அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, June 6, 2014

வேண்டியது விவேகமே! வேகம் அல்ல!




அஸ்ஸலாமு அலைக்கும் 
புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே 

சமீப காலமாக நமது சகோதரர்கள் இந்த முக நூல் பக்கங்களில்  தெரிந்தும் தெரியாமலும் பாசிச எதிர்ப்பு என்கின்ற பெயரில் தமது கருத்துக்களை மிகவும் காட்டமாக அல்லது மிகவும் வன்முறையை வாசகங்களில் பயன் படுத்துவதும், வழக்கமாக உள்ளது இது என்ன பலனை தரும் என்பதை நீங்கள் அறிய வில்லையா..

இதற்கு மிகபெரிய எடுத்துகாட்டாக லக்னோவில் நடைபெற்ற சம்பவம் மிக சிறந்த எட்த்துக்காட்டு ஒரு தனி மனிதர் ஒருசமூகத்தின்  தலைவராக உள்ள ஒருவரை தவறுதலாக சித்தரித்தார் என்பதற்காக, அவர் பாதிக்கப் பட்டது மட்டுமல்லாது அவர் சார்ந்து இருக்கும் சமூகமும் பாதிக்க பட்டது 

6:108   وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ ۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَىٰ رَبِّهِم مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ
6:108அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.

இது திருமறை வசனம் 

எந்த விசயத்திற்கும் அதற்கு நிகரான எதிர்விசை கண்டிப்பாக இருக்கும்.என்பதையே மேலே உள்ள திரு குரான் வசனம் கூறுகின்றது,

 எனவே நமது சகோதரர்கள் ஆத்திரம் கொண்டு வார்த்தைகளை  அள்ளி கொட்டுவதும், அவசரம் காட்டவும் வேண்டாம்.நாம் ஆத்திரப்பட்டு நாம் செய்யும் செயல்களால் சமூகத்திற்கு ஏற்படும் இழப்பை நம்மால் சரி செய்ய முடியுமா யோசித்து பாருங்கள்,

நாம் வெளிபடுத்தும் கருத்துக்கள் சமூக அமைதியை, விழிப்புணர்வை ஏற்படுத்த கூடியதாக இருக்க வேண்டுமே தவிர சமூக அமைதிக்கு பங்கம் விலை விப்பதாக இருக்க கூடாது 

பாசிச சக்திகள் நமக்கு எதிராக போர் தொடுக்கின்றார்கள் என்றால் அதற்கு நாம் காரணமாக இருகின்றோமா என்பதை சிந்தித்து பாருங்கள், பாசிச சக்திகள் செய்யும் செயலை ஆதரிப்பதாக நினைக்கவேண்டாம், கண்டிப்பாக பாசிச சக்திகள் அவர்கள் செய்யும் அடாவடி தனம் கண்டிக்க கூடியதே. ஒரு தனி மனிதர் தவறு செய்தால் அவரை மட்டும் தானே தண்டிக்க வேண்டும் அதற்காக அவர் சார்ந்து இருக்கும் சமூகம் என்ன பிழை செய்தது, இது வன்மையாக கண்டிக்க பட வேண்டியது இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை,

அதே நேரத்தில் நமது பிரச்சாரம் இஸ்லாம் வலியுறுத்தும் அமைதியும் அன்பும் கொண்ட சத்திய பாதையாக இருக்க வேண்டும்,

நமது செயல்பாட்டின் மூலம் மக்கள் சக்தியை வென்று எடுக்க வேண்டும்,

முதலில் நமக்குள் இருக்கும் சகோதர சண்டைகளை நிறுத்தி கொள்ளவேண்டும் பிறகு பிறகு இந்த சகோதர ததுவத்தின் வட்டத்தை மற்ற சமூகத்தின் மீதும் படரவிடவேண்டும் 


எந்த செயல் நடந்தாலும் அதை அறிவு பூர்வமாக எதிர்கொள்வது அவசியம்,
பாசிச சக்திகள் தவறு இளைக்கும் போது மக்கள் சக்திகளை ஒன்று திரட்டி சட்ட பூர்வமாக அதை எதிர்கொள்வதே நிரந்தர தீர்வமாக இருக்கும்..
a

