அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, September 16, 2011

தலையங்கம்தலையங்கம்:மகுடமல்ல, முள்கிரீடம்!




First Published : 10 Sep 2011 12:06:00 AM IST

Last Updated : 10 Sep 2011 04:11:13 AM IST
மதுவிலக்கை அமல்படுத்தினால் அரசுக்குக் கிடைக்கும் ரூ.15,000 கோடி வருவாய் சமூக விரோதிகளுக்குச் சென்றுவிடும்' என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், சட்டப்பேரவையில் விளக்கம் அளித்திருக்கிறார்.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இது நியாயமான கருத்து போலத் தோன்றும். மது விற்பனையை அரசு செய்யாமல் தனியார் எடுத்துக்கொண்டு செய்தால், இத்தனை லாபமும் தனியாருக்கு அல்லவா போகும் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், இந்த மதுவைத் தயாரித்துத் தரும் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் பணம் எவ்வளவு, இந்த மதுவின் உற்பத்திச் செலவு எவ்வளவு என்பதை அரசு வெளிப்படையாகத் தெரிவிக்குமேயானால், தற்போது மது விற்பனையில் அரசுக்குக் கிடைக்கும் ரூ.15,000 கோடியைக் காட்டிலும் அதிகமான வருவாயைத் தனியார் மது தயாரிப்பு நிறுவனங்கள் லாபமாக அடைந்து வருகின்றன என்கிற கசப்பான உண்மை வெளிப்படும்.
அந்நிய மதுபானத் தொழிலில் வெறும் எரிசாராயத்தைத் தண்ணீரில் கலந்து விற்பதைத் தவிர, மிகப்பெரிய தொழில்நுட்பங்கள் கிடையாது. பல தருணங்களில் இந்த மது புளிப்பேறும் காலஅவகாசம்கூட இல்லாமல் அப்படியே பாட்டில்களில் அடைக்கப்பட்டு, சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. அவ்வளவு தேவை இருக்கிறது. ஆகவே, மது தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபம் மேலதிகமாகவே கிடைக்கிறது என்பது நிச்சயம். தரக்கட்டுப்பாடு எந்த அளவுக்கு இருக்கிறது, கலால் வரி கட்டாமல் திருட்டுத்தனமாக எவ்வளவு மது விற்பனையாகிறது என்பதெல்லாம் வெளியில் விவாதிக்கவேபடாத பிரச்னைகள்.
மதுவிலக்கை அமல்படுத்தினால் என்ன ஆகும் என்று பார்க்கலாம். தமிழக அரசுக்கு ரூ. 15,000 கோடி வருவாய் கிடைப்பது நின்றுபோகும். அதேபோல, மதுபானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்காது. இத்தனை வருமானமும் சமூகவிரோதிகளுக்குப் போகும் என்று சொன்னால், தமிழகத்தில் இப்போது விற்பனையாகும் அதே அளவுக்கு கள்ளச்சாராயம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடினால்தான் உண்டு. பிறகு எதற்கு காவல்துறை, கண்காணிப்பு? ஏன், ஒரு ஆட்சி, அரசாங்கம் எல்லாம்? லஞ்சத்தைக் கட்டுப்படுத்த அரசால் முடியாது என்று கூறி லஞ்சத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதுபோல இருக்கிறது இந்த வாதம்.
மதுவிலக்கு அமலில் இருக்கும்போது, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் இருக்கத்தான் செய்தனர். இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இவர்களிடம் திருட்டுத்தனமாக சாராயம் குடித்தவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஊரிலும் சில நூறு பேர்தான். கள்ளச்சாராயம் குடிப்பது சமூக அவமானமாகக் கருதப்பட்டதால் 95 சதவிகித குடிமக்கள் குடிகார மக்களாக இல்லாமல் இருந்தனர்.
ஆனால், அரசு சொல்கிறது 32 மாவட்டங்களில் ரூ.66 லட்சத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தி மதுவின் தீமை குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லவிருக்கிறோம். இதுதவிர, ஆயத் தீர்வை ஆணையருக்கு ரூ.34 லட்சம் வழங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்று! ஏற்கெனவே மாநிலத்தில் மதுஅடிமைகளின் புனர்வாழ்வு மையங்கள் 15 உள்ளன. இவற்றுடன் மேலும் 3 மையங்கள் திறக்கப்படும். புதிய மையத்துக்காகவும், பழைய மையங்களை மேம்படுத்தவும் ரூ.5 கோடி வழங்கப்படும் என்று சொல்கிறது தமிழக அரசு. கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக இருக்கிறது.
ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜ், பக்தவத்சலம், அண்ணாதுரை ஆகிய ஆறு முதல்வர்கள், மதுவாசனையை தமிழக இளைஞர்களுக்குக் காட்டாமல் இருந்தார்கள். 1991-ல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றபோது, சாராயக்கடைகளை மூடி புண்ணியம் கட்டிக்கொண்டார். அதற்காக அவரைப் பாராட்டாத தாய்மார்களே கிடையாது. இப்போது அவர் ஏன் அதே மனத்திண்மையுடன் செயல்படாமல் இருக்கிறார் என்பதுதான் அவரிடமிருந்து நல்லாட்சியை எதிர்பார்ப்பவர்கள் எழுப்பும் கேள்வி.
"திமுக அரசின் இலவசத் திட்டங்களை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்கான நிதி மதுவிற்பனையில்தான் கிடைக்கும் என்பதால், இத்திட்டத்தைக் கைவிட முடியாத நிலை' என்று காரணம் கூறக்கூடும். அதற்கு படிப்படியாக இலவசங்களைக் குறைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுதான் வழியே தவிர, மது விற்பனையை அதிகரித்து இலவசங்களை வாரி வழங்குவது சரியான முடிவாக இருக்காது.
மதுக்கடைகளில் வேலை செய்யும் சுமார் 30,000 பேரும் ஏதோ ஓர் அரசியல்கட்சியுடன் இணைவு பெற்ற டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்கள் அமைத்துள்ளனர். பணிநிரந்தரம் செய்யக் கோரி போராடுகின்றனர். மதுவிலக்கை அமல்படுத்தக் கோரும் அதே அரசியல் கட்சிகள் தங்கள் தொழிற்சங்க அங்கத்தினர்களுக்காகக் களத்தில் குதிக்கின்றன. அரசியல் கட்சிகளின் ஆஷாடபூதிதனத்திற்கு எல்லையே இல்லை என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.
மது விற்பனையால் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. அதனால் இலவசங்களை அள்ளிக் கொடுக்க முடிகிறது. 30,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது என்பதெல்லாம் நொண்டிச் சாக்குகள். மது விற்பனையால் மக்களின் ஆரோக்கியம் கெடுகிறது. மருத்துவச் செலவு அதிகரிக்கிறது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரம் சீர்குலைகிறது. உழைக்கும் திறன் குறைகிறது. அடுத்த தலைமுறையினர் சீரழிகிறார்கள். மாலை 5 மணிக்குப் பிறகு பெண்கள் தனியாகத் தெருவில் நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சுகாதாரக் குறைவான தெருவோரக் கடைகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து அதிகரித்திருக்கிறது. இவையெல்லாம்தான் நிஜமான விளைவுகள்.
"முதலில் தெருவுக்குத் தெரு மதுக்கடைகளும் பார்களும் இருப்பதை பாதிக்குப் பாதியாகக் குறைப்பது அடுத்த 5 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை நோக்கித் தமிழகத்தை இட்டுச் செல்வது மதுக்கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் சுயதொழில் செய்ய வாய்ப்பளித்து அந்த இளைஞர்களுக்கு நல்லதொரு வருங்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது'. இப்படியெல்லாம் முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்னையில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் பெருவாரியான மக்களின் எதிர்பார்ப்பு.
2003-04-ம் ஆண்டில் மது விற்பனையால் அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ.3,639 கோடி. 2010-11-ம் ஆண்டில் ரூ.14,965 கோடி.
இது நமக்கு நாமே சூட்டிக்கொள்ளும் மணிமகுடமா, முள்கிரீடமா?

