அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, June 17, 2010

பொறுமையை வலியுறுத்தும் இஸ்லாம்



பொறுமை பற்றி அல்லாஹ் தன் திருமறையில் பின்வறுமாறு கூறுகிறான்:-
1. காலத்தின் மீது சத்தியமாக!
2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்
3. விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்து சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்து பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத்தவிர. (ஸ¤ரா: அஸ்ர்)
“அஸ்ஸபீரு” எனும் அறபுப் பதத்திற்கு பொறுமை என்று சொல்லப்படும். ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் அனைவரும் பொறுமையைக் கடைப்படிப்பது அசியமாகும். இஸ்லாம் மார்க்கமும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துகின்றது.
விசுவாசம் கொண்டு, நற்கருமங்கள் செய்து உபதேசம் செய்து, பாவங்களைத் தவிர்த்து, நன்மைகள் செய்வதில் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்து, பொறுமையைக் கொண்டு உபதேசிப்பவர் நஷ்டத்தில் இல்லை என்பது மேற்கூறிய வசனத்தின் கருத்தாகும். பொறுமை என்பது, பெருந்தன்மை, உயர்ந்த குணம், ஆகியவற்றின் அறிகுறியாகும்.
இழப்புகளுக்கு எதிரான மிகப்பெரிய காப்பீடு பொறுமையாகும். சூழ்நிலையின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க உதவுவது பொறுமையாகும். இதனால் தான் “அஸ்ஸபூர்” என்பது இறைவனின் அழகிய திருநாமங்களுக் ஒன்றாகத் திகழ்கின்றது. ஏனெனில் இறைவன் பாவம் செய்து கொண்டே இருக்கும் தன்னுடைய அடியானை தண்டிப்பதற்குக் கூட காலம் தாழ்த்துகின்றான். அவனது அடியான் தவறு செய்வதில் அதிவேகத்தோடு செயல்பட்டால் கூட அவன் பல ஆண்டுகள் கழித்தே தன்னுடைய தீர்ப்பை வழங்குகின்றான்.
அவன் மனிதர்களுக்கு நீண்டதொரு கால அவகாசத்தை வழங்குகின்றான். அவர்கள் தவறு செய்த உடனேயே அவர்களைப் பிடித்துத் தண்டித்து விடுவதில்லை.
அல்லாஹ்வின் வசனம் பின்வருமாறு:- (“நபியே!) அவர்கள் வேதனையைக் கேட்டு உம்மிடம் அவசரப்படுகின்றனர். அவர்கள் மீது வேதனை இறக்குவதற்காக (அறிவித்த) அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு ஒரு போதும் மாற்றம் செய்வதில்லை. நிச்சயமாக நீங்கள் கணிக்கிடும் ஆயிரம் வருடங்கள் உமதிறைவனிடத்தில் ஒரு நாளுக்குச் சமமாகும்”. (அல்குர்ஆன் 22:47) தைரியம், வீரம், ஆண்மை ஆகியவற்றின் வரிசையிலே இடம்பெறுகின்றது பொறுமை.
ஏனெனில் வாழ்க்கைச் சுமையைத் தைரியமற்ற கோழைகளாலும் பலவீனமானவர்களாலும் அவசர புத்திக்காரர்களாலும் சுமந்திட இயலாது. ஒரு மனிதரிடத்தில் சில பொருட்களைக் கொண்ட ஒரு கட்டு சுமை இருந்தால் அவன் அதை எடுத்துச் செல்ல பலம் மிக்க ஒரு மனிதனையே அமர்த்துவான். அந்த சுமையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல குழந்தைகளையோ பலவீனமானவர்களையோ நியமிப்பதில்லை.
வாழ்க்கை என்ற சுமையும் இதைப் போன்றதே. வாழ்க்கைப் பொறுப்பு என்ற சுமையைத் தூக்கிடவும் அதனை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்றிடவும் சிங்கத்தின் இதயமும் மலை அளவு பொறுமையும் உடையவர்களால் மட்டுமே முடியும்.
இதேபோல் சமுதாயத்தில் தலைமைப் பொறுப்பை சுமப்பவர்கள்; இவர்கள் ஒவ்வொரு வரும் தாங்கள் வகிக்கும் பொறுப்புக்குத் தகுந்த அளவில் பொறுமை உடையவர்களாகவும், கஷ்டங்களைத் தாங்கிடும் தன்மை உடையவர்களாகவும், சகிப்புத் தன்மை உடையவர்களாகவும் இருந்திட வேண்டும். மேலும் பிரிதொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்:- திட்டமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
ஒரு முறை இறைவனின் தூதர் (ஸல்) அவர்களிடம், “யார் யார் அதிகமான சோதனைகளைச் சந்திக்க வேண்டிய திருக்கும் “என வினவப்பட்டது. அல்லாஹ்வின் தூதர்கள், கீழ்படியில் வாழும் மக்கள், அதற்கும் கீழ்படியில் வாழும் மக்கள் ஆகியோர் அதிகமான சோதனைகளைச் சந்திக்க வேண்டிய திருக்கும்.
மனிதர்களில் ஒவ்வொருவரும் அவர்கள் மார்க்கத்தில் காட்டும் ஈடுபாடுகளின் அளவிற்கு சோதனை செய்யப்படுவார்கள். எந்த மனிதருக்கு மார்க்கத்தில் ஈடுபாடு பலமானதாகவும், அழுத்தாமானதாகவும் இருக்கின்றதோ அவருக்கு வரும் சோதனையும் கடினம் குறைந்ததாகவே இருக்கும். ஒரு மனிதனுக்கு வைக்கப்படும் சோதனை அவன் அதனை வெற்றிக் கொள்ளும் வரை தொடரும்.
அவன் அதனை வெற்றிக் கொண்ட பின்னர், அவன் பூமியில் நடக்கின்றான். அவன் மீது அதன் பின்னர் எந்தப்பாவமும் இல்லை என்று பதில் சொன்னார்கள்.

நன்றி:http://ipcblogger.net/

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்