அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Wednesday, November 16, 2011

மாலேகான் குண்டுவெடிப்பு- 5 வருட சிறைவாசத்திற்குப் பின்னர் 7 குற்றவாளிகள் இன்று விடுதலை


சமநிலை சமுதாயத்தின் சகோதரர்களே ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து விடலாம் ஆனால் ஒரு நிரபராதிகள் கூட தண்டிக்கப் பட கூடாது என்று என்று சொன்ன காந்தியடிகள் பிறந்த மண்ணில்தான் நாம் இருக்கின்றோமா என்று என்ன தோன்றுகின்றது எந்த வித குற்றமும் செய்யாமல் ஐந்து வருடம் சிறை வாசம் அனுபவித்துவிட்டு இன்று ஏழு பேர் ஜாமீனில் வெளிவந்து உள்ளனர். ஐந்து வருடத்திற்கு பிறகு இவர்கள் அப்பாவிகள் என்றும்,ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த சாமியார்  அசிமானந்த் உள்ளிட்டோருக்குத்தான் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது. எனவே அவர்களையே தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று
சிபிஐ பரிந்துரைத்து உள்ளது. சரி ஐந்து வருடகாலம் பிறந்த கை குழந்தையை விட்டு விட்டு போன வேதனைக்கு யார் பதில் சொல்வது,இழந்த மான மரியாதையை யார் திருப்பி தருவது தங்கள் மேல் விழுந்து சமூகத்தின் கேவலமான பார்வைக்கு யார் பதில் சொல்வது என்று இவர்கள் மனம் துடிக்காதா?

 இது போன்ற அவல நிலைகள் இனியும் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்றால் ஒரு சமூகத்தின்(இஸ்லாம்) மீது தவறுதலான கருத்தியலை பதியவைத்து கொண்டு எங்கே குண்டு வெடிப்பு நடந்தாலும் இந்த சமூகத்தில் இருந்து நான்கு பேரை கைது செய்வது அதுவும் சம்பவம் நடந்த சில மணி நேரங்களில். பிறகு யாரோ ஒருவர் அனுப்பிய ஒரு மின் அஞ்சலை வைத்து கொண்டு இந்த இஸ்லாமிய அமைப்பு இதற்கு பொறுப்பு ஏற்றுகொண்டது என்று ஊடகத்துறைக்கு அறிக்கை விடுவது இது போன்று இல்லாமல் அரசுத்துறையும் ஊடகத்துறையும் சமூப் பொறுப்போடு நடந்து திறந்த மனதோடு குற்றத்தின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராய்ந்து உண்மை குற்றவாளிகளை அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி எவ்வளவு பெரிய பதிவியில் இருந்தாலும் சரி அவர்கள் தண்டிக்க பட வேண்டும்.
அப்பொழுதுதான் மக்களின் மனதில் நம்பிக்கை கீற்றை பதிக்க முடியும்.
 இனியாவது யோசிக்குமா அரசுத்துறையும் ஊடகத்துறையும்?
கீழே இது தொடர்பாக தட்ஸ்தமிழ் இணையத்தில் வெளிவந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரில் 7 பேர் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 5 வருட சிறைவாசத்திற்குப் பின்னர் அவர்கள் வெளியே வந்துள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மாலேகானைச் சேர்ந்த நூர் உல் ஹூடா ஷம்சுதிஹோ அன்சாரி, ஷபீர் அகமது மசியுல்லா, ரயீஸ் அகமது, டாக்டர் சல்மான் பார்சி, டாக்டர் பரூக் மக்தூமி, முகம்மது அலி, முகம்மது ஜாஹித், ஆசிப் பஷீர் கான், அப்ரார் அகமது சயீத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சிமி அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 5 வருடமாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த சாமியார் அசிமானந்த் கைது செய்யப்பட்டது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வலது சாரி தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ மீண்டும் புலனாய்வு செய்தது.

இதைத் தொடர்ந்து என்ஐஏவுக்கு அது ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் அப்பாவிகள். அவர்களுக்குப் பதிலாக இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட அசிமானந்த் உள்ளிட்டோருக்குத்தான் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது. எனவே அவர்களையே தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்தது.

இதையடுத்து 9 பேரும் ஜாமீன் கோரி இந்த மாத தொடக்கத்தில் மனு செய்தனர். அதற்கு என்ஐஏ ஆட்சேபிக்கவில்லை.