9/11 தாக்குதலைக் குறித்து புஷ் பொய் கூறியுள்ளார் – மகாதிர் முஹம்மது

\
pirhayati20110910082835373
கோலாலம்பூர்:முன்னால் மலேசிய பிரதமரான மகாதிர் முஹம்மது தன்னுடைய சொந்த வலைப்பூவான செதேட்டில், மன்ஹாட்டன் நகரில் இருந்த இரட்டை கோபுரம், நியூயார்க் நகர், பெண்டகன் மற்றும் விர்ஜினியாவில் நடத்தப்பட்ட 9/11 தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல என்றும் இத்தாக்குதல் குறித்து அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் பொய் கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது; 9/11 தாக்குதலில் கொல்லப்பட்ட 3000 மக்களின் மரணத்தை நினைத்து அச்சம் கொள்வதைவிட அதை நடத்தியது அமெரிக்க அரசு என்பதில்தான் அச்சப்பட வேண்டியுள்ளது.
அரப் முஸ்லிம்கள் தங்களின் உயிரை தியாகம் செய்ய தயாராய் இருப்பவர்கள் என்பது உண்மை என்றாலும் இவ்வளவு துல்லியமாக தாக்குதலை நடத்தக்கூடிய அளவுக்கு அவர்கள் திறமை வாய்ந்தவர்கள் அல்லர் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது; இத்தாக்குதல் நடத்த நீண்ட காலமாக திட்டமிடல் நடைபெற்று இருக்கவேண்டும். ஏனினில் ஒரே நேரத்தில் நான்கு விமானங்களை கடத்துவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல இதற்கு துல்லியமான திட்டம் அவசியம் எனவும் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்களுக்கு இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த செயலை செய்து வெற்றிபெறுவது கடினம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இரட்டை கோபுரங்கள் இடிந்த விதத்தை பார்க்கும் பொழுது அது அருகாமையில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் விமானம் மோதிய உடன் ஒரு கட்டிடத்தை வேண்டும் என்றே அழித்தால் எவ்வாறு இருக்குமோ அதுபோன்று கட்டுப்பாடுடன் அக்கோபுரங்கள் கீழே சரிந்ததை பார்க்க முடிந்தது என்றும் மேலும் மூன்றாவது கட்டிடமும் இதே போன்று விழுந்தது ஆனால் அதில் எந்த விமானமும் மோதவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் பெண்டகன் தாக்குதல் குறித்து முஹம்மது தெரிவிக்கும்போது; பெண்டகனை தாக்கிய விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை மேலும் விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் விமானத்தில் இருந்தவர்களின் உடல்கள் என்று எதுவுமே கிடைக்கவில்லை விமானம் தாக்குதலில் என்ன முழுவதுமாக ஆவியாகிவிட்டதா? என வினவியுள்ளார்.
மேலும் கடத்தப்பட்ட நான்காவது விமானம் வெறும் தரையில் மோதியதாக கூறியுள்ளனர் அதனுடைய உதிரிப்பாகங்களோ அல்லது கருப்பு பெட்டியோ அல்லது இறந்து போன பயணிகளின் உடல்களோ கிடைக்கவில்லை. அனைத்தும் என்ன மாயமாக மறைந்து விட்டனவா? எனக் கேட்டுள்ளார்.
அமெரிக்க ஊடகங்கள் ஏன் இத்தாக்குதலை குறித்து மௌனம் சாதிக்கின்றன என்றும் கேட்டுள்ளார். மேலும் புஷ்தான் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய் கூறினார். புஷ்ஷின் குறிக்கோள் இராக்கையும் ஆப்கானிஸ்தான் மீதும் போர் தொடுப்பதே. இதனால் ஆயிரக்கணக்கான இராக்கிகள், ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்களும் இறந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றுள்ளனர் மேலும் பலர் மன நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னால் அமெரிக்க அதிபருக்கு மனிதர்களை உயிர் மதிப்புடையது அல்ல என்று மகாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.
நன்றி : thoothuonline.com

கண் திருஷ்டி from islamkalvi on Vimeo.

