அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Tuesday, October 18, 2011

அழைப்புப் பணியின் முக்கியத்துவம் (HD video)





எழுதியவர்/பதிந்தவர்/உரை 
வழங்குவர்: U.K. ஜமால் முஹம்மத் மதனீ
நிகழ்ச்சி: அழைப்புப்பணி உதவியாளர்களுக்கான பயிற்சி
நாள்: 12, 13 & 14 OCT 2011
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா
Note: Turn on HD for high speed internet connection, Turn off HD for low speed internet connection.
Part-1
Part-2
Part-3
Part-4
நன்றி:islamkalvi.com

Friday, October 14, 2011

தலையங்கம்: யாருக்கு வாக்கு?


தலையங்கம்


First Published : 14 Oct 2011 04:06:03 AM IST

அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதிலும் "கிராம சுயராஜ்யம்'தான் இந்தியாவின் சமச்சீர் வளர்ச்சிக்கு ஒரே தீர்வு என்பதிலும் கருத்து வேறுபாடே இல்லை. ஆனால், அது சரியான முறையில்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதுதான் கேள்வி. "பஞ்சாயத்து ராஜ்' இந்தியாவின் கிராமங்களைத் தரம் உயர்த்தும் என்கிற எதிர்பார்ப்பு அநேகமாகப் பொய்த்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
 அதிகாரம் பரவலாக்கப்படுவதற்குப் பதிலாக ஊழல் பரவலாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் கடந்த 20 ஆண்டுகளாக பஞ்சாயத்து ராஜ் சட்டம் இந்தியாவுக்குச் செய்திருக்கும் உதவி என்று நினைக்கத் தோன்றுகிறது. இல்லையென்றால், நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில்கூட செலவிடப்படாத அளவுக்குப் பணம் வேட்பாளர்களால் உள்ளாட்சித் தேர்தலில் வாரி இறைக்கப்படுகிறதே, அது ஏன்?
 தமிழக உள்ளாட்சித் தேர்தலில், அரசியல் கட்சிகள் கூட்டணி இல்லாமல் தனித்தனியே போட்டியிடுகின்றன என்றபோது அவரவர் தகுதி என்ன, பலம் என்ன என்பதைப் பார்ப்பதற்கு இது ஒரு வாய்ப்பு என்று நினைத்து மகிழ்ந்தோம். கணக்கற்ற வேட்பாளர்களின் கட்டுப்பாடற்ற பிரசாரம், இவர்கள் பேசாமல் கூட்டணி வைத்தே பிரசாரம் செய்திருக்கலாமே என்று நம்மை எரிச்சலடைய வைத்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் வரைமுறைகள் எதுவும் இல்லாததால், ஒவ்வொரு வேட்பாளரும் பிரசாரம் என்கிற பெயரில் வீணடிக்கும் பணம் நம்மை மலைக்க வைக்கிறது.
 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எவ்வாறு இலவசத் திட்டங்களை அறிவித்தனவோ, அதற்கு இணையாக மேயர் வேட்பாளர்களும், நகர் மன்ற வேட்பாளர்களும், ஏன் பேரூராட்சி, ஊராட்சி உறுப்பினர்களும்கூட இலவசத் திட்டங்களை அறிவிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாகவும், கொஞ்சம் பதற்றமாகவும்கூட இருக்கிறது.
 வீட்டுக்கு 3 கிலோ மாமிசம் இலவசம் என்கிறார் ஒருவர். வீட்டுக்கொரு சிம் கார்டு இலவசம் என்கிறார் மற்றொருவர். உங்கள் வீட்டுக்கு மூன்று வாரம் தினமும் அரை லிட்டர் பால் இலவசமாக ஊற்றுகிறேன் என்கிறார் ஒருவர். பெண்களுக்குத் திரையரங்குகளில் இலவசமாகப் படம் பார்க்கலாம் என்கிறார் மற்றொருவர். கல்யாணம், காதுகுத்துக்குப் பத்திரிகை வைக்கும் வார்டு வாக்காளர்களுக்கு ரூ. 2,000 மொய்ப் பணம் என்றுகூட ஒருவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். இப்படியெல்லாம் நடக்கிறதா என்று ஆச்சரியப்படாதீர்கள். தமிழகத்தில் பல நகராட்சிகளில், நகர்ப் பஞ்சாயத்துகளில் பேரூராட்சிகளில், ஊராட்சிகளில் இதுபோன்ற வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. இவை எப்படிச் சாத்தியம்?