Tuesday, April 1, 2014

ஏன் வேண்டும் இந்த மாற்றம்? பாகம் 2

அஸ்ஸலாமு அலைக்கும் புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கே 


ஏன் வேண்டும் இந்த மாற்றம் என்ற தலைப்பில் கடந்த கட்டூரையில் நடைமுறையில் பிள்ளைகளுக்கு மதரசாக்களில் கற்று கொடுக்கப்படும் அடிப்படை கல்வி எத்தகையதாக உள்ளது என்பதையும் அது ஏன் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதையும் பார்த்தோம் 

இனி இந்த சமூகத்தில் இஸ்லாமிய குழந்தைகளின் கல்வியால் மிகப்பெரிய பாராட்டத்தக்க மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்றால் நமது கல்வி முறையில் எந்த மாதிரியான மாற்றங்கள் கொண்ட்டுவந்தால் அது சிறப்பாக இருக்கும் என்று என் சிந்தனையில் உள்ள சில விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் இதில் தவறுகள் இறந்தால் அதை சுட்டி காட்டவும் இன்ஷா அல்லாஹ் நான் அதை திருத்திகொல்கின்றேன் 

நமது மதரசாக்களில் திருமறை குர் ஆனை  ஓதுவதற்கு கற்றுகொடுத்தப் பிறகு அதன் விளக்கத்தை அவரவர் தாய் மொழியில் முழுமையாக கற்றுத் தரவேண்டும் எப்படி பள்ளிகூடங்களில் பாட புஸ்தகங்களை வருடம் முழுவதும் பிரித்து கால் ஆண்டு அரை ஆண்டு முழு ஆண்டு என்று பிரித்து  சொல்லிக் கொடுத்து அதற்கு தேர்வு வைத்து மதிப்பெண்கள் வைகின்றனரோ அதேபோல். இந்த திருமறை குரானையும் மூன்று பாகங்களாக மூன்று வருடத்திற்கு சொல்லி கொடுத்து, ஒரு ஆண்டுக்கு பத்து ஜூசு வீதம் மூன்று ஆண்டுகளுக்கு முப்பது ஜூசு சொல்லிகொடுக்கப்பட வேண்டும். 

ஒவ்வொரு பத்து ஜூசுவுக்கும் முறையே கால் ஆண்டு அரை ஆண்டு முழு ஆண்டு தேர்வு என்று வைத்து மூன்று வருடத்திற்கு இந்த குர் ஆனை முழுமையாக கற்றுகொடுத்து இதில் சிறப்பாக தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ஜமாத்தார்கள் அனைவரையும் கூட்டி பட்டயங்கள் நற்சான்றிதல்கள் வழங்க வேண்டும் 

திருமறை குரானை நன்கு தேர்ச்சி பெற்ற பிறகு இதன் தப்சீர் விரிவுரையை இதே போல் கற்று தரவேண்டும் 

இதே போல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறை முழுமையாக பாடதிட்டமாக்கி இதையும் இந்த மூன்றாண்டு குரான் வகுப்போடு சேர்ந்து சொல்லி கொடுக்கப் பட வேண்டும்  

இவ்வாறு சொல்லி கொடுக்கப்படும் இந்த விரிவான இஸ்லாமிய கல்வியால் முழுமையான இஸ்லாமிய கல்வியும் நமது குழந்தைகளுக்கு போய் சேரும் இதனால் நல்லொழுக்க மிக்க ஒழுக்க சீலர்களாகவும், மனிதநேயமிக்க மனிதர்களாகவும் சமூகத்தில் நிலவும் அவலங்களுக்கு தீர்வு சொல்லக்  கூடிவர்கலாகவும், சுற்றி இருக்கும் நமது சகோதர சமூகத்திருக்கு தலை சிறந்த முன் மாதிரியாகவும், நமது குழந்தைகள் இன்ஷா அல்லாஹ் திகழ்வார்கள் 


