அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Monday, June 7, 2010

அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி





Anna University Counseling Code : 855

இக்கல்லூரி தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது. கடந்த 2009ம் வருடம்அஸ்ஸலாம் அறக்கட்டளை சார்பாக துவக்கப்பட்டது. தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்ட அளவில் ஒரு முஸ்லிம் பொறியியல் கல்லூரி கூட இல்லை என்ற நோக்கத்திலும், நமது சமுதாயம் படிப்பறிவிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் மிகவும் பின் தங்கியுள்ளோம் என்ற அடிப்படையிலும் இக்கல்லூரிதுவக்கப்பட்டது. நமது சமுதாயத்தை சேர்ந்த 100 உறுப்பினர்களை கொண்டு ஒரு அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் தற்போது இப்பொறியியல் கல்லூரி துவக்கப்பட்டு இறைவனின் மாபெரும் கருணையால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் Polytechnic College, Arts & Science College, Matriculation School
போன்ற கல்விச்சேவையை இச்சமுதாயத்துக்காக இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து செய்ய உள்ளோம். அதற்கு தாங்கள் அனைவரும் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இக்கல்லூரியின் தலைவராக M.J.A. ஜமால் முஹம்மது இப்ராகிம் அவர்களும்
செயலாளர் மற்றும் தாளாளராக A.M ஷாஜஹான் அவர்களும்
பொருளாளராக O.முஹம்மது உசேன் அவர்களும்
துணை தலைவராக அன்வர் பாஷா அவர்களும்
இணை செயலாளர்களாக சாதிக் மைதீனும்
சிராஜுதீனும் உள்ளார்கள்.

மேலும் நமது சமுதாயத்தை சேர்ந்த நல்ல மதிப்பெண் பெற்றும் படிக்க வசதியற்ற ஏழை மாணவ மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச கல்வி வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். அதன் படி கடந்த ஆண்டு நல்ல மதிப்பெண் பெற்ற இரண்டு ஏழை முஸ்லிம் மாணவிகளுக்கு இலவச கல்வியும் வழங்கியுள்ளோம்இதுபோல் ஒவ்வொருவருடமும் நல்ல மதிப்பெண் எடுக்கும் நம் சமுதாய ஏழை மாணவ மாணவியருக்கு இலவச கல்வி வழங்கவும் முடிவு செய்துள்ளோம் .

இன்ஷா அல்லாஹ் எமது கல்லூரியில் நன்கொடை இல்லை. அரசு நிர்ணயம் .செய்துள்ள கல்லூரி கட்டணம் மட்டுமே இக்கல்லூரியில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


சென்னை போன்ற நகர்புற கல்லூரிகளுக்கு இணையாக சிறந்த கட்டமைப்பு.

அனுபவமிக்க பேராசிரியர்கள்,

ஆண் பெண் இரு பாலாருக்கும் தனி தனி விடுதிகள்

மற்றும் இரு பாலாருக்கும் தனி தனி தொழுகை கூடங்கள்,

கல்லூரியை சுற்றயுள்ள ஊர்களுக்கு வாகன வசதிகள் .

சுகாதாரமான உணவகம், அதிவேக இணையதள வசதி

என்று அணைத்து வசதிகளுடன் கூடிய இக்கல்லூரியில்


கீழ்க்கண்ட 5 இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை நடைபெற்றுக்கொண்டுள்ளது
..

1. BE – Mechanical Engineering
2. BE – Civil Engineering
3. BE – Computer Science and Engineering
4. BE – Electronic and Communication Engineering
5. BE – Electrical and Electronic Engineering *

Anna University Counseling Code : 855




மேலும் விபரங்களுக்கு www.assalamcollege.com & www.assalamtrust.com

As-Salam College of Engineering and Technology

Thirumangalakudi – Aduthurai – 612102 – Thanjavur (Dt)

Phone : 0435 – 2473354, 2473355, 2472444, 6454545
A.M. Shajahan
Secretary & Correspondent

Mobile : 9965904553, 9894894999

Email :
ascet.aduthurai@gmail.com
ascet.info@gmail.com



No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்