கே.ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ [ கோபத்தின் மூலம், நன்மையா? தீமையா? என்று தனிமையில் நாம் சிந்தித்துப் பார்த்தால்... நன்மையை விட தீமையே நிறைந்து காணப்படும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள், ''ஒருவன் உங்களை அவமானப்படுத்தினால்; ஏளனம் செய்தால்; குறைகண்டால்; பலருக்கு மத்தியில் மானபங்கப்படுத்தினால்; அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பதில் தரும் வகையில் நீங்களும் அவனை ஏசவோ அவமானப்படுத்தவோ வேண்டாம்! ஏனென்றால் அவன் உங்களுக்கு எதிராகப் பேசிய அந்த வார்த்தையே செய்த அந்தச் செயலே அவனை அவமானப்படுத்தப் போதுமான ஒன்றாகும்''. (அபூதாவூது) (இறைவன் மீது பயபக்தியுடையோர்) தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான் (அல்குர் ஆன் 3:134) ] பொதுவாக இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவருமே, விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், பிறமனிதரோடு இணைந்தே வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்தப் பிறமனிதன், நமது கணவனாக, மனைவியாக, நண்பனாக, உறவினராக, சக பணியாளனாக, சகொதர மதத்தைச் சார்ந்தவனாக இப்படி பல்வேறு வகையினராக இருக்கலாம். இவர்கள் அனைவருமே, நல்லவர்களாக இருந்திடுவதில்லை. அவர்களில் ஒருசிலர் தீயவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நமக்குத் தீங்கு விளைவிக்கும்போது அவமானப்படுத்தும்போது ஆத்திரம் வரும். பழிவாங்க வேண்டும் என்று நமது உள்ளம் ஆர்ப்பரிக்கும். அதுதான் இயற்கையும் கூட. ஆனால் ... உலகில் வாழும் ஒவ்வொருவருமே இப்படி பழிவாங்கும் எண்ணத்தோடு அலைந்தால் அல்லது திருப்பித் தாக்க ஆரம்பித்துவிட்டால், உலகில் உடலாலும் - மனதாலும் ஊனமுற்றவற்களே நிறைந்து காணப்படுவார்கள். உலகில் ஏற்படும், அத்தனை பிரச்சனைகளுக்கும் அடித்தளம், என்னவென்று நீங்கள் யோசித்துப் பார்த்தால், இந்த சகிப்புத்தன்மை இல்லாததுதான் முக்கிய காரணம் என்பதை நாம் உணரலாம். எனவேதான், மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் இஸ்லாம் இந்த சகிப்புத் தன்மையை இறைநம்பிக்கையாளனின் பண்புகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. கோபம் கூடாது என்று அது கூறவில்லை. அதை மென்று விழுங்கிவிடுமாறு வலியுறுத்துகிறது. யுத்தகளத்தில் எதிரிகளை வெற்றிவாகை சூடுபவன் உண்மையில் வீரன் அல்ல. ஆத்திரம் வரும்போது, அதை அடக்கும் வலிமை பெற்றவனே, எதார்த்தத்தில் வீரன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயம்புவார்கள். கோபப்படும் மனிதர்களை நபியவர்கள் நான்கு வகையாகப் பிரிக்கின்றார்கள். முதல் வகையினர்; மிகத் தாமதமாகவே கோபத்திற்கு உள்ளாவர்கள். ஆனால் வெகுவிரைவிலேயே நிதானநிலைக்குத் திரும்பி விடுவார்கள். இது ஒரு ரகம். இரண்டாம் வகையினர், மிக வேகமாக கோபத்திற்கு உள்ளவர்கள். ஆனால் வெகு தாமதமாகவே நிதான நிலைக்குத் திரும்புவார்கள். இப்படியொரு ரகம். மூன்றாம் வகையினர், மிக வேகமாக கோபத்திற்கு உள்ளாவர்கள். ஆனால் வெகு தாமதமாகவே நிதான நிலைக்குத் திரும்புவார்கள். இப்படியொரு ரகம். மூன்றாம் வகையினர், மிகவேகமாக கோபத்திற்கு உள்ளாவார்கள். அதே போல மிக விரைவிலேயே நிதான நிலைக்குத் திரும்புவார்கள். இது வேறொரு ரகம். நான்காம் வகையினர், மிக தாமதமாகவே கோபத்திற்கு உள்ளாவார்கள். அதே போல் வெகு தாமதமாகவே நிதான நிலைக்கு திரும்புவார்கள். இவர்களில் யார் மிக விரைவில் கோபப்பட்டு, வெகு தாமதமாக நிதான நிலைக்குத் திரும்புகிறாரோ, அவர் மனிதர்களில் ரொம்ப மோசமானவர். ஆனால் யார் மிக தாமதமாக கோபப்பட்டு உடனேயே அதற்காக வருத்தப்பட்டு மீண்டும் பழைய சகஜநிலைக்குத் திரும்பி விடுகிறாரோ, அவர் தான் இறைவனின் பார்வையில் தலைசிறந்தவர் ஆவார். இந்த நான்கு பிரிவினரில் நாம் எந்த ரகம் என்பதை நாம் ஒவ்வொருவரும் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் நடைமுறை வாழ்வில் உப்புக்கல்லுக்கும் பெறாத சின்னச் சின்ன வி~யங்களுக்கெல்லாம நாம் கோபப்பட்டு நம் உடலையும் மனதையும் வருத்திக் கொள்கிறோம்.