அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, November 11, 2011

ஈரான், வெனிசூலா, கியூபா, பாகிஸ்தான்...


தலைப்பில் என்ன வேடிக்கை என பார்க்கிறீர்களா? இரு வாரங்களாக தெற்கு ஆசிய நிகழ்வை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் தலைப்பின் பொருள் புரியும்.

அமெரிக்கா தொடர்ந்து மூக்கறு படும் நேரம் இது.. ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்து கோரும் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தனித்து விடப்பட்டது. அமெரிக்க & இஸ்ரேலிய நிலைபாட்டுக்கு மிகக்குறைந்த அளவே ஆதரவு கிடைத்தது. அது முதல் அதிர்ச்சி.


அமெரிக்காவின் தீவிர ஆதரவாளரான, அமெரிக்க கொள்கை முரசு அண்ணன் மன்மோகன்சிங் ஐ.நா.வில் வைத்து அமெரிக்காவைக் காய்ச்சி எடுத்தார். பாலஸ்தீன விஷயத்தில் ஆதரவு தெரிவித்ததோடு ஆப்கா னிஸ்தான், இராக் மற்றும் லிபியா விவகாரத்தில் பெயர் குறிப்பிடாமல் அமெரிக்காவை பிளந்து கட்டினார். அது அமெரிக் காவுக்கு மற்றுமொரு அதிர்ச்சி.


இந்த இரண்டு அதிர்ச்சிகளையும் விட அமெரிக்கா சந்தித்த மிகப்பெரிய அதிர்ச்சி நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டதுதான். இந்த அதிரடி, முன்கூறப்பட்டவைகளை விட கூடுதல் வாட்ஸ் அதிர்ச்சி களை அமெரிக்காவுக்கு வழங்கியது.

ஆப்கானிஸ்தானில் செயல்படும் 'ஹக்கானி நெட்வொர்க்' என்ற பெயரில் செயல்படும் கிளர்ச்சிக் குழுக்களை வளர்த்து விடுவதே பாகிஸ்தான் தான் என அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி மேக் முல்லன் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து சுடச்சுட பதிலடி கிடைத்தது.

அது என்ன ஹக்கானி டெரரிஸ்ட் குரூப். அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திக ளின் இலக்கணப்படி உள்நாட்டில் உதித்த போராளிகள் அந்த மண்ணுக்காகப் போராடி வரும் குழுக்கள் தீவிரவாத அமைப்புகள் என்றும் ஆனால் மேற்கு நாடுகளில் இருந்து படையெடுத்து ஆக்கிரமிக்கும் படைகள் அங்கு எத்தனை அராஜகங்கள் நடத்தினாலும் அது தீவிரவாதம் இல்லை; ஜனநாயக மீட்பர்கள் என்ற கேனத்தன வாதம் அமெரிக்க அடிவருடி ஊடகங்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் காமெடிக் காட்சிகள் ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட பதிலடி அமெரிக்கால் வெகு காலத்திற்கு மறக்க முடியாது என்பது உண்மை.


ஆப்கானிஸ்தானில் ஹக்கானி அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தொடர்ந்து உதவி வருகிறது. அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியது. இதற்கு பதில் அளித்த ஹீனா ரப்பானி, அமெரிக்காவை கடுமையாக விமர்சிக்கும் ஈரான், வெனிசூலா, கியூபா நாடுகளின் தலைவர்கள் பிரயோகிக்கும் வாசகங்களைப் போல கடுமையான வாசகங்களை அமெரிக்காவுக்கு எதிராகப் பிரயோகித்தார்.


அதாவது ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்த போது சோவியத்துக்கு எதிராக அமெரிக்கா முஜாஹிதீன்களை வளர்த்துவிட்டது. உண்மையில் ஹக்கானி நெட்வொர்க்கை வளர்த் தது பாகிஸ்தானா? அமெரிக் காவா-? என்று ஹீனா ரப்பானி ஆவேசமாக கேட்டார். ஹக்கானி நெட்வொர்க்கை உருவாக்கியது அமெரிக்கா தான் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது பாகிஸ்தானிடம் இருந்து அமெரிக்கா எதிர்பார்க்காதது.

பாகிஸ்தான் உறவை அமெரிக்கா முறித்துக் கொள் வதால் பாகிஸ்தானுக்கு ஒன்றும் இழப்பில்லை; அமெரிக்கா பெரும் இழப்பை சந்திக்க வேண்டி யதிருக்கும் என போட்டுத் தாக்கி னார்.

அமெரிக்கா, பாகிஸ்தானின் பொறுமையை அளவுக்கு மீறி சோதித்துப் பார்க்கிறது. அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்; எங்களை மீண்டும் மீண்டும் சீண்டினால் பேச்சுவார்த்தைகளை படிப்படியாக குறைத்துக் கொள்வோம் என்றும் அதிரடியாக ஹீனா ரப்பானி கொளுத்திப் போட்ட பட்டாசு அமெரிக்காவை ஆத்திரம்கொள்ள வைக்கும் அளவில் இருந்தது.