இப்படி இந்த இஸ்லாமிய கல்வியை விரிவான முறையில் நமது பிள்ளைகளுக்கு கற்று தருவது மட்டுமே உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நன்கொடையாக அருளபெற்ற இந்த திருமறையும், உலக மக்கள் அனைவருக்கும் தலைசிறந்த வழிகாட்டியாக அனுப்பட்ட முகம்மது நபி (ஸல்) அலைஹி வசல்லம் அவர்களின் போதனையும் இந்த மனித சமூகத்திற்கு முழுமையாக போய் சேரவேண்டுமானால், நமது குழந்தைகளின் சிந்தனையில் இஸ்லாமிய கல்வியை மேலே குறுப்பிட்ட முறையில் செலுத்தி அதற்கு நமது பிள்ளைகளின் வாயிலாக செயல் வடிவம் கொடுத்தால் மட்டுமே சாத்தியப்படும் 

இல்லையேல் இது வெறும் ஏட்டு கல்வியாக மட்டுமே இருக்கும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது 

எனவே எனதருமை இஸ்லாமிய சொந்தங்களே இந்த உன்னதமான இஸ்லாமிய கல்வியை நமது குழந்தைகளின் வாயிலாக அவர்களின் செயல் பாடுகள் மூலமாக இந்த உலககிற்கு அறிமுகம் செய்வோம் அமைதியும் மனிதநேயமும் நல்லொழுக்க மிக்க சமூகத்தை உருவாக்குவோம்   

Friday, September 20, 2013

ஏன் வேண்டும் இந்த மாற்றம்?


அஸ்ஸலாமு அலைக்கும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே!

இப்போதைய நமது தலைமுறையில் பெரும்பாலானவர்கள்  இந்த மார்கத்தை விட்டு பாராமுகமாக இருப்பதும் பெயருக்கு முஸ்லீம்களாக வாழ்வதும் மார்க்க கல்வியை விட உலகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், இஸ்லாமிய வாழ்வியலுக்கு நேர் விரோதமாக இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறை இருப்பதும் எனக்கு நெருடலை ஏற்படுத்தியது இதற்கு என்னக் காரணம் என்று ஆராயும் பொழுது, இஸ்லாத்தின் ஆணிவேரான, இம்மை மறுமை என்று ஈருலகத்திற்கும் தேவையான எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை தன்னுள்ளே வைத்துள்ள திரு மறை குர் ஆனை ஒரு மந்திரமாக கற்று கொண்டதோடு நம்மில் பெரும்பான்மையினர் நிறுத்திக் கொண்டோம்,

அதற்கு காரணம் நாம் இந்த அற்புத வேதத்தை கற்றுக் கொடுக்கும் முறை! அதை கற்று கொள்ளும் முறை என்று இரண்டுமே பெரும்பாலும் ஒரு சம்பிரதாயதிர்காகவே நடைப் பெருவதால்தான் என்பதாக உணருகின்றேன்,

எனவே என் மனதில் தோன்றிய சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசை படுகின்றேன் இதில் தவறு இருந்தால் மன்னிக்கவும், இந்த கட்டுரையில் நீங்கள் எதை தவறாக உணருகின்றீர்களோ அதை தெரிய படுத்துங்கள் இன்ஷா அல்லாஹ் தவறாக இருக்கும் பட்சத்தில் திருத்திக் கொள்கின்றேன்  

மேன்மை மிகு கண்ணியமிக்க  முஸ்லிம்களே நான் இங்கே குறிப்பிட விரும்புவது ஈருலக வெற்றியின் இரகசியங்களை தன்னுள்ளே வைத்துள்ள அற்புத சத்திய வேதமான அருள்மறை திருக்குர் ஆணை நாம் கையாளும் விதம் குறித்து,

நமது மதரசா கல்வி முறை எப்படி உள்ளது! அது எப்படி மாற வேண்டும் 
 ஏன்  மாற வேண்டும் என்பது போன்ற விசயங்களை நாம் இங்கே படிக்க இருக்கின்றோம் 