இப்படித்தான், புத்திசுவாதீனமில்லாத ஒருவன் புதுச்செருப்பொன்றை வாங்கினான். ஆனால் அதைத் தன் வாயில் வைத்து கடித்துக் கொண்டிருந்தான். ஏனப்பா, காலில் அணிய வேண்டிய செருப்பை உன் வாயில் வைத்து கடித்துக் கொண்டிருக்கிறாய்? என்று பக்கத்தில் நின்றவன் கேட்டிருக்கின்றான். அதற்கு அவன் சென்னானாம்.... ‘வேறொன்றுமில்லை! அந்தச் செருப்பு என் காலைக்கடித்துவிட்டது. அதுதான் அதைத் திருப்பி கடித்துக் கொண்டிருக்கிறேன்’. இப்படித்தான் பலர், பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான வேலையில் ஈடுபட்டு விடுகின்றார்கள். ஒருவகையில் பார்த்தால், கோபம் என்பது கூட தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம் தான். கோபத்தின் வாசலில், விழுந்து விட்ட ஒருவனை நீங்கள் பாருங்கள். அதன் தொடர்ச்சியாக அவன் பல்வேறு வகையான முட்டாள்தனங்களில் ஈடுபடுவான். சிலநேரங்களில் நமக்கே இப்படியான அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. தட்டியவுடன் கதவு திறக்கவில்லை என்றால்... உடனே நாம் நதவையே திட்ட ஆரம்பித்துவிடுவோம். இன்னும் சிலர் அந்தக் கதவையே எட்டி உதைப்பதும் கூட உண்டு. இதுவெல்லாம் கோபம் என்ற பைத்தியத்தின் வெளிப்பாடு. கோபத்தின் மூலம், நன்மையா? தீமையா? என்று தனிமையில் நாம் சிந்தித்துப் பார்த்தால்... நன்மையை விட தீமையே நிறைந்து காணப்படும். சே அவசரப்பட்டு விட்டோமே.. அந்த நேரத்தில் நாம் ஏன் அப்படி நடந்து கொண்டோம்? இந்தக் கேள்வியைத் தாண்டிவராத மனிதர்களே, இந்த உலகில் யாரும் இருக்க முடியாது. வெளியில் யாருக்கும் தெரியாமல் போனாலும், கோபத்தினால் நமக்குள்ளே அவமானப்பட்ட ஒரு பத்து சம்பவங்களாவது நம் ஒவ்வொருவரின் வாழ்விற்குள்ளும் நிச்சயம் புதைந்து கிடைக்கும். கோபத்தோடு ஒருவன் தன் இடத்திலிருந்து எழுகிறான் என்றால்... நீங்கள் நன்றாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவன் நஷ்டத்தோடு தான் உட்கார வேண்டியது ஏற்படும். கோபத்தில் ஒருவனைப் பழிவாங்குவதைவிட, அவனை மன்னித்து விடுவதில் நமக்குப் பல்வேறு பயன்கள் உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக ஒருவனை மன்னிப்பதின் மூலம் கோபம் என்ற செலவை நாம் குறைக்கிறோம். இரண்டாவதாக நம்முடைய உடல் மற்றும் மனஅமைதி நஷ்டமாவதைத் தடுக்கிறோம். இதற்கும் மேலாக நாம் யாரை மன்னிக்கிறோமோ அவருடைய அன்பு, நன்றி உணர்ச்சி போன்றவற்றை இலவச இணைப்பாகவும் பெறமுடியும். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் கோபப்பட்டால் அதனால் நம்முடைய எனர்ஜி அதிக அளவில் செலவாகிறது. உடல் மற்றும் மனஅமைதி கெடுகிறது என்பது மாத்திரமல்ல: எதிராளியின் தொடர் கோபம் மற்றும் பகைமைக்கும் உள்ளாகிறோம். இவ்வாறு ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவதின் மூலம் எதிரிகளில் ஒருவனை அதிகமாக்குவது அறிவுடமையா? இல்லை பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மூலம் புதிதாக ஒரு நண்பனை அடைவது அறிவுடமையா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்; குறிப்பிட்டுள்ளார்கள், ''ஒருவன் உங்களை அவமானப்படுத்தினால்; ஏளனம் செய்தால்; குறைகண்டால்; பலருக்கு மத்தியில் மானபங்கப்படுத்தினால்; அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பதில் தரும் வகையில் நீங்களும் அவனை ஏசவோ அவமானப்படுத்தவோ வேண்டாம்! ஏனென்றால் அவன் உங்களுக்கு எதிராகப் பேசிய அந்த வார்த்தையே செய்த அந்தச் செயலே அவனை அவமானப்படுத்தப் போதுமான ஒன்றாகும்''. (அபூதாவூது) "அதெப்படி.... ஒருவன் நம்மை அவமானப்படுத்தும் போது நாம் மட்டும் சும்மா வாயைப் பொத்திக்கொண்டு அமைதிகாப்பது? நாக்கைப் புடுங்கிக் கொள்கிற மாதிரி ஒரு நாலு கேள்வி கேட்டால் தானே ஐயா, மனசு ஆறும்!" என்று நீங்கள் கேட்கலாம்... உங்கள் மனதை வேறு வகையில் ஆற்றக்கூடிய இந்த நபிமொழியைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்!. "ஒருவன் இன்னொருவனைத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள் உடனே அது குறிபார்த்து எறியப்பட்ட அம்புபோல நேரே எதிராளியைப் போய்தாக்கி விடுவதில்லை. அந்த வார்த்தை சிலபல இடங்களுக்குப் பயணப்படுகிறது. முதலாவதாக அது வானத்தின் பக்கம் செல்கிறது. ஆனால் வானத்தின் கதவுகள் மூடப்பட்டிருக்கும். உடனே அது இந்தப் பூமிக்கு மீண்டும் திரும்புகிறது. இங்கே ப+மியின் கதவுகளும் மூடப்பட்டுவிடும். எனவே அந்த வார்த்தை இங்கும் அங்குமாக இடம் தேடி அலையும். எங்கேயும் அதற்கு இடம் கிடைக்காது. இதற்குப்பின் தான் அது எதிராளியிடம் செல்லும். சென்ற உடனேயே அது அவனைத்தாக்கி விடுவதில்லை. அதற்கு அவன் உரித்தானவனா என்று கொஞ்சநேரம் நின்று யோசிக்கும் உரித்தானவன் என்றால் அது அவனைச் சென்றடையும். இல்லையென்றால்... சுவற்றில் எறியப்பட்ட பந்து போல் எறிந்தவன் மீதே திரும்ப வந்து பாயும் ". நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன தெளிவான இந்தச் செய்தி அபூதாவூது என்ற ஆதாரப்பூர்வமான நபி மொழி கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நன்றி:http://www.nidur.info |
Friday, July 30, 2010
பூமியைப் போன்ற பொறுமை
Wednesday, July 28, 2010
புறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 9th January 2010
அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தாகுக!
புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.
ஒருவர் புறம் பேசுவதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டுமெனில், முதலில் அவர், புறம் பேசுதல் என்றால் என்ன? அதனால் ஏற்படும் தீமைகள் என்ன? புறம் பேசும் ஒருவனுக்கு இம்மை மற்றும் மறுமையில் கிடைக்கும் தண்டனைகள் யாவை? என்பதை அறிந்துக் கொள்வாராயின், இன்ஷா அல்லாஹ் அவர் அந்த தீயசெயலிளிருந்து தவிர்ந்து இருப்பார்.
புறம் பேசுதல் என்றால் என்ன?
புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்: -
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
புறம்பேசுதல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட (ஹராமான) செயலாகும்:-
அல்லாஹ் கூறுகிறான்:-
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
பிறரைக் கேலி செய்யும் விதத்தில் பேசக் கூடாது: -
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். அல்-குர்ஆன் 49:11)
ஒரு முஸ்லிம், பிற முஸ்லிமின் கண்ணியத்தைக் குழைக்கும் வகையில் புறம் பேசக் கூடாது:-
“ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: அஹ்மத்)
புறம் பேசுவதால் இம்மையில் ஏற்படும் தீமைகள்:-
1) புறம் பேசுவதன் மூலம் குடும்பங்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள்,தகராறுகள் ஏற்படுகிறது.
2) ஒரு சபையில் பிறரைப் பற்றிப் புறம் பேசப்படும் போது, அது சமுதாயங்களுக்கிடையே பிளவை உண்டாக்குகிறது.
3) சமுதாயம் பிளவு படுவதன் மூலம் முஸ்லிம்களிடையே பலபிரிவுகள் ஏற்பட்டு, முஸ்லிம் சமுதாயம் பலவீண மடைகிறது.
4, முஸ்லிம் சமுதாயம் பலவீணமடைவதால் எதிரிகளால் ஆக்ரமிக்கப்பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பாதிப்படைகிறது.
புறம் பேசுவதால் மரணததிற்குப்பிறகு கப்ரிலும்,மறுமையிலும் கிடைக்கும் தண்டனைகள்: -
கப்ரில் கிடைக்கும் தண்டனைகள்: -
‘நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்கப்பட்ட போது ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புஹாரி.
மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்: -
1) மனித மாமிசத்தை சாப்பிடுவார்கள்: -
“மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது “ஜிப்ரீலே, அவர்கள் யார்” என்று கேட்டேன். “இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்” என்று விளக்கமளித்தார்கள்.” அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது.
2) புறம் பேசுபவன் சுவனம் நுழையமாட்டான்: -
“புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)
முஃமினான என தருமை சகோதர, சகோதரிகளே! அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களினால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள இந்த புறம் பேசுதல் என்ற தீயசெயலை நாம் ஒவ்வொருவரும் தவிர்ந்திருப்பது மிக மிக அவசியமாகும்.
புறம் பேசுவதைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்: -
ஒருவர் புறம் பேசுவதன் தீமைகளை அறிந்து அதைத் தவிர்ந்தவர்களாக, யாரைப் பற்றிப் புறம் பேசினார்களோ அவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும். பின்னர் மனந்திருந்தியவராக அழுது மன்றாடி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:-
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்”. (அல்-குர்ஆன் 39:53-54)
“நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 6:54)
எனவே சகோதர,சகோதரிகளே நாம் மனந்திருந்தியவர்களாக,இனி எக்காரணத்தை கொண்டும்,யாரைப்பற்றியும், புறம் பேச மாட்டேன்! ஒருவரின் கண்ணியத்தைக் குழைக்கும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டேன்! என்று உறுதி பூண்டவராக, செயல்பட்டு, அந்த உறுதியில் நிலைத்திருப்பாராயின் அதனால் அளப்பறிய நன்மைகள் அவருக்கு கிட்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -
“எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.
“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
மேலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்! இதை நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்து விடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹமத்)
அல்லாஹ் நம் அனைவரையும் புறம் பேசுதல் என்னும் தீய செயலிலிருந்து காப்பாற்றி அதைத் தடுக்க கூடிய மற்றும் நற்செயல்கள் புரிபவர்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும்.
Monday, July 26, 2010
பராஅத் இரவு என்ற பெயரில்..
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி
- இம்தியாஸ் ஸலபி
இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.
அமல்களை நிர்ணயிப்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித் தோன்றல்களோ அல்ல! துர திஷ்டவசமாக இன்று இந்நிலை பரவலாக காணமுடிகிறது.
மார்க்கத்தில் எல்லை மீறி செல்கின்ற போது தனி மனித வழிபாடும், மூட நம்பிக்கைகளும், வழிகேடுகளும் தோற்றம் பெறுகின்றன. இறுதியில் கைசேதப்பட்டவனாக மனிதன் நரகில் நுழைகிறான். இந்த அபா யத்திலிருந்து பாதுகாப்பதற்காகத்தான் நபியவர்கள் ”மார்க்கத்தில் எல்லை மீறி செல்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன்” (நூல் முஸ்லிம்) என்றும் ”எங்களுடைய கட்டளையில்லாமல் எவர் ஒரு செயலை (அமலை) செய்கிறாரோ அது நிராகரிக்கப்படும் (நூல்: முஸ்லிம்) என்றும் கண்டித்துள்ளார்கள்.
எனவே எந்த ஒரு அமலை செய்வதானாலும் அதற்கு நபிவழியில் ஆதாரமுண்டா? என்று பார்க்க வேண்டும். இருந்தால் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஒதுங்கி விட வேண்டும். இதுவே சுன்னாவை கடைபிடிக்கும் ஒழுங்கு முறையாகும்.
