அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Wednesday, November 16, 2011

மாலேகான் குண்டுவெடிப்பு- 5 வருட சிறைவாசத்திற்குப் பின்னர் 7 குற்றவாளிகள் இன்று விடுதலை


சமநிலை சமுதாயத்தின் சகோதரர்களே ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து விடலாம் ஆனால் ஒரு நிரபராதிகள் கூட தண்டிக்கப் பட கூடாது என்று என்று சொன்ன காந்தியடிகள் பிறந்த மண்ணில்தான் நாம் இருக்கின்றோமா என்று என்ன தோன்றுகின்றது எந்த வித குற்றமும் செய்யாமல் ஐந்து வருடம் சிறை வாசம் அனுபவித்துவிட்டு இன்று ஏழு பேர் ஜாமீனில் வெளிவந்து உள்ளனர். ஐந்து வருடத்திற்கு பிறகு இவர்கள் அப்பாவிகள் என்றும்,ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த சாமியார்  அசிமானந்த் உள்ளிட்டோருக்குத்தான் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது. எனவே அவர்களையே தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று
சிபிஐ பரிந்துரைத்து உள்ளது. சரி ஐந்து வருடகாலம் பிறந்த கை குழந்தையை விட்டு விட்டு போன வேதனைக்கு யார் பதில் சொல்வது,இழந்த மான மரியாதையை யார் திருப்பி தருவது தங்கள் மேல் விழுந்து சமூகத்தின் கேவலமான பார்வைக்கு யார் பதில் சொல்வது என்று இவர்கள் மனம் துடிக்காதா?

 இது போன்ற அவல நிலைகள் இனியும் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்றால் ஒரு சமூகத்தின்(இஸ்லாம்) மீது தவறுதலான கருத்தியலை பதியவைத்து கொண்டு எங்கே குண்டு வெடிப்பு நடந்தாலும் இந்த சமூகத்தில் இருந்து நான்கு பேரை கைது செய்வது அதுவும் சம்பவம் நடந்த சில மணி நேரங்களில். பிறகு யாரோ ஒருவர் அனுப்பிய ஒரு மின் அஞ்சலை வைத்து கொண்டு இந்த இஸ்லாமிய அமைப்பு இதற்கு பொறுப்பு ஏற்றுகொண்டது என்று ஊடகத்துறைக்கு அறிக்கை விடுவது இது போன்று இல்லாமல் அரசுத்துறையும் ஊடகத்துறையும் சமூப் பொறுப்போடு நடந்து திறந்த மனதோடு குற்றத்தின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராய்ந்து உண்மை குற்றவாளிகளை அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி எவ்வளவு பெரிய பதிவியில் இருந்தாலும் சரி அவர்கள் தண்டிக்க பட வேண்டும்.
அப்பொழுதுதான் மக்களின் மனதில் நம்பிக்கை கீற்றை பதிக்க முடியும்.
 இனியாவது யோசிக்குமா அரசுத்துறையும் ஊடகத்துறையும்?
கீழே இது தொடர்பாக தட்ஸ்தமிழ் இணையத்தில் வெளிவந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரில் 7 பேர் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 5 வருட சிறைவாசத்திற்குப் பின்னர் அவர்கள் வெளியே வந்துள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மாலேகானைச் சேர்ந்த நூர் உல் ஹூடா ஷம்சுதிஹோ அன்சாரி, ஷபீர் அகமது மசியுல்லா, ரயீஸ் அகமது, டாக்டர் சல்மான் பார்சி, டாக்டர் பரூக் மக்தூமி, முகம்மது அலி, முகம்மது ஜாஹித், ஆசிப் பஷீர் கான், அப்ரார் அகமது சயீத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சிமி அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 5 வருடமாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த சாமியார் அசிமானந்த் கைது செய்யப்பட்டது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வலது சாரி தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ மீண்டும் புலனாய்வு செய்தது.

இதைத் தொடர்ந்து என்ஐஏவுக்கு அது ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் அப்பாவிகள். அவர்களுக்குப் பதிலாக இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட அசிமானந்த் உள்ளிட்டோருக்குத்தான் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது. எனவே அவர்களையே தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்தது.

இதையடுத்து 9 பேரும் ஜாமீன் கோரி இந்த மாத தொடக்கத்தில் மனு செய்தனர். அதற்கு என்ஐஏ ஆட்சேபிக்கவில்லை.

இதையடுத்து அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. இருப்பினும் 9 பேரில் முகம்மது அலி மற்றும் ஆசிப் கான் ஆகியோருக்கு 2006ம் ஆண்டு நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக வழக்கு உள்ளதால் அவர்களுக்கு மட்டும் விடுதலை கிடைக்கவில்லை.

ஜாமீன் வழங்கப்பட்ட 7 பேரும் இன்று சிறையிலிருந்து வெளியே வந்தனர். அவர்களை அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். அவர்களில் ஒருவரான டாக்டர் மக்தூமி, சிறைக்குப் போனபோது அவரது குழந்தைகளுக்கு மிகவும் சிறிய வயது. கடந்த 5 வருடங்களாக அவர்கள் தந்தையைக் காண முடியாமல் தவித்துப் போயிருந்ததாக மக்தூமின் மனைவி தெரிவித்தார்.

அதேபோல இன்னொரு டாக்டரான சல்மான் பார்சியின் மனைவி நபீசா அன்சாரி கூறுகையில், எனது கணவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் அக்கம்பக்கத்தினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானோம். அந்த அவமானத்தை சொல்லில் சொல்ல முடியாது. இப்போது நீதி கிடைத்துள்ளது. அனைவரின் கேள்விகளுக்கும் பதிலும் கிடைத்துள்ளது. இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறோம் என்றார்.

தற்போது விடுதலையாகியுள்ள 7 பேரும், தலா ரூ. 50,000 ரொக்க ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். இவர்கள் வெளிநாடுகளுக்குப் போகக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.


நன்றி:thatstamil.oneindia.in

http://tamil.oneindia.in/news/2011/11/16/malegaon-blasts-case-after-five-years-in-jail-aid0091.html

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்