 மாநில அரசு இலவசங்களை அள்ளி வழங்குகிறது என்றால் அதற்குக் காரணம் மது விற்பனையால் கிடைக்கும் வருவாய். சுமார் ரூ.14,000 கோடி வருமானம் மதுவால் கிடைக்கும் என்றால், அரசாங்கம் எதை வேண்டுமானாலும் இலவசமாக அளிக்கும்தான். அதைப் பின்பற்றி, உள்ளாட்சியிலும் இலவசம் என்று இவர்கள் அறிவித்தால், இதை இவர்களால் எவ்வாறு செயல்படுத்த முடியும்?
 உள்ளாட்சிகளில் கிடைக்கும் வருவாய் நேரடியாக அரசுக்குப் போகிறது. அரசு ஒதுக்கும் நிதியில்தான் இவர்கள் திட்டங்களைச் செயல்படுத்தியாக வேண்டும். அப்படியிருக்க, வெற்றி பெற்றால் இவர்கள் எப்படித் தங்கள் வாக்குறுதிகளைச் செயல்படுத்துவார்கள்? அதுபோகட்டும், தனியொரு உறுப்பினருக்கு இப்படி வாக்குறுதிகளை அள்ளி வழங்க எங்கிருந்து வருமானம் கிடைக்கும்? ஒன்று அது பொய் வாக்குறுதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், ஊழலின் ஊற்றுக்கண் ஊராட்சி அமைப்பு என்று இருக்க வேண்டும்.
 சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது மக்களவை உறுப்பினர்களுக்கு சம்பளமே ரூ. 60 ஆயிரம் வரை இருக்கிறது. மேலும் அவர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக சில கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் சேவை செய்ய வருவோருக்குச் சம்பளம் வெறும் டீச் செலவு என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களது அதிகார வரம்புகளும்கூட மிகக் குறைவுதான்.
 மேயருக்கு கார் உண்டு. வீடு உண்டு. அதற்கான செலவு மாநகராட்சி தரும். மாமன்றக் கூட்டம் நடக்கும் காலத்தில் மேயர், கவுன்சிலர்களுக்கு சிட்டிங் பீஸ் மட்டும்தான். அதிகபட்சம் மாதத்துக்கு இரண்டு கூட்டம் நடக்கலாம். இதில் ரூ,1,600 கிடைக்கும், அவ்வளவே.
 நகர்மன்றத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர்களுக்கு வாகன வசதி உண்டு. சம்பளம் ரூ.600-ஐத் தாண்டுவதில்லை. இதேபோன்று நகராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி கவுன்சிலர்களுக்கு கூட்டத்தில் பங்கேற்றால் அதற்கான பங்கேற்பு கட்டணம் மட்டும்தான். இதன்மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சம் ரூ.1,500 கிடைக்கலாம்.
 பிறகு ஏன் இத்தனை போட்டி. என்ன தைரியத்தில் இவர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்? எவ்வாறு பல லட்சங்களையும், கோடிகளையும் வாரி இறைக்கிறார்கள்? மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளுக்காக பல்வேறு திட்ட அமலாக்கத்துக்காக அரசு வழங்கும் நிதியில், தன் வார்டுக்கு ஒதுக்கப்படும் தொகையில் ஒரு 10 விழுக்காட்டைப் "பார்த்தாலும்' போதும், இரண்டு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
 ஆக, இலவசங்களையும், வாக்குறுதிகளையும் அறிவிப்பவர்கள் மிகமிக விவரமானவர்கள் என்பதையும் இவர்களது "நோக்கம்' தெளிவானது என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதி என்பவர் மக்களுக்கான தேவை என்ன என்பதை மன்றத்தில் எடுத்துரைக்கும் கட்டியக்காரர், அதிகாரிகள் மக்கள் பணத்தைச் சாப்பிட்டுவிடாதபடி கண்காணிக்க மக்களால் நியமிக்கப்படும் காவல்காரர். அப்படிப்பட்ட வேட்பாளர்களை மட்டுமே மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.
 அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டுமே தவிர, ஊழல் பரவலாக்கப்பட்டு விடக்கூடாது.

Thursday, October 13, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே.



முட்டாள்களே,

என்ன ஆயிற்று உங்களுக்கு..?

என் அடக்கத்தலத்தில் எதற்கு இத்தனைக் கூட்டங்கள்?

சமாதி வனக்கத்தைக் குழி தோண்டிப் புதைக்கப் போராடிய எனக்கே சமாதி கட்டி பச்சைப் பட்டு விரித்து பூ சாத்தி,பக்தி மணக்க மயிலிறகு மந்திரங்களும் சக்கரைப் பூ நேர்ச்சையும் உண்டியலும் காணிக்கையும்....