இதையடுத்து அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. இருப்பினும் 9 பேரில் முகம்மது அலி மற்றும் ஆசிப் கான் ஆகியோருக்கு 2006ம் ஆண்டு நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக வழக்கு உள்ளதால் அவர்களுக்கு மட்டும் விடுதலை கிடைக்கவில்லை.

ஜாமீன் வழங்கப்பட்ட 7 பேரும் இன்று சிறையிலிருந்து வெளியே வந்தனர். அவர்களை அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். அவர்களில் ஒருவரான டாக்டர் மக்தூமி, சிறைக்குப் போனபோது அவரது குழந்தைகளுக்கு மிகவும் சிறிய வயது. கடந்த 5 வருடங்களாக அவர்கள் தந்தையைக் காண முடியாமல் தவித்துப் போயிருந்ததாக மக்தூமின் மனைவி தெரிவித்தார்.

அதேபோல இன்னொரு டாக்டரான சல்மான் பார்சியின் மனைவி நபீசா அன்சாரி கூறுகையில், எனது கணவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் அக்கம்பக்கத்தினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானோம். அந்த அவமானத்தை சொல்லில் சொல்ல முடியாது. இப்போது நீதி கிடைத்துள்ளது. அனைவரின் கேள்விகளுக்கும் பதிலும் கிடைத்துள்ளது. இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறோம் என்றார்.

தற்போது விடுதலையாகியுள்ள 7 பேரும், தலா ரூ. 50,000 ரொக்க ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். இவர்கள் வெளிநாடுகளுக்குப் போகக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.


நன்றி:thatstamil.oneindia.in

http://tamil.oneindia.in/news/2011/11/16/malegaon-blasts-case-after-five-years-in-jail-aid0091.html

Friday, November 11, 2011

ஈரான், வெனிசூலா, கியூபா, பாகிஸ்தான்...


தலைப்பில் என்ன வேடிக்கை என பார்க்கிறீர்களா? இரு வாரங்களாக தெற்கு ஆசிய நிகழ்வை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் தலைப்பின் பொருள் புரியும்.

அமெரிக்கா தொடர்ந்து மூக்கறு படும் நேரம் இது.. ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்து கோரும் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தனித்து விடப்பட்டது. அமெரிக்க & இஸ்ரேலிய நிலைபாட்டுக்கு மிகக்குறைந்த அளவே ஆதரவு கிடைத்தது. அது முதல் அதிர்ச்சி.


அமெரிக்காவின் தீவிர ஆதரவாளரான, அமெரிக்க கொள்கை முரசு அண்ணன் மன்மோகன்சிங் ஐ.நா.வில் வைத்து அமெரிக்காவைக் காய்ச்சி எடுத்தார். பாலஸ்தீன விஷயத்தில் ஆதரவு தெரிவித்ததோடு ஆப்கா னிஸ்தான், இராக் மற்றும் லிபியா விவகாரத்தில் பெயர் குறிப்பிடாமல் அமெரிக்காவை பிளந்து கட்டினார். அது அமெரிக் காவுக்கு மற்றுமொரு அதிர்ச்சி.


இந்த இரண்டு அதிர்ச்சிகளையும் விட அமெரிக்கா சந்தித்த மிகப்பெரிய அதிர்ச்சி நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டதுதான். இந்த அதிரடி, முன்கூறப்பட்டவைகளை விட கூடுதல் வாட்ஸ் அதிர்ச்சி களை அமெரிக்காவுக்கு வழங்கியது.

ஆப்கானிஸ்தானில் செயல்படும் 'ஹக்கானி நெட்வொர்க்' என்ற பெயரில் செயல்படும் கிளர்ச்சிக் குழுக்களை வளர்த்து விடுவதே பாகிஸ்தான் தான் என அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி மேக் முல்லன் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து சுடச்சுட பதிலடி கிடைத்தது.

