அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Sunday, May 9, 2010

குணங்குடி அனீபா மீதான வழக்கில் உடனடியாக தீர்ப்பை வெளியிடக் கோரி த.மு.மு.க உயர்நீதிமன்றம் நோக்கி பேரணி!

குணங்குடி அனீபா மீதான வழக்கில் உடனடியாக தீர்ப்பை வெளியிடக் கோரி த.மு.மு.க உயர்நீதிமன்றம் நோக்கி பேரணி!

E-mailPrintPDF


குணங்குடி அனீபா தொடர்பான வழக்கில் தொடர்ந்து தாமதப்படுத்தப்படும் தீர்ப்பை உடனடியாக வழங்கக் கோரியும், நீதித்துறையின் மெத்தனத்தை கண்டித்தும் உயர்நீதிமன்றம் நோக்கி பேரணி ஒன்றை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதனன்று (மே 5, 2010) நடத்தியது. பேரணியின் இறுதியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளரிடம் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான ஒரு குழு கோரிக்கை மனுவை அளித்தது.


குணங்குடி அனீபா தொடர்பான வழக்கில் தொடர்ந்து தாமதப்படுத்தப்படும் தீர்ப்பை உடனடியாக வழங்கக் கோரியும், நீதித்துறையின் மெத்தனத்தை கண்டித்தும் உயர்நீதிமன்றம் நோக்கி பேரணி ஒன்றை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதனன்று (மே 5, 2010) நடத்தியது. பேரணியின் இறுதியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளரிடம் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான ஒரு குழு கோரிக்கை மனுவை அளித்தது.

பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் மாநிலப் பொருளாளரும், த.மு.மு.கவின் நிறுவனர்களில், ஒருவருமான குணங்குடி அனீபா அவர்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 15 1998 அன்று அனுமந்தக்குடி எனும் ஊரில் தனது மகளின் திருமணத்தன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட குணங்குடி அனீபா மீது 1997, டிசம்பர் 6, அன்று தமிழகம் மற்றும் கேரளாவில் நடைபெற்ற மூன்று இரயில் குண்டு வெடிப்புகளின் சதி ஆலோசனையில் பங்கு பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீண்ட விசாரணைக்கு பின் இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கடந்த 2001 ஆம் வருடம் பூந்தமல்லி குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இரயில் குண்டு வெடிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. குணங்குடி அனீபாவுடன், இவ்வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு 1998 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் தங்களை பிணையில் விடுதலை செய்யக்கோரி குணங்குடி அனிபா தரப்பில் சிறப்பு நீதிமன்றத்திலும், உயர்நீதி மன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டு பிணை மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிணை மறுக்கப்பட்டுள்ளது உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது. ஷாஹீன் வெல்பேர் அசோஷியேசன் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றம், ''விசாரணைக் கைதிகளை ஏழு வருடங்களுக்கு மேலாக பிணை அளிக்காமல் தாமதிப்பது அரசியல் சாசன சட்டப்பிரிவு 21க்கு எதிரானது'' என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஏராளமான வழக்குகளில் விசாரணைக் கைதிகளை நீண்டகாலம் பிணை அளிக்காமல் இருப்பதைக் கண்டித்து தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து அரசுத் தரப்பிலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பிலுமான வழக்கறிஞர்களின் வாதங்களும் முடிவடைந்து விட்டன. இதையடுத்து கடந்த 31.03.2010 அன்று இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப் போவதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்தார். ஆனால் அன்றைய தேதியில் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் 7.4.2010 அன்று இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது, பின்னர் 9.4.2010, 23.4.2010 என்று தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்ட இவ்வழக்கு மீண்டும் 30.4.2010 அன்று ஒத்திவைக்கப்பட்டது.

