அஸ்ஸலாமு அலைக்கும் புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கே
ஏன் வேண்டும் இந்த மாற்றம் என்ற தலைப்பில் கடந்த கட்டூரையில் நடைமுறையில் பிள்ளைகளுக்கு மதரசாக்களில் கற்று கொடுக்கப்படும் அடிப்படை கல்வி எத்தகையதாக உள்ளது என்பதையும் அது ஏன் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதையும் பார்த்தோம்
இனி இந்த சமூகத்தில் இஸ்லாமிய குழந்தைகளின் கல்வியால் மிகப்பெரிய பாராட்டத்தக்க மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்றால் நமது கல்வி முறையில் எந்த மாதிரியான மாற்றங்கள் கொண்ட்டுவந்தால் அது சிறப்பாக இருக்கும் என்று என் சிந்தனையில் உள்ள சில விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் இதில் தவறுகள் இறந்தால் அதை சுட்டி காட்டவும் இன்ஷா அல்லாஹ் நான் அதை திருத்திகொல்கின்றேன்
நமது மதரசாக்களில் திருமறை குர் ஆனை ஓதுவதற்கு கற்றுகொடுத்தப் பிறகு அதன் விளக்கத்தை அவரவர் தாய் மொழியில் முழுமையாக கற்றுத் தரவேண்டும் எப்படி பள்ளிகூடங்களில் பாட புஸ்தகங்களை வருடம் முழுவதும் பிரித்து கால் ஆண்டு அரை ஆண்டு முழு ஆண்டு என்று பிரித்து சொல்லிக் கொடுத்து அதற்கு தேர்வு வைத்து மதிப்பெண்கள் வைகின்றனரோ அதேபோல். இந்த திருமறை குரானையும் மூன்று பாகங்களாக மூன்று வருடத்திற்கு சொல்லி கொடுத்து, ஒரு ஆண்டுக்கு பத்து ஜூசு வீதம் மூன்று ஆண்டுகளுக்கு முப்பது ஜூசு சொல்லிகொடுக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு பத்து ஜூசுவுக்கும் முறையே கால் ஆண்டு அரை ஆண்டு முழு ஆண்டு தேர்வு என்று வைத்து மூன்று வருடத்திற்கு இந்த குர் ஆனை முழுமையாக கற்றுகொடுத்து இதில் சிறப்பாக தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ஜமாத்தார்கள் அனைவரையும் கூட்டி பட்டயங்கள் நற்சான்றிதல்கள் வழங்க வேண்டும்
திருமறை குரானை நன்கு தேர்ச்சி பெற்ற பிறகு இதன் தப்சீர் விரிவுரையை இதே போல் கற்று தரவேண்டும்
இதே போல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறை முழுமையாக பாடதிட்டமாக்கி இதையும் இந்த மூன்றாண்டு குரான் வகுப்போடு சேர்ந்து சொல்லி கொடுக்கப் பட வேண்டும்
இவ்வாறு சொல்லி கொடுக்கப்படும் இந்த விரிவான இஸ்லாமிய கல்வியால் முழுமையான இஸ்லாமிய கல்வியும் நமது குழந்தைகளுக்கு போய் சேரும் இதனால் நல்லொழுக்க மிக்க ஒழுக்க சீலர்களாகவும், மனிதநேயமிக்க மனிதர்களாகவும் சமூகத்தில் நிலவும் அவலங்களுக்கு தீர்வு சொல்லக் கூடிவர்கலாகவும், சுற்றி இருக்கும் நமது சகோதர சமூகத்திருக்கு தலை சிறந்த முன் மாதிரியாகவும், நமது குழந்தைகள் இன்ஷா அல்லாஹ் திகழ்வார்கள்
இப்படி இந்த இஸ்லாமிய கல்வியை விரிவான முறையில் நமது பிள்ளைகளுக்கு கற்று தருவது மட்டுமே உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நன்கொடையாக அருளபெற்ற இந்த திருமறையும், உலக மக்கள் அனைவருக்கும் தலைசிறந்த வழிகாட்டியாக அனுப்பட்ட முகம்மது நபி (ஸல்) அலைஹி வசல்லம் அவர்களின் போதனையும் இந்த மனித சமூகத்திற்கு முழுமையாக போய் சேரவேண்டுமானால், நமது குழந்தைகளின் சிந்தனையில் இஸ்லாமிய கல்வியை மேலே குறுப்பிட்ட முறையில் செலுத்தி அதற்கு நமது பிள்ளைகளின் வாயிலாக செயல் வடிவம் கொடுத்தால் மட்டுமே சாத்தியப்படும்
இல்லையேல் இது வெறும் ஏட்டு கல்வியாக மட்டுமே இருக்கும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது
எனவே எனதருமை இஸ்லாமிய சொந்தங்களே இந்த உன்னதமான இஸ்லாமிய கல்வியை நமது குழந்தைகளின் வாயிலாக அவர்களின் செயல் பாடுகள் மூலமாக இந்த உலககிற்கு அறிமுகம் செய்வோம் அமைதியும் மனிதநேயமும் நல்லொழுக்க மிக்க சமூகத்தை உருவாக்குவோம்
குர் ஆன் ஓதுதலை மூன்றாகப் பிரித்து கால் , அரை , முழு ஆண்டு தேர்வுகள் வைத்து சொல்லித் தருதல்.
ReplyDeleteதப்சீர் வகுப்பு,
நபிகளாரின் வாழ்வு
-ஆகிய அனைத்தையும் பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டும் என்கிற தங்கள் யோசனை அருமையான வழியாகும்.
ஜமா'அத்தார்கள் இதை செயல்படுத்தலாம்.
நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும் மிக்க நன்றி சகோதரர் நிஜாம் அவர்களே இந்த கருத்தை நீங்களும் உங்களது முகநூல் மூலமாக பரவ செய்யுங்கள் இது போன்ற விடயங்களில் கூட்டு முயற்சி பலன் தரும் இன்ஷா அல்லாஹ்
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete