அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, January 7, 2016

நபிகளாரை நேசிப்பதன் அவசியம்

இஸ்லாமிய கருத்தரங்கம்
நாள்: வெள்ளி 01-01-2016
மவ்லவி முஹம்மத் நூஹ் அல்தாஃபி
அழைப்பாளர் – தமிழ்நாடு
தலைப்பு: நபிகளாரை நேசிப்பதன் அவசியம்


நிகழ்ச்சி ஏற்பாடு:
ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம்
மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா


Download mp3 audio | Listen mp3 audio

நன்றி www.islamkalvi.com

Thursday, December 17, 2015

நபிதினம் நபிவழியா?


 December 30, 2014வீடியோ ஆடியோரபிவுல் அவ்வல்பித்அத் சட்டம் 1 Comment 981 Views

24-01-2013 வியாழன் பூஷகிர் மஸ்ஜிதில் (பஹ்ரைன்) நடைபெற்ற நபி தினம் நபி வழியா? என்ற தலைப்பில் மவ்லவி.மன்சூர் மதனி அவர்கள் ஆற்றிய உரை.
மீலாது விழா கொண்டாடுவது நபி வழியா? மீலாது விழா யாரால் உருவாக்கப்பட்டது? அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? இதன் இஸ்லாமிய சட்டம் என்ன? இது போன்ற விழாக்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் என்ன கூறியுள்ளார்கள்?
நபியை எவ்வாறு புகழ்வது? நபியை நேசிப்பதன் இலக்கணம் என்ன? நபியை நேசிப்பவர்களின் அடையாளங்கள் என்ன? மவ்லிதுப் பாடல்கள் உண்மையிலேயே நபி நேசத்தின் வெளிப்பாடா? முதலான விசயங்களில் விளக்கமான மற்றும் அறிவார்ந்த கருத்துக்கள். குர்ஆன் சுன்னா ஆதாரத்துடன் கருத்துச் செறிவுகள் நிறைந்த சொற்பொழிவு. இதை அனைவரும் அவசியம் காண்பதுடன் இந்தச் செய்தியை முஸ்லிம் சமுதாயத்திடம் கொண்டுச் சேர்க்க வேண்டிக் கொள்கிறோம்.
மிக்க அன்புடன்
தமிழ் அழைப்புக்குழு, பஹ்ரைன்.


Download mp4 HD Video Size: 570 MB
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

நன்றி :www.islamkalvi.com 

அஸ்ஸலாமு அலைக்கும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே

அஸ்ஸலாமு அலைக்கும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே 

நடுநிலை சமூகத்தின் அன்பிற்கு இனிய வாசகர்களே கடந்த ஓர் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இணயதளத்தில்  சரிவர பதிவுகளை செய்ய முடியவில்லை இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் தொடர்ச்சியான பதிவுகளை தர முயற்ச்சி  செய்கின்றோம்.

பதிவுகளில் உள்ள நிறைகுறைகளை nkvl2010@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், மற்றும் சமூகத்திற்கு பயன் தரும் பதிவுகள் வாசககர்களிடம் இருந்து வரவேற்க படுகின்றது, உங்களிடம் உள்ள பதிவுகளை மேற்குறிப்பிட்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் 

Friday, July 11, 2014

பிரார்த்தனையே நமது ஆயுதம்.



அஸ்ஸலாமு அலைக்கும் 

கொஞ்சம் நேரம் ஒதுக்கி படித்து விட்டு துவா செய்யவும் 

பிரார்த்தனையே நமது ஆயுதம். 

சகோதரர்களே உலகத்திலே மனித உரிமை மீறல் எங்கு நடந்தாலும், அது ஈராக்காக இருந்தாலும் சரி. இலங்கையாக இருந்தாலும் சரி மதம் இனம் வேறு பாடு பார்க்காமல் முதல் வரிசையில் நின்று குரல் கொடுக்கும் இஸ்லாமிய சமூகமே, இன்று பாலஸ்தீனத்திலும், ஈராக்கிலும், குழந்தைகளும் வயதானவர்களும் அப்பாவி பொது மக்களும் கொத்து கொத்தாக செத்து மடிந்து கொண்டு இருக்கின்றனரே!

இந்த கொடுமையை தட்டிக்கேட்காமல் இங்கே உள்ள வைக்கோவும் ராமதாசும் மற்றும் இங்கு இருக்கும் திராவிட கட்சிகளும் கை கட்டி வாய் பொத்தி நிற்கின்றனரே!
இந்த தலைவர்களும், இந்த மனித உரிமை மீறலை கண்டித்து அவர்கள் சார்ந்து இருக்கும் கட்சிகளும் ஒரு சிறு ஆர்ப்பாட்டத்தை கூட நடத்த வில்லையே, 

இப்போது தெரிகின்றதா இவர்களின் உண்மை முகம், இவர்களுக்கு மனித உரிமை மீறல் குறித்து கவலை இல்லை, அது எந்த இனத்திற்கு, எந்த மதத்திற்கு எதிராக நடகின்றது என்பதை வைத்துதான் இவர்கள் குரல் கொடுப்பார்கள், 

யாருக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் எப்போது கொடுத்தால் ஒட்டு வேட்டையை நடத்த முடியும் என்று வாக்கு வங்கியை மையமாக வைத்தே இவர்கள் எதிர்ப்பும் ஆதரவும் இருக்கும்.

இனியும் இவர்கள் பின்னால் நாம் அணிதிரண்டால் ஏமாற்றமே மிஞ்சும்,

இறைவன் ஒருவனே துணை நமக்கு,

எனவே இரவு நேர தொளுகையுளும், நோன்பு திறக்கும் முன்பும், இந்த கொடுமையாளர்களுக்கு தண்டனை கொடுக்க, இவர்களை தட்டிகேட்க யா அல்லாஹ் உன்னை அன்றி வேறு நாதி இன்றி நிற்கின்றோம், எங்களுக்கு மன உறுதியையும் எதிர்த்து போராடும் வல்லமையும் தா யா அல்லாஹ் என்று துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக அல்லாஹ் நமக்கு துணை புரிவான்

Friday, June 6, 2014

வேண்டியது விவேகமே! வேகம் அல்ல!




அஸ்ஸலாமு அலைக்கும் 
புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே 

சமீப காலமாக நமது சகோதரர்கள் இந்த முக நூல் பக்கங்களில்  தெரிந்தும் தெரியாமலும் பாசிச எதிர்ப்பு என்கின்ற பெயரில் தமது கருத்துக்களை மிகவும் காட்டமாக அல்லது மிகவும் வன்முறையை வாசகங்களில் பயன் படுத்துவதும், வழக்கமாக உள்ளது இது என்ன பலனை தரும் என்பதை நீங்கள் அறிய வில்லையா..

இதற்கு மிகபெரிய எடுத்துகாட்டாக லக்னோவில் நடைபெற்ற சம்பவம் மிக சிறந்த எட்த்துக்காட்டு ஒரு தனி மனிதர் ஒருசமூகத்தின்  தலைவராக உள்ள ஒருவரை தவறுதலாக சித்தரித்தார் என்பதற்காக, அவர் பாதிக்கப் பட்டது மட்டுமல்லாது அவர் சார்ந்து இருக்கும் சமூகமும் பாதிக்க பட்டது 

6:108   وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ ۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَىٰ رَبِّهِم مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ
6:108அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.

இது திருமறை வசனம் 

எந்த விசயத்திற்கும் அதற்கு நிகரான எதிர்விசை கண்டிப்பாக இருக்கும்.என்பதையே மேலே உள்ள திரு குரான் வசனம் கூறுகின்றது,

 எனவே நமது சகோதரர்கள் ஆத்திரம் கொண்டு வார்த்தைகளை  அள்ளி கொட்டுவதும், அவசரம் காட்டவும் வேண்டாம்.நாம் ஆத்திரப்பட்டு நாம் செய்யும் செயல்களால் சமூகத்திற்கு ஏற்படும் இழப்பை நம்மால் சரி செய்ய முடியுமா யோசித்து பாருங்கள்,

நாம் வெளிபடுத்தும் கருத்துக்கள் சமூக அமைதியை, விழிப்புணர்வை ஏற்படுத்த கூடியதாக இருக்க வேண்டுமே தவிர சமூக அமைதிக்கு பங்கம் விலை விப்பதாக இருக்க கூடாது 

பாசிச சக்திகள் நமக்கு எதிராக போர் தொடுக்கின்றார்கள் என்றால் அதற்கு நாம் காரணமாக இருகின்றோமா என்பதை சிந்தித்து பாருங்கள், பாசிச சக்திகள் செய்யும் செயலை ஆதரிப்பதாக நினைக்கவேண்டாம், கண்டிப்பாக பாசிச சக்திகள் அவர்கள் செய்யும் அடாவடி தனம் கண்டிக்க கூடியதே. ஒரு தனி மனிதர் தவறு செய்தால் அவரை மட்டும் தானே தண்டிக்க வேண்டும் அதற்காக அவர் சார்ந்து இருக்கும் சமூகம் என்ன பிழை செய்தது, இது வன்மையாக கண்டிக்க பட வேண்டியது இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை,

அதே நேரத்தில் நமது பிரச்சாரம் இஸ்லாம் வலியுறுத்தும் அமைதியும் அன்பும் கொண்ட சத்திய பாதையாக இருக்க வேண்டும்,

நமது செயல்பாட்டின் மூலம் மக்கள் சக்தியை வென்று எடுக்க வேண்டும்,

முதலில் நமக்குள் இருக்கும் சகோதர சண்டைகளை நிறுத்தி கொள்ளவேண்டும் பிறகு பிறகு இந்த சகோதர ததுவத்தின் வட்டத்தை மற்ற சமூகத்தின் மீதும் படரவிடவேண்டும் 


எந்த செயல் நடந்தாலும் அதை அறிவு பூர்வமாக எதிர்கொள்வது அவசியம்,
பாசிச சக்திகள் தவறு இளைக்கும் போது மக்கள் சக்திகளை ஒன்று திரட்டி சட்ட பூர்வமாக அதை எதிர்கொள்வதே நிரந்தர தீர்வமாக இருக்கும்..
a

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்