இன்று பராஅத் இரவு என்ற பெயரில் முஸ்லிம்களால் ஒரு இரவு விசேடமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய இரவில் நின்று வணங்கியும், நோன்பு நோற்றும் மூன்று வகையான பிரார்த்தனைகளை (1. உணவு விஸ்தீரணம், 2. நீண்ட ஆயுள், 3. எல்லாவித துன்பங்களை விட்டும் நீங்கியிருத்தல் போன்ற துஆக் களை) கேட்டும், மூன்று யாசீன் ஒதியும் விஷேடமான தொழுகைகளை நடாத்தியும் இன்னும் இது போன்ற செயல்களையும் செய்கிறார்கள். பள்ளிவாசல்களிலும் விசேடமான நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இதற்கான ஆதாரங்கள் உண்டா? என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
سنن ابن ماجه – (ج 4 / ص 301)
1378 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنْبَأَنَا ابْنُ أَبِي سَبْرَةَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلَا كَذَا أَلَا كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ
سنن ابن ماجه بحاشية السندي – (ج 3 / ص 178)
1378 – قَوْله ( فَقُومُوا لَيْلهَا )
وَفِي الزَّوَائِد إِسْنَاده ضَعِيف لِضَعْفِ اِبْن أَبِي بُسْرَة وَاسْمه أَبُو بَكْر بْن عَبْد اللَّه بْن مُحَمَّد أَبِي بُسْرَة قَالَ فِيهِ أَحْمَد بْن حَنْبَل وَابْن مُعِين يَضَع الْحَدِيث .
”ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்துவிட்டால் அவ்விரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு பிடியுங்கள். அன்றைய நாளில் சூரியன் மறைந்த பின் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து ”என்னிடம் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா? நான் அவருக்க மன்னிப்பு வழங்குகிறேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவருக்கு உணவளிக்கி றேன். சோதனைக்கு ஆளாவனவர் உண்டா? அவருக்கு நிவாரணம் வழங்குகிறேன் என்று சுபுஹ் நேரம் வரை கேட்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அறிவிக்கிறார்கள். இந்தச் செய்தி இப்னு மாஜாவில் பதிவாகியுள்ளது.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை யில் ‘இப்னு அபீசப்ரா’ என்பவர் இடம்பெறு கிறார். இவர் பலஹீனமாவர். இவர் பொய் யான ஹதீஸ்களை இட்டுக் கட்டக் கூடிய வர் என இமாம் அஹ்மத் (ரஹ்), இப்னு ஹன்பல் (ரஹ்) இமாம் இப்னு முயீன் (ரஹ்) குறிப் பிடுகிறார். எனவே இந்த ஹதீஸைக் கொண்டு செயல்பட முடியாது.
سنن الترمذي – (ج 3 / ص 193)
670 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ
فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَخَرَجْتُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ
وَفِي الْبَاب عَنْ أَبِي بَكرٍ الصِّدِّيقِ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْحَجَّاجِ و سَمِعْت مُحَمَّدًا يُضَعِّفُ هَذَا الْحَدِيثَ و قَالَ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ وَالْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَمْ يَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ
ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்: ”நான் (ஸல்) அவர்களை இரவில் படுக்கையில் காணாததால் அவர்களைத் தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ‘பகீய்’ மையவாடியில் இருந்தார்கள். அப்போது ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவில் அல் லாஹ் கடைசி வானத்திற்க இறங்கி ஆட்டின் உரோமத்தின் எண்ணிக்கையை விட அதிகமாக பாவமன்னிப்பு வழங்குகிறான் என்று நபி (ஸல்) கூறினார்கள் என்று ஆயிஷா (ரழி) அறிவிக்கும் செய்தி திர்மிதியில் பதிவாகியுள்ளது.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ‘ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத்’ என்பவர் இடம்பெறுகிறார். இவர் மற்ற அறிவிப்பாளரான யஹ்யா இப்னு அபூ கஸீல் என்பவரிடம் எதையும் செவியுற்றதில்லை. இது பலஹீனமான செய்தி என்று இமாம் புகாரி (ரஹ்) விமர்சனம் செய்கிறார்கள் என இமாம் திர்மிதி (ரஹ்) குறிப்பிடுகிறார்க்ள. எனவே இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டும் செயல்பட முடியாது.
سنن ابن ماجه – (ج 4 / ص 303)
1380 – حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعِيدِ بْنِ رَاشِدٍ الرَّمْلِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ الضَّحَّاكِ بْنِ أَيْمَنَ عَنْ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ
سنن ابن ماجه بحاشية السندي – (ج 3 / ص 180)
وَفِي الزَّوَائِد إِسْنَاده ضَعِيف لِضَعْفِ عَبْد اللَّه بْن لَهِيعَة وَتَدْلِيس الْوَلِيد بْن مُسْلِم وَاَللَّه أَعْلَم
”ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் இணைவைப்பவனுக்கும் குரோதம் பாரட்டுபவனையும் தவிர அல்லாஹ் தன்னுடைய எல்லா படைப்பினங்களுக்கும் மன்னிப்பு வழங்குகிறான்.. என நபி (ஸல்) கூறினார்கள்.(இப்னுமாஜா)
இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் இப்னு லஹீஆ என்பவர் பலஹீனமானவர் என்றும் வலீத் இப்னு முஸ்லிம் செய்திகளை இருட்டடிப்பு செய்பவர் என்றும் ஹதீஸ் துறை அறிஞர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
எனவே ஷஃபான் பதினைந்தாம் இரவின் சிறப்பு மற்றும் நோன்பு பற்றி வரக்கூடிய எந்தச் செய்தியும் ஸஹீஹானதாக இல்லை என்று ஹதீஸ் கலை இமாம்களே தெளிவுப்படுத்துகிறார்கள். உண்மை இவ்வாறு இருக்கும்போது பலஹீனமான செய்திகளைக் கொண்டு எப்படி அமல் செய்ய முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல ‘பராஅத் இரவு’ என்று குறிப்பிட்டுஎந்த ஒரு ஹதீஸும் வரவில்லை. இதற்கு எப்படி இந்த பெயரை சூட்டினார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.
‘இந்த இரவில் நோன்பு நோற்றால் தப்பில்லையே அதுவும் நன்மைதானே என்று மேலேயுள்ள விபரங்களை தெரிந்த பின் சில நேரம் கேட்கலாம்.