அல்லாஹ் திருமறை குர் ஆனிலே கூறுகின்றான் 


2:53   وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
2:53இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).
மேலே உள்ள திருக்குர் ஆன் வசனத்தை புரிந்து நன்மை தீமைகளை பிரிந்து அறிந்து அதன் அடிப்படையில் தீமைகளை விட்டு விலகி நன்மையின் பக்கம் நமது பயணம் இருக்கின்றதா? 
அப்படி இருந்து இருக்குமேயானால் இந்த சமூகம் நன்மைகளின் பூங்காவாக,ஒழுக்க மாண்புகளின் கோட்டையாக இருந்து இருக்கும், இறை அச்சம் நிறைந்த மனித அரண்களின் கூடாரமாக இருந்து இருக்கும்!
இப்படி தான் இருந்தது நபி முகம்மது (ஸல்) அவர்கள் கட்டமைத்த சகாபாக்கள் வாழ்ந்த சமூகம்,  திருக்குர் ஆனுக்கும் தங்களது வாழ்க்கை முறைக்கும் எந்த வித்யாசமும் இருந்தது இல்லை, திருக்குர்  ஆனாகவே வாழ்ந்து காட்டினார்கள், உலக மக்களுக்கு ஒரு முன்மாதிரி சமூகமாக வாழ்ந்து காட்டினார்கள்,
இந்த அற்புதமான வாழ்க்கை முறை நம்மிடையே இருக்கின்றதா ?  இல்லை என்றால் அது இல்லாமல் போனதற்கு காரணம் என்ன?
இந்த அற்புத திருமறையின் ஆழமான அர்த்தங்களை நாம் விளங்காமல் இருப்பதே! இதை நம் அனைவரும் தெரிந்து கொள்வதற்கு நாம் எடுத்த நடவடிக்கைதான் என்ன?
நாம் இந்த மார்க்க கல்வியை கற்று தருவதில் நாம் என்ன நடவடிக்கை எடுத்து இருக்கின்றோம் என்பதை பாப்போம்,
 தினமும் இந்த மார்க்க கல்வியை நமது வீட்டு பிள்ளைகளுக்கு கற்று கொடுப்பதற்கு மதரசாவிற்கு அனுப்பி வைக்கின்றோம் அங்கே அந்த குழந்தைகள் கற்று கொள்ளும் முறையை பற்றிதான் இப்போது அலச போகின்றோம், இந்த கல்வி முறை எந்த மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும், ஏன் இந்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதை என்பதை பற்றி இப்பொது விரிவாக பாப்போம்  
தினமும் நமது மதரசாக்களில் குழந்தைகளுக்கு முதலில் அலீப் ஜூசு அதாவது அரபு எழுத்துக்களை படிக்க கற்று கொடுப்பார்கள் பிறகு அல்ஹம்து ஜூசு இதில் திருக்குர் ஆணின் சிறிய சூராக்களின் தொகுப்பு பிறகு திருக்குர் ஆன் பிறகு சுன்னத் சுபியான் இவை இத்தனையும் அரபு மூலத்தில் வாசிப்பதற்கு இந்த மதரசாக்களில் கற்று தரப்படும் இதோடு சேர்த்து இஸ்லாத்தில் கடமைகள் எத்தனை உளுவின் பர்ளுகள் எத்தனை போன்ற சில அடிப்படை விஷயங்கள் கற்று தரப்படும் இவைதான் அன்றாடம் ஒவ்வொரு ஊரிலும் காலை நேர மதரசாக்களில் கற்றுத்தரப்படும் மார்க்க கல்வி ஆகும்.
இதை கற்று கொடுப்பதும், கற்றுக் கொள்வதும் வெறும் சம்ப்ரதாயதிற்குதான் நடை பெறுகின்றது எனபதை படிக்கும் பொது மனதுக்கு வருத்தம் ஏற்படுத்தினாலும் அதுதான் நிதர்சனம் 
சரி இதை குறை கூறுவது நமது நோக்கம் இல்லை, ஆனால் இந்த கல்வி முறையால் என்ன மாற்றத்தை தாக்கத்தை இந்த சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை பற்றிதான்
திருக்குர் ஆனை அரபு மூலத்தில் வாசிக்க கற்றுகொள்வது நல்ல விஷயம் தான் ஆனால் அது மட்டும் போதுமா, இந்த அற்புத மறையின் அர்த்தங்களை விரிவாக தெரிந்து  கொள்ளாத வரை, அதை நமது உள்ளத்தில் சரியாக பதிந்து வைத்து கொள்ளாத வரையில், அதை நமது வாழ்கையில் முழுமையாக கொண்டு வராத வரையில், இந்த சமூகத்தில் எந்த அற்புத மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது,
அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான் 
3:110   كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَّهُم ۚ مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ
3:110மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; என்று இறைவன் கூறுகின்றான், திருமறையின் அர்த்தத்தை விளங்கி கொள்ளாமல் நம்மால் எப்படி சிறந்த சமூகமாக மாற முடியும் எனவே இந்த அற்புத மறையின் விரிவான அர்த்தங்களை நமது வீட்டு குழந்தைகளின் உள்ளத்தில் எப்படி போய் சேர்ப்பது,  இந்த கல்வி முறை எப்படி மாற வேண்டும் என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்தக் காட்டுரையில் பாப்போம் 