அது என்ன ஹக்கானி டெரரிஸ்ட் குரூப். அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திக ளின் இலக்கணப்படி உள்நாட்டில் உதித்த போராளிகள் அந்த மண்ணுக்காகப் போராடி வரும் குழுக்கள் தீவிரவாத அமைப்புகள் என்றும் ஆனால் மேற்கு நாடுகளில் இருந்து படையெடுத்து ஆக்கிரமிக்கும் படைகள் அங்கு எத்தனை அராஜகங்கள் நடத்தினாலும் அது தீவிரவாதம் இல்லை; ஜனநாயக மீட்பர்கள் என்ற கேனத்தன வாதம் அமெரிக்க அடிவருடி ஊடகங்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் காமெடிக் காட்சிகள் ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட பதிலடி அமெரிக்கால் வெகு காலத்திற்கு மறக்க முடியாது என்பது உண்மை.


ஆப்கானிஸ்தானில் ஹக்கானி அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தொடர்ந்து உதவி வருகிறது. அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியது. இதற்கு பதில் அளித்த ஹீனா ரப்பானி, அமெரிக்காவை கடுமையாக விமர்சிக்கும் ஈரான், வெனிசூலா, கியூபா நாடுகளின் தலைவர்கள் பிரயோகிக்கும் வாசகங்களைப் போல கடுமையான வாசகங்களை அமெரிக்காவுக்கு எதிராகப் பிரயோகித்தார்.


அதாவது ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்த போது சோவியத்துக்கு எதிராக அமெரிக்கா முஜாஹிதீன்களை வளர்த்துவிட்டது. உண்மையில் ஹக்கானி நெட்வொர்க்கை வளர்த் தது பாகிஸ்தானா? அமெரிக் காவா-? என்று ஹீனா ரப்பானி ஆவேசமாக கேட்டார். ஹக்கானி நெட்வொர்க்கை உருவாக்கியது அமெரிக்கா தான் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது பாகிஸ்தானிடம் இருந்து அமெரிக்கா எதிர்பார்க்காதது.

பாகிஸ்தான் உறவை அமெரிக்கா முறித்துக் கொள் வதால் பாகிஸ்தானுக்கு ஒன்றும் இழப்பில்லை; அமெரிக்கா பெரும் இழப்பை சந்திக்க வேண்டி யதிருக்கும் என போட்டுத் தாக்கி னார்.

அமெரிக்கா, பாகிஸ்தானின் பொறுமையை அளவுக்கு மீறி சோதித்துப் பார்க்கிறது. அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்; எங்களை மீண்டும் மீண்டும் சீண்டினால் பேச்சுவார்த்தைகளை படிப்படியாக குறைத்துக் கொள்வோம் என்றும் அதிரடியாக ஹீனா ரப்பானி கொளுத்திப் போட்ட பட்டாசு அமெரிக்காவை ஆத்திரம்கொள்ள வைக்கும் அளவில் இருந்தது.

உலகிலேயே தீவிரவாத அமைப் புகளுடன் அதிக தொடர்புள்ள ஒரே அமைப்பு அமெரிக்காவின் சி.ஐ.எ என்றும் அவர் குற்றம் சாட்டினார்.அமெரிக்கா ஒரே ஒரு செப்டம்பர் 11 தாக்குதலை மட்டுமே சந்தித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் செப்டம்பர் 11 தாக்குதல்களைப் போல இதுவரை 311 தாக்குதல்களை சந்தித்துள்ளது.


பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு அமெரிக்க பாகிஸ்தான் உறவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, அமெரிக்கா தரப்பில் பதிலடி எதுவும் அறிவிக்கப்படாத நிலை யில் பாகிஸ்தானில் தொடர்ந்து அதிரடி காட்சிகள் அரங்கேறியுள் ளன.


பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீனா ரப்பானியின் கருத்துக்கள் பாகிஸ்தான் ஆள் வோரின் சொந்தக் கருத்தாக இருக்க முடியாது. பாகிஸ்தானாவது அமெரிக்காவை முறைத்துக் கொள்வதாவது? இளம் கன்று பயம் அறியாது என்பதைப்போல இளம் அமைச்சர் அதீத உற்சாகத்தில் அமெரிக்காவை வம்புக்கு இழுத்திருக்கிறார். அவரது இந்த ஆர்வக்கோளாறு செயலுக்காக பிரதமர் யூசுப் ரசா கிலானியிடம் செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்டார் தெரியுமா? என்கிற பாணியில் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக உலகெங்கும் உள்ள அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் (நம் தமிழ்நாட்டு ஊடகங்கள் உள்பட) பல ஊடகங் கள் மேற்குறிப்பிட்ட கற்பனைக் காட்சிகளை பரப்ப முயன்றன.இதனை உலகம் நம்பத்தான் வேண்டும் என சர்வதேச சமூகம் எண்ணிய வேளையில் அடுத்த அதிரடிக் காட்சி பாகிஸ்தானில் அரங்கேறியது.

சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் மெங் ஜியாங் ஜூ கடந்த வாரம் பாகிஸ்தான் விஜயம் செய்திருந்தார். சீன அமைச்சருக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப்ரசா கிலானி ஆற்றிய வரவேற்புரையிலும் அமெரிக் காவை வெறுப்பு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.

சீன நட்பு மலைகளை விட உயரமானது; கடலை விட ஆழமானது; இரும்பை விட வலுவானது; தேனைவிட இனிமையானது என தெரிவித்தார். அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகளின் நண்பராக கருதப்படும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், ‘‘சீனாவின் நண்பர்கள் எமக்கு நண்பர்கள்; சீனாவின் எதிரிகள் எங்களுக்கும் எதிரிகள்’’ என்றார்.

ரஹ்மான் மாலிக்கின் இந்தக் கூற்று அமெரிக்காவை நிச்சயம் அதிர்ச்சியில் மூழ்கடித்திருக்கும். பாகிஸ்தான் மக்கள் பொதுவாக ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் ஏகாதிபத்திய சக்திகள் பாகிஸ்தானின் சில பொம்மை அரசியல் சக்திகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஆட்சிகளை கைப்பற்றி உலக வரைபடத்தை தப்பும் தவறுமாக மாற்ற முயன்றது. அதில் கடந்த 60 ஆண்டுகளாக வெற்றியும் பெற்ற அமெரிக்கா, தற்போது தோல்விப் பள்ளத்தாக்கில் துவழ்கிறது.

பாகிஸ்தானுக்கு முன்பாகவே இந்திய மக்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளுமே அமெரிக்க எதிர்ப்பை உரம்போட்டு வளர்த்த கட்சிகள் என்பது மிகையல்ல.கடந்த சில ஆண்டுகளாக தீவிர அமெரிக்க ஆதரவுப் படையின் கொள்கை சிங்கமாக(?) கருதப்பட்ட மன்மோகன் சிங் & ஐநாவில் கர்ஜித்த கர்ஜனைகள் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய பாகிஸ் தான் நாடுகள் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக அணிசேர்ந் தால் தெற்காசிய பிராந்தியத்தில் புதியதொரு மாற்றம் ஏற்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும் ஏகாதிபத்திய சக்திக்கு எதிரான பாகிஸ்தானின் சீற்றம் அந்நாட்டை ஈரான், வெனிசூலா நாடுகளின் வரிசையில் எதிர்காலத்தில் இடம்பெறச் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு பாராட்டி வைப்போம்.


நன்றி:http://tmmk.info

Tuesday, November 8, 2011

ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம் : ஆதார் அடையாள அட்டை!

! இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.

 27.10.2011 முதல் தலமை தபால் நிலையத்தில் மட்டும் உங்கள் அப்ளிகேஷனைபுர்த்தி செய்து, உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, புகைப்படம் எடுத்த பிறகு உங்களுக்கு தற்காலிக ஐடி கொடுப்பார்கள். 30 - 60 நாட்களுக்குள் வீட்டுக்கு உங்களுக்கு ஒரிஜினல் கார்டு கிடைக்கும். உங்களுடைய கார்டு ஸ்டெட்டஸை ஆன்லைன் மூலம் உங்களிடம் ஒருக்கும் தற்காலிக ஐடி மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்க்கு கட்டணம் ஒன்றும் கிடையாது. இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இனைக்கபடும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. இதை வைத்து நேபாலுக்கு கூட பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்.

 நவம்பர் 21-ம் தேதி முதல் 31 மாவட்டங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கவுள்ளது.

