அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Tuesday, August 24, 2010

உங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்.


http://ethirkkural.blogspot.com/ என்ற இணையத்தில் வெளியான தகவல் இது

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...


உங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்...



தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

சமீபத்தில் எனக்கு வந்த ஒரு ஈமெயில் இன்றைய முஸ்லிம் இளைஞர்கள் சிலரது எண்ணங்களை பிரதிபலித்தது. சில வருடங்களுக்கு முந்தைய என் நிலையை அதனுடன் ஒப்பிட வைத்தது. அதை அனுப்பிய சகோதரர் அனுமதியுடன் அந்த கடிதம் இங்கே உங்கள் பார்வைக்காக...


அன்பு சகோதரர் ஆஷிக் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும். என் பெயர் shanawazkhan. கடந்த ஒரு வருடமாக கணினி உபயோகபடுத்துகிறேன். தமிழ் பிளாக்கர் எனக்கு ஆறு மாதமாக பழக்கம். பொழுது போக்கிற்காக நிறைய தளங்களை வாசிக்க தொடங்கினேன்.

அப்போது நான் பட்ட மன உளைச்சலை வார்த்தைகளாக வடிக்க முடியாது. ஏனென்றால் தூய மார்க்கமாம் இஸ்லாத்தை பற்றியும் இவ்வுலகிற்கே வழிகாட்டிய கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை பற்றியும் மிகவும் கீழ்த்தரமான சிந்தனைகளை விதைக்கும் பல தளங்களை காண நேர்ந்தது. இஸ்லாத்தின் மீது தொடுக்கப்பட்ட போராகவே அதை கணிக்க முடியும்.

இல்லை! இது தவறான செய்திகள். நீங்கள் கூறுவதை எங்கள் நபி எங்களுக்கு கற்று கொடுக்கவில்லை என்று என் மனம் ஓலமிடும். ஆனால் இந்நேரத்தில் என்னுடைய இஸ்லாமிய அறிவும் மிக குறைவே. எப்படி என்றால் யாராவது தொழ அழைத்தால் என்ன! இன்று வெள்ளிகிழமையா! அதற்குள் வந்து விட்டதா! என்று திகைக்கும் அளவிற்கு :).

பிறகு என்னுடைய தேடலை அதிக படுத்திய பொழுது நம் சகோதரர்களின் வலைத்தளங்கள் காண கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்! இம்மக்கள் தங்களுடைய பணிசுமைகளுக்கிடையிலும் பதிலடி கொடுப்பது கண்டு உளம் வியந்தேன்.

ஆம்! அப்போது ஆயுதங்களால் தாக்கினார்கள். பதில் கொடுத்தோம். இப்போது கருத்துருவாக்கங்களால் தாக்குகிறார்கள். பதில் கொடுத்தோம். கொடுப்போம்.

அவ்வாறு தங்களுடைய தளத்தையும் கண்டேன். ************************************

அல்லாஹ் தங்களுக்கும் ஏனைய சகோதரர்களுக்கும் கூலியை வழங்குவானாக.ஆமின்!.

பின் குறிப்பு:

என்னுடைய பணி online job வகையை சேர்ந்தது. எனக்கு வந்த வேலைகளில் ஒன்று கனடா நாட்டு தொண்டு நிறுவனங்களின் விவரங்களை சேகரிக்கும் பணி. அந்த தொண்டு நிறுவனங்களில் பெரும்பாலானவை கிருஸ்தவ சபைகளாகும். அந்த சபைகளின் தளங்களை ஆய்வு செய்யும் போது Islam is cult மற்றும் 'வழிதவறிய ஆடுகள் ' என்ற தலைப்பில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களை போதிக்கவும், பரப்பவுமாகிய வகுப்புக்களின் பட்டியலை காண நேர்ந்தது. இத்தகவலை தங்களின் வரும் பதிவுகளில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

நம் சகோதரர்களின் தளங்களில் மெயில் தொடர்புக்கான முகவரி காண கிடைக்கவில்லை.அதனால் தங்களிடமே அனைத்து விஷயங்களையும் பகிர்து கொள்ள நாடினேன். அஸ்ஸலாமு அலைக்கும்...
-----end of email-----


"பொருள், பதவி என்று எது வேண்டுமென்றாலும் கேளுங்கள், கொடுக்கிறோம். ஆனால் இஸ்லாத்தை போதிப்பதை மட்டும் நிறுத்தி விடுங்கள்" என்று குறைஷிகள் வேண்டிய போது,

"ஒரு கையில் சூரியனையும், மற்றொரு கையில் சந்திரனையும் கொடுத்து நிறுத்த சொன்னாலும் என்னால் முடியாது" என்று கூறினார்களே, அவர் சந்திக்காத சவால்களையும், துயரத்தையுமா நாம் சந்திக்கிறோம்? அன்றைய நிலைமையோடு ஒப்பிடும்போது இன்றைய சூழ்நிலையெல்லாம் ஒன்றுமில்லை.

இஸ்லாம், இன்று நேற்றா இதையெல்லாம் சந்திக்கிறது?
வரலாறு முழுவதும் இதையெல்லாம் சந்தித்து தானே வந்திருக்கிறது?
நமக்கு முன் சென்ற ஒவ்வொரு தலைமுறையும் இதையெல்லாம் அனுபவித்தவர்கள் தானே?.

1800 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை, சுமார் 60,000 புத்தகங்கள் இஸ்லாத்திற்க்கெதிராக எழுதப்பட்டுள்ளதாக டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டது (The Times, dated 16th April 1979).

ஆனால், இஸ்லாத்திற்கெதிரான எந்த ஒரு முயற்சியும் இதுவரை பலனளிக்கவில்லையே. இறைவனின் கிருபையால் இஸ்லாம் மென்மேலும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

நிச்சயமாக இவர்களுக்கு நாம் தரும் மிகச் சிறந்த பதிலடிகளில் ஒன்று, நாம் முழுமையான முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவது தான்.

அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிப்போம். அழகிய முறையில் விவாதிப்போம். ஆனால், அது விதண்டாவாதமாக இருந்தால், அவர்களிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று இறைவன் நமக்கு சொல்லியிருக்கிறான், சலாம் சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருப்போம்.

இவர்கள் நிச்சயமாக நமக்கு மாபெரும் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். நம் ஈமானை அதிகரித்து கொண்டிருக்கிறார்கள். நிறைய முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளை இஸ்லாம் என்றால் என்ன என்று பார்க்க வைத்திருக்கிறார்கள்.

நம்மை விட மும்முரமாக முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் செய்யும் உதவிக்கு நன்றி என்பது நிச்சயமாக மிகச் சிறிய வார்த்தை....

இறைவன் நம்மை என்றென்றும் இஸ்லாத்தில் நிலைக்கச்செய்வானாக...ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்