Friday, September 9, 2011

ஒளரங்கசீப் - மன்னர்கள் வரலாறு CMN Saleem-

அஸ்ஸலாமு அலைக்கும் எல்லாப்புகளும் அல்லாஹ்விற்கே சரியான செய்திகளை சரியான முறையிலே தெரிந்த கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சமநிலை சமுதாயத்தின் சகோதரர்களே மொகலாய மன்னர்களில் சிறப்பான ஆட்சியை வெளிபடுத்திய ஒளரங்கசீப் மன்னரை பற்றி அவதூறு ஏற்படுத்தி வந்து கொண்டு இருக்கும் பாசிச சக்திகளின் சூழ்ச்சியை அம்பல படுத்திய CMN சலீம் அவர்களின் இந்த உரையை கேளுங்கள் இதில் உள்ள உண்மையை மற்ற சகோதரர்களுக்கும் தெரிய படுத்துங்கள் நாளைய சமுதாயம் சரியான தகவல்களை தெரிந்து  கொள்ளவேண்டும் என்கின்ற முயற்சியில் இந்த பதிவு வெளியிட படுகின்றது, நமது சகோதர சமுதாயத்தின் சிந்தயனையிலே நம்மை பற்றி தவறாக புரிந்து வைத்துள்ள நச்சு செய்திகளை அகற்ற வேண்டியது நம் ஒவ்வொரு வருடைய கடமை ,எனவே சகோதரர்களே இதில் உள்ள உண்மையை நமது சகோதரர்களுக்கு தெரியபடுத்துங்கள் அல்லாஹ் உண்மையயை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நமது முயற்சிக்கு நற்கூலி வழங்குவானாக




f

Thursday, September 8, 2011

நமக்கு பரிந்துரை (ஷஃபாஅத்) செய்பவர் யார்?



Post image for நமக்கு பரிந்துரை (ஷஃபாஅத்) செய்பவர் யார்?

பரிந்துரை அல்லாஹ்வுக்கே சொந்தம் :
    1. அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா?
    (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்தாலுமா? பரிந்துரை எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.   (39:43,44)
    2. அன்றியும். அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர்.  (43:86)
    3. அவர்களுக்கு, ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை.   (6:70)
    4. (நபியே!) அண்மையில் வரும் (கியாமத்) நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக; இதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக் குழிக்கு வரும் (அவ்) வேளையில் அநியாயக் காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ; அல்லது ஏற்றுக் கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.  (40:18)
    5. இன்னும் ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்குச் சிறிதும் பயன்படமுடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக; (அந்நாளில்) எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அதற்காக எந்த பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.  (2:48,123)
    6. அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப் பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா?    (32:4)
    7. (மறுமையில்) அவனைத் தவிர அவர்களுக்கு பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ இல்லை.  (6:51)
    8. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே (அல்லாஹ்வுக்கே) உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்?  (2:255)
    9. அவன் எவருக்கு அனுமதிக் கொடுக்கிறானோ அவருக்குத் தவிர அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது.   (34:23)
    10. அவனது அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சி பொருந்திய) அல்லாஹ்வே உங்களைப் படைத்து பரிபக்குவப் படுத்துபவன்.   (10:3)
பரிந்துரைக்க அனுமதிப் பெறுபவர்கள்.
    11. இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த்தகைய)வருக்கின்றி – அவர் (நபி)கள் பரிந்து பேச மாட்டார்கள். இன்னும் அவர்கள் அவன் பால் உள்ளச்சத்தால் நடுங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள்.   (21:28)
    12. அர்-ரஹ்மானிடம் உடன்படிக்கை செய்துக் கொண்டோரைத் தவிர – எவரும் பரிந்துரை செய்ய அதிகாரம் பெற மாட்டார்கள்.   (19 :87)
    13. அந்நாளில் அர்-ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவரது பரிந்துரை (ஷஃபாஅத்து)யும் பயனளிக்காது.  (20:109)
    14. அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதிக் கொடுக்கிறானோ – அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்த பயனுமளிக்காது.  (53:26)
    15. …………எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்களாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (இறை அனுமதியுடன் பரிந்து பேசுவர்)   (43 : 86)
பாவிகளின் கூற்றும் பிதற்றலும்
    16. தங்களுக்கு (யாதொரு) நன்மையோ, தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவர்களை (இணை வைப்போர்) வணங்குகிறார்கள். இன்னும் அவர்கள்;
    இவர்கள் எங்களுக்கு அல்லாஹ்விடம் சிபாரிசு செய்பவர்கள் என்றும் கூறுகிறார்கள்.  (10:18)
    17. அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்).   (39:3)
    18. மேலும் (இறுதி) நேரம் நிலைபெறும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழப்பார்கள். அப்போது அவர் இணை வைத்தவர்களில் எவரும் அவர்களுக்காகப் பரிந்து பேசுவதாக இராது; (இணை வைத்த) அவர்களும், தாங்கள் இணை வைத்தவர்களை நிராகரிப்போராகி விடுவார்கள்.  (30:12,13)
    19. அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்; உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமானமுள்ளவராக ஆக்கி வைத்தோம்; (அப்போது) இந்த குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்; ஆகவே எங்களுக்காகப் பரிந்து பேசவோர் (இன்று) எவருமில்லை; அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை. நாங்கள் (உலகத்துக்கு) திரும்பிச் செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் முஃமின் (இறை விசுவாசி)களாகி விடுவோமே. (எனப் பரிதவித்து புலம்புவார்கள்)    (26:97-102)
20. குற்றவாளிகளைக் குறித்து-
    உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது? (என்று கேட்கப்படும்) அவர்கள் (பதில்) கூறுவார்கள் :
    நாங்கள் தொழுகையாளிகளில் நின்றும் இருக்கவில்லை; மேலும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை; (வீணானவற்றில்) மூழ்கிக் கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்; இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்; உறுதியான (மரணம்) எங்களிடம் வரும் வரையில் (இவ்வாறாக இருந்தோம் எனக் கூறுவர்).
    ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.  (74:41-48)
21. (மறுமையில் அல்லாஹ் பாவிகளை நோக்கி)
    நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுப்போன்று நீங்கள் (ஏதுமின்றி) தனியே எம்மிடம் வந்து விட்டீர்கள்; இன்னும், நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களது கூட்டாளிகள், (என்றும்) உங்களுக்கு பரிந்து பேசுபவர் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்தத் தொடர்பும் அறுந்து விட்டது; உங்கள் நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன. (என்று கூறுவான்)    (6:94)
22. நம்பிக்கைக் கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த (இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர்… நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்யுங்கள். (2:254)
23. அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்-ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால் இவர்கள் என்னை (அக்கெடுதியிலிருந்து) விடுவிக்கவும் முடியா!   (36:23)
24. எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு பரிந்துரை செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கும் உண்டு; (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு பரிந்துரை செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகம் உண்டு.   (4:85)
A. முஹம்மது அலி