நெஞ்சு பொறுக்குதில்லையே

ஒரே இறைவன்,குர்ஆனும் நபிவழியும் நம் வழிகாட்டுதல் என்று ஒரிறைக் கொள்கை சொன்ன என் பாடங்களை தர்கா விளக்கு திரியில் போட்டு எரிக்கின்றீர்களே...

நான் சொன்னேனா?

எனக்கு கந்தூரி வேண்டும்,உரூஸ் வேண்டும்,பூஜை வேண்டும்,நேமிதம் வேண்டும் என்று யாரிடம் சொன்னேன்?

என்னை ஏன் இழிவுப்படுத்துகிறீர்கள்?

இறைவனிடம் நேரடியாகப் பிரார்த்தியுங்கள்.அவனுக்கு இடைத்தரகர் தேவையில்லை என்று ஓங்கி ஒலித்த என்னிடமே கையேந்துகிறீர்களே?

மூடர்களே உங்கள் இழி செயலால் நான் குறுகி நொடிந்து போகிறேன்.

ஜோஸ்யங்களும் மாந்திரீகங்களும் மடத்தனத்தின் முகவரி என்று உரத்து சொன்ன என் பெயரில் பொழப்பு நடத்த யாகம் செய்யும் சுயநலமிகளே,

இறைவன் முன்னிலையில் நாம் என்ன பதில் சொல்வோம்?

மரண சிந்தனையின் வாசல் கதவில் நின்று ஆணும் பெண்ணுமாய் கொண்டாடிக் கொள்ளி கொளுத்துகின்றீர்களே...

இது இணைவைப்பின் கொடூர விதை என்பதை நீங்கள் அறிவதில்லையா?

என் மட மக்களே,

தெரியாமல்தான் கேட்கிறேன்.இந்த யானைக்கும் எனக்கும் என்னதான் தொடர்பு?

என் சமாதியில் கொடிக் கம்பம் நட்டு பச்சை நட்சத்திரங்களுடன் கொடிகளைப் பறக்க விட்டு என் கொள்கையில் சுண்ணாம்பு நீர்க்கச் செய்து கொக்கரிக்கின்றீர்களே....

என்ன நியாயம் இது?

நிறுத்துங்கள்

எனக்கும் இவ்வுலகிற்கும் இனி தொடர்பில்லை.நீங்கள் கேட்பதை நானறியேன்.

எடுத்துரைக்கும் என் கடமை முடிந்து போனது.

எனக்கேன் தர்கா? என்னைக் கண்ணியப்படுத்த விரும்பினால் இடித்துத் தள்ளிவிட்டு ஓரிறை நோக்கி போ...

எனக்காகப் பிரார்த்தனை செய்.

அதைவிட்டு...

மூடத்தனத்திற்கு என்னை காரணியாக்கும் கொடுமை தொடருமானால் மஹ்ஷர் காத்துக் கிடக்கிறது.

உங்கள் யாவருக்கும் எதிராய் என் விரல் நிளும்...

விரக்தி பெருமூச்சுடன்...
இறையடிமை

நன்றி : 
valaiyukam
நன்றி :http://www.ervadidargah.blogspot.com/

Tuesday, October 11, 2011

பெயரை மாற்றினால் சரித்திரம் மாறிவிடுமா?