Friday, September 13, 2013

ரியாளுஸ்ஸாலிஹீன் ஆடியோ (mp3)


எழுதியவர்/பதிந்தவர்/உரை 
riyadussaliheen image2
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு,
ஸாஜிதா பதிப்பகத்தார் வெளியிட்ட “ரியாளுஸ்ஸாலிஹீன்” புத்தகம், வாசகர்கள் எளிமையாகக் கேட்டு பயன் பெறும் வண்ணம் MP3 ஆடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்ய கீழுள்ளவைகளை அழுத்தவும்.
நபிகளாரின் பொன்மொழிகளை ஒலி வடிவில் கேட்பதற்க்கு முனையும் தங்களுக்கு இதனை முழுவதுமாக கேட்டு, நினைவில் நிறுத்தி வாழ்வில் கடைபிடிக்கவும், தம்மோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஊரிலுள்ளவர்களுக்கும், இன்னும் உலகெங்கும் வாழும் தமிழ் கூறும்மக்களுக்கும் இதனை CD க்கள் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், இன்னும் பல வழிகளிலும் இதனை கிடைக்கச் செய்து சதக்கதுல் ஜாரிய்யாவை பெற்றுக்கொள்ளவும், இறுதியில், மறுமை வாழ்க்கையில் வெற்றி பெறவும், எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் உதவட்டுமாக.
புத்தகங்களை படிக்க, நேரமின்மையையும், சலிப்பையும் காரணம் காட்டி நபிகளாரின் பொன்னான மொழிகள் நம் உள்ளத்தை அடையாமல் இருப்பதை தவிர்க்க இவ்வகை ஒலி வடிவங்கள் உதவக்கூடும். இதனை வாகனங்களில் பயணிக்கும்போதும், கடைகளில் வேலைப்பார்க்கும்போதும், பெண்கள் வீட்டு வேலைகளைப் பார்க்கும்போதும், சமையலறையில் இருக்கும்போதுமாக, இப்படி பல நேரங்களிலும், வகைகளிலும் கேட்கலாம். மேலும் தங்கள் அலைபேசியில் சேமித்து வைத்து நண்பர்களுக்கு ப்ளூடூத் (Bluetooth) மூலமும் அனுப்பலாம்.
ரியாளுஸ்ஸாலிஹீன்” என்ற இந்த புத்தகம், அபூ ஸக்கரியா யஹ்யா பின் ஷரஃப் அன் நவவி (ரஹ்) அவர்களின் தொகுப்பு. மிக பிரபலமான-அதாரப்பூர்வ ஹதீஸ் தொகுப்புகளாகக் கருதப்படும், புகாரி, முஸ்லிம், திர்மிதி.. போன்ற கிரந்தங்களிலிருந்து மக்களுக்கு மிகவும் பயன்படும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டவையே இப்புத்தகம்.