 கார்டு பெற அப்ளிகேஷனை இங்கு டவுன்லோடு செய்யலாம். -
http://uidai.gov.in/images/FrontPageUpdates/uid_download/enrolmentform.pdf கார்டு பெற

தேவையான டாகுமென்ட்ஸ் இங்கு பார்த்து தெரிந்து கொள்ளலாம். -http://uidai.gov.in/images/FrontPageUpdates/proof_of_identity_documents_supported.pdf

நன்றி:http://www.athikkadai.co.cc

Saturday, November 5, 2011

இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்



அஸ்ஸலாமு அலைக்கும்
 பிரிவினை நீங்கி ஓரணியில் இந்த சமுதாயத்தை அல்லாஹ் ஒன்று சேர்ப்பானாக 
நமது சிந்தைகள் தெளிவு பெறட்டும் 
சீர்திருத்தங்கள் மலரட்டும் 
இயக்கம், கொள்கை, என்று பிரிந்து நிற்காமல் 
இஸ்லாத்தை நெஞ்சில் வைத்து, 
இறை  அச்சத்தை உயிரில் கலந்து,
இன்றே இணைந்திடுவோம், ஓரணியில் திறன்டிடுவோம்
இம் மண்ணுலகின் மாந்தர்களை மகிழ்வோடு வைத்திருக்க 
இஸ்லாத்தின் கொள்கைகளை இயல்பாக கொடுத்திடுவோம் 
இறை தூதர் போதனையை வாழ்வோடு கலந்திடுவோம் 
வறுமை நீங்கி, நோய் நொடி இல்லாத, இறை அச்சமும் சமுதாய சிந்தனையும் நிறைந்த 
நல்லதோர் வாழ்வை அல்லாஹ் 
நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ஆமீன்
அனைவருக்கும் நாச்சியார்கோவில் முஸ்லிம் ஜமாத்தின் 
இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்


Thursday, November 3, 2011

ஈமானியப் பலஹீனத்தின் வெளிப்பாடுகள்

அளவில்லா கருணையும் இணை இல்லா கிருபையும் உடைய அல்லாஹ் வின் திரு பெயரால் ஆரம்பம் செய்கின்றேன், எல்லாப் புகழும் அல்லாஹுவுக்கே உரித்தானவை, இன்னும் ரசூலே கரீம் சல்லல்லாஹு அலைஹிவசலம் அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும், இன்னும் அவர்களைப் பின்பற்றிய அனைவர் மீதும் உண்டாவதாக, ஆமீன் என்று கூறி என்னுடைய சிறிய தொகுப்பை தருகிறேன், இன்ஷா அல்லாஹ்…

 முதலில் நம்முடைய ஈமானின் நிலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.. 

 தொழுகையிலும் சரி, அல்லாஹ்வின் திருமறையை ஓதுவதிலும் சரி, சஹாபாக்கள் உணர்ந்த சுவையையும் லயிப்பையும் நாம் எப்போதாவது உணர்ந்த்திருக்கின்றோமா? நம்மில் மிக குறைவானவர்கள் சில நேரத்தில் உணர்ந்திருக்கலாம். ஆனால், இதுபோன்ற கதைகளைக் கேட்டுப் பூரித்துப் போனதைத் தவிர வேறெதையும் காணாதவர்கள் தான் அதிகம்

 நாம் தொழுகின்றோம், நோன்பு நோற்கின்றோம், தானம் செய்கின்றோம், ஹஜ் செல்கின்றோம் , சஹாபாக்கள் செய்த எல்லா இபாதத்களிலும் ஈடுபடுகின்றோம். ஆனால், அவர்களது இபாதத்துகளில் காணப்பட்ட ஈரத்தை, பசுமையை நாம் காண்பதில்லை.

 நாம் குடும்ப வாழ்கை மேற்கொள்கிறோம். கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றோம். சமூக உறவுகளில் ஈடுபடுகின்றோம். ஆனால், இவற்றை செயல்படுத்துகின்ற போது சஹாபாகளில் காணப்பட்ட அழகையும் நேர்மையையும் நம்மிடம் காண முடியவில்லை.

 இப்னு மசூத்(ரலி) அவர்கள் தனது மாணவர்களைப் பார்த்துக் கூறினார்: சஹாபாக்களை விடவும் நீங்கள் அதிகமாக தொழுகையில் ஈடுபடுகின்றீர்கள், நோன்பு நோர்கின்றீர்கள், ஆனால் அவர்கள் உங்களை விட சிறந்து காணப்பட்டார்கள். காரணத்தை வினவியபோது, அவர்கள் உங்களை விடவும் உலகில் பற்றற்றவர்களாக இருந்தார்கள். உங்களை விடவும் மறுமையில் ஆசை வைத்தவர்களாக இருந்தார்கள் என்றார்கள்.