Thursday, September 1, 2011

செயல்களே மாற்றத்தை உருவாக்கும்



வாருங்கள் செயல் படுத்துவோம்

அஸ்ஸலாமு அலைக்கும் எல்லாபுகழும் அல்லாஹ்விற்கே புனித மிக்க ரமலான் மாதத்தை நல்ல முறையிலே நிறைவு செய்து விட்டு அதன் அடுத்த மாதத்திலே அடி எடுத்து வைத்து உள்ளோம் மாஷா அல்லாஹ் நாம் இந்த ஒரு மாதத்திலே பெற்ற படிப்பினைகள் பொறுமை சகிப்புத்தன்மை எளியவருக்கு உதவுதல் போன்ற நற்குணங்களை சுமந்து கொண்டு மீதம் இருக்கும் மாதங்களில் பயணிக்க இருக்கின்றோம் நம்மில் பலருக்கு இந்த ரமலான் மாதத்தில் இருக்கின்ற இந்த பொறுமை சகிப்பு தன்மை எளியவருக்கு உதவுதல் இறைவணக்கத்தை சரியாக நிறைவேற்றுதல் போன்ற நற்குணங்கள் மற்ற மாதங்களில் இருப்பது இல்லை அல்லது இதன் உறுதியில் தடுமாற்றம் ஏற்பட்டுவிடுகின்றது ஏன் இந்த அவலம் இறைவன் மீது இருக்கின்ற இந்த இறை உணர்வு நம்மிடம் எப்பொழுதும் நிலையாக இருக்கவேண்டும் ரமலான் மாதத்தை ஒரு பயிற்சி காலாமாக எடுத்து கொண்டு ஏனைய மாதங்களிலும் இதை நடைமுறை படுத்த வேண்டும் அப்பொழுதான் குன்தும் ஹைர உம்மத் என்று இறைவன் நம்மை பார்த்து கூறுகின்றானே சமுதாயத்திலேயே சிறந்த சமுதாயம் நீங்கள் தான் என்று ஏன் என்றால் நீங்கள் நன்மையை எவுகின்றீர்கள் தீமையை தடுக்கின்றீர்கள் என்று இந்த வாசகத்திருக்கு தகுந்த வர்களாக நாம் இருக்க வேண்டும் என்று சொன்னால் ரமலான் மாதத்தில் கடைபிடித்த நல்ல சுபாவங்களை நல்ல அமல்களை நம் வாழ் நாள் முழுவதும் கடை பிடிப்பது அவசியம்,