Source: tamilaudioislam.com
Image courtesy: satyamargam.com
நன்றி:iislamkalvi.com

Friday, August 30, 2013

ஜும்ஆத் தொழுகை (ஸஹீஹ் புகாரி ஹதீஸ்)

877. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்"
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :11
878. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஆரம்ப காலத்திலேயே ஹிஜ்ரத் செய்த நபித்தோழர் ஒருவர் வந்தார். அவரை உமர்(ரலி) அழைத்து 'ஏனிந்தத் தாமதம்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'நான் அலுவலில் ஈடுபட்டு விட்டேன். பாங்கு சப்தத்தைக் கேட்டு(க் குளிக்காமல்) உளூ மட்டும் செய்துவிட்டு வேகமாக வருகிறேன்' என்று கூறினார். அதற்கு உமர்(ரலி) 'உளூ மட்டும்தான் செய்தீரா? நபி(ஸல்) அவர்கள் குளிக்குமாறு கட்டளையிட்டுள்ளனர் என்பது உமக்குத் தெரியுமே!" என்று கேட்டார்கள்.
Volume :1 Book :11
879. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்."
என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :11
880. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
"ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ ஸயீத்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அம்ர் இப்னு ஸுலைம் 'குளிப்பது அவசியம்' என்பதை நான் உறுதியாக அறிவேன். ஆனால் பல் குலக்குவதும் நறுமணம் பூசுவதும் கடமையா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஹதீஸில் அப்படித்தான் உள்ளது' என்று குறிப்பிட்டார்கள்.
Volume :1 Book :11
881. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :11
882. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்தும்போது ஒருவர் வந்தார். தொழுகைக்கு ஏன் தாமதமாக வருகிறீர்?' என்று உமர்(ரலி) கேட்டார்கள். அதற்கு அவர் 'நான் பாங்கைக் கேட்டதும் உளூச் செய்வதற்குத் தவிர (குளிப்பதற்கு) நேரமில்லை' என்றார். அதற்கு, 'உங்களில் ஒருவர்ஜும்ஆவுக்குச் செல்வதாயிருந்தால் குளித்துக் கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீர் கேள்விப் படவில்லையா?' என்று உமர்(ரலி) கேட்டார்கள்.
Volume :1 Book :11

