அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, September 30, 2010

உளவியல் ரீதியாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள காஸா சிறுவர்கள்

E-mailஅச்செடுக்க

சுமார் 20 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் காஸா சிறுவர்கள் இன்றுவரை உளவியல் ரீதியான கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர் என பலஸ்தீன் உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (28.09.2010) 'காஸா சிறுவர்களும் ஸியோனிஸ யுத்தத்தின் உளவியல்- சமூகத் தாக்கங்களும்' என்ற தலைப்பில் காஸா பிரதேசத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரைநிகழ்த்திய உளவியல் நிபுணர் அப்துல் அஸீஸ் தாபித், காஸா மீதான ஸியோனிஸ ஆக்கிரமிப்பு யுத்தம் முடிந்து ஏறத்தாழ 20 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அங்குள்ள சிறுவர்களில் அனேகமானவர்கள் இன்றுவரை பல்வேறு உளவியல் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரினால் உளவியல் ரீதியாகத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள காஸா சிறுவர்களை அவற்றிலிருந்து மீட்டு, சுமுகமானதொரு சமூகச் சூழலோடு ஒத்து வாழத்தக்க மனநிலையுடையவர்களாய் மாற்றும் வகையில் உரிய செயற்திட்டங்களை மேற்கொள்ள முன்வருமாறு சர்வதேச அமைப்புக்களை நோக்கி அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

குத்ஸ் திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி சுஹைல் தியாப் குறிப்பிடுகையில், மேற்படி போரின்போது பலஸ்தீனர்களின் கல்விநிலையங்கள் தாக்கப்பட்டமை மூலம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை பலஸ்தீனர்களின் கல்வி நடவடிக்கைகளை திட்டமிட்ட வகையில் முடக்கிப் போடும் விதமாகச் செயல்பட்டுள்ளது என்பதையே தெளிவுபடுத்துகின்றது என்று கண்டனம் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரின் விளைவாக காஸா சிறுவர்கள் இன்றுவரை எதிர்நோக்கிவரும் பல்வேறுபட்ட உளவியல் பாதிப்புகளால் அவர்களின் கல்வி நடவடிக்கைகளில் மிக மோசமான பின்னடைவு நிலை தோன்றியுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளார்

நன்றி:http://www.inneram.com/

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்