அபூதர் (ரலி) அவர்கள் from islamkalvi on Vimeo.
Monday, June 27, 2011
Tuesday, May 17, 2011
ஹஜ் பயணத்துக்கு 10 ஆயிரம் விண்ணப்பங்கள்: தமிழ்நாடு ஹஜ் குழு
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)எல்லாப் புகழும் இறைவனுக்கே........
சென்னை, மே 16- ஹஜ் பயணத்துக்காக தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹஜ் பயணத்துக்காக, தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களிடம் இருந்து சுமார் 10,470 (+7 குழந்தைகள்) விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. மும்பை, மத்திய ஹஜ் குழுவின் அறிவுரைப்படி, புனிதப் பயணம் செல்பவர்களை தேர்வு செய்ய, மாவட்ட வாரியாக குலுக்கல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குலுக்கல் நிகழ்ச்சி மே 24-ம் தேதி, காலை 10 மணியளவில், சென்னை ராயப்பேட்டை, புதுக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆனைக்கார் அப்துல் ஷுக்கூர் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலமாக விண்ணப்பித்துள்ள ஹஜ் பயணிகள், இக்குலுக்கலில் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: http://www.dinamani.com
என்ற இணையதளம் மூலம் குலுக்கல் முடிவுகளை பார்க்க முடியும்.
Sunday, May 15, 2011
ஹஜ் பயணத்துக்கான குலுக்கல் தேதி மாற்றம்:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
எல்லாப் புகழும் இறைவனுக்கே........
ஹஜ் பயணத்துக்கான குலுக்கல் தேதி மாற்றம்:
சென்னை, மே 15- ஹஜ் புனிதப் பயணத்துக்கான குலுக்கல் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நிர்வாக காரணங்களால், மே 17-ம் தேதி நடைபெற இருந்த ஹஜ் பயணிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல், மே 24-ம் தேதி நடைபெறும். அன்றைய தினம், காலை 10 மணியளவில், சென்னை புதுக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆணைக்கார் அப்துல் சுக்கூர் கலையரங்கத்தில் குலுக்கல் நடைபெறும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: http://www.dinamani.com
என்ற இணையதளம் மூலம் குலுக்கல் முடிவுகளை பார்க்க முடியும்.