30.4.2010 அன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று நினைத்த நேரத்தில், ''இவ்வழக்கில் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்'' என்று கூறி வரும் 10.5.2010 அன்று இவ்வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதியால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை, வழக்கறிஞர்களது வாதங்கள் அனைத்தும் முடிவுற்று இரு மாதங்கள் கழிந்த பின்பும் இவ்வழக்கில் தீர்ப்பை வழங்குவதைத் தொடர்ந்து தாமதப்படுத்துவது மிகவும் மோசமான பாதிப்பை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
உயர்நீதமன்ற பதிவாளரிடம் மனு அளித்த பின்னர் திரும்பும் தமுமுக நிர்வாகிகள்

உயர்நீதமன்ற பதிவாளரிடம் மனு அளித்த பின்னர் திரும்பும் தமுமுக நிர்வாகிகள்


இவ்வழக்கில் கடந்த 12 வருடங்களாக பிணையின்றி குணங்குடி அனிபா உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சிறையில் இருந்து வழக்காடி வருவதை நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. குறிப்பாக இவ்வழக்கில் குணங்குடி அனீபாவுக்கு எதிரான அரசுத் தரப்பு சாட்சிகள் மொத்தமே இரண்டு நபர்கள் தான். அவர்களும் பிறழ்சாட்சிகளாகி சில வருடங்களாகியும் இவ்வழக்கில் குணங்குடி, அனீபாவுக்கு தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வருகிறது. குணங்குடி அனிபா ரயில் வெடித்த குண்டுகளைத் தயாரித்தார் என்றோ அல்லது குண்டு வைத்தவர்களுக்கு உதவியாக செயல்பட்டார் என்றோ குற்றஞ்சாட்டப்படவில்லை. மாறாக குண்டு வெடிப்பு தொடர்பான சதி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார் என்பது மட்டுமே அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆகும். இதற்கு காவல்துறை தரப்பில் சாட்சிகளாக நிறுத்தப்பட்ட இருவரும் பிறழ் சாட்சியங்கள் அளித்த பிறகும் அவருக்கு பிணை மறுக்கப்பட்டு வருகிறது. இதே போன்று சதி ஆலோசனையில் ஈடுபட்டார் என்று சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயேந்திரர் சரஸ்வதி சாமிகளுக்கு வழக்கு விசாரணைத் தொடங்குவதற்கு முன்பே பிணை வழங்கப்பட்டது. ஜெயேந்திரருக்கு ஒரு நீதி, முஸ்லிம் சமுகத்தின் தலைவர் ஹனீபாவிற்கு ஒரு நீதி என்பது பாரபட்சமில்லையா?

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். எனவே நீதி மறுக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள குணங்குடி அனீபா உள்ளிட்டவர்களின் வழக்கில் உடனடியாக தீர்ப்பை அறிவிக்க கோரியும் நீதியை பெற்றுக் தரக்கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உயர்நீதிமன்றம் நோக்கி நீதி கோரும் பேரணியை நடத்தியது. த.மு.மு.க தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் துறைமுகம் தொலைப்பேசி இணைப்பகம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்றவர்கள் ராசாசி சாலையில் உள்ள இந்திய வங்கி அருகில் தடுத்து நிறுத்தப்பட்டனர், பின்னர் தமுமுக தலைவர் தலைமையில் பிரதிநிதகள் குழு சென்னை உயர;நீதிமன்றம் சென்று பதிவாளரிடம் மனு ஒன்றை சமர்பித்தனர். தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துஸ் ஸமது, பொருளாளர் எஸ்.எஸ் ஹாருன் ரஷீத் துணைப் பொதுச் செயலாளர் எம் தமீமுன் அன்சாரி உட்பட இப்பேரணியில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் அணிவகுத்தனர்.
இந்நிலையில் பேரணியின் முடிவில் கைதாவதற்கு முன் தமுமுக தலைவரின் தலைமையில் நிர்வாகிகள் குழு உயர்நீதிமன்ற பதிவாளரை நேரில் சந்தித்து விரைவான தீர்ப்பு கோரி மனு கொடுத்தது. இது சம்மந்தமாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பூந்தமல்லி விரைவு நீதிமன்ற நீதிபதி பிரேம் குமாரை நேரில் வருமாறு அழைத்திருப்பதாகவும், அப்போது இந்த மனுவை வைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விரைவான தீர்ப்பை பற்றி பேசப் போவதாகவும் பதிவாளர் தெரிவித்தார்.
LAST UPDATED ( WEDNESDAY, 05 MAY 2010 22:14 )




மே-5 பேரணி புகைப்படங்கள்

E-mailPrintPDF

மே-5 பேரணி புகைப்படங்கள்


LAST UPDATED ( WEDNESDAY, 05 MAY 2010 19:28 )

நன்றி:TMMK.IN

Friday, May 7, 2010

சேந்தையம்பட்டியில் ஆதிதிராவிடர்கள் 69 பேர்கள் இஸ்லாத்தை தழுவியது தொடர்பாக ஈ.வெ.ரா. பெரியார் ஆற்றிய உரை download