ஒரு சமூகத்தை முழுமையாக அழிக்க வேண்டும் என்றால் முதலில் அந்த சமூகத்தின் வரலாற்றுத் தொடர்புகளையும் பாரம்பர்ய சின்னங்களையும் அழித்துவிட்டால் அந்த சமூகம் தொடர்பு அறுந்த சமூகமாக, முகவரி இல்லாத நாடோடி சமூகமாக மாறிப்போகும். பிறகு அந்த சமூகத்தை அழிப்பது மிகவும் எளிது. இப்படி குறிவைத்து அழிக்கப்பட்ட பல சமூகங்களின் வேதனை நிறைந்த வரலாற்று சம்பவங்களை உலக வரலாற்று ஏடுகளில் காணலாம்.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹிட்லர் மற்றும் முஸோலினியின் பாசிச நாஜி கொலைகார கூட்டம் இப்படித்தான் உலகின் பல பாகங்களிலும் தங்களது இன வெறி கொள்கைகளை நிலைநிறுத்தியது.
அத்தகைய பாசிச வெறியர்களிடம் பாடம் பயின்ற சங்பரிவார கும்பல் இந்தியாவிலும் அதுபோன்ற இனவெறி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.
சகிப்புத் தன்மைக்கு பெயர் பெற்ற இந்து மதத்தின் பெயரால் இந்த கொடுமைகளை இவர்கள் நடத்துவது தான் மிகப்பெரிய அக்கிரமம். அதனால் தான் இந்து மதத்தில் உள்ளவர்களின் 1 சதவீத ஆதரவைக் கூட இவர்களால் பெற இயலவில்லை. இந்து மக்களாலேயே புறக்கணிக்கப்பட்ட இந்த சங்பரிவார், அந்த மதத்தின் பெயரை பயன்படுத்தி இனவெறி, மதவெறியை தூண்டுகின்றனர்.
இதுபோன்ற மனிதவிரோத வேலைகளை இவர்கள் தொடர்ந்து செய்வதற்கு ஏற்ற இடமாக மோடி ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் கிடைத்திருக்கிறது. மோடியின் அட்டூழியங்களை நாம் நினைவுபடுத்த தேவையில்லை. காரணம் அந்த கொடூர கொலைகள்
எல்லாம் நல்லோர்கள், நடுநிலையாளர்கள் நெஞ்சை விட்டு என்றைக்கும் மறையப் போவதில்லை.
இன அழிப்பு தொடர்கிறது மோடியின் காட்டுமிராண்டி ஆட்சியில்.
தற்போது குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் என்ற 600 ஆண்டு வரலாற்றுப் பெயரை ஒரே இரவில் அம்தாபாத் என்று அரசின் அத்துனை அறிவிப்பு ஏடுகள் மற்றும் பெயர் பலகைகளிலும் மாற்றி தனது நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கும் முஸ்லிம் விரோத எண்ணத்திற்கு மேலும் தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்.
கி.பி. 1411 இல் முஸ்லிம் மன்னர் அகமது ஷா அவர்களால் உருவாக்கப்பட்ட நகரம் தான் அகமதாபாத். இன்றைக்கு இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் ஜவுளி தயாரிப்பிற்கு உலகளவில் பெயர் பெற்ற நகரமாக விளங்குகிறது.
அகமதாபாத் மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காடு மக்கள் முஸ்லிம்கள். மேலும் தேசத் தந்தை காந்தியடிகளின் சபர்மதி ஆஸ்ரமம் அகமதாபாத்தில் தான் உள்ளது. அகமதாபாத் என்ற முஸ்லிம் பெயரை மாற்றிட வேண்டி தேசவிரோத சக்திகள் பல முறை முயன்றும் முடியவில்லை. தற்போது ஒரே இரவில் மோடியின் கைங்கர்யத்தால் மாநகராட்சியின் பதிவேடுகளும் மாற்றப்பட்டுள்ளன. இதை குஜராத்திலிருந்து வெளிவரும் எந்த பத்திரிகைகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் காவியில் கலந்து சங்கமமாகிவிட்டன.
இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி, நிர்வாகமுறை, அவர்களின் தியாகம் போன்ற வரலாற்று உண்மை நிகழ்வுகளை பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த வரலாற்று ஏடுகள் அனைத்தையும் வெள்ளையர்கள் ஆட்சியில் அடியோடு தீவைத்துக் கொளுத்தினர். உண்மைச் செய்திகள் அடுத்தடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். பிறகு வெள்ளையர்களே அன்றைய சங்பரிவார் துணை கொண்டு முஸ்லிம் மன்னர்களைப் பற்றி கட்டுக்கதைகளை வரலாறு என்ற பெயரில் எழுதி வைத்தனர். அவற்றைதான் இன்றைய வரலாற்றுப் பாடங்களில் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்றனர்.
இவற்றை மாற்றி உண்மையான செய்திகளை தெரிந்து கொள்வதில், அவற்றை தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில் முஸ்லிம்கள் போன்ற இன மத ரீதியான சிறுபான்மை சமூகம் என்றைக்கு ஆர்வம் காட்டுகிறதோ, அவற்றை நிலைநிறுத்துவதற்கு என்றைக்கு போராட துணிகிறதோ அதுவரையிலும் இது போன்ற அநியாயக்காரர்களின் ஆட்டூழியங்கள் இந்நாட்டில் தொடரத் தான் செய்யும். சட்டத்தால் எல்லாம் இவர்களை ஒன்றும் செய்துவிட இயலாது.

