அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Tuesday, October 11, 2011

பெயரை மாற்றினால் சரித்திரம் மாறிவிடுமா?



ஒரு சமூகத்தை முழுமையாக அழிக்க வேண்டும் என்றால் முதலில் அந்த சமூகத்தின் வரலாற்றுத் தொடர்புகளையும் பாரம்பர்ய சின்னங்களையும் அழித்துவிட்டால் அந்த சமூகம் தொடர்பு அறுந்த சமூகமாக, முகவரி இல்லாத நாடோடி சமூகமாக மாறிப்போகும். பிறகு அந்த சமூகத்தை அழிப்பது மிகவும் எளிது. இப்படி குறிவைத்து அழிக்கப்பட்ட பல சமூகங்களின் வேதனை நிறைந்த வரலாற்று சம்பவங்களை உலக வரலாற்று ஏடுகளில் காணலாம்.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹிட்லர் மற்றும் முஸோலினியின் பாசிச நாஜி கொலைகார கூட்டம் இப்படித்தான் உலகின் பல பாகங்களிலும் தங்களது இன வெறி கொள்கைகளை நிலைநிறுத்தியது.
அத்தகைய பாசிச வெறியர்களிடம் பாடம் பயின்ற சங்பரிவார கும்பல் இந்தியாவிலும் அதுபோன்ற இனவெறி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.
சகிப்புத் தன்மைக்கு பெயர் பெற்ற இந்து மதத்தின் பெயரால் இந்த கொடுமைகளை இவர்கள் நடத்துவது தான் மிகப்பெரிய அக்கிரமம். அதனால் தான் இந்து மதத்தில் உள்ளவர்களின் 1 சதவீத ஆதரவைக் கூட இவர்களால் பெற இயலவில்லை. இந்து மக்களாலேயே புறக்கணிக்கப்பட்ட இந்த சங்பரிவார், அந்த மதத்தின் பெயரை பயன்படுத்தி இனவெறி, மதவெறியை தூண்டுகின்றனர்.
இதுபோன்ற மனிதவிரோத வேலைகளை இவர்கள் தொடர்ந்து செய்வதற்கு ஏற்ற இடமாக மோடி ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் கிடைத்திருக்கிறது. மோடியின் அட்டூழியங்களை நாம் நினைவுபடுத்த தேவையில்லை. காரணம் அந்த கொடூர கொலைகள்
எல்லாம் நல்லோர்கள், நடுநிலையாளர்கள் நெஞ்சை விட்டு என்றைக்கும் மறையப் போவதில்லை.
இன அழிப்பு தொடர்கிறது மோடியின் காட்டுமிராண்டி ஆட்சியில்.
தற்போது குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் என்ற 600 ஆண்டு வரலாற்றுப் பெயரை ஒரே இரவில் அம்தாபாத் என்று அரசின் அத்துனை அறிவிப்பு ஏடுகள் மற்றும் பெயர் பலகைகளிலும் மாற்றி தனது நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கும் முஸ்லிம் விரோத எண்ணத்திற்கு மேலும் தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்.
கி.பி. 1411 இல் முஸ்லிம் மன்னர் அகமது ஷா அவர்களால் உருவாக்கப்பட்ட நகரம் தான் அகமதாபாத். இன்றைக்கு இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் ஜவுளி தயாரிப்பிற்கு உலகளவில் பெயர் பெற்ற நகரமாக விளங்குகிறது.
அகமதாபாத் மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காடு மக்கள் முஸ்லிம்கள். மேலும் தேசத் தந்தை காந்தியடிகளின் சபர்மதி ஆஸ்ரமம் அகமதாபாத்தில் தான் உள்ளது. அகமதாபாத் என்ற முஸ்லிம் பெயரை மாற்றிட வேண்டி தேசவிரோத சக்திகள் பல முறை முயன்றும் முடியவில்லை. தற்போது ஒரே இரவில் மோடியின் கைங்கர்யத்தால் மாநகராட்சியின் பதிவேடுகளும் மாற்றப்பட்டுள்ளன. இதை குஜராத்திலிருந்து வெளிவரும் எந்த பத்திரிகைகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் காவியில் கலந்து சங்கமமாகிவிட்டன.
இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி, நிர்வாகமுறை, அவர்களின் தியாகம் போன்ற வரலாற்று உண்மை நிகழ்வுகளை பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த வரலாற்று ஏடுகள் அனைத்தையும் வெள்ளையர்கள் ஆட்சியில் அடியோடு தீவைத்துக் கொளுத்தினர். உண்மைச் செய்திகள் அடுத்தடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். பிறகு வெள்ளையர்களே அன்றைய சங்பரிவார் துணை கொண்டு முஸ்லிம் மன்னர்களைப் பற்றி கட்டுக்கதைகளை வரலாறு என்ற பெயரில் எழுதி வைத்தனர். அவற்றைதான் இன்றைய வரலாற்றுப் பாடங்களில் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்றனர்.
இவற்றை மாற்றி உண்மையான செய்திகளை தெரிந்து கொள்வதில், அவற்றை தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில் முஸ்லிம்கள் போன்ற இன மத ரீதியான சிறுபான்மை சமூகம் என்றைக்கு ஆர்வம் காட்டுகிறதோ, அவற்றை நிலைநிறுத்துவதற்கு என்றைக்கு போராட துணிகிறதோ அதுவரையிலும் இது போன்ற அநியாயக்காரர்களின் ஆட்டூழியங்கள் இந்நாட்டில் தொடரத் தான் செய்யும். சட்டத்தால் எல்லாம் இவர்களை ஒன்றும் செய்துவிட இயலாது.

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்