சேந்தையம்பட்டியில் ஆதிதிராவிடர்கள் 69 பேர்கள் இஸ்லாத்தை தழுவியது தொடர்பாக ஈ.வெ.ரா. பெரியார் ஆற்றிய உரை download

விடுதலைப் போரில் முஸ்லிம்கள்-(புத்தக விமர்சனம்)

E-mailPrintPDF

இந்த நூலை ஒரு முஸ்லிம் எழுத்தாளர் எழுதியிருந்தால் அதில் வியப்பு ஒன்றும் இருக்காது. திரு. வி.என். சாமி இந்த நூலை எழுதியிருப்பது சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

நூல்: விடுதலைப் போரில் முஸ்லிம்கள்

ஆசிரியர்: வி.என். சாமி

விலை: ரூ. 500

பக்கங்கள்: 1112

வெளியீடு: பாவலர் பதிப்பகம்

37, குருபக்காரன் சாலை,

மதுரை: 625 009

தொலைபேசி: 04524512250


இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும், உயிர் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொலை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம் என்றார் மூத்த பத்திரிக்கையாளர் குஷ்வந்த் சிங். ஆனால் இன்றளவிலும் முஸ்லிம்களின் தியாக மற்றும் வீர வரலாறு மறைக்கப்பட்டே வந்திருக்கின்றது.


இந்நூலாசிரியர் முஸ்லிமாக இருந்தால் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்களுக்கு சாதகமாக எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இந்நூலாசிரியர் வி.என். சாமி அவர்கள் தினமணி நாளிதழின் மூத்த செய்தியாளராக பணியாற்றியவர், நூலாசிரியர் பத்திரிக்கையாளர் என்பதால் விடுதலைப் போரில் முஸ்லிம்களின் வீர வரலாற்றை விரிவாகவும், ஆழமாகவும் தகுந்த சான்றுகளுடனும் எழுதியிருக்கிறார்.


நூலில் இருந்து சில பகுதிகள்........


குஞ்சலி மரைக்காயர்


இந்திய விடுதலைப் போரின் முன்னோடியாக திகழ்ந்த கேரளத்து குஞ்சலி மரைக்காயர், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கால் பதிப்பதற்கு முன்னர் வருகைப் புரிந்த போர்ச்சுகீசியரை விரட்ட, கடற்போரில் பல்வேறு சாகஸங்களைப் புரிந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில் சுதந்திர இந்தியாவின் போர்க் கப்பல் ஒன்றுக்கு குஞ்சலி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


ஹைதர் அலி-திப்புசுல்தான்


ஒரு சிப்பாயாக வாழ்க்கையைத் தொடங்கி மைசூர் சுல்தானக உயர்ந்து பின்னர் இந்திய மண்ணிலிருந்து ஆங்கிலேயரை விரட்ட மிகுந்த துணிச்சலுடன் போரிட்டவர். ஆனால் மராத்தியரும், நிஜாமும், ஆற்காட்டு நவாபும் துரோகமிழைத்தால் ஹைதர் அலியின் நோக்கம் நிறைவேறாமல் போனது. ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தான் தந்தை வழி நின்று தனது இறுதி மூச்சிறுக்கும் வரையிலும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவர்.


மருதநாயகம் கான்சாகிப்


இந்திய மண்ணிலிருந்து வெள்ளையரை வெளியேற்ற வேண்டும் என்னும் உறுதியுடன் விடுதலைப் போரில் ஈடுபட்டு வரலாறு படைத்தவர் மருதநாயகம் கான்சாகிப். கான்சாகிப் மதுரையில் ஆங்கிலேயரின் கொடியை பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திர பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டு துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். மதுரையை அடுத்த சம்மட்டிபுரம் என்னுமிடத்தில் 15-03-1764 அன்று கான்சாகிபை ஆங்கிலேயர் தூக்கிலிட்டனர். மூன்று நாள்கள் கழித்து அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி, தலையை திருச்சியில் புதைத்தனர். வெட்டி எடுத்த கை, கால்களைத் திருநெல்வேலி, திண்டுக்கல், நத்தம் ஆகிய ஊர்களில் புதைத்தனர். கை, கால்கள் இல்லாத உடல் மதுரையில் சம்மட்டிபுரத்தில் புதைக்கப்பட்டது.