‘தப்பில்லையே! நன்மை தானே, என்று நாமாக சமாதானம் கூறிக் கொள்ளவோ ஆறுதல் அடையவோ எமக்கு எந்த அதிகார முமில்லை. எதை எப்படி எந்த நேரத்தில் எந்த இடத்தில் எந்த முறையில் செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக் கூறுவதற்குதான் அல்லாஹ் இறைத்தூதரை அனுப்பி வைத்தான்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்த செயலும் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மேலேயுள்ள ஹதீஸ் தெரிவிக்கின்றது.
இமாம் நவவீ (ரஹ்) அவர்கள்: ரஜப் மாதத்திலும், ஷஃபான்மாதத்திலும் விசேடமான தொழும் தொழுகை மோசமான நிராகரிக்கக் கூடிய பித்அத்கள். (இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை) என்று கூறுகிறார்கள். நூல்: அஸ்ஸுனனு வல்முப்த திஆது) இது தவிர ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் நிரூபனமாகும் சுன்னத்தான நோன்புகளை நோற்க பழகிக் கொள்ள வேண்டும். எனவே உண்மையைஅறிந்து கொண்ட பின் அதனடிப்படையில் செயல்பட அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக.
تفسير القرآن العظيم لابن كثير – (ج 7 / ص 246)
وقد ذكرنا الأحاديث (1) الواردة في ذلك في ‘سورة البقرة’ بما أغنى عن إعادته.
ومن قال: إنها ليلة النصف من شعبان -كما روي عن عكرمة-فقد أبعد النَّجْعَة فإن نص القرآن أنها في رمضان. والحديث الذي رواه عبد الله بن صالح، عن الليث، عن عقيل عن الزهري: أخبرني عثمان بن محمد بن المغيرة بن الأخنس أن رسول الله صلى الله عليه وسلم قال: ‘تقطع الآجال من شعبان إلى شعبان، حتى إن الرجل لينكح ويولد له، وقد أخرج اسمه في الموتى’ (2) فهو حديث مرسل، ومثله لا يعارض به النصوص.
Saturday, July 24, 2010
ரஷ்யாவில் நடைபெற்ற உலக அறிவியலார் மாநாட்டில் பேராசிரியர் ஆபிதீன்
சமீபகாலங்களில்; மருத்துவ தாவரங்கள் “Phytopharm” பற்றிய ஆராய்ச்சியும் விழிப்புணர்வும் உலகஅளவில் அதிகமாக கவனத்தில் கொள்ளப்பட்டு வருகிறது. வேதிஉரங்களுக்குப் பதிலாக உயிர்உரங்களை(டீழைகுநசவடைணைநச ) கண்டறிந்து பயன்படுத்துவதிலும். தாவரங்களைக் கொண்டு நோய்களைக் குணபடுத்தும் மருந்துப்பொருள்களை கண்டறிவதிலும் உலக நாடுகள் ஒன்றை ஒன்று போட்டிபோட்டு வரும் காலசூழல் இது.
அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் மருத்துவ தாவரங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் உலகஅளவிலான ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட அமைப்பு ஓன்று அந்தந்த வருடங்களில் கண்டறியப்படும் புதிய தாவரமருந்து கண்டுபிடிப்புகள் பற்றிய போட்டி நடத்துவது வழக்கம். உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருந்து கம்பெனி நிறுவனங்களிடமிருந்து ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்திற்கான கண்டுபிடிப்புகள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் பெறப்பட்டு அதில் தகுதியுள்ள கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்படும், மேலும் தேர்ந்தெடுக்கப்படும் ஆராய்ச்சி கட்டுரையாளர்கள் உலகஅளவிலான ஆராயச்சியாளர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு அங்கே புதிய கண்டுபிடிப்புகள் பற்றி விவாதிக்கப்படும். இதன் வரிசையில் , மருத்துவ தாவரங்கள் பற்றிய PHYTOPHARM 2010 எனும் 14th International Conference ஜலை மாதம் 1 முதல் 4 தேதிகளில் ரஷ்ய நாட்டில் உள்ள St.Petersburg நகரத்தின் St.PETERSBURG State University ல் நடைபெற்றது.
இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியர் டாக்டர்.ஆபிதீன் தனது சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரையை கடந்த சில மாதங்களுக்கு முன் சமர்பித்திருந்தார்;. முடிவில், உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 ஆராய்ச்சி கட்டுரைகளில் டாக்டர் ஆபிதீன் அவர்களின் கட்டுரையும் தேர்ந்தெடுக்கப்பட்டு ரஷ்ய நாட்டில் உள்ள St.Petersburg நகரத்தில் நடைபெறும் மாநாட்டிற்கு நேரடியாக அழைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் , பல்கலைக்கழகம் , தமிழகஅரசு மற்றும் பல்கலைகழக மானிய குழுவின் முறையான அனுமதியுடன் டாக்டர் ஆபிதீன் கடந்த 27-06-2010 முதல் 07-07-2010 வரையிலான நாட்களில் விடுமுறை பெற்று அரசு செலவில் ரஷ்யாவின் St.PETERSBURG State University ல் நடைபெற்ற மருத்துவ தாவரங்கள் குறித்த ஆராய்ச்சி மாநாட்டில் தனது ஆராய்ச்சி கட்டுரையை மிகவும் சிறப்பான முறையில் சமர்ப்பித்து விட்டு 07-07-2010 அன்று தாயகம் திரும்பியிருக்கிறார்.