 அபூ பக்கர்(ரலி) அவர்களைப் பற்றி சில சலபுகள் கூறுகின்றபொழுது, அபூ பக்கர்(ரலி) அவர்கள் அதிகமாக தொழுகையாலும் நோன்பாலும் எங்களை மிகைக்கவில்லை. மாறாக அவரது உள்ளத்தில் ஆழப் பதிந்த ஈமானால்தான் எங்களை மிகைதிருந்தார் என்றனர்.

 எனவே புறச் செயல்களில் பெரிய வேறுபாடு காணப்படாவிட்டாலும் அகச் செயல்களில் வேறுபாடு இருந்திருக்கிறது. அவர்கள் இபாதத்தையும் சரி குடும்ப வாழ்கையையும் சரி சமூக வாழ்கையையும் வியாபாரத்திலும் சரி சுவைத்துச் செய்துருக்கிரார்கள். அதில் அழகும் நேர்மையும் பிரதிபலித்திருகிறது….

 சகோதரர்களே இங்கே நம்முடைய நிலையை அலசி பார்க்க வேண்டும்…

 ஈமானியப் பலஹீனத்தின் வெளிப்பாடுகள் சில 

 ஒருவனது செயல்களை வைத்து அவனது ஈமானின் பலம் பலஹீனம் பற்றி அளவிட முடியும். ஈமான் பலஹீனமடையும் போது, அதன் வளிப்பாடுகள் எவ்வாறு இருக்க முடியும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்… 

 இபாதத்களை அதற்குரிய வடிவில் நிறைவேற்றுவதில் கவனக் குறைவாக இருப்பார். ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாகியே வருவார் அல்லது ஜமாஅத்திற்கு வரவே மாட்டார். சில சமயம் பள்ளிவாசலுக்கு வரமாட்டார். தொழுகைகளிலும் பல எண்ணங்களுடனேயே இருப்பார். இமாம் ஸலாம் கொடுத்தவுடன் தான் சுய நினைவுக்கு வருவார். 

 சுபஹ் தொழுகைக்கு உரிய நேரத்தில் எழ மாட்டார். சூரியன் உதித்த பின் எழுந்து கொண்டாலும் அதற்காக கொஞ்சமும் கவலைப்படாமல் சாதாரணமாகவே தனது கடமைகளைச் செய்து கொண்டிருப்பார்.. 

 ஜும்ஆத் தொழுகைக்கு இமாம் மிம்பரில் ஏறிய பிறகே போவார். அல்லது தொழுகைக்காக தக்பீர் கட்டும் நேரத்தில் அவசரமாகப் போய் இணைந்து கொள்வார். நேர காலத்துடன் போனாலும் குத்பாவைக் கேட்பதை விட்டு நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பார்.. சுன்னத்தான அமல்களில் ஈடுபாடு காட்ட மாட்டார். அவற்றை விடுவது குற்றமில்லை என இருந்துவிடுவார். கியாமுல் லைல், ழுஹா போன்ற தொழுகையையோ, சுன்னத்தான ஒரு நோன்பு நோர்பதையோ காணவே முடியாதிருக்கும்.. 

 அல்லாஹ்வின் திருமறை ஓதுவதைக் காணமுடியாதிருக்கும். அப்படியே ஓதினாலும் நாவால் மட்டும் தான் உள்ளத்தில் எந்தவிதப் பாதிப்பும் இருக்காது. சந்தர்ப்ப துஆக்கள் ஒதுபவராக அவரைக் காணமுடியாது. அல்லாஹ் விடத்தில் கையேந்தி துஆக் கேட்கும் பண்பு இருக்காது.

 ஈமான் பலஹீனப்படும்போது இவற்றையும் இன்னும் பலவற்றையும் காணலாம். தனிமனிதன் , சமூகம், அரசு எல்லாவற்றிலும் இதன் பாதிப்புகள் இருக்கும். தனிமனிதனோ, சமூகமோ, அரசோ வீழ்வதற்கு இதுவே காரணமாக இருக்கும். 

 புகழ் அனைத்தும் அல்லாஹுவுக்கு உரியது, பிழைகள் எதுவும் இருந்தால் அல்லாஹ் என்னை மன்னிபானாக என்று தொகுத்து என்னுடைய இந்த தொகுப்பை நிறைவு செய்கிறேன்..

 நன்றி அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் சமத் (நளீமி)

நன்றி:readislam.net

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்