Saturday, October 8, 2011

குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள்



Post image for குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள்

உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களையும் (குர்ஆன்) ஞானங்களையும் (ஹிக்ம்) நினைவில் வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவுடையோனும் (யாவையும்) நன்கறிந்தோனுமாக இருக்கின்றான். அல்குர்ஆன் 33:34
மேற்கண்ட இறை வசனத்தில் ‘கிதாப்’ என்ற குர்ஆனைக் குறிக்க இறைவன் கூறிய சொல்லோடு இணைத்து ‘ஹிக்ம்’ என்ற சொல் ஸுன்னாவையே குறிக்கும் என்று எல்லா அறிஞர்களின் முடிவாகும். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் பொதிந்துள்ள குர்ஆனை அல்லாஹ் ஒரே நேரத்தில் அருளவில்லை. அதை ஓதிக் காண்பித்து அதன் வசனங்களை மக்களுக்கு விளக்கிக் காட்ட ஒரு தூதர் மூலமாகவே அருளப்பட்டது. குர்ஆனின் கருத்துக்கள் அந்த இறைத்தூதரின் வாழ்விலும், செயலிலும் நடைமுறைப் படுத்தப்பட்டன.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றி வினவப்பட்ட போது “அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே விளங்கியது” என அவர்கள் கூறிய பதிலில் குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் உள்ள பிணைப்பு தெளிவு படுத்தப்பட்டுள்ளது. எனவே குர்ஆனும், ஹதீஸும் ஒன்றில் ஒன்று தங்கி நிற்கும் ஒரு முழுமையான அங்கமாகும்.
நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுள்ள வேதமும் உங்களிடம் வந்திருக்கிறது அல்குர்ஆன் 5:15
மேற்கண்ட இறை வசனத்தின் பிரகாரம் கூறுவதானால் குர்ஆனை வாசிக்க விளங்க ஒளியான ஸுன்னா தேவை என்பது விளங்குகிறது. ஹதீஸ்களின் துணையின்றி விளங்க முயல்வது ஒரு இருட்டில் வாசிக்க முயல்வது போலாகும். இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ மூலமாக எவ்வாறு அறிவிக்கப்பட்டதோ அவ்வாறே அவர்கள் அதற்காக கூறும் மார்க்க விளக்கங்களும் வஹீயின் அடிப்படையில் அமைந்தவையாகும். இதையே பின்வரும் வசனம் நமக்கு கூறுகிறது.
அவர் தம் இச்சைப்படி (எதனையும்) கூறுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டேயன்றி வேறில்லை.. அல்குர்ஆன் 53:3,4
இன்று ஒரு சிலர் மேலோட்ட எண்ணத்தில் குர்ஆனில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதுவே போதும், ஹதீஸ்கள் பல மாதிரி இருக்கின்றன. பலகீனமான ஹதீஸ்கள் என்கிறார்கள், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்கிறார்கள், எனவே குர்ஆனில் கூறப்பட்டிருக்கின்றதா? நான் கட்டுப்படுகிறேன். ஹதீஸைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை… ஆகவே குர்ஆன் மட்டுமே போதும் என்கிறார்கள். அவர்களது சிந்தனைக்கு சிலவற்றை எடுத்துக் கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.
(மூமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படியுங்கள். அல்குர்ஆன் 24:56
மேற்கண்ட இறை வசனத்தின் மூலமும் இது போன்ற வேறு வசனங்கள் மூலமும் இறைவன் தொழச் சொல்கிறான். ஜகாத்தைக் கொடுக்கச் சொல்கிறான். ஆனால் குர்ஆனில் எந்த இடத்திலும் எப்படி, எத்தனை ரக்அத்துகள் தொழவேண்டும் என்றோ எவ்வளவு ஜகாத் கொடுக்க வேண்டுமென்றோ விளக்கவில்லை. அதை விளக்கும் கடமையை தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்துள்ளான். இதைத்தான் அந்த வசனத்தின் பிற்பகுதியில் “அவனுடைய தூதருக்கு முற்றிலும் வழிபடுங்கள்” என்று இறைவன் கூறுகின்றான். எனவே, நாம் தொழ வேண்டுமென்றால், ஜகாத் கொடுக்க வேண்டுமென்றால் நபி(ஸல்) அவர்களின் ஸுன்னா அடங்கிய ஹதீஸ்களைக் கண்டிப்பாகக் கடை பிடிக்க வேண்டும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
(நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். அல்குர்ஆன் 16:44
என்ற இறைக் கட்டளைக்கேற்ப குர்ஆனில் குறிப்பிட்டுள்ள தொழுகை, ஜகாத், ஆண் பெண் உறவு, திருமணம், வியாபாரத் தஒடர்பு, சமூக உறவுகள், வாழ்க்கை நெறி முறைகள் போன்ற பலவற்றையும் வார்த்தைகளால் விளக்கியும், செயல்படுத்தி காட்டியும் நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். குர்ஆன் பொதுவாக “தொழுகையை நிறைவேற்றுவீர்களாக!” என்று கட்டளை பிறப்பிக்கிறது. அந்த தொழுகையை நிறைவேற்றும் நேரங்கள், முறைகள், அதன் ரக்அத்துகள், ருகூவு, சுஜூது போன்றவைகள் ஸுன்னாவிலேயே விளக்கப்படுகிறது. அவற்றை ஹதீஸ்களே நமக்கு விளக்கமளிக்கிறது; குர்ஆனல்ல.
நோன்போடு தொடர்புடைய (அல்பகரா 187) திருவசனம் அருளப்பட்ட போது அதீபின்ஹாதிம் (ரலி) என்ற நபித்தோழர் இதில் குறிப்பிடப்படும் கய்துள் அப்யழு (வெள்ளை நூல்) கய்தில் அஸ்வதி (கறுப்பு நூல்) என்பது இரண்டு நூல்களைக் குறிக்கிறது என்ற கருத்தைக் கொண்டிருக்க ரசூல் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது இரவின் இருட்டையும், பகலின் வெளிச்சத்தையுமே என்று விளக்கமளித்தார்கள். (அதாரம்: ஸஹீஹ் புகாரி, கிதாபுத் தஃப்ஸீர்) குர்ஆனில் ஜகாத் வசனம் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கூறப்படுகிறது. ஒவ்வொரு பொருளிலும் ஜகாத் அளவிடப்படும் முறை, அதன் பங்கீடு பற்றிய விரிவான விளக்கங்களை ஹதீஸ்களிலேயே காண முடிகிறது.
