனித கும் நகரில், அக்டோபர் 23ம் திகதி ஆரம்பமானது. ஒலிம்பியாட் செயலகத்தின் பொறுப்பாளர் அலி ரிசா குர்பானி இக்னாவுக்குத் தெரிவிக்கையில், இது இப்பல்கலைக்கழகத்திலுள்ள ஈரானியர் அல்லாத மாணவர்களுக்காக நடத்தப்படுகின்றது என்றார். பேச்சுப் பிரிவுப் போட்டிகள், மஷ்ஹத் மற்றும் குர்கான் உள்ளிட்ட பல கிளைகளில் இடம்பெற்றதுடன், கும், மற்றும் இஸ்பஹான் போன்ற பகுதிகளிலுள்ள ஏனைய கிளைகளில் விரைவில் இடம்பெறும் என மேலும் அவர் தெரிவித்தார். நிபுணர்களான டெஹ்தஷ்தி, துர்கமான், முஹம்மதி மற்றும் நஸ்ருல்லாஹி ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்றுவர். இப்போட்டி, தர்தீல், தஹ்கீக் ஓதல், குர்ஆன் மனனம், அதான், நஹ்ஜுல் பலாகா மனனம் மற்றும் பிரார்த்தனைகள் ஆகிய பிரிவுகளில் இடம்பெறுகின்றது. பெண் மாணவியருக்கான போட்டி, அக்டோபர் 27 மற்றும் 28ம் திகதிகளில், கும்மிலுள்ள பிந்துல் ஹுதா பாடசாலையிலர் இடம்பெறும்.
நன்றி:http://www.iqna.ir/ta/
நன்றி:http://www.iqna.ir/ta/
Subscribe to:
Posts (Atom)