நம்முடைய ஒவ்வொரு அசைவுகளும் இஸ்லாமாக இருக்க வேண்டும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நம்முடைய முழு வாழ்க்கையுமே இறைவணக்கமாக மாறிவிடும் எந்த விதமான ஊடகத்தின் துணையுமே இல்லாத காலத்தில் இந்த இஸ்லாத்தை சுமந்து வந்து நமது கைகளிலே சேர்த்தது எது என்று யோசித்து பாருங்கள் நபி(ஸல்) அவர்களின் போதனைகள் மாத்திரம் அல்ல நபி (ஸல்) அவர்களும் சத்திய சகாபாக்களும், அதனை பின் தொடர்ந்து வந்த தாபியீன்களும், அவர்களை பின் தொடர்ந்து வந்த தபக தாபியீன்களும் குர் ஆனையும் ஹதீசையும் தங்கள் வாழ்க்கையாகவே வாழ்ந்து காண்பித்தார்கள் அதன் விளைவு உலகத்தில் நூற்று ஐம்பது கோடி மக்களுக்கு மேல் இஸ்லாமியர்களாக இருக்கின்றார்கள் அதாவது உலகத்தில் நடமாடும் ஐந்து நபர்களில் ஒருவர் முஸ்லிம் என்கின்ற இந்த நிலைக்கு காரணம் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக வாழ்ந்து காட்டியது தான் செயல் வடிவம் இல்லாத எந்த ஒரு சித்தாந்தமும் சமூகத்தில் எந்த ஒரு மாற்றத்தையுமே ஏற்படுத்தியது இல்லை என்பது தான் உலக சரித்திரம் நமக்கு சொல்லும் படிப்பினை .சுவாமி விவேகனந்தர் கூறுகின்றார்

swami-vivekanandaமற்ற அனைத்து மக்களையும் விட அத்வைதக் கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாயிருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் அத்வைதம்- அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மை போல் சமமானவர் என்று பாவிப்பதும், அவ்வாறே நடந்து கொள்வதும் எனத் தொடரும் அவரது பேச்சில்
இத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாராட்டத்தக்க வகையில் அனுகியிருக்கிறதேன்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று நான் அனுபவப்பூர்வமாய் கூறுகிறேன். நான் அழுத்தமாய் சொல்கிறேன், நடைமுறைக்கு இசைவான இந்த செயல்பாடின்றி வேதாந்த கருத்துக்கள் எவ்வளவுதான் சிறப்பானதாக, பெருமைக்குரியதாக இருந்தாலும் பரந்து கிடக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே முடியும்.

சுவாமி விவேகானந்தர் – [Letters of Swami Vivekananda P.463]


எனவே இதை உணர்ந்த இஸ்லாமிய சொந்தங்களே இஸ்லாத்தை நமது வாழ்கையிலே முழுவதுமாக கொண்டு வருவோம் நமது இந்த செயல்பாட்டின் மூலம் சமத்துவம் சமூக நீதி நிறைந்த ஒரு வலுவான சமுதாயத்தின் தூண்களாக இன்ஷா அல்லாஹ் நாம் இருப்போம் இஸ்லாத்தை நம் செயல்களின் மூலம் அறிமுகம் செய்வோம் இதுவே மிக சிறந்த (தாவா) அழைப்பு பனி

இந்த சத்திய மார்கத்தை நம்முடைய வாழ்கையிலே செயல் படித்திய நன்மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் பொருந்தி கொள்வானாக

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்