வாருங்கள் செயல் படுத்துவோம்
அஸ்ஸலாமு அலைக்கும் எல்லாபுகழும் அல்லாஹ்விற்கே புனித மிக்க ரமலான் மாதத்தை நல்ல முறையிலே நிறைவு செய்து விட்டு அதன் அடுத்த மாதத்திலே அடி எடுத்து வைத்து உள்ளோம் மாஷா அல்லாஹ் நாம் இந்த ஒரு மாதத்திலே பெற்ற படிப்பினைகள் பொறுமை சகிப்புத்தன்மை எளியவருக்கு உதவுதல் போன்ற நற்குணங்களை சுமந்து கொண்டு மீதம் இருக்கும் மாதங்களில் பயணிக்க இருக்கின்றோம் நம்மில் பலருக்கு இந்த ரமலான் மாதத்தில் இருக்கின்ற இந்த பொறுமை சகிப்பு தன்மை எளியவருக்கு உதவுதல் இறைவணக்கத்தை சரியாக நிறைவேற்றுதல் போன்ற நற்குணங்கள் மற்ற மாதங்களில் இருப்பது இல்லை அல்லது இதன் உறுதியில் தடுமாற்றம் ஏற்பட்டுவிடுகின்றது ஏன் இந்த அவலம் இறைவன் மீது இருக்கின்ற இந்த இறை உணர்வு நம்மிடம் எப்பொழுதும் நிலையாக இருக்கவேண்டும் ரமலான் மாதத்தை ஒரு பயிற்சி காலாமாக எடுத்து கொண்டு ஏனைய மாதங்களிலும் இதை நடைமுறை படுத்த வேண்டும் அப்பொழுதான் குன்தும் ஹைர உம்மத் என்று இறைவன் நம்மை பார்த்து கூறுகின்றானே சமுதாயத்திலேயே சிறந்த சமுதாயம் நீங்கள் தான் என்று ஏன் என்றால் நீங்கள் நன்மையை எவுகின்றீர்கள் தீமையை தடுக்கின்றீர்கள் என்று இந்த வாசகத்திருக்கு தகுந்த வர்களாக நாம் இருக்க வேண்டும் என்று சொன்னால் ரமலான் மாதத்தில் கடைபிடித்த நல்ல சுபாவங்களை நல்ல அமல்களை நம் வாழ் நாள் முழுவதும் கடை பிடிப்பது அவசியம்,
நம்முடைய ஒவ்வொரு அசைவுகளும் இஸ்லாமாக இருக்க வேண்டும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நம்முடைய முழு வாழ்க்கையுமே இறைவணக்கமாக மாறிவிடும் எந்த விதமான ஊடகத்தின் துணையுமே இல்லாத காலத்தில் இந்த இஸ்லாத்தை சுமந்து வந்து நமது கைகளிலே சேர்த்தது எது என்று யோசித்து பாருங்கள் நபி(ஸல்) அவர்களின் போதனைகள் மாத்திரம் அல்ல நபி (ஸல்) அவர்களும் சத்திய சகாபாக்களும், அதனை பின் தொடர்ந்து வந்த தாபியீன்களும், அவர்களை பின் தொடர்ந்து வந்த தபக தாபியீன்களும் குர் ஆனையும் ஹதீசையும் தங்கள் வாழ்க்கையாகவே வாழ்ந்து காண்பித்தார்கள் அதன் விளைவு உலகத்தில் நூற்று ஐம்பது கோடி மக்களுக்கு மேல் இஸ்லாமியர்களாக இருக்கின்றார்கள் அதாவது உலகத்தில் நடமாடும் ஐந்து நபர்களில் ஒருவர் முஸ்லிம் என்கின்ற இந்த நிலைக்கு காரணம் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக வாழ்ந்து காட்டியது தான் செயல் வடிவம் இல்லாத எந்த ஒரு சித்தாந்தமும் சமூகத்தில் எந்த ஒரு மாற்றத்தையுமே ஏற்படுத்தியது இல்லை என்பது தான் உலக சரித்திரம் நமக்கு சொல்லும் படிப்பினை .சுவாமி விவேகனந்தர் கூறுகின்றார்
மற்ற அனைத்து மக்களையும் விட அத்வைதக் கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாயிருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் அத்வைதம்- அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மை போல் சமமானவர் என்று பாவிப்பதும், அவ்வாறே நடந்து கொள்வதும் எனத் தொடரும் அவரது பேச்சில்
இத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாராட்டத்தக்க வகையில் அனுகியிருக்கிறதேன்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று நான் அனுபவப்பூர்வமாய் கூறுகிறேன். நான் அழுத்தமாய் சொல்கிறேன், நடைமுறைக்கு இசைவான இந்த செயல்பாடின்றி வேதாந்த கருத்துக்கள் எவ்வளவுதான் சிறப்பானதாக, பெருமைக்குரியதாக இருந்தாலும் பரந்து கிடக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே முடியும்.
சுவாமி விவேகானந்தர் – [Letters of Swami Vivekananda P.463]
எனவே இதை உணர்ந்த இஸ்லாமிய சொந்தங்களே இஸ்லாத்தை நமது வாழ்கையிலே முழுவதுமாக கொண்டு வருவோம் நமது இந்த செயல்பாட்டின் மூலம் சமத்துவம் சமூக நீதி நிறைந்த ஒரு வலுவான சமுதாயத்தின் தூண்களாக இன்ஷா அல்லாஹ் நாம் இருப்போம் இஸ்லாத்தை நம் செயல்களின் மூலம் அறிமுகம் செய்வோம் இதுவே மிக சிறந்த (தாவா) அழைப்பு பனி
இந்த சத்திய மார்கத்தை நம்முடைய வாழ்கையிலே செயல் படித்திய நன்மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் பொருந்தி கொள்வானாக
No comments:
Post a Comment