Friday, July 19, 2013

நோன்பும் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் (தொடர்-1) (தொடர்-2) எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி மன்சூர் மதனீ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பிற்கினிய இஸ்லாம் கல்வி இணையதள வாசகர்களுக்கு,
புனித ரமழான் மாதத்தில் நோன்பு சம்மந்தமான மக்களுக்கு ஏற்பட கூடிய நவீன பிரச்சனைகள் நோன்போடு சம்மந்தப்பட்ட சந்தேகங்களுக்கான விளக்கத்தினை எமது இணையதளத்திறக்காக சிறப்பு நிகழ்சியாக பதிவு செய்து வெளியிடப்படுகின்றது.
சவூதி அரேபியாவின் கிழக்குமாகாணத்தின் தம்மாம் நகரத்தில் உள்ள இஸ்லாமிய கலச்சார நிலையத்தின் அழைப்பாளர் மரியாதைகுரிய மவ்லவி ஹாபிழ். முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.
இந்த முதல் தொடரில் நோன்பாளி நோன்புடன்
  1. பற்பசையை பயன்படுத்தி பல்துலக்கலாமா?
  2. ஊசி மற்றும் குளுக்கோஸ் போடலாமா?
  3. பற்சிதைவு மற்றும் உதடு வெடிப்பின் காரணமாக இரத்தம் வெளியேறினால் நோன்பு பாதிக்குமா?
  4. இரத்த காயம் அல்லது உடல் வலிக்காக வாசனையுடன் கூடிய கீரிம் உபயோகிக்கலாமா?
  5. வாசனை திரவியங்கள் பயன் படுத்தலாமா?
  6. கண், மூக்கு மற்றும் காது-க்கு சொட்டு மருந்து பயன்படுத்தலாமா?
மேற்கண்ட கேள்விகளுக்கு குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் அதிகமான விளக்கங்களை தருகின்றார் ஆசிரியர் ஹாபிழ். முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள்.
இதன் தொடர்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை வெளியிடப்படும் …
ஓளிப்பதிவு: Islamkalvi Media Unit
படத்தொகுப்பு: தென்காசி S. A. ஸித்திக்
இந்த இரண்டாவது தொடரில் நோன்பாளி நோன்புடன் …
  1. மூக்கின் வழியாக சொட்டு மருந்து கொடுப்பது சம்மந்தமாக அறிஞர்களிடம் உள்ள கருத்துக்களும் அதற்கான விளக்கமும்.
  2. சுவாச கோளறு உள்ளவர்கள் நோன்பின் போது Inhalar பயன்படுத்தலாமா?
  3. வாய்யை சுத்தம் செய்வதற்க்கு Mouthwash பயன்படுத்தலாமா?
  4. பல்லை அகற்றுவது அல்லது பல்லின் தூவரத்தினை அடைப்பது கூடுமா?
  5. மருத்துவ பரிசோதனைக்காக (blood test) இரத்தம் எடுப்பது பற்றி விளக்கம்…
  6. குடல் மற்றும் வயிறு பிரச்சனை உள்ளவர்கள் Endoscopy என்ற மருத்துவ பரிசோதனையை செய்யலாமா?
  7. விமான பயணத்தின் போது நோன்பை திறப்பது மற்றும் வைப்பது எப்படி?
போன்ற சந்தேகங்களுக்கு மிக தெளிவான ஒரு விளக்கத்தை குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் தருகின்றார்கள். ஒரு முறை பார்க்கலாமே!
இத்துடன் இத்தொடர் நிறைவு பெறுகின்றது இன்ஷா நாளை முதல் நபிகளால் வாழ்வினிலே என்ற சிறப்பு தொடர் வெளியிடப்படும். காண தவறாதீர்கள்
ஓளிப்பதிவு: Islamkalvi Media Unit
படத்தொகுப்பு: தென்காசி S. A. ஸித்திக்