இது குறித்து டாக்டர் ஆபிதீன் அவர்களிடம் கேட்ட போது , இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, ரஷ்யா, கனடா , பின்லான்ட், ஆஸ்ட்ரியா உட்பட சுமார் 60 க்கும் மேற்பட்ட முன்னனி நாடுகளிலிருந்து 150 க்கும் மேற்பட்ட ஆராய்சியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ,இதுவரை உலக சந்தையில் இல்லாத ஆண்கள் உபயோகிக்கக் கூடிய தற்காலிக கருத்தடை மாத்திரைகளை உருவாக்க சாத்யமுள்ள மருத்துவ தாவரங்கள் குறித்த எனது ஆராய்ச்சி கட்டுரை அதிக வரவேற்ப்பைப் பெற்றது. மேலும்,75 சதவீதம் முழுமை பெற்ற இந்த ஆராய்சி இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்பு விரைவில் முழுமையுடன் வெற்றி பெற அதிக சாத்திய கூறு உறுவாகி இருப்பதாகவும், அத்துடன் இந்த ஆராய்ச்சியைத் தொடர இந்தியஅரசின் நிதிஉதவி கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். இன்ஷ அல்லாஹ்...
மேலும் , மிகப் பெரிய ஆய்வுக்கூட வசதியுள்ள பல்கலைகழகங்களில் தான் இது போன்ற ஆராய்ச்சிகளுக்கான சாத்தியக்கூறு உள்ளது. அதே வேளையில் மிகப் பின்தங்கிய பகுதியில் உள்ள போதுமான ஆய்வக வசதியில்லாத நமது கல்லூரியிலும் இது போன்ற ஆராய்ச்சிகள் நடைபெறுவதற்கு காரணம் கல்லூரி நிர்வாகத்தினருடைய ஒத்துழைப்பும் சக பேராசிரியர்களின் ஊக்குவிப்பும் தான். அதற்காக தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கதாகவும் கூறுகிறார்.
அத்துடன் , ரஷ்ய நாட்டில் பல முன்னனி நாடுகளிலிருந்து ஆராய்சியாளர்கள் கலந்து கொண்ட ஒரு மிகப்பெரிய மாநாட்டில் ILAYANGUDI Dr.ZAKIR HUSIAN COLLEGE என்று ஒலித்த தருனம் , தனக்கு மிகப்பெரிய பெருமிதத்தைத் தந்தது என்கிறார் டாக்டர் ஆபிதீன்.( அல்ஹம்துலில்லாஹ்....)
பேராசிரியர் ஆபிதீன் அவர்களின் “கரையான்களை அழிக்கும் கடல் தாவரங்கள்” என்ற ஆராய்ச்சி கட்டுரை மலேசிய நாட்டின் பல்கலைகழகத்தில் தேர்வு பெற்று 2006 ம் ஆண்டு மலேசிய நாட்டின் பல்கலைகழகத்தின் அழைப்பின் பேரில் மலேசியா சென்று வந்ததும் இந்த ஆராய்ச்சிக்காக பல்கலைகழக மானியக்குழு ரூபாய் ஓரு இலட்சம் நிதியுதவி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
















Sunday, July 18, 2010
இஸ்லாம் கூறும் எளிய தர்மம் - புன்னகை!
அபூ ஸாலிஹா
புன்னகையின் சிறப்பும் அதன் பயன்களும் அதனைக் குறித்தப் பல மேற்கத்திய அறிஞர்களின் கூற்றுகளும் சமீப காலங்களில் புன்னகைக் குறித்து வெளியாகி வரும் மருத்துவ அறிக்கைகளும் அனைத்துச் சமூகங்களிலும், குறிப்பாக முஸ்லிம்களிடையேயும் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமூகப் பிணைப்பை ஏற்படுத்தக் கூடிய ஓர் எளிய ஆனால் வசீகரமான உத்தியாக இப் புன்னகையைக் குறித்து இஸ்லாம் அழகிய முறையில் அறிவுறுத்திச் சென்றிருக்கிறது. இதைப் பிறர் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுள்ள முஸ்லிம்கள் அறிந்தோ அறியாமலோ அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது தான் வேதனையான உண்மை!
"உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும். நீ நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நல்லறமாகும். பாதை தவறிய மனிதருக்குப் பாதையைக் காட்டுவதும் உனக்கு நல்லறமாகும். பார்வையிழந்தவருக்குப் பார்வையாக நீ ஆவதும் உனக்கு நல்லறமாகும். பாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் உனக்கு நல்லறமாகும். உனது வாளியில் உள்ள தண்ணீரை உனது சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.'' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிப்பான்: திர்மிதீ)
வேறு எந்த ஒரு மதத்திலும் இல்லாத அளவிற்கு, அறிவுக்கு ஒவ்வும் சிறந்த பகுத்தறிவுச் சித்தாந்தத்தை இஸ்லாம் புகுத்தியுள்ளதை இதில் காண முடியும். ஒரு மனிதன் தனக்குச் செய்ய வேண்டிய வழிபாடுகளைப் பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் சொல்லும் «øÄ¡‹, அதே அளவில் பயனைப் பெற்றுத் தரும் இன்னொரு செயல் பற்றியும் கூறுகிறான். இறைவழிபாட்டின் மூலம், தான் வழங்கும் நன்மைகளைப் போன்றே ஒரு மனிதன் சக மனிதர்களுடன் அன்புடன் கலந்துறவாடுவதற்கும் கொட்டித் தருவதாக வாக்களிக்கிறான். சுருக்கமாகச் சொல்வது என்றால்இ சமூகத்தினுள் அழகானதொரு பிணைப்பை ஏற்படுத்தும் இறைவனின் தயாள குணத்தினை சிந்தனையாளர்கள் இதில் இருந்து அறிந்து கொள்ள இயலும்.