“உங்களுக்கு வியாபாரத்தை அல்லாஹ் அனுமதித்து வட்டியை ஹராமாக்கினான்” என குர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் எல்லா வகையான வியாபாரத்தையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதையும் மதுபானம், பன்றி இறைச்சி, ஏமாற்றி விற்கும் வியாபார முயற்சிகள் ஆகியவைகளை அனுமதிக்கப்படாத வியாபாரங்கள் என்று ஹதீஸ்களே தெளிவு படுத்துகின்றன.
திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள். அல்குர்ஆன் 5:38
திருட்டுக் குற்றத்திற்காக திருடியவர்களின் கரத்தைத் துண்டித்து விடும்படி குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஆனால் இதில் வலக்கரம்தான் முதலில் வெட்டப்பட வேண்டும் என்ற விளக்கத்தை ஹதீஸ்களிலேதான் காணப்படுகிறது. ஒரு கவசத்தின் பெருமதியை விட குறைந்த பெறுமதியுள்ள ஒரு பொருளைத் திருடியதற்காக ஒருவரின் கரம் வெட்டப்படக்கூடாது; புத்தி சுவாதீனமற்றவர்கள்; குழந்தைகள் மேலும் பழங்கள், உணவுப் பண்டங்களைத் திருடிய குற்றத்திற்காக ஒருவரின் கரம் துண்டிக்கப்படக்கூடாது. ஒருவரின் கை மணிக்கட்டு வரைதான் துண்டிக்கப்பட வேண்டும்; முழங்கை வரை அல்ல என்ற விவரங்களை ஹதீஸ்களிலே காண முடிகிறது.
குர்ஆனில் அந்நிஸா சூராவில் 11,12,176 வசனங்களில் வாரிசுரிமை பற்றிய விதிகளையும், சூரா பகராவில் 226 முதல் 237 வரையிலும் ஸூரா அத்தலாக்கின் 1 முதல் 5 வரை உள்ள வசனம் விவாகரத்து பற்றிய சட்டங்களை ஹதீஸ்களின் துணையின்றி முறையாக விளங்குவதோ செயல்படுவதோ எந்த வகையிலும் முடியாத ஒன்றாகும். குர்ஆனில் பொதுவாக கூறப்படும் இது போன்ற சட்டங்களையும் கடமைகளையும் நபி (ஸல்) அவர்களின் விளக்கம் நிறைந்த ஹதீஸ்கள் அல்லவா நமக்கு விரிவாக விளக்குகின்றன.
ஃபர்ளு தொழுகைக்கு முன் பின் சுன்னத் தொழுகைகள், தஹிய்யதுல் மஸ்ஜித், பெருநாள் தொழுகை, ஜனாஸா தொழுகை, இஸ்திகாரா, லுஹா போன்ற தொழுகைகளின் குறிப்புகள் குர்ஆனில் இல்லை. இவையெல்லாம் ஹதீஸ்களிலே காணப்படுகிறது. இப்படி… குர்ஆனை விளங்க குர்ஆனில் கூறப்பட்ட இறைக்கட்டளையை நிறைவேற்ற ஹதீஸ்களே மிக முக்கியம் என்பதை எடுத்துக் கூறுவதானால் இக்கட்டுரை மிகமிக நீண்டு விடும்.
(நபியே!) நீர் கூறுவீராக நீங்கள் எனக்கு வழிப்பட்டு நடப்பீர்களேயானால் அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான். அல்குர்ஆன் 48:16
அல்லாஹ்வுக்கும் (அவனது) தூதருக்கும் வழிபடுங்கள், அன்றியும் நீங்கள் செய்பவற்றை யெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனே. அல்குர்ஆன் 58:13, 3:33
(மூஃமீன்களே) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜக்காத்தை கொடுங்கள்; மேலும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள். அல்குர்ஆன் 24:56
எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52
மேலும் மார்க்கத்தை விளங்க குர்ஆன் மட்டும் போதும் என்பவர்கள் உண்மையில் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பல குர்ஆன் வசனங்களை நிராகரிப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதை உணர வேண்டும். மேலும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்கள் குர்ஆனையே மறுக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
மேலும் ஹதீஸ்களில் பலவீனமானை; இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் நுழைந்து விட்டன; யூதர்கள் சதி செய்து நுழைத்து விட்டார்கள்; ஆகவே ஹதீஸ்களை எடுக்க முடியாது என்று கூறி அவற்றை மறுப்பதும் அறிவுக்கு பொருத்தமற்றச் செயலாகும். இறைவனின் பெயரால் பல மூட நம்பிக்கைகளும், அனாச்சாரங்களும், ஏமாற்று வேலைகளும் நுழைந்து விட்டன; இடத்தரகர்களான ஒரு சிரு கூட்டம் பெருங்கூட்டமான மக்களை ஏய்த்துப் பிழைக்க வழி ஏற்பட்டு விட்டது; அதனால் அந்த இறைவனே இல்லை என்று கூறி ஒரே இறைவனையும் மறுக்கும் நாஸ்திகம் பேசும் அரைக் கிணறு தாண்டுகிறவர்களுக்கும், பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக் காரணம் காட்டி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லை. இவர்களும் அரைக்கிணறு தாண்டுபவர்களே என்பதை உணர வேண்டும்.
இடைத்தரகர்களை ஒழித்துக்கட்டி சமத்துவ சகோதரத்துவ சமுதாயம் அமையப் பாடுபடுவது எந்த அளவு அவசியமோ அதே போல் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தெளிவாக அடையாளம் கண்டு அவற்றை நிராகரிப்பதோடு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை எடுத்து நடக்க முன்வர வேண்டும்.
நன்றி:www.readislam.net