நன்றி:Islamkalvi.com

Thursday, July 18, 2013

நோன்பு

ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பில் இருந்து 
 
பாடம் : 1 ரமளான் மாதத்தின் சிறப்பு
1956. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 13
1957. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ரமளான் மாதம் நுழைந்துவிட்டால்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
பாடம் : 2 (முதல்)பிறையைப் பார்த்து ரமளான் நோன்பு நோற்பதும் (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுவதும் கடமையாகும். மாதத்தின் ஆரம்பத்திலோ அல்லது இறுதியிலோ (வானில்) மேகமூட்டம் தென்பட்டால் அம்மாதத்தின் எண்ணிக்கை முப்பது நாட்களாக முழுமையாக்கப்படும்.
1958. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறுகையில், "ரமளான் பிறையைக் காணாதவரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணாதவரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
1959 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறுகையில் தம்மிரு கைகளையும் (மூன்று தடவை) அடித்தவாறு, "மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறினார்கள். (மூன்றாவது தடவையில் தமது பெருவிரலை மடக்கிக் கொண்டார்கள்.) மேலும் "பிறை பார்த்து நோன்பு நோறுங்கள்; பிறை பார்த்தே நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை முப்பது (நாட்கள்) ஆகக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
Book : 13
1960. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், முப்பதாக (அந்த மாதத்தின் நாட்களை)க் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதம் குறித்துக் கூறுகையில், "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும்; மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறி (மூன்றாவது தடவையில் பெருவிரலை மடக்கி)னார்கள். மேலும், அதில், "(மேகமூட்டம் தென்பட்டால்,) அந்த மாதத்தைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்" என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது. "முப்பதாக" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
Book : 13
1961. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும். எனவே, பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1962. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும். எனவே, நீங்கள் பிறை பார்த்ததும் நோன்பு நோறுங்கள்; பிறை பார்த்ததும் நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1963. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிறை பார்த்ததும் நோன்பு நோறுங்கள். (மறு)பிறை பார்த்ததும் நோன்பை விடுங்கள். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1964. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளா(கவும் இருக்)கும். எனவே, பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டால் தவிர. அவ்வாறு உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
Book : 13
1965. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ரமளான் பற்றிக் கூறுகையில்) "மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறினார்கள். மூன்றாவது தடவையில் தமது பெருவிரலை மடக்கிக்கொண்டார்கள்.
Book : 13
1966. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1967. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ரமளான் பற்றிக் கூறுகையில்) "மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறி, பத்து + பத்து + ஒன்பது (=இருபத்தொன்பது) என்று (கைகளால் சைகை செய்து) கூறினார்கள்.
Book : 13
1968. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரு கைவிரல்களையும் இருமுறை அடித்து (கைதட்டி), மூன்றாவது முறை வலக் கை,அல்லது இடக் கையின் பெருவிரலை மடக்கியவாறு "மாதம் என்பது இவ்வளவு இவ்வளவு இவ்வளவு தான்" என்று சொன்னார்கள்.
Book : 13
1969. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் இதைக் கூறுகையில், இரு கைகைளையும் முன்று முறை கோத்துக் காட்டி, முன்றாவது தடவையில் பெருவிரலை மடித்துக்கொண்டார்கள்.
அறிவிப்பாளர் உக்பா பின் ஹுரைஸ் (ரஹ்) அவர்கள், "ஒரு மாதம் என்பது முப்பது நாட்களாகும் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறி, தம்மிரு கைகளையும் மூன்று முறை கோத்துக் காட்டியதாகவே நான் கருதுகிறேன்" என்று கூறினார்கள்.
Book : 13
1970. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "நாம் எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயம் (உம்மத்துன் உம்மிய்யா) ஆவோம்; எழுதுவதை நாம் அறியமாட்டோம்; (நட்சத்திரக்) கணிதத்தையும் நாம் அறியமாட்டோம். மாதம் என்பது (சில வேளைகளில்) இப்படியும் இப்படியும் இப்படியும் (இருபத்தொன்பது நாட்களாக) இருக்கும்" என்று (மூன்று தடவை) கூறி, மூன்றாவது தடவையில் பெருவிரலை மடக்கிக்கொண்டார்கள். மேலும், மாதம் என்பது (சில வேளைகளில்) இப்படியும் இப்படியும் இப்படியும் -அதாவது முப்பது நாட்களாகவும்- இருக்கும் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. அதில் இரண்டாவது மாதத்தைக் குறிப்பிடுகையில், "அதாவது முப்பது இரவுகள்" எனும் விளக்கக் குறிப்பு இடம்பெறவில்லை.
Book : 13
1971. சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் "இன்றைய இரவு (மாதத்தின்) பாதி இரவாகும் (இன்றிரவுடன் அரை மாதமாகிறது)" என்று கூறியதை இப்னு உமர் (ரலி) அவர்கள் செவியுற்றார்கள். உடனே அந்த மனிதரிடம் "இன்றைய இரவுதான் (மாதத்தின்) பாதியாகும் என உமக்கு எப்படித் தெரியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கை விரல்களால் இரண்டு முறை பத்து பத்து எனச் சைகை செய்து) "மாதம் என்பது இவ்வளவு இவ்வளவு இரவுகளாகும்" என்று கூறிவிட்டு, (மூன்றாவது தடவையில்) "இவ்வளவு" (என்று கூறியவாறு எல்லா விரல்களாலும் சைகை செய்து பெருவிரலை மட்டும் மடக்கிக்காட்டி மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகவும் இருக்கும்) என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
Book : 13
1972. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு நோறுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். (ரமளான் பிறை இருபத்தொன்பதாம் நாள் மாலை) உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் முப்பதாவது நாளும் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1973. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (ஷஅபான் மாதத்தின்) எண்ணிக்கையை (முப்பது நாட்களாக) முழுமையாக்கிக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1974. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; (மேக மூட்டத்தால்) உங்களுக்குத் திங்கள் தென்படவில்லையானால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1975. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறை குறித்துக் கூறுகையில், "நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (மாதத்தை) முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்