மாப்பிள்ளைமார் கிளர்ச்சி


மாப்பிள்ளைமார்கள் செய்த புரட்சி மகத்தானதாகும். இது நாடு தழுவிய போராட்ட இல்லாவிடினும் கூட, 1857ல் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சிக்குப் பின் நடந்த மிகப் பெரிய புரட்சியாகும். கேரளத்தில் எறநாடு, வள்ளுவநாடு முதலிய மலபார் தாலுக்காகளில் இப்புரட்சி நடைபெற்றது.


இந்த கிளர்ச்சியின் போது நூற்றுக்கணக்கான மாப்பிள்ளைமார்கள் கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு கோவைக்கு அனுப்பப்பட்டனர். கூட்ஸ் வண்டியின் கதவுகள் இறுக்கமாக பூட்டப்பட்டதால் காற்றோட்டமும், வெளிச்சமும் இல்லாத நிலையில் தாகத்தாலும் மூச்சுத் திணறலாலும் சித்திரவதைப்பட்டு ஏராளமான மாப்பிள்ளைமார்கள் இறந்தனர்.


பெண் போராளிகள்


இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியப் பெண்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.

அயோத்தி மன்னர் வஸீர் அலிஷாவிடமிருந்து ஆங்கிலேயர் அயோத்தியைக் கைப்பற்றினர். அப்போது மன்னரின் மனைவி பேகம் ஹசரத் மஹல் லக்னோவில் தங்கியிருந்தார். அயோத்தியை ஆங்கிலேயர் கைப்பற்றியதை எதிர்த்து மக்களைத் திரட்டி அவர் புரட்சியில் ஈடுபட்டார். ஒன்பது மாத காலம் புரட்சியாளர்கள் பேகம் ஹசரத் மஹல் தலைமையில் ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போர் புரிந்தனர். இறுதியில் ஆங்கிலேய இராணுவத்தின் கை ஓங்கியது. பேகம் ஹசரத் மஹல் தனது மகன் பிரிஜிஸ் காதிருடன் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றார். நேபாள எல்லையில் ஆங்கிலேயர்களால் அவரும் அவரது மகனும் கொல்லப்பட்டனர்.


அபுல் கலாம் ஆசாத் மீது ஆங்கிலேய அரசு 1922ம் ஆண்டு ராஜ நிந்தனை குற்றம் சாட்டி கைது செய்தது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஒரு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.. இத்தண்டனை பற்றி ஆசாத்தின் மனைவி ஸுலைஹா பேகம் கீழ்க்கண்டவாறு காந்திஜிக்கு தந்தி அனுப்பினார்.


ஷஎன் கணவர் அபுல் கலாம் ஆசாத்திற்க நீதி மன்றம் ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனை நாங்கள் எதிர் பார்த்ததை விடக் குறைவு. தேசத் தொண்டுக்கு வழங்கப்படும் பரிசு சிறைத் தண்டனை என்றால் இப்போது வழங்கப்பட்டுள்ள ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை மிகவும் அற்பமான பரிசு|.


வள்ளல் ஹபீப்


மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை| என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.


மேலும் மரண தண்டனை பெற்ற முஸ்லிம் வீரர்கள், முஸ்லிம் பக்கிரிகள் உயர்த்திய போர்கொடி, சிப்பாய் புரட்சியில் இன்னுயிர் ஈந்தவர்கள், ஜாலியன் வாலாபாக்கில் உயிரிழந்த முஸ்லிம்கள், விடுதலைப் போரில் அலிகர் பல்கலைக் கழக மாணவர்கள், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு இன்னுயிர் ஈந்த முஹம்மது ஹபீப், உலமாக்களின் விடுதலை வேட்க்கை, விடுதலைப் போரில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள், கவிஞர்களும் கலைஞர்களும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளில் பல்வேறு புதிய தகவல்களையும் நூலாசிரியர் இணைத்திருக்கிறார். நூலில் முத்தாய்ப்பாக சிறை சென்ற தியாகிகளின் ஊர்வாரியான விவரங்கள் மற்றும் நூலின் பிற்பகுதியில்விரிவான பெயர் மற்றும் பொருட் குறிப்பகராதியும் உண்டு. கெட்டி மேப்லித்தோ தாளில் இந்நூல் அச்சிடப்பட்டுள்ளது. கட்டுரைகளுக்கேற்ப பல்வேறு கோட்டோவியங்களும் நூலில் உண்டு.