தர்மம் என்பதெல்லாம் ஏதோ பணவசதியும் பொருள் வசதியும் நிறைந்தவர்களுக்கு மட்டும்தான் என்கிற குறுகியக் கண்ணோட்டத்தை அடியோடு மாற்றியமைக்கிறது இஸ்லாம். ஏழை, எளியவர்களும் தம்மால் இயன்ற தர்மத்தைச் செய்து நன்மையைப் பெற முடியும் என்று இறைத்தூதர் முகம்மது முஸ்தபா ரசூலே கரீம் (ஸல்)அவர்கள் மிகவும ஊக்கப்படுத்தியுள்ளார்கள். எந்த அடிமட்ட நிலையில் இருக்கக் கூடிய வறியவர்களும் தர்மம் செய்து நன்மையை அடைந்து கொள்ளும் வழியினை அல்லாஹ் கூறுகிறான்:
"நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்."(அல்குர்ஆன் 3:92)
சமூகத்தில் ஏற்படும் குழப்பங்கள், பிரச்னைகள் மற்றும் கொலை, கொள்ளை போன்ற கொடிய பல செயல்கள் ஆகியவற்றின் மூல காரணமாக ஒருவரின் வறுமை சொல்லப்படுகிறது. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் வறுமையை ஒழிக்கும் ஒரே ஆயுதமாக "வளத்தை விநியோகித்தல்" எனும் அற்புதத் திட்டமான 'ஜகாத்'தை ஏற்படுத்திய இஸ்லாம், தமது இறைவிசுவாசத்தினைக் காட்ட ஒவ்வொரு முஸ்லிமும் தங்களால் இயன்ற அளவிற்குச் சமூகத்திற்கு, தான-தர்மங்கள் செய்வதை வலியுறுத்துகிறது. ஏழை, பணக்காரன் என்ற பெரும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதற்கான மூலக்காரணம் விநியோகத்தில்தான் உள்ளது என்பதை அறிந்து உருவாக்கப்பட்ட திட்டமே இது என்பதை சிந்திப்பவர்கள் உணர்ந்து கொள்ள இயலும்.
அதே போன்று ஒருவர் விரும்பிக்கொடுக்கும் தர்மமான சதகாவை இஸ்லாம் கொடுக்கச் சொல்லி மிகவும் வலியுறுத்துகிறது. ஸதகா (தர்மம் கொடுப்பது) எனும் வார்த்தை ஸதக்கா (உண்மையைச் சொல்வது, உண்மையாளராய் இருப்பது) எனும் அரபிப் பதத்திலிருந்து உருவானதாகும். மனமுவந்து கொடுக்கும் தர்மமான இதை ஒவ்வொருவரும் தனது தினசரி வாழ்க்கையில் ஓர் அங்கமாக ஆக்க வலியுறுத்தியுள்ளது இஸ்லாம்.
நபி (ஸல்) அவர்கள் ஒருவர் முகத்தில் காட்டும் மென்மையான புன்னகையும் அவர் பிறருக்குச் செய்யும் தர்மமே என்ற அளவிற்கு அதனை வலியுறுத்தியுள்ளார்கள். மக்கள் நடந்து செல்லும் பொதுவழிப் பாதைகளில் உள்ள கற்கள், முட்கள் ஆகிய தடைகளை அகற்றி வழிகளைச் சீரமைப்பது என்று கூறிய நபியவர்கள், புன்னகைப்பதும் அதற்கு ஈடான தர்மம் என்று கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
"உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும்! என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் கூறியுள்ளார்கள்" - அறிவிப்பாளர்கள்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு (திர்மிதி 2022, 2037)
இறைவனிடமிருந்து இவ்வளவு எளிதாக நன்மையைப் பெற்றுத்தரும் ஒரு வாழ்வியல் நெறி வேறெந்த சமுதாயத்திலும் சொல்லப்பட்டதில்லை என்பது தெளிவு.
அதே சமயம் ஒருவர் ஒரேயடியாகச் சிடுமூஞ்சியாகவும் இல்லாமல், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் புன்னகை மன்னனாகவும் இல்லாமல் அளவுடனும் கனிவுடனும் சிரிப்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. தவிர, தக்கக் காரணமின்றி எப்போதும் சிரிப்பவர் எதிரில் உள்ளவரைப் பரிகாசம் செய்வதாகவும், மறைகழன்றவர் என்று பிறர் எண்ணவும் வாய்ப்புண்டு என்பதைக் கவனிக்கவேண்டும். எனவே புன்னகைக்கான அளவுகோலையும் அறிந்திடல் அவசியமாகிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் ஒரேயடியாக தமது உள்நாக்குத் தெரியும் அளவுக்குச் சிரிக்க நான் இதுவரை கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகை புரிபவர்களாகவே இருந்தார்கள்" - (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், நூல்: புகாரி)
புன்னகை பூக்கும் இன்முகத்துடன் ஒருவர் ஒரு செய்தியைச் சொல்லும்போது அது கேட்பவருக்கு மனதில் பதியவும் சொல்வதைக் கூர்ந்து கேட்கும் ஆர்வத்தையும் அதிகரிக்கும் என உளவியல் ஆய்வு ஒன்று நிரூபிக்கிறது. சந்திப்புகளில் உள்ள இறுக்கத்தை ஓர் எளிய புன்னகை தளர்த்துவதோடு மட்டுமின்றி, எந்த ஒரு சிரமமான விஷயத்தையும் எளிதில் சாதிக்க வைக்கும் ஆற்றல் உள்ளதாகவும் விளங்குகிறது.
இஸ்லாத்தினைப் போன்று உறுதியான சமூகப் பிணைப்பை வாழ்வில் நடைமுறையில் செயல்படுத்தத் தூண்டும் மார்க்கம் வேறு ஏதுமில்லை. அன்பும் பாசமும் தான் ஒரு சமூகத்தை இணைக்கும் வலுவான சக்தியாக இருக்கும் என்பதை மிகவும் வலியுறுத்தக்கூடியது இஸ்லாம். இறைவன் தன் திருமறையில் கூறுவதைப் போன்று இந்தப்புன்னகை உள்ளங்களுக்கு இடையே பிணைப்பை ஏற்படுத்தவல்லது என்பதை அதைக் கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் உள்ளப்பூர்வமாக கடைபிடிக்கையில் உணரலாம்.
"மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை (அல்லாஹ்) உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்." (அல்குர்ஆன் 8:63)
சொல்வது வேறு - செய்வது வேறு என்ற நேரெதிராய் செயல்படும் இன்றைய காலகட்டத் தலைவர்கள் போன்று அல்லாமல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் மிகச்சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்துக் காண்பித்துள்ளார்கள். "ஒரே சமயத்தில் மனித மனங்களையும் சிந்தனைகளையும் தம் பக்கம் வென்றெடுத்த ரகசியம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்களின் அமைதி தவழும் புன்னகை பூத்த முகம்தான்!" என்பதைப் பல்வேறு நபித்தோழர்களின் அறிவிப்பில் இருந்து காண முடிகிறது.