Friday, October 7, 2011

எயிட்ஸுக்குத் தீர்வு இஸ்லாமியக் கொள்கையே ! மீண்டும் நிரூபித்தது பி.பி.ஸி உலக சேவை.





எயிட்ஸுக்குத் தீர்வு இஸ்லாமியக் கொள்கையே ! மீண்டும் நிரூபித்தது பி.பி.ஸி உலக சேவை.
Rasmin M.I.Sc

இந்த இயற்கை மார்க்கம் மனிதனின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிகத் தெளிவான பதில்களைத் தருகிறது என்றால் அது மிகையில்லை.

உலகையை ஆட்டம் காணச் செய்யும் மிகக் கொடிய நோயான ஹெச்.ஐ.வி. எய்ட்ஸை விட்டும் மனிதனைக் காப்பாற்ற பல நாடுகளும் தங்களால் முடிந்த மருத்துவக் கண்டுபிடிப்புக்களில் இறங்கியுள்ளன.

இவ்வகையில் ஆய்வுகளை மேற்கொண்ட பல நாடுகளும் இந்தக் கொடுமையான நோய்க்கு தீர்வாக முன்வைத்துள்ளது விருத்த சேதனம் என்ற இஸ்லாமிய வழிகாட்டளைத் தான்.

ஆம் ஆண்கள் தங்கள் மர்ம உருப்பின் முன் பகுதியை நீக்கி விருத்த சேதனம் செய்து கொள்வதின் மூலம் இந்த நோயின் பாதிப்பை 60 சதவீதத்தினால் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.


"இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்து கொள்வதுமர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது,மீசையைக் கத்தரிப்பதுநகங்களை வெட்டுவதுஅக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 5891

மேற்கண்ட செய்தியில் இயற்கையாக செய்ய வேண்டிய கடமைகளின் பட்டியலில் முதல் இடத்தில் விருத்த சேதனத்தைத் தான் இஸ்லாம் குறிப்பிடுகிறது.

ஆண்கள் விருத்த சேதனம் செய்து கொள்வதென்பது எயிட்ஸ் என்ற கொடிய நோயிலிருந்து அவர்களைப் பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது என்பதை இன்றைய அறிவியல் உலகம் நிரூபித்துள்ளது.


பி.பி.ஸியின் செய்தியை ஆடியோ வடிவில் கேட்க்க இங்கு க்லிக் செய்யவும்.

உலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இருண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த எச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளைஅதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த நோய் பெண்களில் இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள் விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம் 60 வீதத்தால் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதாவது முஸ்லிம்கள் உட்பட சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்று ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்த சேஷனம் ஆகும்.

இதனால்பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜிம்பாப்பேவேயிலும் அரசாங்கம் இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண முடியும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் நம்புகிறது. B.B.C Tamil

ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றி பி.பி.சி ஏற்கனவே வெளியிட்ட ஒரு தகவல்.

இஸ்லாம் சொல்லும் கத்னா முறை ஆண்கள் தங்கள் மர்ம உருப்பின் முன் பகுதியை நீக்குவதின் மூலம் விருத்த சேதனம் செய்துகொள்வதின் மூலம் ஏற்படும் நன்மைகளை பி.பி.சி உலக சேவை ஏற்கனவே பல முறை சுட்டிக் காட்டியிருந்தது. அதன் ஒரு பகுதியை இந்த ஆக்கத்துடனும் இணைத்துத் தருகிறோம்.


ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் தொடர்பாக உலகளவிலான மிகப் பெரிய மாநாடு விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆண்களுக்குச் செய்யப்படும் கத்னா (விருத்த சேதனம்) 60 சதவிகித அளவுக்கு எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்ற கண்டுபிடிப்பு உறுதியானது தான் என்பதைக் கூறும் ஆய்வறிக்கை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை 5000க்கும் மேற்பட்ட குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன என்று பி.பி.சி.யின் செய்தி தெரிவிக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் மிகக் குறைவு தான். ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் நீண்ட நாட்களாக அறியப்பட்ட உண்மையாகும்.

தென் ஆப்பிரிக்க ஆண்களில் 60 சதவிகிதம் பேரை ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயத்திலிருந்து கத்னா காக்கின்றது என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்பை அண்மையில் கென்யாவிலும்உகாண்டாவிலும் சேகரித்த ஆதாரம் உறுதி செய்கின்றது.

இவ்வாறு கத்னா ஒரு காவல் அரணாக அமைந்திருப்பதை அறிய முடிகின்றது என்று தனது செய்தியில் பி.பி.சி. தெரிவிக்கிறது.

இந்தக் காவல் அரணுக்கு கத்னா தான் காரணமாஅல்லது அவர்கள் குறைந்த அளவிலான பெண்களிடம் உடலுறவு கொள்வது தான் காரணமாஎன்று தெரியவில்லை என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.

அதாவது முஸ்லிம்களிடம் உள்ள விபச்சாரத் தடைபலதார மணம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றது.

கத்னாவிபச்சாரத் தடைபலதார மணம் இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் அது இஸ்லாமிய மார்க்கத்தினால் ஏற்பட்ட கண்ணியம் தான்.


ஹெச்.ஐ.வி. பாதிப்பை விட்டும் பாதியளவுக்கு கத்னா பாதுகாக்கிறது என்று அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸின் செய்தியாளர் டொனால்டு ஜி. மெக்நெய்ல் குறிப்பிடுகிறார்.

சுரப்பிகளிலிருந்து சுரந்து வரும் உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித் தோல் பகுதியில் தேங்குகின்றன. ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வைரஸானது உடலுறவின் போதுஏற்கனவே தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள் எளிதில் தொற்றிக் கொண்டு விடுகின்றது. அதனால் உடலுறவு கொண்ட அந்த ஆணும் ஹெச்.ஐ.வி. வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றான் என்று அந்தச் செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.


இஸ்லாமிய மார்க்கம் தான் இவ்வுலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்ல முடியும் என்பதை மேற்கண்ட செய்திகள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

ஆக இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை ஏற்று நடந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக.

நன்றி: http://rasminmisc.blogspot.com/ 

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்