இந்நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், '80 வயதை கடந்தப் பின்பும் அவர் இன்னும் எழுதிக் கொண்டிருப்பது அவரது அற்பணிப்பு மனப்பான்மையின் வெளிப்பாடு தான். இந்த நூலை வெளியிட அவர் பட்ட சிரமங்கள் சாதாரணமானவை அல்ல. இந்த நூலை ஒரு முஸ்லிம் எழுத்தாளர் எழுதியிருந்தால் அதில் வியப்பு ஒன்றும் இருக்காது. திரு. வி.என். சாமி இந்த நூலை எழுதியிருப்பது சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வரும் வேளையில் திரு. வி.என். சாமி அவர்களின் இந்த அற்புதமான ஆய்வு நூலை இளைய தமிழகத் தலைமுறை மக்களுக்கு ஓர் ஒளி விளக்காக அமைந்துள்ளது. சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க விரும்பும் தமிழக மக்கள் என்னென்றும் திரு.வி.என். சாமிக்கு நன்றிக் கடன் பட்டுள்ளார்கள். இந்த நன்றிக் கடனின் அறிகுறியாக இந்த நூல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பரவ வேண்டும். இது பாடநூலாக அமைவதற்கு அரசு முன்வர வேண்டும்.


இந்நூல் முஸ்லிம்களின் இல்லங்கள் ஒவ்வொன்றிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று.

-ராமேஸ்வரம் ராஃபி

நன்றி:tmmk.in

அவதூறு பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் இஸ்லாத்தின் நற்செய்தி அடையாளம் காணப்படும்: யுவான் ரிட்லி


பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி

அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களைமேற்க்கொண்டாலும் இஸ்லாத்தின் அன்பு மற்றும் சமாதானத்தின் நற்செய்தி மக்களால் அடையாளம் காணப்படும் ஒரு நாள் வந்தே தீரும்என பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி கூறினார்.

கேரள மாநிலம் குற்றிப்புரம் ஸஃபா நகரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாட்டை துவக்கி வைக்கவிருந்தார் அவர். ஆனால்லண்டனில் இந்திய தூதரகம் அவருக்கு இந்தியா செல்ல விசா மறுத்ததால் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக மாநாட்டை துவக்கி வைத்துஉரையாற்றினார். "அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களைஆக்கிரமிப்புகளையும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளையும் மறைப்பதற்காகத்தான் இந்தப்பிரச்சாரத்தை மேற்க்கொள்கிறார்கள்.

ஃபலஸ்தீனில் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதற்காகவே என்னை ஏகாதிபத்திய சக்திகள்நோட்டமிடுகின்றன. ஃபலஸ்தீனிலும், ஆஃப்கானிலும், ஈராக்கிலும் கொடூரமான தாக்குதல்கள் மூலமும், கூட்டுக்கொலைகள் மூலமும்குண்டுகளை வீசுவதன் மூலமும் முஸ்லிம்களின் மீது நிரந்தரமாக ஏகாதிபத்திய சக்திகள் போரிட்டு வருகின்றன.

இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற மேற்கத்திய வாதிகளின் பொய் பிரச்சாரம் வெற்றிப்பெறாது. ஆஃப்கானிஸ்தானில்தாலிபான்களின் வசம் சிக்கிய என்னை இஸ்லாத்தை நோக்கி திருப்பியது அவர்களுடைய கண்ணியமான நடவடிக்கைகளும் சுத்தமானநிலைபாடுகளும் தான். இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்றால் தாலிபான் போராளிகள் என்னிடம் ஒருபோது கண்ணியமாகநடந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் எனது வாழ்வில் அது திருப்புமுனையும் ஆகியிருக்காது.

ஏகாதிபத்தியமும், சியோனிஷமும் தான் இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள். இவ்விரண்டு சக்திகளும் இஸ்லாத்திற்குமட்டுமல்ல விரோதிகள் மனிதர்கள் அனைவருக்குமே விரோதிகள் தான். முஸ்லிம் பெண்கள் காலக்கட்டத்தின் சவால்களைபுரிந்துக்கொண்டு களமிறங்கவேண்டும்." இவ்வாறு ரிட்லி
உரையாற்றினார்.

செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

நன்றி:http://www.islamiyadawa.com/


விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்