¿À¢¸û ¿¡Â¸õ …øÄøÄ¡†¤ «¨Ä†¢ Å…øÄõ அவர்களின் பேரனான ஹுஸைன் ÃÇ¢ÂøÄ¡†¤ «ý†¤ தம் தாத்தாவான நபிகளாரின் குணங்களைப் பற்றி, தம் தந்தையான அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருமுறை கேள்வி எழுப்பினார்கள். அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ¿À¢¸û ¿¡Â¸õ …øÄøÄ¡†¤ «¨Ä†¢ Å…øÄõ அவர்கள் பற்றிக் கூறுகையில் "இன்முகமும், பெருந்தன்மையும் கூடிய கனிவு அவர்களிடத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கும். கடுமையாகவோ, முரட்டுத்தனமாகவோ ¿À¢¸û ¿¡Â¸õ …øÄøÄ¡†¤ «¨Ä†¢ Å…øÄõ அவர்கள் நடந்து கொண்டதேயில்லை. பிறர் குறைகளை ஆராயும் மனப்பான்மை உள்ளவராகவோ அல்லது அது போன்ற அற்பமான செய்கைகளிலோ அவர்கள் ஈடுபடாமல் விலகியிருப்பார்கள்" என்று பதிலளித்தார்கள். (தப்ரானி)
நபித்தோழர்கள் பலரின் அறிவிப்பிலிருந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் புன்னகை பூக்கும் முகமாகவும், நகைச்சுவையை ரசித்து சிரித்த சம்பங்கள் பலவும் அறிய முடிகிறது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்களின் பிரத்யேகமான புன்னகையைக் கண்ட ஒவ்வொரு நபித்தோழரும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்களுக்கு மிகவும் விருப்பமானவர் தாம்தான் என்ற எண்ணம் மிகைக்கும் அளவிற்கு அவர்களின் புன்னகையில் வசீகரம் இருந்தது.
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்: "நான் இஸ்லாத்தை ஏற்ற கணத்திலிருந்து புன்னகை பூக்கும் முகம் தவிர வேறெதையும் நான் நபியவர்களிடம் கண்டதில்லை. அவர்கள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் மெல்லிய புன்னகை பூப்பதைக் கண்டுள்ளேன். (புகாரி)
சக சகோதரர் ஒருவரைக் கண்டு புன்னகைப்பது ஒருவர் செய்யும் தர்மம் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
"என் வாழ்நாளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் அளவிற்குப் புன்னகை பூத்த இன்னொருவரை நான் கண்டதேயில்லை" என்று அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு ஹாரித் (திர்மிதி)
இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றி வருவதாகவும் தாம் ஒரு நல்ல முஸ்லிமுக்கு முன்னுதாரணம் என்றும் எண்ணிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களில் சிலர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் காட்டித்தந்த இந்த எளிய முறையை ஏனோ பின்பற்றுவதில்லை. இறைவனுக்குச் செய்யும் கடமைகளான தொழுவதும் நோன்பு நோற்பதும் மட்டுமே அவர்களை நேர்வழியில் பால் கொண்டு சேர்த்துவிடும் என்பதில் நம்பிக்கைக் கொண்டு உள்ளனர். ஆனால் உண்மை அவ்வாறன்று: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் இஸ்லாமிய சமூக உறவுகளைப் பேணுவதிலும் சகோதரர்களிடையே பரஸ்பர அன்பை வளர்த்துக் கொள்வதிலும் மிகவும் ஆர்வமூட்டி உள்ளார்கள் என்பதை நாம் கவனித்துத் திருத்திக்கொள்ள வேண்டும். சிரித்து மனம் மகிழ்வதை விரும்பாத மனிதரை உலகில் காண முடியாது.
அதிகம் சிரிக்காத சிடுமூஞ்சியாய் இருப்பவரும் யதார்த்தத்தில் சிரிப்பதை விரும்பக்கூடியவரே! நீங்கள் விரும்பிய ஒன்றை உங்கள் சகோதரருக்காக விரும்பாத வரையில் ஒருவர் உண்மையாளராக மாட்டார் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் கூறியுள்ளார்கள் (புகாரி, முஸ்லிம்)
எனவே, இதுவரை நம் முகத்தில் அணிந்து வந்த கடுமை எனும் முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டு இந்த நிமிடம் முதல் ஒரு புத்துணர்வுடன் நமது வாழ்க்கையைத் துவக்குவோம். நம் குடும்பத்திலிருந்துத் துவங்கி, சகோதரர்களுடன், நண்பர்களுடன், அண்டை வீட்டார், உற்றார் உறவினர் ஆகிய அனைவருடனும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் காட்டித்தந்து ஊக்கப்படுத்திய கனிவுடன் கூடி புன்னகையை முகத்தில் தவழ விடுவோம். அதன் மூலம் பிறரின் இறுக மூடப்பட்ட மனங்களையும் புன்னகை என்ற கனிவான நம் திறவுகோல் கொண்டு திறப்போம். இம்மையில் சமூகத்தில் சகோதரப் பிணைப்பை உறுதி செய்து கொள்வதுடன் மறுமையில் இஸ்லாம் வலியுறுத்திச் சொல்லியிருக்கும் புன்னகை எனும் நபிவழியைப் பின்பற்றியதன் மூலம் நிறைய தர்மங்கள் செய்த நன்மையையும்
Wednesday, July 14, 2010
கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
- நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.
- இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்!
- பின்னர் அலக் என்பதை ஒரு தசைப் பிண்ட மாக்கினோம்!
- பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்!
- பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
- பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்!
ஆண் விந்துத் துளி பற்றிய அறிய தகவல்கள்


- ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது
- கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன.
- கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது

- கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன
- கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது
- கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.
- கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன
- கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது

- கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது
- கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது
- கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!
- கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.
- கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.
- கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.
- கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது!
- கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.

- கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன
- கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.
- கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.
- கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.