அஸ்ஸலாமு அலைக்கும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே
சூழ்ச்சி காரர்களின் தலையில் பேரிடி விழுந்தது எதையோ செய்ய நினைத்து எங்கோ போய் முடிந்தது மாதிரி ஆகிவிட்டது
உலக அமைதிக்கும், மனித சமூகத்தின் நாகரீக எளிச்சிக்கும்,ஈருலக வெற்றியை நோக்கி இந்த மனித சமூகத்தை அழைத்து செல்ல வந்த ஏக இறைவனின் உன்னத தூதுவரை, இந்த மனித வரலாற்றிலே வேறு எங்கேயும் எப்போதும் ஒப்பிட்டு கூறமுடியாத ஈடு இணை இல்லா மனித புனிதரை மாசுபடுத்த மதி கெட்ட மனிதர்கள் செய்த மடமை பிரச்சாரம் மண்ணோடு மண்ணாகும் நேரம் இது .
எந்த அவதூறு பிரச்சாரத்தின் மூலம் இந்த மனித சமூகத்தில் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த நினைத்தார்களோ அந்த பிரச்சாரத்தின் மூலமே அல்லாஹ் தனது மாபெரும் கிருபையின் மூலம் தனது ஈடு இணை இல்லாதா இறைதூதுவர் முகம்மது நபி (ஸல் ) அலைஹிவசல்லம் அவர்களை மனித சமூகத்தின் ஒவ்வொருவருக்கும் அறிமுகம் செய்ய ஒரு வாய்ப்பாக அல்லாஹ் அமைத்து கொடுத்துள்ளான் அல்ஹம்து லில்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே
முகம்மது நபி (ஸல் ) அவர்களை இந்த மனித சமுதாயத்திற்கு அறிமுகம் செய்யும் பனி இறைவன் அருளால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வெகு வேகமாக நடைபெறுகின்றது
மதி கெட்ட மனிதர்கள் தங்களின் சூழ்ச்சியின் காரணமாக சத்தியத்தை மறைத்திட நினைத்தார்கள் அல்லாஹ் தனது சூழ்ச்சியின் காரணமாக சூழ்ச்சி காரர்களின் சூழ்ச்சியை முடக்கி சத்தியத்தை மேலும் வலுப்பட செய்துவிட்டான் அல்ஹம்து லில்லாஹ்
நமது சமூகத்தில் வழக்கமாக நடைபெறுகின்ற ஒரு விஷயம் என்னவென்றால் இந்த சமுகத்திற்கு ஏதாவது ஒரு பாதிப்பு நடந்து விட்டால் உடனே மிகப்பெரிய எழிச்சி பிரச்சாரம் ஆர்பாட்டம் தெருமுனை பிரச்சாரம் என்று தங்களது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் பிறகு ஒரு வாரமோ ஒரு மாதமோ ஆனா பிறகு அது நீர்த்து போகும் அதன் ஆணி வேறை அகற்ற எந்த ஒரு நிரந்தர முயற்சியும் இல்லாமல் போகும் இதனால் என்ன பயன் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நமது எதிர்ப்பை மாத்திரம் காட்டினால் போதுமா பிரச்சினைகளின் ஆணி வேறை பிடுங்க வேண்டாமா அதுதானே நிரந்திர தீர்வாகும்
அந்த வகையில் இப்போது முகம்மது நபி (ஸல்) அவர்களை இந்த மனித சமூதாயத்திற்கு அறிமுகம் செய்ய ஜமாத்தே இஸ்லாமிபோன்ற இஸ்லாமிய இயக்கங்கள் செய்யும் முயற்சி பாராட்டிற்கும் வரவேற்பிற்கும் உரியது அதில் எந்த சந்தேகமும் இல்லை அது மட்டுமே போதுமா என்றால் போதாது
இறைவனின் உன்னத தூதுவரான முகம்மது நபி (ஸல் ) அவர்களை பிரச்சாரங்களின் மூலமாக அறிமுகம் செய்வதை விடவும் உலகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்வியல் மூலம் தனது செயல்பாடுகள் மூலம் இந்த மனித புனிதர், உன்னத இறைதூதர் , முகம்மது நபி (ஸல்) அவர்களை அறிமுகம் செய்வதுதான் சிறப்பானதாக இருக்க முடியும்
தலைசிறந்த ஆட்சியாளராக, உண்மையான ஆன்மீக தலைவராக, சிறந்த அண்டை வீட்டாராக,நல்ல கணவனாக,பொறுப்பான தந்தையாக, எழுச்சிமிகுந்த புரட்சியாளராக, உலக வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத உன்னத சீர்திருத்தவாதியாக, இப்படி மனித வாழ்கையின் அனைத்து பரிமாணங்களிலும், தலை சிறந்து விளங்கிய மாமனிதரை, அந்த உன்னத இறைதூதுவரை முகம்மது நபி (ஸல்) அவர்களை அறிமுகம் செய்ய வெற்று பிரச்சாரங்கள் மாத்திரம் போதாது அதை உலகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்வியல் நடைமுறையாக கடைபிடிப்பது மட்டுமே முகம்மது நபி (ஸல்) அவர்களை மனித சமுகத்தின் ஒவ்வொருவருக்கும் கொண்டுபோய் சேர்க்கும் சீரிய வழிமுறையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்
முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறை நமது ஒவ்வொருவருடைய வாழ்விலும் வந்துவிட்டால் இஸ்லாத்தை பற்றி அவதூறாக எண்ணுவதற்கு கூட யாரும் முன் வர மாட்டார்கள் இன்ஷா அல்லாஹ்
முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையை நமது ஒவ்வொருவரின் வாழ்விலும் அந்த ஏக இறைவன் தந்தருள்வானாக ஆமீன்
உலகத்தில் இறைவனால் அனுப்பப்பட்ட எல்லா இறைதூதுவர்க்ளையும் இந்த மக்கள் ஏளனம் செய்து கொண்டுதான் இருந்தார்கள் என்று இறைவன் தனது வேதத்தில் கூறுவதை பாருங்கள்
நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம். எனினும் அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை. இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி வடுகிறோம்.. (திருக்குர்ஆன் 15:10-12)
No comments:
Post a Comment