அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Tuesday, May 17, 2011

ஹஜ் பயணத்துக்கு 10 ஆயிரம் விண்ணப்பங்கள்: தமிழ்நாடு ஹஜ் குழு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
எல்லாப் புகழும் இறைவனுக்கே........

சென்னை, மே 16- ஹஜ் பயணத்துக்காக தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹஜ் பயணத்துக்காக, தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களிடம் இருந்து சுமார் 10,470 (+7 குழந்தைகள்) விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. மும்பை, மத்திய ஹஜ் குழுவின் அறிவுரைப்படி, புனிதப் பயணம் செல்பவர்களை தேர்வு செய்ய, மாவட்ட வாரியாக குலுக்கல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குலுக்கல் நிகழ்ச்சி மே 24-ம் தேதி, காலை 10 மணியளவில், சென்னை ராயப்பேட்டை, புதுக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆனைக்கார் அப்துல் ஷுக்கூர் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலமாக விண்ணப்பித்துள்ள ஹஜ் பயணிகள், இக்குலுக்கலில் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: http://www.dinamani.com

http://www.hajjtn.org/

என்ற இணையதளம் மூலம் குலுக்கல் முடிவுகளை பார்க்க முடியும்.No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்