உலகிலேயே தீவிரவாத அமைப் புகளுடன் அதிக தொடர்புள்ள ஒரே அமைப்பு அமெரிக்காவின் சி.ஐ.எ என்றும் அவர் குற்றம் சாட்டினார்.அமெரிக்கா ஒரே ஒரு செப்டம்பர் 11 தாக்குதலை மட்டுமே சந்தித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் செப்டம்பர் 11 தாக்குதல்களைப் போல இதுவரை 311 தாக்குதல்களை சந்தித்துள்ளது.


பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு அமெரிக்க பாகிஸ்தான் உறவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, அமெரிக்கா தரப்பில் பதிலடி எதுவும் அறிவிக்கப்படாத நிலை யில் பாகிஸ்தானில் தொடர்ந்து அதிரடி காட்சிகள் அரங்கேறியுள் ளன.


பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீனா ரப்பானியின் கருத்துக்கள் பாகிஸ்தான் ஆள் வோரின் சொந்தக் கருத்தாக இருக்க முடியாது. பாகிஸ்தானாவது அமெரிக்காவை முறைத்துக் கொள்வதாவது? இளம் கன்று பயம் அறியாது என்பதைப்போல இளம் அமைச்சர் அதீத உற்சாகத்தில் அமெரிக்காவை வம்புக்கு இழுத்திருக்கிறார். அவரது இந்த ஆர்வக்கோளாறு செயலுக்காக பிரதமர் யூசுப் ரசா கிலானியிடம் செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்டார் தெரியுமா? என்கிற பாணியில் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக உலகெங்கும் உள்ள அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் (நம் தமிழ்நாட்டு ஊடகங்கள் உள்பட) பல ஊடகங் கள் மேற்குறிப்பிட்ட கற்பனைக் காட்சிகளை பரப்ப முயன்றன.இதனை உலகம் நம்பத்தான் வேண்டும் என சர்வதேச சமூகம் எண்ணிய வேளையில் அடுத்த அதிரடிக் காட்சி பாகிஸ்தானில் அரங்கேறியது.

சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் மெங் ஜியாங் ஜூ கடந்த வாரம் பாகிஸ்தான் விஜயம் செய்திருந்தார். சீன அமைச்சருக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப்ரசா கிலானி ஆற்றிய வரவேற்புரையிலும் அமெரிக் காவை வெறுப்பு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.

சீன நட்பு மலைகளை விட உயரமானது; கடலை விட ஆழமானது; இரும்பை விட வலுவானது; தேனைவிட இனிமையானது என தெரிவித்தார். அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகளின் நண்பராக கருதப்படும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், ‘‘சீனாவின் நண்பர்கள் எமக்கு நண்பர்கள்; சீனாவின் எதிரிகள் எங்களுக்கும் எதிரிகள்’’ என்றார்.

ரஹ்மான் மாலிக்கின் இந்தக் கூற்று அமெரிக்காவை நிச்சயம் அதிர்ச்சியில் மூழ்கடித்திருக்கும். பாகிஸ்தான் மக்கள் பொதுவாக ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் ஏகாதிபத்திய சக்திகள் பாகிஸ்தானின் சில பொம்மை அரசியல் சக்திகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஆட்சிகளை கைப்பற்றி உலக வரைபடத்தை தப்பும் தவறுமாக மாற்ற முயன்றது. அதில் கடந்த 60 ஆண்டுகளாக வெற்றியும் பெற்ற அமெரிக்கா, தற்போது தோல்விப் பள்ளத்தாக்கில் துவழ்கிறது.

பாகிஸ்தானுக்கு முன்பாகவே இந்திய மக்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளுமே அமெரிக்க எதிர்ப்பை உரம்போட்டு வளர்த்த கட்சிகள் என்பது மிகையல்ல.கடந்த சில ஆண்டுகளாக தீவிர அமெரிக்க ஆதரவுப் படையின் கொள்கை சிங்கமாக(?) கருதப்பட்ட மன்மோகன் சிங் & ஐநாவில் கர்ஜித்த கர்ஜனைகள் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய பாகிஸ் தான் நாடுகள் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக அணிசேர்ந் தால் தெற்காசிய பிராந்தியத்தில் புதியதொரு மாற்றம் ஏற்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும் ஏகாதிபத்திய சக்திக்கு எதிரான பாகிஸ்தானின் சீற்றம் அந்நாட்டை ஈரான், வெனிசூலா நாடுகளின் வரிசையில் எதிர்காலத்தில் இடம்பெறச் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு பாராட்டி வைப்போம்.


நன்றி:http://tmmk.info

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்